siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 31 அக்டோபர், 2024

நாட்டில் சினோபெக் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படவுள்ளது

சினோபெக் நிறுவனமும்.31-10-24 வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றம்
 செய்யப்படவுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 371.00 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையும்
 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 313.00 ரூபாவாகும்.
மேலும், 280 ஆக இருந்த ஆட்டோ டீசல் லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 283.00 
ஆக உள்ளது.
311.00 ரூபாவாக இருந்த 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 30 அக்டோபர், 2024

வடமராட்சி ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன் மனைவி இருவரும் சடலமாக மீட்ப்பு

யாழ் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன் மனைவி இருவரும் சடலமாக 
மீட்கப்பட்டுள்ளனர்.
 அவர்கள் இருவரும் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
 சடலமாக மீட்கப்பட்டவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில் ஈடுபடுபவரும்
 அவரது மனைவிவியுமே கொல்லப்பட்டுளனர். 
மாணிக்கம் சுப்பிரமணியம் 53, அவரது மனைவி மேரி 54 வயதுடைவர்களே கொல்லப்பட்டுள்ளனர்.
 இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை போலீசார் மேற்கொண்டு வருவதுடன், பருத்தித்துறை நீதிமன்ற கௌரவ நீதவான் நேரடியாக சம்பவ இடத்தை தற்போது பார்வையிட்டுக்கொண்டிருக்கின்றார்.
என்பது குறிப்பிடத்தக்கது 




செவ்வாய், 29 அக்டோபர், 2024

மின்னல் தாக்கி மட்டக்களப்பில் குடும்பஸ்தர் மரணம்

 நாட்டில்  மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயான்குடா வயற்பிரதேசத்தில் திங்கட்கிழமை (28) மாலை ஏற்பட்ட இடிமின்னல் தாக்குதலில் கூலித் தொழிலாளி ஒருவர்
 உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு சத்துரகொண்டான் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் 
தெரிவித்தனர் .
குறித்த குடும்பஸ்தர் காயன்குடா வயலில் வரம்பு கட்டிக் கொண்டிருந்த போது மழை பெய்யாத சமயம் திடீரென ஏற்பட்ட இடிமின்னலில் தாக்கப்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக
தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் கரடியனாறு பொலிஸாருடன் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டு முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உடல் கூறு பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது




 

திங்கள், 28 அக்டோபர், 2024

உறவினர்களை சந்திப்பதற்காக லண்டனில் இருந்து யாழ் வந்தவர் மரணம்

யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர்களை சந்திப்பதற்காக லண்டனில் இருந்து வருகை தந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார்.கணேசராசா தியாகராசா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
இவர் கடந்த 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள உறவுகளை சந்திப்பதற்காக லண்டனில் இருந்து கொழும்பிற்கு வருகை தந்து கொழும்பிலிருந்து பேருந்து மூலம் யாழ்ப்பாணம் நோக்கி 
சென்றுள்ளார்.
குறித்த பேருந்து யாழ்ப்பாணத்தினை சென்றடைந்த பின்னர் குறித்த நபர் பேருந்திலிருந்து இறங்காத காரணத்தினால் அவரை எழுப்ப 
முற்பட்டுள்ளார்.
இதன்போது அவர் மயக்கநிலையில் காணப்பட்டமையினால், 17ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து அங்கு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், 27-10-2024.அன்று காலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது




 

ஞாயிறு, 27 அக்டோபர், 2024

நாட்டில் தெமட்டகொட புகையிரத நிலையத்திற்கு அருகில் அதிவேக ரயிலில் பாய்ந்து உயிரிழந்த மாணவன்

நாட்டில் கொழும்பு 7 இல் உள்ள முன்னணி அரச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 17 வயதுடைய மாணவன் ஒருவர் அதிவேக ரயிலில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். தெமட்டகொட புகையிரத .நிலையத்திற்கு அருகில் அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிஸார் 
கூறியுள்ளனர்.பேருவளையைச் சேர்ந்த மாணவன் நானுஓயாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதிவேக ரயிலில்
 மோதுண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  உயிரிழந்துள்ளார்.

 12ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் மருதானை பிரதேசத்திற்கு பாடசாலையில் விசேட நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றுவதற்காக வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 
 சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.






சனி, 26 அக்டோபர், 2024

நாட்டில் அலவல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஆறு வயது குழந்தை பலி


அத்தனகல்ல அலவல பிரதேசத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது குழந்தை மின்சாரம் தாக்கி 
உயிரிழந்துள்ளது.
அத்தனகல்ல அலவல பிரதேசத்தைச் சேர்ந்த தரம் 01 இல் கல்வி கற்கும் தேஜான் தினுவர என்ற மாணவரே இவ்வாறு 
உயிரிழந்துள்ளார்.
நேற்று (25.10) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்த குழந்தை எப்போதும் மின்சார பொம்மைகளுடன் விளையாடுவதை விரும்பக்கூடிய குழந்தை என 
தெரிவிக்கப்படுகிறது.
மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்த வேளையில் தாயும் தந்தையும் வீட்டில் வேறு வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில் குளிர்சாதனப் பெட்டிக்கு அருகில் குழந்தை கிடப்பதைக் கண்டு வட்டுபிட்டிவல அடிப்படை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது  





 

வெள்ளி, 25 அக்டோபர், 2024

யாழ் சங்கரத்தை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் எலிக்காய்ச்சலால் மரணம்

 எலிக்காய்ச்சல் காரணமாக யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் 
24-10-2024.அன்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
 கலைவாணி வீதி துணைவி சங்கரத்தை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சிறீஸ்காந்திராசா சிவாஸ்கர் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 இவருக்கு கடந்த 21ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 23 ஆம் திகதி சங்கானை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். 
 யாழ்ப்பணம் போதனை வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம்(24) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 
 எலிக்காய்ச்சல் காரணமாகவே குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது.




 

வியாழன், 24 அக்டோபர், 2024

யாழ் மயிலங்காடு ஏழாலை வீதியில் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் கைது

யாழ் சுன்னாகம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் 23-10-2024.அன்று  கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 02 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 800 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர் ஏழாலை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை 
சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 23 அக்டோபர், 2024

கிளிநொச்சியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அம்பியூலன்ஸ் வாகனம் விபத்து

நோயாளர்களை MR பரிசோதனைக்கு யாழ்ப்பாணம் அழைத்து சென்று மட்டக்களப்பு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அம்பியூலன்ஸ் வாகனம் கிளிநொச்சியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நோயாளர்களை MR பரிசோதனைக்கு யாழ்ப்பாணம் அழைத்து சென்று மட்டக்களப்பு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அம்பியூலன்ஸ் கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அம்பியூலன்ஸ் வாகனத்தில் மூன்று நோயாளர்கள் பயணித்த நிலையில் நோயாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை
. அவர்களும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.



செவ்வாய், 22 அக்டோபர், 2024

நாட்டில் மாத்தறை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது

நாட்டில் மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது 
செய்யப்பட்டுள்ளனர். 
 கடந்த 15ஆம் திகதி முச்சக்கரவண்டியில் பயணித்த நபரை காரில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். 
 துப்பாக்கிச் சூட்டில் சீசராக பணிபுரிந்த ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது என்பதாகும்





 

திங்கள், 21 அக்டோபர், 2024

நாட்டில் மஹியங்கனை பகுதியில் காணாமல் போன இரு பாடசாலை மாணவிகளில் ஒருவரின் சடலம்

நாட்டில் பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹியங்கனை பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் இரு பாடசாலை மாணவிகளில் ஒருவரின் சடலம் இன்று லொக்கல்ல ஓயாவில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த மாணவியின் நண்பி பொலிஸாரின் பாதுகாப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் பதளை - கந்தேகெதர பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய திலினி உபேக்ஷா என்ற மாணவியே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இருமாணவிகளும் கடந்த 20ஆம் திகதி பதுளை நகருக்கு மேலதிக வகுப்புக்கு சென்றிருந்த வேளையில் வீடு திரும்பாத நிலையில் காணாமல் போயிருந்ததாகவும் பொலிஸார் 
தெரிவிக்கின்றனர்.
மேலும், சம்பவத்தன்று சடலமாக மீட்கப்பட்ட மாணவி மற்றுமொரு மாணவியுடன் இணைந்து பதுளை நகரில் உள்ள மேலதிக வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, வீட்டை விட்டு வெளியே
 சென்றுள்ளார்.
வெளியே சென்ற மாணவிகள் இருவரும் மீண்டும் வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் இது தொடர்பில் பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இந்த மாணவிகள் தங்களின் புத்தகங்களை எங்களை தேட வேண்டாம் என்பதன் அடிப்படையில் கடிதங்களையும் எழுதி வைத்திருந்ததாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்ட மாணவியுடன் சென்ற மற்றைய மாணவி வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மாணவியை ரிதிமாலியத்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த மாணவி தற்போது ரிதிமாலியத்த பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது 




 

ஞாயிறு, 20 அக்டோபர், 2024

யாழ் கட்டபிராய் பகுதியில் வீதியைக் கடந்த பெண் முச்சக்கரவண்டி மோதி மரணம்

யாழ்-கட்டபிராய் பகுதியில் 19-10-24.பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட பெண்ணின் மீது மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் 
தெரிவித்தனர்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த மேற்படி பெண், யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் - கட்டபிராய் பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு 
உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதி கைது 
செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகைளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.





 

சனி, 19 அக்டோபர், 2024

மரண அறிவித்தல் திருமதி அருந்தவனாயகம் கஜமுகதேவி(தேவி) 18.10.2024

துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-18-10-2024
யாழ் சிறுப்பிட்டி மேற்க்கை பிறப்பிடமாகவும் நீர்வேலி கரந்தனை வசிப்பிடமாகவும் கொண்ட அருந்தவனாயகம் கஜமுகதேவி(தேவி) 18.10.2024 வெள்ளிக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!


வெள்ளி, 18 அக்டோபர், 2024

நாட்டில் கெப் வாகனம் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து பாடசாலை மாணவன் பலி

நாட்டில்மாத்தளை, நாவுல மின்சார சபை அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (17) இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் கெப் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் நாவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 
உயிரிழந்துள்ளார்.
நாவுல, பெனலபொட பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, 46 வயதுடைய கெப் வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது





 

வியாழன், 17 அக்டோபர், 2024

கோர விபத்து பிரித்தானியாவில் கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் சிக்கி ஐந்து பேர் பலி

பிரித்தானியாவின் கம்பிரியா நகரில், எம்6 என்ற மோட்டார் வழி சாலையில், கார் ஒன்று தவறான திசையில் சென்று கார், மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. 
 ஸ்கோடா மற்றும் டொயட்டோ ரக கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். 
 இதுபற்றி கம்பிரியா பொலிஸார் கூறும்போது, விபத்தில், கேம்பிரிட்ஜ்ஷைர் பகுதியை சேர்ந்த ஸ்கோடா ரக காரின் ஓட்டுநர் சம்பவ 
இடத்திலேயே பலியானார். 
 இதுதவிர, 42 வயது ஆண், 33 வயது பெண், 7 மற்றும் 15 வயதுடைய 2 சிறுவர்களும் விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது



புதன், 16 அக்டோபர், 2024

நினைவஞ்சலி 3ம் ஆண்டு அமரர் கதிரவேலு இராசலக்சுமி 16.10.2024

தோற்றம்-04-07-1932.-  மறைவு-20 09 2021       
  மூன்றாம் ஆண்டு திதி 28-09-2024  இன்று           
    யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி கதிரவேலு இராசலக்சுமி
அவர்களின் மூன்றாம் ஆண்டு  திதி 16-10-2024..புதன்கிழமை  இன்று .அன்னார் காலஞ்சென்ற கதிரவேலுவின் பாசமிகு மனைவியாரும் காலஞ்சென்ற அப்புக்குட்டி  வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்
 காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும் 
மற்றும் யோகேஸ்வரன்  அரற்புதமலர் கருணாநந்தன்  ஜெந்தி குகனேசன் சுதமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் நீங்காத நினைவுகள்
காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இப்போது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
உங்கள் ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி!


செவ்வாய், 15 அக்டோபர், 2024

நாட்டில் கேகனதுர பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

நாட்டில்  மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில்.15-10-2024. இன்றுஇடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
 முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது காரில் வந்த 
நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக
 பொலிஸார் தெரிவித்தனர். 
 துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் சீசர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது





 

திங்கள், 14 அக்டோபர், 2024

இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

நாட்டில் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று (15) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 
தெரிவித்துள்ளது. 
 மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. கனமழை பெய்யக்கூடும். 
 நாட்டின்  ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 
 இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை
 குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


ஞாயிறு, 13 அக்டோபர், 2024

மரண அறிவித்தல் அமரர் திருமதி மகேஸ்வரி 11-10-2024

துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-11-10-2024.
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர்
 திருமதி மகேஸ்வரி  அவர்கள் 11-10-2024.வெள்ளிக்கிழமை  அன்று  
இறைவனடி சேர்ந்தார் அன்னார் காலஞ் சென்றவர்களான ராசரத்தினம் அலங்காரம்  தம்பதிகளின் அன்பு மகளும் 
(பிள்ளைகளின்  பெயர்கள் பின்பு இணைக்கப்படும்) 
காலஞ் சென்ற குணம் காலஞ் சென்ற கணேஷ் மற்ரும்  தவம் ஆகியோரின் சகோதரியும் ஆவர் 
அன்னாரின் இறுதிக்கிரியை 
திகதி-  13-10-2024.2024. ஞாயிற்ருகிழமை 10:00 மு.ப — 1:30 பி.ப.மணி  அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
13-10-2024.ஞாயிற்ருகிழமை அன்று ;.முகவரி!  நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல்
குடும்பத்தினர்.


நாட்டில் கல்முனை பிராதன வீதியில்இடம்பெற்ற விபத்த்தில் பலியான இளைஞர்

நாட்டில்  களுவாஞ்சிக்குடி - கல்முனை பிராதன வீதியில் இன்று (13.10)பகல் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த 16 வயதுடைய ரவீந்திரன் என்ற சிறுவனே சம்பவ இடத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
 கல்முனையில் இருந்து களுவாஞ்சிக்குடி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும், களுவாஞ்சிக்குடியில் இருந்து கல்முனை 
நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு அண்மித்த பகுதியில் நேருக்கு நேர் மோதி  விபத்துக்குள்ளாகியது. 
 உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 இந்த விபத்தில் படுகாயமடைந்த நபர் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிக்குடி போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.


சனி, 12 அக்டோபர், 2024

அச்சுவேலி வல்லை பாலத்துக்கு அருகில் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்து ஒருவர் பலி

யாழ்   அச்சுவேலி வல்லை பாலத்துக்கு அருகில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே 
உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள், பட்டா வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி என்பன மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டதாக
 கூறப்படுகிறது.
இதேவேளை, முச்சக்கரவண்டி சாரதி வாகனத்துடன் தப்பிச்சென்ற நிலையில் பட்டா வாகன சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.
உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில், சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது







 

வெள்ளி, 11 அக்டோபர், 2024

யாழ் காரணவாய் தெற்கில் மூதாட்டியின் சடலம் எரிகாயங்களுடன் மீட்பு

யாழ் வடமராட்சியில்  வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காரணவாய் தெற்கை சேர்ந்த 70 வயதான மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டார்.
மூதாட்டி வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். 10-10-2024. வியாழக்கிழமை அன்று மூதாட்டியின் நடமாட்டத்தை காணாத 
அயலவர்கள் , மூதாட்டியின் வீட்டினுள் சென்று பார்த்த போது மூதாட்டி தீயில் எரிந்து உயிரிழந்த நிலையில் சடலமாக 
காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்
.என்பது குறிப்பிடத்தக்கது.



வியாழன், 10 அக்டோபர், 2024

மரண அறிவித்தல் திருமதி செல்லத்துரை நாகரத்தினம் (சரசு)

துயர் பகிர்வு தோற்றம் -மறைவு-
தோப்பு அச்சுவேலியை பிறப்பு இடமாகவும் போதிம்பிள்ளையார் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்லத்துரை நாகரத்தினம் (சரசு)அவர்கள் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் திரு செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்  ஆவர் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல் குடும்பத்தினர் 
 ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!


புதன், 9 அக்டோபர், 2024

மரண அறிவித்தல் செல்வன் பற்பநாதன் (கிளி )செல்லக்குமார்

துயர் பகிர்வு தோற்றம் -மறைவு-08-10-2024
யாழ். நவற்கிரியை  பிறப்பிடமாகவும் சுவிஸ்சில் வாழ்ந்துவந்த 
திரு பற்பநாதன் (கிளி )செல்லக்குமார் அவர்கள்.08-10-2024..செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.அன்னார்  திரு பற்பநாதன் தம்பதியினரின் அன்பு மகனுமாவார் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.தகவல் குடும்பத்தினர் 
 ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் .