siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 10 டிசம்பர், 2015

மணப்பெண்ணிற்கு வழக்கமாகஅம்மாஅறிவுரை கூறுவார் மாறாக தந்தை???

திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒரு தந்தையின் அறிவுரை :
வழக்கமாக மணப்பெண்ணிற்கு அம்மா மட்டும்
தானே அறிவுரை கூறுவார்கள், பின்
ஏன் புதிதாய் உன் அப்பா உனக்கு அறிவுரை கூறுகிறேன்
என்று உனக்கு வியப்பாக இருக்கிறதா?
செல்லமே!
அப்பாவும் மனம் திறந்து உன்னிடம் சில விஷயங்களை கூற விரும்புகிறேன், உன் எதிர்கால மணவாழ்க்கையில்
ஏதோ ஒரு தருணத்தில் உபயோகமாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்..
1.என் அப்பாவின் நேர்மை, என் அப்பாவின் திறம்பட முடிவெடுக்கும் திறன், என் அப்பா...என அடுக்கடுக்காக நீ உன் அப்பாவிற்கு சூட்டும் கிரிடம் , என்
அப்பாதான் 'பெஸ்ட்' என்ற எண்ணமும் உன்
மனதின் ஆழத்தில் மட்டுமே வைத்துக்கொள். வார்த்தைகளில் வெளிப்படுத்தி 'உன்னவரின்' மனதில்
எரிச்சலை உண்டு பண்ண வேண்டிய அவசியம் இல்லை
.உன் கணவரிடம், "என் அப்பா நேரம் தவற மாட்டார்"," என் அப்பா அதிகாலையில் உடற்பயிற்சி செய்வார்" என்று அப்பா புராணம் பாடாதே கண்ணம்மா....
உன் அப்பாவும் ஒரு காலத்தில் காலை 8 மணி வரை தூங்கிய சோம்பேரி தான்.
2. உன் பிடிவாதங்களை எல்லாம் கோபத்துடன் கையாளாமல் அப்பா பொறுத்துக்கொண்டது போல், உன்
கணவரும் சகித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்காதே. என்
வயதிற்கே உரிய பொறுமை மற்றும் உன் மீதான கண்மூடித்தனமான பாசமும் என் கோபங்களை கண் மறைத்திருக்கலாம்.
அவரும் உன் பிடிவாதங்களுக்கு பின்னிருக்கும் குழந்தைதனத்தை புரிந்துக் கொள்ள அவகாசம் கொடு. முக்கியமாக உன் பிடிவாதங்களை தளர்த்தி,
அப்பாவிற்கு பெருமை சேர்க்கப்பார்.
3.சிறு சிறு வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடு உங்கள்
இருவருக்குள்ளும் வர தான் செய்யும்.அச்சமயங்களில் எல்லாம், "நான் என் அப்பா வீட்டிற்கு போகிறேன் ","
எனக்கு என் அப்பா இருக்கிறார் " என்ற வசனங்களை பேசி உன் மேல் அவருக்கு கசப்பு வர வைத்து விடாதே.உன் கணவர் தான் இனி உன் உலகம் என்பதை அவருக்கு புரிய வை. நீ அவருக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், மரியாதையும் அவர் மனதில் உன்னை சிம்மாசனம்
போட்டு உட்கார வைக்கும்.
சுருக்கமாக கூற வேண்டுமானால்....
*அப்பா புராணம் பாடாதே.
*அப்பாவோடு ஒப்பிடாதே .
*'அப்பா செல்லம் ' என்ற பட்டம் பயன் தராது .
*அப்பாக்கு கொடுத்த கிரிடத்தை அவருக்கும் கொடு.
22 வருடங்கள் உன் கரம் பிடித்து நான் கற்றுக்கொடுத்த நற்பண்புகளை,இனி மேல் உன் கணவரின் கரம்கோர்த்து வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்துக் காட்டுவதில் நிரூபித்துக் காட்டு.
நீடுடி வாழ வாழ்த்துகள்....!
அன்புடன் அப்பா.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 8 டிசம்பர், 2015

சிறுபோகத்தை நிறுத்துவதால் ,2,500 மில்லியன் நட்டம்!!!

அடுத்த வருட சிறுபோகத்தை நிறுத்துவதால், கிளிநொச்சி விவசாய சமூகத்துக்கு 2,500 மில்லியன் நட்டம் ஏற்படும்.
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்குப் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். எனினும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தாம் அதற்கு சம்மதிப்பதாகவும் வாழ்வாதரம் தொடர்பான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இரணைமடு விவசாயிகள் சம்மேளன செயலாளர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
அடுத்த வருடத்துக்கான சிறுபோக செய்கையை நிறுத்துவது தொடர்பான கூட்டம், மாவட்ட செயலக மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கருத்து தெரிவிக்கையில்,
இரணைமடு குளத்தின் புனரமைப்பு வேலைகளை விரைவாக நிறைவு செய்வதற்காகவே, அடுத்த வருட சிறுபோகத்தை நிறுத்தவேண்டியுள்ளது. அத்தோடு பயிர்ச்செய்கை நிறுத்தப்படுகின்ற போது, பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கவேண்டும்‘ என்று அவர் தெரிவித்தார்.
வாழ்வாதாரம் தொடர்பான மாற்று ஏற்பாடுகளைத் தமது திட்டத்தில் உள்ளடக்கியிருப்பதாக பிரதம நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.சுதாகரன் மேலும் தெரிவித்தார்.-
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



திங்கள், 7 டிசம்பர், 2015

பலத்த மழை மற்றும் குறைந்த விலை என்பதனால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி!

இலங்கையின் தேயிலை உற்பத்தி கடந்த மூன்று வருட கால வீழ்ச்சியை பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்ப்டடுள்ளது.
தேயிலை வர்த்தக அறிக்கை ஒன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை மற்றும் குறைந்த விலை என்பன இதற்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதம் ஐந்து சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்த மொத்த தேயிலை உற்பத்தி, 26.7 மில்லியன் கிலோவாக பதிவாகி
 இருந்தது.
ஜனவரியில் இருந்து ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 279.8 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டிருந்ததுடன், இது கடந்த வருடத்தைக் காட்டிலும் 1.4 சதவீத வீழ்ச்சியாகும்.
குறிப்பாக கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் மே மாதம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் அளவு மிகவும் குறைவாக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 3 டிசம்பர், 2015

இருவர்.குளாய் கிணற்றுக்குள் மூச்சுத் திணறிபலி!!!

யாழ் உடுப்பிட்டி பகுதியில் குளாய் கிணற்றுக்குள் ஏற்பட்ட பழுது பார்ப்பதற்கு இறங்கிய 2 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார்.
புலோலி பகுதியினைச் சேர்ந்த மகாநாயகம் (வயது 56), பருத்தித்துறையினைச் சேர்ந்த கிருஸ்னமூர்த்தி (வயது 61) ஆகிய இருவருமே
 இச் சம்பவத்தில்
 உயிரிளந்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேற்படிப் பகுதியில் உள்ள வீட்டில் இருந்த குளாய் கிணற்று மோட்டர் பழுது பட்டுள்ளது. இதனை
 திருத்துவதற்கு
 பாரிய பள்ளத்திற்குள் இறங்கி ஒருவர் முயசித்துள்ளார்.
திருத்த வேலைக்காக பள்ளத்திற்குள் இறங்கியவரை நீண்ட நேரமாக காணவில்லை என்ற காரணத்தினால் அவருடன் வந்த மற்றைய நபரும் அந்த பள்ளத்திற்குள் இறங்கியுள்ளார். ஆனால் இருவருமே வெளியில் 
வரவில்லை.
 பள்ளத்திற்குள் சடலமாகவே இனங்காணப்பட்டுள்ளார். இருவரும் பள்ளத்திற்குள் மூச்சு திணறி உயிரிளந்திருக்கலாம்
 என்று நம்பப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


ஞாயிறு, 29 நவம்பர், 2015

ஆள் கடலில் மூழ்கி இளைஞன் மரணம்

தொண்டமானாறு அக்கரை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வல்வெட்டித்துறை, இமையானன் பகுதியைச் சேர்ந்த சுதாகரன் சங்கீத்தன் (வயது 18) என்ற இளைஞன் நீரில் மூழ்கி 
உயிரிழந்துள்ளான்.

நேற்று வெள்ளிக்கிழமை கடலுக்கு குளிக்க சென்றிருந்த நிலையிலே குறித்த இளைஞன் அலையில் அடித்து 
செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை (28) சடலத்தை மீட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் 
ஒப்படைக்கப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 25 நவம்பர், 2015

எசமான் ஒருவரை அவரது நாய் 'சுட்டதால்' காயம்அடைந்துள்ளார் !

வேட்டைக்கு சென்ற ஒருவர் அவரது நாயால் 'சுட்டு' காயப்படுத்தப்பட்ட விநோத சம்பவம் பிரான்சில்
 நடந்திருக்கிறது.
தென்மேற்கு பிரான்ஸ் பகுதியில் வேட்டையாடிக்கொண்டிருந்த ஒருவரை அவரது நாய் 'சுட்டு' காயப்படுத்திவிட்டது.
பிரான்ஸின் மெஸ்ப்ளீட் என்ற நகருக்கருகே, அவர் தன்னுடைய வேட்டைத் துப்பாக்கியை ஒரு மரத்தின் மீது சாய்த்து வைத்துவிட்டு, தான் சுட்டு வீழ்த்திய பறவை ஒன்றை எடுக்கச் சென்றிருக்கிறார். அப்போது அவருடைய நாய் அந்தத் துப்பாக்கியை தள்ளிவிட்டிருக்கிறது
 போலத்தெரிகிறது 
. விழுந்த துப்பாக்கி மீது ஏறி அந்த நாய் நடந்த போது அந்த துப்பாக்கியை தற்செயலாக வெடிக்கச் செய்திருக்கிரது.
ஓய்வூதியம் வாங்கும் இந்த நபர் கையில் துப்பாக்கிக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டார். பிரான்சில் கடந்த ஆண்டு மட்டும் வேட்டை ஆடும்போது ஏற்பட்ட விபத்துக்களில் 16 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் பெரும்பாலோர் விலங்குகள் என்று தவறுதலாகக் கருதப்பட்டு 
சுடப்பட்டவர்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 23 நவம்பர், 2015

இறக்கும் குழந்தைகளுக்கு உடனே பிறப்பு பதிவு கட்டாயம்?

பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளின் பிறப்புகளை பதிவு செய்வதை கட்டாயம் என அறிவித்து சுகாதார அமைச்சு அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளுக்கு சுற்றறிக்கை 
அனுப்பியுள்ளது.
பிறந்த குழந்தை இறந்தால், அது குறித்து உடனடியாக பிரதேசத்தில் உள்ள பதிவாளர் அல்லது உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அமைச்சு வைத்தியசாலைகளுக்கு ஆலோசனை 
வழங்கியுள்ளது.
பிறக்கும் குழந்தை இறப்புகள் குறித்து இதுவரை சில பிரதேசங்களில் மாத்திரமே பதிவு செய்யப்பட்டு வந்துள்ளது.
கடந்த வருடத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
 பிறந்த 402 குழந்தைகள் இறந்துள்ளதாக மகபேறு வைத்திய நிபுணரும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட ஆலோசகருமான கே.ஈ.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இந்த சிசு மரணங்களில் 201 மரணங்கள் மகபேறு அறையில் நிகழ்ந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 


ஞாயிறு, 22 நவம்பர், 2015

பெண் ஒருவர்க்கு முகமாற்று அறுவை சிகிச்சைசாதனை?

அகோர முகம் படைத்த போலந்து பெண் ஒருவருக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செய்து அழகிய முகமாக மாற்றி மருத்துவர்கள் பெரிய சாதனை புரிந்துள்ளனர்.
போலந்து நாட்டின் வாழும் 26 வயது பெண் Joanna என்பவர். இவருக்கு பிறவியிலேயே neurofibromatosis என்ற நோய் தாக்கியதால் அவருடைய முகம் நாள் ஆக ஆக அகோரமாக மாறிக்கொண்டே வந்தது. பிறரிடம் பேசுவதற்கும், சாப்பிடுவதற்கும் கூட மிகுந்த கஷ்டப்பட்டார். எனவே அவருடைய முகத்தை 80% மாற்றி வேறு முகத்தை பொருத்த மருத்துவர்கள்
 முடிவு செய்தனர்.
23 மணிநேரம் தொடர் அறுவை சிகிச்சை செய்து Joannaவின் முகத்தை அழகிய முகமாக மாற்றி மருத்துவர்கள் சாதனை புரிந்தார்கள். மீண்டும் அவருக்கு பழையபடி கோரமான நோய் தாக்காது என்று மருத்துவர்கள் உறுதியளித்துள்ளனர்.
முகமாற்று அறுவை சிகிச்சை முடிந்து நேற்று அழகிய முகத்துடன் வெளியே வந்த Joanna,தனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும், தனக்கு எல்லாவகையிலும் பக்கபலமாக இருந்த தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இங்கு அழுத்தவும் 3முக்கிய வழின் நிழல்படங்கள் இணைப்பு >>>



வெள்ளி, 20 நவம்பர், 2015

இரு இளைஞர்கள் தாடிவளர்த்ததால் பொலிசாரால் கைது?

யாழில் இரு இளைஞர்கள் தாடியுடன் வீதியில் நடந்து சென்றமையால் அவர்களை கைது செய்து மானிப்பாய் பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் மகன் மற்றும் மகனின் நண்பர் ஆகிய  இரு இளைஞர்களுமே அவ்வாறு கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு இலக்கானவர்கள் ஆவார்கள்.

இச் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவிக்கையில்,

நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் எனது மகன் உட்பட இரு இளைஞர்கள் மானிப்பாய் பகுதிக்கு தமது சொந்த அலுவல் காரணமாக சென்று இருந்தனர்.

நவாலி முருக மூர்த்தி ஆலயத்திற்கு அருகில் வைத்து அவர்கள் இருவரையும் மானிப்பாய் பொலிசார் கைது செய்து தமது வாகனத்தில் ஏற்றி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

அங்கு எனது மகனின் நண்பர் எதற்காக எம்மை கைது செய்தீர்கள் என்று கேட்டதற்கு  ஆறு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சேர்ந்து அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

பிளாஸ்ரிக் குழாய்க்குள் மண்ணினை இட்டு அதனால் தாக்கி யுள்ளனர் மாலை 5 மணிக்கு நான் அவரை  பொலிஸ் நிலையத்தில் பார்த்த போது அவரின் தலையில் பெரிய வீக்கம் இருந்தது. அந்தளவுக்கு பொலிசார் தலையில் கூட மிக மோசமாக தாக்கியுள்ளனர்.

அங்குள்ள அதிகாரியை கேட்டேன் எதற்காக இவர்களை கைது செய்துள்ளீர்கள் என, சந்தேகத்தின் பேரில் கைது செய்தோம். என்றார்.

யாழில் இளைஞர்கள் வீதியில் நடந்து சென்றால் பொலிசார் சந்தேகத்தின் பேரில் என கைது செய்ய முடியுமா ? அவசரகால சட்டம் இருக்கின்றதா ? என்ன அடிப்படையில் கைது செய்தீர்கள்  என கேட்டேன். அவர்கள் தாடி வளர்த்து இருக்கிறார்கள். அதனால் எமக்கு அவர்கள் மீது சந்தேகம் வந்தது என கூறினார்.

அவர்கள் கந்த சஷ்டி விரதம் இருந்தவர்கள் விரத காலத்தில் தலைமுடி வெட்டுவதோ  சேவ் எடுப்பதோ இல்லை என அவருக்கு விளங்க படுத்தினேன்.

நண்பகல் 12 மணிக்கு வீதியால் நடந்து சென்ற குற்றத்திற்காக இரு இளைஞர்களை பொலிசார் கைது செய்து தாக்கி உள்ளனர். அத்துடன் எந்த விதமான முறைப்பாடும் அவர்கள் மீது பொலிசார் எழுதவில்லை.மனித உரிமை மீறப்பட்டு உள்ளது.

நண்பகல்  12 மணிக்கு  கைது  செய்யப்பட்டவர்களை சுமார் எட்டு  மணித்தியாலங்கள் தடுத்து  வைத்து இருந்து இரவு எட்டு மணிக்கு தான் எனது மகனையும் அவரது நண்பரையும் பொலிசார் விடுவித்தனர் அதுவரை எந்தவிதமான முறைப்படும் எழுதவில்லை. சந்தேகம் எனும் பெயரில் இருவரையும் கைது செய்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிய படுத்தினேன்.

அவர்கள் அது தொடர்பில் முறைப்பாட்டினை தம்மிடம் தருமாறு கோரியுள்ளனர். முறைப்பாட்டினை கொடுக்க வுள்ளேன்.அந்த முறைப்பாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இந்த விடயத்தை அணைந்து மேல் மட்டத்திற்கும் எடுத்து செல்வேன்.

வடமாகாண  எதிர்கட்சி  தலைவர் என்பதாலும் சிங்களம் தெரியும் என்பதாலும் என்னால் எனது மகனுக்காக கதைக்க முடிந்தது இதுவே ஒரு சாதாரண குடும்ப பின்னணியினை கொண்ட  இளைஞர்களுக்கு நடந்து இருந்தால் பொலிசாரை கேள்வி கேட்டு இருக்க முடியாது.

எனவே இந்த சம்பவத்தை  சாதாரண சம்பவமாக விடாது இதற்கு உரிய நடவடிக்கையினை பொலிஸ் உயர் அதிகாரிகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


புதன், 18 நவம்பர், 2015

சிறந்த உற்பத்தியாளர்களுக்கான பட்டமளிப்பு விழா

அமெரிக்க அரசின் யு.எஸ் எயிட் நிறுவனத்தின் அனுசரணையுடன் புரைலர் கோழி முகாமைத்துவ பயிற்சி திட்டத்தின் கீழ் சிறந்த உற்பத்தியாளர்களுக்கான பட்டமளிக்கும் விழா நேற்று மாலை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹோட்டலில் நடைபெற்றது.
யு. எஸ். எயிட்டின் வாழ்வாதார அபிவிருத்தி உதவி வழங்கும் சொலிட் திட்டத்தில் கீழ் ஓட்டமாவடி, மாங்கேணி, காத்தான்குடி,
 பாலமுனை ஆகிய 
பிரதேசங்களில் புரைலர் கோழி வளர்புத் திட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி புரைலர் முகாமைத்துவ பயிற்சியில் கலந்து கொண்டு பரீட்சையில் சித்தி பெற்ற 80 பயணாளிகளுக்கு சான்றிதழ்கள் 
வழங்கப்பட்டன.
ஒரு பயனாளிக்கு 100 கோழிக் குஞ்சுகள் வீதம் 8000 குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. குஞ்சுகளை வளர்ப்பதற்காக போதிய வசதி வாய்ப்புக்கள் பயணாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த வைபவத்தில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ், யு எஸ். எயிட்டின் பிரதி குழுத் தலைவர் அந்திரோ பேக்கர், குழுத்தலைவர் கலாநிதி டேவிட் டையர் கிழக்கு பிராந்திய இணைப்பாளர் ரி.சக்திவேல் உட்பட கலந்து கொண்டனர்.
இதன்போது புரைலர் முகாமைத்தவ பயிற்சி கைநூல் அரச அதிபர் பி.எஸ்.எம். சாள்சிற்கு குழுத்தலைவர் கலாநிதி டேவிட் டையர் 
வழங்கி வைத்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 13 நவம்பர், 2015

பதுங்கியிருந்த 450 மில்லியன் டொலர் வெளியே வந்தது!

சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டிருந்த 450 மில்லியன் டொலர் பணம் இலங்கை வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சுவிஸ் 
வங்கிகளில் 
வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை மீள இலங்கைக்கு கொண்டு வருமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கணக்கு உரிமையாளர்கள், இலங்கை வங்கிகளில் சுமார் 450 மில்லியன் டொலர் பணத்தை வைப்புச் 
செய்துள்ளனர்.
இலங்கையர்கள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்திருந்த பணத்தை இலங்கை வங்கிகளில் வைப்புச் செய்ய ஆரம்பித்துள்ளனர். சவூதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் வைப்பாளர்களது பணமும் இவற்றில் அடங்குகின்றது எனவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 2 நவம்பர், 2015

யாழ் நல்லூர் முருகன் ஆலய முன்றலில் காட்சி கொடுத்த மயில்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக முருகப் பெருமானின் வாகனமான மயில்01.11.2015
ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் காட்சி கொடுத்தது.
ஆலயத்துக்கு வருகை தந்த அடியவர்கள்,தென்னிலங்கையைச் சேர்ந்த மக்கள்,வெளிநாட்டவர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.பலரும் தங்கள் புகைப்படக் கருவிகள் மற்றும் கைபேசிகளில் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
ஆலயத்தி வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண் மயிலானது கடந்த சில நாட்களாக திறந்து விடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.ஆனால் ,நீண்ட நாட்களின் பின்னர் ஆலய 
முன்றலில் குறித்த மயிலானது காட்சி கொடுப்பதாகவும் ,இவ்வாறான
 காட்சியைக் காண்பது அபூர்வமெனவும் நாள்தோறும் ஆலயத்துக்கு வருகை தரும் அடியவர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை,குறித்த மயிலைச் சீண்ட முனைபவர்களையும் ,வேடிக்கை பார்த்த சிலரையும் இந்த மயில் துரத்திக் கொத்தியதையும் அவதானிக்க முடிந்தது.ஆன போதும் நல்லூரானைத் தரிசிக்க வந்த அடியவர்களுக்கு மயிலால் தொல்லை எதுவும் ஏற்படவில்லை என்பதும்
 குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



வெள்ளி, 30 அக்டோபர், 2015

இலங்கைக்கு விண்ணிலிருந்து விழும் மர்மப்பொருளால் ஆபத்து இல்லை?

நவம்பர் 13ம் திகதி விண்ணில் இருந்து விழும், WTF1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப் பொருளினால் இலங்கைக்கு எந்த ஆபத்தோ, சேதமோ ஏற்படாது என்று கலாநிதி சந்தன ஜெயரத்ன 
தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் மூத்த விரிவுரையாளரும், ஆர்தர் சி கிளார்க் மையத்தின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞானத்துறை ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜெயரத்ன இதுகுறித்து மேலும் தகவல் வெளியிடுகையில்,
வானில் இருந்து விழும் பொருள் பெரும்பாலும் வெடித்து, புவி மேற்பரப்பை அடைய முன்னர் எரிந்து விடும். எனவே இதுகுறித்து அச்சமடைய வேண்டிய தேவை இல்லை.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்ற இடத்தில், இந்த மர்மப் பொருள் விழும் என்று எதிர்பார்க்க முடியாது. அது கடைசி நேரத்தில் மாறக் கூடும்.
கடந்த காலங்களில் விண்ணில் இருந்து பொருட்கள் பற்றிய விஞ்ஞானிகளின் எதிர்வுகூறல்கள் மாறியிருக்கின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார்.
விண்ணில் இருந்து விழும் குறித்த மர்மப் பொருள், வரும் நவம்பர் 13ஆம் நாள் அம்பாந்தோட்டைக்குத் தெற்கே 100 கி.மீ தொலைவிலுள்ள கடற்பகுதியில் விழும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


புதன், 28 அக்டோபர், 2015

தொலைக்காட்சி திருட்டில் திருடர்கள் சிக்கினர்

 மல்லாகம் ரயில் நிலைய வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து தொலைக்காட்சியைத் திருடிய 4 சந்தேகநபர்களை, நேற்று கைது செய்ததாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி வீட்டில் கடந்த 23ஆம் திகதி குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது.  இது தொடர்பில் குறித்த வீட்டைக் கண்காணிக்கும் பெண், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு 
செய்துள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர்கள் நால்வரை பொலிஸார் கைது 
செய்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வீடு ஒன்றில் பட்டப்பகலில் கொள்ளையர்களினால் திருட்டு


சுன்னாகம் kks வீதி கொத்தியாலடி சந்தியில் உள்ள வீடு ஒன்றில் கூரை வழியாக சென்று கொள்ளை இடம்பெற்றுள்ளது.
இவ் வீட்டில் தம்பதிகள் வேலைக்கு சென்ற வேளையில் இந்த திருடர்கள் தம் கைவரிசையை காட்டியுள்ளனர்.வீட்டின் கூரை வழியாக உள்நுழைந்த திருடன் வீட்டில் இருந்த பெரும் மதிப்புள்ள கணணியை களவாடி வீட்டின் கதவை திறந்து சென்றுள்ளான்.
மாலை வேலை முடிந்து வீடுதிரும்பிய தம்பதியினர் வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பின்னர் சுன்னாகம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை 
மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சில பகுதிகள் யாழ்- கண்டி ஏ9 வீதியின் உடைவு!

யாழ்ப்பாணம் கண்டிவரையான ஏ-9 வீதியின், கடுகஸ்தொட மற்றும் அம்பதென்ன வரையான வீதியில் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
பிரதேசத்தில் பெய்யும் அதிக மழையுடன் கூடிய காலநிலையே இதற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பல பகுதிகளிலும் தற்பொழுது கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளப்பெருக்குகம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாணங்களில் பல பிரதேசங்கள் அதிகரித்த மழை வீழ்ச்சியினால் வீதிப் போக்கு வரத்து தடைப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன...
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சரணாலயத்தில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்???

யால வனவிலங்கு சரணாலயத்தில் வெளிநாட்டுப் பணிப் பெண் ஒருவர் திடீரென மரணித்துள்ளதாக திஸ்ஸமஹாரம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யால வனவிலங்கு சரணாலயத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது குறித்த வெளிநாட்டுப் பெண் திடீரென சுகவீன
முற்றுள்ளார்.
சுகவீனமுற்ற பெண் திஸ்ஸமஹாரம தெபரவௌல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிந்தவர் சீனப் பெண் எனவும் கடந்த 24ம் திகதி அவர்
 இலங்கைக்கு 
வந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த பெண்ணுடன் மற்றுமொரு சீனப் பெண்ணும் இருந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாரம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


செவ்வாய், 27 அக்டோபர், 2015

பொலிஸிற்கு திருடனை பிடிக்க உதவிய சிறுவன்!!!

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை கடை ஒன்று உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றிருந்தது. இக்கடையுடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய
 நபரை பொலிசார் தேடியவேளை திருட்டுப்போன கடைக்கு அருகாமையில் வசித்துவரும் 12 வயது சிறுவனான இ.கிருசாந்தன் வவுனியா பொலிசாருக்கு சந்தேக நபர் வாய்பேச முடியாதவர் என்ற தகவலை வழங்கியதையடுத்து பொலிசார் சந்தேக நபரை வவுனியா பேரூந்து நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் வைத்து ஞாயிற்றுக்கிழமை 
கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் வாய்பேசமாட்டாதவன். அவனிடம் சிறப்பாக சைகை மொழியில் பேசியே தகவல்களை பெறவேண்டியிருந்தது. பொலிசாரின் விசாரணைகளில் முழுமையாக தகவல்களை பெறமுடியாது போக 12 வயது சிறுவனாகிய கிருசாந்தனின் உதவையை 
நாடினர் பொலிசார். அவனது தாயும், தந்தையும் பேசமாட்டாதவர்கள் என்பதால் சைகை மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தான் கிருசாந்தன். இதனால் அவன் பொலிஸ் விசாரணைக்கு பெரிதும் உதவினான். இதனையடுத்து வவுனியா பொலிசார் சிறுவனை பாராட்டியதுடன் இச்சிறுவனுக்கு விருதுக்கு பரிந்துரை செய்யவிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த 
கிருசாந்தன்:
மரவேலை செய்யும் பட்டறையுடன் கூடிய தங்கள் வீட்டுக்கு வந்த வாய்பேசமாட்டாத இளைஞன் ஒருவன் தனது தந்தையுடன் உரையாடிக்கொண்டிருந்ததாகவும் அதன்பின் அவனது செயற்பாடுகளில் தந்தைக்கு சந்தேகம் ஏற்பட்டதினால். இருவரும் அவனைப் 
பின்தொடர்ந்து 
தேடிய போது பூந்தோட்டம் சந்தியில் உள்ள ஒரு கடை ஒன்றின் பின்புறமாக குறித்த இளைஞன் படுத்திருந்துள்ளான் என தெரிவித்த சிறுவன் விடிந்ததும் பார்த்த போது அவன் படுத்திருந்த கடைக்கு அருகிலுள்ள கடை உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தமை தெரியவந்தது 
என தெரிவித்தான்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


திங்கள், 26 அக்டோபர், 2015

தமிழரின் ஒரு கையில் வாளுடன் பெண்ணுக்கு தாலி கட்டு

ஐரோப்பாவில் வன்முறைகளும் வாள்வெட்டு குழுக்களின் அட்டகாசங்களும் அதிகரித்து வருவதற்கு அண்மையில் ஜேர்மனி முன்சனில் நடந்த திருமணம் உதாரணமாக அமைந்தது.
வாள் வெட்டு அடிதடி வன்முறைகளில் ஈடுபடுவதை ஒரு உயர்ந்த தகமையாக கருதும் போக்கும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்களிடையே வளர்ந்து வருவதையே இது காட்டுகிறது. திருமணத்தின் போதும் மாப்பிள்ளையை அழைத்து செல்லும் போதும் மாப்பிள்ளை கையில் வாழுடன் சென்றதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
வாளுடன் சென்ற மாப்பிள்ளை வாள் வெட்டுக்குழுவை சேர்ந்தவராக என்பது தெரியவில்லை. தன் மங்களகரமான திருமண வைபவத்திற்கு சென்ற போது கொலை வெறிகொண்ட வாளை ஏன் எடுத்து சென்றார் என்பது திருமணத்திற்கு சென்ற பலரின் கேள்வியாக இருந்தது.
வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர்களை திருமணம் முடிப்பதற்கும் சில பெண்கள் காத்திருக்கிறார்கள் என அத்திருமணத்திற்கு சென்றவர்கள் பேசிக்கொண்டனர்.
இலங்கையின் வடபகுதியில் வாள்வெட்டு சம்பங்களும் வன்முறைக்குழுக்களின் அட்டகாசம் அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கும் நிலையில் பொது வைபவம் ஒன்றிலேயே அதுவும் திருமண வைபவத்தில் வாளுடன் சென்று பெண்ணுக்கு தாலிகட்டிய சம்பவம் இதுவே முதல் தடவையாகும்.
பெண்ணுக்கு தாலி கட்டும் போது மட்டும் வாளை கீழை வைத்திருந்த இந்நபர் பின்னர் தாலி கட்டி பெண்ணை அழைத்து சென்ற போதும் வாளுடனேயே சென்றார்.
இந்நபர் இரவில் படுக்கும் போது வாள்களை வைத்துக்கொண்டுதான் உறங்குவார் என கூறப்படுகிறது.

தமிழர் திருமண பாரம்பரியம் என்பது மங்களகரமாக வேட்டி சால்வை அணிந்து ஊர்வலமாக அழைத்து சென்று பெண்ணுக்கு தாலி கட்டுவதாகும். கத்தியுடனோ வாளுடனோ துப்பாக்கியுடனோ சென்று பெண்ணுக்கு தாலி கட்டுவதில்லை.
ஜேர்மனியில் தமிழர் ஒருவர் முதல் தடவையாக வாளுடன் சென்று தாலி கட்டியிருக்கிறார். எதிர்காலத்தில் கத்தியுடன் துப்பாக்கியுடன் சென்று தாலி கட்டும் முறைகளும் அறிமுகப்படுத்தப்படலாம்.
ஏனெனில் ஐரோப்பாவில் தமிழர்கள் மத்தியில் வன்முறைகலாசாரம் எல்லை மீறி செயல்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 24 அக்டோபர், 2015

மோட்டார் சைக்கிள் மோதி பெண் ஒருவர் விபத்துக்குள்ளனர்

யாழ்பாணம் கே.கே.எஸ் வீதியில் இரவு 18.50 அளவில் இணுவில் பகுதியில் இச் சம்வம் இடம்பெற்றுள்ளது.
சுன்னாகத்தில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மஞ்சள் கோட்டின் ஊடாக வீதியை கடக்க முற்பட்ட பெண் ஒருவருடன் மோதி வீதியின் எதிர் பக்கமாக உள்ள (50m) துரத்தில் கடைகளுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு இறுதியாக மின்சார கம்பத்துடன் மோதியது.
இதில் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணுக்கு தலையில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். இது குறித்து பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார்

தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்பட்ட மனோரமா ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.
தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர்.
அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்திருந்ததால் இந்த பெருமையை
 பெற்றிருந்தார்.
மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கோபி சாந்தா. பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, தேசிய திரைப்பட விருது போன்ற பல விருதுகளை பெற்றவர் மனோரமா. பின்னணி பாடல்களையும் 
பாடியுள்ளார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மனோரமா இன்று இரவு 11 மணியளவில் மரணமடைந்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



திங்கள், 21 செப்டம்பர், 2015

யாழில் அதிக வருமானம் கொண்ட பயிர் கோவா?

யாழ். மாவட்டத்திலே கடந்த 2009 ஆம் ஆண்டினை விட 2015 ஆம் ஆண்டு  இம்முறை அதிகமான வருமானங்கள் கொண்ட விவசாய பயிராக கோவா பயிர்ச்செய்கை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து 2010 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை 495.5 ஹெக்டயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட இப்பயிர்ச்செய்கை 150.03 மெற்றிக்தொன் உற்பத்திகள் யாழ்.மாவட்டத்தில் கிடைத்துள்ளதாக யாழ.; மாவட்ட விவசாய புள்ளிவிபரத்தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அவற்றின் அடிப்படையில் படிப்படியாக அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கான சலுகை அடிப்படையிலான திட்டங்கள்,மற்றும் மானியத் திட்டங்கள் என்பன முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கோப்பாய்,அச்செழு, புன்னாலைக்கட்டுவான்,  சுன்னாகம், மருதனார் மடம்,கரவெட்டி, உரும்பிராய், ஊரெழு,நிலாவரை ஆகிய பகுதிகளில் தற்போது சிறு ஏக்கர்களாக 1654.3 ஹெக்டயர் நிலப்பரப்பில் இவ் கோவா உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக விவசாய புள்ளிவிபரத்தரவுகள் குறிப்பிடுகின்றன.அவற்றில் தற்போது அறுவடைகளும் மும்முரமாக இடம்பெற்று வருவதுடன் அவ் உற்பத்திகளை உள்ளுர்,மற்றும் வெளியூர் சந்தைகளுக்கும் எற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

கோவா உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யும் வியாபாரிகள் ஒரு கிலோ கோவா 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுகின்றன. என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.அதன் அடிப்படையில் யாழ். மாவட்டத்தின் உள்ளுர் சந்தையின் நிலவரத்தின்படி ஒரு கிலோ கோவா 60  ரூபாவிலிருந்து 70 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



புதன், 3 ஜூன், 2015

ஆலய கதவுடைத்துப் பொருட்கள் திருட்டு

யாழ்.அளவெட்டி கும்பிளாவளைப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில் வீட்டு உரிமையாளர்கள் வீட்டைப் பூட்டி விட்டு அருகிலுள்ள ஆலயமொன்றிற்குச் சென்றிருந்த நிலையில் குறித்த வீட்டின் முன்கதவை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பணம், நகை மற்றும் உடைமைகள் என மூன்று இலட்சத்து 89 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
குறித்த திருட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (31.5.2015) இடம்பெற்றுள்ளது.
வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 56 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம், ஐந்து பவுண் நகை, மோட்டார்ச் சைக்கிள்,துவிச்சக்கர வண்டி என்பனவே இவ்வாறு திருட்டுப் போயுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் நேற்றுத் திங்கட்கிழமை செய்த முறைப்பாட்டின் பிரகாரம் தெல்லிப்பழைப் பொலிஸார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>