siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 14 செப்டம்பர், 2020

வவுனியா வைத்தியசாலை மாடிக்கட்டடத்தில் ஏறி சிறுமி தற்கொலை மிரட்டல்

வவுனியா வைத்தியசாலையின் மாடிக்கட்டத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சிறுமியால் வவுனியா வைத்தியசாலை வளாகத்தில்.14-09-20. இன்று பரபரப்பான சூழ்நிலை 
ஏற்பட்டிருந்தது.குறித்த சிறுமி 
வைத்தியசாலையின் இரண்டாவது மாடிக்கட்டடத்தில் ஏறி கீழே குதிக்க போவதாக
 தெரிவித்தநிலையில், விரைந்து செயற்பட்ட வைத்தியசாலை ஊழியர்கள் மாடிக்கட்டடத்தில் ஏறி சிறுமியை 
மீட்டிருந்தனர்.ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுமியே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சிசெய்ததுடன், காதல் விவகாரத்தினாலேயே தான் தற்கொலைக்கு முயன்றதாக 
அங்கிருந்தவர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.குறித்த சம்பவத்தால் வவுனியா வைத்தியசாலையில் சற்றுநேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

அவுஸ்திரேலியாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞன் பலி

அவுஸ்திரேலியாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.விக்டோரியாவின் Mildura பகுதியில் Murray ஆற்றில் மூழ்கி 21 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.11-09-2020..அன்று தனது நண்பர்களுடன் குறித்த ஆற்றுக்குச் சென்ற
 இளைஞன் நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டது.இவரைத் தேடும்பணி வெள்ளி பிற்பகல் முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில் குறித்த
 இளைஞரின் சடலம் ஆற்றிலிருந்து 
மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மெல்பேர்னில் கல்விகற்றுவரும் 
இலங்கையைச் சேர்ந்த 21 வயது தமிழ் இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.தொழில் நிமித்தம் தனது நண்பர்களோடு அவர் Mildura-வுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த மாணவன்.விபத்த்தில் பலி

 

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும்,பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கிசென்ற மோட்டார் சைக்கிள் நொச்சிக்குளம் பகுதியில் சென்று
 கொண்டிருந்த போது அதே திசையில் 
துவிச்சக்கர வண்டியில் பயணித்த
 சிறுவனுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த
 நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த இ.புவிதன் (14) என்ற மாணவன் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில்
 இராணுவத்தினரின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். 
இவர் புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் 
ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்று வருகிறார்.சடலம் தற்போது வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மற்றையநபர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



மரண அறிவித்தல் திருமதி சிவசம்பு சிவபாக்கியம் 13-09-20

மறைவு : 13/ 9/ 2020 
யாழ் /வேலணை அம்மன் கோவிலடி 3 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவசம்பு சிவபாக்கியம்(பாக்கியாச்சி) ஆசையம்மா அவர்கள் 13/ 9/ 2020 -ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில்
 இறைபதமடைந்தார் அன்னார் காலஞ்சென்ற கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும் 
காலஞ்சென்ற 
திரு சிவசம்பு அவர்களின் அன்பு மனைவியும், (புனிதவதி கொழும்பு )  (காலஞ்சென்ற கேதீஸ்வரன் பிரான்ஸ் ) (பேரின்பவதி லண்டன் ) (சிவகுமார் பிரான்ஸ் ) (செந்தில்ராஜன் ஜேர்மனி ) ( உமேஷர் பிரான்ஸ் )  ( ஜெயகௌரி பிரான்ஸ் ) ஜோகாராசா பெறாமகன் லண்டன் ஆகியோரின் அன்புத் தாயாருமாவார் 
அன்னாரின் இறுதிக்கிரிகை பற்றி பின்னர் அறியத்தரப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவர்க்கும் அறியத்தருஎமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன கின்றோம்
 உங்கள் ஆத்மா பூரண சாந்திபெற எல்லாம் வல்ல பெருங்குளம் முத்துமாரின் பாதங்களை சரண் அடைய வேண்டுகிறோம் ஆசையம்மா அன்பே சிவம் ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 8 செப்டம்பர், 2020

தண்ணீர் தாங்கியில் மாட்டிய புறாவை துரித கதியில் மீட்டனர்

 

மாத்தறை ஹக்மன வீதியில் உள்ள தண்ணீர் தாங்கியில் சிக்கியிருந்த புறாமை மீட்க மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை சமூக ஊடகங்களில் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது.பட்டத்தின் நூலில் சிக்கி, மரணத்திற்கும் வாழ்வுக்குமிடையில் ஊசலாடிக் கொண்டு, 
தண்ணீர் தொட்டியில் சிக்கியிரு்த புறா மீட்கப்பட்டது.
பட்டம் ஏற்றிய நூலில் சிக்கிய புறா, தண்ணீர் தாங்கியில் இருந்ததை அவதானித்த, விவசாயத் திணைக்கள
 அதிகாரியொருவர், வனவிலங்கு
 திணைக்கள அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். ஆனால், உயரமான தொட்டியில் ஏறுவதற்கு வசதியில்லாததால், வனவிலங்கு திணைக்களத்தினர் முயற்சியை கைவிட்டனர்.
மறுநாள், மாத்தறை நகரசபை மேயரை தொடர்பு கொண்ட விவசாயத்திணைக்கள அதிகாரி, உணவு
 மற்றும் நீர் இன்றி புறா இறக்கும் அபாயத்தை
 சுட்டிக்காட்டினார்.அவர் விரைந்து 
நடவடிக்கையெடுத்து, தீயணைப்பு வீரர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பினார்.இந்த நடவடிக்கையில் மத்திய 
சுற்றுச்சூழல் அதிகாரசபை, மாவட்ட செயலகம், மாத்தறை நகரசபை, 
நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, பெட்ரோலியம் கோர்ப்பரேஷன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, 
மகா நிறுவனம், பிரதேசத்திலுள்ள
 தன்னார்வலர்கள் இணைந்து, உயரமான தண்ணீர்த் தாங்கியில் சிக்கிய 
புறாவை மீட்டனர்.
புறா விடுவிக்கப்பட்டதும், அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.மீட்கப்பட்ட புறா உடனடியாக மிரிச வனஜிவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு சிகிச்சைக்காக 
கொண்டு செல்லப்பட்டது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பருத்தித்துறையில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிருடன்..

 

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் உயிர் பிழைத்ததாக தெரிவிக்கப்பட்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.குறித்த நபர் உயிருடன் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்த
 போதும், வைத்தியசாலை நிர்வாகம் அதனை மறுத்துள்ளது.நெல்லியடி – இராஜ கிராமத்தை சேர்ந்த ஒருவர் மயங்கி விழுந்த நிலையில், பருத்துறை
 ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக
 வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவரின் சடலம் பிரேத அறைக்கு அனுப்பபட்டுள்ளது. பிரேத அறைக்கு
 சென்ற உறவினர்கள் குறித்த நபர் உயிருடன் இருப்பதாக கூறியிருக்கின்றனர்.இதனையடுத்து 
பிரேத அறையிலிருந்து உடலை வைத்தியசாலைக்குள் உறவினர்கள் கொண்டு சென்றிருக்கின்றனர். எனினும் அவர் இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வைத்தியசாலையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த நபர் 1990 அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போதே உயிரிழந்துள்ளார். எனினும், உறவினர்களால் வைத்தியசாலையில் குழப்ப நிலை ஏற்படுத்தப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

ஹமீதியாவில் மதில் இடிந்து விழுந்து பலியான குழந்தை.

 

மதில் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த போது, குறித்த மதில் எதிர்பாராத விதமாக சிறுமி மீது இடிந்து விழுந்து பலியாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை 
மூலம் தெரியவந்துள்ளது.
முள்ளிப்பொத்தானை ஹமீதியா நகரை சேர்ந்த என்.முஷ்ரிபா (2 வயது) என சிறுமியே பலியாகியுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.சிறுமியின் சடலம் 
கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் 
முன்னெடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



விபத்தில் இலங்கை மத்திய வங்கியின் இளம் பெண் தமிழ் அதிகாரி பலி

 

மட்டக்குளியில்.(04) நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த அமிதா சுந்தரராஜ் (34), இலங்கை மத்திய வங்கியில் முக்கிய பொறுப்பிலுள்ள இளம் அதிகாரியாவார்.லொறியொன்று 
கட்டுப்பாட்டை இழந்து, வீதித்தடைகளை உடைத்துக் கொண்டு, எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த
 முச்சக்கர வண்டியை மோதித்தள்ளியதில் இந்த விபத்து நேர்ந்தது.இலங்கை மத்திய வங்கியின் உதவி இயக்குனராகவும், 
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை 
அலுவலகத்திலும் முக்கிய பதவிவகித்து வந்தார்.இலங்கையில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற பின்னர், 
அமெரிக்காவில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றிருந்தார்.இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியான கிருஷாந்தா சில்வா (52) என்பவரும் பலியானார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



மரண அறிவித்தல் செல்வன் சுரேஷ் சுவாகன் 05 -09-20

இறப்பு 05 -09-2020
யாழ் இணுவிலை சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் சூரிச்சில் வசித்துவரும் சுரேஷ் மீரா தம்பதிகளின் செல்வப்புதல்வன் சுவாகன்.05-09-2020. அன்று  இயற்கை எய்தினார் 
என்பதனை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். செல்வன் சுவாகன் அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும்
 குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு குடும்பத்தினரின் 
 துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் பிரிவால்
  துயருறும் தந்தை தாய்  சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் 
உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின்  ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.....
.தகவல்: குடும்பத்தினர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

மரண அறிவித்தல் கந்தசாமி விஜயானந்தன் (பபா) 2ம் இணைப்பு - 23-08-20

 

பிறப்பு-27 07 -1960 -இறப்பு-23-08-2020 
 யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ், இலண்டன் ஆகிய இடங்களில் வாழ்ந்தவரும் ஆகிய கந்தசாமி விஜயானந்தன் (பபா) 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை லண்டனில் இயற்கை எய்தினார்
அன்னார்   கந்த்சாமி ஜானகிஅம்மா 
ஆகியோரின் 
இளைய புதல்வனும், பவானியின்  அன்புக் கணவரும், இரத்தினேஸ்வரி ,ஜெகதீஸ்வரி, காலம்  சென்ற கருணானந்தன், காலம்  சென்ற ஞானநந்தன், ஆகியோரின் சகோதரும் ஆவார். அன்னாரின்  இறுதி சடங்கு பற்றிய விபரம் 
:06-09-2020 ஞாயிற்க்கிழமை அன்று
ஈமைகிரிகை நடைபெற்று .
 இந்த  முகவரியில் தகனம் செய்யப்படும் 188 Alexandra Avenue, Harrow, HA2 9BN - Funeral place
Hendon Cemetery and Crematorium, Holders Hill Road, London, NW7 1NB - this is the crematorium
.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி  சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின்  ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.....
தகவல் குடும்பத்தினர்
                                                                                

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>


 

சாப்பாட்டில் மகளுக்கு விஷம் வைத்து மகளைக் கொலை செய்த தந்தை


புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்தவர் செல்லைய்யா(70). இவர் மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வந்துள்ளார்.மேலும், இவர் அன்றாட வாழ்வாதாரத்துக்கே கஷ்டபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், 40 வயதான மகள் சாந்திக்கு திருமணம் செய்து வைaக்க முடியவில்லை என செல்லைய்யா மன 
உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் மகள் சாந்திக்கு
 ஆம்லெட்டில் விஷம் வைத்து கொடுத்துள்ளதால் உயிரிழந்துள்ளார்.இதனால், வறுமையின் கொடுமையால் மகளை கொன்ற தந்தை செல்லைய்யாவும் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து 
சம்பவ இடத்துக்கு
 வந்த போலீசார், இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் துயரத்தையே
 ஏற்படுத்தியுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 3 செப்டம்பர், 2020

வவுனியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த இளைஞன்.

 

வவுனியா கூமாங்குளம் கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கூமாங்குளம் பிரதான வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் 
சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் இன்று (03) காலை 7.00மணி தொடக்கம் 8.00 மணி வரையிலான காலப்பகுதியில் 
இடம்பெற்றுள்ளது.
தந்தையும், இளைஞனும் வீட்டில் இருந்துள்ளனர். தந்தை காலை 7.00 மணியளவில் தொழில் நிமித்தம் வெளியில் 
சென்றுள்ளார். பின்னர் 8.00 மணியளவில் குறித்த இளைஞனின் சகோதரன் வீட்டிற்கு வந்த சமயத்தின் வீட்டின் அறையினுள் இளைஞன் அறையில் தூக்கில் தொங்கிய நிலையிலிருந்ததை 
அவதானித்துள்ளார்.
அதனையடுத்து, அயலவரின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.26 வயதுடைய தங்கவேல் சிவகுமார் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>



கொக்குவிலில் இருவேறு சந்தர்ப்பங்களில் போதைப்பொருட்களுடன் மாட்டிய ஐவர்


யாழ்ப்பாணம், கொக்குவில் கிழக்குப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்துகொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.குறித்த பகுதியிலுள்ள
 ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞர்கள் கூடி நிற்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு
 இரகசியத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் அவர்களிடம் இருந்து 210 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருன் பறிமுதல் செய்யப்பட்டதாக 
பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை, யாழ்ப்பாணம்
 நகர்ப் பகுதியில் 248 கிராம் கஞ்சாவுடன் குருநகரைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் யாழ். மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.மதுவரித் திணைக்கள
 அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து 
குறித்தநபர் யாழ். நகரப் பகுதியில் 
விற்பனைக்குத் தயாராக 
தனது மோட்டார் சைக்கிளில் கஞ்சாவினை மறைத்து வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுவரி
 உதவி ஆணையாளர், வடமாகாணம் பிரபாத் ஜெயவிக்கிரவின் வழிநடத்தலின் கீழ் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள 
பொறுப்பதிகாரி ரகுநாதன் தலைமையிலான அணியினரால் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>


ஏ9 பிரதான வீதியில் பாரவூர்தி மற்றும் உந்துருளி என்பன மோதி விபத்து

 

கிளிநொச்சியில் 02-09-20.அன்று. மற்றும் 03-09-20.அன்று. இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் காயமடைந்துள்ளனர்.இதில் ஒருவர் மேலதிக கிசிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.02-09-20.அன்று. இரவு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக ஏ9 பிரதான 
வீதியில் பாரவூர்தி மற்றும் உந்துருளி என்பன
 மோதி விபத்துக்குள்ளாகியதில் உந்துருளியில் பயணித்தவர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா 
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை இன்று காலை கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத
 நிலைய கடவைக்கு அருகில், முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளி விபத்தில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்தோடு இரு பாடசாலை சிறார்கள் சிறு காயமுற்றுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





மரண அறிவித்தல் ஐயாத்துரை கிருஷ்ணாராசா (அப்பன்) 02-09-20


யாழ் நவற்கிரியைப்  பிறப்பிடமாகவும் ஜேர்மணியில் வசித்தவரும்  தற்போது  நவற்கிரியில் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்  ஐயாத்துரை கிருஷ்ணாராசா (அப்பன் ) 02.09.2020 அன்று காலமானர் அன்னாரின் இறுதிக்கிரிகைகள்  மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன
தகவல்: குடும்பத்தினர் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>



மரண அறிவித்தல் கலாநிதி திருமதி பத்மாவதி குணசிங்கம்.31-08-2020

                                                                               

பிறப்பு 31 07 -1946  -இறப்பு 31 -08-2020
 மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். கரவெட்டி வதிரியை வசிப்பிடமாகவும், லண்டன் Harrow ஐ தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட டாக்ட்டர் கலாநிதி திருமதி பத்மாவதி குணசிங்கம் 
அவர்கள் 31-08-2020 திங்கட்கிழமை 
அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், புத்தூர் நவக்கிரியைச் சேர்ந்த செல்லத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,அரன், ஆயன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை, சண்முகராஜா(இலங்கை), விருத்தாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மங்கையர்க்கரசி(இலங்கை), காலஞ்சென்ற பாலசிங்கம்(இலங்கை), குலசிங்கம்(கனடா), பகீரதி(கனடா), சத்தியேஸ்வரி(இலங்கை), யோகசிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு
மைத்துனியும்,
கமலாகரன், கிருபாம்பிகை, கெங்காதரன், காலஞ்சென்ற கமலசேகரன்(இலங்கை), கனகாம்பிகை ஆகியோரின் 
அன்புச் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் பிரிவால்
  துயருறும் கணவன்  பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின்  ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.....
.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் !!!
பார்வைக்கு Get DirectionTuesday, 08 Sep 2020 10:00 AM - 12:00 PMWednesday, 09 Sep 2020 10:00 AM - 12:00 PM

Asian Funeral Care

35 Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdomகிரியை Get DirectionThursday, 10 Sep 2020 9:45 AM - 12:00 PM

Asian Funeral Care

35 Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdomதகனம் Get DirectionThursday, 10 Sep 2020 1:00 PM - 2:00 PM

Hendon Cemetery & Crematorium

Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு

 குணசிங்கம் - கணவர் Mobile : +447931305659   அரன் - மகன் Mobile : +447882588952   ஆயன் - மகன் Mobile : +447738270454 

நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 2 செப்டம்பர், 2020

மரண அறிவித்தல்அமரர் தம்பிமுத்து சண்முகநாதன் 01-09-20

பிறப்பு  -  -  இறப்பு-01 09-2020
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், மல்லாவியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் தம்பிமுத்து சண்முகநாதன் அவர்கள் 01-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, நகுலேஸ்வரி மற்றும் சரஸ்வதி(இலங்கை), மகேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சபாநாயகம் மற்றும் தம்பிப்பிள்ளை, பூலோகரம்பை, சறோஜினிதேவி, துரைசிங்கம், நவரட்ணராஜா, கோகிலா, கோமதியம்மா, ராஜலட்சுமி, நகுலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சுசிதா(சுவிஸ்), புனிதா(லண்டன்), பிரதீபன்(லண்டன்), அஜிதா(இலங்கை), சுபதீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,உமாசுதன்(சுவிஸ்), சத்தியதாசன்(லண்டன்), சிவமாலா(லண்டன்),
 விஜயகுமார்(இலங்கை), ஜிபித்திரா(பிரான்ஸ்), நந்தன், பாஸ்கரன், ரஜனி, கிருபாகினி, பிள்ளை, நளினி, சுவர்ணா, கஜனி, லதீசன், கம்சா(இலங்கை),
 மேனகன்(மதன்- லண்டன்), வேல்தாசன்(லண்டன்), சுதன்(அவுஸ்திரேலியா), ஈஸ்வரி, கேது, மங்களம்(லண்டன்), ரம்சியர்(அவுஸ்திரேலியா), செல்வரத்தினம்(ஈசன்- இலங்கை), நேசன், சறோஜினிதேவி, தர்சினி(மனோ) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சத்தியன்(சுவிஸ்), லிங்கன், ரூபன்(பிரான்ஸ்), சீலன்(ஜேர்மனி), 
றமா(சுவிஸ்), பாதுரி, பௌத்திரி, கௌரங்கா(சுவிஸ்), இந்திரன்(இலங்கை), ரேவதி, கிரி, யசோ, ரூபன்(கனடா), கஜி, நிறோ(இலங்கை), காஞ்சனா, சோபனா, கஜனா(லண்டன்), கல்பனா(இந்தியா) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,சர்மியன், சஜானி(சுவிஸ்), வஷ்மியா, வர்ணீஷ், அபிக்‌ஷா, அஸ்விதா(லண்டன்), சதுஷா, சானுஷா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன
தகவல்: மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
புனிதா - மகள் Mobile : +44771417385
தீபன் - மகன் Mobile : +447545636266
சுசிதா - மகள் Mobile : +41768031489
சுபா - மகன் Mobile : +33652418962
விஜயலட்சுமி - மனைவி Mobile : +94765489446

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



மரண அறிவித்தல் மாணிக்கவாசகர் வாராதராஐன்( குணம் ) 01.09.20

யாழ் நவற்கிரியைப்  பிறப்பிடமாகவும் கனாகராயாண்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் மாணிக்கவாசகர் வாராதராஐன்( குணம் ) அவர்கள் 01.09.2020 அன்று காலமானர்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன
தகவல்: குடும்பத்தினர் 
நிலாவரை.கொம் செய்திகள் >>>>



பல கிராமங்கள் மன்னாரின் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

.மன்னாரில்,01-09-20. நேற்று மற்றும்.01-09-20. இன்று அதிகாலை பெய்த கடும் மழை காரணமாக மாவட்டத்தின் தாழ் நில கிராமங்கள் நீரில் 
மூழ்கியுள்ளன.
மன்னார் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சாந்திபுரம், ஜீவபுரம், ஜிம்றோன் நகர், எமில்நகர், எழுத்தூர் உற்பட பல்வேறு கிராமங்கள் 
நீரினால் மூழ்கியுள்ளன.
மழை நீர் வடிந்து செல்லக் கூடிய விதமாக வடிகால் அமைப்புக்கள், ஒழுங்கான முறையில் பராமரிக்கப்படாமையினால் மழை நீர் அனைத்தும் மக்களின் வீடுகளில் தேங்கியுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


அக்கரைப்பற்று மொட்டை மலையில் சடலம் ஒன்று மீட்பு

 

அம்பாறை – அக்கரைப்பற்று மொட்டை மலையின் மேல் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்.02-09-2020. இன்று மீட்கப்பட்டுள்ளது.
சாகாமம் வயல் பகுதியில் உள்ள மொட்டை 
மலையில் மேல் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதை இன்று காலையில் கண்ட விவசாயிகள் பொலிஸாருக்கு 
தகவல் வழங்கினர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் உருக்குலைந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையர் மரணம்


ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கைப் பிரஜையொருவர்
 உயிரிழந்துள்ளார்.
மாத்தறை பகுதியைச் சேர்ந்த ரங்கன சமித் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகர் அபுதாபி மற்றும் அதன் சுற்றுலா மையமான டுபாயில் கடந்த தினங்களில் இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
கடந்த திங்கட்கிழமையன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்ததாக அந்நாட்டு 
ஊடகங்கள் தெரிவித்தன.
அதேநேரம் தலைநகர் அபுதாபியில் நடந்த வெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக அபுதாபி அரசாங்க ஊடக அலுவலகம் 
தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் இலங்கைப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார் என
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

வாகன விபத்தில் மட்டக்குளியில் ஆட்டோ நசுங்கி ; இருவர் மரணம்

கொழும்பு – மட்டக்குளி பிரதேசத்தில்.02-09-2020. இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே இவ்வாறு உயி​ரிழந்துள்ளதுடன் மற்றுமொரு முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லொறியொன்றும் முச்சக்கரவண்டிகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தையடுத்து லொறியின் சாரதி கைது 
செய்யப்பட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>



செவ்வாய், 1 செப்டம்பர், 2020

மரண அறிவித்தல் திருமதி மேரி ஸரெல்லா அலோசியஸ் 31 -08- 20

 

பிறப்பு-26 -04-1935-இறப்பு-31 -08- 2020
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவுடமாகவும் கொண்ட மேரி ஸரெல்லா அலோசியஸ் அவர்கள் 31-08-2020 திங்கட்கிழமை அன்று அதிகாலை 
இறைவனடி சேர்ந்தார்.
 அன்னார், காலஞ்சென்றவர்களான லூர்து சவரி முத்து பஸ்தியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற 
மரியாச்சி , அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 காலஞ்சென்ற பிரான்ஸிஸ் ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,
 செலஸ்டீனா, காலஞ்சென்றவர்களான அன்ரன், செல்வநாயகம், இராசநாயகம் மற்றும் திருநாயகம், காலஞ்சென்ற எட்மண்ட், காலஞ்சென்ற அருமைநாயகம், துரைநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 காலஞ்சென்ற சின்னத்துரை, கொலஸ்ரிக்கா, ஞானசவுந்தரி, ராஜேஸ்வரி, புஸ்பம், சரோஜா ஆகியோரின் 
அன்பு மைத்துனியும்,
 சில்வெஸ்ட்லின் நியூட்டா, மரிலின் பின்ரா, பார்த்தலோமியூ கலிஸ்ரன், கமலின் லொறிற்ரா, ஷேர்லின் றொசிற்ரா, மிஷ்லீன் கனிஸ்ரா ஆகியோரின் பாசமிகு தாயாரும், டெறி, குணரட்ணம், ஜெசிற்ரா, காலஞ்சென்ற ஜஸ்ரின், மைக்கேல், மதனராஜா ஆகியோரின்
 பாசமிகு மாமியாரும்,
 நீல், ஹரி- ஜோய், நிக்கோல், றொஷேல், மைக்கேல்- மெலிசா, சுசான் -பாலமுரளி, ஜெப்பசன் -ராதா, ஜோன்சன் -கரோலின்ம் ஷோபியா- யோசுவா, சிந்தியா, ஷோணா- அநோஜன், ஜெரீனா- சஞ்சீவ், ரோனி, கெவின், ஜோசப், மத்யூ, மைக்கேல், கேதுஜன், துஷான், ஷாலினி ஆகியோரின் 
அன்புப் பேத்தியும்,
 ஜோன், கிரேஸ், ஜேளன், ஆறியானா, மேசன், இசபெல்லா, எவலின், லியோன், வில்லியம், ஏறியல்லா, லாண்டன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
 நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
  எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன
 Mary Stella Aloysius was Born in Jaffna Karampon and lived in Canada. She sadly passed away peacefully on Monday morning 31st August 2020.
 She was the beloved Daughter of Bastiampillai Saverimuthu and Lourdes, Daughter-in-law of the Anthonipillai Gnanapragasam and Mariyach.
 Beloved Wife of late Francis Aloysius Gnanapragasam. Loving Sister of Celestina, late Anoton, late Selvanayagan, late Rasanayagam, Thirunayagam, late Edmund,  late Arumainayagam and Thurainayagam
 Loving Sister-in-law of late Sinnathurai, Scholastica, Gnanasoundari, Rajeswary, Pushpam, Saroja.
 Devoted Mother of Sylvestlyne Nueta(Canada), Marilyn Finta(Canada), Bartholomew Kalistan(Canada), Kamaline Loreta(UK), Shirlin Rosita(Canada) and Micheline Canista(Canada).
 Loving Sister of late Felix and late Mary Theresa.
 Loving Sister-in-law of Usteena and late Selvaraja
 Loving Mother-in-law Terry(Canada), Gunaratnam(Canada), Jacita(Canada), late Justin, Michael(Canada) and Mathanarajah(Canada).
 Dearest Grandmother of Neil, Garry- Joy, Nicol, Rochelle, Michael-Melissa, Suzzane- Balamurali, Jeferson- Radha, Johnson- Caroline, Sophia- Joshua, Cindia, Shona- Anojan, Jerina-Sanjeev, Tony, Kevin, Joseph, Matthew, Michael, Kethujan, Thushan and Shalini. Cherished Great Grandmother of John, Grace, Jaylan, Aryanna, Mason, Isabella, Evelyn, Leon, William, Ariella and Landon. This notice is provided for all family, relatives and friends.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionFriday, 04 Sep 2020 6:00 PM - 9:00 PMSaturday, 05 Sep 2020 9:00 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதிருப்பலி Get DirectionSaturday, 05 Sep 2020 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaநல்லடக்கம் Get DirectionSaturday, 05 Sep 2020 12:30 PM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
 Sylvestlyne Nueta - DaughterMobile : +14167719720   Marilyn Finta - DaughterMobile : +16472615386   Bartholomew Kalistan - SonMobile : +12894232713   Kamaline Loreta - DaughterMobile : +447827899701   Shirlin Rosita - DaughterMobile : +12899926795   Micheline Canista - DaughterMobile : +16478192373   Terry - Son-in-lawMobile : +14164603476   Michael - Son-in-lawMobile : +14373474116   Gunam - Son-in-lawMobile : +14165000772   Jacita - Daughter-in- lawMobile : +19059996782   Mathan - Son-in-lawMobile : +14169935082  

நிலாவரை.கொம் செய்திகள் >>>


மரண அறிவித்தல் கலாநிதி பத்மாவதி குணசிங்கம்-31-08-20


பிறப்பு 31 07 -1946  -இறப்பு 31 -08-2020
மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். கரவெட்டி வதிரியை வசிப்பிடமாகவும் லண்டன் Harrow ஐ தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட  டாக்ட்டர் கலாநிதி பத்மாவதி குணசிங்கம் அவர்கள் 31-08-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். 
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், புத்தூர் நவக்கிரியைச் சேர்ந்த செல்லத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
அரன், ஆயன் ஆகியோரின் 
அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை, சண்முகராஜா(இலங்கை), விருத்தாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மங்கையர்க்கரசி(இலங்கை), காலஞ்சென்ற பாலசிங்கம்(இலங்கை), குலசிங்கம்(கனடா), பகீரதி(கனடா), சத்தியேஸ்வரி(இலங்கை), யோகசிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு 
மைத்துனியும்,
கமலாகரன், கிருபாம்பிகை, கெங்காதரன், காலஞ்சென்ற கமலசேகரன்(இலங்கை), கனகாம்பிகை ஆகியோரின் 
அன்புச் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதிக்கிரிகை பற்றிய விபரம்  பின்னர் அறிவிக்கப்ப்டும்
அன்னாரின் பிரிவால்
  துயருறும் கணவன்  பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின்  ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.....
தகவல் குடும்பத்தினர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>