siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 27 அக்டோபர், 2024

நாட்டில் தெமட்டகொட புகையிரத நிலையத்திற்கு அருகில் அதிவேக ரயிலில் பாய்ந்து உயிரிழந்த மாணவன்

நாட்டில் கொழும்பு 7 இல் உள்ள முன்னணி அரச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 17 வயதுடைய மாணவன் ஒருவர் அதிவேக ரயிலில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். தெமட்டகொட புகையிரத .நிலையத்திற்கு அருகில் அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிஸார் 
கூறியுள்ளனர்.பேருவளையைச் சேர்ந்த மாணவன் நானுஓயாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதிவேக ரயிலில்
 மோதுண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  உயிரிழந்துள்ளார்.

 12ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் மருதானை பிரதேசத்திற்கு பாடசாலையில் விசேட நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றுவதற்காக வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 
 சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.






சனி, 26 அக்டோபர், 2024

நாட்டில் அலவல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஆறு வயது குழந்தை பலி


அத்தனகல்ல அலவல பிரதேசத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது குழந்தை மின்சாரம் தாக்கி 
உயிரிழந்துள்ளது.
அத்தனகல்ல அலவல பிரதேசத்தைச் சேர்ந்த தரம் 01 இல் கல்வி கற்கும் தேஜான் தினுவர என்ற மாணவரே இவ்வாறு 
உயிரிழந்துள்ளார்.
நேற்று (25.10) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்த குழந்தை எப்போதும் மின்சார பொம்மைகளுடன் விளையாடுவதை விரும்பக்கூடிய குழந்தை என 
தெரிவிக்கப்படுகிறது.
மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்த வேளையில் தாயும் தந்தையும் வீட்டில் வேறு வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில் குளிர்சாதனப் பெட்டிக்கு அருகில் குழந்தை கிடப்பதைக் கண்டு வட்டுபிட்டிவல அடிப்படை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது  





 

வெள்ளி, 25 அக்டோபர், 2024

யாழ் சங்கரத்தை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் எலிக்காய்ச்சலால் மரணம்

 எலிக்காய்ச்சல் காரணமாக யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் 
24-10-2024.அன்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
 கலைவாணி வீதி துணைவி சங்கரத்தை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சிறீஸ்காந்திராசா சிவாஸ்கர் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 இவருக்கு கடந்த 21ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 23 ஆம் திகதி சங்கானை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். 
 யாழ்ப்பணம் போதனை வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம்(24) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 
 எலிக்காய்ச்சல் காரணமாகவே குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது.




 

வியாழன், 24 அக்டோபர், 2024

யாழ் மயிலங்காடு ஏழாலை வீதியில் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் கைது

யாழ் சுன்னாகம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் 23-10-2024.அன்று  கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 02 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 800 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர் ஏழாலை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை 
சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 23 அக்டோபர், 2024

கிளிநொச்சியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அம்பியூலன்ஸ் வாகனம் விபத்து

நோயாளர்களை MR பரிசோதனைக்கு யாழ்ப்பாணம் அழைத்து சென்று மட்டக்களப்பு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அம்பியூலன்ஸ் வாகனம் கிளிநொச்சியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நோயாளர்களை MR பரிசோதனைக்கு யாழ்ப்பாணம் அழைத்து சென்று மட்டக்களப்பு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அம்பியூலன்ஸ் கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அம்பியூலன்ஸ் வாகனத்தில் மூன்று நோயாளர்கள் பயணித்த நிலையில் நோயாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை
. அவர்களும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.



செவ்வாய், 22 அக்டோபர், 2024

நாட்டில் மாத்தறை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது

நாட்டில் மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது 
செய்யப்பட்டுள்ளனர். 
 கடந்த 15ஆம் திகதி முச்சக்கரவண்டியில் பயணித்த நபரை காரில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். 
 துப்பாக்கிச் சூட்டில் சீசராக பணிபுரிந்த ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது என்பதாகும்





 

திங்கள், 21 அக்டோபர், 2024

நாட்டில் மஹியங்கனை பகுதியில் காணாமல் போன இரு பாடசாலை மாணவிகளில் ஒருவரின் சடலம்

நாட்டில் பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹியங்கனை பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் இரு பாடசாலை மாணவிகளில் ஒருவரின் சடலம் இன்று லொக்கல்ல ஓயாவில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த மாணவியின் நண்பி பொலிஸாரின் பாதுகாப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் பதளை - கந்தேகெதர பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய திலினி உபேக்ஷா என்ற மாணவியே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இருமாணவிகளும் கடந்த 20ஆம் திகதி பதுளை நகருக்கு மேலதிக வகுப்புக்கு சென்றிருந்த வேளையில் வீடு திரும்பாத நிலையில் காணாமல் போயிருந்ததாகவும் பொலிஸார் 
தெரிவிக்கின்றனர்.
மேலும், சம்பவத்தன்று சடலமாக மீட்கப்பட்ட மாணவி மற்றுமொரு மாணவியுடன் இணைந்து பதுளை நகரில் உள்ள மேலதிக வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, வீட்டை விட்டு வெளியே
 சென்றுள்ளார்.
வெளியே சென்ற மாணவிகள் இருவரும் மீண்டும் வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் இது தொடர்பில் பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இந்த மாணவிகள் தங்களின் புத்தகங்களை எங்களை தேட வேண்டாம் என்பதன் அடிப்படையில் கடிதங்களையும் எழுதி வைத்திருந்ததாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்ட மாணவியுடன் சென்ற மற்றைய மாணவி வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மாணவியை ரிதிமாலியத்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த மாணவி தற்போது ரிதிமாலியத்த பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது