siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

யாழ் அச்செழு சைவப்பிரகாச வித்தி. நிர்வாக சீர்கேட்டை எதிர்த்து போராட்டம்

                 

யாழ்ப்பாணம் – அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நிர்வாக சீர்கேட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக.31-08-2020. இன்று .காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், இதன்போது ஆளுநரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாடசாலையில் குழப்பங்களை ஏற்படுத்தும் ஆசிரியர்களை இடமாற்றம் செய், தமிழர் ஆசிரியர் சங்கமே தவறான ஆசிரியர்களை தவறாக வழிநடத்தாதே, வடக்கு மாகாண கல்வி அதிகாரிகளே ஊழல் புரிவோரை பாதுகாக்காதே, வலயக்கல்விப் பணிப்பாளரே ஆசிரியர்களை தூண்டி அரசியல் செய்யாதே, மாணவர்களின் உணவுப் பொருட்களை திருடியவர்கள் மீது நடவடிக்கை 
எடு போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து விரைவாக தீர்வினை வடக்கு மாகாண ஆளுநர் பெற்றுத்தர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



நெடுங்கேணியில் இவருவர் பலியானதால் மக்கள் விடுத்த கோரிக்கை

முல்லைத்தீவு – நெடுங்கேணி பிரதான வீதியிலுள்ள பழமைவாய்ந்த மரங்கள் வீதியின் நடுவே சரிந்து உள்ளமையினால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.
குறிப்பாக கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பழமைவாய்ந்த மரங்கள் வீதியோரமாக 
முறிந்து விழுந்துள்ளன.
நேற்று முன்தினம் முல்லைத்தீவு – உண்ணாப்பிலவு பகுதியில் வீதியோரத்தில் இருந்த மரம் முறிந்து வீழ்ந்தமையால் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், இவ்வீதியூடாக பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு குறித்த வீதியிலுள்ள ஆபத்தான மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 29 ஆகஸ்ட், 2020

பெருமளவு தங்கத்துடன் அனலைதீவில் கடற்படையினரால் இருவர் கைது

 

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு சட்டத்துக்குப் புறம்பாக கடல் வழியாக பெருந்தொகை தங்கத்தை கடத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 6 கோடியே 20 லட்சம் ரூபாய் பெறுமதியான 5 கிலோ 500 கிராம் நிறையுடை தங்கத்தை கடத்த முற்பட்ட போது சந்தேக நபர்கள் இருவரும் இன்று (29) அதிகாலை அனலைதீவு கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர்
 தெரிவித்தனர்.
மாதகலைச் சேர்ந்த இருவரும் தரகுப் பணத்துக்காக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருவரும் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>



வீதியால் பயணித்த இருவர் அதில் சிக்கி உயிரிழந்துள்ளனர்


முல்லைத்தீவு – உண்ணாப்பிலவு பகுதியில் திடீரென பெய்த காற்றுடன் கூடிய கடும் மழையின் காரணமாக வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் இன்று (29) மாலை இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு நகர்ப் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று காற்றுடன் கூடிய கடும் மழை பெய்தது.
 இந்நிலையில், சிலாவத்தை பகுதியில் வீதி 
ஓரத்தில் நின்ற மரம் முறிந்து வீழ்ந்தபோது அவ்வீதியால் பயணித்த இருவர் அதில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
தற்போது உயிரிழந்தவர்களின் சடலங்கள் முள்ளியவளை மாஞ்சோலையில் உள்ள முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

இலங்கையர்போதைப் பொருள் மற்றும் புகையிலைப் பயன்பாட்டினால் தினமும் உயிரிழப்பு

போதைப்பொருள் மற்றும் புகையிலை பயன்பாடு காரணமாக தினமும் 80 முதல் 100 வரை இலங்கையர்கள் உயிரிழக்கின்றனர் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அந்தச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டிற்கு போதைப்பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பு திட்டம் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது 
குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்;போதைப்பொருள்
 மற்றும் புகையிலை கட்டுப்பாடு குறித்து 1000 மருத்துவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கான சிறப்பு திட்டத்தை தனது சங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை முழுவதும் இந்த திட்டத்தை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயல்படுத்த சுகாதார அமைச்சகம், தேசிய புகையிலை மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஆணையம், தேசிய 
ஆபாயகரமான மருந்து கட்டுப்பாட்டு வாரியம், 
கல்வி அமைச்று மற்றும் பிற பொறுப்புள்ள அமைப்புகளை ஒன்றிணைக்கவுள்ளதாகவும் அவர் நம்பிக்கை 
வெளியிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 27 ஆகஸ்ட், 2020

மரண அறிவித்தல் கந்தசாமி விஜயானந்தன் (பபா) 23-08-20

  இறப்பு-23-08-2020 
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், இலண்டன் ஆகிய இடங்களில் வாழ்ந்தவரும், இலண்டனை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட அமரர் கந்தசாமி விஜயானந்தன் (பபா) 
 23-08-2020 சனிக்கிழமை இலண்டனில் இயற்கை எய்தினார். 
அன்னார்   கந்த்சாமி ஜானகிஅம்மா 
ஆகியோரின் 
இளைய புதல்வனும், பவானியின்  அன்புக் கணவரும், இரத்தினேஸ்வரி ,ஜெகதீஸ்வரி, காலம்  சென்ற கருணானந்தன், காலம்  சென்ற ஞானநந்தன், ஆகியோரின் சகோதரும் ஆவார். . அன்னாரின்   இறுதி சடங்கு பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி  சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 26 ஆகஸ்ட், 2020

கற்பிட்டி, ஏத்தால பிரதேசத்தில் 1004 கிலோ மஞ்சள் கைப்பற்றல்

 

இந்தியாவில் இருந்து உள்நாட்டிற்கு கடத்திக் கொண்டுவரப்பட்ட 1004 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.
புத்தளம் – கற்பிட்டி, ஏத்தால பிரதேசத்தில் வைத்து நேற்று (25) குறித்த மஞ்சள் தொகை மீட்கப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>





ஹோமாகமவில் சிறைக் கைதி மீது துப்பாக்கிச் சூடு

 

நாட்டில் ஹோமாகம நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சிறைக் கைதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரி மேற்கொண்ட இந்த  துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த கைதி, வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளவத்தையில் ,கிணற்றில் வீழ்ந்து வயோதிப பெண் சாவு

                                           

கொழும்பு – வெள்ளவத்தை, அலுவலவத்த பிரதேசத்தில் கிணறு ஒன்றில் வீழ்ந்து 81 வயதுடைய வயோதிப பெண்ணொருவர்
 உயிரிழந்துள்ளார்.
பெண் ஒருவர் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக ஒருவர் வெள்ளவத்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த பெண் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை 
தெரியவந்துள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

புத்தளத்தில் காணாமல் போன தமிழ்ப் பெண் நீரோடையில் சடலமாக மீட்பு

 

 
புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புழுதிவயல் பகுதியிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து வயோதிப பெண் ஒருவர்.24-08.20. அன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மதுரங்குளி கணமூலை குறிஞ்சாவெட்டியவைச் சேர்ந்த கருப்பையா லஷ்சுமி எனும்
 .71,வயது வயோதிப
 பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.மனநிலை பாதிக்கப்பட்ட குறித்த வயோதிப பெண் கடந்த சனிக்கிழமை .22-08-20.முதல் காணாமல் போயிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.இந்த நிலையில், மூன்று
 நாட்களின் பின்னர் காணாமல் போன குறித்த வயோதிப பெண் புழுதிவயல் களப்புக்கு அருகாமையில் உள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை .24-08-20. சடமாக மீட்கப்பட்டுள்ளார்.இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த வயோதிப பெண்ணின் சடலம் மரண
விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை
என்பவற்றுக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.புத்தளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

தங்கத்தின் விலை இலங்கையில்வரலாறு காணாத வகையில இலட்சமானது

 

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக இலங்கையில் வரலாறு காணாத வகையில தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு இலட்சம் (100000) ரூபா என்பதுடன், 22 கரட் தங்கத்தின் பெறுமதி 88,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>


வரணி வடக்கில் யுவதி ஒருவர் தற்கொலை. 23-08-202

யாழ் தென்மராட்சி – வரணி வடக்கில் தவறான முடிவு எடுத்த இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து 
கொண்டுள்ளார்.
23-08-2020.  அன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் சதீசா (20-வயது) என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து மரணமடைந்துள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த குறித்த யுவதி பிறிதொரு நபருக்கு வழங்கிய பணம் திரும்பக் கிடைக்கப் பெறவில்லை என்றும், அதனால் தற்கொலை செய்வதாகவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

பூவரசந்தீவுப் பகுதியில் கிணற்றில் விழுந்த சிறுவன் பலி

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவு, பூவரசந்தீவுப் பகுதியில் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் தவறி விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில், கிண்ணியா யூசுப் வித்தியாலயத்தில் தரம் 02 இல் கல்வி பயிலும், நிஜாம் அஸ்னி (வயது-7) என்ற சிறுவனே உயிழந்துள்ளான்

நிலாவரை.கொம் செய்திகள் >>>


முழங்காவிலில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் பழவகைகள் பயிர்ச் செய்கை

வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாயத் திட்டங்களில் பயனாளியாகிய கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் வசிக்கும் அருணாசலம் பொன்னுத்துரை எனும் விவசாயி சிறந்த விவசாய நடைமுறையின் (GAP) கீழாக பழமரச் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கான ஓர் வயல்விழா நிகழ்வானது பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் கிளிநொச்சி அவர்களின் வழிகாட்டலில் 21.08.2020 அன்று இடம்பெற்றது.
இதில் பல பழமரச் செய்கையாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இதன்போது குறித்த பயனாளி உலக விவசாய ஸ்தாபனத்தின் உதவியால் 2017 இல் விவசாயத் திணைக்களத்தின் கீழ் வழங்கப்பட்ட 40 டொம் ஜேசி மாங்கன்றுகளை சிறப்பாக பராமரித்துள்ளார்.
மேலும் 20 புதிய மரங்களை தொடர்ச்சியாக கொள்வனவு செய்து நாட்டியுள்ளார். சாதராணமாக மாமரச் செய்கையின் இடைவெளியினை விடுத்து 5 மீற்றர் x 5 மீற்றர் இடைவெளியில் பயிரிட்டுள்ளார்.
தற்போது உரிய பயிற்றுவித்தல், கத்தரித்தல் செயற்பாட்டின் காரணமாக காய்கள் உருவாகி அறுவடைக்கு தயாராக உள்ளது. காய்களில் ஏற்படும் பழ ஈ தாக்கம், பொறிமுறைக்காயம் என்பவற்றை தவிர்க்கவும் தரமான 
கனியினைப் பெறவும் ஒவ்வொரு காய்களிற்கும் தனித்தனியே உறையிடப்பட்டிருந்தது. இதனால் தரமான, மஞ்சள் நிறக்கனிகளை
 பெறமுடியும்.
அத்துடன் PSDG 2019 திட்டத்தின் ஊடாக 75% மானிய அடிப்படையில் பெறப்பட்ட
இழையவளர்ப்பு கப்பல் இன வாழைக் கன்றுகள் செறிவான முறையில் நடுகை செய்யப்பட்டிருந்தது. இதில் 10 அடி × 5 அடி எனும் அளவில் பயிரிடப்பட்டிருந்தது. இதனால் 4 பரப்பில் 220 வாழைக்கன்றுகள் நட முடிகின்றது.
தற்போது உரியவாறு குட்டிகள் முகாமை செய்யப்பட்டுள்ள நிலையில் 6 மாத பயிரான வாழைகள் உள்ளது. இங்கு விசேட அம்சமாக சொட்டு நீர்ப்பாசனம் மூலம் நீர் வழங்கப்படுகின்றது. இதனால் சாரசரி 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக நீர் விநியோகிக்க முடிகின்றது. இது Mini Spray வகைக்குரிய சொட்டு நீர்ப்பாசனமாகும்.
இதனால் அடைப்புகள் ஏற்படுவதும் குறைவு. நாளொன்றிற்கு 32 லிற்றர் நீர்
வாழைக்கு தேவையாகும். அடி மரத்திற்கு துளித்துளியாக நீர் கிடைப்பதாலும் கப்பலில் ஏற்படும் பனாமா நோய் பரம்பல் கட்டுப்படுத்துகின்றது. அத்துடன் நீர்க்காப்பு, போசணை இழப்பு 
தவிர்க்கப்படுகின்றது.
சொட்டு நீர்ப்பாசனம் மூலம் வாழை பயிர் செய்வது கடினம் என விவசாயிகள் பலராலும் கூறப்படும் நிலையில் குறித்த விவசாயியின் முன்மாதிரி அனைவரையும் திரும்பிப் பார்க்க 
வைத்துள்ளது.
இந்நிகழ்வானது முழங்காவில் பகுதி விவசாயப் போதனாசிரியர் ம. மகிலன தலைமையில் இடம்பெற்றது. இதில் விருந்தினர்களாக சிறந்த விவசாய நடைமுறைக்குரிய (GAP) விவசாய வியாபார ஆலோசகர் உத்தியோகத்தர திவாகரன், தொலைக்காட்சி பண்ணை ஒளிபரப்பு சேவை வடக்கு அலகு அபிவிருத்தி அலுவலகர் ந. குகதாசன், முழங்காவில் பிரதம வைத்திய அதிகாரி க. செல்வநாதன் மற்றும் முழங்காவில் பொருளாதார 
அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.
 மேவின்ராஜ் ரோஸ்வேஜினி மற்றும் முழங்காவில் கமக்கார அமைப்பினர், பிரதான பழமரச் செய்கையாளர்கள், விவசாயிகள் எனப்பலரும் பங்குபற்றியிருந்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

மதுபானப் பிரியர்களுக்கும் மதுவரித் திணைக்களத்தின் அதிரடி அறிவிப்பு

குடித்துவிட்டு சுற்றுப்புறங்களில் மதுபான போத்தல்கள் மற்றும் பியர் ரின்களை வீசியெறிவதால் சூழல் மாசடைகின்றது.எனவே, இதனை கட்டுப்படுத்தும் வகையில் புதிய முறையொன்றை 
மதுவரித்திணைக்களம் நடைமுறைப்படுத்த உள்ளது.கடந்த வருடம் 300 மில்லியன் மதுபான போத்தல்கள் மற்றும் 160 மில்லியன் பியர் கான்களை வாங்கியதாக 
மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.புதிய முறையின்படி வீதியோரங்களில் மதுபான போத்தல்களை வீசியெறிவதை தடுக்கும் வகையில் அவற்றை திருப்பி ஒப்படைக்க மதுவரி திணைக்களம் ஊக்குவிக்கிறது.வீதியோரங்களில் 175 மில்லி லீற்றர் மதுபான போத்தல்கள் பெருமளவில் வீசியெறிப்படுவதாக 
வெளியான தகவலை அடுத்தே மதுவரித்திணைக்களம் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.புதிய முறையின் கீழ் முதல் கட்டமாக, எந்தவொரு மதுபான விற்பனை நிலையத்திலும் திருப்பி ஒப்படைக்கப்படும் ஒவ்வொரு வெற்று 175 மில்லி லீற்றர் அல்கஹோல் போத்தலுக்கும் பணத்தைத் திரும்ப வழங்க மதுவரித்திணைக்களம்
 தீர்மானித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


கொரோனாவில்இலங்கையில் நிகழ்ந்த 12வது மரணம் சுகாதார அமைச்சின் அறிவிப்பு


இலங்கையில் கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 47 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி.23.08-20. இன்று அதிகாலை
 உயிரிழந்ததாக
 அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.இந்தியாவில் இருந்து வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணே
 உயிரிழந்துள்ளார்.குறித்த பெண்
 புற்றுநோய் மற்றும் இருதய நோயாலும் பீடிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக 
அதிகரித்துள்ளது.




மன்னாரை உறைய வைத்த இளம் பெண் படுகொலைச் சம்பவம்

மன்னாரில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் கொலை மர்மம் துலங்கியுள்ளது. அந்த யுவதியின் சகோதரியே கொலையின் சூத்திரதாரியென்பதை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்தனர்.இதையடுத்து யுவதியின் கொலையுடன் தொடர்புடைய இரண்டு பெண்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
யுவதி யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சேர்ந்தவர்.கடந்த 13ஆம் திகதி மன்னார்-சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.அது 
தொடர்பான தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், சடலத்தை மீட்டு, மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு சென்ற நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டார்.
யுவதியின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் அடைாளம் காணப்படாத நிலையில் வைக்கப்பட்டிருந்தது.யுவதி பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு
 கொல்லப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் ஏற்பட்டிருந்தது.இந்தக் கொலை தொடர்பான 
மர்மம் நீடித்து வந்த நிலையில், கொழும்பிலிருந்து மன்னாரிற்கு வந்த விசேட புலனாய்வு அணியொன்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
 இந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.சடலமாக மீட்கப்பட்ட யுவதி, யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த சுமார் 21 வயதுடையவர் என 
தெரிய வருகிறது.யுவதியின் சகோதரியும், இன்னொரு பெண்ணும் கொலை சூத்திரதாரிகள் என பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையை செய்தார்கள் என்ற சந்தேகத்தில் மன்னாரை சேர்ந்த சிலர் தேடப்பட்டு 
வருகிறார்கள். அவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவ தினத்தில் 
யாழ்ப்பாணத்திலிருந்து கொலையான யுவதியை, கைதான இரண்டு பெண்களும் (சகோதரியும் மற்றையவரும்) முச்சக்கர வண்டியில் மன்னாரிற்கு அழைத்து வந்தது விசாரணையில் 
வெளிப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

நாகர்கர்னூல் மாவட்டத்தில் நீர் மின் நிலைய தீ விபத்து: 6 பேர் பலி

தெலுங்கானாவில் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணை அமைந்துள்ளது.  இதில் பூமிக்கடியில் செயல்பட்டு 
வந்த நீர்மின் நிலையத்தில்.20-08-20. நேற்றிரவு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து  தீ விபத்தும் ஏற்பட்டு உள்ளது.   தகவல் கிடைத்ததும் 
ர்னூல் நகரில் உள்ள தீயணைப்பு 
நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 
தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் நிகழ்விடத்தி
ற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், விபத்தில் சிக்கிய 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முதல்கட்ட தகவல்களின்படி, ஸ்ரீசைலம் அணையின் இடதுபக்க கரையில் பூமிக்கடியில் செயல்பட்டு வந்த நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட குறைந்த மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக 
கூறப்படுகிறது. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


கோர விபத்து வாழைச்சேனையில் சிறுவன் பரிதாபமாகப் பலி

வாழைச்சேனை- வாகனேரிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்..20-08-20. (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி சுற்றுலா விடுதியைச் சேர்ந்த நடராஜா தனுஜன் (வயது 16) என்பவரே 
உயிரிழந்துள்ளார்.
பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன்போது வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து பாதையை விட்டு விலகி விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சடலம் பிரேத
 பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை 
முன்னெடுத்து வருகின்றனர்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

அமெரிக்காவில் விரைவில் உமிழ்நீர் மூலம் கொரோனாவை கண்டறியும் எளிய சோதனை

உமிழ்நீர் மூலம் கொரோனா வைரசை கண்டறியும் எளிய சோதனை, அமெரிக்காவில் அறிமுகம் ஆகிறது. கொரோனாவை கண்டறியும் சோதனை, பிற நாடுகளை விட அமெரிக்காவில் அதிக 
எண்ணிக்கையில் நடத்தப்படுகிறது. உலகிலேயே
 அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் அங்குதான் பரிசோதிக்கப்படுகின்றன. 
இதனால் அங்கு பரிசோதனை கருவிகளுக்கு 
அவ்வப்போது தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பரிசோதனைகளை அமெரிக்காவில் விரைவாக விரிவாக்குவதற்காக எளிதாக
 உமிழ்நீர் மூலம் கண்டறிகிற 'சலிவா டைரக்ட்' என்ற சோதனை முறையை உருவாக்கி உள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>


மரண அறிவித்தல் திருமதி விக்கினேஸ்பரன் சிவபாக்கியம்,19-08-20


பிறப்பு  - 26- 08 1943  -  இறப்பு-19 08-2020

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்பரன் சிவபாக்கியம் அவர்கள் 19-08-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், 
காலஞ்சென்ற மினாசித்தம்பி, தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
 காலஞ்சென்ற விக்கினேஸ்பரன் அவர்களின் அன்பு மனைவியும்,
 சிவனேசன்(பிரான்ஸ்), வாசுகி(இலங்கை), சிவகுமார்(பிரித்தானியா), வனிதா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 நந்தகுமார், முகிலன், தர்சினி, ஜெயதேவி
 ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(மலேசியா), பரமேஸ்வரன்(சிறுப்பிட்டி), செல்வரட்ணம்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 சைலரூபன், வைஸ்ணவி, மிதுசா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
 அபினா, அக்சயா, தனிஸ் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
 அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி தோப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 சிவனேசன் - மகன்Mobile : +33768991891 Phone : +33130252314 சிவகுமார் - மகன்Mobile : +447876763768   வாசுகி - மகள்Mobile : +94770847712   வனிதா - மகள்Mobile :+447882797572  



ஐரோப்பா செல்ல முயன்ற அகதிகள் கப்பல் லிபியா நடுக்கடலில் மூழ்கி 45 பேர் பலி

 

லிபிய கடல் எல்லையில் கப்பல் ஒன்று மூழ்கியதில் அதில் இருந்த ஐந்து குழந்தைகள் உள்பட 45 குடியேறிகள் மற்றும் அகதிகள் உயிரிழந்துள்ளனர் என்று ஐநா அகதிகள் உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நடந்த மிகவும் மோசமான 
கப்பல் விபத்து இது.
ஸ்வாரா நகரின் கடற்கரையோரம் எஞ்சின் வெடித்து இந்த கப்பல் விபத்துக்குள்ளானபோது, அதில் 80க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
விபத்திலிருந்து உயிர் தப்பிய 37 பேர் உள்ளூர் மீனவர்களால்
 மீட்கப்பட்டனர்.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று ஐநா அகதிகள் உயர் ஆணையம் மற்றும் ஐநாவின் சர்வதேச குடிப்பெயர்வு அமைப்பு ஆகியவை வலியுறுத்தியுள்ளன.
இதற்கென தனியான தேடுதல் மற்றும் மீட்பு பொறிமுறை இல்லாவிட்டால் மத்தியத் தரைக்கடல் பகுதியில் மேலும் பல உயிரிழப்புகள் நிகழும் என்றும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
லிபியாவில் இருந்து கடல் கடந்து ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 300க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டு உயிரிழந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும் உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும்.
லிபியாவில் ஆட்சியிலிருந்த மும்மார் கடாஃபி 2011ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த நீக்கப்பட்டு கொல்லப்பட்ட பின்னர், குடியேறிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய முயலும் முக்கிய 
நாடாக லிபியா உள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

மரண அறிவித்தல் திரு தம்பையா பொன்னுத்துரை.16-08--20

மலர்வு-16 02.1926  -உதிர்வு.16-08-2020
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும், அச்சுவேலி தோப்பை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட தம்பையா பொன்னுத்துரை அவர்கள் 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அச்சுவேலியில் 
காலமானார்.
 அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 தெய்வ பூமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
 சுசீலா(ஜேர்மனி), சுகுணா(பிரித்தானியா), கிருபாகரன்(பிரித்தானியா), சுதாகரன்(கரவெட்டி), பிரபாகரன்(அவுஸ்திரேலியா), ஐங்கரன்(நல்லூர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 ஞானேஸ்வரன்(ஜேர்மனி), ஸ்ரீரஞ்சன்(பிரித்தானியா), சாந்திமதி(பிரித்தானியா), தாரணி(கரவெட்டி), தருமினி(அவுஸ்திரேலியா), சாம்பவி(நல்லூர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, நடராசா, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 சுலக்‌ஷன், சுபாங்கி, சுவாதி(ஜேர்மனி), நிருபா, திலக்‌ஷன், நித்திலன்(பிரித்தானியா), கீரன், கனிகா, குபேரன்(பிரித்தானியா), கஜானன், லக்‌ஷன், கார்த்திகேயன்(கரவெட்டி), ரகுராம், ஸ்ரீராம்(அவுஸ்திரேலியா), அனுபிரியா, ஆராதனா(நல்லூர்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி தோப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன

Thambaiah Ponnuthurai was born in Thoppu Achchuveli, Jaffna, lived in Colombo, Germany, Netherlands and passed away peacefully on Sunday, 16th August 2020.   He was the beloved Son of late Thambaiah and late Shellama.   Son-in-law of the late Kanthiah and late Sellakkandu.   Beloved Husband of  Theivapoomany  Loving Father of Sucila, Suguna,  Kirubakaran, Prabaharan, Suthakaran, Angkaran.   The Father-in-law of Gnaneswaran, Sriranjan, Shanthimathi, Tharani, Tharmini, Shambavy.  He was the brother of late Annapillai, late Nadarajah, late Ponnammah.  The adored grandfather of Sulaxan, Subanki, Suwathi, Neruba, Thilaxan, Nitthilan, Keeran, Kanika, Kuberan, Kayanan, Laxsan, Karthikeyan, Raguram, Sriram, Anuppiriya, Arathana. This notice is provided for all family and friends.  தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 தெய்வபூமணி - மனைவிContact Request Details சுசீலா - மகள்Contact Request Details சுகுணா - மகள்Contact Request Details கிருபா - மகன்Contact Request Details பிரபா - மகன்Contact Request Details சுதா - மகன்Contact Request Details ஐங்கரன் - மகன்

நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 12 ஆகஸ்ட், 2020

மொரகஹஹேன பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன். பலி

மொரகஹஹேன பகுதியில் பட்டம் பறக்கவிட்டு விளையாடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.குறித்த மாணவர் மூன்று தினங்களுக்கு 
முன்னர் இவ்வாறு மின்சாரம் தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார் என பொலிஸார்
 தெரிவித்துள்ளனர் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>