siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 15 ஜூன், 2026

நாட்டில் பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

நாட்டில் பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாகியதில் ஏறக்குறைய 18 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த விபத்து இன்று கண்டி - யாழ்ப்பாணம் A-9 வீதியின் கட்டுகஸ்தோட்டை, கலுகல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. 
இந்த விபத்தில் 17 பாடசாலை மாணவ, மாணவிகளும் வேனின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
 தனியார் பேருந்து கண்டி திசை நோக்கியும், பாடசாலை வேன் அதற்கு எதிர் திசையிலும் பயணித்துக்கொண்டிருந்த போதே
  விபத்து நேர்ந்துள்ளது. 
சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 14 ஜூன், 2026

மரணஅறிவித்தல் அமரர் ஜெயக்குமார் நெல்சன்

 துயர் பகிர்வு-தோற்றம் -00--மறைவு-13-06-2026.
யாழ் ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  அமரர் ஜெயக்குமார்  நெல்சன் அவர்கள்  13.06.2026 சனிக்கிழமை அன்று அகாலமரணமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஜெயக்குமார்,  பத்மராணி (பழைய மாணவி, ஓய்வு பெற்ற ப. நோ. கூ. சங்க லிகிதர் மற்றும் தற்போதைய சிவசக்தி மணிமண்டப முகாமையாளர்)  ஆகியோரின் அன்பு மகனும்,
ஜெனனியின் (பழைய மாணவி)அன்பு சகோதரனும், ஜெகதீபன் (யாழ் போதனா வைத்தியசாலை பரிசாரகர்) அவர்களின் மைத்துனரும், ஜெனிலியா, ஜஸ்வின் ஆகியோரின் பாசமிகு மாமனுவார். 
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 15.06.2026 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 1 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று  பின்னர் ஆவரங்கால் இந்துமயாணத்தில் நல்லடக்கம் நடைபெறும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
மேலதிக தொடர்புகளுக்கு 
பத்மராணி (தாய்) - 0774109600
ஜனா (சகோதரி) - 0772850444
ஜெகன் (மைத்துனர்) - 0779170257
தகவல்
குடும்பத்தினர்.
https://navakkiri.blogspot.com/2026/06/blog-post_338.html





                     
 

சாலை விபத்தில் கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் மரணம்

 சாலை விபத்தில் கனடாவின் ஒண்டாரியோ மாகாணம் மேப்லெட்டன் நகரில் நேரிட்ட பயங்கர சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கிச்சனர் நகருக்கு வடக்கே உள்ள கோனெஸ்டோகோ ஏரிக்கு அருகில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஒரு எஸ்.யூ.வி ரக காரும், ஒரு வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 
விபத்துக்குள்ளான வேனில் 10 பேரும், எஸ்.யூ.வி காரில் ஒருவரும் இருந்துள்ளனர். வேனில் இருந்தவர்களில் 4, 6, 8, 10 மற்றும் 12 வயதுடைய ஐந்து சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
இதில் படுகாயமடைந்த நான்கு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 13 ஜூன், 2026

காணாமல் போன சிறுவன் யாழில் கிணற்றில் சடலமாக மீட்பு

நாட்டில்  பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில்  காணாமல் போயிருந்த 6 வயது சிறுவன், வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக 
மீட்கப்பட்டுள்ளார்.
புலோலி தெற்குப் பகுதியைச் சேர்ந்த இந்தச் சிறுவன்-12-06-2026- நேற்று இரவு திடீரென காணாமல் போயுள்ளார். சிறுவன் காணாமல் போனது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்தத் தீவிரத் தேடுதலின் பலனாக, இன்று வீட்டின் அருகில் இருந்த கிணறு ஒன்றில் இருந்து சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் மரணத்திற்கான காரணம் குறித்து 
பருத்தித்துறை பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது  

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 12 ஜூன், 2026

ஏற்பட்ட கார் விபத்தில் கனடாவில் இளைஞர் உட்பட இருவர் மரணம்

. கனடாவின் கியூபெக் மாகாணத்தில், போலீஸார் துரத்திச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்ததில் காரில் இருந்த இருவர் உயிரிழந்தனர். அந்த காரின் உரிமையாளர் நன்னடத்தை
 உத்தரவை
 மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதால் போலீஸார் அந்த காரை மறித்து நிறுத்த முயன்றனர். ஆனால், காரை ஓட்டிச் சென்றவர் பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க அதிவேகமாக காரைச்
 செலுத்தியுள்ளார். 
பொலிஸார் காரைத் துரத்தத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மாண்ட்ரியல் நகருக்கு மேற்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோட்டோ-டு-லாக் பகுதி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்த டெலிஸ்லே ஆற்றுக்குள் விழுந்துள்ளது. தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் 
ஆற்றில் மூழ்கிய
 காரில் இருந்து கடுமையான காயங்களுடன் இருவரை மீட்டனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். காவல்துறை தகவலின்படி, காரை ஓட்டியவர் 18 வயது இளைஞர் என்றும், அவருடன் பயணித்த மற்றொரு நபரின் வயது மற்றும் விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது  

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

வியாழன், 11 ஜூன், 2026

நாட்டில் மீனவர்களை கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

யாழ் காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கனமழை, பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்த 'சிவப்பு எச்சரிக்கை'விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள இந்த அவசர எச்சரிக்கை அறிவித்தல், நாளை (12) காலை 10.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய கடல் வலயங்கள் உள்ளிட்ட பல கடலோரப் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், 2.5 மீற்றர் உயரம் வரை அலைகள் எழும்பி கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும்
 எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, கடற்சார் நடவடிக்கைகளின் போது கடற்படையினரும் கடற்றொழிலாளர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
  என்பதும்  குறிப்பிடத்தக்கது  

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 10 ஜூன், 2026

நாட்டில் வயிற்றுக்குள் மறைத்து வைத்து ஐஸ் போதைப்பொருள் கடத்தல் சாரதி மரணம்

நாட்டில்  வயிற்றுக்குள் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்த முயன்ற சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 
தங்காலை - மாகும்புர வீதியில் பயணிக்கும் சொகுசு பேருந்தை இயக்கும் 55 வயதுடைய சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது. 
குறித்த சாரதி தனது இலக்கை அடைந்ததும் திடீரென சுகவீனம் அடைந்துள்ளார். இதனைத் தொடரந்து தங்காலை மருத்துவமனையில்
 அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்டப்ட சிறிது நேரத்திலேய அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 
பிரேத பரிசோதனையில் அவரின் வயிற்றில் இருந்து இரண்டு போதைப்பொருள் பக்கெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு பக்கெட்  வயிற்றினுள்ளே வெடித்து விஷமாகியுள்ளதாக 
குறிப்பிடப்படுகிறது. 
இதன்காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 9 ஜூன், 2026

நாட்டில் கிளிநொச்சியில் சோகம்: மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

நாட்டில் புன்னைநீராவி - நாதன் குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் (Lathe Workshop) இன்று காலை வழக்கம் போல் சிவகுருநாதன் சாரங்கன் (வயது 23) பணிகளில் 
ஈடுபட்டிருந்தார். 
அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள இயந்திரம் ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அவர் மீது பலத்த மின்சாரம் பாய்ந்துள்ளது. மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே
 அவர் மயங்கி
 விழுந்ததை அடுத்து, அங்கிருந்த ஏனைய தொழிலாளர்கள் உடனடியாக
 அவரை மீட்டு தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இளைஞனின் சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடைச்சல் தொழிலகத்தில் முறையான மின் பாதுகாப்பு வழிமுறைகள் (Safety measures) பின்பற்றப்பட்டதா அல்லது மின் இணைப்புகளில் ஏதேனும் அலட்சியப்போக்குக் காணப்பட்டதா என்பது தொடர்பிலும், மரணத்திற்கான துல்லியமான காரணம் குறித்தும் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html