siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 18 மார்ச், 2024

நாட்டில் செட்டிகுளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் மரணம்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வீதியால் சென்றவரை யானை தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக செட்டிகுளம் பொலிசார் 
தெரிவித்தனர். 
செட்டிகுளம், மருதமடுப் பகுதியில் 17-03-2024.அன்று 
 மாலை வீதியால் பயணித்த முதியவர் ஒருவரை அப் பகுதிக்கு வந்த யானை தாக்கியுள்ளது. 
இதனால் படுகாயமடைந்த குறித்த முதியவர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். 
செட்டிகுளம், மருதமடுப் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய தனபாலகே அனுர தென்னக்கோன் என்பவரே மரணமடைந்தவராவார். 
இச் சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.






 

ஞாயிறு, 17 மார்ச், 2024

நாட்டில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

நாட்டில்மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வில்வத்த மற்றும் அம்பேபுஸ்ஸ நிலையங்களுக்கு இடையில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 
 கொழும்பில் இருந்து  16-03-2024.அன்று  காலை ரம்புக்னா நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். 
உயிரிழந்த நபர் 62 வயதுடையவர் எனவும், அவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் 
தெரிவிக்கின்றனர். 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





 

சனி, 16 மார்ச், 2024

ஒன்டாரியோவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய குடும்பத்தினர் உயிரிழப்பு

கனடாவின் ஒன்டாரியோவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் 
தெரிவிக்கின்றன. 
தீயை அணைத்த பிறகு மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. எவ்வாறாயினும், அவர்களின் அடையாளத்தை அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 
குறித்த வீட்டிற்கு யாரேனும் தீவைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.






 

வெள்ளி, 15 மார்ச், 2024

கனடா ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட வர்களின் இறுதிச் சடங்கு நாளை

கனடா- ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பாஹிவனில் உள்ள வீட்டில் படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது
இலங்கையர்களின் இறுதிக்கிரியைகளை, ஒட்டாவா நகரில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் மேற்கொள்ள நடவடிக்கை
 எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , உயிரிழந்த ஆறு பேரின் இறுதிக் கிரியைகள் அவர்களின் உறவினர்களின் விருப்பப்படி மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
.என்பது குறிப்பிடத்தக்கது.




 

வியாழன், 14 மார்ச், 2024

மரண அறிவித்தல்அமரர் சிதம்பரப்பிள்ளை கந்தையா 14.03.2024

 துயர் பகிர்வு மலர்வு .02-10-1936-- உதிர்வு -14-03-2024
யாழ். பலாலியை பிறப்பிடமாகவும்  ஆவரங்கால் சந்தை வீதியை வதிவிடமாகவும் கொண்ட. 
அமரர்   சிதம்பரப்பிள்ளை கந்தையா 
        அவர்கள் .14-03-2024.இன்று  வியாழக்கிழமை. இறைபாதம் அடைந்தார்.  அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
அன்னார். காலஞ்சென்ற திரு திருமதி சிதம்பரப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும். 
செல்லம் அவர்களின் அன்புக்கணவரும். 
செல்வக்கந்தராணி,நல்லக்கந்தராணி,மாவைக்கந்தராணி,செந்தமிழ்கந்தராசா(லண்டன்) செல்வக்கந்தராசா ( சுவிஸ்) மதுராம்பிகை ( பிரான்ஸ்)  ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகட்க்கு. 
மகன். செந்தமிழ். +44 7446 102616


புதன், 13 மார்ச், 2024

நாட்டில் நான்கு வயது சிறுமிக்கு எமனாக மாறிய காய்ச்சல் மாத்திரை

மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ளதாக 
குறிப்பிட்டுள்ளனர்
மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி 11-03-2024.அன்று 
 உயிரிழந்துள்ளார். ஓஷதி சவிந்தயா ராஜபக்ஷ என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். தாய் வௌிநாடு சென்றுள்ளதால் தாத்தா, பாட்டி மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து 
வந்துள்ளார்.
தந்தை அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள வேறொரு வீட்டில் வசித்து வருவதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து 
தெரியவந்துள்ளது.
 மஹியங்கனை வைத்தியசாலையில் சிறுமியின் தொண்டையில் சிக்கியிருந்த மாத்திரை அகற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலைக்கு 
மாற்றப்பட்டுள்ளார்.
விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை மரண விசாரணையை ஒத்திவைக்க திடீர் மரண பரிசோதகர் அமல் ஜயவர்தன நடவடிக்கை எடுத்திருந்தார்
.என்பது குறிப்பிடத்தக்கது





 

செவ்வாய், 12 மார்ச், 2024

ஹொக்கைடோவில் பனிச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழப்பு

ஜப்பானின் வடக்குப் பிரதான தீவான ஹொக்கைடோவில் பனிச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். 
1,898 மீட்டர் உயரமான யோடேய் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த இருவரும் நெதர்லாந்து நாட்டு பிரஜைகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஜப்பானின் கியோடோ வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஆறு பேர் கொண்ட குழு பனிச்சரிவில் ஈடுபட்டதாகவும், மூன்று பேர் பனிச்சரிவில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
உயிர் பிழைத்தவரின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது