siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 14 அக்டோபர், 2017

இன்னும் சில தினங்களுக்கு நாட்டில் சீரற்ற காலநிலை தொடரலாம்

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்குத் தொடரலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேல், மத்திய, வட, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய - குறிப்பாக பிற்பகல் 2 மணிக்குப் பின் - வாய்ப்பு இருப்பதாகவும், மழையுடன் கடும் காற்றும் வீசலாம் எனவும் வானிலை அவதான நிலையம்
 தெரிவித்துள்ளது.
மேலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை பகுதிகளில் 100 முதல் 150 மில்லி லீற்றர் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையுடன் இடி-மின்னல் ஏற்படலாம் என்பதால், பொதுமக்கள் அது குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, தொடர்ச்சியான மழை காரணமாக நிரம்பியுள்ள குகுலேகங்கையின் இரண்டு வான்கதவுகள் 
திறக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, அகலவத்தை, பதுரலிய, பாலிந்த நுவர மற்றும் இங்கினியாகலை மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பேரிடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக