siruppiddy

18

siruppiddy

unkal

unkal
மருத்துவ செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவ செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

எவ்வளவு பால் குடிக்கலாம் சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமம்

பால் நல்ல ஒரு நிறையுணவாகும். இதை பசுமாட்டில் இருந்து எடுப்பார்கள். பாலில் அதிகளவான கால்சியம் நிறைந்துள்ளது. இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்க மருத்துவர்கள் எப்போதும் குறைந்த 
கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து போன்ற 
சமச்சீரான உணவைப் பரிந்துரைக்கிறார்கள். 
அதிகப்படியான
 கொழுப்பு தீங்கு விளைவிக்கும் மற்றும் சர்க்கரை 
நோயாளிகளுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். பல 
சர்க்கரை நோயாளிகளுக்கு எலும்பு 
முறிவு போன்ற
 பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை மருத்துவர்கள்விளக்குகின்றனர்.
அந்த வகையில் ரத்தத்தில் சக்கரை அளவு அதிகரிப்பதற்கு சில உணவுகள் காரணமாக இருக்கிறது. இந்த காரணத்தினால் தான் சர்க்கரை நோயாளிகள் பால் குடிக்கலாமா, வேண்டாமா என்பதை இந்த
 பதிவில் பார்க்கலாம்.
சக்கரை நோயாளர்கள் ரத்தில் சக்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். இதற்கு நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைக் பாதுகாக்க உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் செய்வது அவசியமாகும்.
சக்கரை நோய் என்பது ஒரு தொற்றாத நோயாகும். இந்த நோய் வந்தால் உணவில் மிக கவனத்துடன் இருப்பது முக்கியம். சாப்பிடுவதில் சிறிது கவனக்குறைவு இருந்தாலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சக்கரை நோயாளிகள் குறைந்த கொழுப்புள்ள உணவுகளை 
மட்டுமே சாப்பிட வேண்டும்.
இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்க மருத்துவர்கள் எப்போதும் குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து போன்ற சமச்சீரான உணவைப் பரிந்துரைக்கிறார்கள்.
பெரும்பாலான மக்கள் பாலை தங்கள் உணவுப் பகுதியில் ஒரு பங்காக எடுத்துக்கொள்கின்றனர். பாலில் கால்சியம், ப்ரோடீன் மற்றும் வைட்டமின் டி ஆகியவை நிறைந்துள்ளது.
பாலில், இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடிய கொழுப்புகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. ஆனால் பால் சக்கரையின் அளவை அதிகரிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
பல சர்க்கரை நோயாளிகளுக்கு எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது, எனவே கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது சக்கரை நோயாளிகளின் எலும்புகளை வலுவாக வைத்திருக்க 
உதவுகிறது.
சக்கரை நோயாளிகளுக்கு ப்ரோடீன் மிகவும் முக்கியமானது. ப்ரோடீன் நிறைந்த பாலில் ஒன்பது அத்தியாவசிய அமினோ ஆசிட்கள் உள்ளன. 
எனவே உங்கள் உணவு அல்லது சிற்றுண்டியில் பாலை 
சேர்க்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது 
மட்டுமல்லாமல் இது எடை குறைப்புக்கு நன்மை அளிக்கும் மற்றும் நீரிழிவை கட்டுக்குள் வைக்கும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சக்கரை நோயாளிகள் உணவில் கால்சியம் நிறைந்த பாலை சேர்க்கலாம். ஆனால் மருத்துவர்களின் கூற்றுப்படி, கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள பாலை 
தேர்வு செய்ய வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். காரணம் முழு பாலில் அதிக நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால், இதய நோய் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 1 மார்ச், 2023

இளநீர் ரை சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

கோடை காலம் வந்துவிட்டாலே இளநீர் அமிர்தமாகவே காணப்படும். ஆம் அந்த அளவிற்கு உடம்பை குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இளநீர் பானங்கள் பயன்படுகின்றது. இளநீரில் அதிகளவு வைட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் 
அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. இந்த இளநீரானது ஊட்டச்சத்துக்களுடன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது.
இளநீர் புத்துணர்ச்சியையும், போதுமான ஆற்றலை வழங்குவதுடன் சர்க்கரை நோயாளிகள் இதனை தாராளமாக அருந்தலாம். இளநீர் குடித்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்த உதவியாக 
இருக்கின்றது.
ஆனால் இவற்றில் இயற்கையாகவே சர்க்கரை கூறுகள் இருப்பதால் நீங்கள் இளநீரை அதிகளவு குடிக்காமல் அளவோடு குடிக்கும்படி 
அறிவுறுத்தப்படுகிறது.
கோடை காலத்தில் வேறு பானங்களை அருந்தாமல் இளநீர் அருந்துவது நல்லதாகும்.
சிறுநீரக கற்கள் அபாயத்தைக் குறைப்பதிலும் பெரிதும் உதவியாக இருக்கிறது, ஒருவர் தினசரி இளநீரை குடித்து வர அவர்களது சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீர் அருமருந்தாக பயன்படுகிறது. சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு இளநீரை கொடுத்தால் அவர்களது சிறுநீரில் கற்கள் உருவாக காரணமாக இருக்கும் அதிக சிட்ரேட், பொட்டாசியம் மற்றும் குளோரைடுகள் 
வெளியேற்றுகிறது.
எனவே இளநீர் குடிப்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படும் என்பது தெரிகிறது.
இளநீர் குடிப்பது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறப்பான பங்கினை வகிக்கிறது. இளநீரில் நிறைந்துள்ள உள்ள பொட்டாசியம் சத்துக்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றது.
அடிக்கடி இளநீர் குடித்து வர இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது என்று ஆய்வுகளின் மூலம் 
தெரிய வந்துள்ளது.
மேலும் சருமம் பொலிவடைவதுடன், இயற்கையான மாய்ஸ்சரைசராகவும் செயல்படுகின்றது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 13 ஜூலை, 2022

நீங்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப் படுகிறீர்களா உடன்போக்க இதோ

எம்மில் சிலருக்கு உடலில் ஏற்படும் அதிக வியர்வை, காஷ், வாய்த் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகளால் பல நேரங்களில் பல இடங்களில் மற்றவர்களுடன் இருக்கும் போது சங்கடமான சூழ்நிலைகளை அனுபவித்திருப்போம். அந்த வகையில் வாயில் இருந்து வரும் துரு நாற்றத்தை எப்படி போக்குவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வாய்த் துர்நாற்றம் வர பல காரணங்கள் உண்டு. சரியாக பல் விலக்காமல் இருப்பது, செரிமான கோளாறு, வெங்காயம், பூண்டு போன்றவற்றை அதிகளவில் சாப்பிடுவது, வாயில் ஏற்படும் கிருமி தொற்று, புகையிலை, அசைவ உணவு போன்றவற்றினால் கூட வாயில் 
துர்நாற்றம் ஏற்படலாம்.
இதனை எப்படி சரிசெய்வது? வாங்க பாக்கலாம். புதினா இலைகளை மென்று தின்பதால் வாயில் இருக்கும் கெட்ட பக்டீரியாக்கள் அளிக்கப்பட்டு வாய் துர்நாற்றம் குறையும். எலுமிச்சை சாற்றுடன் சிறிது நீர் கலந்து குடித்து வந்தாலும் இந்த பிரச்சினை எளிதில் சரியாகும்.
காலை எழுந்ததும் டீ, கோப்பி போன்றவற்றிற்கு பதிலாக அதிக அளவு தண்ணீர் குடிப்பது நன்மை தரும்.
மேலும், ஒருநாளைக்கு இரண்டு முறை பல்துலக்குவது, பல் துலக்கிய பிறகு நாக்கை சுத்தம் செய்வது, பல் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது, இயற்கையாக விளைந்த காய்கறிகளை உண்பது போன்றவற்றின் மூலம் இந்த பிரச்சினையை 
சரி செய்யமுடியும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




வியாழன், 20 ஜனவரி, 2022

மரண அறிவித்தல் அமரர் சின்னத்தம்பி தனபாலசிங்கம் 19.01.22

யாழ்.  அச்சுவேலி பத்தமேனியைபிறப்பிடமாகவும்,  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்தம்பி தனபாலசிங்கம் அவர்கள் 19-01-2022 புதன்கிழமை  அன்று கனடாவில்  சிவபதம் அடைந்தார் அன்னார் லில்லிமலர் அவர்களின் அன்புக்கணவரும்( கனடா ) ஜெகதீஸ்வரன்(சுவிஸ்) ஜெகதீஸ்வரி ( கனடா ) ஜெயவதானி ( கனடா )  ஜெயராணி ( கனடா ) ஜெயமாலா( இலங்கை)  ஆகியோரின் பாசமிகு தந்தையரும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2022 திங்கள்கிழமை  அன்று  கனடாவில் உள்ள மண்டபத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்
 எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


வியாழன், 22 ஜூலை, 2021

யாழ் நகரில் யாசகர் ஒருவர் சடலமாக மீட்பு

யாழ் நகரில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள நடைபாதை வியாபார ஒழுங்கை பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த முதியவர் யாழ் நகரப் பகுதியில் யாசகம் செய்பவர் என தெரிய வந்துள்ளது.
முதியவர் இருதய நோய் காரணமாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண காவல் துறையால்   முதியவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு பிசிஆர் பரிசோதனையின் பின்னர் மரண விசாரணை 
இடம் பெறவுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 2 ஜூலை, 2021

வேலை செய்தாலே இடுப்பு வலி உடல் சோர்வு இருந்தால் இதை சாப்பிடுங்கள்

நீங்கள் அடிக்கடி பலவீனம் என்ற பிரச்சினை மூலம் தொந்தரவு என்றால். இன்று நாம் ஒரு விஷயத்தை பற்றி உங்களுக்கு சொல்லப்போகிறோம். இது அவர்களின் உடலில் பலவீனத்தின் சிக்கலைக் குறைகிறதுஇது கருப்பு கடலை. கடலையில் உள்ள புரதம், வைட்டமின்கள், இரும்பு, கால்சியம், நார்ச்சத்து கூடுதலாக மற்ற ஊட்டச்சத்து
 நிறைய உள்ளன.
து உங்கள் உடலுக்கு மிகவும் பயனுள்ளது. அதை வழக்கமான நுகர்வு மூலம், உடல் போதுமான ஆற்றல் பெறுகிறது. உடலின் பலவீனம் எப்போதும் நீக்கப்படுகிறதுதண்ணீரில் நனைத்த கடலை ஒவ்வொரு இரவும் எடுத்துக்கொள்ளவும் அடுத்த நாள் காலை கடலை முழுமையாய் இருக்கும். நீங்கள் சாப்பிட வேண்டியது. ஒவ்வொரு காலையிலும் வேரும் வயிற்றில் உட்கொண்டால். உடலின் பல நோய்களால்
 இது முடிவடையும்.
ஆண்மை அதிகரிக்ககொண்டைக்கடலையை தண்ணீரில் ஊற வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும், மெலிந்த உடல் பெருக்கும். சளி, இருமல் குணமாகும். நுரையீரல் தொடர்பான நோய்களும்
 குணமாகும்
சிறுநீர் பிரச்சினைகள் தீரகொண்டைக்கடலையை வறுத்து பொடி செய்து தினமும் இருவேளை உட்கொண்டு வர வயிறு பொருமல், சிறுநீர் சரிவர வெளிப்படாமல் சொட்டு சொட்டாக போதல், சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.
தலைவலி, தலைபாரம் குணமாககொண்டைக்கடலையை லேசாக வறுத்து சாப்பிட்டு பின் பால் அருந்தி வர இருமல், தலைவலி, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




வியாழன், 1 ஜூன், 2017

தொடர்ந்து இதை 3 மாதம் சாப்பிட்டால் நோய்கள் மறையுமாம் ?

அரிக்காவில் சுமார் 70% குழந்தைகள் வைட்டமின் டி குறைபாட்டினால் அவஸ்தைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உடலின் அத்தியாவசிய செயல்பாட்டிற்கு வைட்டமின் டி மிகவும் இன்றியமையாதது. இது பல நோய்களான புற்றுநோய், 
இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும். Take Vitamin D For 3 Months And All Diseases Will Disappear! VIDEO : Amla Juice and its 5 Health Benefits in Summer Amla Juice and its 5 Health Benefits in Summer Lifestyle & Fashion Powered by எனவே ஒவ்வொருவரும் அன்றாடம் போதிய அளவு வைட்டமின் டி கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
அதற்கு பல வழிகள் உள்ளன. அதில் வைட்டமின் டி நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வது, அதிகாலை சூரியக்கதிர்கள் உடலில் படும்படி உடற்பயிற்சியில் ஈடுபடுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் வைட்டமின் டி வைட்டமின் டி வைட்டமின் டி கரையக்கூடிய கொழுப்பு வைட்டமின். மற்ற வைட்டமின்களை விட இது முற்றிலும் 
மாறுபட்டது. மேலும் இந்த வைட்டமின் டி இயற்கையாகவே உடலில் உற்பத்தி செய்யப்படும். எப்படி வைட்டமின் டி குறைபாட்டை அறிவது? எப்படி வைட்டமின் டி குறைபாட்டை அறிவது? வைட்டமின் டி குறைபாட்டை இரத்த பரிசோதனையின் மூலம் மட்டுமே கண்டறிய முடியும். வைட்டமின் டி
 நிறைந்த உணவுகள் வைட்டமின் டி நிறைந்த
 உணவுகள் வைட்டமின் டி சத்தானது மீன்கள், பால் பொருட்கள், ஆரஞ்சு ஜூஸ், சோயா பால், செரில்கள், மாட்டின் கல்லீரல், சீஸ், முட்டை மஞ்சள் கரு போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளது. வைட்டமின் டி அவசியம் வைட்டமின் டி அவசியம் வைட்டமின் டி உடலில் போதுமான அளவில் இருந்தால், அது எலும்புகளால் 
எளிதில் கால்சியத்தை உறிஞ்ச உதவும். ஒருவருக்கு வைட்டமின் டி குறைபாடு தீவிரமாக ஆரம்பித்தால், அதனால் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் வைட்டமின் டி குறைபாடு குறிப்பிட்ட சில நோய்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. இப்போது அது என்ன பிரச்சனைகள் என காண்போம். ஆஸ்துமா ஆஸ்துமா அன்றாடம் போதிய அளவு வைட்டமின் டி சத்து உடலுக்கு கிடைத்தால், அது நுரையீரலை வலிமைப்படுத்தும் மற்றும் சுவாச பாதையில் உள்ள பிரச்சனைகளைத் தடுக்கும்.
 ஆஸ்டியோபோரோசிஸ் ஆஸ்டியோபோரோசிஸ் வைட்டமின் டி மற்றும் கால்சியம் எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, வலிமைப்படுத்தும். இதனால் எலும்புகள் பலவீனமாவது மற்றும் எலும்பு முறிவு ஏற்படுவது தடுக்கப்படும். உட்காயம் உட்காயம் வைட்டமின் டி குறைபாடு இருந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, அதனால் அடிக்கடி உடல்நல குறைவால் அவஸ்தைப்படக்கூடும். இதய ஆரோக்கியம் இதய ஆரோக்கியம் இதய நோய் மற்றும் இரத்த அழுத்தம்
 வைட்டமின் டி குறைபாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஆகவே இப்பிரச்சனைகள் வராமல் இருக்க தினமும் வைட்டமின் டி கிடைக்குமாறு செய்யுங்கள். மன இறுக்கம் மன இறுக்கம் முக்கியமாக உடலில் வைட்டமின் டி குறைவாக இருந்தால், அது மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தி, மன இறுக்கத்தால் அவஸ்தைப்படச் செய்யும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன்
 படிக்க க்ளிக் செய்யவும்
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

கேரட் சாப்பிட்டால் ஏற்படும் ஐந்து அற்புதங்கள்?

நம் தமிழ்நாட்டில் அன்றாடம் எளிதில் கிடைக்கும் காய்கறிகளுள் ஒன்று கேரட். ஆனால் கேரட்டின் முக்கியத்துவம் தெரியாமல் பலர் கேரட்டை சாப்பாட்டில் புறக்கணிப்பது உண்டு. கேரட் சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
1. கண் பார்வை அதிகரிக்கும்
கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது. இதனால் இரவு நேரத்திலும் கண்களில் பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் உங்களை அண்டாது.
2. என்றும் இளமையாக
கேரட்டில் இருக்கும் இந்த பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக வயதான தோற்றம் மறையும். 25 வயதிலேயே வயதான தோற்றம் வருகிறது என வருந்துபவர்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வரலாம். உங்கள் மேனி எப்போதும் பளபளப்பாக இருக்க கேரட் சாப்பிடுங்கள்.
3. மாரடைப்புக்கு குட்பை
கேரட்டில் பீட்டா கரோட்டின் மட்டுமின்றி ஆல்பா கரோட்டின், லுட்டின் ஆகியவையும் இருக்கின்றன. கேரட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ஊளைச்சதை குறையும், கொழுப்பு குறைவது மட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக பசியும் அடங்கும். இதனால் இதய வால்வுகளில் கொழுப்பு அடைக்காமல் மாரடைப்பு முதலான இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகிறது.
4. புற்று நோய்க்கு 
கேரட்டில் பால்காரினால், பால்காரின்டியோல் ஆகியவை இருக்கிறது. இவை புற்று நோய் வருவதற்கான வைபுகளை குறைக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர். எனவே நுரையீரல் புற்றுநோய், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.
5. பள பள பற்கள்
கேரட் சாப்பிடுவதனால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். உமிழ்நீர் அதிகம் சுரப்பதின் காரணமாக பற்களில் பாக்டீரியா போன்றவை வளருவது தடுக்கப்படும். கொஞ்சம் கடினமாக இருக்கும் கேரட்டை நன்றாக கடித்து சாப்பிட்டால் பற்கள் வலுவடைவதோடு பற்களில் உள்ள அழுக்கும் நீங்குகிறது.
இனி தினமும் ஒரு கேரட் கடிக்கலாம் தானே!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


திங்கள், 11 ஜனவரி, 2016

உங்கள் பல்வலி, பல்சொத்தை, பல்புழு நீங்க ???

மிகவும் திறமை வாய்ந்த சித்தமருத்துவர்.  ஒருவர் பல்வலி, பல்சொத்தை, பல்புழு போன்றவைகளிலிருந்து விடுபட ஒரு அருமையான மருத்துவத்தை தெளிவாக கூறியுள்ளார்.
ஒரு கைப்பிடியளவு தும்பை இலைகளுடன்,
நான்கு சின்ன வெங்காயங்களைச் சேர்த்து,
வாயில் போட்டு நன்றாக மென்று துப்ப
பல் சொத்தை, பல் புழு சரியாகும்
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>



செவ்வாய், 8 அக்டோபர், 2013

இதோ உங்களுக்கான உணவுகள்!! எடை அதிகரிக்க


ஆரோக்கியமான உடலை அடைய வேண்டுமெனில் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளையே உண்ண வேண்டும்.
பருமனாக உள்ள பல பேர் உடல் எடையை குறைக்க வேண்டி பாடுபடுவதை போல, ஒல்லியான தேகம் கொண்டவர்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்புகின்றனர்.

உடல் எடையை அதிகரிப்பது சுலபம் என்று நீங்கள் நினைக்கலாம்.
எண்ணெயில் பொரித்த கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அது ஆரோக்கியமானது அல்ல.
உடல் எடை அதிகரிக்கும் போது ஆரோக்கியமாக இருப்பது பெரிய சவாலாக விளங்கும். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு கடினமானது கிடையாது.
போதுமான கலோரிகள் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளையே உண்ணுங்கள்.
புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால், உடல் தசைகள் பெரிதாகி உடல் எடையும் அதிகரிக்கும்.
உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்
உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்களில் கலோரிகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் வளமையாக உள்ளது.
அதனால் உலர் திராட்சை, பாதாம், வால்நட் மற்றும் முந்திரி பருப்புகளை உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு கப் உலர் திராட்சையில் 449 கலோரிகளும், ஒரு கப் பாதாமில் 529 கலோரிகளும் அடங்கியுள்ளது.
அவைகளை ஐஸ்க்ரீம் அல்லது தயிரின் மேல் தூவி விட்டு உண்ணலாம். வேண்டுமானால், சாலட் மற்றும் உணவு தானியங்களிலும் கலந்து உண்ணலாம்.
சீஸ்
மற்ற அனைத்து பால் பொருட்களை போல சீஸிலும் (பாலாடை கட்டி) அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உள்ளது.
இதில் ஆரோக்கியமான நல்ல கொழுப்பு அதிகமாக உள்ளதால், வேகமாக உடல் எடை கூட விரும்புபவர்கள் இதனை உட்கொள்ளலாம்.
கலோரிகள் மட்டுமின்றி, இதில் புரதம், கால்சியம், மற்றும் கொலஸ்ட்ராலும் அதிகமாக உள்ளது.
அதனால் உணவுகளில் கொஞ்சம் சீஸை தூவி விட்டால் போதும், உணவின் சுவை இன்னமும் அதிகரித்துவிடும். ஒரு முறை பரிமாறப்படும் சீஸில் 69 கலோரிகள் உள்ளது.

வேர்க்கடலை வெண்ணெய்
வேர்க்கடலை வெண்ணெயில் புரதமும், கொழுப்பும் அதிகளவில் உள்ளது. உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
ஒரு ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெயில் தோராயமாக 100 கலோரிகள் உள்ளது. மேலும் இதில் அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில்

அடங்கியுள்ளது. இதில் உள்ள கொழுப்பு தெவிட்டாத வகையை சேர்ந்ததாகும்.
அதனால் இது இதயத்திற்கு மிகவும் நல்லது. வேர்க்கடலை வெண்ணெயை முழுதானிய ரொட்டியில் தேய்த்து உண்ணுங்கள் அல்லது ஆப்பிள் உண்ணும் போது இதனை தொட்டுக் கொள்ளுங்கள்.
கொழுப்பு நீக்காத முழுமையான பால்
கொழுப்பு நீக்காத முழுமையான பாலை ஓட்ஸ் அல்லது தானியங்களுடன் கலந்து உண்ணலாம்.

வேண்டுமென்றால் ஒரு டம்ளர் பாலையும் அப்படியே குடிக்கலாம். வேண்டுமென்றால் அதனுடன் கொஞ்சம் சாக்லெட் பொடியையும் சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம்.
கலோரிகள் அதிகமுள்ள இதில் வைட்டமின் டி மற்றும் ஏ சத்துக்களும் அடங்கியுள்ளது.
கொழுப்பு நீக்கிய பாலுக்கு பதில், கொழுப்பு நீக்காத பாலையே தேர்ந்தெடுங்கள்.

இது தான் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும். கொழுப்பு நீக்காத ஒரு டம்ளர் பாலில் 120-150 கலோரிகள் அடங்கியுள்ளது.
உருளைக்கிழங்கு

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பொதுவாக தவிர்க்கும் ஒரு காய் தான் உருளைக்கிழங்கு.
ஆனால் ஏன் அதை விட்டு ஓடி போகிறீர்கள்? அதற்கு காரணம் அ
தில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட். இது வேகமாக உடல் எடையை அதிகரித்துவிடும்.

அதே போல் இதில் ஸ்டார்ச், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. உருளைக்கிழங்கின் தோளில் புரதச்சத்து அதிகமாக உள்ளதால், தோலோடு சேர்த்தே உண்ணுங்கள்.
மேலும் அதனை மற்ற காய்கறிகளுடன் கலந்தும் உண்ணலாம். ஒரு இடைநிலை உருளைக்கிழங்கில் 150 கலோரிகள் அடங்கியிருக்கும்.
பாஸ்தா

கலோரிகள் நிறைந்த சுவைமிக்க உணவு தான் பாஸ்தா. மேலும் இதில் கார்போஹைட்ரேட் கூட அதிக அளவில் உள்ளது.
பல காய்கறிகளை இதனுடன் சேர்த்தால் அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களும் இதில் சேர்ந்துவிடும். ஒரு கப் மக்ரோனியில் 300 கலோரிகள் உள்ளது. இதுவே சமைத்த உணவில் 22 கலோரிகள் இருக்கும்.
வெண்ணெய்

தெகட்டாத கொழுப்பு வகையை சேர்ந்தவை வெண்ணெய். சமையலுக்கு அதனை சிறிதளவு பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதனை பிரட்டில் தேய்த்து உண்ணலாம் அல்லது நொறுக்குத் தீனியை வறுக்கும் போதும் இதனை கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.
பொதுவாக உணவுகளுக்கு சுவையை கூட்ட வெண்ணெயை சேர்ப்பது

வழக்கமான ஒன்று தான். வெண்ணெய் மற்றும் நெய்யில் நல்ல வாசனையும், சுவையும், உடல் எடை அதிகரிக்க தேவையான கலோரிகளும் உள்ளது.
ஆரோக்கியமான இனிப்பு பழங்கள்
மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம் மற்றும் அன்னாசிப்பழம் போன்ற பழங்கள் உடல் எடையை அதிகரிக்க உதவும்.

இவைகளில் இயற்கையான சர்க்கரை உள்ளது. அவைகள் உடலின் ஆற்றல் திறனை அதிகரிக்கும்.
குறிப்பாக உடல் எடை கூடுவதற்கு சரியான தேர்வாக விளங்குவது தான் அவகேடோ என்னும் வெண்ணெய் பழம்.
கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்த இந்த பழத்தில் 300 கலோரிகள் அடங்கியுள்ளது.

அதனால் இவை இனிப்பாகவும், ஆரோக்கியமாகவும் விளங்கும். இதனை பழங்களை கொண்டு தயாரிக்கும் சாலட், டெசர்ட் மற்றும் ஜூஸ்களில் கலந்து உண்ணலாம்.
முட்டைகள்

கலோரிகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது தான் முட்டை. ஒரு முட்டையில் தோராயமாக 70 கலோரிகளும் 5 கிராம் கொழுப்பும் உள்ளது.
அதனால் தான் உடலை வளர்க்கும் ஆண் மகன்கள் முட்டையை விரும்பி உண்ணுகிறார்கள். இதில் ஒமேகா-3 கொழுப்பமிலங்களும் அதிகமாக உள்ளது.
முட்டையின் மஞ்சள் கருவில் ஆரோக்கியமில்லாத கொலஸ்ட்ரால் உள்ளதால் அதனை தவிர்த்திடுங்கள்.

ஆனால் இந்த முட்டையை முட்டை பொறியல், அவித்த முட்டை அல்லது ஆஃப்-பாயில் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும்.
கொழுப்பில்லா இறைச்சி

கொழுப்பில்லா இறைச்சி கலோரிகளால் நிறைந்துள்ளது. அதனால் அதனை உட்கொண்டால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
ஆரோக்கியமான உடலை பெற இதனை ஆரோக்கியமான உணவுடன் சேர்த்து உட்கொள்ளுங்கள். இவைகளில் புரதமும் அதிகமாக உள்ளதால், தசைகள் வளர்ச்சியடைய உதவும்.

அதிலும் அதனை வறுத்து அல்லது வேறு விதமாக சமைத்தும் உண்ணலாம். இதனால் உடல் எடையும் வேகமாக அதிகரிக்கும்.