siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 28 ஜூன், 2019

குழந்தையுடன் வீடு திரும்பிய பெண்ணுக்கு ஒரு வாரத்தின் பின் ஏற்பட்ட சோகம்!

யாழ்ப்பாணத்தில் பிரசவித்த ஆண் குழந்தையுடன் வீடு திரும்பிய பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மீசாலை, மேற்கு சாவகச்சேரியை சேர்ந்த குபேந்திரன் லோஜிதா என்ற 37 வயது பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.இந்த 
பெண் கடந்த 17ஆம் திகதி பிரசவத்திற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சத்திரசிகிச்சை மூலம் ஆண் குழந்தையொன்று பிறந்துடன், தாயும், சேயும் கடந்த 19ஆம்
 திகதி வீடு திரும்பியுள்ளனர்.இந்த நிலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பகுதியில் 
கிருமித்தொற்று ஏற்பட்டதாக தெரிவித்து நேற்று முன்தினம் மீண்டும் குறித்த பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எனினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்றைய தினம் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதன், 26 ஜூன், 2019

இளம் குடும்பஸ்தர் முல்லைத்தீவில் செய்த காரியம்

தனது தலையில் பெற்றோல் ஊற்றி பகிடிக்காக தற்கொலைக்கு முயன்ற இளம் கணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மனைவியுடன் ஏற்பட்ட வாய் தர்க்கத்தினால் அவர் இந்த காரியத்தை செய்துள்ளார்.
முல்லைத்தீவு தீர்த்தக்கரையினை சேர்ந்த 34 வயதுடைய இராசதுரை யோகராசா என்பவரே இவ்வாறு நேற்று இரவு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இது தொடர்பாக தெரிய வருவதாவது,
முல்லைத்தீவு தீர்த்தக்கரைப் பகுதியில் குடும்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக மனைவியுடன் பேசிவிட்டு தனது தலையில் பெற்றோலை ஊற்றி பகிடிக்காக தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்நிலையில் தீப்பற்றியதனால் விளையாட்டு விபரீதமாகி இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
இதன் போது எரிகாயங்களுக்கு உள்ளான குறித்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இவரது உயிரிழப்பு தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டன்   தமிழ் ஒளியில்  சிறுப்பிட்டி  கலைஞன் 
சத்தியதாஸின்   நேர்கானல்


சனி, 22 ஜூன், 2019

தந்தை முறைப்பாடு வவுனியாவிற்குச் சென்ற சகோதரர்கள் மாயமானதாக

சகோதரர்கள் இருவரைக் காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் தந்தை ஒருவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுங்கேணியிலிருந்து வவுனியாவிற்குச் சென்ற இருவரையே காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 20.06.2019 வியாழக்கிழமை வவுனியா வடக்கு, நெடுங்கேணி நயினாமடு பகுதியிலிருந்து வவுனியா நீதிமன்றத்தில்
 இடம்பெறும் வழக்கு விசாரணை ஒன்றிற்குச் சென்ற இருபிள்ளைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தந்தை ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.
விஜயசுந்தர் தர்சன் வயது 19, விஜயசுந்தர் நிதர்சன் வயது 16 ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளதாகவும் இவர்களை கண்டுபிடித்துத்தருமாறும் தந்தை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 21 ஜூன், 2019

விபத்தில் உடல் சிதறி யாழ் மிருசுவில் பகுதியில் பலியான பெண்

யாழ்ப்பாணம்- மிருசுவில் பகுதியில் கடுகதி ரயில் மோதிபெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மிருசுவில் - ஒட்டுவெளி பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகேஸ்வரி என்ற 50 வயதான பெண் வீட்டிலிருந்து புறப்பட்டு ரயில் பாதையை கடந்து, ஆலய வழிபாட்டில் ஈடுபட்டு மீண்டும் வீடு நோக்கி வருகையில், ரயில் பாதையினை கடக்கும் போதே விபத்து சம்பவித்துள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், கூடியிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்திவிட்டு, சிதைவடைந்த உடல் பாகங்களை அங்கிருந்து மீட்டுள்ளதாகவும் 
அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மிருசுவில் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 20 ஜூன், 2019

நீர்வேலிப் பகுதியில் விபத்தில் ஒருவர் படுகாயம்

யாழ் நீர்வேலிப் பகுதியில் வீதியின் குறுக்கே பாய்ந்த மாட்டினால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
 நடந்த இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் வீதியின் குறுக்காக வந்த மாட்டுடன் மோதி மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு
 செல்லப்பட்டுள்ளார்.
இவ்விபத்து நடந்த இடத்தில் காயமுற்றவருக்கு உறவானவர்கள் எவரும் இல்லை வீதியில் வந்த வாகனம்
ஒன்றில்தான் ஏற்றி வைத்திய சாலைக்கு அனுப்பியுள்ளார்கள்.குறித்த விபத்தில் காயமடைந்தவர் தொடர்பான விபரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.


தாயும் 2 பிள்ளைகளும்கொழும்பில் பரிதாபமாக பல


கொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக
 உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கோட்டையில் இருந்து அழுத்கம நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த மூவரும் மோதுண்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

சனி, 15 ஜூன், 2019

இலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்

இலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலால் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
நாளை மற்றும் , (15,16) மதுபானசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளது.
போசன் போயா தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 11 ஜூன், 2019

நள்ளிரவிலிருந்து பெற்றோலின் விலை அதிகரிப்பு

ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, அதன் புதியவிலை 138 ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.இது தவிர, ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் எதுவுமில்லையென தெரியவருகின்றது.இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலுக்கான இந்த விலை அதிகரிப்பு, 10,06,2019, நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத் தக்கது
கட்டுநாயக்கா விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள மிக மகிழ்ச்சியான செய்தி..!!
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




வெள்ளி, 7 ஜூன், 2019

அமரர் இராசதுரை குண்டுமணிதேவி 31ம் நாள் நினைவஞ்சலி 07,06,19

தோற்றம் .09 DEC 1945--மறைவு-08 MAY 2019
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் மேற்கு இராசவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை குண்டுமணிதேவி அவர்ககளின்,31நாள்  நினைவஞ்சலி  07-06-2019 இன்று  
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், இராசையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், 
இராசதுரை(செல்வராசா) அவர்களின் அன்பு மனைவியும், 
காலஞ்சென்றவர்களான திவாகரமூர்த்தி, ஸ்ரீகரன், கலைச்செல்வி(செல்வி- சுவிஸ்), கருணாகரன்(செல்வா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், 
இராசரஞ்சனி, அகிலானந்தன்(அகி- கனடா), மகேந்திரன், ஜனார்த்தனன்(ஜனா- சுவிஸ்) ஆகியோரின் வளர்ப்புத் தாயாரும்,  
கருணைவேல், பத்மாவதி, வேதேஸ்வரன், அனுஜா, சஞ்ஜீவனி  ஆகியோரின் அன்பு மாமியாரும், 
காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், நவரத்தினம், ஞானலிங்கம், இரத்தினசிங்கம், தவமணிதேவி, நீலமணிதேவி(உரும்பிராய்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  
சொர்ணமலர், அன்னலட்சுமி, மகேஸ்வரி, கமலாதேவி, இந்திராதேவி, தர்மராசா, கலாநிதி, பத்மநாதன், அற்புதநிதி, லிங்கேஸ்வரன், காலஞ்சென்றவர்களான இராசமணி, தியாகராசா, இரங்கநாதன், செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சஹானா, சஹீரன், திவானா, திவியன், கவிரா, கிருஷ்ணவி, ஐந்துயா, தயன், குணாளன், அஜந்தன், அவீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 என்றும் 
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின் 
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அம்மா 
என் செய்வோம் நாங்கள்? 
ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக இருந்து 
எம்மை வழிநடத்த வேண்டும் அம்மா! 
பாசத்தை அள்ளிக் கொடுத்தாய் 
அன்பால் அரவணைக்க கற்றுக் கொடுத்தாய்! 
பாசத்தின் பரம்பொருளே 
எம்மைக் காக்கும் கடவுள் அம்மா! 
உங்கள் பசுமையான நினைவுகளை 
எங்களால் மறக்க முடியவில்லை அம்மா 
உங்கள் பிரிவால் வாடும் 
குடும்பத்தினர் 
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
வீட்டு முகவரி: 
(ராஜா, வீதி ) 
நவற்கிரி .புத்தூர்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 செல்வராசா - கணவர் Phone : +94212058410  செல்வி - மகள் Mobile : +41315583625  செல்வா - மகன் Mobile : +33143053034  அகி Mobile : +16136974389  ஜனா Mobile : +41791387178
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 6 ஜூன், 2019

இலங்கை மின்சார சபை விடுக்கும் முக்கிய தகவல். வடக்கின் மின் தடை

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை, மின்சாரம்
 தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.யாழ்.பிரதேசத்தில்: இன்று வியாழக்கிழமை காலை 08.30 மணி முதல்
 மாலை 05.00 மணி வரை யாழ்.வாதரவத்தை, பெரிய பொக்கணை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 5 ஜூன், 2019

சாவகச்சேரியில் பெற்ற தயை அடித்து கொன்ற மகன்

யாழ் சாவகச்சேரியில் தாய் பெற்ற மகனால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் 04,06,2019,
மாலை நடந்ததுள்ளது.
மகனின் தாக்குதலில் படுகாயமடைந்த தாயார், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்
 இன்று உயிரிழந்துள்ளார்.
இந்த கொலையை எதற்காக இடம் பற்றது என்பது தொடர்பில் எந்த ஒரு தகவலும் வெளிவர வில்லை.
தாக்குதலுக்கு உள்ளான தாய் துடி.. துடித்த இறந்ததாக வைத்திய சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>