siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

மரண அறிவித்தல் அமரர் கந்தசாமி தங்கமுத்து (பரிமளம்)31.08.2023

துயர் பகிர்வு-மறைவு-31.08..2023
.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. 
 அமரர் கந்தசாமி தங்கமுத்து (பரிமளம்) அவர்கள் 31-08-2023.வியாழக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்
அன்னார். காலஞ்சென்ற கந்தசாமியின் அன்பு மனைவியும்  கிளி அஞ்சனா 
ரன்சன் உதயன் ரவி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவர் 
அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2023 வெள்ளிக்கிழமை   அன்று 10:00 மு.ப -12:30 பி.ப.மணி  வரை  அவரது  இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம்  01-09-2023..வெள்ளிக்கிழமை அன்று
 நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!

புதன், 30 ஆகஸ்ட், 2023

நீல நண்டுகல் இத்தாலியை நடுங்க வைதுள்ளன

இத்தாலியில் மட்டி மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை நீல நண்டு வேட்டையாடுவதாக தகவல். இதன் காரணமாக நத்தைகள் 
மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக இத்தாலியர்கள் வேதனை.
நீல நண்டு இனத்தை அழிப்பதற்கு இத்தாலி அரசு ரூ 26 கோடி செலவில் அவசர பட்ஜெட் ஒன்றை ஒதுக்கியுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

நாட்டில் மகளை கேலி செய்த இளைஞனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை

இளைஞர் ஒருவர் தனது மகளை கேலி செய்ததால் ஆத்திரமடைந்த தந்தை, குறித்த இளைஞரை மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிராண்ட்பாஸ் , நவகம்புர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பரமானந்தன் தினேசன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
28-08-2023.அன்று  குறித்த இளைஞனை கொலை செய்த நபர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரைக் கொல்லப் பயன்படுத்திய கூரிய கத்தி மற்றும் அவர் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த நண்பரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 28 ஆகஸ்ட், 2023

மரண அறிவித்தல் திருமதி பரலோகநாதன் சிவராணி (ராணி)27.08.2023

துயர் பகிர்வு-மறைவு-23.08..2023 
யாழ் கொழும்புத்துறை சுண்டுக்குளிய பிறப்பிடமாகவும் தோப்பு அச்சுவேலியை வாழ்விடமாகவும் கனடா ரொறன்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட 
திருமதி பரலோகநாதன் சிவராணி  (ராணி)அவர்கள் 27.08.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபாதம் அடைந்தார் அன்னார் சிற்றம்பலம் அன்னம் தம்பதியின் பாச மகளும் 
காலஞ்சென்ற திரு திருமதி சின்னத்துரை கமலம் தம்பதியினரின் அன்பு  மருமகளும் ஜேந்தி (இலங்கை )ஆனந்தி( சுவிஸ்)நகுலன்
 (இலங்கை) ஆகியோரின் மாமியாரும் குமார்   (இலங்கை) ரமணன்(சுவிஸ் )
ஆகியோரின் பெறாமகனும்  அன்சனா அர்ஜினண்  ஆகியோரின் பேரப்பிள்ளைகளும்
கஜேந்திகா லாவண்யா வின் அன்பு தாயாரும்  காலம் சென்ற புனிதவதி சிவசோதி சிவபிரகாசம் சிவபாலன் சிவன்ஞானம் மற்றும் சிவநாதன் ஆகியோரின் பாசமிகுசகோதரியும் 
காலம் சென்ற அனந்தராஜா அவர்களின் பாசமிகுசகோதரியும் (சகலலி) மற்றும் திருமதி  தனலக்சுமி (இலங்கை )  திருமதி ஜெயலக்சுமி (இலங்கை )
திரு  சத்திய நாதன் (கனடா ) திரு திருமதி நித்தி (கனடா )ஆகியோரின் மைத்துனியும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
 தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
• Tuesday 29, August 2023.5:00 PM - 9:00 PM
• Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
ஈமைக்கிரியை
• Wednesday 30, 2023.1:00 PM - 3:00 PM
• Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

நாட்டில் முட்டை இறக்குமதி மூலம் சந்தையில் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும்

இலங்கையில் முட்டை இறக்குமதி மூலம் சந்தையில் முட்டை தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார். 
 அடுத்த மூன்று மாதங்களுக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு ஏற்கனவே அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதன்படி முட்டை இறக்குமதி தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



சனி, 26 ஆகஸ்ட், 2023

இந்தியரை கனடாவில் கத்தியால் குத்தித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

கனடாவில் இந்தியர் ஒருவர் தனது பேத்தியுடன் நடக்கச் சென்றபோது 17 முறை ஒரு விஷமியால் கத்தியால் குத்தி தாக்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு வாழும் இந்தியர்களும் அப்பகுதி மக்களுக்கும் கொந்தளிப்பை 
ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் கிரேட்டர் ரொரன்றோ ஏரியாவில் வாழ்ந்துவந்த தனது மகன் குடும்பத்தைக் காண்பதற்காக இந்தியாவிலிருந்து வந்துள்ளார் திலீப் குமார் ( Dilip Kumar Dholani, 66). அஹமதாபாதைச் சேர்ந்த திலீப் குமார், 
தன் மகனுடைய குழந்தையான தனது ஒன்றரை வயது பேத்தியுடன் வாக்கிங் செல்வது வழக்கம்.
 அப்படி கடந்த செவ்வாய்க்கிழமையன்று காலை தன் பேத்தியுடன் செல்லும்போது, திடீரென, Noah Denyer (20) என்பவர் திலீப் குமாரைத் தாக்கத் துவங்கியுள்ளார். உதவி, உதவி என சத்தமிட்ட திலீப் குமார், 
அந்த நிலையிலும் தன் பேத்தியை விடாமல் பிடித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
 சத்தம் கேட்டு திலீப் குமாரின் மருமகளான டிம்பிளும் அந்த 
பகுதி மக்களும் ஓடி வர, தாக்குதல்தாரி தப்பியோடியுள்ளார்.
 முகம், கழுத்து, மார்பு என 17 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு திலீப் குமார் இரத்த வெள்ளத்தில் கிடக்க, தங்கள் சட்டைகளைக் கழற்றி இரத்தத்தை நிறுத்த முயன்றுள்ளார்கள் அப்பகுதி மக்கள்.
 தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திலீப் குமாருக்கு நான்கு மணி நேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது நிலைமை இன்னமும் கவலைக்கிடமாகத்தான் உள்ளது.
 தங்கள் பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடத்துள்ளதால், அந்த பகுதியில் வாழும் இந்தியர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் கொந்தளித்துப்போயுள்ளார்கள். விடயம் என்னவென்றால், திலீப் குமாரைக் கத்தியால் குத்திய Noahவுக்கு ஜாமீன் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளதால், திலீப் குமார் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளார்கள். 
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

பெர்ன் இரயில் நிலையத்தில் இரு பெண்கள் மோதிக்கொண்டுள்ளனர்

சுவிஸ் பெர்ன் ரயில் நிலையத்தில் 24-08-2023. வியாழக்கிழமை.அன்று பிற்பகல் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. "ஒரு பெண் ஒரு
 இளம் பெண்ணை கத்தியால் தாக்கினார்," என்று நேரில் பார்த்த ஒருவர் ஊடகத்தற்கு கூறினார்.
 தலையிட விரும்பிய ஒரு வயதான பெண்மணியும் தாக்குதலால் காயமடைந்தார். ரயில் நிலையத்தில் பணிபுரியும் வாசகரின் கூற்றுப்படி, சிறுமி  மற்றும் குற்றவாளி 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர். நிலைய மண்டபத்தில் உள்ள சந்திப்புப் புள்ளி நண்பகலில்
 முற்றுகையிடப்பட்டது. 
பெர்ன் மாநில காவல்துறையில் இருந்து சுமார் ஒரு டஜன் படைகள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் தளத்தில் இருந்தது. முதற்கட்ட கண்டுபிடிப்புகளின்படி, ஒரு  சிறுமி பெர்ன் ரயில் நிலையத்தில் சந்திப்பு இடத்தில் இருந்தபோது, திடீரென ஒரு பெண்ணால் கத்தியால் தாக்கப்பட்டு 
காயமடைந்தார்.
காயமடைந்த இளம் பெண்ணிற்கு உதவ ஒரு வயதான பெண்மணி விரைந்துள்ளார்.மாநில பொலீசார் வருவதற்கு முன்பு தாக்குபவர் ஒரு மூன்றாம் தரப்பினரால் கைப்பற்றப்பட்டார்.
 அந்த பெண்ணை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இளம் பெண்ணை ஆம்புலன்ஸ் குழுவினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் உதவிக்கு விரைந்து வந்த பெண்ணும் மருத்துவ சிகிச்சையை நாடினார்.
 தற்போதைய தகவலின்படி, தாக்கியவர் லேசான காயம் அடைந்துள்ளார். பெர்ன் ரயில் நிலையத்தில் உள்ள சந்திப்பு இடம், தளத்தில் 
வேலை செய்யும் போது ஒரு பெரிய பகுதியில் சுற்றி 
வளைக்கப்பட்டது. 
கத்தி பாதுகாப்பாக வைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணைகளின்படி, இளம் பெண்ணும் தாக்கியவர்களும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை 
என்று கருதலாம். 
பெர்ன்-மிட்டல்லேண்டில் உள்ள பிராந்திய அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், பெர்னில் உள்ள கன்டோனல் பொலிசார் நிகழ்வுகள் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
 என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>> 



வியாழன், 24 ஆகஸ்ட், 2023

மரண அறிவித்தல்அமரர் கந்தசாமி சிவபரஞ்சோதி (பரஞ்சோதி)23.08.23

 

துயர் பகிர்வு-மறைவு-23.08..2023
.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. 
 அமரர் கந்தசாமி சிவபரஞ்சோதி (பரஞ்சோதி).அவர்கள்  23-08-2023..புதன்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்
 அன்னார். காலஞ்சென்ற கந்தசாமியின் அன்புமகனும் பரிமளம் அவர்களின்  அன்பு மகனும் திராவியம்
அவர்களின்  அன்புக் கணவரும்   கிளி அஞ்சனா 
ரன்சன் உதயன் ரவி ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவர்   அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2023 புதன்கிழமை  அன்று 10:00 மு.ப -12:30 பி.ப.மணி  வரை  அவரது  இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம்  23-08-2023.. புதன்கிழமை அன்று
 நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!

புதன், 23 ஆகஸ்ட், 2023

தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க தேளி மீன்கள் ராமநாதபுரத்தில் பறிமுதல்

ராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட ஆயிரத்து 300 கிலோ ஆப்பிரிக்கன் தேலி மீன் பறிமுதல் செய்யப்பட்டது.
பட்டினம்காத்தான் ஈசிஆர் சாலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது அங்கிருந்த மீன் வண்டியில் இந்த மீன் 
இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில் பரமக்குடியில் இருந்து உச்சிப்புளிக்கு உணவுக்காக கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து இந்த மீனை பட்டினம்காத்தான் மேம்பாலம் அருகே குழி தோண்டி புதைத்து அழித்தனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

கிளிநொச்சி வீதி விபத்தில் ஜீவரஙஞ்சினி ( ஜீவா ரீச்சர்) மரணம் 21.08.23

கிளிநொச்சியில் 20-08-2012.அன்றிரவு வீதி விபத்தில் சிக்கிய ஆசிரியை இன்றுயாழ் போதனா வைத்தியசாலையில்   சிகிச்சை பெற்று வந்த நிலையில் .மரணமானார் 
கிளிநொச்சி  இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின்  உப அதிபரும், பிரபலதமிழ் ஆசிரியருமான ஜீவரஙஞ்சினி ( ஜீவா ரீச்சர்) சனிக் கிழமை இரவுகிளிநொச்சியிலிருந்து  கணவருடன் உந்துருளியில் வட்டக்கச்சி நோக்கிபயணிப்பதற்காக கிளிநொச்சி நகர் ஏ9 வீதியில் காக்கா கடைச் சந்தியில்வட்டக்கச்சிக்கு திரும்பும் போதும்  எதிர்பக்கம் வந்த காருடன் மோதியதில் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக
சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  உயிரிழந்துள்ளார்.இவர் 
வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் அதிபர் பங்கையற்ச்செல்வனின் சகோதரியோ இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
 இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
. எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
.தகவல்:குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 21 ஆகஸ்ட், 2023

தீடிரென இலங்கையில் இருளில் மூழ்கிய பல முக்கிய பகுதிகள்

இலங்கை முழுவதும் சுமார் 5 ஆயிரம் நுகர்வோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாதாந்த மின்சாரக் கட்டணத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்தாததால் காரணமாகவே இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலோர் மின்சார விநியோகத்தை சீரமைக்க விண்ணப்பித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
அதற்கமைய 10% மின்சார இணைப்புகளை மீண்டும் பெறாமல் மக்கள் இருளில் உள்ளனர் என்றும் இலங்கை மின்சாரசபை வட்டாரங்கள்
 தெரிவித்துள்ளன.
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கொழும்பு மற்றும் கம்பஹாவில் நிலுவைத்தொகை செலுத்தப்படாத மின்சாரக் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளதாக இலங்கை மின்சாரசபை 
தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்கட்டணம் செலுத்தாத நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் மின்தடை செய்ய வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

மனைவி மற்றும் மகனை கொன்று அமெரிக்காவில் தற்கொலை செய்து கொண்ட இந்தியர்

அமெரிக்காவின் மத்திய அட்லாண்டிக் பகுதியில் உள்ள மாநிலம் மேரிலேண்ட் (Maryland). இங்குள்ள பால்டிமோர் (Baltimore) நகரத்தில் வசித்து 
வந்த இந்தியர், கர்நாடகாவின் தாவண்கரே மாவட்டத்தை 
சேர்ந்த யோகேஷ் (37). இவரது மனைவி பிரதீபா (35). இவர்களது
 ஒரே மகன் யாஷ் (6).
கணவன், மனைவி இருவரும் பொறியாளர்கள். இவர்கள் பால்டிமோரில் கடந்த 9 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். யோகேஷின் தந்தை பல வருடங்களுக்கு முன் காலமாகிவிட்டதால், அவரின் தாய் மட்டும் தனியாக தாவண்கரேயில் வசித்து வருகிறார். 
அமெரிக்காவில் நடைபெறும் வழக்கமான ஒரு ரோந்து ஆய்வில் நேற்று முன்தினம் இவர்கள் வீட்டிற்கு காவல்துறையினர் 
சென்றனர். அப்போது அவர்கள் மூவரும் உயிரிழந்து கிடந்தது 
தெரியவந்தது. 
அவர்கள் மூவர் உடலிலும் துப்பாக்குச் குண்டு பாய்ந்ததற்கான அடையாளங்கள் இருந்தது. முதல் கட்ட விசாரணையில் யோகேஷ், தனது மனைவி மற்றும் மகனை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 
இந்தியாவில் உள்ள அவரது தாயாருக்கும், உறவினர்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். 
இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் 
செய்வதாக கூறியுள்ள பால்டிமோர் காவல்துறை, இந்த சம்பவத்தை இரட்டை கொலை மற்றும் தற்கொலை வழக்காக தீவிரமாக 
விசாரித்து வருகிறது. 
 யோகேஷ் இப்படிப்பட்ட முடிவை ஏன் எடுத்தார் என்பதற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.எனவும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 19 ஆகஸ்ட், 2023

சுவிசில் இருந்து பிரான்சுக்கு சுற்றுலா சென்ற இரு பெண்கள் விபத்தில் சாவு

சுவிசில் இருந்து பிரான்சுக்கு சுற்றுலா சென்ற இரு பெண்கள் வீதி விபத்தொன்றில் பலியாகியுள்ளனர். பிரான்சின் தென்மேற்கு நகரமான Sainte-Hélène (Gironde) இல் இச்சம்பவம் .14-08-2023.திங்கட்கிழமை அன்று  மாலை 
இடம்பெற்றுள்ளது.
 சுவிட்சர்லாந்தில் பிரான்சுக்கு சுற்றுலா சென்ற   21 வயதுடைய இரு இளம் பெண்கள், ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்த நிலையில், வீதியில் பயணித்த மற்றொரு ஸ்கூட்டருடன் மோதியுள்ளது.
 D6 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற இவ்விபத்தில், குறித்த இரு பெண்களும் பலியாகியுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய ஸ்கூட்டரில் பயணித்த நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ள நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 
அவர் மது போதையில் ஸ்கூட்டரைச் செலுத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>


வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

உயர் மின்னழுத்த பகுதிகளில் ஹம்பாந்தோட்டை மக்கள் பட்டம் பறக்கவிட தடை

ஹம்பாந்தோட்டை – நியூ பொல்பிட்டிய 220KV உயர் மின்னழுத்த மின் கம்பி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மக்கள் பட்டம் பறக்கவிடுவதை தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபை.18-08-w2023. இன்றுஅறிவித்தல் 
விடுத்துள்ளது.
 பட்டம் பறக்கவிடுவதனால் அடிக்கடி மின்கம்பிகளில் சிக்கி மின்கம்பிகள் அமைப்பதில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



வியாழன், 17 ஆகஸ்ட், 2023

ஆசிய நாடான மலேசிய நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்

ஆசிய நாடான மலேசியாவின் மேற்கு கரையோரம் உள்ள மாநிலம்
 செலங்கோ ரில் .17-08-2023.இன்று மலேசியாவின் லங்காவி பகுதியிலிருந்து 6 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்களுடன் செலங்கோரிலுள்ள சுபங்க் விமான நிலையம் நோக்கி ஜெட் வேலட் எனும் தனியார்
 ஜெட் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் பறந்து கொண்டிருந்தது.
இவ்விமானத்திற்கு மதியம் 02:48 மணியளவில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. மதியம் சுமார் 02:10 மணியளவில் தரையிறங்கும் சற்று நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்தின் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்பை இழந்தது. 
கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஷா ஆலம் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியது. இவ்விபத்தில், விமானம் நெடுஞ்சாலையில்
 அந்த பக்கமாக சென்று கொண்டிருந்த ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் பைக் மீது விழுந்து நொறுங்கியது. இதில் அதில் பயணித்த இருவர் 
உயிரிழந்தனர். இதோடு விமானத்தில் பயணம் செய்த எட்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சமூக வலைதளங்களில் இவ்விபத்து குறித்து வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படங்களிலில் ஷா ஆலம் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் தீயுடன் புகை வந்து கொண்டிருப்பதும், விமானத்தின் 
பாகங்களும் தெரிகிறது. சாலையில் விழுந்த விமானம் உடனடியாக வெடித்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 விமானத்தில் உயிரிழந்த பயணிகளில் ஜொஹாரி
 ஹாருண் எனும் அந்நாட்டின் அரசியல்வாதியும் 
ஒருவர். விபத்து 
குறித்து வருத்தம் தெரிவித்திருக்கும் பல முக்கிய பிரமுகர்களும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 16 ஆகஸ்ட், 2023

நாட்டில் வறட்சியால் அழிந்த 37,000 ஏக்கர் நெற்பயிர்கள்: குருநாகலுக்கு அதிக சேதம்


நாட்டில் தற்போதைய வரட்சி காரணமாக முப்பத்தேழாயிரம் ஏக்கருக்கும் அதிகமான (37,101) நெற்செய்கைகள் சேதமடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
 பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 32,967. குருநாகல் மாவட்டத்தில் அதிகளவில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
 வறட்சியால் 19,388 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, நெல் சேதங்களை மதிப்பிடுவதற்கு 25 மதிப்பீட்டுக் குழுக்களை நியமித்துள்ளார்.
 தீவு முழுவதையும் உள்ளடக்கிய பயிர் சேதங்களை மதிப்பிடும் பணியிலும் குழு ஈடுபட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிடுகிறது. வேளாண்மை மற்றும் விவசாயிகள் காப்பீட்டு வாரியத் தலைவர் டபிள்யூ. எம். பி. வீரசேகர அவர்களின் தலைமையில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 பயிர் சேதம் தொடர்பாக அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாய அமைச்சர் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அதன்படி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

விபத்தில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பிரதான பாதுகாப்பு உத்தியோகத்தர் பலி

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பிரதான பாதுகாப்பு உத்தியோகத்தர் துரதிஷ்டவசமாக விபத்தில் உயிரிழந்துள்ளார். 
 54 வயதான திரு.உபுல் செனரத் அவர்கள் 
உயிரிழந்துள்ளார். 
 தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள கால்நடை வைத்தியசாலைக்கு அருகில் இன்று பிற்பகல் இந்த விபத்து 
இடம்பெற்றுள்ளது. 
 கால்நடை மருத்துவமனை முன்பு இருந்த பெரிய மரம் முறிந்து 
மின்கம்பத்தில் மோதியது.
 சம்பவத்தின் போது, ​​மதிய உணவை எடுத்துச் சென்ற பிரதான பாதுகாப்பு அதிகாரி மீது இந்த மின்கம்பம் விழுந்ததாக தகவல்
 வெளியாகியுள்ளது. 
 விபத்தில் படுகாயமடைந்த பாதுகாப்பு அதிகாரி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>


திங்கள், 14 ஆகஸ்ட், 2023

யாழ் கோப்பாய் சமுர்த்திவங்கி முகாமையாளரை டிப்பர்வாகனம் மோதிப் படுகாயம்

யாழ் கோப்பாய் சந்தியில் வீதி சமிக்ஜை விளக்கு ஒளிர்ந்த பின்னும் கட்டுப்பாட்டை மீறி பயணித்த டிப்பர் மோதி சமுர்த்தி 
முகாமையாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில்
 தற்போது யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் படுகாயம் அடைந்த பெண் கோப்பாய் சமுத்தி வங்கியின் முகாமையாளர் என தெரிவிக்கப்படுகின்றது குறித்த பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடியுள்ளதால் வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது,
என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

யாழ் கைதடி நுணாவில் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் பலி

யாழ் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி நுணாவில் பிரதேசத்தில் இடம் பெற்ற விபத்தில் 19 வயதான பாடசாலை மாணவன்
 உயிரிழந்துள்ளார்.
 13-08-2023.இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் யாழ் இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் சாவகச்சேரியை சேர்ந்த 19 வயதான சிவபாலன் பிரவீன் என்ற மாணவனே 
உயிரிழந்துள்ளார்.
 மாட்டு வண்டி சவாரி போட்டிக்காக வண்டில் மற்றும் மாடுகளை ஏற்றிச்சென்ற கனரக லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
 உயிரிழந்தவரின் சடலம் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 12 ஆகஸ்ட், 2023

நாட்டில் சிப்பிக்குளம் தம்மன்னாவ வாவியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு

மிஹிந்தலை – சிப்பிக்குளம் தம்மன்னாவ வாவியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மூவர், நேற்று மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கஹட்டகஸ்திகிலிய – தம்புருவ 
பகுதிகளை சேர்ந்த 43 முதல் 45 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடிப்பதற்காக வாவிக்கு 10 பேர் சென்றிருந்த நிலையில், மூவர் 
மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் இரண்டு இராணுவ வீரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

துருக்கியில், உள்ள விமான நிலையம் ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து

துருக்கியில், உள்ள விமான நிலையம் ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இடம்பெற்ற போது பஸ்ஸில் 39 இலங்கையர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது துருக்கியில் உள்ள இஸ்தான்புல் விமான 
நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் 
வெளியாகியுள்ளது.
மேலும், பணிப் பருவத்தை முடித்துக் கொண்டு குறித்த இலங்கையர் குழு, பஸ் ஒன்றில் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, ​​இயூப்சுல்தான் பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.சுரங்கப்பாதையில் பயணித்த பஸ் சாரதியின் கட்டுப்பாட்டின் கீழ் கிலிஹி பிரதான வீதியில் இருந்து 
திடீரென குதித்து சுமார் 6 மீற்றர் பாறையில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக அப்போது துருக்கி சாரதியுடன் 40 இலங்கையர்கள் பஸ்ஸில் இருந்ததாகவும் அவர்களில் 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, விபத்தில் காயமடைந்த இலங்கையர்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக துருக்கியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பிரதிநிதி ஒருவரை இஸ்தான்புல் நகருக்கு அனுப்பவுள்ளதாக துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த இயூப்சுல்தான் தான் மாவட்ட ஆளுநர் இஹாசன் காரா,
“பேருந்து விபத்துக்குள்ளாகும் போது அதில் 40 பேர் இருந்தனர்.இருப்பினும், கடவுளுக்கு நன்றி, அவர்களில் யாருக்கும் பெரிய
 ஆபத்து இல்லை, உயிர்ச்சேதம் இல்லை, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.
விபத்தில் 27 காயமடைந்துள்ளதாகவும், தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 10 ஆகஸ்ட், 2023

இந்தியாவில் கட்டாக்காலி மாடு முட்டியதில் மயிரிழையில் உயிர் தப்பிய குழந்தை

 கட்டாக்காலி மாடு முட்டியதில் சிறுமி ஒருவர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், சிறுமி மருத்துவமனையில் அனுமதிகபப்ட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ஜாஃபர் சித்திக் மற்றும் ஹஸ்ரின் பானு.
இவரது மூத்த மகள் ஆயிஷா (9) எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இன்று வழக்கம் போல பள்ளியை விட்டு தாய் ஹஸ்ரின் பானு அவரது இரு மகள்களையும் வீட்டிற்கு 
அழைத்து சென்றுள்ளார்.விடாது சிறுமியை  முட்டிய மாடுகள்
அப்போது தெரு வழியாக நடந்து சென்ற போது அவ்வழியாக சென்ற மாடுகள் திடீரென சிறுமியை கொம்பால் குத்தி 
தூக்கி வீசியது.
பின்னர் கீழே விழுந்த சிறுமியை மாடு விடாமல் குத்திய நிலையில் அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு கற்களை மாடு மீது வீசி சிறுமியை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
எனினும் மாடு சிறுமியை குத்தி தூக்கிய நிலையில் இருந்த போது பிரம்பால் மாட்டை அடித்து துரத்தி குழந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று உள்ளனர்.
மாடு முட்டியதில் குழந்தைக்கு பல் மற்றும் கண்ணில் அடிபட்டுள்ளதால் அதற்கும் சிகிச்சை பார்க்க உள்ளதாகவும் , குழந்தையின் தலையில் நான்கு தையல்கள் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தாயுடன் வந்த குழந்தையை மாடு முட்டிய காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் கடும் விமர்சனங்கள் முன்வைப்பட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 9 ஆகஸ்ட், 2023

மொரட்டுவ பிரதேசத்தில் இந்த வருடத்தில் அதிகளவான தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளன

 
 நாட்டில்  இந்த வருடத்தில் அதிகளவான தொழுநோயாளர்கள் கொழும்பு – மொரட்டுவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விபரங்களை சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ளது.09-08-2023-.இன்றையதினம் இடம்பெற்ற 
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய வைத்தியசாலையின் மத்திய தொழுநோய் சிகிச்சை நிலையத்தின் பிரதம வைத்திய அதிகாரி சனத் தீபக்க இது குறித்து விபரித்துள்ளார்.
இதேவேளை, இந்த  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி மஞ்சுளா திலகரத்ன 
குறிப்பிடுகையில்,
மொரட்டுவை பிரதேச செயலகப் பிரிவில் வருடாந்தம் சுமார் 120 தொழுநோயாளர்கள் பதிவாகின்றனர். இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் மொரட்டுவையில் 51 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், அவர்களில் 14 வயதுக்குட்பட்ட 8 சிறுவர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

அதிக வெப்பநிலை காரணமாக பிரான்ஸில் காட்டுத்தீ அபாயம்

தொடர்ச்சியான வெப்ப நிலை அதிகரிப்பால் காட்டுத்தீ ஏற்பட்டுப் பரவும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
 மார்செய் நகரத்தை உள்ளடக்கிய Bouches-du-Rhône மாவட்டம் கடுமையான காட்டுத் தீ ஆபத்தினால் சிவப்பு எச்சரிக்கைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து Var மற்றும் Vaucluse பகுதிகள் செஞ்சிவப்பு 
எச்சரிக்கைக்குள் கொண்டு வரப்பட்டதுடன் மேலும் நான்கு மாவட்டங்களிற்கும் இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 கடந்த வாரத்திலிருந்தே கோர்ஸ் தீவகம் மற்றும் மத்தியதரைக் கடற்பகுதி நகரங்களிற்கும் கடுமையான காட்டுத் தீ எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது. Bouches-du-Rhône பகுதியின் 25 மலைப்பகுதிகள் மற்றும் காட்டுப்பகுதிகள், மாவட்ட ஆணையங்களால் மக்களின் நடமாடத்திற்குத் தடை செய்யப்பட்டுள்ளன. என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 7 ஆகஸ்ட், 2023

செட்டிப்பாளயத்தில் மூன்று வயது குழந்தையுடன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்;

கோயம்புத்தூர் செட்டிப்பாளயத்தில் குடும்ப தகராறு காரணமாக மூன்று வயது குழந்தையுடன் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை செய்வதாக மிரட்டிய போதை இளைஞரை சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் 
போலீசார் மீட்டனர்.
கூலித்தொழிலாளியான செல்வம் என்பவரின் மனைவி காளீஸ்வரி கடந்தவாரம் அவரிடம் சண்டையிட்டு இரண்டு குழந்தைகளுடன் 
தாய் வீட்டிற்கு சென்றதையடுத்து, அங்கு சென்ற 
செல்வம் மகனை தூக்கிக் கொண்டு கோபுரத்தின் மீது ஏறி பிரச்சனை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>