siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 12 பிப்ரவரி, 2014

நாஜி கால ஓவியங்கள் கண்டுபிடிப்பு !

 ஜேர்மனியில் நாஜி கால கலைப்படைப்புகளில் 60 ஓவியங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஜேர்மனியில் ஹிட்லரின் ஆட்சி நடைபெற்று வந்த போது, 1930- 40 ஆண்டு காலகட்டத்தில் ஹில்டிபிரான்ட் குர்லிட் என்பவர் கலைப்படைப்புகளை விற்பனை செய்து வந்தார்.
அப்போது அரசு அதிகாரிகள், யூதர்களிடமிருந்து திருடிய மற்றும் சிதைந்ததாக கருதிய ஓவியங்களை இவரிடம் விற்பனைக்கு கொடுத்துள்ளனர்.

ஆனால் காலப்போக்கில் விற்பனையாகாமல் இவரிடமே இருந்த இவ்வோவியங்கள் தற்போது இவரது மகன் கோர்னிலியஸ் குர்லிட் வசித்துவரும் மியூனிச் வீட்டில் இருப்பது கலைப்பொருள் முதலீட்டாளர்களின் கவனத்திற்கு வந்தது.

இதனைதொடர்ந்து ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் வீட்டில் பிக்காசோ, ரெனோயர், மோனெட் போன்ற பழம்பெரும் ஓவியர்களின் 60 கலைப்படைப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கோர்னிலியசின் தகவல் தொடர்பாளர் ஸ்டீபன் ஹோல்சிங்கர் தெரிவித்துள்ளார்.

இது யூதர்களிடமிருந்து திருடப்பட்ட கலைப்பொருட்களா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு திருடப்பட்டதாய் இருந்தால் உரியவர்களிடம் கலைப்பொருட்கள் திருப்பி கொடுக்கப்படும் என ஜேர்மனி அரசு குறிப்பிட்டுள்ளது.
                           

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

100 அடி உயரம் வரை பறக்கும் காணொளி


சில வகை பாம்புகளால் 100 அடி உயரம் வரை பறக்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.ஆசிய காடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி பாம்புகள் தமது   தட்டையாக்கிக் கொண்டும் உடலை நீட்டிக்கொண்டும் பறக்கும் தன்மையைப் பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. சில பாம்புகள் 100 அடி உயரமான மரங்களிலிருந்தும் தாவுவதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் வேர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ஜெக் சோச்சா தலைமையிலான குழுவினர் பாம்புகளால் எவ்வாறு பறக்க முடிகிறது என்பது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். மும்பரிமாண (3டி) அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்ட பாம்புகளின் தன்மையைக்கொண்ட உருளைகளை வைத்து பல ஆய்வுகளை இவர்கள் மேற்கொண்டனர். தட்டையான உடலமைப்புடன் சில கோணங்களில் இருக்கும்போது பாம்புகள் காற்றில் மிதக்கும் ஆற்றலைப் பெறுகின்றன என இக்குழுவினர் கூறுகின்றனர்.