siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 8 அக்டோபர், 2024

நாட்டில் பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, மேற்கு, தெற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய 
மழையுடன் கூடிய 
பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழையின் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.என்பதாகும் 



திங்கள், 7 அக்டோபர், 2024

ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் பிரான்ஸில் உயிரிழப்பு

 ஈழத்தமிழ் இளைஞன் பிரான்ஸில் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 யாழ்ப்பாணம், நெல்லியடி வதிரி இரும்புமதவடி பகுதியை சேர்ந்தவரும் பிரான்ஸில் வாழ்ந்து வந்த 28 வயதான யோகேஸ்வரன் சிந்துஜன் என்பவரே உயிரிழந்துள்ளார். 
 ஐந்து வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் வந்த நிலையில், பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றையதினம் அவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.என்பது குறிப்பிடத்தக்கது 


ஞாயிறு, 6 அக்டோபர், 2024

நாட்டில் மொர ஓயாவில் முதலை தாக்கி முதியவர் ஒருவர் மரணம்

அனுராதபுரம் - கெமுனுபுர பிரதேசத்தில் மொர ஓயாவில் முதலை தாக்கி 60 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த.04-10-2024.வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை மொர ஓயாவுக்கு அருகில் ரஞ்சித் மங்கட என்கிற பகுதியில் மூன்று பேர் ஒன்றாக அமர்ந்து
 மது அருந்தியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் இறைச்சி எடுத்துக்கொண்டு வருதற்காக தனது வீட்டுக்குச் செல்ல மீண்டும் ஓடையை கடக்கும்போது முதலையினால் தாக்கப்பட்டதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் 
தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஸ்ரீபுர பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.என்பதாகும்.


சனி, 5 அக்டோபர், 2024

மானிப்பாயைச் சேர்ந்த யுவதி உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதியொருவர் 04-10-2024.அன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.மானிப்பாயைச் சேர்ந்த 19 வயது இளம் யுவதியே 
உயிரிழந்தவர் ஆவார்.
காய்ச்சல் காரணமாக இந்த யுவதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர் உண்ணிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தமை வைத்தியசாலையில் இனங்காணப்பட்டதையடுத்துது, 10 நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்
.என்பது குறிப்பிடத்தக்கது





 

வெள்ளி, 4 அக்டோபர், 2024

நாட்டில் குழந்தைகள் தொடர்பில் சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள தகவல்

இன்புளுவன்சா அறிகுறிகள் உள்ள குழந்தைகள் இந்த நாட்களில் அதிகம் பதிவாகி வருவதால், அந்த அறிகுறிகள் உள்ள 
குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டியது
 அவசியம் என சுகாதாரத் துறையினர் பெற்றோரிடம்
 கேட்கின்றனர்.
 இதேவேளை, கை, கால் மற்றும் வாய் நோய் (Hand, foot and mouth disease) உள்ள குழந்தைகளும் இந்நாட்களில் பதிவாகி வருவதாகவும்,
 எனவே சரியான சுகாதார அறிவுரைகளை 
பின்பற்றுவதன் மூலம் 
குழந்தைகளை பாதுகாக்க முடியும் என குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டுகிறார்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 3 அக்டோபர், 2024

நாட்டில் வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆனின் சடலம் மீட்பு

நாட்டில் வெள்ளவத்தை  கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில்.03-10-2024. இன்று  பிற்பகல் சடலம் 
மீட்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர் 05 அடி 04 அங்குல உயரம் கொண்ட 45 வயதுடைய சாதாரண உருவம் கொண்டவர். இறந்தவர் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. 
 வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..என்பது குறிப்பிடத்தக்கது 




 

புதன், 2 அக்டோபர், 2024

செங்கடலில் ஆப்பிரிக்காவில் இருந்து சென்ற இரண்டு கப்பல்கள் கடலில் மூழ்கி பலர் பலி

ஆப்பிரிக்காவில் இருந்து குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் ஜிபூட்டி கடற்கரையில் செங்கடலில் மூழ்கியதில் 45 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. குடியேற்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் படகுகள் 310 பேருடன் ஏமனில் இருந்து புறப்பட்டதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு
 தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பாவில் சிறந்த வாழ்க்கையைத் தேடுகிறார்கள்.
ஐரோப்பா கண்டத்தை அடைவதற்கு தங்கள் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இருக்கும் அவநம்பிக்கையான மக்கள் நிறைந்த கப்பல்களை கடத்தல்காரர்கள் அடைக்கிறார்கள். 
 32 உயிர் பிழைத்தவர்கள் மீட்கப்பட்டதாக, தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு உதவிய U.N. ஏஜென்சி, சமூக ஊடக தளமான X இல் கூறியது. வடமேற்கு கோர் அங்கார் பகுதிக்கு 
அருகில் உள்ள 
கடற்கரையில் இருந்து சுமார் 150 மீட்டர் (சுமார் 500 அடி) தொலைவில் இந்த சோகம் ஏற்பட்டதாக ஜிபூட்டியின் கடலோர காவல்படை கூறினார். 
அதிகாலை தொடங்கிய கூட்டு மீட்புப் பணி நடைபெற்று 
வருவதாகவும் அது கூறியது. இதில் 115 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 
"காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கும், உயிர் 
பிழைத்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நாங்கள் உறுதியாக
 இருக்கிறோம்" என்று அந்த நிறுவனம் சமூக ஊடகங்களில் வெள்ளை உடல் பைகளின் படங்களுடன் ஒரு அறிக்கையில்
 தெரிவித்துள்ளது. 
"சமூகங்கள் மட்டுமன்றி நன்கொடையாளர்களும் எங்களது புலம்பெயர்ந்தோர் மறுமொழி திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க 
விரும்புகிறோம்" என்று கிழக்கு, கொம்பு மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கான IOM பிராந்திய இயக்குனர் ஃப்ரான்ட்ஸ் 
செலஸ்டின் கூறினார். 
"இது இந்த புலம்பெயர்ந்தோர், இந்த இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் வெளியேறுவதற்கான வாய்ப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு நாங்கள் இருக்க வேண்டியிருக்கும் போது, ​​​​அந்த
 தங்குமிடம் வழங்குவதற்கும், எங்களுக்கு சுகாதாரம் மற்றும் சில உணவு மற்றும் அல்லாதவற்றை வழங்குவதற்கும் 
கூட. உணவுப் பொருட்கள்," என்று அவர் மேலும் கூறினார்.
என்பது குறிப்பிடத்தக்கது.




 

செவ்வாய், 1 அக்டோபர், 2024

கல்வி சுற்றுலா சென்றபோது தீப்பிடித்து தாய்லாந்தில் எரிந்த பஸ்;மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்பலி என அச்சம்

தாய்லாந்தில் சுற்றுலாவிற்காக பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணித்த பேருந்தில் தீப்பிடித்ததில் சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
 தாய்லாந்தின் தலைநகரை அண்மித்த பகுதியில்.01-10-2024. இன்று விபத்து இடம்பெற்றுள்ளது. 
 மேலும் காயமடைந்த 16 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
என்பது குறிப்பிடத்தக்கது .






 

திங்கள், 30 செப்டம்பர், 2024

நாட்டில் பாணந்துறையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார் ஒருவர் படுகாயம்

பாணந்துறை பள்ளியமுல்ல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 பாணந்துறை வடக்கு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பொலிஸ் வீதித்தடையில் லொறி ஒன்று நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 
 அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் லாரி முன்னால் சென்றதால் போலீசார் லாரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். லொறியில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் தற்போது 
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 
 இந்த நிலையில் குறித்த லொறி மாடுகளை ஏற்றிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது 





 

ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

நாட்டில் கடுமையான மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் .29-09-2024.இன்று  பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் 
தெரிவித்துள்ளது. 
 மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இந்த அபாயம் நிலவுவதாக திணைக்களம் 
தெரிவித்துள்ளது. 
 இதன் காரணமாக மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது. 
 இன்று பிற்பகல் அல்லது இரவு மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் சில 
இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த
 மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது..என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

சனி, 28 செப்டம்பர், 2024

யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக் கூடம் இயங்க ஆரம்பித்துள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக் கூடம் 
நேற்று 27-09-2024.வெள்ளிக்கிழமை முதல் இயங்க 
ஆரம்பித்துள்ளது. 
 சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக சத்திரசிகிச்சைக் கூடக் கட்டிடம் மற்றும் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டிடம் ஆகியன நிர்மாணிக்கப்பட்ட போதிலும் ஆளணிப் பற்றாக்குறை,
வளப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்
 வருடக் கணக்கில் சத்திர சிகிச்சைக் கூடத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. 
 இந்நிலையில், அண்மையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் பூதாகரமாக வெடித்திருந்த நிலையில் புதிய வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ரஜீவ் சத்திர சிகிச்சைப் பிரிவை இயக்க நடவடிக்கை எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். 
சத்திர சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ரவிராஜ், மகப்பேற்று நிபுணர் சிறீசுபாஸ்கரன் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் சத்திரசிகிச்சைக் கூடத்தை வெற்றிகரமாக ஆரம்பித்து
 வைத்துள்ளனர். ஆரம்ப தினத்தில் கேர்னியா நோயாளிக்கான சத்திரகிகிச்சை, இரு சிசேரியன் சத்திர சிகிச்சைகள், மேலும் நான்கு 
சிறிய சத்திர சிகிச்சைகள் ஆகியன வெற்றிகரமாக 
மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
 சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டதன் பயனாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயாளர்களை அனுப்பும் நிலைமை வெகுவாகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 27 செப்டம்பர், 2024

யாழ் சாவகச்சேரியில் பாம்பு தீண்டி இளம் குடும்பஸ்தர் மரணம்

இளம் குடும்பஸ்தர் ஒருவர் திருணம் செய்து இரண்டு வருடங்களில்  பாம்பு தீண்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணபுரிந்து வரும் குறித்த இளம் குடும்பஸ்தர் வீட்டில் பாம்பு தீண்டி 
உயிரிழந்துள்ளார் .
சாவகச்சேரி நூணாவில் வைரவர் கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தையின் தந்தையான வினோத் வயது 29 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் .
 சடலம் சாவகச்சேரி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது இச் சம்பலம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
.அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!





 

வியாழன், 26 செப்டம்பர், 2024

யாழ் அராலி பாலத்தடியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி முதியவர் படுகாயம்

யாழ் வட்டுக்கோட்டை அராலி பாலத்தடியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரைநகர் - யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அரச பேருந்தும், தனியார் பேருந்தும் போட்டி போட்டுக் கொண்டு 
வந்த நிலையில், அராலி அம்மன் கோவில் பகுதியில் இருந்து வந்து பிரதான வீதிக்கு நுழைந்த மோட்டார் சைக்கிள் மீது 
அரச பேருந்து மோதியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் படுகாயம்டைந்துள்ளதுடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.





 

புதன், 25 செப்டம்பர், 2024

திருமதி கயூரன் ஜனனி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி .25.09.24

தோற்றம் -28.04-1985- மறைவு- 06-10-2023
யாழ் பூநகரியை பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட. திருமதி கயூரன் ஜனனி
அவர்களின் 1ம் ஆண்டு  நினைவஞ்சலி திதி .25.09.2024.புதன் கிழமை இன்று அவரது இல்லத்தில் நடைபெறும்  அன்னார் கயூரன் அவர்களின் பாசமிகு மனைவியும் 
மார்க்கண்டு அன்னலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்  திரு திருமதி நிர்மலநாதன் (சிவம் )சுதமதி(சுதம் ) ஆகியோரின் அன்பு மருமகளும் கேசிகன்  அவர்களின் அன்புத்  தாயாரும் ஆவர் 
இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்பினில் விளைந்த
ஆரமுதே அளவிலா
இன்பப் பெரும் சுடரேஆனந்தமாய் உள்ளங்கள்
கவர்ந்த உத்தமியே அற்புத
மனிதரின் மாணிக்கமேதொலை தூரம் சென்ற போதும்
தொலையாதது உமது நினைவுகள்
தொடு வானம் போல் தொடரும்
கனவுகள் தோழமையாய்
திகழும் நற்சந்தங்கள் நம்மை விட்டகன்று 
நல்ல குணவாலிக்கு  நாட்கள்
மாதங்களாய் அகவையும் ஒன்றாயிற்று 
 நல்லவரே வானவரே நற்பதவி கண்டீரேசீரும் சிறப்புமாய் நீர் இருந்த
நாட்கள் சிந்தாமல் சிதையாமல்
கதை கவிதை சொல்லுதே சித்திரமே
உம்தோற்றம் சிந்தையிலே சிகரம் அம்மா 
 சீரோடு சிறப்பாக நீர் சிவனிடத்தில் இளைப்பாறும் ஆண்டு கடந்தாலும் ஆறாத துயரத்தில்
மீளாது தவிக்கும் அன்பான கணவர் மகன் குடும்பத்தினர்,
உற்றார், உறவினர், நண்பர்கள்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்


செவ்வாய், 24 செப்டம்பர், 2024

பள்ளிகளில் கைப்பேசி பயன்பாட்டை கலிபோர்னியாவில் தடை செய்யும் சட்டம் நடைமுறை

பள்ளிகளில் கைப்பேசி பயன்பாட்டைத் தடை செய்யும், கட்டுப்படுத்தும் சட்டத்தை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
கைப்பேசிகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் மனநலப் பிரச்சினைகள், கற்றல் குறைபாடுகள் ஆகியவை ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகப் பல ஆய்வுகள் தெரிவித்துள்ளதை
 அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மற்ற 13 மாநிலங்கள், பள்ளிகளில் கைப்பேசி பயன்பாட்டுக்குத் தடை, கட்டுப்பாடுகள் விதித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.மற்ற மாநிலங்களுக்கு முன்பாகவே ஃபுளோரிடா மாநிலம் இந்த நடவடிக்கையை 2023ஆம் ஆண்டில் மேற்கொண்டது.
சிகரெட் பொட்டலங்களில் சுகாதார எச்சரிக்கைகள் இருப்பது போலவே சமூக ஊடகத் தளங்களிலும் மனநலம் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் தலைமை அறுவை 
சிகிச்சை நிபுணர் விவேக் மூர்த்தி கடந்த ஜூன் மாதம் 
அழைப்பு விடுத்தார்.
“கைப்பேசிகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போது பதற்றநிலை, மனஅழுத்தம், இதர மனநலப் பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. ஆனால் அதைத் தடுக்கும் ஆற்றல் நமக்கு உள்ளது.
 “கல்வி, சமூக மேம்பாடு, நிஜ வாழ்க்கை ஆகியவற்றில் கவனம் செலுத்த புதிய சட்டம் மாணவர்களுக்கு உதவும்,” என்று கலிஃபோர்னியா ஆளுநர் கெவின் நியூசம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


திங்கள், 23 செப்டம்பர், 2024

யாழ் அராலியில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர் படகில் சடலமாக மீட்பு

கடற்றொழிலுக்கு .22-09-2024.ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் சென்றவர் படகினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் பேரானந்த சிதம்பரம் நாகராஜா (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் அராலியில் இருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்றுள்ளார்.23-09-2024. இன்று 
காலைவரை அவர் திரும்பி வரவில்லை
. இந்நிலையில் தேடுதலில் ஈடுபட்டவர்கள், பொன்னாலை கடலில் அவரது 
சடலம் படகுடன் கரையொதுங்கி இருந்ததை 
அவதானித்தனர். சடலத்தின் வாயில் காயம் ஒன்று காணப்படுகிறது.
இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
குறிப்பிடத்தக்கது  என்பதாகும் 




 

ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

யாழ்நீர்வேலியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உயிரிழப்பு

யாழ்நீர்வேலியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 65 வயது பெண் உயிரிழந்துள்ளார். வீட்டிலிருந்த எரிவாயு 
சிலிண்டர் வெளியே தூக்கி வீசப்பட்டு தீயில் எரிந்துள்ளது. அத்தோடு, அவ்வீட்டின் வாசலில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிளகாய்த்தூள் வீசப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அவ்வீட்டுக்கு யாராவது தீ வைத்திருக்கலாம் என்றும் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு தீப்பற்றி எரிந்திருக்கலாம் என்றும் பல 
கோணங்களில் சந்தேகித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.







 

சனி, 21 செப்டம்பர், 2024

மரண அறிவித்தல் செல்வி பொன்னுச்சாமி சறோஜினி தேவி 21.09.2024

துயர் பகிர்வு தோற்றம் 13-10-1941-மறைவு-21-09-2024
யாழ். புத்தூர் மேற்கு நவற்கிரி நிலைவரையை  பிறப்பிடமாகவும்  கொழும்பில் வசித்து வந்த செல்வி பொன்னுச்சாமி  சறோஜினி தேவி   
(இளைப்பாறிய யாழ் போதனா வயித்தியசாலையில் பணியாற்றிய தாதி )அவர்கள் 21-09-2024..சனிக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.அன்னார் காலம் சென்ற  பொன்னுச்சாமி தம்பதிகளின் அன்பு மகளும்  அன்னாரின்  நல்லடக்கம், கொழும்பில் நடைபெறும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.தகவல் குடும்பத்தினர் 
தயாளன் .சோபா 
ஐகரன் பிரமிதா  
 ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!



வெள்ளி, 20 செப்டம்பர், 2024

கத்திக்குத்துத் தாக்குதலில் நெதர்லாந்தில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்

நெதர்லாந்தில் ரோட்டர்டாமில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
கொலையாளி என்று கூறப்படும் நபர் கத்தியால் குத்தும் போது "அல்லாஹு அக்பர்" என்று கத்தினார் என்று சாட்சிகள் கூறுகின்றனர்.
மைல்கல் எராஸ்மஸ் பாலம் அருகே நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ரோட்டர்டாம் பகுதியைச் சேர்ந்த 32 வயது நபர் கொல்லப்பட்டார் மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 33 வயது நபர் பலத்த காயம் அடைந்தார் என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை இரவு நெதர்லாந்து துறைமுக நகரத்தில் பொதுமக்களைத் தாக்கிய சந்தேக நபர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

தாக்குதலுக்கான நோக்கம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை. தாக்குதல் நடத்தியவர் "அல்லாஹு அக்பர்" என்று கூச்சலிட்டதாக சாட்சிகள் புகாரளித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மத்திய நெதர்லாந்து நகரமான அமர்ஸ்ஃபோர்ட்டைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டார். அவர் இரண்டு பெரிய கத்திகளை வைத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
 குறிப்பிடத்தக்கது என்பதாகும் 




 

வியாழன், 19 செப்டம்பர், 2024

இலங்கையர் சுவிஸில் அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்ப்பு இரண்டு பேர் கைது

திருகோணமலையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர்  சுவிஸ் நாட்டின் கிளாட்ப்ரூக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களை அந்நாட்டுப் பொலிஸார் கைது 
செய்துள்ளனர்.
 34 வயதுடைய இலங்கையர் ஒருவரே.18-09-2024. நேற்று காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுவிஸ் நாட்டை சேர்ந்த 40 மற்றும் 54 வயதான சந்தேகநபர்கள் இவ்வாறு கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
 குறித்த குடியிருப்பு Airbnb நிறுவனத்தால் வாடகைக்கு விடப்பட்டது என தெரியவந்துள்ளது. அவசர சேவை மையத்திற்கு கிடைத்த அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், சம்பவ இடத்திலேயே இருவரையும் கைது 
செய்துள்ளனர்.
 மூவருக்கு இடையிலான உறவு மற்றும் எதனால் கொல்லப்பட்டார் என்பது தொடர்பில் இன்னும் தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறிப்பிடத்தக்கது  என்பதாகும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.தகவல் குடும்பத்தினர் 
 ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!