siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 4 ஜனவரி, 2018

மரண அறிவித்தல், திருமதி சங்கரப்பிள்ளை இராஜேஸ்வரி அம்மாள்

மலர்வு : 3 பெப்ரவரி 1938 — உதிர்வு : 1 சனவரி 2018 
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி அம்மாள் சங்கரப்பிள்ளை அவர்கள் 01-01-2018 திங்கட்கிழமை அன்று 
காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா இராசையா(மலேசியா கோலாலம்பூர் புகையிரத சேவையின் நிர்வாகஸ்தர்) இராசையா அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
யாழ். அச்சுவேலி தோப்பூரைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை(அனைத்துலக ஆசிரியரும், சர்வதேச புலவரும்) அவர்களின் 
அன்பு மனைவியும்,
சங்கரநந்தினி தேவக்குமார்(லண்டன்), சங்கரசேய்(ஐக்கிய அமெரிக்கா New Jersey), சங்கரநந்தன்(கனடா Scarborough), சங்கரபோதி(கனடா Mississauga) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலாநிதி. இரத்தினலிங்கம்(மலேசியா Kuala Lumpur பௌதிகவியில் பேராசிரியர்), புஸ்பலிங்கம்(கணக்காளர்), காலஞ்சென்றவர்களான மகாலிங்கம்(பொறியியலாளர்), சிவலிங்கம்(இலங்கை வங்கி முகாமையாளர்) மற்றும் இராசபூரணி செல்வரத்தினம்(உரும்பிராய்), காலஞ்சென்ற இராசதேவி யோகநாதன், இராசமலர் சிவபாக்கியநாதன்(லண்டன்) ஆகியோரின்
 அன்புச் சகோதரியும்,
தேவகுமார் சேந்தன்(லண்டன்), தேவகுமார் சேரன்(லண்டன்), மயூரன்(ஐக்கிய அமெரிக்கா New Jersey), சோழன்(ஐக்கிய அமெரிக்கா New Jersey), அரன்(கனடா Mississauga), மீரா(கனடா Mississauga) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சேந்தன் கணேசா(லண்டன்) அவர்களின் 
அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல் 
குடும்பத்தினர் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 3 ஜனவரி, 2018

காதலியுடன் மோட்டார் சைக்கிளில் பயங்கர சாகசம்!!

இளைஞர் ஒருவர் தன் காதலியை இரு சக்கர வாகனத்தில் உட்கார வைத்து பைக்கை வீலிங் செய்து கொண்டே பல ஸ்டைலில் வாகனத்தை ஓட்டும் காணொளி  சமுக வலைத்தளத்தில்
 வைரலாகப் பரவி
 வருகிறது.பைக்கின் பின்னால் உட்கார்ந்திருந்த அவரின் காதலி எந்தவித பயமும் இல்லாமல் பின்சீட்டில் உட்கார்ந்து வாலிபர் செய்யும் வீலிங்கை ரசித்து வந்துள்ளார். இதை காணொளி  எடுத்தும்
 பகிர்ந்து வந்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

செவ்வாய், 2 ஜனவரி, 2018

நினைவஞ்சலி பதின்இரண்டாம் ஆண்டு திரு யோகராசா ஹேமா

 திருகோணமலையைப்பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட 
அமரர் யோகராசா ஹேமா.(hema)வின் 02.01.2018
இன்று பதின்இரண்டாம்  ஆண்டு நினைவஞ்சலி
ஆண்டு  பதின்இரண்டு ஆனாலும் 
ஆறமுடியவில்லை எம்மால்
இப்புவியில் ஐயா உம்மை நாம் 
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கிறோம் 
மனம் ஒரு நிமிடம் 
மயங்க வைத்தது மனதை. 
நாசியினாலும் காணமுடிந்தது 
நினைவுகள் உன்னுடையதாயிற்றே?
பாசத்திறகாய் எனக்கு ஒரு தம்பி
 அன்பின் உருவமாய் தரணியில் வாழ்ந்தார்
அன்னை போல் என்றும் எமை நெஞ்சில் வைத்தார்
தற் பெருமை இல்லாத தங்கம் 
உயிர் இருக்கும் வரை தன்னால் இயன்றளவு செய்தார்
செல்வந்தனாய் இருந்தபோதும் எளிமையாக வாழ்ந்தார் 
சென்ற இடம் எல்லாம் மதிப்போடு
 வாழ்ந்தார் 
தொடக்கி வைத்தால் முடியும் வரை அயராது உழைப்பார்
உன்  நினைவுகள் மறையாது
 அழியாது
எம்மை நீங்கி ஏன் சென்றாய்?
பார்க்கும் இடமெல்லாம் உன்னுரும் நிழலாக
நிதமும் உலாவி வருகுதையா
எம் ஆறுதலுக்காய் ஒருமுறை வாராயோ ஹேமா....
எல்லா பிறவியிலும் 
என் அன்பிற்குரிய
என் தம்பியாக நீ மட்டும் கிடைக்க 
வரம் கேட்கிறேன்..உன் அன்பு 
சகோதர்கள்- அப்பா அம்மா ....
                      தகவல் 
திரு யோகராசா குடும்பத்தினர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

சனி, 30 டிசம்பர், 2017

தொடரும் மர்ம மரணங்கள் யாழில் இதுவரையில் 21 பேர் பலி!!

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் பரவும் மர்ம காய்ச்சலில் பாதிக்கப்பட்டமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.முல்லைத்தீவு
 பெண் ஒருவர் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்த நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.முல்லைத்தீவு
 வட்டுவாகல் பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான முருகானந்தன் ஜெயனி என்ற இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு
 உயிரிழந்துள்ளார்.காய்ச்சலில் பாதிக்கப்பட்ட ஜெயனி ஆரம்பத்தில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை ஆபத்தாக இருந்தமையினால் யாழ்ப்பாண
 போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.இதே
 காய்ச்சல் காரணமாக முருகானந்தன் என்ற அந்த பெண்ணின் கணவர் 17 நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.இந்த நோய் என்ன என்பதனை அடையாளம் காணுவதற்காக, சுகாதார
 அமைச்சின் விசேட வைத்தியர்கள் சிலர் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.யாழ்ப்பாண நகர மக்கள் இந்த நோய் அமானுஷ்யமாக இருக்கலாம் என கூறுகின்றனர். இதனால் யாழ்ப்பாணம் முழுவதும் அச்சமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவில் இருவர் உயிரிழ்ந்துள்ளமையினால் இந்த அச்சம் முல்லைத்தீவிற்கும் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 12 டிசம்பர், 2017

பாரதியாரின் 135வது ஜனனதினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன

பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் பாரதியாரின் 135வது ஜனனதினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.கல்லூரியின் தமிழ்ச்சங்கத்தின் அனுசரனையில், 2ம் வருட 
தமிழ்ப்பிரிவு ஆசிரிய பயிலுனர் மாணவர்கள் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.நிகழ்வு தேசிய கல்லூரியின் 
பீடாதிபதி திருமதி. ரமணி அபேநாயக்க தலைமையில் கல்லூரியின் பிரதான 
மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது
.இவ் விழாவில் பாரதியாரை நினைவூட்டும் வகையில் பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன.இந்நிகழ்வில், ஆசிரிய மாணவ, மாணவிகள் ஆடிய நடனம் தொடர்பான காணொளி
  இணைப்பு 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

மரண அறிவித்தல் திருமதி துரைசிங்கம் திருமகள்.08.12.17

பிறப்பு : 29 யூன் 1958 — இறப்பு : 8 டிசெம்பர் 2017
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வதிவிடமாகவும், சுவிஸ்  சிலிரனை    (Schlieren)  வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் திருமகள் அவர்கள்  08-12-2017 வெள்ளிக்கிழமை அன்று சூரிச்சில்  இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் திருமேனிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம் தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
உமாச்சந்திரன், சுகாஜினி, துவாரகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற திருஞானலிங்கம், வில்வன்(இலங்கை), திருவேரகன்(மூர்த்தி- சுவிஸ்), திருவருள்(இலங்கை- இராமநாதபுரம்), திருமலர்(சுவிஸ்), திருமாமணி(சுவிஸ்) ஆகியோரின்
 அன்புச் சகோதரியும்,
ராதிகா, ரமணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, பரமசாமி, தம்பிஐயா, கனகம்மா, மற்றும் பாக்கியம்(ஜெர்மனி), சரஸ்வதி, செல்வதுரை(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
முத்துநாயகம், தெய்வகலா, சீனிராஜா, ரவிந்திரன், பகவதி, கனகாம்பிகை, புஸ்பமாதேவி, நடராஜா, சுந்தரலிங்கம், பாலகிறிஸ்னன், புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஹரிஸ், நிலேஸ், சயானா, சபினா, அஜன் ஆகியோரின் 
அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/12/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Halle 1, Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8057 Zürich, Switzerland. 
தகனம்
திகதி: திங்கட்கிழமை 11/12/2017, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Halle 1, Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8057 Zürich, Switzerland. 
தொடர்புகளுக்கு
கணவர் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41447301813
சந்துரு(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789221517
ரமணன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787937295

திங்கள், 4 டிசம்பர், 2017

நாட்டில் காலநிலை குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்

வரும் காலங்களில் நிலவும் காலநிலை குறித்து, ஊடகங்களின் ஊடாக வௌியிடப்படும் அறிக்கைகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
விஷேடமாக மண்சரிவு குறித்த அறிக்கைகளை அவதானித்து, அதில் கூறப்பட்டுள்ளவாறு செயற்படுமாறு, அவர்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கமைய, நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு பூராகவும் அதிக மழையுடனான காலநிலை நிலவலாம் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
இதேவேளை, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உள்ள வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய
 வாய்ப்பு  உள்ளது.
வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஞாயிற்றுக்கிழமை தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியிலும் நீடிப்பதாக அவர் நேற்று 
தெரிவித்தார்.
இது அடுத்த வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். டிசம்பர் 7ம் திகதி வரையிலான கால கட்டத்தில் இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா, வடதமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
அத்துடன், மீனவர்கள் வரும் 5ம் திகதி முதல் தெற்கு ஆந்திரா, வடதமிழகத்தின் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஞாயிறு, 3 டிசம்பர், 2017

மரண அறிவித்தல் திரு பிருந்தனன் பாக்கியநாதன்.02.12.17

பிறப்பு : 4 நவம்பர் 1995 — இறப்பு : 2 டிசெம்பர் 2017
யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கைப் பூர்வீகமாகவும், ஜெர்மனி Heilbronn ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிருந்தனன் பாக்கியநாதன் அவர்கள் 02-12-2017 சனிக்கிழமை அன்று 
இறைபதம் அடைந்தார்.
அன்னார்,  காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, பாக்கியம் தம்பதிகள், தர்மகுலம் நித்தியலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பாக்கியநாதன் கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
கெளசிகா அவர்களின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற தங்கவடிவேலு, மற்றும் தர்மதயாளன், நித்தியானந்தன், தயாபரன், புனிதவதி, கமலேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற பவளேஸ்வரி ஆகியோரின் அன்பு
 மருமகனும்,
இராஜரட்ணம், தயாநிதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
தயாளினி, சகிலா, சிவாஜினி, வினோதினி, துவாரகன்(ஜெர்மனி), தர்சிகா, கமல்ராஜ், கார்த்திகா, விஷ்ணுகா, கீர்த்தனன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்

வீட்டு முகவரி:
Kittlerstraße 3,
74076 Heilbronn,
Germany.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாக்கியநாதன் — ஜெர்மனி
தொலைபேசி: +497131160512
செல்லிடப்பேசி: +4915253156705
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 2 டிசம்பர், 2017

மரண அறிவித்தல் செல்வன் சத்தியசீலன் ஹேராம்.01.12.17

அன்னை மடியில் : 4 நவம்பர் 2000 — ஆண்டவன் அடியில் : 1 டிசெம்பர் 2017
ஜெர்மனி Warendorf ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சத்தியசீலன் ஹேராம்.(மிருதங்க வித்வான்) அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று 
இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சத்தியசீலன்(ஜெர்மனி பிரபல அறிவிப்பாளர்) ஜமுனா
 தம்பதிகளின் ஏக புதல்வரும்,
நர்த்தனா அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம்
 பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
வீட்டு முகவரி:
Im Lehmbruch 33,
48231 Warendorf,
Germany.
தகவல்
குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வெள்ளி, 24 நவம்பர், 2017

மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி யாழில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்த வர்த்தரொருவர் எதிர்பாராத மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி
 உயிரிழந்துள்ளார்.
இந்த அனர்த்தம் யாழ். கரணவாய் பகுதியில்  இடம்பெற்றுள்ளது. வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் தனது, வர்த்தக நிலையத்திலிருந்து குளிர்சாதனப் பெட்டியை வழமை போன்று திறந்து 
பார்த்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரத் தாக்குதலுக்குள்ளான அவர் தூக்கி வீசப்பட்டார்.  அயலவர்கள் அவரை மீட்டுப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
யாழ். கரணவாய் நவிண்டில் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையாரான க.சிவகுமரன்(வயது- 42) என்பவரே அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்..

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் மோதி குழந்தை படுகாயம்

வவுனியா புகையிரத நிலைய வீதியில்  மோட்டார் சைக்கிள் மோதியதில், குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புகையிரத நிலைய வீதியூடாக குருமண்காடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், மதுரா மண்டபத்தை அண்மித்த வேளை, வீதியில் நடந்து சென்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின்போது குறித்த பெண் ஒரு வயதுக் குழந்தையைத் தூக்கிச் சென்றிருந்தார். மோட்டார் சைக்கிள் மோதியதில் நிலைகுலைந்த பெண் குழந்தையுடன் விழுந்து படுகாயமடைந்தார்.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 21 வயது இளைஞரைக் கைது செய்த பொலிஸார் விசாரணை 
நடத்தி வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 21 நவம்பர், 2017

யாழ் சிறுப்பிட்டியில் 4 பிள்ளைகளின் தாய் காய்ச்சலால் உயிரிழப்பு


மூன்று நாள் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்றுயாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நீர்வேலி சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான சுப்பிரமணியம் இரத்தினேஸ்வரி (வயது 55) என்ற குடும்பப்பெண்ணே உயிரிழந்தவராவார். 
இவர் கடந்த 16,17,18ஆம் திகதிகளில் காய்ச்சல் மற்றும் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 18ஆம் திகதி காலை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். 
வைத்திய சாலையில் இரத்த பரிசோதனை வசதி இல்லாததால் இரத்தம் பரிசோதி க்கப்படாமல், மாத்திரைகள் கொடுத்து வைத்தியர் அனுப்பியுள்ளார். காய்ச்சல் அதிகரித் தால் மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டு வரும்படி தெரிவித்துள்ளார். ஆனால் அன்று இரவு 11 மணியளவில் உடல் சோர்ந்து நடக்கமுடியாமல் இருந்த காரணத்தால் உடனடியாக யாழ்.போதனா வைத் தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று காலை 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் 
மேற்கொண்டிருந்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 18 நவம்பர், 2017

அமரர் உருத்திரமூர்த்தி பிரசாத் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 18.11-17

மண்ணில் : 9 ஒக்ரோபர் 1988 — விண்ணில் : 18 நவம்பர் 2016
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  உருத்திரமூர்த்தி பிரசாத் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வாழ்வில் ஒளியேற்றி 
பிரகாசிக்க வந்துத்த பிரகாஷே 
என்றென்றும் நீர் எம்முடனே 
வாழ்ந்திருப்பீர் என்றிருந்தோம் 
இடைநடுவில் எமைவிட்டு 
இறைவனடி சென்றீரோ

குடும்பத் தலைவனின்றி 
நாம் நிலைகுலைந்து நிற்கையிலே 
வாழ்க்கைப் படகிற்கு துடுப்பாக நின்றீரே

எல்லோருக்கும் வழிகாட்டி 
எமை வாழ வைத்தீரே 
பண்பிலே உயர்ந்தவனாய் 
பழகுவோர்க்கு இனியவனாய் 
பாசமுள்ள சகோதரனாய் 
அன்பிலே சிறந்தவனாய்

உற்றார் உறவுகளை உன் பக்கம் ஈர்த்தவனே 
எமை விட்டு சென்றின்று ஓராண்டு ஆனதுவே 
ஓராண்டென்ன ஓராயிரம் 
ஆண்டானாலும்
மறவாதையா உங்கள் நினைவு 
ஓராண்டென்ன உயிருள்ளவரை 
அஞ்சலிப்போம் உம் ஆத்மா சாந்திபெற
ஓம், சாந்தி, சாந்தி.
உன் பிரிவால் துயறுரும் அம்மா, சகோதரிகள், சகோதரன், உறவினர்கள்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
தகவல்
குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல், திருமதி இரத்தினராசா சின்னம்மா.17-11-17

பிறப்பு : 17 பெப்ரவரி 1942 — இறப்பு : 17 நவம்பர் 2017
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினராசா சின்னம்மா.(தங்கம்மா) அவர்கள் 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அப்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினராசா(சங்குவேலி) அவர்களின் அன்பு மனைவியும்,
கலாந்தி(சுவிஸ்), குகராஜா(கனடா), குகேந்திரன்(சின்னதம்பி- சுவிஸ்), குணராஜா(ராஜன்- சுவிஸ்), வசந்தநிதி(சுவிஸ்), நந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, சின்னராசா மற்றும் பூமணி, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகசிங்கம்(சுவிஸ்), புஸ்பமாலா(கனடா), உதயகுமாரி(சுவிஸ்), சதர்சினி(சுவிஸ்), தமோதரம்பிள்ளை(சுவிஸ்), ஜெகதீஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்பு
 மைத்துனியும்,
ஜான்சி சுரேஸ்(சுவிஸ்), றெனிஷா கோகுலன்(சுவிஸ்), லக்‌ஷனா(கனடா), அஸ்வினா(கனடா), கெளதமன்(சுவிஸ்) யதுலா(இலங்கை), அபிஷனா(சுவிஸ்), விபிஷன்(சுவிஸ்), அக்‌ஷியா(சுவிஸ்), லவனியா குபேரன்(சுவிஸ்), சங்கவி(சுவிஸ்), பிரவீன்(கனடா), சாஹானா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரதியா(சுவிஸ்), அமிர்தா(சுவிஸ்), ஆரூஷ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப. 9:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் .
வீட்டு முகவரி: 
கைத்தொழில்பேட்டை, 
தோப்பு, 
அச்சுவேலி, 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குணம்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94764828726
நந்தினி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94769371228
யோகசிங்கம்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41795041600
சின்னதம்பி(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787692179
குகராசா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14162976177
தமோதரம்பிள்ளை(மருமகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326855458

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வெள்ளி, 17 நவம்பர், 2017

நினைவஞ்சலி 1ம்ஆண்டு அமரர் முத்துக்குமாரு ஆறுமுகசாமி.17.11.17

மலர்வு:12:ஜனவரி:1942: உதிர்வு : 28 நவம்பர்: 2016 
யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப்பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும், ஜெர்மனி Böblingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு ஆறுமுகசாமி (இப்பாறிய  யாழ் ஈழநாடு பத்திரிகை  உத்தியோகத்தர்) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.(திதி ).17.11.2017.இன்று  காலச்சுழற்சியில் ஓர் ஆண்டு  கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
 நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் 
எங்கள்  அப்பா  
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அப்பாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி
 நிற்கின்றோம்.
   அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ்  மறவன்புலவு கோவிலாக்கண்டி  தோப்பு.ஜெர்மன் வாழ்   நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .... 
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் மனைவி, பிள்ளைகள் மருமக்கள் 
. தகவல் குடும்பத்தினர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 14 நவம்பர், 2017

சுண்டுக்குழி பகுதியில் நண்பனை பார்க்க சென்றவர் மயங்கி மரணம்

நண்பனை பார்க்க சென்ற குடு ம்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்த பரிதாப சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் சுண்டுக்குழி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் தெற்கை சேர்ந்த தாமோதரம்பிள்ளை தர்மகுலசிங் கம் (வயது 55) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்
குறித்த நபர் கோப்பாயில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று முன் தினம் மாலை 6 மணியளவில் சுண்டுக்குழியில் உள்ள தனது நண்பனை பார்ப்பதற்கு சென்றுள் ளார்.
அங்கு நண்பன் இல்லாத கார ணத்தால் அவருடைய 
வீட்டில் மாமரத்துக்கு கீழ் நின்றுள்ளார். நண்பன் 7.30 மணியளவில் வீட்டுக்கு வந்த போது அவர் நிலத்தில் விழுந்து 
கிடந்துள்ளார்.
உடனடியாக யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த வைத்தியர் அவர் உயிரிழந்து ள்ளதாக தெரிவித்துள்ளார். பிரேத பரிசோத னையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்து ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் 
மேற்கொண்டிருந்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

திங்கள், 13 நவம்பர், 2017

விற்பணை நிலையத்தினை உடைத்து யாழ் புத்துாரில் திருட்டு



 புத்தூர் பகுதியில் உள்ள பல்பொருள் விற்பணை நிலையத்தினை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் அத்தியாவசியப்பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
இச் சம்பவம்  வெள்ளிகிழமை இரவு 11:00 மணிக்கும் அதிகாலை 5:00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது 50ஆயிரத்திற்கு உட்பட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தூரில் கடை உடைத்து திருட்டு சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் மாலை 5:00 மணியளவில்இளைஞர் ஒருவரை அப்பகுதி இளைஞர்கள் பிடித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஞாயிறு, 12 நவம்பர், 2017

பாடசாலை மாணவன் கோர விபத்த்தில் பலி - 7 பேர் காயம்

ராஜகிரிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் அவர்களில் நால்வரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.
கெப் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்திற்கான காரணம் தொடர்பில் ராஜகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 9 நவம்பர், 2017

ஆறு பொருட்களின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு நடைமுறையில்

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஆறு பொருட்களுக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக வரி குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் , கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது
 குறிப்பிட்டார்.
விதை உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பருப்பு, கருவாடு, தேங்காய் எண்ணெய் மற்றும் மரக்கறி எண்ணெய் ஆகிய பொருட்களின் வரிகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, விதை உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஒரு கிலோவிற்கான விசேட வர்த்தக பொருள் வரி 39 ரூபாவாலும், பருப்பு கிலோவுக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்த பொருள் வரி 12 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.தேங்காய் எண்ணெய் மற்றும் மரக்கறி எண்ணெய் ஒரு லீற்றரின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கருவாடுக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக பொருள் வரி 50 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஞாயிறு, 5 நவம்பர், 2017

யாழ் நல்லூர் பகுதியில் பெய்த மீன் மழை! ஆச்சரியத்தில் மக்கள்

யாழ்   நல்லூர் பகுதியில்  மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயப் பகுதியில் இவ்வாறு மீன் மழை பெய்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் கடும் மழை பெய்துவரும் நிலையில் அந்தப் பகுதியில் மழையுடன் சில வகை மீன்களும் வந்து விழுந்துள்ளன
பெருமளவு மக்கள் அவற்றைப் பார்வையிட்டுச் சென்றனர்
. இவ்வாறான மீன் மழை தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக நடக்கின்றது என்று அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>