siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 31 மார்ச், 2020

கொரோனாவினால் உயிரிழந்த மகனின் அதிர்ச்சியில் மாரடைப்பினால் மரணமான தந்தை

சுவிர்சர்லாந்தில் குடியுரிமையைக் கொண்ட யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் சில தினங்களிற்கு முன்னர் கொரோனா தொற்றினால் உயிரிழந்திருந்த நிலையில், அந்த அதிர்ச்சியினால் அவரது தந்தையும் உயரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் 
கொக்குவிலை 
சேர்ந்த குணரட்ணம் கீர்த்தீபன் என்ற இளைஞன் தற்போது சுவிற்சர்லாந்தில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். சில தினங்களின் முன்னர் கொரோனால் தொற்றினால் அவர் உயிரிழந்துள்ளார்.இந்த நிலையில், 
சுவிற்சர்லாந்தில் வசிக்கும் அவரது தந்தையார் குணரட்ணம் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.மகன் உயிரிழந்த சோகத்தில் தந்தையும் மாரடைப்பினால் உயிரிழந்ததால் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் 
ஆழ்ந்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


தீவிரமடையும் கொரோனா வைரஸ் நீர்கொழும்பில் இரண்டாவது நபர் மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கொழும்பு IDH 
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 64 வயதுடையவர் என சுகாதார
 அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபர் இவராகும். மேலும் 6 பேர் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இலங்கையில் நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான
 நபர் உயரிழந்தார்.
இதேவேளை இலங்கையில் இதுவரை 122 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 11 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 29 மார்ச், 2020

பலியான 260 கொரோனா நோயாளிகள் பிணவறையாக மாறிய பிரித்தானிய விமான நிலையம்.

கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸால் கடந்த சில மாதங்களாக உலக மனிதர்களின் உயிர்கள் மாய்ந்துவரும் நிலையில், பிரித்தானியாவில் இன்று ஒரு நாளில் 260-பேர் உயிரிழந்துள்ளனர்.பிரித்தானியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,019-ஐ எட்டியுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.இக் கொரோனா
 வைரஸால் நாளுக்கு நாள் உலகத்தில் இறப்பு வீதம் கூடிக்கொண்டு வருகின்றதே தவிர குறைந்தமாதிரி
 புள்ளிவிபரங்கள் தெரிவிக்கவே இல்லை.மேலும் பிரித்தானியாவில் இவ்வாறு அதிகமானோர் நாளொருவண்ணம் இறந்துவரும் நிலையில் பேர்மிங்கம் விமான நிலையத்தை பிணவறையாக மாற்றுவதற்கு நடவடிக்கையும் நடந்துகொண்டுவருகின்றது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அதிகரித்துவரும் பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பேர்மிங்காம் விமான நிலையத்தில் தற்காலிக பிணவறை ஒன்றை உருவாக்கி வருகின்றனர்.குறித்த 
பிணவறையில் சுமார் 12,000 சடலங்கள் வரை சேகரித்து வைத்துக் கொள்ள முடியும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது
.பிரித்தானியாவில் 20000 க்கு அதிகமான உயிரிழப்புக்கள் நிகழ வாய்ப்புண்டு என கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
இந்த இணையம் ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றது 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல் திரு சண்முகநாதன் விக்கினேஸ்வரன் 28-03-20

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் விக்கினேஸ்வரன் (கண்ணன்)அவர்கள் 28-03-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவலிங்கம், 
நாகம்மா(கைராசி) தம்பதிகளின் அன்பு மருமகனும், கலையரசி(கலா) அவர்களின் அன்புக் கணவரும், சொபியா, பபியான், சொபியான் ஆகியோரின் அன்புத் தந்தையும், தனுசான், ரஜித்தா 
ஆகியோரின் அன்பு மாமனாரும், பராசக்தி, கணேஸ், தேவி, சீதா, கலா, சுதா, பவானி ஆகியோரின் அன்புச் சகோதரரும், பாசநாதன், கமலன், மோகன், யோகன், மணி, அப்பன், சாந்தி, காலஞ்சென்ற குணா ஆகியோரின் அன்பு மைத்துனரும், அன்பு, கேசவன், கேதீஸ், ராகவன், சேகரன், ரஜி, விஜி, கலா, உகந்தன், பத்மன், சற்குணம், கல்பனா, 
சோபனா, உமா, சிவா, சுபேசன், சுதன், விசயன், சாளினி, செல்லா, பரன், கரன், நிலோ, பானு ஆகியோரின் அன்பு மாமாவும், ராசரத்தினம், நேசமலர், தவயோகம், பொன்னுத்துரை, பவா, 
மோகன், கற்கண்டு ஆகியோரின் மைத்துனரும், லெறீஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை 
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 கலா - மனைவிMobile : +41765882269   அப்பன்Mobile : +41763690315   பவியான் - மகன்Mobile : +41766826262   மோகன் - மைத்துனர்Mobile : +41764254211   கணேசலிங்கம் - சகோதரர்Mobile : +14164746540   பராசக்தி - சகோதரிMobile : +16478758171   சீதா - சகோதரிMobile : +16475350946  
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 27 மார்ச், 2020

அமரர் திரு,ஆ ,க,சுப்பிரமணியம்.9ம் ஆண்டு நினைவஞ்சலி.27,03,20

மண்ணில் :06- பெப்ரவரி 1932 — விண்ணில் : 06 ஏப்ரல் 2011
திதி -27-பங்குனி -2020-வெள்ளிக்கிழமை .இன்று
யாழ். மாவிடடபுரத்தை பிறப்பிடமாகவும், நவற்கிரி புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த.அமரர் திரு .(ஆ.க) கந்தையா. சுப்பிரமணியம் (மணியம் ) அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி
நிமிடங்களாய் நாட்களாய் மாதங்களாய்-
27-03-2020- இன்று
ஒன்பது ஆண்டுகளாய்
வளர்ந்து நிற்பது உங்கள் பிரிவின் சோகம்
அனைவராலும் ஐயா ஐயா என அழைக்கபட உங்கள்
நீங்காத நினைவுகளுடன்
ஒன்பது ஆண்டுகளல்ல இன்னும் ஓராயிரம் ஆண்டுகள்
நாம் வாழ்ந்தாலும்..
வாழும் காலமெல்லாம் உன் பிரிவின் ஏக்கம் தொடரும்…
நினைவு அஞ்சலி
காலங்கள் கடந்தாலும்
ஆண்டுகள் சென்றாலும்
எங்கள் மனதில்
என்றும் நிலைத்திருப்பாய்
அன்பின் அடையாளமாக
அறத்தின் புதல்வனாக
தர்மத்தின் தலைவனாக
பொன்னம்மாவின் செல்வனாக
காலத்தை வென்ற தலைமகனாக
ஆறுமுகம் -கந்தையா
பொன்னம்மாவின்
அன்பில் சிவமாக
என்றும் எங்களில்
வாழ்கிறீர்கள் அன்பின்ஐயா 
என்றென்றும் எங்கள் தெய்வம் நீங்கள் 
...அன்பும் ஆற்றலும்
பண்பும் பாசமும்
உறுதியும் உன்னதமும்
உண்மையும் உழைப்பும்
உற்ற தோழமையும்
இனிக்கும் இன்முகமும்
கொண்ட ஈடுஇணையற்ற
எங்கள் தந்தையே ! 
உங்கள் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனை வேண்டுகிறோம் ஐயா
ஓம் சாந்தி ஓம் சாந்தி சாந்தி,,,
உங்கள் பிரிவால் என்றும் வாடும்
அன்பு , மனைவி, பிள்ளைகள்,
சகோதர்கள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள் புட்டப்பிள்ளைகள்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
தகவல்:,குடும்பத்தினர்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 26 மார்ச், 2020

மரண அறிவித்தல் செல்வி குணசேகரன் ஜெசீனா- 25 03- 20

மண்ணில்-17 12- 1997  விண்ணில்-25 -03-2020
சுவிஸ் Solothurn ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணசேகரன் ஜெசீனா அவர்கள் 25-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், நல்லையா பூமணி தம்பதிகள், சிதம்பரநாதன் அன்னரத்தினம்(பூமணி) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
குணசேகரன் கேமாலினி(சுகந்தி) தம்பதிகளின் மூத்த புதல்வியும், ஜெனுசியா அவர்களின் பாசமிகு சகோதரியும்,
 யோகநாதன், சுபாஜினி, சிவகரன், நிமாலினி ஆகியோரின் பெறாமகளும், ரகுநாதன் மணிமேகலா, ஜெயரூபன் சோபா ஆகியோரின் மருமகளும், சகீனா, சதுர்ஷனா, சாதுரியன், சாகிந்தியா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும், தாட்சாயினி, பானுஷா, ஹரிஸ்கீதன், மதீஷா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
.நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு29th Mar 2020 11:30 AMபார்வைக்கு Get DirectionThursday, 26 Mar 2020 11:30 AM - 7:00 PMFriday, 27 Mar 2020 11:30 AM - 7:00 PMSaturday, 28 Mar 2020 11:30 AM - 7:00 PMSunday, 29 Mar 2020 11:30 AM - 7:00 PM
Eigerstrasse, 4542 Luterbach, Switzerland

தொடர்புகளுக்கு
 யோகநாதன்(சிறி)Mobile : +41789165588 
  ஜெனுசியாMobile : +41764193409   ஜெயரூபன்Mobile : +41762113409   மணிமேகலா(கலா)Mobile : +15145015447
தகவல்: குடும்பத்தினர்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 17 மார்ச், 2020

விமானப் படையினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை சுத்திகரிப்பு செய்யும் பணிகளில்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளிச்செல்லும் மற்றும் உட்புகும் பகுதிகள் உட்பட அனைத்துப் பகுதிகளையும் சுத்திகரிப்பு செய்யும் பணிகளில் இலங்கை விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் கடும் சோதனைகளின் பின்னரே நாட்டுக்குள் 
அனுமதிக்கப்படுகின்றனர்
இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் உட்புகும் பகுதி, வெளியேறும் பகுதி, வெளிநாடுகளிலிருந்து வருவோரின் பகுதி, சுங்க வளாகங்கள், குடிவரவு, சுங்க வளாகம்
 உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இலங்கை விமானப் படையினர் சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 12 மார்ச், 2020

அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை முதல்விடுமுறை.கல்வியமைச்சர் உறுதிப்படுத்தினார்

நாளையிலிருந்து ஏப்ரல் 20ஆம் திகதி வரை பாடசாலைகள் அனைத்தும் மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 வரை இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு ஆனந்த கல்லூரியின் முன்பாக இன்று குழப்பமான நிலைமை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக 12.03.20.இன்று முற்பகல் தகவல் வெளியாகியிருந்தது.இது குறித்து கல்வி அமைச்சில் விசேட ஊடக சந்திப்பு நடத்தப்பட்டு வருகிறது.அதில் வைத்தே எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 வரை 
இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் டளஸ் 
அழகப்பெரும அறிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பீதியை அடுத்து, பொதுமக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக இந்த மூடிவு எடுக்கப்பட்டுளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதன், 11 மார்ச், 2020

சுகாதார எச்சரிக்கை இலங்கையில் குழந்தைகளை வேகமாகத் தாக்கும் வைரஸ்

குழந்தைகள் மத்தியில் ஒருவகை நச்சுயிரி (வைரஸ்) வேகமாக பரவிவருவதால் மிகுந்த அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்த நச்சுயிரி குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகமாகவும் வேகமாகவும்
 பரவிவருவதாக குழந்தை நல வைத்திய நிபுணர் விஷ்ணு சிவபாதம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பில் வைத்திய நிபுணர் தனது முகநூல் பக்கத்தில் பதிந்துள்ள 
விடயத்தினை இங்கு இணைக்கின்றோம்.இன்று சிறுவர்கள் மத்தியில் ஒரு வகையான வைரஸ் ஆனது வேகமாக பரவி வருகிறது.இந்த நோய் மருத்துவத்துறையை பொறுத்த வரையில் Hand-Foot-Mouth Disease என 
அழைக்கப்படும். சரியாக மொழிபெயர்த்தால் கை – கால் – வாய் நோய் என பொருள்படும்.இது ஒரு வகையான 
வைரஸால் (Coxsackie Virus) ஏற்படும் ஒரு மிருதுவான (இலேசான) நோயாகும். தற்போதைய அதிக வெப்பமான காலநிலையால் குறிப்பாக மட்டக்களப்பில் இந்த நோய் அதிகமாக பரவி 
வருகின்றது.இது குறிப்பாக பத்து வயதிற்கு குறைந்த குழந்தைகளை தாக்கும். அதிலும் குறிப்பாக ஐந்து வயதுக்கு குறைவான முன்பள்ளி சிறுவர்களை அதிகமாக பாதிக்கிறது.
இந்த நோய்க்கான அறிகுறிகள் –இலேசான காய்ச்சல்,தொண்டை வலி,சிறு கொப்பளங்கள் கை கால் (குறிப்பாக முழங்கால்) வாய் மற்றும் பின் பகுதிகளில் (Buttocks) தோன்றுதல்.இந்த கொப்பளங்கள் சிலவேளைகளில் சிறு வலியையும், கடியையும் ஏற்படுத்தும்.நாம் பொதுவாக இந்தப் கொப்பளங்களை பார்த்து அம்மை
 நோய் (அம்மாள் நோய்) வந்துவிட்டதாக கருதினாலும், இது உண்மையில் அம்மை நோய் அல்ல.இந்த நோய் பரவும் வழிகள்,இது குறிப்பாக பாதிக்கப்பட்ட மற்றைய சிறுவர்களிடமிருந்து பரவுகிறது.உமிழ் நீரின் மூலம் ,மூக்கில் இருந்து வழியும் நீர்மூலம், கொப்பளங்களில் இருந்து வரும் நீர்மூலம்,இருமும் போது ஏற்படும் துகள்களின் மூலம்.இந்த நோய்க்கான 
மருந்துகள் –இது ஒரு இலேசான நோய் என்றாலும் சில வேளைகளில் குழந்தைகளுக்கு சிக்கல் நிலைமையை ஏற்படுத்திவிடுகிறது. பொதுவாக வாயில் ஏற்படும் கொப்புளங்கள் காரணமாக அவர்கள் உணவு உண்பதை தவிர்ப்பதால் உடலிலிருந்து நீரிழப்பு (Dehydration) ஏற்படுகின்றது. அதைவிட மிக மிக அரிதாக மூளைக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம். இது 
வைரஸால் ஏற்படும் நோய் என்பதால் இதற்கென்று குறிப்பிட்ட மருந்துகள் ஏதுமில்லை. பொதுவாக 3 தொடக்கம் 5 நாட்களில் குழந்தை சாதாரண நிலைக்கு திரும்பிவிடும்.குழந்தை அதிகமாக சாப்பிடாத இடத்தில் வைத்தியரின் உதவியை நாடுதல் நல்லது. மேலும் கடித்தல் தன்மை கூடுதலாக இருந்தால் 
அதற்கும் மருந்தை எடுக்கலாம்.
இந்த நோயை தடுக்கும் முறைகள் –இதற்கென்று எந்த விதமான தடுப்பு மருந்துகளும் இல்லை. பொதுவான சுகாதார நிலைமைகளைப் பேணுவதன் மூலம் நோயை தவித்துக் கொள்ளலாம்.ஒழுங்கான கை சுகாதாரத்தைப் பேணுதல்.மலசல கூடத்தை உபயோகித்தபின் அல்லது
 குழந்தையின் மலசல தேவைகளை நிறைவேற்றிய பின் கைகளை நன்றாக சவர்க்காரம் இட்டுக் கழுவுதல். குழந்தைகளுக்கும் இவ்வாறான
 நல்ல சுகாதார பழக்கவழக்கங்களை 
கற்றுக் கொடுத்தல்.இயலுமானவரை இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையை மற்ற குழந்தைகளிடமிருந்து தனிமைப்படுத்தி வைத்தல்.முன்பள்ளி செல்லும் சிறுவர்களை
 இந்த நோய் ஏற்பட்ட காலங்களில் வீட்டிலேயே வைத்து பராமரித்தல்.சாராம்சமாக, இந்த Hand-Foot-Mouth Disease ஆனது வைரஸால் ஏற்படும், ஒரு மிருதுவான, தானாகவே சுகப்படும் ஒரு நோயாகும். மிக மிக அரிதாகவே சிக்கல் நிலைமைகளை ஏற்படுத்தும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 10 மார்ச், 2020

உந்துருளி லொறியுடன் மோதி கோர விபத்து…தாயும் மகளும் பலி

நாத்தாண்டியா – துன்கன்னாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.நேற்று (07) இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சிறிய ரக லொறி ஒன்றும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் 
மீகஹகிவுல பகுதியை சேர்ந்த 54 வயதுடைய தாயாரான சந்திரிகா சேனரத் மெனிகேஇ 21 வயதுடைய மகளான அதிகாரி ஆராச்சிகே அஹிம்சா துலாஞ்சனி ஆகியோரே இவ்வாறு 
உயிரிழந்துள்ளனர்.
நாத்தாண்டியாவில் உள்ள ஒரு கல்வி நிலையத்திலிருந்து மகளை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தாயார் அழைத்து வந்தபோதுஇ பின்புறமாக வந்த வாகனம் அவர்களை 
மோதித்தள்ளியது.காயமடைந்த இருவரும் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் உயிரிழந்தனர்.விபத்தில் இறந்த பெண் பிபில்தெனிய மத்திய கல்லூரியில் இசை ஆசிரியை ஆவார்.மராவில போலிஸ் போக்குவரத்து பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
 வருகின்றது¨

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 1 மார்ச், 2020

அமரர் நடராஜா அற்புதராஜா 6ம் ஆண்டு நினைவஞ்சலி 01.03.20

 தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014 
திதி : நாள்.01 03.2020
யாழ். அச்சுவேலி தோப்பைப்பிறப்பிடமாகவும், நவக்கிரி- தோப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தஅமரர்   நடராஜா அற்புதராஜா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி .வதிவிடமாக கொண்ட 
அமரர் நடராஜா அற்புதராஜா  அவர்களின் நீங்காத நினைவுடன்  நான்காம்  ஆண்டு நினைவஞ்சலி 01.03.2020..இன்று 
 ஞாயிற்றுக்கிழமை 
  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 

 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்

 துயருறும் குடும்பத்தினருக்கு  

 ஆழ்ந்த அனுதாபங்களை 

தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
------
மறைந்துவிட்ட உங்கள் உறவின்  

நீங்காத நினைவுகள் 

உதிர்ந்துவிட்ட உங்கள் நினைவின் 

உலராத வாசனை 

இழந்த அன்பானவரின் 

நீங்காத பொழுதுகள் 

இதயம் துடிக்கும் வரை 

மாறாது நினைப்பு 

இயற்கையின் அழைப்பு 

மீற முடியாத பயணம் 

சென்ற தூரமோ

மீள முடியாத பாதை

கண்முன் உங்கள் விம்பம் 

காலத்தை கடந்தும் கலையவில்லை 

நம்மை விட்டு பிரிந்த எங்கள் 

நம் நினைவை விட்டு பிரிய மறுப்பதேன்?

 உன் நிழலை நிஜமாக்கி நிலைத்திருக்கும்

அன்னாரின் ஆத்மாசாந்தியடைய 

இறைவனை பிரார்த்திக்கின்றோம் ..

என்றும் உங்கள் பிரிவால் துயருறும் 

மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் , 

மைத்துனர்மார்கள், மருமக்கள்.

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






மத்திய வங்கி கட்டடத்தில் இருந்து குதித்து உயிரிழந்த சிறுவன்

அவுஸ்ரேலியா செல்ல காத்திருந்த மகனின் சோக முடிவு 
தந்தை கூறுவது என்ன
கடந்த வாரம் மத்திய வங்கி கட்டடத்தில் இருந்து குதித்து உயிரிழந்த சிறுவன் பட்டப்படிப்பிற்காக அவுஸ்திரேலியா செல்ல காத்திருந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.மத்திய வங்கியின் உயர் 
அதிகாரியின் மகன் ஒருவரே கடந்த வாரம் தற்கொலை செய்துக் கொண்டார்.மகனின் இறப்பு தொடர்பில் கண்ணீருடன் கருத்து வெளியிட்ட தந்தை,எனது 
மகன் காதல் தொடர்புகள் எதுவும் கொண்டிருக்கவில்லை. அப்படி இருந்தால் நிச்சயம் என்னிடம் கூறியிருப்பார்.மகன் குடுபத்துடன் மிகவும் அன்பாக நடந்துக் கொள்ளும் ஒருவர். எதனையும் மறைக்க மாட்டார். சம்பவ தினத்தன்று என்னை பார்க்க வந்தார். நான் அலுவலகத்தில் காத்திருக்குமாறு கூறிவிட்டு கூட்டம் ஒன்றிற்கு சென்றுவிட்டேன். எனினும் ஏன் இந்த முடிவிற்கு மகன் வந்தார் என்பது எங்களுக்கு
 இன்னமும் புரிய வில்லை.
 மிகவும் அன்பான இரக்க குணமுடைய மகனின் நினைவுகளால் மீண்டு வர முடியவில்லை. அவர் அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்பு மேற்கொள்வதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். எனினும், திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாம் எங்களது பிள்ளைகளுக்கு 
எங்கள் நேரத்தை அதிகமாக வழங்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். நாங்கள் அவர்களின் மனதில் என்ன உள்ளது
 என அறிய தவறுவதே நாங்கள் செய்யும் தவறாகும்.பிள்ளைகளுக்கு அதிக அக்கறை செலுத்தி அவர்களின் மணங்களை புரிந்துக் கொள்ள வேண்டும்’ எனவுவும் அவர்
 மேலும் தெரிவித்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>