siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 24 அக்டோபர், 2023

இரண்டு சரக்குக் கப்பல்கள் ஜேர்மன் கடற்பகுதியில் விபத்து பலரைக் காணவில்லை

இரண்டு சரக்குக் கப்பல்கள் ஜேர்மன் கடற் பகுதியின்  வடக்கு கடலில் மோதியதில் பலரைக் காணவில்லை என்று ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 போலேசி மற்றும் வெரிட்டி ஆகிய கப்பல்கள் இன்று .24-10-2023.அதிகாலையில் ஹெல்கோலாண்ட் தீவின் தென்மேற்கே சுமார் 22 கிலோமீட்டர் 
தொலைவில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியதாக தகவல் வெளியாகியுள்ளது. 
பிரிட்டிஷ் கொடியுடன் பயணித்த குறித்த கப்பலில் 22 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது முடக்கிவிடப்பட்டுள்ளன. 
தற்போதைய நிலைவரப்படி ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 23 அக்டோபர், 2023

கோசைன் தோலாவில் பானிபூரி சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

 

ஜார்கண்ட் மாநிலம், கோடெர்மா மாவட்டத்தில் உள்ள கோசைன் தோலாவில் பகுதியில் ரோட்டோர கடை ஒன்றில் பானிபூரி சாப்பிட்டு,
 அப்பகுதியைச் சேர்ந்த 40 குழந்தைகள் மற்றும் 10 பெண்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
பானிபூரியை சாப்பிட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் போன்ற 
அறிகுறிகள் 
ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக கோடெர்மாவில் உள்ள சதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 
அவர்களுக்கு பாக்டீரியா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து
 குழந்தைகளும் 9 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள், அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.
பானிபூரி வியாபாரியிடம் இருந்த உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மாதிரிகள் சோதனைக்காக ராஞ்சிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது   


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 22 அக்டோபர், 2023

நாட்டில் கடந்த இருபத்தி நான்கு மணிநேரத்தில் வீதி விபத்துக்களில் அறுவர் மரணம்

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இளைஞர் ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் 21-10-2023.,அன்று  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் 
தெரிவிக்கின்றனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவாலயத்தின் வாகன தரிப்பிடத்தில் நபர் ஒருவர் ஜீப் வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த நபர் 
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொழும்பு 09 இல் வசிக்கும் 63 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொத்துவில் - அக்கரைப்பற்று வீதியில் இடம்பெற்ற விபத்தில் 77 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில்
 இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இருவரும் பலத்த காயமடைந்து பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, பிங்கிரிய பொலிஸ் 
பிரிவிற்குட்பட்ட போவத்த-கதுலாவ வீதியில் திசோகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 36 வயதுடைய நபர் ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.
போவத்தை நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதேவேளை, திருகோணமலை புல்மோட்டை வீதியின் சலப்பையாறு பகுதியில் வீதியில் 
பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பயணி ஒருவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் பாதசாரி படுகாயமடைந்து, குச்சவெளி வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்ட போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
நவாச்சோலை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை, கடுவலை - கொள்ளுப்பிட்டி வீதியில் பட்டியவத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 68 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 கடுவலை நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதேவேளை,
 மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - கண்டி வீதியின் இந்துபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 21 அக்டோபர், 2023

சென்னை மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் சித்தர் முறைப்படி நல்லடக்கம்

சென்னை செங்கல்பட்டு: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க, 
பங்காரு அடிகளார்
 உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. 
அப்போது பக்தர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க 
கோஷங்கள் எழுப்பினர்.
அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்ட பிறகு, சக்தி பீடத்திலுள்ள தியான மண்டபத்துக்கு அவரின் உடல் எடுத்துச்செல்லப்பட்டு, அங்கு
 இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர், 
பங்காரு அடிகளார் 
அருள்வாக்கு சொன்னபடி, கோயில் கருவறைக்கும், புற்று மண்டபத்துக்கும் நடுவில் நின்ற நிலையில் அவரின் உடல் நல்லடக்கம் 
செய்யப்பட்டது.
இந்த இடத்தில்தான் முதலில் அவர் அருள்வாக்கு சொன்னார் எனக் கூறப்படுகிறது. அதனால், அந்த இடத்தில்தான் நல்லடக்கம் செய்ய வேண்டும் என பங்காரு அடிகளார் ஏற்கனவே அருள்வாக்கில் கூறியதாக சொல்லப்படுகிறது.
சித்தர் முறைப்படி நல்லடக்கம்: பங்காரு அடிகளாரின் உடல், சித்தர் முறைப்படி பால், பன்னீர், சந்தானம், குங்குமம், மஞ்சள், இளநீர் 
கொண்டு உடலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வில்வம், துளசி, 
வேப்பிலை, மஞ்சள், குங்குமம், சவ்வாது, உப்பு, விபூதி போடப்பட்டு உட்கார்ந்த நிலையில் 20-10-2020. வெள்ளிக்கிழமை அன்று நல்லடக்கம் 
செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் தமிழக அரசு சார்பில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அன்பரசன், ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, 3 முறை வானத்தை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை செலுத்தினர்.
நல்லடக்கத்தையொட்டி மேல்மருவத்தூர் சக்தி பீடத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால்,
 பக்தர்களின் பாதுகாப்புக்கு காவல் துறையினர் அதிக எண்ணிக்கையில் மேல்மருவத்தூர் சக்தி பீடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, ஆளுநர் 
ஆர்.என்.ரவி, தமிழக அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி 
ஆகியோர் பங்காரு அடிகளார் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னணி: விழுப்புரம் மாவட்டம் கரும்பாக்கம் கிராமத்தில் கோபால நாயக்கர் - மீனாட்சி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாக கடந்த 1941 மார்ச் 3-ம் தேதி பிறந்தார் பங்காரு அடிகளார். பெற்றோர் 
இவருக்கு வைத்த
 பெயர் சுப்பிரமணி. மேல்மருவத்தூர் அருகே உள்ள சோத்துப்பாக்கம் அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்து, செங்கல்பட்டு அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயின்றார். பின்னர், அச்சிறுப்பாக்கம் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.
சிறுவயது முதலே ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த இவர், வேப்பமரத்தின் அடியில் குறிசொல்லி வந்தார். இவரை அம்மனின் அருள்பெற்றவராக பக்தர்கள் வணங்கி வந்தனர்,
இந்த நிலையில், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை கடந்த 1970-ம் ஆண்டு நிறுவினார். கோயில் கருவறைக்கே சென்று பெண்கள் நேரடியாக வழிபாடு செய்யும் முறையை ஏற்படுத்தினார். மாதவிலக்கு 
நாட்களிலும் இங்கு தடையின்றி வழிபடலாம் என்பது, பெண்கள் மத்தியில்
 பெரும் வரவேற்பை பெற்றது.நாடு முழுவதும் இருந்து 
ஏராளமான பக்தர்கள் 
சக்திமாலை அணிந்து, இருமுடி சுமந்து மேல்மருவத்தூர் வந்து ஆதிபராசக்தி 
அம்மனை வழிபடத் தொடங்கினர். சித்ரா பவுர்ணமி, 
ஆடிப்பூரம், தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் மேல்மருவத்தூர் வந்து பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்று வந்தனர். பக்தர்களால் ‘
அம்மா’ என்று மிகுந்த அன்போடு அழைக்கப்பட்டார் 
பங்காரு அடிகளார்.
ஆதிபராசக்தி என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவினார். இதன்மூலம், மருத்துவம், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அறக்கட்டளை மூலம் சுற்றுப்புற கிராமங்கள் உட்பட பல பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் 
செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த சிலநாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பங்காரு அடிகளார் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை உடல்நலம் மிகவும்பாதிக்கப்பட்டதால் 
ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிற்பகலில் 
தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட பங்காரு அடிகளார் மாலை 5 மணி
 அளவில் மறைந்தார்.
மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாருக்கு எமது 
இணையங்களின் கண்ணீர் அஞ்சலி



வெள்ளி, 20 அக்டோபர், 2023

சென்னை மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவு19.10.2023

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் காலமானார். 
அவருக்கு வயது 83.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளது. இது இந்த ஊரின் அடையாளமாக உள்ளது. இந்த சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார். இவர், மேல்மருவத்தூரைச் சேர்ந்த விவசாயிகளான கோபால் மற்றும் மீனாம்பிகை 
அம்மையாருக்கும் மகனாக கடந்த 3-3-1941-ல் பிறந்தாா். 
பங்காரு என்றால் தெலுங்கு மொழியில் ‘தங்கம்’ என்று
 பொருள். இவர், ஆசிரியராக பணிபுரிந்தவரும்கூட. ஆசிரியர் பணியில் இருந்தபோது உத்தரமேரூரைச் சோ்ந்த பள்ளி 
ஆசிரியையான லட்சுமி என்பவரை திருமணம்
 செய்து கொண்டாா்.
1970-களின் தொடக்கம் முதல் சக்தி பீடத்தை நிறுவி பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லிவந்தார். ஆன்மிகத்துடன் சமுதாய தொண்டையும் செய்துவந்த இவர், 1978-ல் முதன்முதலாக காஞ்சிபுரத்தில் ஆதிபராசக்தி 
வார வழிபாட்டு மன்றத்தைத் தொடக்கி வைத்தார். 
இன்றுவரை 2,500-க்கும் மேற்பட்ட வார வழிபாட்டு மன்றங்களும், 25-க்கும் மேற்பட்ட சக்தி பீடங்களும் மேல்மருவத்தூர் சித்தா் பீடத்துக்கு தொண்டாற்றி வருகின்றன.
பங்காரு அடிகளாரை பின்பற்றுபவர்களும் ஆதிபராசக்தி கோயிலின் பக்தர்களும் அவரை 'அம்மா' என்று அழைத்துவந்தனர். 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இவரை பின்பற்றுபவர்கள் 
உள்ளனர் என்று 
சொல்லப்படுகிறது. மேல்மருத்துவத்தூரில் இவர் தொடங்கிய
 அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் 
வழிபடலாம்
 என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். பங்காரு அடிகளார் ஆற்றிய சேவைக்காக மத்திய அரசு அவருக்கு 2019-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிதத்து என்பதும் குறிப்பிடத்தக்கது 



வியாழன், 19 அக்டோபர், 2023

நாரம்மல, தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்து ஒருவர் பலி, 18 பேர் காயம்

நாரம்மல, தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 51 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 18 பயணிகள் காயமடைந்துள்ளனர்.  
அலவ்வயில் இருந்து நாரம்மலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து இன்று (19.10) மதியம் நாரம்மல, தம்பெலஸ்ஸ என்ற இடத்தில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர். 
இதன்படி, சம்பவத்தைத் தொடர்ந்து 7 பேர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலும் 11 பேர் நாரம்மல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 18 அக்டோபர், 2023

நாட்டில் ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!!!

நாட்டில் ஒன்பது  மாவட்டங்களின் பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 
தெரிவித்துள்ளது.  
இதன்படி காலி, பதுளை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலகங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  
இந்த அறிவிப்புகள் இன்று (18.10) பிற்பகல் 03.00 மணி முதல் நாளை (19.10) பிற்பகல் 03.00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது .என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>!!!



செவ்வாய், 17 அக்டோபர், 2023

இலங்கைப் பெண் ஒருவர் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் பலி

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் பின்னர் காணாமல் போயிருந்த இலங்கையை சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
களனி ஈரியவெடிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட அனுலா ரத்நாயக்க (ஜயதிலக்க) என்பவரே தாக்குதலின் போது உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
 இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் சடலம் இரண்டு நாட்களுக்குள் இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
என்பதும் குறிப்பிடத்தக்கது. 



திங்கள், 16 அக்டோபர், 2023

திருமதி நடராசா திலகவதி ( திலகம் )31ம் நாள் நினைவஞ்சலி 17.10.2023

மறைவு-17-09-2023 .31ம் நாள் நினைவஞ்சலி 17-10-2023.
.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. 
 திருமதி  நடராசா திலகவதி ( திலகம் ) அவர்களின் 31ம் நாள்
 நினைவஞ்சலி 17-10-2023.செவ்வாய்க்கிழமை அன்றுஅவர்களின் 31ம் நாள்  வீட்டுகிருத்திய்  கிரீமலை அழைப்பிதழ்
15-19-2023. ஞாயிற்ருக்கிழமை  அன்று காலை 07,மணியளவில் கிரீமலை  தித்தக்கரையில்   ஆத்மா   சாந்திப்பிரத்தனை  
 நிகழ்வுகள்.17-10-2023.,செவாய்க்கிழமை பிற்பகல்,12,மணிஅளவில்  அன்னாரின் இல்லத்தில்  ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்  தொடர்ந்து நடைபெறும் 
மதியபோசன நிகழ்விலும்  கலந்து கொள்ளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்
 இங்கனம் -குடும்பத்தினர் 
எமக்கு ஆறுதல் கூறி உறுதுணையாக
 இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
 தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
 கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்
அன்னாரின் நீங்காத நினைவுகள்
காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இபபோது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
உங்கள் ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி!
வீட்டு முகவரி: 
நவற்கிரி கொட்டுவெளி 
ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் 
கோவிலடி 
நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்




ஞாயிறு, 15 அக்டோபர், 2023

மரண அறிவித்தல் அமரர் மாணிக்கம் கந்தசாமி 14.10.2023

.துயர் பகிர்வு மறைவு-14-10.2023.யாழ் புத்தூரை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட.
அமரர் மாணிக்கம் கந்தசாமி அவர்கள்  14-10-2023..சனிக்கிழமை அன்று 
இறைபாதம் அடைந்தார்
அன்னார்.ஸ்ரீதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்   தனுஷ் அவர்களின் அன்பு தந்தையும் துரைச் செல்வம்  செல்லம்மா அவர்களின் 
அன்பு மருமகனும் ஆவர் 
அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2023 ஞாயிற்ருக்கிழமை   
அன்று 10:00 மு.ப -12:30 பி.ப.மணி  வரை  அவரது  இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம் 15-10-2023 ஞாயிற்ருக்கிழமை அன்று
 நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
வீட்டுமுகவரி  
நவற்கிரி புத்தூர் 
தகவல் குடும்பத்தினர்





 

சனி, 14 அக்டோபர், 2023

மரண அறிவித்தல் அமரர் சின்னத்தம்பி (ரத்தி) அன்னம்மா.14.10.2023

துயர் பகிர்வு-மறைவு-14-10-2023 
யாழ்  அச்சுவேலியைப்பிறப்பிடமாகவும் நவற்கிரியை வாசிப்பிடமாகவும்  தற்போது தோப்பு அச்சுவேலி
வசித்து வந்த அமரர் சின்னத்தம்பி (ரத்தி)  அன்னம்மா.14-10-2023. அன்று   இறைபாதம் அடைந்தார். அன்னார் காலம் சென்ற
ரத்தி  அவர்களின் பாசமிகு மனைவியும் கணேசு கலா தேவா ஆனந்தன் வவா தேவி ஆகியோரின் அன்புத்  தாயாரும் ஆவர் அன்னாரின்
 இறுதிக்கிரியை 15-10-2023.அன்று மு.ப 10:30 மணியளவில்  அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் தோப்பு  இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெறும்   இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால்
  துயருறும்  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை  உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! சாந்தி !!! சாந்தி !!!
வீட்டுமுகவரி
தோப்பு அச்சுவேலி




 

வெள்ளி, 13 அக்டோபர், 2023

சகல பாடசாலைகளுக்கும் பிரான்ஸில் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

இன்று காலை Pas-de-Calais பிராந்தியத்தில் உள்ள d'Arras நகரில் lycée Gambetta எனும் உயர் நிலைப் பள்ளியில் செச்சென் நாட்டைச் சேர்ந்த 20 வயதான 'fiché S' குற்றப் பதிவில் அறியப்பட்ட அந்த பள்ளியின் பழைய 
மாணவன் நடத்திய பயங்கரவாத கத்திக்குத்து தாக்குதலில் ஒரு ஆசிரியர் கொல்லப்பட, ஒரு பேராசிரியரும் பாதுகாப்பு ஊழியரும் படுகாயம் அடைந்தது நீங்கள் அறிந்ததே.
 குறித்த தாக்குதலை நடத்திய நபர் DGSI பாதுகாப்பு வலையத்தில் உள்ளவர். நேற்றையதினம் வியாழக்கிழமை வழமையான விசாரணைக்காக காவல் நிலையம் சென்று வந்துள்ளார், அவரோடு சேர்த்து 
சந்தேகத்தின் பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ள 16 வயது சகோதரர் ஏற்கனவே பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்ட 
குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படு விடுதலையானவர்.
இந்த தாக்குதல் 2020 ஒக்டோபர் 16ம் திகதி ஏறத்தாழ மூன்று 
ஆண்டுகளுக்கு முன், வரலாறு மற்றும் புவியியல் பேராசிரியர் 47 வயதான Samuel Paty அவர்கள் Mahomet என்னும் பயங்கரவாதியால்
 கழுத்தறுத்து 
கொல்லப்பட்ட நாட்களோடு அருகில் இருப்பதால் நாடுமுழுவதும் உள்ள சகல பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 
வேண்டும் என உள்துறை அமைச்சர் Gérald Darmanin, தேசிய கல்வி அமைச்சர் Gabriel Attal. இருவரும் காவல்துறையினருக்கு வேண்டுகோள் 
விடுத்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வியாழன், 12 அக்டோபர், 2023

பருத்தித்துறையை சேர்ந்த குடும்பஸ்தர் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மரணம்!

சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த பருத்தித்துறையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்
 உயிரிழந்துள்ளார். வெளிச்சவீட்டு வீதி பருத்தித்துறையை சேர்ந்த பிலிப்பு ராஜசிங்கம் (வயது-52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையி ல் சைக்கிளில்
 ஏற்றி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கடந்த 7 ஆம் திகதி கொண்டு சென்றபோது தவறி கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினமே மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர்உயிரிழந்துள்ளார்.


 



 

புதன், 11 அக்டோபர், 2023

இலங்கையில் ரொட்டவெவ பிரதேசத்தில் யானை தாக்கி இருவர் பலி

மின்னேரிய ரொட்டவெவ பிரதேசத்தில் விறகு வெட்டச் சென்ற பெண் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக மின்னேரிய 
பொலிஸார் தெரிவித்தனர். 
 ரொட்டவெவ கல் ஓயா சந்தி பிரதேசத்தில் வசிக்கும் 66 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
 சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
 மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 இதேவேளை, தலாவ தொபேகம பிரதேசத்தில் விறகு வெட்டச் சென்ற ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக தலாவ பொலிஸார்
தெரிவித்தனர். 
 உயிரிழந்தவர் தலாவ தொபேகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 10 அக்டோபர், 2023

மன்னார் பம்பைமடு இராணுவ முகாமிற்கு அருகில் விபத்து பெண் ஒருவர் பலி

வவுனியா மன்னார் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது வவுனியா - மன்னார் வீதியில் பம்பைமடு இராணுவ முகாமிற்கு அருகில்10-10-2023. இன்று  இடம்பெற்றுள்ளது.
வவுனியா குருக்கள்புதுக்குளத்தில் இருந்து வவுனியா 
நோக்கி வந்த மோட்டார் சைக்கிளானது பம்பைமடு
 இராணுவ முகாமிற்கு அருகில் வீதியில் நின்ற மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதில் 45 வயதுடைய வி.ஜெயந்தினி என்பவர் பலியாகியுள்ளதுடன், அவரின் மகன் விஜயரட்னம் சிவரோஜன் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பூவரசங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 9 அக்டோபர், 2023

பாழடைந்த கட்டடத்தில் யாழ்ப்பாண ரயில் நிலையம் அருகே சடலம் மீட்பு

யாழ்ப்பாண ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து நபர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட நபர் அடையாளம் காணப்படாத நிலையில், 
யாழ்ப்பாண பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 8 அக்டோபர், 2023

நாட்டில் சில பகுதிகளுக்கு மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை

இலங்கையின் சில பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கத்திற்கான அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல இடங்களில் 
மாலை அல்லது இரவு வேளைகளில் கடுமையான 
மின்னலுடன் 
கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆகவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. 
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 7 அக்டோபர், 2023

நாட்டில் பத்தாயிரம் லீற்றர் பாலுடன் சென்ற பவுசர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து

நாட்டில் வட்டவளை லோனக் தோட்டத்திலிருந்து மீரிகம நோக்கி பத்தாயிரம் லீற்றர் பால் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
 கினிகத்தேன நோர்டன்பிரிட்ஜ் பிரதான வீதியின் லோனக் வத்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 லோனாக் தோட்டத்திலுள்ள கால்நடை பண்ணையிலிருந்து பத்தாயிரம் லீற்றர் திரவப் பாலை ஏற்றிச் சென்ற பவுசர், வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, ​​அப்பகுதியில் நிலவும் கடும் காலநிலை மற்றும் கடும் உறைபனி காரணமாக வீதியை விட்டு விலகிச் சென்றதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
 விபத்து இடம்பெறும் போது சாரதி மாத்திரமே பௌசரில் பயணித்துள்ளதாகவும், விபத்தில் சாரதிக்கு காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பிரதான வீதிகள் மற்றும் பக்க வீதிகளில் வாகனங்களை செலுத்தும் போது கவனமாகவும் மெதுவாகவும் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 6 அக்டோபர், 2023

மரண அறிவித்தல் திருமதி கயூரன் ஜனனி 06.10..2023

துயர் பகிர்வு-மறைவு-06-10-2023
யாழ் பூநகரியை பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட. திருமதி கயூரன் ஜனனி
அவர்கள் 06-102023.வெள்ளிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார் அன்னார் கயூரன் அவர்களின் பாசமிகு மனைவியும் 
மார்க்கண்டு அன்னலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்  திரு திருமதி நிர்மலநாதன் (சிவம் )சுதமதி(சுதம் ) ஆகியோரின் அன்பு மருமகளும் கேசிகன்  அவர்களின் அன்புத்  தாயாரும் ஆவர் 
அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2023..ஞாயிற்றுக்கிழமை அன்று 10:00 மு.ப -11:30 பி.ப.மணி  வரை  அவரது  இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம் 08-10-2023..ஞாயிற்றுக்கிழமை  அன்று
 நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
வீட்டு முகவரி: 
நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்  

வியாழன், 5 அக்டோபர், 2023

மரண அறிவித்தல் அமரர் செல்வராஜா அகிலேஸ்வரன் ( அருள் ) 04.10.2023

துயர் பகிர்வு
தோற்றம்-24-09-1982 . மறைவு-04-10.2023
.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட.அமரர் செல்வராஜா அகிலேஸ்வரன் (அருள் )   
  அவர்கள்  04-10-2023..புதன்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்
 அன்னார். காலஞ்சென்ற நாகநாதி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புப் பேரனும் திரு செல்வராஜா காலஞ்சென்ற இந்திராணி (பச்சை )அவர்கனின் பாசமிகு மகனும் ஆவர் 
அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2023 வியாழக்கிழமை  அன்று 10:00 மு.ப -12:30 பி.ப.மணி  வரை  அவரது  இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம் 05-10-2023 வியாழக்கிழமை  அன்று
 நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
வீட்டுமுகவரி  
நவற்கிரி புத்தூர் 
தகவல் குடும்பத்தினர் 

புதன், 4 அக்டோபர், 2023

சுற்றுலா பேருந்து கவிழ்ந்து இத்தாலியில் விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழப்பு

வடக்கு இத்தாலியின் வெனிஸ் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கேம்ப்கிரவுண்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் 
சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் குறைந்தது 21 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர் என்று அந்நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெனிசுடன் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ள மெஸ்ட்ரே மாவட்டத்தில் உள்ள ரயில் பாதைகளுக்கு அருகில் பேருந்து சாலையை விட்டு விலகி விழுந்ததாக கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, மேலும் காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக 
இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற 
கவலை உள்ளது.
முன்னதாக, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாகவும் அவர்களில் 4 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 3 அக்டோபர், 2023

தெலங்கானாவில் சாக்லேட் எடுக்க பிரிட்ஜை தொட்ட சிறுமி மின்சாரம் தாக்கி பலி

தெலங்கானாவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் குளிர்சாதன பெட்டியில் இருந்து சாக்லேட் எடுக்க முயன்ற 4 வயது சிறுமி, மின்சாரம்
 தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை 
ஏற்படுத்தி உள்ளது. 
தெலங்கானா மாநிலம் நவிபேட்டாவைச் சேர்ந்த சேகர், சம்யுக்தா 
தம்பதி தங்களது மகள் ரித்திஷாவை அழைத்து கொண்டு அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். விடுமுறை 
முடிந்து மீண்டும்
 வீட்டிற்கு கிளம்ப தயாரான அவர்கள், சில பொருட்களை வாங்குவதற்காக அருகில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு சென்றனர்.
அப்போது குளிர்சாதன பெட்டியில் இருந்து சாக்லேட் ஒன்றை 
எடுக்க முயன்ற சிறுமி மீது மின்சாரம் தாக்கியது. சிறுமியை 
மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு 
அழைத்து போது, 
அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் 
கூறியுள்ளனர். பல்பொருள் அங்காடி நிர்வாகத்தினரின் அலட்சியம் காரணமாகவே சிறுமி உயிரிழந்ததாக கூறி தர்ணாவில் ஈடுபட்ட உறவினர்கள் கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியதால்
 பரபரப்பு ஏற்பட்டது. 
தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் களைந்து சென்றனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 2 அக்டோபர், 2023

கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பிரான்சில் நால்வர் காயமடைந்துள்ளனர்

பிரான்சில் 01-10-2023ஞாயிற்றுக்கிழமை அன்று 
மாலை Trocadéro அருகே உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
 16 ஆம் வட்டாரத்தின் 2 boulevard Delessert எனும் முகவரியில் 
உள்ள கட்டிடம் ஒன்றின் மூன்றாவது தளத்தில் மாலை 6 மணி அளவில் தீ பரவியுள்ளது. தீயணைப்பு படையினர் விரைவாக அழக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. 
400 சதுரமீற்றர் பரப்பளவு கொண்ட தளத்தில் மிக வேகமாக பரவிய தீயினை சில நிமிடங்களிலேயே கட்டுப்படுத்தினார்.
 நூறு தீயணைப்பு படையினர்கள் இணைந்து தீயினை அணைத்துள்ளனர். இத்தீ பரவலில் நால்வர் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர்
.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


ஞாயிறு, 1 அக்டோபர், 2023

புத்தளம் பகுதியில் பாதசாரி கடவையில் முச்சக்கர வண்டி மோதி கர்ப்பிணி தாதி படுகாயம்

புத்தளம் பகுதியில்.01-10-2023. இன்று மாலை பாதசாரிகள் கடவையில் முச்சக்கர வண்டி மோதியதில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் 
படுகாயமடைந்துள்ளார்.
 புத்தளம் ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தாதியாக கடமையாற்றும் காயமடைந்த பெண், கடமைக்காக வைத்தியசாலைக்கு சென்றுகொண்டிருந்த போதே இவ்விபத்தில் 
சிக்கியுள்ளார்.
 ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவிக்கப்படும் குறித்த தாதி, மாவனெல்ல பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார்
 தெரிவித்தனர்.
 எனினும், முதலில் ஆபத்தான நிலையில் புத்தளம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 சம்பவம் இடம்பெற்ற போது குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
 புத்தளம் பொலிஸார் சாரதியை கைது செய்துள்ளதுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>