siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

பெருமகிழ்ச்சியான செய்தி..தங்கத்தின் விலையில் திடீர்ச் சரிவு

தங்கத்தின் விலை கடந்த வாரம் முதல் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது. ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்துக்குக் கீழே வந்த நிலையில் பொதுமக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.ஆனால், மீண்டும் தங்கம் பவுன் ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியது.
இதனிடையே கடந்த 24 ஆம் திகதி முதல் விலை குறைந்தது. மறுநாள் தங்கம் பவுன் மீண்டும் ரூ.35 ஆயிரத்துக்குக் கீழ் வந்தது. நேற்று பவுனுக்கு ரூ.72 குறைந்து ரூ.34 ஆயிரத்து 904க்கு விற்றது. இந்த நிலையில், இன்று 4-வது நாளாக விலை குறைந்தது.சென்னையில்28-02-2021, இன்று
 காலை ஆபரணத் தங்கத்தின் விலையில் பவுனுக்கு 
ரூ.256 குறைந்து ரூ.34 ஆயிரத்து 648-க்கு விற்கிறது
.கிராமுக்கு ரூ.32 குறைந்து ரு.4 ஆயிரத்து 331 ஆக உள்ளது. வெள்ளி விலையைப்பொறுத்தவரைக் கிலோவுக்கு 
ரூ.800 குறைந்து
 ரூ.72 ஆயிரத்து 500 ஆக உள்ளது.ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50-க்கு விற்கிறது.தங்க விலையைப் பொறுத்தவரைப் பவுனுக்கு 4 நாட்களில் ரூ.664 குறைந்துள்ளது. இது நடுத்தர மக்களிடையே சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>
சனி, 27 பிப்ரவரி, 2021

நினைவஞ்சலி திருமதி சின்னத்துரை கமலாம்பிகை 27.02.21

திதி -.27-02.2021யாழ்.அச்சுவேலி தோப்பைப்பிறப்பிடமாகவும்கனடாவை  வதிவிடமாககொண்டிருந்த திருமதி 
சின்னத்துரை கமலாம்பிகை அவர்களின் ஆறாம் ஆண்டு 
ஆறாம் ஆண்டு.நினைவஞ்சலி 27 ,02 2021 சனிக்கிழமை அன்று 
நீங்காத நினைவுகள் 
காலங்கள் கடந்தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்
அன்பென்ற சொல்லின் அர்த்தமும் மறந்துவிட்டது உங்கள் மறைவுடனே
உண்ணும் உணவும் சுவை இழந்துவிட்டது போல்
உணர்கின்றோம் உங்கள் 
கைகள்  படாததனால்
கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இப்போது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
ஆன்மா சாந்திக்காக போதிப்பிள்ளையார் 
அருள் வேண்டி பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
  ஆறாம்  ஆண்டு  நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி 1 ஓம் சாந்தி 

நிலாவரை.கொம் செய்திகள் >>>


கொள்ளுபிட்டியில் பத்தாவது மாடியில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை

கொழும்பு, கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள ஒரு முன்னணி தனியார் வைத்தியசாலையின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்
இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.இவ்வாறு தற்கொலை செய்து
 கொண்டவர் ஒரு முன்னணி தொழிலதிபரின் 30 வயதுடைய புதல்வர் எனவும் கூறப்படுகின்றது.மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொள்ளுபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>தியலும நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த 9 வயதுச் சிறுவன்

தியலும நீர்வீழ்ச்சியில் மூழ்கி 9 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
26-02-2021,நேற்று வெள்ளிக்கிழமை மாலை 
நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது அவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கொஸ்லாந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்
.சிறுவனின சடலத்தை குறித்த கிராம பகுதி மக்கள் அனைவரும் இணைந்து நீர்வீழ்ச்சியிலிருந்து 
மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.மேலும், குறித்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் மாகந்துரை, மாவரெல்லை
 பகுதியைச் சேர்ந்தவன் எனவும் கொஸ்லாந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 25 பிப்ரவரி, 2021

நாட்டில் இன்றுடன் முதலாம் தவ​ணை கல்வி நடவடிக்கைகள் நிறைவு

 
நாட்டில் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவ​ணை கல்வி நடவடிக்கைகள்,25-02-2021, இன்று நிறைவடைகின்றன.
இதனிடையே, 2020 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு 
தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், இந்த வருடத்திற்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 24 பிப்ரவரி, 2021

கோர விபத்து.யாழ். ஏ9 வீதி சாவகச்சேரியில் இளைஞன் மரணம்

தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் 23-02-2021.அன்று, மதியம் சாவகச்சேரி ஐயா கடையடிப் பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.சாவகச்சேரியிலிருந்து 
கொடிகாமம் நோக்கிச் சென்ற ஹயஸ் வானும் கொடிகாமத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது
.இதில், நெல்லியடியை சேர்ந்த ஜெகன் அன்ரனி சியம் (வயது – 20) என்பவர் உயிரிழந்துள்ளார்.அத்துடன் பருத்தித்துறை 
கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த 
சந்தகுமார் சுதர்சன் (வயது 24) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும், இந்த விபத்து சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை 
மேற்கொண்டுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>
மரண அறிவித்தல் திருமதி இரசரட்ணம் செல்லம்மா 24-02 -2021.

பிறப்பு-08-03-1940--இறப்பு-24-02 -2021.
யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இரசரட்ணம் செல்லம்மா அவர்கள்
.24-02-2021, புதன்கிழமை  இன்று இயற்கை எய்தினார். 
 . அன்னார்,திரு . இரசரட்ணம்அவர்களின்,அன்புமனைவியும் செல்வரத்தினம் (இலங்கை )அருளம்மா (இலங்கை ) தாமோதரம்பிள்ளை (சுவிஸ் ) செல்வச்சரஸ்வதி (இலங்கை ) கனகலிங்கம்  (சுவிஸ் ) மகிளேஸ்வரி (இலங்கை )பாலசுந்தரம் (இலங்கை )ஆகியோரின்  பாசமிகு தாயாரும்   இந்துமலர் பாலசிங்கம்
தா,வசந்தி .லி ,வசந்தி ,சுசி , சுபா  ஜெயநாதன் (ஜெயம்,இலங்கை )
தட்ச ணாமூர்த்தி (இலங்கை )ஆகியோரின் அன்பு மாமியும்,பாமினி  பாலச்சந்திரன் ,றஜீபா  பகீதரன் லோவிதான்  கஜேந்திரன் .கெளசலா  லவணியா  சங்கவி சாந்தரூபன் யாழினி தயாரூபன் அஜீபன்  அஜீதா  அனித்தா  டிலானி நிலவன் மிதுனன் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் கஸ்தூரி சாரு அரூஸ் வீராத்  யஸ்வினி, யஸ்மிதா வர்சிகா  அஸ்விகா,ஆகியோரின்அன்புப் பூட்டியும்  ஆவர்  அன்னாரின் இறுதிக்கிரியை  
25-02-2021,வியாழக்கிழமை ,அன்று 
மு.ப 09:00 மணி முதல் ந.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி  நிலாவரை  இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெறும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் கணவன்  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை பூ ட்ட ப்பிள்ளைகள்,உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
 வீட்டு முகவரி: 
நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

தொண்டமானாற்றுக் கடலில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

தொண்டமானாறு சின்னக் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுயநினைவற்ற
 நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தார் என்று ஊரணி பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்பு கடலில் இருந்து
 சிறுவன் மீட்கப்பட்டார்.
உடனடியாக வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிறுவன் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.உடுப்பிட்டி சந்தை பகுதியைச் சேர்ந்த நல்லைநாதன் அவர்காஸ் (வயது-17) என்ற சிறுவனே கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
ஒரே பகுதியைச் சேர்ந்த ஒன்பது பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது இந்த இடர் இடம்பெற்றது.சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

மரண அறிவித்தல் திரு சிவசம்பு இந்திரகுமார் வசீகரன் 20 02 -2021

 இறப்பு-20 02 -2021 
 யாழ்/.தோப்பு அ ச் வேலியை பிறப்பிடமாகக் கொண்ட  திரு சிவசம்பு  இந்திரகுமார் அவர்களின் புதல்வன்  தோப்பு  அச்சுவேலியையும் புத்தூரையும் பிறப்பிடமாகவும் , கனடாவைவதிவிடமாகக் கொண்டதிரு திருமதி  இந்திரகுமார் ஞானசீலி தம்பதிகளின்  அன்பு மகன் வசீகரன் அவர்கள் 20.02.2021 சனிக்கிழமை இறைவனடி எய்தியுள்ளார்  நல்லடக்கம் பின்னர் இதே இணையத்தில் இணக்கப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
தகவல்: குடும்பத்தினர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>

சனி, 20 பிப்ரவரி, 2021

மோட்டார் சைக்கிலை மோதித்தள்ளிய பட்டா ரக வாகனம் வவுனியாவில் ஒருவர் .படுகா.யம்

வவுனியா இலுப்பையடி சந்தி மரக்கறி சந்திக்கு அருகாமையில் பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிலை மோதித்தள்ளியதில் ஒருவர் ப.டுகாய.மடை.ந்த நிலையில் வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலுப்படிசந்தியில்  20.02.2021,இன்று,இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து ச.ம்ப.வம் தொடர்பில் மேலும் 
தெரியவருகையில்,
ஹோரவப்போத்தானை வீதியுடாக கோழி இறைச்சி சந்தை நோக்கி சென்ற பட்டா ரக வாகனம் வீதியில் முன்பாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிலை மோதித்தள்ளியதுடன் பட்டா ரக வாகனத்தின் சில் பகுதியில் மோட்டார் சைக்கில் சிக்கிக்குன்டது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி படு.காயம.டைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விப.த்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து 
வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>நல்லூர் கோவில் வீதியில் மிதிவண்டியில் பயணித்த முதியவர் மயங்கி விழுந்து மரணம்

யாழ் நல்லூர் கோவில் வீதியில் கொழும்புத்துறையில் இருந்து திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி வாங்க சென்ற 75 வயதுடைய முதியவர் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை மயக்கமடைந்த நிலையில் நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார் .
கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய நபரே இவ்வாறு வீதியில் மிதி வண்டியில் பயணித்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். உயிரிழந்தவர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என 
சந்தேகிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் மரக்கறி கடை நடாத்துபவர் இன்று காலை வீட்டில் இருந்து மரக்கறி வாங்க திருநெல்வேலி பொதுச் சந்தைக்கு சைக்கிளில் சென்றதாகவும் அவரது உறவினர்கள் 
தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>அகாலமரணம் திரு தவநேசன் ஜதுர்சன் 19 02 -2021

பிறப்பு-27 -01-1995--இறப்பு-19 02 -2021
யாழ். நீர்வேலி அச்செழுவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு தவநேசன் ஜதுர்சன் (யாழ் இந்துக் கல்லூரி,பழைய மாணவன் - அச்செழு Smart Holdings நிறுவன உரிமையாளர்)அவர்கள் 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, இராஜேஸ்வரி தம்பதிகள், பாலகிருஷ்ணன் ஸ்ரீ மகா யோகேஸ்வரி தம்பதிகளின் 
அன்புப் பேரனும்,
 தவநேசன் ஜெயந்தி தம்பதிகளின் அன்பு மகனும்,
 துவாரகா(பிரான்ஸ்), கார்த்திகன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற கபிலேசன், பிரதாயினி(யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் 
அன்புச் சகோதரரும்,
 சுகந்தகுமார், டிலக்சிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 ஹாசினி, ஹரிஸ், ஹரித்ராம் ஆகியோரின் அன்பு மாமாவும்,
 மாயா, பூயா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 21-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அச்செழு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 தவநேசன் ஜெயந்தி - பெற்றோர்Mobile : +94766211154   
கார்த்தி - சகோதரர்Mobile : +17164004369   துவாரகா சுகந்தன் - 
சகோதரிMobile : +33749453616  

நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

இன்று அதிகாலை கிளிநொச்சி நகரில் கோர விபத்து..சாரதிக்கு நேர்ந்த கதி.

கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில், சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் ஏ9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, “
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரஊர்தியின் பின்பகுதியில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.நெல் ஏற்றி
 சென்ற பாரஊர்தியின் சாரதி துயில்வதற்காக வீதியின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். இதன்போது யாழிலிருந்து 
தெற்கு நோக்கி பயணித்த மற்றுமொரு பாரஊர்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதியுள்ளது.குறித்த 
விபத்தில் மோதிய 
பாரஊர்தி, பாரிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளதுடன், சாரதி சாதாரண காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து
 வருகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>வியாழன், 18 பிப்ரவரி, 2021

மரண அறிவித்தல் திரு நாகலிங்கம் பத்மநாதன் 17 02-21

பிறப்பு-28 02-1956--இறப்பு-17 02-2021
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பத்மநாதன் அவர்கள் 17-02-2021 புதன்கிழமை அன்று காலமனார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், நாகலெட்சுமி(செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு பொன்னம்மா
 தம்பதிகளின் அன்பு மருமகனும், கலாநிதி அவர்களின் அன்புக் கணவரும், நிரோஷன், அனோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும், கிருத்திகா அவர்களின் அன்பு மாமனாரும், மங்கையற்கரசி, 
யோகேஸ்வரி, பாக்கியலெட்சுமி, தில்லைநடராஜன், வசந்தாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், சிவஞானம் மற்றும் பேரின்பநாதன், 
சறோஜாதேவி, மதுரநாயகம், காலஞ்சென்ற பரமானந்தன்(தபால் அதிபர்- புங்குடுதீவு), மதியாபரணம், காலஞ்சென்றவர்களான 
சத்தியசீலன், பாக்கியம், பங்கயம் மற்றும் பரமேஸ்வரி, நல்லம்மா, கோபலபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும், கிஷான் அவர்களின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionThursday, 18 Feb 2021 11:00 AM - 4:00 PMFriday, 19 Feb 2021 11:00 AM - 4:00 PMSaturday, 20 Feb 2021 8:30 AM - 11:30 AMSunday, 21 Feb 2021 8:30 AM - 11:30 AM
Aufbahrung Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerlandகிரியை Get DirectionMonday, 22 Feb 2021 9:00 AM - 1:30 PM
Aufbahrung Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerlandதகனம் Get DirectionMonday, 22 Feb 2021 1:30 PM - 2:00 PM
Aufbahrung Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
 குடும்பத்தினர்Mobile : +41794739124  Phone : +41447132688 சுவாஷ்(மங்கையற்கரசி) - அக்காMobile : +14168880728   யோகேஸ்வரி - அக்காMobile : +33988028990   பேரின்பநாதன் பாக்கியலட்சுமி - தங்கைMobile : +41796910771 தில்லைநடராஜன் - தம்பிMobile : +493035305600   மதுரநாயகம்(வசந்தாதேவி) - தங்கைMobile : +31318632970   தீனா கிரிதரன் - மருமகன்Mobile : +41787321816   

நிலாவரை.கொம் செய்திகள் >>>

வத்தளையில் வீதியை கடக்க முயன்ற பெண்ணொருவர் லொறி மோதி மரணம்

 வத்தளையில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
18-02-2021, இன்று காலை வீதி கடவையில், வீதியை கடக்க முற்பட்டபோது, எதிரே வந்த  லொறி மோதிச் சென்றதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 இதையடுத்து, காயமடைந்த குறித்த பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர்.
 வத்தளை பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான சசிகலா ஜெயதீஸ்வரன் என்ற ஆசிரியை ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. . 
 இவ்விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வத்தளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

நிலாவரை.கொம் செய்திகள் >>>புதன், 17 பிப்ரவரி, 2021

வவுனியாவில் வெளிநாட்டு பண விவகாரம் ஆறு பேர் கைது

¨

 
வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பாக வவுனியா காவல் துறைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய. ஆறு பேர்.16-02-2021 நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
 வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவரிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய சிலர் தாம் மத்திய வங்கியில் இருந்து கதைப்பதாக தெரிவித்ததுடன், அவரது 
வங்கிக்கணக்கில் பத்தாயிரம் கோடி
 ரூபாய் பணம் அமெரிக்க நாட்டிலிருந்து
 வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதனை
 வெளியில் எடுப்பதற்கு உதவி செய்வதாகவும் தெரிவித்து, 7500 கோடியை
 தங்களுக்கு தருமாறும் 2500 கோடியை குறித்த இளைஞருக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
 குறித்த விடயம் தொடர்பாக அந்த இளைஞரும் கடந்த வருடம் ஜூன் ஆம் மாதத்திலிருந்து அந்த குழுவினருடன் இணைந்து கொழும்பில் தங்கிவந்துள்ளார்.
 இதேவேளை கொழும்பில் வைத்து அவரது வங்கிகணக்கில் ஒரு இலட்சம் கோடி மதிப்பிலான இலங்கை ரூபாய் வங்கி கணக்கில் வைப்பில் இடப்பட்டுள்ளதாக அந்த குழு இளைஞரிடம் தெரிவித்துள்ளது. எனினும் பணம் எடுக்கமுடியாத நிலையில் மீண்டும் அவர் வவுனியாவிற்கு 
வந்துள்ளார்.
 இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த இளைஞரை மீண்டும் தொடர்புகொண்ட அந்த குழுவினர் பணத்தை மீட்பதற்காக கொழும்பு செல்வதாக தெரிவித்து அவரை வாகனம் ஒன்றில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர். குறித்த இளைஞர் அவர்களுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்..
 இந்நிலையில் இளைஞனின் நண்பன் வழங்கிய தகவலிற்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிற்கு குறித்த விடயம் தெரியப்படுத்தப்பட்டது. பொலிசார் அந்த குழுவினரை
 கைதுசெய்தனர்..
 இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் வவுனியா குற்றத்தடுப்பு காவல் துறை  குறித்த இளைஞனிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளதுடன், இது தொடர்பாக மத்திய வங்கிக்கும் தெரியப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 இதேவேளை கைதுசெய்யப்பட்ட 6 நபர்களும் கொழும்பு, அவிசாவளை, குருநாகல், மற்றும் வவுனியா போன்ற 
பகுதிகளை வசிப்பிடமாக கொண்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய மூன்று சொகுசு வாகனங்களும் காவல் துறையால்  மீட்கப்பட்டுள்ளது.
 குறித்த இளைஞர் அவர்களுடன் செல்வதற்கு
 மறுப்பு தெரிவித்தால் அவரை கடத்திச்செல்லும் நோக்குடன் அந்த குழு   வந்திருக்கலாம் என காவல் துறை  தரப்பில் சந்தேகம்
 வெளியிடப்பட்டுள்ளது. 7

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

மரண அறிவித்தல்,அமரர் சின்னத்துரை சிவபாக்கியம் (பாக்கியம்)16 -02- 21

தோற்றம்-02-04-1945-மறைவு-16 -02- 2021
யாழ். நல்லூரை  பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்துரை சிவபாக்கியம் (பாக்கியம்)
 அவர்கள் 16-02-2021 செவ்வாய்க்கிழமை  அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை
அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவர் அன்னார் கலைச்செல்வி (செல்வி,சுவிஸ் )  அவர்களின்
அன்புத்தாயாரும் திரு  அம்பலவாணர் இராஜேஸ்வரன்(ராஜன்.சுவிஸ் )அவர்களின் அன்பு மாமியாரும் ஆவர் 
  அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நல்லூர்  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!

நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 15 பிப்ரவரி, 2021

கட்டிடத்திலிருந்து தவறி வீழ்ந்து வெள்ளவத்தையில் இளைஞன்மரணம்

வெள்ளவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய கட்டடம் ஒன்றிலிருந்து கீழே விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 7.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அந்த நபர் கட்டடத்தில் 
பணியாற்றும் நபர் அல்ல என்ன தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 30 வயதுடைய நபராகும். எனினும் அவரது அடையாளங்கள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை 
என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.வெள்ளவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>பதுளையில் பாடசாலைக்குச் சென்ற இரட்டையர்களில் ஒருவருக்கு நேர்ந்த சோகம்

பதுளையில் தரம் 1 மாணவர்கள் பாடசாலைகளில் ,15-02-2021,இன்று இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள். தனது வாழ்க்கையில் முதன்முறையாக இன்று பாடசாலைக்கு அடியெடுத்து 
வைக்கும் கனவுடன் சென்ற மாணவனொருவனே பரிதாபகரமாக உயிரிழந்தார்,15-02-2021.இன்று காலை 7.20 மணியளவில் பதுளை பெட்ரோல் நிலையம் முன் 
பாரவூர்தி மோதி மாணவன் உயிரிழந்தார்.உயிரிழந்தவர் பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்யாலயாவின் முதல் வகுப்பு மாணவரான, அசெலபுரவில் வசிப்பவரான சிவனேசன் வருண் (6) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இரட்டையர்களான 
இரண்டு மாணவர்கள் இன்று முதல்நாள் பாடசாலையில் இணைக்கப்படவிருந்தனர். அவர்களை பாட்டி பாடசாலைக்கு அழைத்து சென்றார். இதன்போது இந்த விபத்து நேர்ந்தது.
விபத்தில் பாட்டியும் பலத்த காயமடைந்தார். இரட்டையரான மற்ற மாணவன் அதிஷ்டவசமாக காயங்களின்றி தப்பித்தார்.பாட்டி பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாரவூர்தி சாரதி கைது 
செய்யப்பட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>வியாழன், 11 பிப்ரவரி, 2021

சுங்கான் குழி குளத்தில் தோணி கவிழ்ந்து மீனவர் பலி

கிண்ணியா சுங்கான் குழி குளத்தில் 10-02-2021.அன்று மாலை 6.30 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளை தோணி கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போன சம்பவம் ஒன்று 
நிகழ்ந்துள்ளது.
நடு ஊற்று சுனாமி குடியேற்றத் திட்டத்தில் வசித்து வந்த 2 மீனவர்கள் நேற்று புதன்கிழமை மாலை சுங்கான் குழி குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இவ்வாறு காணாமல் போனவர் 77 வயதுடைய நபர் என
 தெரியவருகிறது.
இருவரும் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளை தோணி கவிழ்ந்ததை அடுத்து ஒருவர் நீந்தி கரையை அடைந்து உள்ளார் மற்றவர் காணாமல் போயுள்ளார்.
இதுகுறித்து, காவல்துறையினருக்கு தகவல் 
வழங்கியுள்ளார்கள்.காணாமற்போன வரை தேடும் பணியில் பொது மக்கள் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்த நிலையில் உயிரிழந்தவரின் சடலம் 
கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 10 பிப்ரவரி, 2021

நாட்டில் நுண்கடனை பெற்றுக்கொண்டசுமார் 200 பெண்கள் தற்கொலை

மது அவசர தேவைக்கென நுண்கடனை பெற்றுக்கொண்டநிலையில் அதனை திரும்ப செலுத்த முடியாமல் சுமார் 200 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் 
வெளியாகியுள்ளன.
அத்தோடு நுண்கடனை செலுத்த முடியாத பெண்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதுடன் பாலியல் இலஞ்சமும் கோரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலே அவர்கள் இவ் விபரீத முடிவை எடுத்துள்ளனர் என தெரியவருகின்றது.
மேலும் இந்த நுண்கடன் திட்டத்தின் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெண்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு மலையகத்திலுள்ள பெண்களும் இதே நுண்கடன் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருவதாக பிரபல திரைப்பட நடிகையான நிரஞ்ஜனி சண்முகராஜா தகவல் வெளியிட்டுள்ளார். 

நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

சந்தனவெட்டையில் யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு சிறுவன் மரணம்


திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தனவெட்டைப் பகுதியில் யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு எட்டு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.09-02-2021. இன்று  காலை இடம்பெற்றுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் சந்தனவெட்டை வித்தியாலயத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் இந்திரன் ரஜீதன் எனும் 8 வயதுச் சிறுவன் என,சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இச்சிறுவன் இரண்டு பிள்ளைகளைக் கொண்ட சிறிய குடும்பத்தின் முதலாவது பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த சிறுவன் பாடசாலைக்குச் செல்வதற்காக தயாராகி மலசலம் கழிப்பதற்காகச் சென்ற போது,யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அத்தோடு உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் யானை பாதுகாப்புக்குகான மின்சார வேலிக்கு
 மின்சாரத்தை போட்டுவிட்டு அதனை அணைக்காமல் சென்றமையே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் எனவும்,அது தொடர்பில் அதற்கு பொறுப்பான இரண்டு சந்தேகநபர்களையும் சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர் என்பது 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>கற்குழி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு

வவுனியா கற்குழி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 16 வயது மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் வீட்டில் யாருமற்ற நிலையில் அவரது தங்கையுடன் குறித்த சிறுமி இருந்துள்ளார்.
இந்நிலையில் அவர் தூக்கில் தொங்கியிருப்பதை அவதானித்த அவரது தங்கை அயலவர்களிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தினை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து 
வருகின்றனர்.
கற்குழி பகுதியை சேர்ந்த சதுசியா வயது 16 என்ற சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். அவர் எழுதியதாக தெரிவிக்கப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>திங்கள், 8 பிப்ரவரி, 2021

மரண அறிவித்தல் திரு கந்தையா தனபாலசிங்கம் (தனபால்)08 .02-.21

தோற்றம்-01-08-1953-மறைவு-08 -02- 2021
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தனபாலசிங்கம்(முருகா லொறி உரிமையாளர்.தனபாலன் )  அவர்கள் 08-02-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான 
கந்தையா பவளம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா அன்னமுத்து தம்பதிகளின் 
அன்பு மருமகனும், ஜெயமலர் அவர்களின் அன்புக் கணவரும், சயந்தன்(பிரான்ஸ்), சஜீவன்(ஜேர்மனி), சாருதன்(பிரான்ஸ்), சங்கீதன்(பிரான்ஸ்), சர்மிலன்(இலங்கை) ஆகியோரின் 
பாசமிகு தந்தையும், நளாயினி, றஞ்சினி, யாழினி, சர்மிளா, சிவசாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும், இரத்தினம்மா(கிளி- கனடா), காலஞ்சென்ற கமலாதேவி, புஸ்பரானி(ரானி) (இலங்கை), தனலட்சுமி(இலங்கை), சிவனடி(பிரான்ஸ்), சிறிஸ்கந்தராஜா(கனடா), மகேஸ்வரன்(ரூபன்- கனடா), காலஞ்சென்ற பூபாலசிங்கம்ஆகியோரின் 
அன்புச் சகோதரரும், 
காலஞ்சென்றவர்களான கந்தசாமி(துரை), சின்னத்துரை(பத்தமேனி), சின்னத்துரை(நவ ற்கிரி) மற்றும் புலேந்திரன்(இலங்கை), தயாவதி(பிரான்ஸ்), சிவாஜினி(கனடா), காமினி(கனடா), காலஞ்சென்ற அரவிந்தமலர், திருவருள்நாதன்(சுவிஸ்), இலட்சியநாதன்(இலங்கை), வேலருள்(சுவிஸ்), காலஞ்சென்ற தனமலர்(அத்தா), சிவகரன்(சேரங்கன்- கனடா), ரவீந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் 
அன்பு மைத்துனரும், றெனிசன், சஞ்ஜீவ், சாகித்யன், அபிசாந்த், அக்சித், அஸ்விகா, நிதுன், மகிழினி 
ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2021 செவ்வாய்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தீர்த்தாங்குள இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
 வீட்டு முகவரி: 
அச்சுவேலி பத்தமேனி
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 சயந்தன் - மகன்Mobile : +33664591195   சஜீவன் - மகன்Mobile : +4915251721517   சாருதன் - மகன்Mobile : +33648151491   சங்கீதன் - மகன்Mobile : +33647554643   சர்மிலன் - மகன்Mobile : +94755570220   சிவனடி - தம்பிMobile : +33148327973   சிறி - தம்பிMobile : +14165097777   ரூபன் - தம்பிMobile : +14166710304   பிரபாகரன்(ஐயா) - மருமகன்Mobile : +14165435068  

நிலாவரை.கொம் செய்திகள் >>>