siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 31 ஜனவரி, 2018

நாட்டில் காலநிலையில் திடீர் மாற்றம்

இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தையடுத்து  நாடெங்கிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம்
 தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையை அண்டியுள்ள வான்பரப்பு மேகமூட்டத்துடன் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
காலநிலை தொடர்பாக  வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டின் அநேகமான பிரதேசங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 
விசேடமாக கிழக்கு - ஊவா மாகாணங்களிலும், மாத்தளை - பொலன்னறுவை மாவட்டங்களிலும் ஏனைய சில இடங்களிலும் அடைமழை பெய்யலாம். 
நாட்டின்  வடபாகத்திலும், அம்பாந்தோட்டை- மாத்தறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் 
காற்று வீசும்.
அத்துடன் நாட்டை சூழவுள்ள வான்பரப்பு மேகமூட்டத்துடன் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும்
 தெரிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

செவ்வாய், 30 ஜனவரி, 2018

தைப்பூசத் திருவிழாவைமுன்னிட்டு யாழ். மக்களுக்கு அறிவித்தல்!

யாழில் பருத்தித்துறை வீதி, அரசடி வீதி, கோவில் வீதி போன்ற பாதைகளை பயன்படுத்தும் பயணிகள் நாளைய தினம் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.யாழ். 
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா
 இடம்பெறவுள்ள நிலையில் திருமஞ்சம் வெளிவீதி உலா வருவதாகதெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில்
 மேற்குறிப்பிட்ட வீதிகளில் 
நாளை மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையில் திருமஞ்சம் வெளிவீதி உலா வரவுள்ளது.இதனால் குறித்த காலப்பகுதியில் பயணிகளை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு மாநகரசபை ஆணையாளர் த.ஜெயசீலன் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 29 ஜனவரி, 2018

கல்லடிப் பிரதேசத்தில் அண்ணனும் தம்பியும் தற்கொலை

மட்டக்களப்பு கல்லடிப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான அண்ணனும் தம்பியும் தற்கொலை செய்து அகால மரணமடைந்துள்ளனர்.
இதனை காத்தான்குடி பொலிஸார் உறுதி செய்துள்ளனர்
மட்டக்களப்பு, கல்லடி வாவியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட இலங்கை மின்சார 
சபைப் பொறியியலாளரான கணேஷமூர்த்தி உமாரமணனின் இளைய சகோதரனான இலங்கை மின்சார சபை ஊழியரான கணேஷமூர்த்தி சாரோஜிதன்(வயது 21) இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்
அண்ணன் இறந்த துயரம் தாளாது மனமுடைந்திருந்த நிலையிலேயே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரே குடும்பத்தில் இவ்வாறு அடுத்தடுத்து இடம்பெற்ற இந்த அகால மரணங்கள் அந்தக் குடும்பத்தையும் கிராமத்தையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது
கடந்த 24ஆம் திகதி காலை 8 மணியிலிருந்து காணாமல்போன இலங்கை மின்சார சபைப் பொறியியலாளரும் இரு குழந்தைகளின் தந்தையுமான கிருஷ்ணன் கோயில் வீதி, கல்லடியைச் சேர்ந்த, கணேஷமூர்த்தி உமாரமணன் (வயது 34) என்பவர் அடக்கம் செய்யப்பட்ட மறு தினம் அவரது தம்பி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உடற் கூறு பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி காத்தான்குடிப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பொம்மைவெளியில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
யாழ். பொம்மைவெளி பகுதியில் வைத்து இவர்கள்
 இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து பத்து கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. 
யாழ். விசேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட 
சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளதுடன், இவர்களிடமிருந்து 78 ஆயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 
யாழ். பொம்மைவெளி மற்றும் மாதகல்
 பகுதிகளை சேர்ந்த 32 மற்றும் 38 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களை மேலதிக விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக யாழ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் 
$தெரிவித்துள்ளனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சம்பள அதிகரிப்பு இலங்கை அரசாங்க ஊழியர்களுக்கு

இலங்கையின் அனைத்து அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் முதலாம் திகதியில் இருந்து இந்த சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.நூற்றுக்கு 22 வீதம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணி 
தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் கீழ் 2006ஆம் ஆண்டில் இருந்து 10 வருடங்களுக்குள் எவ்வித சம்பள அதிகரிப்பும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் சமகால அரசாங்கத்தின் கீழ் 2015ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் தொழிலாளர் சேவை 7512 ரூபாயிலும், அமைச்சின் செயலாளருக்கு 30684 ரூபாயிலும் சம்பளம் அதிகரிப்பட்டுள்ளதாக
 சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமது தொழிற்சங்க முன்னணியின் கோரிக்கைக்கமைய 2015 ஆம் ஆண்டு சம்பளத்துடன் இணைப்பட்ட 10000 ரூபாய் கொடுப்பனவு மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளத்தில்
 20 வீத கொடுப்பனவும் அடிப்படை சம்பளத்துடன் இணைக்க சமகால அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய செயற்படுவதாகவும் தொழிற்சங்க முன்னணியின் தலைவர்
 சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டமையினால் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற மேலதிக கொடுப்பனவுகள், வாராந்த ஓய்வு கொடுப்பனவு மற்றும் அரச விடுமுறை கொடுப்பனவு 
அதிகரிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் வங்கி அல்லது வேறு நிறுவனங்களில் கடன் பெற்றுக் கொள்ளும் போது, கடன் தொகை அதிகரிக்கப்படும் என சமன் ரத்னபிரிய சுட்டிக்காட்டியுள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, 27 ஜனவரி, 2018

மரண அறிவித்தல்.திரு. மகாலிங்கம் செல்வகுமார் -26.01.18

 
மண்ணில் : 17 யூன் 1963 — விண்ணில் : 26 சனவரி 2018 
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ்.நவற்கிரி.அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ். லவுசானை ( Lausanne ஐ) தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட. திரு- மகாலிங்கம் செல்வகுமார் அவர்கள் 26-01-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் மீனாம்பாள் தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற நடராசா, அழகம்மா தம்பதிகளின் 
அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
கரிக்சன், சருபீகா, கரிகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தனபாலன், செல்வரஞ்சினி மற்றும் இந்திராணி(கொழும்பு), செல்வநேசன்(ஜெர்மனி), செல்வராணி(ஜெர்மனி), செல்வமலர்(திருகோணமலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசகுமார், சந்திரசேகரன், கெளசலா, சாந்தமலர், இராசநந்தினி, இராசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
தகவல் 
குடும்பத்தினர் 
நிகழ்வுகள் 
பார்வைக்கு 
திகதி: சனிக்கிழமை 27/01/2018, 10:00 மு.ப — 03:00 பி.ப 
முகவரி: Funeral Center Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland  
பார்வைக்கு 
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/01/2018, 10:00 மு.ப — 03:00 பி.ப 
முகவரி: Funeral Center Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland  
பார்வைக்கு 
திகதி: திங்கட்கிழமை 29/01/2018, 02:00 பி.ப — 06:30 பி.ப 
முகவரி: Funeral Center Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland  
பார்வைக்கு 
திகதி: செவ்வாய்க்கிழமை 30/01/2018, 02:00 பி.ப — 06:30 பி.ப 
முகவரி: Funeral Center Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland  
பார்வைக்கு 
திகதி: புதன்கிழமை 31/01/2018, 01:00 பி.ப — 03:00 பி.ப 
முகவரி: Funeral Center Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland  
கிரியை 
திகதி: வியாழக்கிழமை 01/02/2018, 01:00 பி.ப — 03:00 பி.ப 
முகவரி: Funeral Center Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland  
தொடர்புகளுக்கு 
மனைவி — சுவிட்சர்லாந்து 
தொலைபேசி: +41216467302 
சேகர் — சுவிட்சர்லாந்து 
செல்லிடப்பேசி: +41784035850 
இந்திரன் — சுவிட்சர்லாந்து 
செல்லிடப்பேசி: +41763667463 
கோனேஸ் — சுவிட்சர்லாந்து 
செல்லிடப்பேசி: +41791515362 
சிங்கன் — சுவிட்சர்லாந்து 
செல்லிடப்பேசி: +41798548726 
செல்வநேசன் — ஜெர்மனி 
செல்லிடப்பேசி: +4915750402049 
ஜெனி — இலங்கை 
செல்லிடப்பேசி: +94213737959 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

யாழில் பசுக்கொலையாளி மடக்கிப் பிடிப்பு


யாழ்ப்பாணம் சிவலிங்கப்புளியடி பகுதியில்  கர்ப்பப் பசுவினை இறைச்சிக்காக வெட்டிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்.காவல் துறையினர் 
தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் பசுவை இரண்டு நாட்களாக காணாத நிலையில் அந்த தேடி வந்துள்ளார். இந்நிலையில் இறைச்சிக்காக பசுக்கள் மற்றும் காளைகளை வெட்டும் சிலரிடம் தகவல் பெற்றுக்கொண்டு பார ஊர்தி ஒன்றினை சந்தேகத்திற்கிடமான முறையில் 
பின்தொடர்ந்துள்ளார்.
பாரஊர்தியை செலுத்திய சாரதியிடம் ஊர்தியின் கதவுகளை திறக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதன்போது மறுப்பு தெரிவித்த சாரதி குறித்த பெண்ணுடன் முரண்பட்டுள்ளார். அருகிலிருந்து மக்கள் ஒன்று கூடி பார ஊர்தியின் கதவைத் திறந்து பார்த்த போது பசுவொன்றின் தோற்பாகங்கள் மற்றும் இறைச்சிகள் என வெவ்வேறாக பிரித்து
 வைக்கட்டிருந்தது.
இதன்போது தனது பசுவின் காதில் காணப்பட்ட இலக்கத் தகட்டினைக் கொண்டு தனது பசுவினை குறித்த பெண் உறுதி செய்தார்.  இந்நிலையில், சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 26 ஜனவரி, 2018

பாரிய கொள்ளைக் கும்பல் தென்மராட்சியை அதிர வைத்தனர்

பதுங்கு குழி­யி­னுள் மறைந்­தி­ருந்த கொள்­ளைக் கும்­பல் ஒன்­றைத் தாம் இனம் கண்டு கைது செய்­தி­ருப்பதாக சாவ­கச்­சே­ரிப் பொலி­ஸார் தெரி­வித்­துள்ளனர் .சந்­தே­க­ந­பர்­கள் இரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்
. மேலும் மூவர் தப்­பி­யோ­டி­விட்­ட­னர்.கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­டம் நடத்­திய விசா­ர­ணை­யி­லி­ருந்து 3 வீடு­க­ளில் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட ஒரு லட்­சத்து 40 ஆயி­ரம் ரூபா பணம் மற்­றும் இரண்­ட­ரைப் பவுண் நகை என்­பன மீட்­கப்­பட்­டன என்­றும் 
பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
சம்­ப­வம் தென்­ம­ராட்சி தெற்கு மற­வன்­பு­ல­வில் இடம்­பெற்­றது. கேர­தீவு முதன்மை வீதி­யி­லி­ருந்து பல உண­வுப் பொதி­க­ளு­டன் ஒரு­வர் சென்­ற­தனை சிவில் உடை­யில் நின்ற பொலிஸ் அலு­வ­லர் ஒரு­வர் கண்­டுள்­ளார்.அவ­ரைப் பொலிஸ் அலு­வ­லர் பின்­ தொ­டர்ந்து சென்­ற­போது பதுங்கு குழி ஒன்­றில் மேலும், பலர் இருந்­த­தைக் கண்­டார்.
அவர்­கள் மீது சந்­தே­கம் ஏற்­பட்­ட­தால் உட­ன­டி­யா­கப் பொலிஸ் நிலை­யத்­துக்­கும் தக­வல் வழங்­கி­னார். அங்கு விரைந்த சாவ­கச்­சேரி பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் குழி­யி­லி­ருந்த 5 பேரும் தப்­பி­யோ­டத்
 தொடங்­கி­னர். பொலி­ஸார் துரத்­திச் சென்­ற­னர்.கடல் தண்­ணீ­ருக்­குள் இறங்கி அவர்­கள் தப்­பி­யோ­டி­னர். பொலி­ஸா­ரும் கடல் தண்­ணீ­ருக்­குள் இறங்­கித் துரத்­தி­னர். இரு­வர் பிடி­பட ஏனைய மூவ­ரும் தப்­பி­யோ­டி­விட்­ட­னர் 
என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் நாவற்­குளி மற்­றும் அள­வெட்­டி­யைச் சேர்ந்­த­வர்­கள். இது­வ­ரை­யான விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து நாவற்­குழி கேர­தீவு வீதி­யி­லுள்ள வீடு­க­ளில் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட பண­மும் நாவற்­கு­ழி­யில் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட நகை­க­ளும் மீட்­கப்­பட்­டுள்­ளதாக சாவ­கச்­சேரி பொலிஸ் நிலை­யத்­தின் பொலிஸ் அதி­காரி விக்­கி­ர­ம­சிங்க
 தெரி­வித்­தார்.
நேற்­று­முன்­தி­னம் கைது செய்­யப்­பட்ட அவர்­கள் சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் நேற்று முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அவர்­களை 14 நாள்­க­ளுக்கு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­மன்று உத்­த­ர­விட்­டது என்று பொலி­ஸார் மேலும் 
தெரி­வித்­த­னர்.
தென்­ம­ராட்சி தெற்­குப் பகு­தி­யில் நாவற்­குழி தொடக்­கம் தனன்­க­ளப்பு வரை­யான பகு­தி­க­ளில் மூன்ற மாதங்­க­ளாக அடுத்­த­டுத்து பல வீடு­க­ளில் திருட்டு இடம்­பெற்­றது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை தச்­சன்­தோப்பு 
பகு­தி­யி­லும் மறு­நாள் கைத­டி­யி­லும் நகை­கள் மற்­றும் பணம் கொள்­ளை­யி­டப்­பட்­டன.வீட்­டின் கத­வு­களை கோட­ரி­யால்
 தாக்­கிச் சேதப்­ப­டுத்தி உள்­நு­ழைந்து அங்­கி­ருந்த குடும்­பங்­களை மோச­மா­கத் தாக்கி கொள்ளை இடம்­பெற்­றி­ருந்­தது. சம்­ப­வங்­கள் தொடர்­பா­கச் சாவ­கச்­சேரி பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டன. திரு­டர்இ கொள்­ளை­யர்­க­ளைப் பிடிப்­ப­தில் பொலி­ஸார் அதிக ஈடு­பாடு காட்­ட­வேண்­டும் என பிர­தேச மக்­கள் கோரி­க்கை 
விடுத்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





வியாழன், 25 ஜனவரி, 2018

தும்பளையில் பெண்ணிடம் சங்கிலி அபகரிப்பு

யாழ், பருத்தித்துறை தும்பளையில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என்று தெரிவித்து தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற சம்பவம்  நடந்துள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு இருவர்
 மோட்டார் சைக்கிளில் வந்தனர். தம்மை சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.சமுர்த்தி தொடர்பான பதிவுகளை மேற்கொள்ள வந்தோம் என்று கூறிய அவர்கள் பதிவு செய்வது போன்று பாசாங்கு செய்தனர்.
 அதனை உண்மை என்று நம்பிய வீட்டுப் பெண் அவர்களின் பதிவில் கவனம் செலுத்திய சந்தர்ப்பத்தைப் பார்த்து அவரது கழுத்தில் இருந்த 2 பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடினர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் விசாரணைகளை 
மேற்கொண்டுள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 24 ஜனவரி, 2018

இளைஞர் யாழ். ஊரெழு பகுதியில் விபத்தில் பலி

யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். பலாலி வீதியில் ஊரெழு பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்.நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்த கெப் ரக வாகனம் ஒன்றுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் 25 வயதான இளைஞர் சம்பவ இடத்திலேயே
 உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


அமரர் .தம்பு. துரைராஜா 14ம் ஆண்டு நினைவஞ்சலி 23.01.18

மலர்வு .96.06.1926    உதிர்வு .23.01.2016      
   யாழ்  நவற்கிரி புத்தூர்ரை
 பிறப்பிடமா​வும்   வசிப்பிடமா​கவும் மாகக்  கொண்ட 
அமரர் திரு,தம்பு  துரைராஜா  அவர்களின் நீங்காத நினைவுடன்  பதின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி 23..01.2018..இன்று  திங்கள்கிழமை 
இறைவன் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரிய பொக்கிசமே இதயம் தான்! அதில் எவர் குடியிருப்பார் என முடிவெடுக்கும் உரிமை 
எம்முடையது.
இறைவனுக்குச் சமமாக எங்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். வருடங்கள் சென்றாலும் வலிகள் நகரவில்லை வாழ்க்கையைச் சந்திக்கும் ஒவ்வொரு தருணத்திலும் உங்களை நாங்கள் 
மறப்பதில்லை.
இறைவனை நாங்கள் எப்படி பாகுபாடு இல்லாமல் நேசிக்கின்றோமோ? அதுபோலவே நீங்களும் எங்கள் மூச்சில் கலந்து விட்டீர்கள்.
இறைவன் மனிதனுக்கு கொடுத்த மிகப் பெரிய சாபம் நினைவுகள், உங்கள் நினைவுகள் எங்களை எவ்வளவு மகிழ்வித்தாலும் நீங்கள் இன்று எங்களுடன் இல்லை என்பதையும் ஞாபகப்படுத்து 
கின்றது. உறவுக
ள் என்பது சங்கிலியால் இணைக்கப்பட்ட ஒரு பாலம் அதில் தொடங்கியவரே இன்று இல்லையென்று எங்களுக்கு நினைவு வரும் போதெல்லாம் இதயத்திற்கும் எங்கள் நினைவுகளுக்கும்
 நடக்கும் போராட்டத்தில் வரும் கண்ணீர் மட்டுமே அறியும்.அன்னாரின் ஆத்மாசாந்தியடைய 
இறைவனை பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
உன் நிழலை நிஜமாக்கி நிலைத்திருக்கும்
 எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்.
என்றும் உங்கள் பிரிவால் துயருறும் 
, பிள்ளைகள், சகோதரர்கள் , 
மைத்துனர்மார்கள், மருமக்கள்
பேரப்பிள்ளைகள்  புட்ட ப்பிள்ளைகள் 
தகவல் 
 குடும்பத்தினர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதன், 17 ஜனவரி, 2018

பாடசாலை மாணவி ஓருவர் தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பில் பாடசாலை மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் பகுதியிலுள்ள, உமாமில் வீதியைச் சேர்ந்த கந்தலிங்கம் ரேஸ்மியா என்ற மாணவியே
இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும், 15 வயதான குறித்த மாணவியின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என
பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

செவ்வாய், 16 ஜனவரி, 2018

மீசாலையில் ரயில் மோதி இரு மாடுகள் பலி!! மாணவி படுகாயம்!

யாழ்  மீசாலை புத்தூர் சந்திக்கும் வீரசிங்கம் பாடசாலைக்கு முன்பாக சற்று முன்னர் யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டு இருத்த புகையிரத்துடன், ரயில் பாதையில் புல் மேய்த்து 
கொண்டிருந்த இரண்டு பசுமாடுகள் மோதுண்டு உயிரிழந்துள்ளன.புகையிரத்துடன் மோதிய வேகத்தில் பசு மாடு வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு முன்பாக 
விழுந்ததில், கல்லூரி 
முடிவடைந்து வீடு செல்வதற்காக காத்திருந்த மாணவியை முட்டி மோதியதில் மாணவி காயமடைந்துள்ளர்.காயமடைந்த மாணவி தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வாள்வெட்டு யாழ். ஆனைக்கோட்டை பகுதியில் !

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை வராகி அம்மன் கோயில் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக
 தெரிவிப்பு 
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பொலிஸார் குறித்த வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


கொழும்பில் இருந்து யாழ் சென்ற புகையிரதம் தீப்பற்றியது

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற குளிரூட்டப்பட்ட புகையிரத்தில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து இன்று அதிகாலை 5.45 மணியளவில் யாழ். நோக்கி புறப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதத்திலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
இன்று நண்பகல் 12.30 மணியளவில் சாவகச்சேரி, மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக புகையிரதம் சென்று கொண்டிருந்த போது புகையிரதத்தின் இயந்திர பகுதியில் தீ விபத்து
 ஏற்பட்டுள்து.

இதன் காரணமாக புகையிரதம் சடுதியாக நிறுத்தப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதுடன், பேருந்துகளில் தமது இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
விபத்து குறித்து யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து
 புகையிரதம் யாழ். புகையிரத நிலையத்தை சென்றடைந்துள்ளது.
இயந்திர கோளாறு காரணமாகவே இவ் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 15 ஜனவரி, 2018

அமரர் திரு துரைராஜா இரத்தினம் 2ம் ஆண்டு நினைவஞ்சலி 15.01.18


மலர்வு .28.12.1952    உதிர்வு .15.01.2016      
நீங்காத நினைவு.இரண்டாம் ஆண்டு 15-01.2018
 அமரர் திரு துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை)   இவர் யாழ்  நவற்கிரி புத்தூர்ரை
 பிறப்பிடமா​வும்  சங்கோலை  மாவிட்ட புரத்தை வசிப்பிடமா​கவும்  k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட 
அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் நீங்காத நினைவுடன்  இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி 16.01.2018..இன்று  திங்கள்கிழமை 
மறைந்துவிட்ட உங்கள் உறவின்  
நீங்காத நினைவுகள் 
உதிர்ந்துவிட்ட உங்கள் நினைவின் 
உலராத வாசனை 
இழந்த அன்பானவரின் 
நீங்காத பொழுதுகள் 
இதயம் துடிக்கும் வரை 
மாறாது நினைப்பு 
இயற்கையின் அழைப்பு 
மீற முடியாத பயணம் 
சென்ற தூரமோ
மீள முடியாத பாதை
கண்முன் உங்கள் விம்பம் 
காலத்தை கடந்தும் கலையவில்லை 
நம்மை விட்டு பிரிந்த எங்கள் 
நம் நினைவை விட்டு பிரிய மறுப்பதேன்????
 உன் நிழலை நிஜமாக்கி நிலைத்திருக்கும்
அன்னாரின் ஆத்மாசாந்தியடைய 
இறைவனை பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி...
என்றும் உங்கள் பிரிவால் துயருறும் 
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் , 
மைத்துனர்மார்கள், மருமக்கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>








வெள்ளி, 12 ஜனவரி, 2018

கொக்காவில் விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள்

மாங்குளம் - கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றன.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வேன் மாங்குளம் பகுதியில் விபத்திற்குள்ளாகியதில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆடை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நால்வரே விபத்தில் உயிரிழந்தனர்.
அவர்களில் ஒருவரான நவரத்தினம் அருண் கல்வியை நிறைவு செய்துவிட்டு, குடும்பச்சுமையை ஏற்று, சொந்தக்காலில் நிற்க விரும்பி வர்த்தகத்தில் ஈடுபட்டவர்.
அன்னையின் அரவணைப்பினை இழந்து, தந்தையின் வழிநடத்தலில் வாழந்து வந்த சிந்துஜனால் வாழ்வில் வெகுதூரம் பயணிக்க முடியவில்லை.
ஏனைய இருவரான சந்திரசேகரம் ஜெயச்சந்திரனும் சின்னத்துரை கிருஸ்ணரூபனும் இரத்த உறவுகளாவர
உயிர்நீத்த இவர்களுக்கு இன்று பெருமளவானோர் அஞ்சலி செலுத்தினர்.
அயலவர்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் அல்வாய் - கரம்பன் இந்து மயானத்தில் பூதவுடல்கள் அக்கினியுடன் சங்கமமாகின.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல், அமரர் கந்தப்பிள்ளை வன்னியசிங்கம்

ஆண்டவன் அடியில் : 12,01,2018 
யாழ்.  தோப்பு அச்சுவேலியை  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாக  கொண்ட அமரர் கந்தப்பிள்ளை  வன்னியசிங்கம்  ( லொறி உரிமையாளர் )  அவர்கள் 12,01,2018  வெள்ளிக்கிழமை   அன்று 
காலமானார்.அன்னார் திருமதி   துளசி அவர்களின் அன்பு கணவரும் ஆவார்.
அன்னார், காலஞ்சென்ற திரு திருமதி  கந்தப்பிள்ளை  தம்பதிகளின் 
அன்பு   மகனும் , 
காலஞ்சென்ற நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு   மருமகனும் மகனும் ஆவார் 
அன்னாரின் இறுதிக்கிரியை 15-01-2018 . திங்கள்ட்கிழமை  அன்று 
  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு   இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்ப ட்டது .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்...
குடும்பத்தினர் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 10 ஜனவரி, 2018

மாங்குளம் பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர்களின் பெயர் விபரம்

கிளிநொச்சி - மாங்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த யாழ். இளைஞர்களின் பெயர் விபரங்கள் 
வெளியாகி உள்ளன.
குறித்த சம்பவத்தில்,
யாழ். அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த நவரத்தினம் அருண் (வயது 24),
சந்திரசேகரம் ஜெயசந்திரன் (வயது 36),
யாழ்.மாலு சந்தி பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியம் இந்துகன் (வயது 19)
யாழ். பருத்திதுறையை சேர்ந்த சின்னத்துரை கிருஸ்ணரூபன் (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
மேலும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பி.துவாரகன் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி - மாங்குளம், கொக்காவில் ஏ9 வீதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனம் ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதி 
விபத்துக்குள்ளானது.
இதில் ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த நால்வர் சம்பவ இடத்திலேயே உயிழிரந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.     
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஏ9 வீதியில் கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி

கிளிநொச்சி - மாங்குளம் பகுதியில்  இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
  இந்த விபத்து மாங்குளம்- கொக்காவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.¨  சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நடு வீதியில் சுன்னாகத்தில் தனித்து விடப்பட்ட முதியவர்

யாழ். சுன்னாகம் மயிலணியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையாரான 70 வயது முதியவரொருவர் பராமரிக்க யாருமின்றித் தனித்து விடப்பட்டுள்ளார். 
இந்நிலையில் குறித்த
முதியவர் உடற்பிணி காரணமாக கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் சுன்னாகம் காங்கேசன்துறை
வீதியில் கவனிப்பார் யாருமின்றி நீண்டநேரமாக உறங்கியுள்ளார். 
இந்த மனதை உருக்கும் சம்பவம் இன்று திங்கட்கிழமை(08) பிற்பகல்சுன்னாகம் காங்கேசன்துறை
வீதியில் தேசிய சேமிப்பு வங்கிக்கு அருகில் பதிவாகியுள்ளது.
காங்கேசன்துறை வீதி யாழிலுள்ள வீதிகளில் முக்கியமானதொரு வீதியாகக் காணப்படும் நிலையில்
முதியவர் நீண்டநேரமாக வீதியில் உறங்கிய போதும் அவரை வீதியால் சென்ற பொதுமக்கள்
பொருட்படுத்தாமல் கடந்து சென்றது தான் கொடுமையிலும் கொடுமை.  
தொழில் நிமிர்த்தம் சென்று விட்டு தற்செயலாக அவ்வீதியால் வீடு திரும்பிக் கொண்டிருந்த
ஊடகவியலாளரொருவர் குறித்த முதியவரை எழுப்ப முற்பட்டுள்ளார். எனினும், உடற்பிணி
காரணமாக அவரால் உடனடியாக எழும்ப முடியவில்லை.  
குறித்த முதியவர் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு ஊடகவியலாளர் அவரிடம்
பேச்சுக் கொடுத்த போது, 
என்ர மனிசி நோய் காரணமாக இறந்து ஐந்து வருசமிருக்கும். நான் கவலையிலிருந்தனான்.
அதனால எப்ப இறந்தாரென சரியாக ஞாபகமில்ல.  
மனிசி இறந்ததன் பின்னர் என்னைக் கூட்டித்திரிய ஆட்களில்லை.  எனக்கு நான்கு பெண் பிள்ளைகள்.
ஒரு ஆண்பிள்ளையும் உள்ளனர். ஆண்பிள்ள ஜேர்மனியிலிருக்கிறான். ஆனா, என்ர பிள்ளையள் என்னைக்
கைவிட்டுட்டுதுகள். 
எனக்கு நரம்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக கண்களிரண்டும் மறைச்சுப் போட்டுது. நான்
பொல்லின்(ஊன்று கோல்) உதவியுடன் தான் இங்க வந்தனான் என்றார். 
பிள்ளைகளும் கைவிட்டுவிட்ட நிலையில் வீதியால் வரேக்க வாகனங்கள் இடிச்சால் என்ன செய்யிறது
போக வேண்டியது தான் என்றார் கவலையுடன். 
நிலைமையை உணர்ந்த ஊடகவியலாளர் குறித்த  முதியவரை கைத்தாங்கலாக அங்கிருந்து
எழுப்பியதுடன், அவருக்குப் பாதிப்புக்கள் ஏற்படாதவாறு ஓரமாகக் கொண்டு சென்று
விட்டுள்ளதுடன் அவரது உணவுக்குத் தேவையான சிறு நிதியுதவியையும் வழங்கியுள்ளார். 
"என்ர பிள்ளைகள் செய்ய வேண்டியதை நீ செய்கிறாய்... நீயும் எனக்கு ஒரு பிள்ளை தான்..."என
மேற்படி ஊடகவியலாளருக்கு குறித்த முதியவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல் திருமதி விநாசித்தம்பி ராஜேஸ்வரி.10.01.18.

 இறப்பு : 10 01  2018 
யாழ்.  நவற்கிரி  புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட  திருமதி  விநாசித்தம்பி ராஜேஸ்வரி . அவர்கள் 10-01-2018 புதன் கிழமை  அன்று   காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை  சின்னத்தங்கம்    தம்பதிகளின் அன்பு மகளும் ,திரு  விநாசித்தம்பி . 
 அவர்களின் அன்பு மனைவியும் 
திருக்குமரன்.சுவிஸ் .  சங்கீதா. லண்டன்  திருச்செந்தூர் சுவிஸ்  திருத்தனிகன் இலங்கை . ஆகியோரின் அன்புத்தாயாரும்    
  பாலராஜா  சிவராசா  சிவபாதம்  கலா காலஞ்சென்ற குளந்தை (திரு மதி கோண ராசா  ).  ஆகியோரின்  அன்பு  சகோதரி யும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை.1 2-01-2018 . வெள்ளிக்கிழமை அன்று  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நவற்கிரி நிலாவரை   இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

சிறுவன் ஆவரங்கால் தோட்டக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

யாழ் ,ஆவரங்கால் புத்தூர்  பகுதியில் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது
.ஆவரங்கால் நடராஜா இராமலிங்கம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் ச..டிசாந் (வயது-11) என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டார்.அப் பகுதியிலுள்ள தோட்டக் கிணறு ஒன்றிலேயே மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 5 ஜனவரி, 2018

இரயில் விபத்தில் மீசாலையில் ரயிலில் குடும்பஸ்தர் பலி

மீசாலையில்  இடம்பெற்ற இரயில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரம் ஞானயுகன் என்ற குடும்பஸ்தரே 
பலியாகியவராவார். 
சமிக்கை இல்லாத கடவையினால் இவர் மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட போதே இவர் மீது ரயில் மோதியதாக தெரியவருகின்றது. இது தொடர்பான விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு 
வருகின்றார்கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>