siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 26 ஏப்ரல், 2018

சிங்கப்பூர் ஊடாக பிரித்தானியா செல்ல முயற்சித்த இளைஞர் கைது

சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூர் ஊடாக பிரித்தானியா செல்ல முற்பட்ட யாழ். இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் அவர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குறித்த நபர் சிங்கப்பூர் ஊடாக பிரித்தானியா செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குறித்த நபர் சிங்கப்பூரிலிருந்து பிரித்தானியா செல்வதற்காக பயண சீட்டொன்றை வைத்திருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சில போலியான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேநபருக்கு பிரித்தானியா செல்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய நபர் பிரித்தானியாவில் இருக்கின்றமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க சந்தேகநபர் விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



யாழ் நீர்வேலியில் விபத்து ; மூவர் படுகாயம்

யாழ். நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
இச் சம்பவம் நேற்று வலி. கிழக்குப் பிரதேச சபையின் நீர்வேலி உப அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்றது
மோட்டார்ச் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்த்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன கடுமையாகச் சேதமடைந்துள்ளன..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



அமரர் பாலசிங்கம் 4ம் ஆண்டு நினைவஞ்சலி 23.04.18

தோற்றம் : 05.03. 1937 — மறைவு : 06.05. 2014
  திதி : நாள்.23. ஏப்ரல்  2018 
அமரர் - பாலசிங்கம் திலகவதி
 அல்வாயை பிறப்பிடமாகவும் பிறப்பிடமாகவும், நவற்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்  பாலசிங்கம் திலகவதி அவர்களின்.(திதி) 4ம் ஆண்டு நினைவஞ்சலி 23.04.18 இன்று 
நான்கு ஆண்டுகள் மட்டும் அல்ல
எத்தனை ஆண்டுகள் போனாலும்
மீண்டும் மீண்டும் அம்மா அம்மா என்றே
மனம் தேடுகின்றதம்மா
வார்த்தைகள் இல்லாமல் பேசினோம்
கண்கள் இல்லாமல் ரசித்தோம்
கவலைகள் இல்லாமல் வாழ்ந்தோம் 
உங்கள் கருவறையில் மட்டும் அல்ல 
உங்கள் அரவணைப்பிலும்
 தானம்மா!!
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
உங்கள் பிரிவால் துயறுரும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
கணவர் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், 
சகோதரர்கள்உற்றார் உறவினர்  
உடன்பிறப்புக்கள், பெறாமக்கள்.
வீட்டு முகவரி: 
நவற்கிரி புத்தூர் 
தகவல்
குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

மரண அறிவித்தல் திரு பொன்னையா பாலசுப்பிரமணியம்.21.04.18

பிறப்பு : 2 ஓகஸ்ட் 1954 — இறப்பு : 21 ஏப்ரல் 2018
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாலசுப்பிரமணியம் (மணியம்)அவர்கள் 21-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை(சின்னத்தம்பி) லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்சனி(ராசன்) அவர்களின் அன்புக் கணவரும்,
றிபா, லவ்சியா, அனுஷாந், அபிஷியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருளம்மா, சிவபாக்கியம், சற்குணம், காலஞ்சென்றவர்களான சரோஜினி, ஜீவரேகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவாகரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சரிஷ்னா, ரித்திஷ் சபரிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
திரு பொன்னையா பாலசுப்பிரமணியம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 23/04/2018, 03:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland. 
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 24/04/2018, 08:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland. 
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 25/04/2018, 08:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland. 
கிரியை
திகதி: வியாழக்கிழமை 26/04/2018, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland 
தொடர்புகளுக்கு
சிவா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797386340
லவ்சியா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792346026
சுஜி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779159795
வீடு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41433119537
றிபா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799446068
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

சனி, 21 ஏப்ரல், 2018

சிறுமியின் உயிரை பறிந்த பரசிட்டமோல் மாத்திரை

பரசிட்டமோல் மாத்திரை தொண்டையில் சிக்கி, இரண்டு வயதான சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குருணாகல், வெல்லாவ ஹெங்கவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புத்தாண்டின் பின்னர் சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலுக்கு தனியார் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றுக் 
$கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் கால்வாசி பகுதியை சிறுமிக்கு வழங்குமாறு மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த ஆலோசனைக்கு அமைய பெற்றோர் பரசிட்டமோல் மாத்திரையை உடைத்து சிறுமிக்கு வழங்கிய போது அது தொண்டையில் சிக்கி, சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


தாயும் மகளும் வீட்டிற்குள் புகுந்து வெட்டிப் படுகொலை

மஹியங்கனை – மாபாகடவெவ பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.நேற்றிரவு நடைபெற்ற இச்சம்பவத்தில் தாயும் மகளுமே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்
.இச்சம்பவத்தில், கிரியகொட – மாபாகடவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய பெண்ணும் அவரது 40 வயதுடைய மகளுமே படுகொலை செய்யப்பட்டவர்களாவர்.குறித்த பெண்ணின் மகன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே பொலிஸார் விசாரணைகளை
 ஆரம்பித்துள்ளனர்.
குறித்த படுகொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார்
 மேற்கொண்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 19 ஏப்ரல், 2018

பழுதூக்கும் போட்டியில் சாதனை படைத்த மல்லாவி மாணவியை பாராட்டுங்கள்!!

7ஆசிய இளையோருக்கான பழுதூக்கும் போட்டியில் 90 கிலோ எடை பிரிவில் சாதனை படைத்த மல்லாவி மத்திய மகா வித்தியாலய மாணவி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
செல்வபுரம், வடக்கு வவுனிக்குளத்தை சேர்ந்த மல்லாவி மத்திய மகா வித்தியாலத்தில் தரம் 9இல் கல்விகற்று வரும் தேவராசா தர்சிகா என்னும் மாணவியே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இவர் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான பழுதூக்கும் பிரிவில் 90 கிலோ எடையை தூக்கி சர்வதேச சாதனை படைத்து தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த மாணவியின் சாதனையை பாராட்டும் வகையில் துணுக்காய் வலயக்கல்வி பணிப்பாளர் போ.ரவிச்சந்திரன் தலைமையில் இன்றைய தினம் முல்லைத்தீவில் பாராட்டுவிழா நடைபெற்றுள்ளது.
வறுமைக்கோட்டின் கீழ்வாழும் குறித்த மாணவியின் சாதனையை பலரும் பாராட்ட வேண்டியது நமது கடமை என பாடசாலைச் சமூகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் வறுமைக்கோட்டின் கீழ்வாழும் குறித்த மாணவியின் கல்வி வளர்ச்சிக்கு உதவி செய்யவிட்டாலும் அவரை பாராட்ட வேண்டியது தமிழ் மக்களின் கடமை என ஆசிரியர் ஒருவர் கருத்து
 தெரிவித்துள்ளார்.

புதன், 18 ஏப்ரல், 2018

தங்கத்தின் பெறுமதியில் இருந்து 15 வீத இறக்குமதி வரி அறவிடப்படும்

இலங்கையில்  இறக்குமதி செய்யப்படுகின்ற தங்கம் மீது அதன் பெறுமதியில் இருந்து 15 வீத இறக்குமதி வரி அறவிடப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி விதிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சு
 கூறியுள்ளது.
இறக்குமதி செய்யப்படுகின்ற தங்கம் மீது அதன் பெறுமதியில் இருந்து 15 வீத இறக்குமதி வரி அறவிடப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி விதிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சு 
கூறியுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

மரண அறிவித்தல், திருமதி அன்னராசாஇரத்தினம்.17 .04.18


பிறப்பு : 28 செப்ரெம்பர் 1944 — இறப்பு : 17 ஏப்ரல் 2018
யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் அன்னராசா அவர்கள் 17-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சீனியர், காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்னராசா அவர்களின் அன்பு மனைவியும்,
மலர்விழி(சுவிஸ்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அழகம்மா, தம்பிராசா, தங்கரத்தினம், வேலுப்பிள்ளை மற்றும் செல்வரட்ணம்(செல்வா, Hitech- உரிமையாளர், கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருந்தவராசன்(சுவிஸ்), அருந்தவராணி(கனடா), அருந்ததி(கனடா), வனிதா(கனடா), ஜசந்தா(கனடா), சயந்தன்(கனடா), யுகன்(கனடா), லாவண்யா(கனடா), சிவசோதி(இலங்கை) ஆகியோரின் 
அன்பு அத்தையும்,
றஞ்சிதமலர், பஞ்சவர்ணம்(இலங்கை), அருந்தவமூர்த்தி(சுவிஸ்), பவானி(கனடா) ஆகியோரின் சித்தியும்,
கனகம்மா(இலங்கை), சிவபாக்கியம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், மார்க்கண்டு, ரேவதி மற்றும் சுமதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வானதி(சுவிஸ்), ஆரபி(சுவிஸ்), அபிரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-04-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ். நவற்கிரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மலர்விழி(மகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787459817
அருந்தவராசன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319921374
செல்வா(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +12895534876
செல்லிடப்பேசி: +14169384118
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

காரைதீவு, மாளிகைக்காடு உப நூல் நிலையத்தில் தீ விபத்து

காரைதீவு, மாளிகைக்காடு உப நூல் நிலையத்தில் நேற்று
 தீ விபத்து ஏற்பட்டது.
நூலகத்தில் இருந்த பத்திரிகைகளும் எரியூட்டப்பட்டிருந்துடன் அலுமாரியொன்றின் கண்ணாடியும் சேதமாகியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேரடியாகச் சென்று பார்வையிட்டு உரிய நூலகரிடம் வாக்கு மூலத்தைப் பெற்றுக்கொண்டார்.
சம்பவம் தொடா்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல், திரு இராசரத்தினம் கனகமூர்த்தி

பிறப்பு :1957 — இறப்பு :04.2018
யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும்,  தோப்பு .மற்றும் ..நவற்கிரியையும் வசிப்பிடமாகக்  கொண்ட 
திரு இராசரத்தினம் கனகமூர்த்தி அவர்கள் .04.2018.அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம் அலங்காரம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும் , காலஞ்சென்ற சபா  அவர்களின் அன்பு மருமகளும்,
திருமதி   கனகமூர்த்தி  அவர்களின் அன்பு கணவரும் ஆவர் 
அன்னாரின் இறுதிக்கிரியை  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ். நவற்கிரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்து  .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
தகவல்
குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

வடமராட்சி மீனவருக்கு வாரிக்கொடுத்த கடலன்னை

 யாழ் வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு இன்றைய தினம் 20 ஆயிரம் கிலோவுக்கும் அதிமான மீன்கள் வலையில் சிக்கிக்கொண்டன. அவற்றின் இன்றைய சந்தைப் பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டது.வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு இன்றைய தினம் 20 ஆயிரம்
கிலோவுக்கும் அதிமான மீன்கள் வலையில் சிக்கிக்கொண்டன. அவற்றின் இன்றைய சந்தைப் பெறுமதி
ஒன்றரைக் கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டது.
வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்யும் மீனவருக்கே இவ்வாறு
மீன்கள் அகப்பட்டன.
இந்த மீன்கள் பாரை இனத்தை சேர்த்தவைகள் எனவும் அவற்றின் இன்றைய சந்தை பெறுமதி  ஒரு
கோடியே 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமானது என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இன்றைய தினமே குறித்த மீனவரிடம் இருந்து 30 இலட்சம் ரூபாய்க்கு மீன்கள் கொள்வனவு
செய்யப்பட்டுவிட்டன என்று 
தெரிவிக்கப்பட்டது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 16 ஏப்ரல், 2018

வெப்பநிலை அதிகரிப்பினால் முல்லைத்தீவு மக்கள் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரிப்பினால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகரிக்கும் வெப்பத்தை தாங்க முடியாத மக்கள் முல்லைத்தீவு பெருங்கடல் நோக்கி படையெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று இவர்கள் பாதுகாப்பற்ற கடல் பகுதியில் நீராடுவதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த கடற்படப்பில் கடந்த ஆண்டு பாடசாலை மாணவர்கள் மூவர் சென்று நீராடியிருந்த நிலையில் அவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பாரதிபுரத்தில் சிகெரெட் நெருப்பினால் பெற்றோலில் எரிந்தவர் மரணம்!

கிளிநொச்சி பாரதிபுரத்தில் சிகரெட் புகைத்தவாறு பெற்றோல் போத்தலுடன் பயணித்தவர் தீ பற்றிக் கொண்டதால் படுகாயமடைந்து உயிரிழந்தார். அதே இடத்தைச் சேர்ந்த இராசேந்திரம் றெனோல்ட் றீகன் (வயது - 34) என்ற குடும்பத் தலைவரே இவ்வாறு உயிரிழந்தார்.
 மூடி இல்லாத போத்தலில் பெற்றோல் கொள்வனவு செய்து விட்டு பயணிக்கும் வேளை போத்தல் நழுவி விழ அதனை எடுக்கக் குனிந்த போது வாயிலிருந்த சிகரெட் 
நெருப்புப்பட்டு தீ பற்றியது. 
இதனால் அவரது நெஞ்சு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தீ பற்றி கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். சிகிச்சை பயனளிக்காது நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது-
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 10 ஏப்ரல், 2018

கடந்த வருட O/L விடைத்தாள் மீள்திருத்த விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

கடந்த வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் விடைத்தாள் மீள் திருத்த பணிக்கென விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை 
நீடிக்கப்பட்டுள்ளது.
தபால் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த காலஎல்லை நீடிப்பு மேற்கொள்ளப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் 
சனத் பூஜித தெரிவித்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இடமாற்றம் வடமாகாணத்தில் 246 ஆசிரியர்களுக்கு

வடமாகாணத்தில் 246 ஆசிரியர்கள் வருடாந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என வடமாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது
வடமாகாணத்தில் 246 ஆசிரியர்கள் வருடாந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என வடமாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு பாடசாலையில் 5 வருடங்கள், அதற்கு மேல் சேவையாற்றியவர்களுக்கு இவ்வாறு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டில் 246 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி வலயத்தில் 53 ஆசிரியர்களும், மடு வலயத்தில் 35 ஆசிரியர்களும், மன்னார் வலயத்தில் 14 ஆசிரியர்களும், முல்லைத்தீவு வலயத்தில் 27 ஆசிரியர்களும், துணுக்காய் வலயத்தில் 35 ஆசிரியர்களும், வவுனியா வடக்கில் 38 ஆசிரியர்களும், வவுனியா தெற்கில் 12 ஆசிரியர்களும், தீவகம் 29 ஆசிரியர்களும், வலிகாமம் 1  ஆசிரியரும், வடமராட்சி 1  ஆசிரியரும், தென்மராட்சி 1 ஆசிரியருமாக மொத்தம் 246 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான இடமாற்ற நடைமுறை 6 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர யாழ்ப்பாணம் கல்வி வலயத்தைச் சேர்ந்தவர்களும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். அவர்களுக்கான இடமாற்றல் தெரிவுகள் நடைபெற்று மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று 
தெரிவிக்கப்பட்டுள்ளது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

திருமதி சபாரத்தினம் 2ஆண்டு .நினைவஞ்சலி 08-04-2018

உதிர்வு .08.04.2016
யாழ் நவற்கிரியை   பிறப்பிடமாகவும் தற்காலிக வதிவிடமாக உரும்பிராயில் வசித்து வந்த  
அமரர். திரு திருமதி சபாரத்தினம்  ஞானமணி ( ஞானம் )அவர்களின் 2ஆண்டு .நினைவஞ்சலி 08-04-2018 இன்று 
காலச்சுழற்சியில் இரண்டு ஆண்டுகள்   கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
 நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் 
எங்கள் அம்மா   
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அம்மாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
 அன்னாரின்
 ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் நவற்கிரி நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் , பிள்ளைகள் 
. தகவல் குடும்பத்தின
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 4 ஏப்ரல், 2018

புத்தளம் – சிலாபம் வீதியில் பஸ் விபத்தில் 37 பேர் காயம்!

ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் பயணித்த பஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில், 37 பேர் காயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் – சிலாபம் வீதியில் ஆராச்சிக்கட்டுவ,
 எலம்பவட்டுவன பிரதேசத்தில் இன்று (03) காலை இந்த விபத்து இடம்பெற்றது. காயமடைந்தவர்களுள் 36 பெண்களும் பஸ்ஸின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 2 ஏப்ரல், 2018

அமரர் தம்பு செல்வராஜா 4ம் ஆண்டு நினைவஞ்சலி.02.04.18

மண்ணில் 12, ஆகட்ஸ்.1933. — விண்ணில் :2 ஏப்ரல் 2014
,யாழ்.  நவற்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடா-- நவற்கிரி  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  அமரர் தம்பு செல்வராஜா  அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வாழ்வில் ஒளியேற்றி 
பிரகாசிக்க வந்துத்த அப்பாவே  
என்றென்றும் நீர் எம்முடனே 
வாழ்ந்திருப்பீர் என்றிருந்தோம் 
இடைநடுவில் எமைவிட்டு 
இறைவனடி சென்றீரோ

குடும்பத் தலைவநாக    
நாம் நிலைகுலைந்து நிற்கையிலே 
வாழ்க்கைப் படகிற்கு துடுப்பாக நின்றீரே

எல்லோருக்கும் வழிகாட்டி 
எமை வாழ வைத்தீரே 
பண்பிலே உயர்ந்தவனாய் 
பழகுவோர்க்கு இனியவனாய் 
பாசமுள்ள சகோதரனாய் 
அன்பிலே சிறந்தவனாய்

உற்றார் உறவுகளை உன் பக்கம் ஈர்த்தவனே 
எமை விட்டு சென்றின்று ஓராண்டு ஆனதுவே 
நான்கு ஆண்டு டென்ன ஓராயிரம் 
ஆண்டானாலும்
மறவாதையா உங்கள் நினைவு 
நான்கு ஆண்டு டென்ன உயிருள்ளவரை 
அஞ்சலிப்போம் உங்கள்  ஆத்மா சாந்திபெற
 இறைவனை வேண்டுகின்றோம் ஓம், சாந்தி, சாந்தி.----
மகன் பலராஜா  புலம்பல் ------
எனக்கு உயிர் தந்த உயிா் மனறந்து நான்கு ஆண்டுகள் 
ஆகியும் எனது மனதில் வாழூம் தெய்வத்தின் நினைவு நாள் இன்று
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
உங்கள்  பிரிவால் துயறுரும் மனைவி பிள்ளைகள்  சகோதர்கள் 
,பேரப்பிள்ளைகள் பெறமக்கள் மருமக்கள்  உறவினர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>