siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

நிலநடுக்கத்தில் அலெப்போவில் மீட்கப்பட்ட பிறந்த குழந்தை சோகத்தில் மூழ்கிய மக்கள்

இன்று வரை தொடரும் நிலநடுக்கம் உலகம் முழுவதும் தெரிந்ததே , அதேவேளை ஒரு தம்பதியினருக்கு நிலநடுக்கத்தில் பிரசவ வலிஎடுத்து பெண் குழந்தையொன்றை பெற்றெடுத்து அடுத்தகணம் தாய் , மற்றும் தந்தை உயிரிழந்தமை அப்பகுதியை சேர்ந்த மக்களை சோகத்தில் 
ஆழ்த்தியுள்ளது .
இதன் காரணமாக இந்த பெண் குழந்தை அதிசய குழந்தையென அழைக்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தை மற்றும் அதன் குடும்பத்தினர் தொடர்பில்  தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், அவர்கள் சிரியாவின் கொடூரமான போரால் டெய்ர் எஸோரிலிருந்து அஃப்ரினுக்கு இடம்பெயர்ந்தவர்கள் என 
கூறப்படுகின்றது.
வடகிழக்கு சிரியாவின் அஃப்ரின் கிராமப்புறத்தில் உள்ள ஜெண்டரஸில், இருள், மழை மற்றும் குளிர் சூழ்ந்துள்ளதால், பிறந்த குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினரைக் காப்பாற்ற  மீட்பு நடவடிக்கை 
ஆரம்பிக்கப்பட்டுள்ளது .. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 6 பிப்ரவரி, 2023

நிலநடுக்கத்தில் துருக்கி யில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது

சிரிய எல்லையை அண்மித்துள்ள தெற்கு துருக்கியில்.06-02-2023. இன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தினால் துருக்கி மற்றும் சிரியாவில் 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் 
தெரிவிக்கின்றன.
துருக்கியில் தற்போது 1498 இறப்புகளும், சிரியாவில் 783 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும்
 தெரிவிக்கின்றன.
சிரிய எல்லைக்கு அருகில் தெற்கு துருக்கியில் உள்ள காஜியான்டெப் நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.
துருக்கி நேரப்படி அதிகாலை 4.17 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் துருக்கியின் காசியான்டெப் மற்றும் புறநகர் பகுதிகளில் பல உயரமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
நிலநடுக்கத்தின் மையம் 3.7 மில்லியன் சிரிய அகதிகள் வசிக்கும் முகாம் வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது இரு நாடுகளிலும் பெரும்பாலானோர் உறக்கத்தில் இருந்ததால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முக்கிய அதிர்ச்சியைத் தொடர்ந்து 6.7 ரிக்டர் அளவிலான அதிர்வு உட்பட 40 க்கும் மேற்பட்ட பின்அதிர்வுகள் சேதத்தை அதிகரித்தன.
நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரத்தில் துருக்கியின் ஹலிலியில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் முற்றிலும்
 இடிந்து விழுந்தது.
இந்த அதிர்ச்சி துருக்கியின் தலைநகர் அங்காரா உட்பட 10 நகரங்களில் மட்டுமல்லாது அண்டை நாடான சிரியாவின் அலெப்போவிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது.
லெபனான், சைப்ரஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடரும் பேரழிவைக் கருத்தில் கொண்டு, துருக்கியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அரசாங்கம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மீட்புப் பணிகளின் போது தகவல் தொடர்பு தடைபடுவதைத் தடுக்க இது செய்யப்படுகிறது.
1939 ஆம் ஆண்டுக்கு பின்னர் துருக்கியை தாக்கிய மிக மோசமான பேரழிவு இது என்று கூறிய துருக்கிய ஜனாதிபதி ரெசெப் எர்டோகன், நிலநடுக்கத்தால் துருக்கியில் உள்ள 2,800க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்துள்ளதாக உறுதிப்படுத்தினார்.
மேலும், சிரிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ, ஹமா உள்ளிட்ட பாதிக்கப்பட்ட நகரங்களிலும், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சிரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிரிய உதவிக் குழுக்கள் வெளிநாட்டு ஆதரவை எதிர்பார்ப்பதாகக் கூறுகின்றன.
இதற்கு பதிலடியாக, ரஷ்யா உட்பட பல நாடுகள் ஏற்கனவே நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன.
கடந்த நூற்றாண்டில் இந்த பிராந்தியத்தில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி 
வெளியிட்டுள்ளன.
இதேவேளை, .06-02-2023. இன்று பிற்பகல் அதே பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

சிலாபம் முகத்துவாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்

சிலாபம் முகத்துவாரத்தில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.7 வயது மகள், 6 வயது மகன் மற்றும் 35 வயதுடைய தந்தை ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் நீர்கொழும்பு பிரதேசத்தில் 
வசிப்பவர்கள்
 என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சிலாபம் முகத்துவாரத்திற்கு படகில் சென்ற இவர்கள் படகில் இருந்து இறங்கி அங்கு நீராடச் சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
சனி, 4 பிப்ரவரி, 2023

விபத்தில் நானோ தொழில்நுட்ப நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சி விஞ்ஞானி பலி

தனது மூன்று வயது முதல் குழந்தையின் நேர்த்திக்கடனை பூக்களுடன் வீடு திரும்பிய தந்தை ஒருவர் மிகவும் துரதிஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இன்று (04) காலை சொகுசு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இவர், கொனாபொல கும்புக பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடையில் மோதி விபத்துக்குள்ளானதில் 
உயிரிழந்துள்ளார்.
நானோ தொழில்நுட்ப நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சி விஞ்ஞானியும் கொனபொல கும்புக கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட விமுக்தி பிரசாத் ஜயவீர என்ற 37 வயதுடைய நபரே இவ்வாறு 
உயிரிழந்துள்ளார்.
பிலியந்தலை பிரதேசத்தில் இருந்து  நேர்த்திக்கடனை கொடுப்பதற்காக பூக்களை எடுத்து வருவதற்காக வீடு திரும்பிய போதே அவர் இந்த 
விபத்தில் சிக்கியுள்ளார்.
சில அபிவிருத்திப் பணிகளின் பின்னர் பாதுகாப்பற்ற முறையில் போடப்பட்டிருந்த வீதித் தடுப்பு மற்றும் கொங்கிரீட் தரையின் மீது கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் 
தெரிவிக்கின்றனர்.
விபத்து நடந்த அதே நேரத்தில் காரின் இரண்டு ஏர் பலூன்கள் இயக்கப்பட்டு கார் சுமார் 100 மீட்டர் தூரம் முன்னோக்கி நகர்ந்து சாலையின் நடுவில் உள்ள கொங்கிரீட் பகுதியில் மோதியது.
காரின் ஏர் பலூனில் இருந்து வீசப்பட்ட பிளாஸ்டிக் துண்டினால் அவரது கழுத்து பலத்த வெட்டுப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள்
 இடம்பெற்று வருகின்றன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

கைதி ஒருவர் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இருந்து மதில் மீது ஏறி தப்பியோட்டம்

மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இருந்து கைதி ஒருவர் நீதிமன்ற மதிலை தாண்டி தப்பி ஓடிய சம்பவம் நேற்று (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக
 பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் கஞ்சாவுடன்; நேற்று ஒருவரை கைது செய்த பொலிசார் அவரை சம்பவ தினமான இன்று பகல் 12 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது, நீதவான் அறையில் பதில் நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை ஆஜர்படுத்த கைதியின் விலங்கை பொலிசார் கழற்றிய போது குறித்த நபர் அங்கிருந்து ஓடிச் சென்று நீதிமன்ற மதில் மீது ஏறி
 தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து தப்பி ஓடிய நபரை தேடிவருவதுடன் அவரை கைது செய்வதற்காக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 2 பிப்ரவரி, 2023

நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு சகோதரிகள்

நாட்டில் தெரணியகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
இருவரும் சகோதரிகள் என்பதுடன், வீட்டில் இருந்த 90 வயதான அவர்களது தாயார் தற்போது தெரணியகல வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
51 மற்றும் 49 வயதுடைய இரண்டு பெண்களே 
உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 1 பிப்ரவரி, 2023

பிராங்பேர்ட் மிருகக்காட்சிசாலையில் மிகவும் வயதான குரங்கு உயிரிழப்பு

உலகின் மிகப் பழமையான பெரிய குரங்கு இறந்து விட்டது, போனோபோ பெண் மார்கிரிட் கடந்த வெள்ளிக்கிழமை 70 வயதிற்கு மேற்பட்ட பிராங்பேர்ட் மிருகக்காட்சிசாலையில் உயிரிழந்தது.
மிருகக்காட்சிசாலையின் கூற்றுப்படி, மார்கிரிட் தனது குழுவுடன் இறந்தார். ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக பிரதான வீதியில் வாழ்ந்த வயதான பெண், இறுதிவரை நன்றாகவே இருந்தார். அவள் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவளைப் பற்றி நன்கு அறிந்த கவனிப்பாளர்கள் சிறிய மாற்றங்களைக் கண்டனர். 
அவள் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்தாள், அவளுடைய வழக்கமான அளவு சாப்பிடவில்லை. இருப்பினும், வலிக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று மிருகக்காட்சிசாலை ஒரு அறிக்கையில் 
தெரிவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டில், பெரிய குரங்குகள் அதன் விசாலமான உட்புற மற்றும் வெளிப்புற பகுதிகளுடன் போர்கோரி வனப்பகுதிக்கு நகர்வதை மார்கிரிட் கண்டார். “மார்க்ரிட் ஒரு ஆளுமை, நட்பு, கூட்டுறவு மற்றும் 
குறும்புத்தனமான மனநிலையுடன் 
இருந்தார். அவரது 
மரணம் நம்மை வருத்தமடையச் செய்து, ஒரு இடைவெளியை விட்டுச் செல்கிறது, குறிப்பாக பல ஆண்டுகளாக அவளைக் கவனித்து, கவனித்துக் கொண்டிருக்கும் சக ஊழியர்களுக்கு,” என்கிறார் உயிரியல் பூங்கா இயக்குனர் கிறிஸ்டினா கெய்கர். 
இளைய பெண் ஹன்னா அவள் பக்கத்தில் அமர்ந்திருந்தபோது, ​​பராமரிப்புக் குழுவின் கண்காணிப்பின் கீழ் அவர் சில நிமிடங்களில் இறந்தார். 
மார்கிரிட் வழக்கத்திற்கு மாறாக நீண்ட ஆயுளைக் கொண்டிருந்தார் மற்றும் அவரது சகாக்கள் மத்தியில் பிரபலமாகவும் மரியாதையுடனும் இருந்தார். இப்போது அவள் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>செவ்வாய், 31 ஜனவரி, 2023

மஹியங்கனையில் பிள்ளையினை காப்பாற்ற தன் உயிரினை மாய்த்த தாய்

இலங்கையில் மஹியங்கனை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 35 வயதுடைய இளம் தாயொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தில் 
உயிரிழந்த தாய் 
தனது பிள்ளை மற்றும் கணவருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது திடீரென வீட்டிற்குள் வந்த காட்டு யானையொன்று வீட்டின் சில பகுதிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
இதன்போது உறங்கிக்கொண்டிருந்த குழந்தையுடன் அயலவர் வீட்டிற்கு கணவன், மனைவி தப்பித்து செல்லும் வழியில் காட்டு யானை இடைமறித்து தாக்கியுள்ளது.தாய் பிள்ளையின் உயிரை காப்பாற்ற பல மணி நேரம் போராடியுள்ளதுடன், யானையின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அயலவர்கள் தீயினை மூட்டி கடும் போராட்டத்தின் பின்னர் யானையினை விரட்டி காயமடைந்த குழந்தை மற்றும் தாயை வைத்தியசாலையில் 
அனுமதித்துள்ளனர்.
இதன்போது வைத்தியசாலையில் தாய் மற்றும் குழந்தை சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தாய் சிகிச்சை பலனின்றி 
உயிரிழந்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 30 ஜனவரி, 2023

கொழும்புக்கு யாழிலிருந்து எரிவாயுவினை வாகனத்தில் கொண்டு சென்ற குடும்பத்துக்கு நேர்ந்த கதி

யாழிலிருந்து கொழும்புக்கு தனது உறவினர்கள் வீட்டுக்கு செல்லும் போது புதிதாக ஒரு எரிவாயு நிரப்பின நிலையில் சிலிண்டரினை வாகனத்தின் பின் பகுதியில் எடுத்து செல்லும் பொழுது
இடை நடுவே எரிவாயு மனம் வாகனத்தில் வந்த பொழுது அதிர்ச்சியான குடும்பம் இடை நடுவே வாகனத்தினை நிறுத்து பார்த்த பொழுது எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை அருகில் உள்ள 
உணவுக்கடையில்
கொடுத்து விட்டு கொழும்பு வந்ததாக முகநூலில் தங்களது கருத்தினை பதிவிட்டுள்ளார்கள். தயவு செய்து உங்களது வாகனங்களில் எரிவாயு நிரப்பிய வண்ணம் கொண்டு செல்லாதீர்கள். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 29 ஜனவரி, 2023

நாட்டில் பத்து மாதக் குழந்தையை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

 நாட்டில் 10 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி கலேகான, நாகருக்காராம மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொத்தல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெயிண்ட் அடிக்கும் தொழிலில்  ஈடுபடும் இவர்இ குடித்துவிட்டு வந்து குழந்தையை வீட்டின் பின்புறம் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

சனி, 28 ஜனவரி, 2023

முல்லைத்தீவு பகுதியில் 14 வயது சிறுமி இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு

முல்லைத்தீவு பகுதியில் 14 வயது சிறுமியொருவர் தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுமி புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கொடுத்து இளைஞர்களால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி தற்போது பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது சகோதரனின் நண்பர்களால் போதைப்பொருள் கொடுக்கப்பட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில்
 தெரியவந்துள்ளது.
சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்திய இளைஞர்கள் சிறுமிக்கு ஒரு வகையான இனிப்பு வழங்கி பின்னர் வன்புணர்விற்கு உட்படுத்தி வந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியின் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சட்டவைத்திய அதிகாரியினால் புதுக்குடியிருப்பு காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 27 ஜனவரி, 2023

அலையபத்து பகுதியில் தாயும், இரண்டு பிள்ளைகளும் தீயில் கருகிஉயிரிழந்துள்ளனர்.

அநுராதபுரம் அலையபத்து பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் - மஹாமன்கடவல, அலையபத்து பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (26) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் தாயும் அவரது இரண்டு பிள்ளைகளும் தீயில் கருகி 
உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்தில் காயமடைந்த தந்தை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று 
வருகின்றார்.
தாயும், இரண்டு குழந்தைகளும் படுத்திருந்த அறையில் தீப்பிடித்தது.
தீ விபத்து ஏற்பட்ட போது தந்தை வேறொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், இதனால் அவர் உடனடியாக 
பீதியடைந்து அறைக்கு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளை காப்பாற்றும் போது அறையில் தீ முற்றாக பரவியுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
33 வயதான தாய், 10 வயது மகள் மற்றும் 05 வயது மகன் ஆகியோர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்ததாக கூறப்படுகிறது.
தனது மனைவி மற்றும் பிள்ளைகளை காப்பாற்ற முற்பட்ட போது பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான தந்தை, தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், தனது குடும்பத்தை இழந்து கண்ணீர் மல்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அனுராதபுர பதில் நீதவான் திரு.சந்தன வீரகோன் இன்று (27) பிற்பகல் வந்து நீதவான் விசாரணைகளை 
மேற்கொண்டார்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனினும், தீ விபத்து ஏற்பட்ட போது அறையில் பெற்றோல் போத்தல் இருந்ததாக தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 26 ஜனவரி, 2023

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு -மக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதினால் காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாட வேண்டும் என பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த மூன்று வாரங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு 
தெரிவித்துள்ளது.
கொழும்பில் 640 டெங்கு நோயாளர்களும், புத்தளத்தில் 625 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கம்பஹாவில் 412 பேரும், கல்முனையில் 369 பேரும், யாழ்ப்பாணத்தில் 343 பேரும் பதிவாகியிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>புதன், 25 ஜனவரி, 2023

தீ விபத்தில் சிக்கி தாய்லாந்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி

தாய்லாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அம்னாட் சரோயன் மாகாணத்தில் இருந்து நகோன் பாத்தோம் மாகாணத்துக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. 
வேனில் 2 சிறுவர்கள் உள்பட 12 பேர் இருந்தனர். கியாஸ் மூலம் இயங்கும் இந்த வேன் தலைநகர் பாங்காங் அருகே ஷி கியூ மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. 
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலியின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் வேனில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து 
வேனில் தீப்பிடித்தது. 
தீ பரவுவதற்கு முன் இளைஞர் ஒருவர் மட்டும் வேனில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினார். இந்த தீ விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>அகாலமரணம் அமரர்கள் செல்வராஜா தனபாலசிங்கம், தனபாலசிங்கம் ரஜிதன் 21.01.23

பிறப்பு: 19-09-1970 ; இறப்பு: 28-01-2023
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா தனபாலசிங்கம் அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், செல்வராஜா, 
அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குமாரகுலசிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பவானி அவர்களின் 
அன்புக் கணவரும்,ரஜிதா, காலஞ்சென்ற ரஜிதன், தர்சிகா 
ஆகியோரின் அன்புத் தந்தையும்,தனுஷா(கொழும்பு), ரேணுகா(மணி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயகுமார்(லண்டன்), சாந்தினிதேவி(டென்மார்க்), ஜெயக்குமார்(லண்டன்), வரதகுமார்(லண்டன்), தர்மினிதேவி(லண்டன்), நந்தகுமார்(ராஜன்- நோர்வே), தயானி(டென்மார்க்), குமுதினி(லண்டன்), சிவகுமார்(லண்டன்), மகேந்திரன்(கொழும்பு), விக்கினேஸ்வரமூர்த்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தர்மப்பிரியா, சின்னராஜா, வசந்தராஜா(கொழும்பு), லதாங்கி, சாரங்கி, சுருதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தாய்மாமாவும் ஆவார்.செல்வன் தனபாலசிங்கம் ரஜிதன்:
(பிறப்பு: 11-10-2004 ; இறப்பு: 21-01-2023)சுவிஸ் St. Gallen ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ரஜிதன் தனபாலசிங்கம் அவர்கள் 21-01-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், செல்வராஜா அன்னம்மா தம்பதிகள், குமாரகுலசிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,தனபாலசிங்கம் பவானி தம்பதிகளின் 
அன்புப் புதல்வனும்,ரஜிதா, தர்சிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தனுஷா, ரேணுகா(மணி), உதயகுமார், ஜெயக்குமார், வரதகுமார், நந்தகுமார்(ராஜன்) சிவகுமார் ஆகியோரின் அன்பு மருமகனும்,சாந்தினிதேவி, தர்மினிதேவி, தயானி, குமுதினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் 
ஆவார்.இவர்கள் இருவரின் இறுதிக்கிரியை 01-02-2023 புதன்கிழமை அன்று மு.ப 08.30 மணியளவில் Oberhaldenstrasse 25, 9016 St. Gallen, Switzerland எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் Friedhof Feldli, Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland எனும் முகவரியில் பூதவுடல்கள் தகனம் செய்யப்படும்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலி
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அமரர்கள் இருவரின்  பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி!!!
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>செவ்வாய், 24 ஜனவரி, 2023

பாகிஸ்தானில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்த மகளை நீதிமன்றத்தில் சுட்டுக்கொன்ற தந்தை

பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் வஜிரிஸ்தான் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தந்தையின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் 
செய்து கொண்டார். 
அந்த இளம்பெண் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த டாக்டரை சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இதனால் அப்பெண் மீது தந்தை கடும் ஆத்திரத்தில் இருந்தார். 
இளம்பெண் தனது கணவருடன் கராச்சியின் பிரபாத் பகுதியில் வசித்தார். இந்த நிலையில் காதல் திருமணம் செய்த அப்பெண் கராச்சி நகர கோர்ட்டில் தான் சுதந்திரமாக திருமணம் செய்து கொண்டதை உறுதிப்படுத்துவதற்காக வாக்குமூலம் அளிக்க வந்தார். 
அங்கு அவரது தந்தையும் வந்திருந்தார். அப்போது கோர்ட்டு அறையில் இளம்பெண் மீது தந்தை துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். 
ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார். துப்பாக்கியால் 
சுட்ட தந்தையை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். 
இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஷபீர் சேதர் கூறும்போது, கவுரவ கொலையின் பின்னணியில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தந்தை, கணவர், சகோதரர் அல்லது வேறு ஆண் உறவினர் 
உள்ளனர் என்றார்.
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 23 ஜனவரி, 2023

முருகண்டி கோவிலில் மாமிச உணவு..உண்டதை கண்டுகொள்ளாத சில பக்த்தர்கள்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க முருகண்டி கோவிலுக்கு அருகிலே மாமிசம் சாப்பிடும் சகோதர இனத்தவர்கள்..!கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் போது முருகண்டியில் கும்பிட்டு செல்வது சாதாரண வழக்கமாக அனைத்து பிரயாணிகளும் இறங்கி கும்பிடுவது வழக்கம்.
இரவு 10.30மணியளவில் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாக்கு வந்த சகோதர இனத்தவர்கள் பலர் சுற்றுலாவினை முடித்து விட்டு ஊருக்கு புறப்படுகின்ற வேளையில் இரவுச் சாப்பாட்டினை சாப்பிடுவதற்காக முறிகண்டி 
கோவிலுக்கு வருகை
தந்து தங்கள் சமைத்து வைத்த உணவினை தண்ணீர் தொட்டிக்கு அருகாமையில் எல்லோரும் சேர்ந்து சோறு இறால் கறிகளுடன் சாப்பாடினை பரிமாறி சாப்பிட்டு கொண்டிருந்தனர். அவ் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மனதுக்குள் திட்டி தீர்த்த படியே அவ் இடத்தினை கடந்து 
சென்று விட்டனர்.
அதுமட்டுமல்லாமல் அருகில் கடை வைத்திருப்பவர்கள் கூட அதனை தெரியப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள் அதில் வந்த இளைஞர்கள் அதனை தட்டி கேட்ட போது அவ் சகோதர இனத்தவர்கள் தங்களுக்கு இதில் மாமிசம்
சாப்பிடுவது பற்றி தெரியதென்றும் எங்களை தயவு செய்து மன்னித்துவிடுங்கள் என்று மிகவும் தயவுடன் கேட்டு அவ்இடத்தில் சாப்பிட வந்த எல்லோரும் சேர்ந்து அவ் இடத்தினை நன்கு சுத்தம் செய்துவிட்டு அவ் இடத்தினை விட்டு உடனே விலகியுள்ளனர். ( தயவு செய்து முடிந்தவரை உங்கள் சகோதர இனத்தவர்களுக்கு
 இவ்வாறான எமது சைவ பழக்க வழக்கங்களினை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.!

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

யாழ் வடமராட்சியில் விபத்தில் ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்

யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில்  இ.போ.ச சொந்தமான பேருந்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் மோட்டார்க் சைக்கிளில் சென்றவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும், தெரியவருவதாவது,பருத்தித்துறை கட்டைக்காடு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலை பேருந்து உடுத்துறை வேம்படி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் விபத்தில் படுகாயமைந்துள்ள நிலையில், அருகிலுள்ள மக்களால் உடனடியாக அவரை மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.சம்பவ இடத்திற்கு வந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 21 ஜனவரி, 2023

சீனாவில் திபெத் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

னாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தின் தென்மேற்கில் உள்ள நியிஞ்சி நகரத்தை மெடாக் கவுண்டியுடன் இணைக்கிற நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த புதன்கிழமை திடீரென 
பனிச்சரிவு ஏற்பட்டது. 
நியிஞ்சி நகரமானது பிராந்திய தலைநகரமான லாசாவில் இருந்து 5 மணி நேர பயணத்தில் 3,040 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பனிச்சரிவு பல வாகனங்களை மூடிக்கொண்டு விட்டன. 
இந்தப் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. சம்பவ இடத்துக்கு மீட்பு படையினரும், அவசரகால வாகனங்களும் விரைந்தனர். அங்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகள் 
முடுக்கி விடப்பட்டன. 
இந்நிலையில், பனிச்சரிவில் இருந்து நேற்று சில சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள்
 தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 20 ஜனவரி, 2023

திபெத்தில் சுரங்கப்பாதை பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தின் தென்மேற்கில் உள்ள நியிஞ்சி நகரத்தை மெடாக் கவுண்டியுடன் இணைக்கிற நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென 
பனிச்சரிவு ஏற்பட்டது. 
நியிஞ்சி நகரமானது பிராந்திய தலைநகரமான லாசாவில் இருந்து 5 மணி நேர பயணத்தில் 3,040 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பனிச்சரிவு பல வாகனங்களை மூடிக்கொண்டு விட்டன. 
மேலும் இந்தப் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவல்கள் புதன்கிழமை இரவில் 
தெரிய வந்தது. 
சம்பவ இடத்துக்கு 131 மீட்பு படையினரும், 28 அவசரகால வாகனங்களும் விரைந்துள்ளனர். அங்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>நானுஓயா பிரதேசத்தில் பயங்கர விபத்து: ஏழு பேர் பலி! 41 மாணவர்கள் படுகாயம்

கொழும்பில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் நுவரெலியா நானுஓயா பகுதியில்.20-01-2023. இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 விபத்து இடம்பெற்ற போது பஸ் அதிவேகமாக பயணித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வேன் மீது பஸ் மோதியதில் இரு வாகனங்களும் 60 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் மேலும்
 தெரிவித்தனர்.
விபத்தில் 7 பேர் மரணித்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள்  தெரிவிக்கின்றன. விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸில் பயணித்த 41 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் வேனில் பயணித்த 6 பேரும் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 19 ஜனவரி, 2023

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

இலங்கையில் அனைத்து தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
2022 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை நிறைவடைவதுடன், கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.
2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இறுதி கட்ட கற்றல் நடவடிக்கை பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
இலங்கையில் வீடொன்றில் இருந்து இளம் காதல் ஜோடி சடலமாக மீட்பு

இலங்கை கலேவெல பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவி மற்றும் இளைஞன் ஒருவனின் சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
14 வயதுடைய பாடசாலை மாணவி மற்றும் 17 வயதான இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவி கலேவெல அம்பன்பொல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததாகவும், இதற்கு முன் வீட்டை விட்டு ஓடி வந்ததாகவும் பொலிஸார் 
தெரிவிக்கின்றனர்.
இதன்போது கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணையின் போது இருவரும் கண்டுபிடிக்கப்பட்டதுடன், குறித்த பாடசாலை மாணவியை அவரது தாயாரின் காவலில் வைக்க நீதிமன்றம் 
உத்தரவிட்டிருந்தது.
பின்னர் அண்மையில் மீண்டும் இருவரும் வீட்டை விட்டு ஓடி, அந்த இளைஞனின் கிராமப் பகுதியான ஆண்தாவளயில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டில் தங்கியுள்ளனர்.
இதனை அறிந்த வீட்டார் அவர்களை தேடிச் சென்ற சந்தர்ப்பத்தில் அவர்கள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக
 மீட்கப்பட்டுள்ளனர்.
இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>