siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 25 ஜனவரி, 2017

குடியிருப்புக்குள் வேலியை உடைத்து புகுந்த காட்டுயானை!

வாகரை பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட ஆண்டாங்குளம் பகுதியிலுள் மக்கள் குடியிருப்பு பகுதியில் யானை மின்சாரவேலி அமைக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு புகுந்த காட்டு யானை மின்சார வேலியை உடைந்துவிட்டு குடியிருப்பு பகுதியில் யானைக்கூட்டம் 
புகுந்துள்ளது.
குறித்த பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை காரணமாக யானை பாதுகாப்பு மின்சாரவேலி அமைக்கப்பட்டிருந்தபோதும்,  பராமரிக்கும் வேளையில் வன ஜீவராசிகள் அதிகாரிகள் 
அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆனால் குறித்த பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் உட்புகுந்த நிலையில் குறித்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
செவ்வாய்கிழமை இரவு வேளையில் யானை பாதுகாப்பு மின்சார வேலியை உடைத்து குடியிருப்புக்குள் உட்புகுந்த யானைக்கூட்டம் அங்குள்ள வேளாண்மைப் பயிர்களை துவம்சம் செய்துள்ளதாக 
தெரிவித்தனர்.
இதேவேளை வாகரை கட்டுமுறிவுக் குளத்தின் பிரதான வீதி முற்றுமுழுதாக வெள்ள நீரினால் மூடப்பட்டுள்ள நிலையில் கட்டுமுறிவு அரசினர் பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் விசாயிகள் என பலர் போக்குவரத்து செய்வதில் பெரும்சிரமத்தை எதிர் நோக்கிவருவதாக தெரிவித்தனர்.
செவ்வாய்கிழமையில் இருந்து தொடர் தேர்ச்சியாக பெய்த அடைமழை காரணமாக ஆண்டான்குளம் உடைப்பெடுத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக