siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

பட்டாசு வெடித்து முல்லைத்தீவு-பகுதியில்முற்றாக எரிந்த வீடு!

முல்லைத்தீவு - கைவேலிப்பகுதியில் தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு கொழுத்தப்பட்ட பட்டாசு வெடித்ததில்   வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது
முல்லைத்தீவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கொழுத்தி மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில் முல்லைத்தீவு –கைவேலிப்பகுதியில் இன்று காலை 10.45 அளவில் வீடொன்றில் விழுந்த பட்டாசால் அந்த வீடு முற்றாக எரிந்துள்ளது.
தீயை  கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், வீட்டிலிருந்து எந்தவொரு பொருட்களையும் மீிட்கமுடியாது அனைத்தும் தீக்கு இரையாகியுள்ளன.
பாடசாலைக்கு செல்லும் உதயப்பிரகாஸ் ஜெகதாயினியின் இரண்டு பிள்ளைகளும், தமது பாடசாலை உபகரணங்கள் முழுவதும் எரிந்துள்ளதால் பெரும் கவலையடைந்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 25 அக்டோபர், 2016

அரசினர் பேருந்தை வழிமறித்து பேருந்து மீது யாழில் மர்ம நபர்கள் தாக்குதல்!

இன்று ஏ-9 வீதியில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால்,             இன்று.25.10.2016. பாரஊர்தியில் வந்த பத்து மர்ம நபர்கள், அரசினர் பேருந்தை வழிமறித்து அதற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
பேருந்துள் நுழைந்த குறித்த மர்ம நபர்கள் பேருந்து நடத்துநரிடமிருந்து பணத்தினையும் ரிக்கற் புத்தகத்தையும் பறித்துச் சென்றதுடன் பேருந்தையும் தாக்கியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து, வவுனியா நோக்கி புறப்பட்ட பேருந்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து பயணிகள் தெரிவிக்கையில் பேருந்தைச் சேதப்படுத்தியவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் 
தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இன்று கர்த்தால் தினமாகையால் யாழ்ப்பாண நகரமெங்கும் காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



மரணஅறிவித்தல் அமரர் வேலுப்பிள்ளை

 இறப்பு : 25 ஒக்டொபர்  2016.
யாழ்  பத்தமேனி  அச்சுவேலியை பிறப்பிடமா​வும் நவற்கிரியை   வதிவிடமாகக்கொண்டிருக்க
அமரர் வேலுப்பிள்ளை அவர்கள்  25.10.2016..செவ்வாய்க்கிழமை   அன்று காலமானார்  இவர் திருமதி அழகம்மா  
 அவர்களின் அன்பு கணவஆவர்  
அன்னாரின் இறுதிக்கிரியை   அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்   இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 22 அக்டோபர், 2016

மரண அறிவித்தல் அமரர் தம்பு ஜெயரத்தினம் (நயினார் )

இறப்பு : 21 ஒக்டொபர்  2016 
யாழ்.  நவக்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்   தற்காலி  வசிப்பிடமாக கோப்பாயை  கொண்ட தம்பு ஜெயரத்தினம் (நயினார் )அவர்கள் 21-10-2016 வெள்ளிக்கிழமை  அன்று 
காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு  மாணிக்கம் தம்பதிகளின் அன்புக்கடைசி   மகனும் , காலஞ்சென்ற .திருமதி கமலாதேவி 
 அவர்களின் அன்பு கணவரும் 
செந்தூர்செல்வன் பிறேமாவதி  காலஞ்சென்ற  கிரிதரன்   ஆகியோரின் அன்புத்தந்தையும்  
  காலஞ்சென்ற  துரைராஜா  காலஞ்சென்ற செல்வராஜா  
காலஞ்சென்ற ஞாமணி  பாலசிங்கம் சின்னமணி    வித்திலாமணி சிவலிங்கமணி  ஆகியோரின்  அன்பு  சகோதரனும் 
 ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2016 . ஞாயிற்று க்கிழமை அன்று  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய்  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்  .




வெள்ளி, 21 அக்டோபர், 2016

தனியார் பஸ் சாரதி யாழ் அச்சுவேலியில் மது போதையில் கைது!

மது போதையில்  பயணிகள் பஸ் செலுத்திச் சென்ற பஸ் சாரதியை  புதன்கிழமை (19.10.2016)  அன்று  மாலை அச்சுவேலி பகுதியில் கைது செய்துள்ளதாக அச்வேலி பொலிஸார் தெரிவித்தனர்.
அச்சுவேலி - யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்ஸின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டார். வீதிச் சோதனையில் நின்றிருந்த பொலிஸார், இவரிடம் சோதனை நடத்தியபோது, மதுபோதையில் இருந்தமை தெரியவந்தது.
கைதான சாரதிக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 
பொலிஸார் கூறினர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 18 அக்டோபர், 2016

விளையாட்டுத்துறையில் தேசிய ரீதியில் தடம் பதித்துள்ள இந்துக் கல்லூரி!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசம் சாவகச்சேரி இந்துக் கல்லூரி விளையாட்டுத் துறையிலும் தேசிய ரீதியில் தடம் பதித்துள்ளது.
கண்டி போகம்பரை மைதானத்தில் இடம்பெற்றுவரும் தேசிய மட்ட தடகளப் போட்டிகளில் முதற்தடவையாக யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி மூன்று பதக்கங்களினைப் பெற்று கல்லூரிக்கும், தென்மராட்சிப் பிரதேசத்திற்கும் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் பெருமை
 சேர்த்துள்ளது.
கோலூன்றிப் பாய்தல் (17 வயதின் கீழ்) போட்டிப் பிரிவில்...
செல்வன் புவிதரன் 1ம் இடம் (தங்கப்பதக்கம்) ஆண்கள் பிரிவு
செல்வி ச.சங்கவி 2ம் இடம் (வெள்ளிப்பதக்கம்) பெண்கள் பிரிவு
கோலூன்றிப் பாய்தல் (19 வயதின் கீழ் - பெண்கள்) போட்டிப் பிரிவில்...
செல்வி கிரிஜா 2ம் இடம் (வெண்கலப் பதக்கம்)
அண்மைக் காலத்தில் பல சவால்களிற்கு 
முகம் கொடுத்த போதும் மனந்தளராது தொழிற்படும் கல்லூரி முதல்வர் திருவாளர் ந.சர்வேஸ்வரன் அவர்களது
 சீர்மிய நெறிப்படுத்தலிலும், விளையாட்டுத் துறையின் பொறுப்பாசிரியர் மதனரூபன் அவர்களது வழிப்படுத்தலிலும், பயிற்றுவிப்பாளர் கணாதீபனது மதிநுட்பம் வாய்ந்த பயிற்சியினாலும் இவ் வெற்றி
 சாத்தியமாகி உள்ளதாக கல்லூரி சமூகத்தினர் 
தெரிவிக்கின்றனர் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>



>>

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

வரும் வருடங்களில் இலங்கையில் பாரிய மின்சார பற்றாக்குறை ஏற்படும்?

இலங்கையில் அடுத்த வரும் வருடங்களில் பாரிய மின்சார பற்றாக்குறை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அண்மைகாலமாக நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்ரேந்து பகுதிகள் வற்றியுள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை நீடிக்குமாயின் மின்விநியோகம் சீராக வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நுரைச்சோலை அனல் மின் நிலையம் உயர்ந்தபட்ச வினைத்திறனுடன் செயற்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் நாட்டுக்கு தேவையான மொத்த மின்சார தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் 50 சதவீதமான மின்சாரம் கிடைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் மழை கிடைக்காவிட்டாலும் தடையின்றி மின்சாரத்தை வழங்க முடியும். ஆனால் எதிர்வரும் இரண்டு மாதங்களில் மழை கிடைக்காவிட்டால் எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் நாடு மின்சார நெருக்கடியை எதிர்கொள்ளலாம் என சபை 
சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் திட்டமிட்ட அடிப்படையில் உத்தேச புதிய மின்சார நிலையங்களை ஆரம்பிப்பது அவசியம் என சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய பாரிய எட்டு மின் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிராந்திய மாநிலமான தமிழகத்தில் மின்சார விநியோகம் பெரும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு சுழற்சி முறையிலான மின்சார தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில் இலங்கையில் அப்படியானதொரு பாதகமான நிலை இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்காலத்தில் இலங்கையில் பிறப்பிக்கப்படும் மேலதிக மின்சார அலகுகளை சார்க் பிராந்திய நாடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுகிறது.
தெற்காசிய நாடுகளில் மின்சார பாவனையில் தட்டுப்பாடுகளை எதிர்நோக்கும் நாடுகளுக்கு இந்த மேலதிக மின்சார அலகுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்னிமாக்கப்பட்டது.
முழு நாட்டுக்கும் ஒளி - இருளில் இருந்து விடுதலை என்ற தொனிப்பொருளின் கீழ் மின் உற்பத்தி நடவடிக்கைகள் உயர்ந்த மட்டத்தில் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 14 அக்டோபர், 2016

உலகத்தில் மிக பழமையான கார் யாழ்ப்பாணத்தில் ?

உலகத்திலுள்ள மிக பழமையானதும் பிரபல்யமானதுமான கார்களில் ஒன்று தற்போது யாழ்ப்பாணத்தில் கார் விற்பனை கொள்வனவாளரான குமாரசாமி ரவிச்செல்வனிடமுள்ளது.
இக் கார் 1929 ஆம் ஆண்டு இத்தாலியில் தயாரிக்கப்பட்டுள்ளது. அக் காலப்பகுதியில் இலங்கையை ஆங்கிலேயர் ஆட்சி செய்து வந்திருந்த நிலையில் இங்கே பல பண்ணையர்களும் 
இருந்திருந்தனர்.
அவ்வாறு ஓர் பண்ணையாளரான பொன்னையா இராஜேந்திரன் தனது பண்ணைகளை சுற்றிப்பார்க்கவும் வேட்டைக்கு செல்லவும் இக் காரையே பயன்படுத்தியிருக்கிறார்.
குறித்த நபர் இத்தாலியில் இருந்து காரை இறக்குமதி செய்து இலங்கையில் விற்பனை செய்துவரும் கார் விற்பனை நிறுவனமொன்றின் ஊடாக இலங்கை பெறுமதி 3300 ரூபாவிற்கு 1931ஆம் ஆண்டு கொள்வனவு 
செய்துள்ளார்.
இதன் விலையை ஞாபகப்படுத்தும் வகையிலேயே இக் காரிற்கு இவர் 3300 என்ற இலக்கத் தகட்டையும் வைத்துள்ளார்.
இதன்பின்னர் அவர் இறந்துபோகவே யாழ்.குடாநாட்டில் பெயர்போன கார் விற்பனை கொள்வனவாளரான குமாரசாமி ரவிச்செல்வன் (கப்பிரெக்ஸ் ரவி) என்பவருக்கு 1994 ஆம் ஆண்டு 2 அரை இலட்சத்திற்கு அக் கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன்பின்னர் இக் காரை இன்றுவரை அவரே வைத்துள்ளார். தற்போது இக்காரை வைத்துள்ள குமாரசாமி ரவிச்செல்வன் கருத்து தெரிவிக்கும் போது,
இது நீண்ட பராம்பரியம் மிக்க கார். இதனை பண்ணையர் வைத்திருக்கும் போது எங்களுக்கு பத்து வயதிருக்கும். பண்ணையர் யாழ்ப்பாணத்தில் தினகரன் விழா நடக்கும் போது அங்கு இடம்பெறும் கார் போட்டியில் இக் காரே முதலிடம் பெறும். அப்போதிருந்தே எனக்கு இந்த காரில் 
பிரியம் ஏற்பட்டது.
அதன்பின்னர் பண்ணையர் இறந்துபோக இக் காரை நான் ஆசைப்பட்ட பிரகாரமே எனக்கு விற்றுவிட்டனர். அதன்பின்னர் இக் காரை என்னிடம் கொழும்பில் இருந்து கூட வந்து 45இலட்சம் வரை விலைக்கு கேட்டிருந்தனர். ஆனால் நான் விற்காமல் வைத்துள்ளேன்.
இக் காரில் முன்னால் உள்ள விளக்கின் மேல் சிவப்பு கல்லொன்று உள்ளது. இது கார் ஒடும்போது விளக்கு ஒளிர்கின்றதா? இல்லையா? என்பது சாரதி ஆசனத்தில் இருந்தவாறே இதனூடாக பார்க்க
 முடியும்.
தற்போது இக் காருக்கு தேவையான பாகங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு இலண்டனில் இருந்து வாங்கி வந்து வைத்துள்ளேன் என்றார்.
அத்துடன் இலங்கையில் “A” எழுத்திலுள்ள ஒரேயொரு காரும் இதுவேயாகும். இக் காரை இறக்குமதி செய்த நிறுவனம் தற்போதும் கொழும்பில் அதே முகவரியில் உள்ளது அவர்கள் இறக்குமதி செய்த காரும் என்னிடமுள்ளது என்றார்.
தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள இக் கார் இலங்கையிலே “A ” எழுத்திலுள்ள ஒரேயொரு கார் என நம்பப்படுகின்றது. குறித்த காரை நல்லூர் ஆலய நிர்வாகத்தினர், இராணுவத் தளபதிகள் உட்பட பலர் 45 இலட்சம் ரூபா வரையில் கேட்டும் அதனை விற்காமல் அதன் உரிமையாளர் 
வைத்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 11 அக்டோபர், 2016

இளைஞர் ஒருவர் மின்தாக்கி பரிதாபமாக பலி!


மட்டக்களப்பு கூலாவடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மின் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .
குறித்த இளைஞன் நேற்று தொழில் நிமிர்த்தம் இலங்கை தொலைத் தொடர்ப்பு சேவையின் மின் கம்பம் ஒன்றை நாடுகின்ற போது 33 ஆயிரம் சத்தி உடைய மின் வலு தாக்கி உயிர் இழந்துள்ளார் 
மட்டக்களப்பு கூ லாவடியை சேர்ந்த  28  வயதுடைய இமானுவேல் பார்த்திபன் என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார் .
இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை  மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெளிநாட்டு நிறுவனங்கள் மருந்துப் பொருட்கள் உற்பத்தி செய்ய ஆர்வம்!

உள்நாட்டிலேயே மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்ய 28 வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
அத்தியாவசியமான மருந்துப் பொருட்கள் இவ்வாறு உற்பத்தி செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ரஷ்யா, இஸ்ரேல், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் 28 நாடுகள் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்ய முன்வந்துள்ளன.
இந்த 28 வெளிநாட்டு நிறுவனங்களில் ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளின் இரண்டு நிறுவனங்கள் ஏற்கனவே இலங்கையில் மருந்துப்பொருள் உற்பத்தி செய்வது குறித்த உடன்படிக்கையில் 
கைச்சாத்திட்டுள்ளது.
இன்னும் ஓராண்டு காலப்பகுதியின் பின்னர் இந்த நிறுவனங்கள் மேற்கத்தைய மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதற்காக 10 மில்லியன் டொலர்களை முதலீடு செய்ய உள்ளது.
இலங்கையில் மருந்துப் பொருள் உற்பத்தி செய்ய உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் எதிர்காலத்தில் உற்பத்திசாலைகளை 
அமைக்க உள்ளன.
உற்பத்தி செய்யப்படும் மருந்துப்பொருட்கள் அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட உள்ளதுடன், எஞ்சிய மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 9 அக்டோபர், 2016

இரண்டு இலங்கை பெண்கள் உயிரை பலியெடுத்த 'செல்பி'!!!

ஓமான்  மான்சலாலாஹ் பிரதேசத்தில் குளமொன்றிற்கு அருகில் இருந்து 'செல்பி' எடுக்க முயன்ற இரு இலங்கை பெண்கள் அதில் வீழந்து உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த  இரு பெண்களும், குறித்த குளத்திற்கு அருகில் இருந்து 'செல்பி' எடுக்க முயற்சித்துள்ளனர்
இதன்போது , ஒரு பெண் குளத்தில் விழுந்துள்ள நிலையில் , அவர் மற்றைய பெண்ணின் கையை பிடித்துள்ளதால் அவரும் குளத்தில் ஆழமான பகுதியில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த பெண்களை காப்பாற்றி வைத்தியசாலையிற்கு கொண்டுசென்றுள்ளனர்.
எனினும் , குறித்த பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்னரே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>



வெள்ளி, 7 அக்டோபர், 2016

பஸ் லொறியுடன் மோதியதால் பாரிய விபத்து யாழில் !

யாழில்   நேற்று  அதிகாலை 4.30 மணியளவில், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வெங்கடேஸ்வரா தனியார் பஸ் லொறியுடன்  மோதியதால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

வீதியில் மாடுகள் திடீரென குறுக்கிட் டதால் மாடுகளை மோதிவிடக்கூடாது என்ற சாரதியின் நோக்கம் லொறியுடன் மோதியது என மக்கள் தெரிவிக்கின்றனர் காயப்பட்டவர்களை வாகனத்தில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பியதாகவும் செய்திகள்
 தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 4 அக்டோபர், 2016

திடீர் இடமாற்றம் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி!

கதிர்காமத்திலுள்ள பொலிஸ் ஓய்வு விடுதியில் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உபபொலிஸ் பரிசோதகர் இருவரும் முறைகேடாக நடந்து கொண்டமையை அடுத்து தண்டனை இடமாற்றம் 
வழங்கப்பட்டுள்ள து.
இது பற்றி மேலும் தெரியவருவதாது,
கடந்த வாரம் தமது விடுமுறையை முன்னிட்டு யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உபபொலிஸ் பரிசோதகர் இருவரும் கதிர்காமம் சென்றிருந்தனர்.
கதிர்காமத்தில் பொலிஸாருக்கென அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் ஓய்வு விடுதியில் தங்கியிருந்த சமயம் இவர்கள் மது போத்தல்களுடன், இளம் பெண்களுடன் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதனை அடுத்து குறித்த பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதையடுத்து தண்டனை இடமாற்றம் 
வழங்கப்பட்டுள்ளது.
உபபொலிஸ் பரிசோதகர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கும் , யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மட்டக்களப்பிற்கும் இன்று முதல் இடமாற்றம் பெற்றுள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

மின்சார கட்டணம் 300 ரூபாவாக குறைப்பு மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.


விவசாய நடவடிக்கைகளுக்கான செலுத்த வேண்டிய மின்சார கட்டணம் இன்று முதல் 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் விவசாய நடவடிக்கைகளுக்கான மின்சார கட்டணம் 600 ரூபாவாக அறவிடப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று முதல் விவசாய நடவடிக்கைகளுக்கான மின்சார கட்டணமாக 300 ரூபா அறவிடப்படவுள்ளது.
இதேவேளை விவசாய நடவடிக்கைகளுக்காக புதிய மின் மீட்டர் பொருத்தப்படும் என
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>