siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

தடுப்பூசி இன்று வடக்கில் 1530 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகத்தெரிவிப்பு

வட மாகாணத்தில் COVID-19 தடுப்பூசி இன்று 1530 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.வடக்கில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணி இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது.
இன்று, யாழ்ப்பாணம் – 875, மன்னார் – 200, வவுனியா – 210, முல்லைத்தீவு – 145, கிளிநொச்சி – 100 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 15% வடக்கு சுகாதார பணியாளர்கள் இன்று தடுப்பூசி பெற்றனர். நேற்றும் இன்றுமாக- இரு நாட்களும் 45% பணியாளர்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டனர்.தடுப்பூசி செலுத்தும் பணி நாளையும் தொடரும்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



யாழில் .கணவனின் முன்பாக தனக்குத் தானே தீமூட்டி மனைவி மரணம்..

குடும்ப தகராறினை அடுத்து கணவன் முன்னே மனைவி தீ மூட்டித் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளதுயாழ்ப்பாணம்- நாவற்குழி புதிய வீட்டு திட்டம் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான 
நீ.நிரோஜினி (வயது 30) என்பவரே இவ்வாறு உரிழந்துள்ளார்.கணவனுடன் ஏற்பட்ட முரண்பாட்டினைத் தொடர்ந்து, கணவன் கண் முன்னே தனக்கு தானே தீ மூட்டியுள்ளார். அதனை கண்டு பதறிய 
கணவன் தீயை அணைத்து, மனைவியை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.எனினும் அவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஏக்கல பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த வான் கோர விபத்து..மூவர்பலி

கொழும்பு – மினுவாங்கொட பிரதான வீதியின் ஏக்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் 
தெரியவருவதாவது;
வான் ஒன்று வேகக் கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்து சுவருடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் 48, 49, மற்றும் 64 வயதுடைய மூவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப
 கட்ட தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 30 ஜனவரி, 2021

தஹம்வௌ பகுதியில் இரண்டு காட்டு யானைகளின் சடலங்கள் மீட்பு

பொலனறுவை–மெதிரிகிரிய–தஹம்வௌ பகுதியில் சட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்கி மரணித்த இரண்டு 
காட்டு யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்காக விவசாயிகள் குறித்த பகுதியில் சட்டவிரோத மின்சார இணைப்புகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,இன்று அதிகாலை குறித்த சட்டவிரோத மின்சார கம்பி இணைப்பில் சிக்கி இறந்த நிலையில்,இரண்டு 
காட்டு யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாக 
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சட்டவிரோத மின்சார இணைப்பை பெற்ற நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>





வெள்ளி, 29 ஜனவரி, 2021

திருக்கேதீஸ்வரம்பகுதில் சட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்கி இருவர் பலி

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிற்கு சற்று தொலைவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு சடலங்களை .29-01-2021.இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடம்பன் பள்ளிவாசல் பிட்டி பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 
மூக்கையா மகேந்திரன் (45) மற்றும் வேட்டையார் முறிப்பு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அந்தோனிப்பிள்ளை தேவசங்கர் (37) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மன்னார்-யாழ்ப்hணம் பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம 
அலுவலகர் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து சட்ட விரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற்று வீதிக்கு சற்று தொலைவில் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக 
சட்ட விரோதமான முறையில் அமைத்த 
மின் இணைப்பில் சிக்கியே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.இன்று வெள்ளிக்கிழமை (29) காலை குறித்த இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை 
அவதானித்த பிரதேச வாசிகள் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு 
வந்தனர்.பின்னர் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.பின்னர் சடலம் மீட்கப்பட்டது.மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



கொழும்பில் அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசித் திட்டம் இன்று ஆரம்பம்..

 

இந்தியாவினால் வழங்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி விநியோக நடவடிக்கை,29-012021. இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது
அந்தவகையில் கொழும்பில் உள்ள இராணுவ
 வைத்தியசாலையில் மூன்று இராணுவ வீரர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி முதன்முதலில் செலுத்தப்பட்டுள்ளது.முதல் கட்டமாக மேல் மாகாணத்தின் ஆறு முக்கிய
 வைத்தியசாலைகளில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்திய அரசாங்கத்தினால் 5 இலட்சம் சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ள அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் எனும் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



மரண அறிவித்தல் திருமதி ஆனந்தராஜா உதயராணி 29.01.21

பிறப்பு-01-02-1976  இறப்பு-29.-01-2021
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாவும்,  சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தராஜா உதயராணி அவர்கள் 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சண்முகம் சரஸ்வதி தம்பதிகளின்
 அன்பு மகளும், இராமன் கிட்டிணன், காலஞ்சென்ற நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,கிட்டிணன் ஆனந்தராஜா
 அவர்களின் அன்பு மனைவியும்,அஸ்மிதா, அபிஷகா, ஆர்த்திகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,பூபதி, செல்வக்குமார், ஜெயக்குமார், காலஞ்சென்ற விஜயகுமார், உதயகுமார், சந்திரகுமார், சிவகுமார், ஜீவகுமார், இந்திரகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் 
அன்புச் சகோதரியும்,சந்திரகுமார், சரணியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,விஜயலட்சுமி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற விஜயராணி, மகேந்திரம், ஆனந்தஈஸ்வரன், ஆனந்தஸ்ரீ, 
ஆனந்தகுமார், மோகன் ஆகியோரின் 
அன்பு மைத்துனியும்,வடிவேலு, சிவசக்தி- சுபைதினி, நிரஞ்சினி, அசோதியா, நிவேதா, நித்தியா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அனுஷன், அனக்தீஸ், வதீஸ், வஜிதன், வரதராஜா, வதீசா, மது, கல்பா ஆகியோரின் அன்பு மாமியும்,பிரியா, ஆர்த்தி, கீர்த்தி, டிலக்சியா, அபிஷன், அஸ்வின், தனுஷன், விதுஷன், மதுஷன் மற்றும் பிரமா 
ஆகியோரின் அன்பு சித்தியும்,மைதிலி, வசந்தரூபன், லக்சியா, யதுசா ஆகியோரின் பெறா மகளும்,றம்மியா, யதுசன், அனித்தா, சாரங்கன், றாதுசன், ஜெதுசன், தனுசன், லக்சுமன், டிலக்சன்,
 சபிதா, கஸ்ரியா, மதுசன், நவீன், மகதி, துசியந்தன், சிறிகரன், சியானுயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.இவ் 
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
தகவல்: குடும்பத்தினர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>

புதன், 27 ஜனவரி, 2021

வெல்லாவெளியில் டிப்பர் கண்ணாடியை உடைத்த மரக்கிளை. சாரதி.பலி

 

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பிரதான வீதியில் மரமொன்றுடன் வாகனம் மோதி விபத்துக்குள்ளான நிலையில், மரத்தின் கிளையொன்று குத்தியதால் சாரதி உயிரிழந்துள்ளார்.
27-01-2021,இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பெரியகல்லாறு, வைத்தியசாலை வீதியை சேர்ந்த கே.சிறிக்காந்த் என்பவரே உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.மண் ஏற்றும் டிப்பர் வாகனத்தினை தும்பங்கேணி பிரதான வீதியூடாக ஓட்டிச்சென்று சிறிய
 வீதியொன்றின் ஊடாக செலுத்த முற்பட்டபோது, மரமொன்றின் கிளை வானத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு,சாரதியின் நெஞ்சுப்பகுதியை தாக்கியுள்ளது.
இதன்போது வானத்தின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், இதன்போது வாகனத்தில் சென்ற 
உதவியாளர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சடலம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,களுவாஞ்சிகுடி 
சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மண்டூர் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டார்.மரண விசாரணையினை 
தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்கான உத்தரவினை பிறப்பித்தார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 26 ஜனவரி, 2021

தமிழ் மொழிக்கு யாழ் நகரில் நேர்ந்த கதி..பொதுமக்கள் கடும் விசனம்

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுதூர பேரூந்து நிலையத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் குற்றம்சாட்டியுள்ளார். அத்தோடு
 தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படாது விட்டால் தான் பேரூந்து நிலைய திறப்பு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் து.ஈசன் தெரிவீத்துள்ளார்.குறித்த
 விடையம் தொடர்பில் 25-01-2021.அன்று  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே து.ஈசன் இவ்வாறு 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>


தும்மல்ஹார என்ற இடத்தில் புதையல் தோண்டிய 14 பேர் கைது!

பதுளை கொஸ்லாந்தை பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 14 பேரை, கொஸ்லாந்தை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்
கொஸ்லாந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு 
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில், குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார், தும்மல்ஹார என்ற
 இடத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த 14 பேரையும் கைது செய்தனர்.
அத்துடன், புதையல் தோண்றுவதற்கு 
பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 14 பேரும், ஊவா - மாவெலகமைச் சேர்ந்த ஒக்பீல்ட் பெருந்தோட்டத்தைச் சேர்ந்தவர்களாவார். இவர்கள் விசாரணையின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்களென, கொஸ்லாந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 25 ஜனவரி, 2021

திடீரென .வடக்கின் முக்கிய நகரில் துடித்து வீழ்ந்து இறக்கும் காகங்கள்

கிளிநொச்சி நகர் மற்றும் அதனை அண்டியப்பகுதிகளில் காகங்கள் இறந்து
கிடப்பதனை அடிக்கடி காண முடிக்கிறதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்ஒரு மாத்திற்குள் மட்டும் ஆங்காங்கே
 ஐந்து காகங்கள் இறந்து கிடந்துள்ளன25-01-2021..இன்றைய தினம் நகர் பகுதியில் காகம் ஒன்று தீடிரென கீழே வீழந்து துடிதுடித்து இறந்து விட்டதாகவும், பொது மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் இறந்த காகம் ஒன்றின் வயிற்றுப் பகுதி
கிழித்து பார்த்த போது, உள்ளே லஞ் சீற் காணப்பட்டதாகவும், பொது மக்களால்
தெரிவிக்கப்படுகிறது..

நிலாவரை.கொம் செய்திகள் >>>

அளவெட்டியில் கட்டிடத்தை இடிக்க முயன்றவர் கட்டிடம் இடிந்து வீழ்ந்து மரணம்

யாழ்.அளவெட்டிப் பகுதியில் பழைய கட்டிடம் ஒன்றை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சமயம், கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் அளவெட்டி மேற்கைச் சேர்ந்த மகாதேவன் பிரகலாதன் , வயது 40 என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியர் வருகை தந்து தமது காணியில் ஏற்கனவே அமைந்திருந்த 
பழைய கட்டிடத்தை அகற்றும் அதே
 நேரம் புதிய கட்டிடமும் அமைக்கப்படுகின்றது.இவ்வாறு அமைக்கும் பணிகள் பல நாட்களாக இடம்பெற்று வருகின்றது. பணியில்.24-01-21. அன்று பணி இடம்பெறும்போது மாலை 4மணியளவிலியே குறித்த
 அனர்த்தம் இடம்பெற்று பாதிக்கப்பட்டவர்,உடனடியாக 
தெல்லிப்பழை 
ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதே உயிர் இழந்திருந்ததனை மருத்துவர்கள் உறுதி
 செய்த நிலையில், தெல்லிப்பளை பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 22 ஜனவரி, 2021

இலங்கையில்அடுத்த இரு வாரங்களில் கொரோனா மரணங்கள் அதிகரிக்கும் ஆபத்தாம்

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்தார்.இது 
தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்,
நாட்டில் தற்போது நாளொன்று 900 ஐ அண்மித்தளவில் தொற்றாளர்கள் பதிவாகக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதே
 நிலைமை தொடருமானால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்போடு எதிர்வரும் இரு வாரங்களில் மரணங்களில் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும்.எனவே நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு 
துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக 
சுகாதார ஸ்தாபனத்தினால் ஏதேனுமொரு வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் நாட்டுக்கு பொறுத்தமானதுமான தடுப்பூசிகளையே பெற்றுக் கொள்ள வேண்டும்.தடுப்பூசிகளை கொள்வனவு 
செய்யும் போது, அது தொடர்பான தீர்மானம் விஞ்ஞானபூர்வமானதாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் ரீதியானதாக இருக்கக் 
கூடாது என்றார்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


யாழ் மீசாலையில் பாம்புக் கடிக்கு இலக்கான குடும்பஸ்தர் மரணம்

யாழ்.மீசாலைப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்றவர் பாம்பு தீண்டி உயிரிழந்த சம்பவம் 21-01-21. அன்று  இடம்பெற்றுள்ளது.மீசாலை தெற்கு பகுதியை சேர்ந்த யோ.குமார் (வயது43) என்பவர் சரசாலை
 பகுதியில் மாடு மேய்க்கச் சென்றுள்ளார். இதன்போது புற்களுக்குள் இருந்த பாம்பு அவரை தீண்டியுள்ளது.அதனை அறியாத
 அவர், மாலை வீடு திரும்பிய நிலையில் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டமையை அடுத்து வீட்டில் இருந்தோர் அவரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு 
கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கபட்ட போதிலும், சிகிச்சை பயனின்றி
 உயிரிழந்துள்ளார்.

 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய 18 வயது பாடசாலை மாணவி.

கிளிநொச்சி – ஸ்கந்தபுரத்தில் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.21.01-21. அன்று  முற்பகல் 11.30 மணியளவில் ஸ்கந்தபுரம், 2ம் வாய்க்கால் பகுதியில் உள்ள
 வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இப்பகுதி பாடசாலை 
ஒன்றின் உயர் தர வகுப்பு படிக்கும் சந்திரமௌலீஸ்வரன் கிரிஜா வயது 18 என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டவர்..இச்சம்பவம் தொடர்பாக அக்கராயன் பொலிசார் விசாரணைகளை 
மேற்கொண்டுள்ளனர்..
..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 18 ஜனவரி, 2021

பால்காரில் காதலியை கொடூரமாக குளியலறையில் கொலை செய்த காதலன்.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்றுவிட்டார்.
அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வருகிறாயே என்று இளம்பெண் கேட்டுள்ளார்.ஆனால், வாலிபரோ திருமணம் செய்துகொள்ளாமல் இப்படியே இருப்போம் என்று கூறியுள்ளார். அதற்கு இளம்பெண் உடன்படவில்லை.தொடர்ந்து 
அந்த பெண் வற்புறுத்தி வந்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்குள்ளும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த வாலிபர் காதலியை அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் பெண்ணின் சடலத்தை வீட்டு குளியலறையில் உள்ள சுவற்றில் 
ஆட்டோ சங்கர் பாணியில் வைத்து பூசிவிட்டார்.சில நாட்கள் சென்று விட, பெண்ணிடம் இருந்து எந்த அழைப்பும் வராததால் சந்தேகமடைந்த பெண்ணின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் விசாரித்த போது, வாலிபர் முன்னுக்கு பின் முரணாக 
பதிலளித்துள்ளார்.தொடர்ந்து, வாலிபரின் வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, 
குளியலறைக்குள் புதிதாக சிமெண்ட் பூசப்பட்டிருப்பதை பார்த்து சந்தேகமடைந்த 
போலீசார், அந்த பகுதியை இடித்து பார்த்தபோது, பெண்ணின் எலும்புக்கூடு இருந்ததை கண்டு அதிர்ந்து போனார்கள்.தொடர்ந்து வாலிபரின் மீது வழக்கை பதிவு செய்த  பொலீசார் கைது செய்தனர்.


நிலாவரை.கொம் செய்திகள் >>>



பூநகரியில் மனைவியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த கணவன்

கிளிநொச்சி பூநகரி தெளிகரை பகுதியில் கணவனால் மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்டு முரண்பாடு முற்றிய நிலையில்
மனைவியின் கழுத்து உள்ளிட்ட பல பகுதிகளில் வெட்டி படுகொலை செய்துள்ளார் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் மூன்று
பிள்ளைகளின் தாய் ஆவார். இச்சம்பவம் 17-01-2021.அன்று  பிற்பகல் இரண்டு
மணியளவில் இடம்பெற்றுள்ளது.தெளிகரை பகுதியைச் சேர்ந்த டேவிட் ரூபன் கீதா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரை பூநகரி பொலீஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



அமரர் திரு துரைராஜா இரத்தினம் 5ம் ஆண்டு நினைவஞ்சலி 19.01.21

மலர்வு .28.12.1952    உதிர்வு .15.01.2016      
நீங்காத நினைவு.ஐந்தாம் ஆண்டு 
திதி-19.01.2021
 அமரர் திரு துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை)   அன்னார்  யாழ்  நவற்கிரி புத்தூரை 
 பிறப்பிடமா​வும்  சங்கோலை  மாவிட்ட புரத்தை வசிப்பிடமா​கவும்  k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட 
அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் நீங்காத நினைவுடன்  ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி 19.01.2021...அன்று  செவ்வாய்க்கிழமை 
மறைந்துவிட்ட எங்கள் உறவின்.
>>>>>>>
நீங்காத நினைவுகள் 
விண்ணில் நிலவு இல்லாத
நாட்கள் உண்டு…!
மண்ணில் மழை பொழியாத
காலமும் உண்டு…!
ஆனால், என்னுள்
உங்கள் நினைவு இல்லாத
நொடிகள் இல்லை…!
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் 
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின் ஆத்மாசாந்தியடைய 
இறைவனை பிரார்த்திக்கின்றோம் 
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி...
என்றும் உங்கள் பிரிவால் துயருறும் 
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் , 
மைத்துனர்மார்கள், மருமக்கள்.
தகவல்
 குடும்பத்தினர் 
>>>>
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>



ஞாயிறு, 17 ஜனவரி, 2021

தெளிகரை பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்

கிளிநொச்சி – பூநகரி பொலிஸ் பிரிவு, தெளிகரை பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம்.17-01-21. இன்று  பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீடொன்றில் குறித்த பெண் இரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, பூநகரி வைத்தியசாலைக்கு சடலமாக எடுத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் 30 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்படுகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



இடம்பெற்ற வீதி விபத்தில் முரசுமோட்டை யில் ஒருவர் மரணம்

கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் தர்மபுரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரம் நிதுசன் என்ற 20 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு 11.45 மணி அளவில் பரந்தன் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே 
உயிரிழந்துள்ளார்.
இதேவேளை டிப்பர் வாகனத்தின் சாரதி அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>



வெள்ளி, 15 ஜனவரி, 2021

பெய்துவரும் அடைமழையினால் கிளிநொச்சியில் வெள்ளச்சேதம் அதிகம்

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு
 கால போகம் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இதில் சுமார் 20 வீதமான வயல் நிலங்கள் நீரில்
 மூழ்கியுள்ளதாக கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அறுடைக்கு தயாராக இருந்த நிலையில், அதிகளவான மழை வீழ்ச்சியால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த அழிவுகள் 
ஏற்பட்டுள்ளன.
இதனிடையே கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று வரை(14) 807 குடும்பங்களைச் சேர்ந்த 2600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த  முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




புதன், 13 ஜனவரி, 2021

யாழ் தொண்டமானாற்ரில் வீடொன்றில் நூதனமாக நடந்த பகல் கொள்ளை

தொண்டமானாறு பகுதியில் பொதுச்சுகாதார பரிசோதகர் போன்று நடித்து வீடு ஒன்றிலிருந்து பெறுமதியான தங்க நகைகளை
 அபகரித்துச் சென்ற யுவதியொருவர் மக்களால் துரத்திப் பிடிக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி தொண்டமானாறு பகுதியில் இந்தச் 
சம்பவம் நடந்தது.
அவருக்கு உதவிய ஆண் ஒருவரும் பிடிக்கப்பட்டு இருவரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் மக்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.தொண்டமானாறு அரசடியில்.12-01-2021. அன்று மாலை இடம்பெற்றுள்ளது.
வீடு ஒன்றுக்குச் சென்ற யுவதி ஒருவர், அங்கிருந்தவர்களை 
அழைத்து தன்னை பொதுச்சுகாதார பரிசோதகராக அறிமுகப்படுத்தி, வெள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய வந்துள்ளேன் என்று 
கூறியுள்ளார்.அவர் கறுப்பு நிறத்திலான மழை அங்கி அணிந்திருந்துள்ளார். வீட்டின் சுற்றாடலில் தேங்கி நின்ற வெள்ளத்தை தனது கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்த அந்தப் பெண், ஆடை மாற்றுவதற்கு அறையைத் தருமாறு கேட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 11 ஜனவரி, 2021

உணவருந்திய பின்னர் யாழில் கை கழுச் சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்

உணவருந்திய பின்னர் கை கழுச் சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.நல்லூர், அரசடியைச் சேர்ந்த அ.கிரிதரன் (வயது-54) என்வரே உயிரிழந்துள்ளார்.(09-01-21.) நேற்றுமுன்தினம் இரவு வழமை போன்று இரவு உணவு அருந்திவிட்டுக் கை கழுவச் சென்றுள்ளார். அப்போது அவர் மயங்கி வீழ்ந்துள்ளார்
உடனடியாக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.எனினும் சிகிச்சை பயணின்றி உயிரிழந்தார்.இறப்பு விசாரணைகளை யாழப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார்
மேற்கொண்டார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

அம்பாறையில் நன்னீர் மீன்பிடி தங்கூசி வலையின் பாவனை அதிகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள நன்னீர் மீன்பிடி வாவி மற்றும் குளங்களில் தங்கூசி வலையின் பாவனை அதிகரித்துள்ளது.
தற்போது பருவ காலத்தினால் வாவி குளங்களில் மீன்பிடித்தொழில் அதிகரித்துள்ளதுடன் சட்டவிரோதமான தங்கூசி வலைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக காரைதீவு ,நிந்தவூர், மாவடிப்பள்ளி ,சம்மாந்துறை ,மத்தியமுகாம், நற்பிட்டிமுனை, மருதமுனை, சேனைக்குடியிருப்பு, பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் இவ்வலைகள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் இவ்வலை பாவனை கடற்தொழில் நீரியள் வள திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டிருந்தது.
கொரோனா பரவல் காரணமாக இந்நடவடிக்கைகள் எதுவும் தற்போது மேற்கொள்ளாமையினால் மீண்டும் தங்கூசி வலை பாவனை அதிகரித்துள்ளதாக பாதிக்கப்ட்ட மீனவர்கள் 
குறிப்பிடுகின்றனர்.
தங்கூசி வலை பாவனையினால் பிளாஸ்டிக், பொலித்தீன் பூமிக்கு ஏற்படுத்தும் பாதிப்பைவிட தங்கூசி பல வகையில் நிலத்திலும் கடலிலும் ஏற்படுத்துகிறது.தவிர, தங்கூசிவலை விரித்து 
வைக்கப் பட்டிருக்கும்போது நீரோட்டத்தின் வேகத்தில் ஒருவகை விண் கூவுவது போன்ற ஒலியை ஏற்படுத்துகிறது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் மிரட்சியடைந்து அந்தப் பகுதியை விட்டே வேறு பிரதேசங்களுக்குக் குடி 
பெயர்ந்து விடுகின்றன.
அடுத்து, மிகவும் குறுகிய விட்டத்தைக் கொண்ட தங்கூசி வலைகளைப் பாவிப்பதால் மிகச் சிறு மீன்களும் அகப்பட்டு மடிந்து, காலக் கிரமத்தில் அழிந்து விடுகின்றன.கைவிடப்படும் இந்த வலைகளால் பல நுண்ணுயிர்கள் 
அழிந்து விடுகின்றன.
தரையில் இவற்றைக் கைவிடுவதால் நிலவளம் பாதிக்கப் படுவதுதோடு, நிலத்தில் வாழும் ஊர்வன, பறவையினம் போன்றவற்றின் அழிவுகளுக்கும் காரணமாகி விடுகின்றன.
மேலும் தங்கூசி வலை பாவனை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதோடு தங்கூசி வலையுடன் கைது செய்யப்படுவோர் மீது நீரியல் வள திணைக்களத்தினால் சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>