siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மக்கள்தொகை 35 மில்லியனை தாண்டியது


கனடாவில் மக்கள்தொகை 35 மில்லியனை தாண்டியுள்ளதாக புள்ளிவிபர அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
கனடாவின் புள்ளிவிபரவியல் மக்கள்தொகை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கனடாவில் மொத்த மக்கள்தொகை 35,158,300 என்று கணக்கிடப் பட்டுள்ளதாகவும், இது கடந்தாண்டை விட 404, 000 அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 1.2 சதவிகித அதிகரிப்பு, கடந்த 30 வருடங்களாக ஒரே மாதிரியாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு தேசிய அளவில் அல்பேர்ட்டாவில் 3.4 சதவிகித அதிகரிப்பும், Nunavut 2.5 சதவிகிதமும், Saskatchewan 1.9 சதவிகிதமும் அதிகரித்து காணப்பட்டுள்ளது.

மேலும் அல்பெர்ட்டாவில் மக்கள் தொகை அதிகரித்து காணப்படுவதற்கு சர்வதேச குடிவரவும், மற்ற மாகாணங்களிலிருந்து குடிபெயர்ந்தவர்களுகமே காரணம் என்றும் புள்ளிவிபர ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நோவஸ்கோசியாவில் அரை சதவிகிதம் குறைந்து காணப்படுகிறது என்றும், அட்லாண்டிக் மாகாணங்களில் வளர்ச்சி குறைந்தும் காணப்படுகிறது.

இதற்கு குடியேறியவர்களின் வெளியேற்றமும், குறைந்த அளவு பிறப்புமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

ரூ. 2.50 கோடிக்கு விற்பனையான இந்தியரின் ஓவியம்


அமெரிக்காவில் இந்தியர் வரைந்த ஓவியம், அமெரிக்காவில் 2.54 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.

கடந்த 18ம் திகதி மார்ட்டின் அண்டு கான்டெம்பொரரி சவுத் ஆசியன் ஆர்ட் நிறுவனம், நியூயார்க்கில் ஏற்பாடு செய்த கண்காட்சியில் நடைபெற்ற

ஏலத்தில், இந்திய ஓவியரான பூபென் காகர் வரைந்த 'அமெரிக்க கணக்கெடுப்பு அதிகாரி' என்ற ஓவியம் 4 லட்சம் டொலருக்கு விற்பனையானது.
ஆறு பேர், இந்த ஓவியத்தை வாங்க போட்டியிட்டதில் ஏறக்குறைய இரு மடங்கு விலைக்கு விற்பனையானது.

இந்த ஏலத்தில் இடம் பெற்ற மற்றொரு இந்தியரான பிரான்சிஸ் நியூட்டன் ஷுஜா வரைந்த ஓவியம், 1.30 கோடிக்கு விற்பனையானது.
இந்த கண்காட்சி மற்றும் ஏல விற்பனையில் அமைப்பாளர்களுக்கு 20 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.
 

2 வயது சிறுவன் மாடியிலிருந்து தூக்கி ஏறியப்பட்டு கொலை


சீனாவின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற மாகாணம் குவாங்ஸி ஷுயாங்.
இங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 6–வது மாடியில் இருந்து 2 வயது சிறுவன் ஒருவன் வெளியே தூக்கி வீசப்பட்டான்.

இதனால் ரோட்டில் விழுந்த சிறுவனி்ன் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி மரணமடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பொலிஸர் அங்கு விரைந்து வந்து சிறுவனை வீசி கொலை செய்த நபரை கைது செய்தனர். கொலையாளின் பெயர் லூ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிறுவனின் தாயாருக்கும், லூவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து இருந்தனர்.
இந்த நிலையில் சிறுவனின் தாயாரை நேரில் பார்த்த லூ அவரிடம் பேசும்போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த லூ அருகில் நின்ற சிறுவனை தூக்கி வெளியே வீசி கொலை செய்தான்.
 

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

வேலை நிச்சயம்! கொமடி செய்தால்

 
நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என, சமீபத்தில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை கிடைப்பதற்கு உள்ள தகுதிகள் குறித்த ஆய்வு ஒன்றை, அமெரிக்காவின், மனித வள மேம்பாட்டு நிறுவனம் நடத்தியது.
இதற்காக, இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மேலாளர்கள் மற்றும் மனித வள அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

ஒரே விதமான கல்வித் தகுதி படைத்த இருவரில், சமுதாயம் மீது அக்கறை உள்ளவர்களுக்கும், நன்றாக உடை அணிந்தவர்களுக்கும் வேலை கிடைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை.

பொதுவாக உள்ள அம்சங்களில் இருந்து சற்று மாறுபட்டு சிந்திப்பவர்களையே, நிறுவன மேலாளர்கள் தேர்வு செய்கின்றனர். உடல் ரீதியாக, நல்ல தகுதி படைத்தவர்கள், தற்போதைய நடைமுறை சூழலை

நன்கு அறிந்தவர்கள், சமூக ஊடகங்களில் பங்கேற்பவர்கள், விளையாட்டுத் துறையில் ஆர்வம் போன்ற தகுதியை பெற்றுள்ளவர்களுக்கே வேலை கொடுப்பதில், முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

வேலை கொடுப்பவர்கள், தொழில் ரீதியாக மட்டும் திறமை படைத்தவர்களை தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு எல்லா விதத்திலும் தகுதி படைத்தவர்களைத் தான் தேர்ந்தெடுக்கின்றனர். நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

பதவி உயர்வு குறித்து கேட்பவர்களுக்கே, அது தொடர்பான முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதில், சில வகையினருக்கு, பதவி உயர்வுகள் மறுக்கப்படுகின்றன. அதாவது, "இது என்னுடைய வேலை இல்லை' என, மறுப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

பணிக்கு தாமதமாக வருவது, மற்றவர்களது வேலையை பார்த்துவிட்டு, அதில் இருந்து ஆதாயம் அடைய முயலுவது, வேலை நேரம் முடிவதற்கு முன்னதாகவே வீட்டுக்கு சென்றுவிடுவது போன்ற காரணங்களாலும், பதவி உயர்வு கிடைப்பது தாமதமாகலாம் அல்லது கிடைக்காமல் போகலாம்.

ஓயாமல் வம்பு பேசுபவர்கள், மற்றவர்கள் குறித்து புகார் அளிப்பவர்கள், அலுவலக பணத்தை செலவு செய்வதில் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள், பணிக்கு ஏற்றபடி உடை அணியாதவர்கள் ஆகியோருக்கும் பதவி உயர்வுகள் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது.

நீங்கள் வேலைக்கு செல்ல தயார் என்றால், உங்களது தனிப்பட்ட திறமைகள் தான் அதன் திறவுகோல் என்கிறார், இந்த ஆய்வு நிறுவனத்தின் தலைவர், ரோஸ் மேரி ஹப்னர்.

சனி, 14 செப்டம்பர், 2013

பல்கலைக்கழக மாணவர் விடுதி மீது தாக்குதல்


களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத சிலர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கன்னங்கர விடுதியினுள் நுழைந்த கும்பலொன்று மேற்படி தாக்குதலை நடத்தியுள்ளது.
இதன்போது விடுதியின் ஜன்னல்கள்,கதவுகள், மாணவர்களின் மோட்டார் சைக்கிள்கள்,  கண்ணாடிகள் போன்றவற்றை சேதப்படுத்தியுள்ளனர்.
இத் தாக்குதலால் எவரும் காயங்களுக்குள்ளாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

திங்கள், 9 செப்டம்பர், 2013

விற்பனையில் களைகட்டிய பிள்ளையார் சிலைகள்


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பிள்ளையார் சிலைகள், தோரணங்கள் மற்றும் பூஜை சாமான்கள் விற்பனை களை கட்டியுள்ளது.
முழுமுதல் கடவுள் விநாயகப்பெருமானின்
சதுர்த்தி விழாஇன்று கொண்டாடப்படுகிறது.
                                                                                                                               
   இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று  அதிகாலை 4 மணியிலிருந்து சிறப்பு தரிசன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியன்று மக்கள் வீடுகளில் சிறிய களிமண் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டு, நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். சென்னையில் கொசப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில்

களிமண் விநாயகர் பிள்ளையார் சிலைகள் ஏராளமாக செய்யப்பட்டன.
இந்த சிலைகள் கோயம்பேடு மார்க்கெட், பூக்கடை, பாரிமுனை, மயிலை, போன்ற இடங்களில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டில் இந்த பிள்ளையார் சிலைகள் அதன் உயரத்துக்கு ஏற்ப ரூ.30 முதல் ரூ.200 வரை விற்கப்பட்டன.

இந்த ஆண்டு இவை ரூ.75ல் தொடங்கி ரூ.400 வரை விற்கப்படுகிறது. அதே போல, வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் 5 அடி முதல் 18 அடி வரையான உயரங்களில் விற்கப்படுகின்றன.

இவை ரூ.5 ஆயிரத்தில் தொடங்கி ரூ.40 ஆயிரம் வரையான விலையில் விற்கப்படுகின்றன. நகைக் கடைகளில் நவரத்தின விநாயகர் சிலைகள் லட்சக்கணக்கான ரூபாயில் விற்கப்படுகின்றன.
பிள்ளையாருக்கு பயன்படுத்தும் குடைகள் சிலைகளின் உயரத்துக்கு ஏற்ற வகையில் விற்கப்படுகின்றன.
கடந்த ஆண்டில் ரூ.10க்கு கிடைத்தது. இந்த ஆண்டு ரூ.15ல் தொடங்கி ரூ.50 வரை விற்கப்படுகிறது.

இது தவிர கரும்பு ஒரு கட்டு (15 கழிகள்) ரூ.300 க்கு விற்கப்படுகிறது.
மாவிலை மற்றும் தோரணம் ஒரு ஜோடி அடங்கியது ரூ.30க்கும், பொரி, அவல், கடலை, சர்க்கரை கலந்து ஒரு லிட்டர் ரூ.30க்கும் விற்கப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் முதல் முறையாக ஆப்பிள், பேரிக்காய், கொய்யா, சாத்துக்குடி, விளாம்பழம், சோளம், கம்பு, இலந்தை பழம் ஆகியவை அடங்கிய ஒரு பேக்கிங் ரூ.100க்கு விற்கப்படுகிறது
 

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

வாகன விபத்து !கிளிநொச்சியில் 4 பேர் படுகாயம்


 
கிளிநொச்சி பரந்தன்- முல்லைத்தீவு வீதியில் வானும் உழவு இயந்திரமும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று காலை 10 மணிக்கு பூங்காவனம் சந்தியில் இடம்பெற்றுள்ளது

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்,{புகைப்படங்கள்}