siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 31 மார்ச், 2021

சாவகச்சேரியில் தூக்கிலிட்டு பாடசாலை மாணவி தற்கொலை

யாழ்தென்மராட்சி  சாவகச்சேரியில் 30-03-2021.அன்று  மாலை தற்கொலைக்கு முயற்சித்த மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
.மாணவியின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்நிலையில், தற்கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு புதிய தடை!!!

நாட்டில்  ஆறு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு 31 -03-2011.இன்று  முதல் உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த அமைச்சு இது தொடர்பில் தெரிவித்துள்ளது.
அதன்படி ஒரு தடவை மாத்திரம் பாவித்து வீசப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தியான பெட் போத்தலுக்கு (Polyethylene Terepthalate) தடை விதிக்கப்படவுள்ளது.அதேபோல் 20 மைக்ரோ கிராமுக்கு
 குறைவான லஞ் சீட், செஷே பெக்கட்ஸ் (உணவு 
மற்றும் மருந்து 
அல்லாத) கொட்டன் பட், ( வைத்திய தேவைக்காக பயன்படுத்தப்படாத) மற்றும் காற்று நிரப்பக்கூடிய பிளாஸ்டிக் விளையாட்டு 
பொருட்களும் தடை செய்யப்படவுள்ளன.நிறுவனங்கள் பல முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மேற்படி பொருட்களை நாளை முதல் தடை செய்வதாக சுற்றுச்சூழல் அமைச்சர் நேற்று (29) நடத்திய ஊடகச் சந்திப்பில் 
தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

கோர விபத்து.கிளிநொச்சி ஏ-09 வீதியில் .ஒருவர் ஸ்தலத்தில் பலி. இருவர் படுகாயம்

கிளிநொச்சி ஏ-9 வீதி கந்தசுவாமி கோயில் முன்பாக 30-03-2021.அன்று  மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மூவரில் ஒருவரே
 உயிரிழந்துள்ளதாக
 பொலிஸார் தெரிவிக்கின்றனர்.ஏ-9 வீதி வழியாக பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியால் நடந்து சென்றவருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதேவேளை, காயமடைந்த மற்றைய நபர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து 
வருகின்றனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 30 மார்ச், 2021

கோர விபத்து. உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்பும் வழியில் சிறுமி பலி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த மகிழுந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும் விபத்தின்போது, குறித்த வாகனத்தினுள் 5 பேர் இருந்துள்ளதாகவும் இராஜாங்கனை பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள்மார் மூவர் பெலிஅத்த பிரதேசத்திலுள்ள தமது உறவினர் வீட்டுக்குச் சென்று, மீண்டும் வீடு திரும்பியபோது, இராஜாங்கனை,அடம்பனே பிரதேசத்திலுள்ள தமது வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையில் இந்தக் கோர சம்பவம் சம்பவித்துள்ளது.
விபத்தில் இக்குடும்பத்தின் இளைய மகளே பலியாகியுள்ளார்,சாரதியான தந்தைக்கு நித்திரை ஏற்பட்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 29 மார்ச், 2021

வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை தாக்கிய பொலிஸ் அதிகாரி!!

நடு  வீதியில் நபர் ஒருவருரை போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கடுமையாக தாக்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குல் எங்கு இடம்பெற்றது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.எனினும் பொலிஸ் அதிகாரியின் தாக்குதல் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை பொலிஸ் 
அதிகாரி கடுமையாக தாக்கி, குத்துச் சண்டை காட்சியை போன்று செயற்பட்டுள்ளார்.எனினும் அங்கிருந்து சிலர் பொலிஸ் அதிகாரியை கட்டுப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் 
சென்றுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



நினைவஞ்சலி 8ஆம் ஆண்டு அமரர் இளையதம்பி நாகம்மா 29-03-2021

 திதி:பிரதமை 29-03-2021 
யாழ் அச்சுவேலி தோப்பை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்.  இளையதம்பி நாகம்மா  அவர்களின்.திதி 8ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி திதி:பிரதமை 29-03-2021,அன்று
அன்னார் அமரர்,இளையதம்பியின்  அன்பு மனைவியும்  ஆவர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நீங்காத நினைவுகள்
 29-03-2021. காலச்சுழற்சியில் எட்டு ஆண்டுகள் கடந்து
 போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை நித்தம் நாம் இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது
அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் என் அப்பா பாதியிலே
 எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அம்மாவாய்  நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப
 விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம். அன்னாரின் ஆத்மாசாந்தி
அடைய குடும்ப தினரும் நவற்கிரி ,கொம்  நவக்கிரி,கொம் நிலாவரை கொம்
இணையங்களும் உறவினர்கள் கனடா தோப்பு சுவிஸ் நவற்கிரி , நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றன .ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் பிள்ளைகள் ,மருமக்கள் பெறாமக்கள் பேரப்பிள்ளைகள்  .
பூட்டப்பிள்ளைகள்    
 தகவல் குடும்பத்தினர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


பாரதிபுரத்தில் கோவிலுக்குச் செல்ல வாகனத்தை கழுவியவருக்கு நேர்ந்த சோகம்

புளியம்பொக்கணை கோவிலுக்குச் செல்ல வாகனம் கழுவிய நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் 28-03-2021.அன்று அதிகாலை 7.30 மணி அளவில் தனது குடும்பத்தோடு 
புளியம்பொக்கணை கோவிலுக்கு செல்வதற்காக வாகனத்தை மின்சார சுத்திகரிப்பு இயந்திரத்தினால் கழுவி
 கொண்டிருக்கின்ற
 வேளையில்,சுத்திகரிப்பு இயந்திரத்தின் மின் ஒலுக்கினால் மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளையின் தந்தையான 39 வயதுடைய 
இராசலிங்கம் ஜெயபாலன் என்ற நபரே மரணமடைந்துள்ளார்.இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 27 மார்ச், 2021

பளைப் பகுதியில் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மரணம்

கிளிநொச்சி - பளைப் பகுதியில் 26-03-2021.அன்றிரவு  இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
பளை , இத்தாவில் பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் வாகனமொன்றும் டிப்பர் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாத்திலிருந்து பளை பிரதேசத்தை நோக்கி சென்ற மோட்டார் வாகனம் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனத்தில் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த 38 வயதுடைய தந்தை, 14 மற்றும் 11 வயதுடைய அவருடைய பிள்ளைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் பளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர்
 தெரிவித்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வைரவபுளியங்குளம் குளத்தில் தாமரைப் பூ பறிக்கச் சென்ற ஆசிரியர் மரணம்

வவுனியாவில் கருமாரி அம்மன் ஆலய தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிப்பதற்காக வைரவபுளியங்குளம் குளத்தில் இறங்கிய அசிரியர் ஒருவர் நீரில் முழ்கி மரணமடைந்துள்ளார்.
இன்று (27) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, குட்செட் வீதி, கருமாரி அம்மன் ஆலயத்தின் தேர்திருவிழாவிற்கு தாமரைப்பூ மற்றும் தாமரை இலை என்பவற்றை பறிப்பதற்காக ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளத்திற்குள்
 சென்றுள்ளார்.
குறித்த குளத்தில் தாமரை இலை மற்றும் தாமரை பூவைப் பறித்துக் கொண்டிருந்த போது தாமரைக் கொடியில் சிக்கி நீரில் முழ்கியுள்ளார். பின்னர் ஆசிரியரின் நடமாட்டதைக் காணாமையால் அயலவர்கள்
 மற்றும் குறித்த குளத்தின் கமக்கார அமைப்பினர் இணைந்து குளத்தில் தேடிய போது நீரில் முழ்கிய நிலையில் 
ஆசிரியர் மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட ஆசிரியர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னேரே நீரில் முழ்கியதால் மரணமடைந்துள்ளமை 
தெரியவந்துள்ளது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இரசாயனவியல் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியரான எஸ்.பரந்தாமன் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
இதேவேளை, குறித்த ஆசிரியர் இன்று ஆரம்பிக்கும் கல்விப் பொது சாதரண தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுக்கும் செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது.




பொன்னாலை யில் இராணுவத்தின் வாகனம் மோதிய பண்டிதர் காலமானார்

யாழ் பொன்னாலை யில் கடந்த.20-03-2021. சனிக்கிழமை அன்று  மதியம் யாழ்.நகரில்  சிறிலங்கா இராணுவத்தின் வாகனம் மோதியதில் காயமடைந்த பண்டிதர். பொன்னம்பலவாணர் 26-03-2021.அன்று
 காலமானார்.
இவர் பொன்னாலை சித்திவிநாயகர் ஆலய அர்ச்சகரும், சிறந்த கல்விமானும் ஆவார். இவருக்கு வயது 77.
 படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து
 காலமானார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 26 மார்ச், 2021

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ள மருத்துவர்

பசறை விபத்தில் தாய் தந்தையை இழந்து அநாதைகளான மூன்று குழந்தைகளுக்கும் உதவுவதற்கு வைத்தியர் ஒருவர் 
முன்வந்துள்ளார்.
பதுளை – பசறையில் கடந்த 20ஆம் திகதி இடம்பெaற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்திருந்தனர்.இதில் மூன்று குழந்தைகள் தமது தாய் தந்தையை இழந்து லுனுகலையில் பாட்டியுடன் வாழ்கின்றமை 
அனைத்து ஊடகங்களினதும் கவனத்தை ஈர்த்திருந்தது.இதையடுத்து குறித்த 
குழந்தைகளுக்கு உதவ அம்பாறை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் வஜிர ராஜபக்ஷ முன்வந்துள்ளார்.மூன்று குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள விரும்புகிறேன் 
என்று கூறி 
அவர்களை தத்தெடுக்க பசறை பொலிஸாரிடம் 
கோரிக்கை விடுத்துள்ளார்.அதன்படி, டாக்டர் வஜிர ராஜபக்ஷவின் கோரிக்கை குறித்து பசறைப் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தகவல் அளித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




திடீரென வாகனக் கதவு திறந்தது..நிலத்தில் வீழ்ந்து பலியான சிறுவன்

பாடசாலை வாகனம் ஒன்றின் கதவு திடீரென திறந்து கொண்டதால், வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த 5 வயது பாலர் பாடசாலை மாணவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளான்.வெல்லவாய, எல்ல வீதியின் ஹுனுகெட்டிய பகுதியில் இந்த விபத்து  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாலர் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் 5 வயதான அனுஹஸ் எனும் மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் வாகனத்தின் ஓட்டுனர் வெல்லவாய பொலிஸாரினால் கைது
 செய்யப்பட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 24 மார்ச், 2021

கரிசல் காட்டுப் பகுதியில் உருக்குழைந்த நிலையில் சடலம் மீட்பு

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில்
 23-03-2021.அன்று   மாலை உருக்குழைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கரிசல் புகையிரத பாதைக்கு சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் குறித்த சடலம் கண்டு 
பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மாடு தேடிச் சென்ற நபர் ஒருவர் 23-03-2021. அன்று மாலை குறித்த சடலத்தை அவதானித்த நிலையில் குறித்த சடலம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் காவல் துறை  சடலத்தை அவதானித்து மேலதிக நடவடிக்கைகளை 
மேற்கொண்டனர்.
குறித்த குறித்த நபர் சுமார் 20 நாட்களுக்கு முன் உயிரிழந்திருக்க முடியும் என எதிர் பார்க்கப்பட்டுள்ளதோடு, குறித்த சடலம் சிதைவடைந்து உருக்குழைந்த நிலையில் அடையாளம் காண முடியாத நிலையில் 
காணப்பட்டது.
இன்று (24) காலை சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு தடயவியல் நிபுணத்துவ காவல் துறை மற்றும் மன்னார் பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சென்று விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சடலத்திற்கு அருகில் பாதனியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரனைகளை காவல் துறையினர்  மேற்கொண்டு 
வருகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 23 மார்ச், 2021

புத்தாண்டு காலத்தில் பாண் தவிர அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கலாம்

தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலத்தில் பாண் தவிர அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படலாம் என்று அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் 
தெரிவித்துள்ளது.
இறக்குமதிக்குக் கட்டுப்பாடு, அதிகப்படியான வரி மற்றும் பொருட் களின் விலை அதிகரிப்பு ஆகியவையே விலை உயர்வுக்குக் காரணம் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலை வர் என்.கே. ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>





திங்கள், 22 மார்ச், 2021

குருநாகல் பிரதேசத்தில் ஊழியரின் உயிரைப் பறித்த வாழைப்ப​ழம்

வா​ழைப்பழம் ஒன்றினால், ​ஹோட்டல் ஊழியரின் உயிர், அநியாயமாக காவுக்கொள்ளப்பட்ட சம்பவமொன்று, குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
அந்த ஹோட்டலில் வாழைப்பழமொன்றை கொள்வனவு செய்த நுகர்வோர், வாழைப்பழத்தின் விலை அதிகமாகும் என ஹோட்டலில் குழப்பம் விளைவித்துள்ளார்.
அந்த வாழைப்பழத்தின் உண்மையான பெறுமதி 30 ரூபாயாகும். அதனையே ஹோட்டல் உரிமையாளரும் தெரிவித்துள்ளார். எனினும், விலையை ஏற்றுக்கொள்வதற்கு நுகர்வோர் மறுத்துவிட்டார்.
வாழைப்பழத்தின் விலையைக் கேட்டு கடுமையாக கோபமடைந்த அந்த நபர், வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கைகலப்பிலும் 
ஈடுபட்டுள்ளார்.
இதன்போது விவரத்தை கேட்பதற்கு ஹோட்டல் ஊழியர் வருகைதந்துள்ளார். அப்போது, அங்கிருந்த போத்லொன்றை உடைத்து குத்திவிட்டு, அந்நபர் தப்பியோடிவிட்டார். அவ்வாறு
​ஓ​டியவர், தொலைபேசி கூடாரமொன்றுக்குள் மறைந்துகொண்டுள்ளார். எனினும், அங்கிருந்தவர்கள் அவரை மடக்கிப்பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
போத்தல் குத்துக்கு இலக்கானவர், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். 

நிலாவரை.கொம் செய்திகள் >>>



மரண அறிவித்தல் திரு மயில்வாகனம் இராசரத்தினம் ,22.03.2021

பிறப்பு-02-0-1930--இறப்பு-22-03 -2021.
யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
 திரு மயில்வாகனம்  இராசரத்தினம் ,
அவர்கள்,.22.03.2021  திங்கள்கிழமை  இன்று இயற்கை எய்தினார். 
 . அன்னார், காலஞ்சென்ற செல்லம்மாஅவர்களின்,அன்புகணவரும் செல்வரத்தினம் (இலங்கை )அருளம்மா (இலங்கை ) தாமோதரம்பிள்ளை (சுவிஸ் ) செல்வச்சரஸ்வதி (இலங்கை ) கனகலிங்கம்  (சுவிஸ் ) மகிளேஸ்வரி (இலங்கை )பாலசுந்தரம் (இலங்கை )ஆகியோரின்  பாசமிகு தந்தையாரும்    இந்துமலர் பாலசிங்கம்
தா,வசந்தி .லி ,வசந்தி ,சுசி , சுபா  ஜெயநாதன் (ஜெயம்,இலங்கை )
தட்ச ணாமூர்த்தி (தட்சணா.இலங்கை )ஆகியோரின் 
அன்பு மாமனாரும் ,பாமினி  பாலச்சந்திரன் ,றஜீபா  
பகீதரன் லோவிதான்  கஜேந்திரன் .கெளசலா  லவணியா  சங்கவி சாந்தரூபன் யாழினி தயாரூபன் அஜீபன்  அஜீதா  அனித்தா
  டிலானி நிலவன் மிதுனன் 
ஆகியோரின் அன்புப் பேரனும் கஸ்தூரி சாரு அரூஸ் வீராத்  யஸ்வினி, யஸ்மிதா வர்சிகா  அஸ்விகா,ஆகியோரின்அன்புப் பூட்டனும்   ஆவர்  அன்னாரின் இறுதிக்கிரியை 
 23-03-2021,செவ்வாய்க்கிழமை  ,அன்று 
மு.ப 09:00 மணி முதல் ந.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி  நிலாவரை  இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெறும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும்   பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை பூ ட்ட ப்பிள்ளைகள்,உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
 வீட்டு முகவரி: 
நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்  
நிலாவரை.கொம் செய்திகள் >>>

மரண அறிவித்தல் திரு சின்னத்தம்பி சிவானந்தம் (செல்வா) 22.03.2021

பிறப்பு-02 05 1964--இறப்பு--22 03 2021
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசில்வசித்து வந்தவரும் தற்போது  நவற்கிரியில் வதித்து வந்த
 திரு சின்னத்தம்பி சிவானந்தம் (செல்வா,சிவா.) அவர்கள் 22.03.2021,
அன்று சிவபதம் அடைந்தார் அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி அசுவதி  தம்பதிகளின் 
அன்பு மகனும் ( மூத்த புதல்வர் ) காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவறஞ்சனி (றஞ்சி .சுவிஸ்  )அவர்களின் பாசமிகு கணவரும் வசிதா நிறஞ்சன் ஆகியோரின் 
பாசமிகு தந்தையும் தங்கேஸ்வரி  (இலங்கை.கொழும்பு ) அருளானந்தம் 
+(அருள் .சுவிஸ்  )செல்வாநந்தம் 
(செல்வா,சுவிஸ் )ஆகியோரின் அன்புச் சகோதரரும், 
கிரிகரன்(கிரி- சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,  ஞானசேகரம்(இலங்கை), புஸ்பறதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிவயோகம்(இலங்கை), சிவமலர்(இலங்கை), சிவறாகினி(இலங்கை), சிவகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற
 குமாரசாமி(இலங்கை), துரைராசா(இலங்கை), செல்வசந்திரன்(இலங்கை), சிந்துஜா(சுவிஸ்) ஆகியோரின் சகலனும், நிறோசன்(அவுஸ்திரேலியா), வைஸ்ணவி, சங்கவி(இலங்கை) ஆகியோரின் 
அன்பு மாமனாரும், நிதுசன், அபித்தா, அபினயா(சுவிஸ்) ஆகியோரின் பெரியப்பாவும், அதிஷா(சுவிஸ்) அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 
 23-03-2021,செவ்வாய்க்கிழமை  ,அன்று 
மு.ப 12:00 மணி முதல் ந.ப 14:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி  நிலாவரை  இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெறும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல் .குடும்பத்தினர் 
வீ ட்டு  முகவரி 
நவற்கிரி .புத்தூர் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு 
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!2.  தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 வசி - மகள்,Mobile : +41764076298   கிரி - மருமகன்,Mobile : +41765667056   தங்கேஸ் - அக்கா,Mobile : +94774848804   அருள் - தம்பி, ,Mobile : +41779748124   சிவா - மைத்துனர்,Mobile : +41787209960 
நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 18 மார்ச், 2021

நாட்டில் தயாரிக்கப்பட்ட 100 சதவீத கறுவாப்பட்டை சிகரெட்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட 100 சதவீத கறுவாப்பட்டையை கொண்டு உருவாக்கப்பட்ட ஆயுர்வேத சிகரெட்டை 
அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆயுர்வேத சிகரெட்டை அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று கொழும்பு கிங்ஸ்பேரி ஹோட்டலில் அதிகாரப்பூர்வமாக 
அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்த ஆயுர்வேத புகைத்தல் (கறுவாப்பட்டை சிகரெட்) உள்ளூர் உற்பத்தித் துறையில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தும் என்று தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச இதன்போது கூறுகிறார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 16 மார்ச், 2021

மரண அறிவித்தல் திரு பெரியார் இராசரத்தினம் ,16.03.2021

 பிறப்பு 16.11.1944 -- இறப்பு 16.03.2021
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு பெரியார் இராசரத்தினம் அவர்கள் 16.03.2021 செவ்வாய்க்கிழமை அன்று 
சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பெரியார் சின்னத்தங்கம் தம்பதிகளின் 
அன்பு மகனும்
காலஞ்சென்ற சோமசுந்தரம் வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்
கனகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்
காலஞ்சென்ற றதிஷ் மற்றும் அனுஷா, பிரசன்னா ஆகியோரின் 
பாசமிகு தந்தையும்
தர்மதேவன், டினுஷா ஆகியோரின் மாமனாரும்
தனுஷன், தர்மிந், ரிஷான் ஆகியோரின் பேரனும் ஆவார்.
17.03.2021 புதன்கிழமை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, மதியம் 11 மணிக்கு அன்னாரின் பூதவுடல் நிலாவரை மாயானத்தில்
 தகனம் செய்யப்படும்.
இஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
 தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மனைவி் - 0094 77 454 67 93
மகன் - 001 647 684 25 07
மகள் - 0049 277 181 37 3
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

எத்தாலை கொத்தனியில் வேளாங்கண்ணி மாதா சிலை மீது கல்வீச்சு

.புத்தளம் கற்பிட்டி எத்தாலை கொத்தனி பகுதியில் வேளாக்கண்ணி மாதா சிலை மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மக்கள் ஒன்று கூடியதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கற்பிட்டி எத்தாலை கொத்தனி பகுதியில் நேற்று இரவு 26 வயதுடைய இளைஞர் ஒருவர் வேளாக்கண்ணி மாதா சிலை மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இதனால் கண்ணாடி உடைகின்ற சத்தத்தை அவதானித்த அப்பகுதி மக்கள் குறித்த இளைஞனை மடக்கிப் பிடித்துள்ளனர். அதனையடுத்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் 
வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் காவல்துறை விஷேட அதிரடிப்படையினர், புலனாய்வுப் பிரிவினர் குறித்த பகுதிக்கு உடனடியாக சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் 
கொண்டு வந்தனர்.
மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞன் கற்பிட்டி பாலக்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவரென அடையாளம் காணப்பட்டுள்ளது. சந்தேக நபர் போதையில் இருந்ததாக காவல்துறையினர் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தொடர்ந்தும் விசாரணைகளுக்காக புத்தளம் காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை புத்தளம், கற்பிட்டி, நுரைச்சோலை காவல் நிலைய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 15 மார்ச், 2021

அமரர் திரு,ஆ ,க,சுப்பிரமணியம்.10ம் ஆண்டு நினைவஞ்சலி.16,03,2021

மண்ணில் : 06- பெப்ரவரி 1932 — விண்ணில் : 06 ஏப்ரல் 2011
திதி : 16 -03- 2021.செவ்வாய்க்கிழமை ,அன்று 
யாழ். மாவிடடபுரத்தை பிறப்பிடமாகவும், நவற்கிரி புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட.அமரர் திரு ..(ஆ.க) கந்தையா. சுப்பிரமணியம் (மணியம் ) அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்தாண்டு போயும் என்றும் எம்மோடு இருக்கும் ஏந்தலே!!
பத்தாண்டு போனதையா!
ஏங்கியே அழுகின்றோம் ஏந்தலே!!
தாங்கியே பிடிக்க தலைவனின்றி
தவிக்கின்றோம் ஐயா!
வாங்கியே நீ வைத்தவற்றில்
உன் வண்ணவதனம் கண்டு
ஒங்கியே அழுது ஒவ்வொரு நாளும்
இருக்கின்றோம் ஐயா!
உறவி தந்து! உணர்வு தந்து!!
எம்மோடு ஒன்றாய் இருந்த உத்தமனே!
உன்னால் விளைந்த வித்துகள்
இப்போ விருட்சமாய் வெளிவரும் வேளையில்
உன் வெப்பம் தணிக்கும் இவ் விருட்சத்தை விலக்கி
விண்ணுலகு ஏன் தான்
விரைந்திட்டாய் ஐயா!
வளங்கள் எதுதான் வாழ்வில் இருந்தாலும்
வாழ்க்கை எமக்குத்தந்த வள்ளல் நீங்கள்
வாணுலகு போய் பத்தாண்டு வந்தும்
வாடிவதங்கி வாட்டமுடன்
வையமிங்கு வாழ்கின்றோம்
எங்கள்  ஐயா!
வாய்ப்புக் கிடைத்தால் வாண் விட்டு
வையம் வந்து உன் வண்ணமுகம் காட்டி
உன் கன்றுகளோடு கைகோர்த்து
களி கொள்ள மாட்டின்கழா   எங்கள்
தலைவனே!
பத்தாவது  ஆண்டில் நினைத்து நீர் மல்கும்நாங்கள்  
..என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன்
வாழும் மனைவி, பிள்ளைகள்
,மருமக்கள் சகோதரர்கள்
தகவல் குடும்பத்தினர்
எமது நவற்கிரி,கொம் 
இணையங்களின் நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை,.கொம்  நவக்கிரி .கொம் இணையங்களின் 
நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ,,ஓம்சாந்தி ஓம்சாந்தி 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 14 மார்ச், 2021

விபத்துக்களால் நாட்டில் மரணங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 15ஆக உயர்வு


நாட்டில் வாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை 15ஆக உயர்வடைந்துள்ளதாக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்று மாத்திரம் வாகன விபத்துக்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண 
தெரிவித்தார்.
இவர்களில் 07 பேர் நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கியவர்கள், என்பதுடன் மிகுதி 05 பேர் ஏற்கனவே இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களில் 04 பேர் சாரதிகள் என்பதுடன் 03 பேர் அவர்களுடன் உந்துருளியில் பயணித்தவர்கள் எனவும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 

சிறுநாவற்குளத்தில் விபத்தில் இரு இளம் குடும்பஸ்தர்கள் உயிரிழப்பு

 மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, சிறுநாவற்குளம் பகுதியில் 14-03-2021,¨இன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இரு இளம் குடும்பஸ்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த வீதியூடாக மோட்டார் சைக்கிளில் மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த 
மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் நின்ற பனை மரத்தன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன் போது சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துளள்தோடு,மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும் குறித்த நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிய  வருகின்றதுசெட்டிகுளத்திற்கு மரண சடங்கொன்றிற்கு சென்று விட்டு மீண்டும் மன்னார் நோக்கி வீடு திரும்பிய போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த இருவரும் மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளை திருமணம் செய்த 36 மற்றும் -38 வயது இளைஞர்களே குறித்த விபத்தில் பலியாகியுள்ளதாக தெரிய வருகின்றது.குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு
 வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


அம்பாறையில் நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைக்கூட்டம்


மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியும், அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட வைக்கியல்ல பிரதேசத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை புகுந்த காட்டுயானைகள் அங்கிருந்த
 பயன்தரும் பல
 மரங்களையும், தோட்டங்களையும் அழித்துத் துவம்சம் செய்துள்ளதாக அப்பகுதி பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
14-03-2021,இன்று ,ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இவ்வாறு புகுந்த 3 இற்குமேற்பட்ட காட்டுயானைக் கூட்டத்தினால் அக்கிராம மக்கள் மிகுந்த அல்லோல கல்லோலப்பட்டுள்ளனர். கிராமத்திற்குள் காட்டுயானைக்கூட்டம் புகுந்ததை அவதானித்த மக்கள் நள்ளிரவு வேளையில் மிகுந்த அச்சத்துடன் யானைக்கூட்டத்தை அப்புறப்படுத்த முயற்சி 
செய்துள்ளனர்.
எனினும் அங்கிருந்த பயன்தரும், தென்னை, வாழை, பலா, மா, மரவெள்ளி கமகு, உள்ளிட்ட பயிர்களை அழித்து துவம்சம் செய்துவிட்டு ஒருவாறு யானைக்கூட்டம் வெளியேறியுள்ளது.
மிக அண்மைக்காலமாக மட்டக்களப்பு, மற்றும் அம்பாறை மாவட்டங்களின் எல்லைப் புறங்களில் இவ்வாறு காட்டு யானைகளின் அட்டகாசங்களும், தொல்லைகளும் அதிகரித்த வண்ணமுள்ளன.
 இவ்வாறு 
எல்லைப் பகுதியில் நிலைகொண்டுள்ள காட்டுனைகளை பிடித்துக் கொண்டு சரணாலயங்களில் விட்டு விட்டு மீண்டும் யானைகள் கிராமங்களுக்குள் உட்புகாமலிருக்க யானைப் பாதுகாப்பு 
வேலிகளை
 அமைத்துத் தருமாறும் அப்பகுதி மக்கள் மிக நீண்டகாலமாகவிருந்து 
கோரிக்கை விடுத்து வருகின்றமையும், அம்மக்களின் கோரிக்கைகள் இன்றுவரை தீர்க்கப்படாமலிருந்து வருகின்றமையும் 
குறிப்பிடத்தக்கதாகும்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>