siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

இரத்தினபுரத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி

கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த 11 வயது  சிறுவன் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த சி. அன்பழகன்  மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி குறித்த மாணவன்  பலியாகியுள்ளமை அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




சனி, 29 டிசம்பர், 2018

அமரர் விநாசித்தம்பி ராஜேஸ்வரி,1ம் நினைவஞ்சலி,.30.12.18.

           உதிர்வு : 10 01  2018  
        திதி -30..12.2018
யாழ்.  நவற்கிரி  புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட  திருமதி  விநாசித்தம்பி ராஜேஸ்வரி . அவர்களின்   திதி -30..12.2018 ஞாயிற்ருக்க கிழமை  அன்று   அவரது இல்லத்தி  நனைபெறும்  
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை  சின்னத்தங்கம்    தம்பதிகளின் அன்பு மகளும் ,திரு  விநாசித்தம்பி . 
 அவர்களின் அன்பு மனைவியும் 
திருக்குமரன்.சுவிஸ் .  சங்கீதா. லண்டன்  திருச்செந்தூர் கனடா   திருத்தனிகன் இலங்கை . ஆகியோரின் அன்புத்தாயாரும்    
  பாலராஜா  சிவராசா  சிவபாதம்  கலா காலஞ்சென்ற குளந்தை (திரு மதி கோண ராசா  ).  ஆகியோரின்  அன்பு  சகோதரி யும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
..  கள்ளம் கபடமற்ற நல் உள்ளம் கொண்டவரே !
அதனால் தானோ காலன் உனை
கவர்ந்து கொண்டான் கல் வழியில்!
உத்தமானாய் வாழ்ந்ததால் தான்- கண்ணா
உன்னை காலன் உயிரெடுத்தான்
சொர்க்கத்தின் வாசல் திறந்த போது-  உன்னை
சொர்க்கத்திற்கே கூட்டிச்செல்ல!
நீள் துயில் கொள்பவனே
நிம்மதியாய் நிரந்தரமாய் நீ தூங்கு சொர்க்கத்தில்
நிலையற்ற இவ்வுலகில் நிர்க்கதியாய்
எமைவிட்டு நிரந்தரமாய் போய்விட்டாய்!
என்றும் கண்ணீருடன்
உன்னுடன் பழகிய நினைவுகளை சுமந்து கொண்டு!!
கணவர்,  பிள்ளைகள்- சகோதர்கள் 
முகவரி -நவரகிரி புத்தூர் 
தகவல்
குடும்பத்தினர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 25 டிசம்பர், 2018

கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் வடக்கில் 72 ஆயிரம் பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இடர் முகாமைத்துவ நிலையம் இந்த தகவலை 
நேற்று வெளியிட்டுள்ளது.
இந்த வெள்ளத்தினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களோ மோசமாகப் 
பாதிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில், 11,688 குடும்பங்களைச் சேர்ந்த , 38,534 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில், 6,520 குடும்பங்களைச் சேர்ந்த 20,737 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில், 4257 குடும்பங்களைச் சேர்ந்த 12,642 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 455 பேரும், மன்னார் மாவட்டத்தில் 85 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் மொத்தமாக, 22,624 குடும்பங்களைச் சேர்ந்த, 72,453 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், நேற்று நண்பகல் நிலவரங்களின்படி, 35 நலன்புரி நிலையங்களில் 10,342 பேர் தங்கியிருப்பதாகவும், இடர்முகாமைத்துவ நிலையம் 
அறிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தங்காலையில் நால்வர் பலி

தங்கல்ல, குடாவெல்ல மீன்பிடித்துறை முக பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் பலியானதுடன், ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் 
தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த 5 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்
 தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 24 டிசம்பர், 2018

பலர் பதிப்பு முகாமைத்துவ நிலையம் தேரிவித்து தெவெள்ளத்தில்ரிவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 9,475 குடும்பங்களை சேர்ந்த 31,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்றைய கணக்கெடுப்பின் படி கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 3,338 குடும்பங்களை சேர்ந்த 31,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
 சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் 3 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
 மேலும், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 1,021 குடும்பங்களை சேர்ந்த 3,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 10 பாதுகாப்பான அமைவிடங்களில் 419 குடும்பங்களை சேர்ந்த 1523 பேர் தங்க 
வைக்கப்பட்டுள்ளனர்.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 7386 குடும்பங்களை சேர்ந்த 24,032 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 பாதுகாப்பான அமைவிடங்களில் 821 குடும்பங்களை சேர்ந்த 2,556 பேர் தங்க 
வைக்கப்பட்டுள்ளனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 1,068 குடும்பங்களை சேர்ந்த 3,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 5 பாதுகாப்பான அமைவிடங்களில் 154 குடும்பங்களை சேர்ந்த 570 பேர் தங்க 
வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த சீரற்ற காலநிலையால் 4 வீடுகள் முழுமையாகவும், 148 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 22 டிசம்பர், 2018

மரண அறிவித்தல் திரு சற்குணநாதன் சஞ்ஜீகரன் 20.12.18

பிறப்பு11 MAY 1987 -இறப்பு-20 DEC 2018
யாழ். மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத் திட்டத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணநாதன் சஞ்ஜீகரன் அவர்கள் 20-12-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சற்குணநாதன், புஸ்பராணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், மகேந்திராஜா கிருசாந்தி தம்பதிகளின் 
அன்பு மருமகனும், பிரியங்கா அவர்களின் அன்புக் கணவரும், சச்சின், பவின் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சனாத்கரன், யோசிகா, டர்சிகரன், கோசிகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சயந்தன், திருக்குமரன், விதுசன், பிருந்தா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், ஜெஸ்வின், சஸ்வின், தர்வின் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்
.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். play_arrow Play 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்துக் கொள்ளுகின்றன 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 22 Dec 2018  02:00 PM - 05:00 PM Sunday, 23 Dec 2018  02:00 PM - 05:00 PM Thursday, 27 Dec 2018  11:00 AM - 03:00 PM
Hörnliallee
4125 Riehen Switzerland கிரியை Get Direction Friday, 28 Dec 2018  08:00 AM - 10:00 AM
Hörnliallee
4125 Riehen Switzerland தகனம் Get Direction Friday, 28 Dec 2018  10:30 AM
Hörnliallee
4125 Riehen Switzerland
தொடர்புகளுக்கு
 பிரியங்கா - மனைவி Mobile : +41764521122  சனாத்கரன் - சகோதரர் Mobile : +41786457487  டர்சிகரன்(குட்டி) - சகோதரர் Mobile : +41798616044  விதுசன் - மைத்துனர் Mobile : +41765168346

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வெள்ளி, 21 டிசம்பர், 2018

மரண அறிவித்தல் திரு தர்மலிங்கம் சசிதரன் (பாபு)19.12.18

பிறப்பு-   22 NOV 1968     இறப்பு 19 DEC 2018 
    யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் (Zürich)சூரிச்ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சசிதரன் பாபு அவர்(கள் 19-12-18 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார்,
 காலஞ்சென்ற தர்மலிங்கம், கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விமலதாசன், புஷ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், சுபாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
 சசிகலா, ஸ்ரீதரன்(கோபி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், திருஞானசம்பந்தர், சமந்தி, உதயம், துதி, பிறேமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், அஸ்வினி, சிவகுணம் ஆகியோரின் அன்புச் சகலனும், கௌதமன், சரண்யன், லக்சா, சரணா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், பிரசா, ஆரண்யன், இனியா ஆகியோரின் பாசமிகு 
மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்துக் கொள்ளுகின்றன 
தகவல்: கோபி, சதா
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Thursday, 20 Dec 2018  07:30 AM - 04:30 PM Friday, 21 Dec 2018  07:30 AM - 04:30 PM Saturday, 22 Dec 2018  07:30 AM - 04:30 PM Sunday, 23 Dec 2018  07:30 AM - 04:30 PM
Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland கிரியை Get Direction Monday, 24 Dec 2018  08:00 AM - 11:00 AM
Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
 கோபி Mobile : +41793282349  மீரா Mobile : +41764263444  சதா Mobile : +41788518748  இளங்கோ Mobile : +41782015858  ஜெகன் Mobile : +41793243226  கெங்கன் Mobile : +41797604807  மனைவி Mobile : +41786099422
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 18 டிசம்பர், 2018

கடந்த சில நாட்களாக கிளிநொச்சியில் காலநிலை மாற்றம்

கிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
 காலை ஏழு மணியை கடந்தும் கிளிநொச்சியில் உள்ள பிரதேசங்களில் பனிமூட்டம் நிறைந்ததாக காணப்படுவதாக 
தெரிவித்தள்ளார்.
 எதிரே உள்ள காட்சிகளை அடையாளம் காணமுடியாத அளவிற்கு காலை கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டுள்ளது.
அத்துடன் வீதியில் செல்லும் வாகனங்கள் ஒளியைப் பாய்ச்சியபடி செல்வதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்ததாகவும்
 தெரிவித்துள்ளார். 
மக்கள் பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளதோடு அதிகாலையில் நிலவிய கடுமையான குளிர் நிலை தொடர்ந்து நிலவுவதாக
 தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


விபத்தில் ஒட்டுசுட்டானில் காயமடைந்திருந்த மாணவன் மரணம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த 14ம் திகதி  இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த சிறுவன்  சிகிச்சை பலனின்றி நேற்றயதினம் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்
நெடுங்கேணி தண்டுவான் பகுதியை சேர்ந்த குறித்த சிறுவன் தனது உறவினருடன் ஒட்டுசுட்டான் சுற்றுவட்டவீதியில்  
மோட்டார் சைக்கிளில் சென்றசமயம் எதிரே வந்துகொண்டிருந்த பேருந்துடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் 
நடைபெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் ப
யணம் செய்த  இருவரும் படுகாயமடைந்திருந்த நிலையில் யாழ்
போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.மோட்டார் சைக்கிளை ஓட்டிய குறித்த சிறுவன்  சிகிச்சை பலனின்றி   இன்றயதினம் சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபத்தில் நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் கல்விகற்று, இம்முறை க.பொ.த  சாதாரண பரீட்சை எழுதிய நாகராசா மதுசன் (வயது 16) என்ற மாணவனே சாவடைந்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பாக ஒட்டுசுட்டான் போலிசார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 17 டிசம்பர், 2018

வங்கி முகாமையாளர் மீது யாழில் வாள் வெட்டு தாக்குதல்

:யாழில் வங்கி முகாமையாளர் ஒருவரது வீட்டின் மீது ஆவா குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரது காரையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம் புங்கன் குளம் பகுதியில் நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வங்கி முகாமையாளர் வீட்டிற்குச் சென்ற ஆவா குழுவினர், வீட்டின் கண்ணாடிகளை உடைத்து சேதமாக்கியதுடன் பல லட்சம் ரூபாய் பெறுமதியான காரையும் அடித்து 
நொறுக்கியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 16 டிசம்பர், 2018

தாயின் நகையை திருடி யாழில் காதலனிடம் கொடுத்த காதலி

சமூக சீர்கேடு:தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்ணை யாழ். வட்டுகோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ். வட்டுகோட்டை கிழக்கில் வசிக்கும் நபர் ஒருவர், கடந்த செவ்வாய்க்கிழமை பகல் வேளை வீட்டிலிருந்த மனைவியின் நகைகள் களவாடப்பட்டு உள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு 
செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் வீட்டின் உரிமையாளரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட இளைஞன் ஒருவர், உங்கள் நகைகள் அனைத்தும் வீட்டு வளவினுள் போடப்பட்டுள்ளது என 
தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உரிமையாளர் குறித் இடத்திற்கு சென்று பார்த்த போது திருடப்பட்ட நகைகள் அனைத்தும் அவ்விடத்தில் கிடந்துள்ளன. இது தொடர்பில் வீட்டின் உரிமையாளர் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
குறித்த தொலைபேசி இலக்கம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தொலைபேசி இலக்கத்திற்கு உரிய இளைஞரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது அந்த இளைஞன், முறைப்பாட்டாளரின் மகள் தனது காதலி எனவும், அவரே தனது தாயாரின் நகைகளை திருடி தன்னிடம் தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து முறைப்பாட்டாளரின் மகளை பொலிஸார் நேற்று மாலை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணைகளை
 முன்னெடுத்துள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>


மாணவி யாழில் மர்ம காய்ச்சலாலில் மரணம்

:யாழில்.மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இருந்த மாணவன் ஒருவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்த சம்பவம் 15.12.2018. இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் தரம் 09 கல்வி கற்கும் சுழிபுரம் மேற்கை சேர்ந்த 14 வயதான கோபாலகிருஷ்ணன் விதுர்சன் எனும் மாணவனே 
உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி இரவு காச்சல் அதிகரித்து உள்ளது. அதனை அடுத்து மறுநாள் சங்கானை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பயனின்றி மாணவன்
 உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்ட போது ,
மாணவன் கடந்த சில நாட்களாகவே காச்சலால் பீடிக்கப்பட்டு இருந்துள்ளார். மாணவனுக்கு ஏற்பட்ட காய்ச்சல் எதுவென கண்டறியப்படவில்லை. அதனால் மாணவனின் குருதி மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>



புதிய திட்டம் புத்தர் சிலையும் முளைக்கும் மடு மாதாவுக்கு வந்த ஆபத்து

மடுத்திருத்தலத்தை அரசாங்கத்தின் புனித பிரதேசமாக்கும் முயற்சி தொலை நோக்கு பார்வையில் மிக அபாயமான பின்னடைவை ஏற்படுத்தலாம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் 
தெரிவித்துள்ளது.
இவ்விடையம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கு இன்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில்…
இலங்கை அரசாங்கத்தின் நன்கு திட்டமிட்ட உள்நோக்கமுள்ள எண்ணத்துடன் புனித பிரதேசமாக்க அவசரகெதியில் முயல்வது இயல்பாகவே ஐயத்தை உண்டாக்குவதுடன் இச் செயலுக்குப்பின் மதங் கடந்த மிகப் பெரிய அரசியல் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை.
இவ்விடயம் தொடர்பாக ஏலவே தங்களுக்கு ஒரு கடிதமும் பொது அமைப்புக்களின் ஒன்றியம் சார்பாக அனுப்பியிருந்தோம், பல அருட்தந்தையர்களுடன் இதன் பாதகத்தன்மை பற்றி 
விவாதித்திருந்தேன்.
புனிதப் பிரதேசமாக்கிய கதிர்காமத்தின் இன்றைய நிலை என்ன என்பது யாவரும் பகிரங்கமாக அறிந்த உண்மை, அதற்குப் பின்னரும் தமிழர் தேசத்தின் அடையாள இருப்பிடங்களை சிங்கள தேசியமயமாக்கலுக்கு பகிர்ந்தளிப்பது எதிர்காலத்தில் பாரிய பின் விளைவை ஏற்படுத்துவதுடன் நிர்வாக இருப்பியலை சவாலுக்குட்படுத்தி சரணாகதி நிலையை ஏற்படுத்தும்; ஆகவே நாம் விழித்துக் கொள்வது அவசியம்.
அவர்கள் அபிவிருத்தியை காட்டி எம்மை மயக்க முற்படலாம். இவை எல்லாம் அரசின் நீண்டகால செயற்றிட்டங்களே என்பது வெள்ளிடைமலையாகும்.
ஆகவே தயவு செய்து தொலை நோக்கு பார்வையுடன் அணுகி புனிதப் பிரதேசமாக்கும் கோரிக்கையை மறு பரிசீலனைக்குட்படுத்துமாறு தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தின் பிரதிகள் மன்னார் மறைமாவட்ட சகல அருட்தந்தையர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>


வடமராட்சியில் மாட்டிய திருடன் நையப்புடைக்கப்பட்தார்

:இரவுநேரம் வீட்டினுள் நுழைந்து திருடுவதற்கு முயன்ற திருடர்களிற்கு வீட்டு உரிமையாளர் வைத்த பொறியில் ஒருவர் மாட்டிக் கொண்டுள்ளார். மற்றைய மூவரும் தப்பிச் சென்றுவிட்டனர். மாட்டிய திருடன் நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் 
ஒப்படைக்கப்பட்டான்.
இந்த சம்பவம் விடத்தற்பளை பாடசாலைக்கு அருகில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது.
வீட்டு வளவிற்குள்- இருளுக்குள்- நால்வர் மறைந்து நிற்பதை வீட்டு உரிமையாளர் அவதானித்துள்ளார். உடனே சுதாகரித்த அவர், அவர்களை கண்டதை போல காட்டிக்கொள்ளாமல், சாதாரணமாகவே வீட்டிற்குள் வந்து, அயலர்களிற்கு தொலைபேசியில் தகவலை
 சொல்லி, வீட்டு வளவை சுற்றிவளைத்து நிற்க செய்தார். திடீரென மின்விளக்கை ஒளிரச் செய்து, குரல் வைத்தால் வீட்டுக்குள் நுழையும்படி அவர்களிற்கு சொல்லப்பட்டிருந்தது.
பின்னர், இரவு 10.30 மணியளவில் வீட்டு மின்விளக்குகளை அணைத்தார். வீட்டுக்குள்ளிருந்தபடி சத்தமின்றி, என்ன நடக்கிறதென்பதை அவதானித்துக் கொண்டிருந்தார்.
வீட்டிற்குள் எந்த சத்தமும் இல்லையென்றதும், அனைவரும் உறங்கி விட்டனர் என நினைத்த திருடர்கள், இரவு 11 மணியளவில் வீட்டு யன்னலை பிரிக்க முயன்றனர். வீட்டுக்காரர் உடனடியாக மின்விளக்குகளை ஒளிர விட்டு, சத்தமிட்டார். இதை எதிர்பாராத திருடர்கள் நால்வரும், தலைதெறிக்க தப்பியோடினர். வீட்டு வளவின் வெளியில் நின்றவர்கள், அவர்களை விரட்டிச் சென்றனர். நால்வரில், ஒருவன் மட்டும் அகப்பட்டான். மற்றைய திருடர்கள் தப்பியோடி விட்டனர்.
அவனை மரத்தில் கட்டி வைத்து நையப்புடைத்தனர். பின்னர் பொலிசாரிடம் அவன் ஒப்படைக்கப்பட்டான்.
பொலிசாரின் விசாரணையில் தப்பியோடி திருடர்களை பற்றிய விபரம் தெரிய வந்தது. தப்பியோடிய திருடர்களில் ஒருவன் கெற்பலியை சேர்ந்தவன். தற்போது உடுப்பிட்டியில் வசிக்கிறான். மற்றைய இருவரும் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள்.
வடமராட்சியின் உடுப்பிட்டி பகுதியில் கடந்த ஒரு வருடமாகவே பல திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன. குடாநாட்டையே அதிர வைத்த பெரிய திருட்டுக்கள் அவை. அந்த திருட்டுக்களில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை. அந்த சம்பவங்களிலும் இந்த திருடர்கள் தொடர்புபட்டுள்ளார்களா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>>


இனிவரும் 12 மணித்தியாலங்களுக்குள் நாட்டில் சூறாவளி

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, இனிவரும் 12 மணித்தியாலங்களுக்குள், சூறாவளி உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக, வானிலை அவதான நிலையம், இன்று (15), அறிக்கை​ வெளியிட்டுள்ளது.
இதன்பிரகாரம், நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளின் ஆழமான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு
 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்றும் அது, மணிக்கு 90 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கையில்
 குறிப்பிடப்பட்டுள்ளது.
இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து ஒரு சூறாவளியாக உருவாகக் கூடிய சாத்தியம் தென்படுவதாகவும் எனவே, மக்கள் அவதா
னத்துடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்
டுக்கொள்ளப்படுகின்றது.


வெள்ளி, 14 டிசம்பர், 2018

விபத்து வடமராட்சி நெல்லியடியில் ஒருவர் உயிரிழப்பு

யாழ். வடமராட்சி, நெல்லியடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் அல்வாய் வடக்கு பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபராவார்.
முச்சக்கரவண்டி ஒன்றும் துவிசக்கர வண்டி ஒன்றும்  மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 
உயிரிழந்துள்ளார். 
நெல்லியடி பொலிஸார் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மர்ம காய்ச்சலால்யாழில் பாடசாலை மாணவன் மரணம்

யாழில்.மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இருந்த மாணவன் ஒருவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் தரம் 09 கல்வி கற்கும் சுழிபுரம் மேற்கை சேர்ந்த 14 வயதான கோபாலகிருஷ்ணன் விதுர்சன் எனும் மாணவனே
 உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
 இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி இரவு காச்சல் அதிகரித்து உள்ளது. அதனை அடுத்து மறுநாள் சங்கானை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பயனின்றி மாணவன் 
உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்ட போது ,
மாணவன் கடந்த சில நாட்களாகவே காச்சலால் பீடிக்கப்பட்டு இருந்துள்ளார். மாணவனுக்கு ஏற்பட்ட காய்ச்சல் எதுவென கண்டறியப்படவில்லை. அதனால் மாணவனின் குருதி மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 11 டிசம்பர், 2018

மரண அறிவித்தல் அமரர் ஆறுமுகசாமி சின்னம்மா:11:12:18

மலர்வு:10 ஏப்ரல். 1940,-:உதிர்வு : 11, டிசம்பர்  2018    
யாழ்.அச்சுவேலி தோப்பைப்பிறப்பிடமாகவும்,  ஜெர்மனி Böblingen மற்றும் ஜெர்மனி எசன்ஆகிய இடங்களில்   வசித்து  வந்த அமரர் ஆறுமுகசாமி   சின்னம்மா அவர்கள் 11,12,-2018 செவ்வாய்க் கிழமை 
அன்று இறைபதம் அடைந்தார்.     
அன்னார் அமரர் ஆறுமுகசாமியின் அன்பு மனைவியும் ஆவார் 
காலஞ்சென்ற தம்பு, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மக்களும் ஆவர் 
  காலஞ்சென்ற முத்துக்குமாரு, கண்ணம்மா
  தம்பதிகளின் மருமகளும்
காலஞ்சென்றவர்களான கந்தையா, 
 துரைராஜா  
சிதம்பரம் (பூரணம்),ஐயாத்துரைமற்றும் மற்றும்  தானையாஆகியோரின் 
மைத்துனியும்ஆவார் 
மலர்வதனா, சந்திரவதனா, மதனராசா, சந்திரராசா ஆகியோரின் 
பாசமிகு தாயாரும் 
மகேந்திரராசா, சுந்தரராசா, கனிஷ்ர, சுகந்தினி ஆகியோரின் அன்பு  
,அன்பு மாமியாரும் ஆவர்
சத்தியா, சிந்து, சோபி, கேதுயன், துசான், ஷாளினி, சந்துறு, சமீறா ஆகியோரின் அன்புப்  பேத்தியாரும்
காலஞ்சென்றவர்களான  துரைராசா, வேலுப்பிள்ளை, ஆறுமுகம், அன்னம்மா, நாகலிங்கம், மற்றும் செல்லத்துரை, முத்துப்பிள்ளை(பாலம்மா), அன்னப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ,
காலஞ்சென்றவர்களான நன்னித்தம்பி, ஐயாத்துரை, ராசமணி, தம்பிஐயா, நேசமலர், மற்றும் தவமணி, தெய்வநாயகி, . செல்லத்துரை(தனையா  ) ஆகியோரின் அன்புச் சகலலியும்  ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2018 திங்கட்கிழமை 
அன்று மதியம் .:01-மணி முதல்- மாலை மலை 05-00 மணிவரை
முகவரி   (ஜெர்மனி எசனில்)  நடைபெற்று தொடர்ந்து மு.ப 11:30 மணிமுதல் 04மணிவரை அனுதாப உரை நிகழ்த்தப்படும் அதற்கு பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
  முகவரி  hellweg  45279 essen  
 பார்வைக்கும் கிரிகை நடைபெறும் மண்டப 
-தோலை பேசி இலக்கம்
TP  0201-8505455 - 95,  telefah-0201-8508099   
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
hellweg  95 

www.mueller.haupt.de
                 
   இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
ெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல் பேசி.00 0049 17623762242
மகள் வதனா,ஜெர்மனி
தொலைபேசி: +497031224307
மகேந்திராசா மலர்வதனா — ஜெர்மனி
தொலைபேசி: +4915221698480
சுந்தரராசா சந்திரவதனா — ஜெர்மனி
தொலைபேசி: +491739101091
மதனராசா கனிஷ்ர — கனடா
தொலைபேசி: +14169935082
சந்திரராசா சுகந்தினி — ஜெர்மனி
தொலைபேசி: +491775715939
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





திங்கள், 10 டிசம்பர், 2018

யாழில் நோயாளர் காவு வண்டியில் பரீட்சை எழுதும் மாணவி

டெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியொருவர், நோயாளர் காவு வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு வந்து, பரீட்சை
 எழுதி செல்கிறார்.
யாழ் நகரிலுள்ள மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவியொருவரே, டெங்கு பாதிப்பின் மத்தியிலும் க.பொ.த. சாதாரண பரீட்சை 
எழுதி வருகிறார்.
இவர் திடீரென டெங்கு நோய்த்தொற்றிற்கு இலக்கானார். இதையடுத்து சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பரீட்சைக்கு தயாராகியிருந்த அந்த மாணவி, டெங்கு தொற்றால் பரீட்சை எழுதும் வாய்ப்பை கைவிட தயாராக 
இருக்கவில்லை.
பரீட்சை எழுதப் போவதாக கோரிக்கை விடுத்திருந்தார். அவரது உடல்நிலையை ஆராய்ந்த வைத்தியர்கள், 
வைத்தியசாலையில் தங்கியிருந்தபடியே பரீட்சை எழுத அனுமதித்தனர். இதற்காக வைத்தியசாலையின் நோயாளர் 
காவு வண்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அவரை பரீட்சை மண்டபத்திற்கு அழைத்து சென்று, பரீட்சை முடிந்ததும் மீண்டும் வைத்தியசாலைக்கு நோயாளர் காவுவண்டி மூலம் அழைத்து
 செல்கின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 9 டிசம்பர், 2018

திறக்கப்பட்டன இரணைமடுக் குளத்தின் ஆறு வான்கதவுகள்

இரணைமடுக் குளத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், அதன் ஆறு வான் கதவுகள் இன்று முற்பகல் 11 மணியளவில்
 திறக்கப்பட்டன.
அதனால் தாழ்வான பகுதிகளான பன்னங்கண்டி, ஊரியான் , முரசுமோட்டை, வட்டக்கச்சி பண்ணைப் பகுதி மற்றும் கண்டாவளை ஆகிய பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசத் திணைக்களம் கேட்டுள்ளது.
இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் நேற்றுப் பிற்பகல் 35.05 
அடியை எட்டியது. குளத்தின் மொத்த கொள்ளளவு 36 அடியாக உள்ளது. அதனால் இன்று சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் 6 வான் 
கதவுகள் திறக்கப்பட்டன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 7 டிசம்பர், 2018

பண்டாரவளை இரண்டு பிள்ளைகளின் தாய் விபத்தில் பலி

பண்டாரவளை நகரில் வீதியைக் கடக்க முயன்ற போது முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.06.11.2018.. இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் பண்டாரவளை – இனிகம்பெத்த பிரதேசத்தை
 சேர்ந்த 33 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்து இடம்பெறும் போது அந்த பெண்ணுடன் பயணித்த மற்றைய நபர் காயமடைந்து பண்டராவளை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதியை கைது செய்துள்ள பண்டாரவளை காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.இதேவேளை, குறித்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காணொளியில்
 பதிவாகியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஒரு மணி நேரத்தில் 1200 இடியப்பங்களை தயாரித்த இளைஞன்

த்ன்குடியில் இளைஞர் ஒருவர் ஒரு மணித்தியாலயத்தில் ஒரே நேரத்தில் 1200 இடியப்பங்களை தயாரிக்கும் இயந்திரமொன்றை கண்டு பிடித்து தயாரித்துள்ளார்.காத்தான்குடி 
முதலாம் குறிச்சி
 ஹுஸைனிய்யா வீதியைச் சேர்ந்த நுஹ்மான் முகம்மது சிறாஜ் (வயது 25) எனும் இளைஞனே இவ்வாறு குறித்த இயந்திரத்தை கண்டு பிடித்துள்ளார்.மின்சாரத்தில் 
இயங்கும் வகையில்
 கண்டுபிடித்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணித்தியாலயத்திற்கு 1200 தொடக்கம் 1500 வரையிலான இடியப்பங்களை ஒரே நேரத்தில் தயாரிக்க முடியும்
. இந்த இயந்திரத்தை
 தயாரிப்பதற்கு ஆறு மாத காலம் பிடித்துள்ளதுடன் 4 இலட்சம் ரூபா செலவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.ஒரே நேரத்தில் அதிகளவான இடியப்பங்களின் தேவை காணப்படுகின்றது. 
அதை தயாரிப்பதற்கு பல சிரமங்களை சிலர் சந்திக்கின்றனர். இவைகளை கருத்திற்கொண்டே இந்த இயந்திரத்தை கண்டு பிடித்து தயாரித்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.இவ்வாறு இன்னும் சில
 இயந்திரங்களையும் கண்டு பிக்கவுள்ளதாகவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் 
தெரிவித்தார்.




இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

தனது மகனை தேடிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தரணிக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
 நேற்று மாலை குறித்த சடலத்தை பொலிஸார் 
மீட்டுள்ளனர்.
 வீட்டில் இருந்த தனது மகனை நீண்டநேரமாக காணவில்லை என்று அவரது தாயார் எல்லா இடமும் தேடியுள்ளார். 
இதன் போதே கிணற்றினுள் சடலமாக இருந்தமை க
ண்டுபிடிக்கபட்டது.
பின்னர் தகவல் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கபட்டுள்ளது.
 குறித்த சம்பவத்தில் செல்வம் வயது 40 என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 6 டிசம்பர், 2018

ஓர் அவசர அறிவிப்பு. வான் பாயும் அக்கராயன் குளம்

கிளிநொச்சி மக்களுக்கு  ஓர் அவசர அறிவிப்பு  பாரிய நீர்ப்பாசன குளமான கிளிநொச்சி – அக்கராயன் குளம் சற்று முன்னர் வான் பாய ஆரம்பித்துள்ளது.06.12.2018 இக்குளத்தின் நீர்மட்டம் 24 அடி 3 அங்குலமாக காணப்பட்டுள்ளதுடன் இன்று 25 அடியாக உயர்ந்துள்ளது.இந்நிலையில், இக்குளம் முழுமையாக நிரம்பி வான்
 பாய ஆரம்பித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 4 டிசம்பர், 2018

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 03.12.2018 அன்று ஆரம்பம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 03.12.2018 அன்று ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நடைபெறவுள்ள இப்பரீட்சையில் சுமார் 656,641 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். நாடு முழுவதிலும் உள்ள 4661 பரீட்சை நிலயங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது.
கையடக்கத் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஆகியவற்றை பரீட்சை மண்டபத்துக்குள் வைத்திருக்கும் பரீட்சார்த்தியின் பரீட்சை அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், ஐந்து வருடங்களுக்கு பரீட்சைத் தடையும் விதிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் 
அறிவித்துள்ளது.
மலையகத்திலும் 03.12.2018 அன்று மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை  அவதானிக்க முடிந்திருந்தது. அந்தவகையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவா்கள் ஆா்வத்துடன்  பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 3 டிசம்பர், 2018

.மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கியவர் மரணம்

யாழ். 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த தர்மசேகரம் வசீகரன் (வயது 25) என்பவரே உயிரிழந்தவராவார்.
குறித்த நபர் நேற்றைய தினம் வீட்டில் மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறக்கத்திற்கு சென்றுள்ளார். மாலை தேநீர் வழங்குவதற்காக வீட்டில் இருந்தவர்கள் அவரை எழுப்பிய வேளை
 அசைவற்று கிடந்துள்ளார்.
அதனை அடுத்து வீட்டார் அவரை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
உயிரிழந்த நபருக்கு வலிப்பு நோய் ஏற்படுவதாகவும் , திடீரென படுக்கையில்  வலிப்பு நோய் ஏற்பட்டதால் , சுவாச பைக்குள் உணவு பாதார்த்தம் அடைத்ததால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த உயிரிழப்பு தொடர்பில் யாழ்.போதனா வைத்திய சாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் விசாரணைகளை
 மேற்கொண்டுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>