siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 31 மே, 2016

மாபெரும் மாட்டு வண்டிச் சவாரிப் போட்டிநடைபெரு கின்றது?

முரசுமோட்டையில் மாட்டுவண்டி சவாரி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது
கிளிநொச்சிநெற் இணையத்தின் ஊடக அனுசரணையுடன்
 முரசொலி 
விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் மாபெரும் மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி தற்போது முரசொலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

சனி, 28 மே, 2016

பூமியையொத்த கிரகங்களின் கண்டுபிடிப்பும் எரிகல் வீழ்ந்து பூமி அழியும் சாத்தியமும்!

இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியானது கெப்பளர் தொலைநோக்கி இதுவரை கண்டுபிடித்துள்ள 1284 கிரகங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களை நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தந்துள்ளார்.
“இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களில் பலவும் பூமியைப் போன்றே உயிர்வாழக் கூடியதாக இருக்கின்றது” என்ற தகவல், இது தொடர்பான ஒரு ஆய்வினை மேற்கொள்வதற்கு தூண்டுதலாக இருந்துள்ளது. இது பற்றி ஆய்வாளர் சுரேஸ் தர்மா விளக்கமளித்துள்ளார்.
மேலும் இயற்கை மனிதர்களுக்கு அல்லது பூமிக்கு ஏற்படுத்தும் அழிவுகள் எதிர்பார்க்கப்படாத ஒன்றாக உள்ளது. இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட அழிவுகளைக் குறிப்பிடலாம். இது பற்றியும் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெளிவுபடுத்தியுள்ளார்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள்     



புதன், 25 மே, 2016

கல்வி கற்கும் மாணவிக்கு ஆசிரியர் கொடுத்த விசித்திரமான தண்டனை!

காலியில் பிரபலமான பாடசாலை ஒன்றில் 4 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவிக்கு அதே வகுப்பை சேர்ந்த 44 மாணவிகளை அழைத்து தலையில் கொட்டக் கூறிய ஆசிரியர் தொடர்பாக நேற்று தெரியவந்துள்ளது.
இது காலி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி கூட்டத்தின் போது தெரியவந்துள்ளது.
குறித்த மாணவி செய்த சிறு தவறுக்கு இவ்வாறு தண்டனை வழங்க கூறிய அந்த ஆசிரியர், பயிற்சிக்காக வந்த அறிவியல் ஆசிரியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தென் மாகாண கல்வி அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களமும் இது தொடர்பாக வேறு ஒரு விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

முடி உதிர்வை இரண்டு வாரத்தில் தடுக்கஓர் தகவல்

இரண்டு வாரத்தில் முடி உதிர்வை தடுத்து அடர்த்தியாக வளர இலகுவான வழி! காணோளியை பாருங்கள்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

புதன், 18 மே, 2016

எச்சரிக்கை கிளிநொச்சியில் மக்களை ஏமாற்றும் போலி ஆசாமிகள்-

கிளிநொச்சியில் மக்களை ஏமாற்றும் போலி ஆசாமிகள் பலர் தங்களது கைவண்ணத்தினை காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் நாகரிகமான முறையில் ஆடை அணிந்து தமது பேச்சுத்திறமை மூலம் மக்களை ஏமாற்றி வருவது 
அவதானிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் சற்று நேரத்திற்கு முன்னர் தான் தன் பணப்பை தொலைந்தது.  இதனால் வீடு செல்ல சிறிதளவு பணம் தேவைப்படுகின்றது எனக்கூறி பேருந்து தரிப்பிடங்களில் மக்களை ஏமாற்றி பணம் பெற்று
 வருகின்றனர்.
அத்துடன் கிளிநொச்சி பொதுச்சந்தை மற்றும் பொது இடங்களிலும் இந்த நாகரிக திருடர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 10 மே, 2016

தாயகம் திரும்பியவர் கட்டுநாயக்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.!!!

வெளிநாட்டிலிருந்து நாடுதிரும்பிய நிலையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இந்த மாதத்தில் கைதுசெய்யப்படும் இரண்டாவது தமிழர் இவர். முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் ஜெயகாந்தன் என்பவரே கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 இவர் கடந்த 2013ஆம் ஆண்டு
 தொழிலின் நிமித்தம் மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்று கடந்த 12ஆம் திகதி நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டார். பின்னர் மேலதிக விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு அலுவலகத்திற்கு
 சென்ற அவர்
 இன்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எ.டொமினிக் பிறேமானந் தெரிவித்தார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், கைதுசெய்யப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பாக கொழும்பில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு 
செய்துள்ளதாகவும் சட்டத்தரணி டொமினிக் தெரிவித்தார்.இதேவேளை, கைதுசெய்யப்பட்ட நபர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில், மன்னார் – அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் கடந்த 
10ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்று திங்கட்கிழமை கொழும்பு 4 ஆம் மாடியில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> />

சனி, 7 மே, 2016

யாழில் தண்டவாளத்தில் படுத்திருந்த இரு இளைஞர்கள் பலி!!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை கோண்டாவில் புகையிரத நிலையப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த புகையிரதம் கோண்டாவில் பகுதியில் சென்று கொண்டிருந்தவேளை, தண்டவாளத்தில் படுத்திருந்த இரு இளைஞர்கள் மீது புகையிரதம் மோதியுள்ளது.
இதனையடுத்து, இரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்கள் அடையாளப்படுத்தப்படவில்லை என்பதுடன், விபத்துச் சம்பவம் குறித்த கோப்பாய்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றார்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 2 மே, 2016

பிறந்து சில மணிநேரமேயான சிசு துண்டங்களான அவலம்!!

இராகலை – ஹைபொரஸ்ட் தோட்டத்தில், பிறந்து சில மணிநேரத்தில் கைவிடப்பட்ட சிசு ஒன்றின் உடற்பாகங்கள் நேற்று (01) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிவருவதாவது,
சிசு ஒன்றின் சில உடற் பாகங்களை வளர்ப்பு மிருகங்கள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு வந்துள்ளன.
இதனை அவதானித்த அப் பிரதேசவாசிகள் 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பிற்கு தகவல் வழங்கி உள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த, பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்து குறித்த சிசுவின் மிகுதி உடற்பாகங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சிசுவை பிரசவித்தவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் 
குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 27 ஏப்ரல், 2016

வாகனங்களின் விலை பாரியளவு அதிகரிக்கும் – வரி திருத்தத்தால்!

மே மாதம் 2ம் திகதி முதல் இடம்பெறும் வரித்திருத்ததுடன் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறு திருத்தப்படும் என குறிப்பாக கூற முடியாது என அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நுகர்வோர் இந்த காலகட்டத்தில் சந்தையில் காணப்படும் வாகனங்களை கொள்வனவு செய்தால் பொருத்தமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய நிலவரப்படி வாகன சந்தை உறுதியற்று காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க டொலரின் மாற்றம் மற்றும் தற்போது ஜப்பானில் காணப்படும் பொருளாதார நிலைமையும் இதனை பாதித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 6 ஏப்ரல், 2016

சாரதிகளே கவனம் !மது அருந்தி வாகனம் செலுத்தினால் கைது

சித்திரை புதுவருடத்தின்  போது வாகன விபத்துக்களை குறைத்துக்கொள்வதற்காக பொலிஸ்  விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
அதற்கமைய எதிர்வரும் 10ம் திகதி முதல் 20ம் திகதி வரை மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக பொலிஸ்
  தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் ,பொலிஸ்  சீருடையிலும் , சிவில் உடையிலும் அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கபடுகின்றது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

புதன், 30 மார்ச், 2016

டெலிபோனுக்கு வாட்ஸ் அப்பில் இருந்து பேசும் வசதி?

பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைத்தளங்களுக்கு நிகராக, செல்போன் வாடிக்கையாளர்களிடம் ‘வாட்ஸ் அப்‘ பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எஸ்எம்எஸ், போட்டோ, வீடியோக்கள் போன்றவற்றை 
கண் இமைக்கும் 
நேரத்தில் நண்பர்களுக்கு அனுப்ப உதவும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி சாதகமாக கருதப்படுகிறது வாட்ஸ் அப். உலக அளவில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை  நூறு கோடியாக 
உயர்ந்துள்ளதாக சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்தது.
வாட்ஸ் அப் வசதி தற்போது செல்போன்களுக்கு இடையே மட்டுமே தகவல்கள் பறிமாறி கொள்ளப்படுகிறது. விரைவில் வாட்ஸ் 
அப்பில் இருந்து தரை வழி போன்களுக்கும் பேசும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
4ஜி நெட்ஒர்க் வசதியுள்ள ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் இந்த வசதியை விரைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் டெலிபோன்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் டெலிபோன்களில் இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன் மூலம் டெலிபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ‘டிராய்’ முடிவு செய்து இதற்கு ஒப்புதல் இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 25 மார்ச், 2016

மீண்டும் தீவிரமடைகின்றது டெங்கு நோய்

இலங்கையின் சகல பாகங்களிலும் டெங்கு நோய் மீண்டும் தீவிரமடைந்து வருகின்றது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று கருத்து வெளியிட்ட அவர்,
இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களிலும் நாடு முழுவதிலும் 12,360 டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். ஜனவரியில் 6541 பேரும், பெப்ரவரியில் 4,220 பேரும், மார்ச்சில் 1,600 பேரும் இந்த நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று மாதங்களிலும் இந்நோய்க்கு 12 பேர் பலியாகியுள்ளனர்.
இதேவேளை கடந்த 2014இல் 47 ஆயிரம் நோயாளிகள் இனம் காணப்பட்டனர். அவர்களில் 96 பேர் மரணமடைந்தனர். கடந்த வருடத்தில் 29,770 நோயாளிகள் இனம் காணப்பட்டனர். அவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56.
இந்நிலையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அரசு இதுவரை
 ஒரு பில்லியன்
 ரூபாவுக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளது. இவ்வருடத்தில் இந்த நோயை மேலும் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 29 தொடக்கம் ஏப்ரல் 4 வரை டெங்கு குடம்பிகளை அழிப்பதற்கான தேசிய மட்டத்திலான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த நடவடிக்கையில் சுகாதார சேவை அமைச்சு அதிகாரிகள், முப்படையினர், பொலிஸார் மற்றும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் போன்றவை பங்கேற்கும் என்று
 தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 22 மார்ச், 2016

திருடர்களை வெடி கொழுத்தி துரத்திய மக்கள்!

 நீர்வேலியில்   திருடர்கள் தொல்லை! வெடி கொழுத்தி துரத்திய மக்கள்
நீர்வேலி மற்றும் கோப்பாய் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை வெடி கொழுத்தி திருடர்களை துரத்திய சம்பவம் கோப்பாயில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 
நேற்றைய தினம் அதிகாலை 1 மணியளவில் கோப்பாய் வடக்கில் திருடர்களின் நடமாட்டத்தால் நாய்கள் குரைத்ததால் விழிப்படைந்த மக்கள் பட்டாசுகளை வெடிக்க வைத்து ஏனையோரையும் விழிப்படையச் செய்தனர். இதனால் அதிகாலை நேரத்தில் கேட்ட பட்டாசு சத்தத்தினால் மக்கள் விழிப்படைந்து பீதியடைந்தனர்.
திருடர்களின் நடமாட்டத்தால் பிரதேச மக்கள் பதற்றத்துடனும், பீதியுடனும் இரவுப் பொழுதைக் கழிப்பதால் திருடர்களின் நடமாட்டத்தை அவதானித்தும் பட்டாசுகளை வெடிக்க வைக்கும் புதிய வியூகத்தை மக்கள் கையாள்வதினால் ஏனைய மக்கள் உசாரடைந்தும் 
வருகின்றனர்.
இதேவேளை நேற்று நள்ளிரவும் நீர்வேலி வில்லுமதவடியில் வீடு ஒன்றில் திருடுவதற்கு திருட்டுக் கும்பலொன்று முயற்சித்த போது அவர்களின் சத்தத்தினால் வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட திருடர்கள் ஓடிச்சென்றுள்ளனர்.
மேலும் இப்பிரதேசங்களின் மக்களின் இரவு பாதுகாப்பிற்காக விழிப்புக் குழுக்களை அமைப்பதற்கு கோப்பாய் பிரதேச செயலகம் ஏற்பாடுகளை மேற்கொண்டது. ஆனால் இதுவரை கிராம உத்தியோகத்தர் பிரிவு ரீதியாக விழிப்புக்குழுக்கள் அமைக்கப்படவில்லை என்பது
 குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 20 மார்ச், 2016

தேநீர்­க்கடை சமோ­சாவில் ஓணான் அதிர்ச்சி சம்­பவம்?

                      விரு­து­ந­கரில் தேநீர்க் கடை ஒன்றில் வெங்­கா­யத்­துக்கு பதில் ஓணானை உள்ளே வைத்து சமோ­சாவை விற்­பனை செய்­துள்ளார் கடைக்­காரர். இதனை வாங்கி சாப்­பிட்­டவர் அதிர்ச்­சியில் மயங்­கியே 
விழுந்­து­விட்டார்.
விரு­து­ந­கரில் துப்­பு­ரவுப் பணியில் ஈடு­பட்­டி­ருந்த ‌பணி­யா­ளர்கள் சில‌ர், அங்­குள்ள ஒரு கடை­யில் சாப்­பிட்டுள்­ளனர். அப்­போது‌ ஓணா­னுடன் இருந்த சமோ­சாவை ‌சாப்­பிட்ட பணி­யாளர் ஜெயக்­கனி என்­பவர் மயங்கி விழுந்தார். இது­கு‌‌­றித்து நக‌­ராட்சி சுகா­தார ஆய்­வா­ள‌­ருக்கு தகவல்
 தெரி­விக்­கப்­பட்­டதை‌
 அடுத்து, அவர் ஸ்தலத்துக்கு விரைந்து விற்­ப­னைக்­காக வைக்­கப்­பட்­டி­ருந்த சமோ­சாக்­களை பறி­முதல் செய்து அழித்­துள்­ளார். மேலும், அரு­கி­லி­ருந்த கடை­களில் விற்­ப­னைக்கு வைக்­கப்­பட்­டி­ருந்த சமோ­சாக்­க­ளையும் கைப்­பற்றி அழித்­துள்­ளார். சமோ­சாவில் ஓணான் இருந்த சம்­பவம் அங்கு பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தியுள்­ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 6 மார்ச், 2016

வைத்தியசாலை மாடியிலிருந்து பாய்ந்து, நபரொருவர் தற்கொலை!

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நபரொருவர் 12 ஆவது மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் தலவத்துகொட, மாதிவல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெகுவிரைவில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளிவரும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற இந்த பரீட்சையில் 6 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சாத்திகள் தோற்றியதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார 
தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகமான பரீட்சாத்திகள் தோற்றிய ஒரு பரீட்சையாக இந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை அமைந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் குறித்த பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் அனைத்தும் இந்த மாதம் 5 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தெரிவித்துள்ள பரீட்சைகள் ஆணையாளர் ஏனைய வருடங்களைப் போலவே 
இந்த வருடமும் மார்ச் மாதம் இறுதியில் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து விடயங்களையும் பூர்த்தி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



வெள்ளி, 4 மார்ச், 2016

சீவல் தொழிலாளர்களுக்கு முட்டிகள் வழங்கப்பட்டது ?

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பனை தென்னை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாகச் சீவல் தொழிலாளர்கள் 25 பேருக்கு 500 ரூபா பெறுமதியான 10 முட்டிகள் வழங்கப்பட்டுள்ளன என பனை தென்னை அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் கே.வரதராஜன் 
தெரிவித்தார்.
பனங்கட்டி உற்பத்தியை உக்குவிக்கும் முகமாக அங்கத்தவர் 25 பேருக்கு முதற்கட்டமாக இவை வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு கூடுதலான பனங்கட்டியை உற்பத்தி செய்யும் நோக்கோடு சீவல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிப்பதற்காகவும் இந்த உதவிகள் 
வழங்கப்பட்டுள்ளன.
மார்ச் மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் பனங்கள் அதிகமாகக் கிடைக்கக் கூடிய பருவ காலமாகும். இந்தக் காலத்தில் பனங்கட்டித் தொழில் மேற்கொள்ள ஏதுவான சூழ்நிலை
 காணப்படுகின்றது.
அதையடுத்து சீவல் தொழிலாளர்களுக்கு சுண்ணாம்பு, சீவல் உபகரணங்கள் என்பன வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 3 மார்ச், 2016

நீங்கள் இளமையுடன் இருக்க சர்க்கரை வள்ளி கிழங்கு?.

ஆரோக்கியத்தை பேணி காப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பொருட்களை சாப்பிட வேண்டும். ஏன்என்றால் அந்தந்த சீசனில் கிடைக்கும் உணவுகள் அந்தந்த சீதோஷண நிலையோடு தொடர்புடையது. அந்த சீதோஷண நிலைக்கு தேவைப்படும் சக்தியை அந்த உணவு நமது உடலுக்கு தரும்.
இப்போது பனிக்காலம். பனிக்காலத்தில் நம் உடலுக்கு அதிக சக்தி தேவைப்படும். அதற்கு தக்கப்படி உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். அதற்கு ஏற்ற காய், கனி, கிழங்கு வகைகளை இயற்கை நமக்கு தருகிறது. இந்த வகையில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிகம் கிடைக்கக்கூடிய சர்க்கரை வள்ளி கிழங்கு உடலுக்கு ஊட்டம் தரும் சிறந்த உணவாகும். சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
இதில் உள்ள சர்க்கரை சத்து மிகவும் தரமானது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிக நிதானமாகவே அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகளும் இதை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக இதை சில ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. இதில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள செல்களுக்கும் புத்துணர்ச்சியை 
கொடுக்கும்.
அதனால் இது இளமையை பாதுகாக்கும் உணவாக திகழ்கிறது. இதில் இருக்கும் மாக்னீசியம் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் ரத்த குழாய்களில் நன்கு சுருங்கி விரிய உதவுகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களும் இதனை சாப்பிடலாம். சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் அந்தோசையனின் என்ற நிறமிகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து செல்களை பாதுகாப்பதால் புற்றுநோய் தாக்குதல் 
தடுக்கப்படுகிறது.
கண்பார்வை கூர்மையாக்கும். இதனை சாப்பிட்ட உடன் பசி அடங்கிய நிறைவு ஏற்படும். அடுத்து நீண்ட நேரம் பசி எடுக்காது. அதனால் விரத காலங்களில் சர்க்கரை வள்ளி கிழங்கு சார்ந்த உணவுகளை சாப்பிடும் வழக்கம் உள்ளது. இந்த கிழங்கின் மாவும் சிறந்த உணவுப்பொருள்தான். அதில் பல விதமான பிஸ்கெட், கேக், ரொட்டிகள் தயாரிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவும் தயாராகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 2 மார்ச், 2016

உயர் பெருஞ்சாலைகளை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

கொழும்பில் இரண்டு உயர்ந்த பெருந்தெருக்களை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
கொழும்புக்குள் நாளாந்தம் அதிகரித்து வரும் வாகனங்களின் நெருக்கடியை சமாளிக்கும் வகையிலேயே இந்த திட்டத்துக்கு ஒப்புதல் இன்று வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு உயர்ந்த பெருந்தெரு களனி முதல் ராஜகிரிய வரையிலான பகுதிக்கு 6.9 கிலோமீற்றர் தூரத்துக்கு அமைக்கப்படவுள்ளது.
அது பத்தரமுல்லை, மாலபோ அத்துருகிரிய மற்றும் வெளியக சுற்றுவீதி ஆகியவற்றுடன் இணைக்கப்படவுள்ளது.
இரண்டாவது உயர் பெருந்தெரு 5.8 கிலோமீற்றர் தூரத்தை கொண்டதாக களனி பாலம் முதல் கொழும்பு கோட்டை வரைக்கும் அமைக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பானிய அரசாங்கம் ஆகியன நிதியுதவியை வழங்கவுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



திங்கள், 29 பிப்ரவரி, 2016

யாழ் நீதிபதி இளஞ்செழியன் கணவரை தூக்கில்இடத்தீர்ப்பளித்துள்ளர் ?

மனைவியை கோடரியால் அடித்து கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை குறித்த வழக்கு நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த 2006 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09ம் திகதி திருநெல்வேலி பாற்பண்ணை வீதியில் உள்ள வீட்டில் வைத்து நாகராசா சிவசீலன் என்பவர் தனது மனைவியான சிவசீலன் யேசுதா (வயது 28) வை கோடரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
மதுபோதையில் தினமும் மனைவியை துன்புறுத்தி வந்த கணவர் சம்பவ தினத்தன்று ஆத்திரம் தாங்க முடியாமல், தனது மனைவியை கோடரியால் வெட்டிக் காயம் ஏற்படுத்தியுள்ளார். யாழ்.போதனா 
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்ததுடன், பொலிஸார் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். விளக்கமறியலில் இருந்த அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிராக கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றில்
 இடம்பெற்று வந்தது.
மேற்படி வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த நபருக்கு மரண தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>