siruppiddy

18

siruppiddy

unkal

unkal
தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 டிசம்பர், 2023

போதனா வைத்தியசாலையில் பல்கலைகழக மாணவியின் மரணம் குறித்து சகோதரி தெரிவித்த தகவல்

தரமற்ற ஊசியை செலுத்தியதாலும் சரியான முறையில் சிகிச்சை வழங்காததினாலுமே தனது தங்கை உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் உடன் பிறந்த சகோதரி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவி குணரத்தினம் சுபீனா அவர்கள் உடல் சுகயீனம் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 
$அவர் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலைக்கு 
மாற்றப்பட்ட பின்னர் கடந்த 23 ஆம் திகதி இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து
 தெரிவிக்கயிலேயே குறித்த மாணவியின் சகோதரி இவ்வாறு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கச்சிக்கு உடல் டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மருத்துவர் பார்வையிடுவதற்கு வரும்போது வாந்தி காணப்பட்டதால் அதற்கு ஒரு ஊசி போடுமாறு தாதியருக்கு கூறினார். இந்நிலையில் குறித்த ஊசியை தாதியர் ஏற்றிவிட்டு போகும்போது மூச்சுத்திணறல், தலைவலி என்ற எனது தங்கை துடித்துள்ளார். 
இந்நிலையில் அந்த ஊசி மருந்துக்கு எதிரான தடுப்பு மருந்து ஒன்றினை கொடுத்துவிட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர்.
 அதன்பின்னர் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. பின்னர் மருத்துவர் 
வந்து “இதே ஊசி ஏனையோருக்கும் ஏற்றப்பட்டது. ஆனால் உங்களது தங்கச்சிக்கு தான் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. 
ஒவ்வாமை ஏதாவது இருக்கிறதா”
 என்று கேட்டார். 
ஆனால் ஏற்கனவே வைத்தியசாலையில் பதிவுகள் மேற்கொள்ளும் போது ஒவ்வாமை எதுவும் இல்லை என்று கூறினோம். பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பவுள்ளதாக 
கூறினர். பின்னர் தெல்லிப்பழை வைத்தியசாலையின் எந்தவிதமான ஆவணங்களும் யாழ்ப்பாணம் போதனா 
வைத்தியசாலைக்கு அனுப்பப்படாமலேயே தங்கச்சியை அனுப்பி வைத்தனர். 
இதயத்தை தொழிற்பட வைப்பதற்காக கழுத்துக்கு
 கீழ் பகுதியில் இருந்து துளையிட்டார்கள். ஏனென்றால் இதயத்தின் தசைநார்கள் இறுகிவிட்டன. ஆகையால் உடல் பாகங்களுக்கு இரத்தம் செல்லவில்லை. முகம் வெளிறி, கால்கள் மஞ்சள் நிறமாக மாற்றமடைந்தது. பின்னர் இரவு என்னையும் எனது அம்மாவையும் அழைத்த வைத்தியர், ஏற்கனவே ஏற்றப்பட்ட ஊசியின் தாக்கத்தினை தடுப்பதற்காக சிகிச்சைகள் வழங்கவுள்ளோம் என்றனர். 
இரவு எட்டு மணிக்குத்தான் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டது. எந்தவிதமான மருந்துகளும் வைத்தியசாலையில் இல்லாதது போல 
எல்லா மருந்துகளும் எங்களையே வாங்கி தருமாறு கூறினர். பின்னர் அடுத்தநாள் வைத்திய ஆலோசகருடன் பேசும்போது 90 வீதம் 
அபாய கட்டத்தில் இருந்து தற்போது 60 வீதம் நிலைமைகள் சீருக்கு வந்துள்ளது. ஆகையால் பயப்படத் தேவையில்லை 
என்று கூறினார். 
பின்னர் திடீரென செயற்கையாக இதயத்தை தொழிற்பட வைக்கும் மருந்தை குறைத்தனர். இவ்வாறு குறைத்ததால் மூன்று மணத்தியாலத்தில் திரும்பவும் அபாய கட்டத்திற்கு எனது தங்கச்சி சென்றார். இதன்போதே
 ஏதாவது எனது தங்கச்சிக்கு நடந்துவிட்டதா தெரியவில்லை. எனது தங்கச்சிக்கு ஏற்கனவே போட்ட ஊசி என்ன என நான் வைத்தியரை கேட்டவேளை அவர் என்ன ஊசி என்று கூறவில்லை. கண்ணுக்கு பிளாஸ்டர் போட்டு
 ஒட்டி இருந்தனர். 
பின்னர் இரவு எங்களை அழைத்தவேளை நாங்கள் போய் பார்த்தோம் வென்டிலேட்டர் குழாயில் இரத்தம் காணப்பட்டது. 
ஊசி ஏற்றுவதற்கு முன்னர் செவ்வாய்க்கிழமை பரிசோதனைகள் செய்யப்பட்டது. ஆனால் புதன்கிழமை பரிசோதனை செய்யவில்லை. ஏனென்றால் மெசின் பழுதாகி 
விட்டதாக கூறினர். 
இரத்த அளவீடு பார்க்காமல், குருதிச் சிறு தட்டுகளின் அளவு பார்க்காமல், டெங்கின் அளவுகள் பார்க்கால் எவ்வாறு ஊசியை ஏற்றினார்கள்? அத்துடன் ஏற்றப்பட்ட அந்த ஊசி தரக்குறைவான ஊசி என அழியமுடிகிறது.
 போடப்பட்ட ஊசியின் பெயரோ அல்லது அது தொடர்பான விபரங்கள் எவையும் பதிவுகளில் இடம்பெறவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது ஊசியின் தாக்கத்தினால் தான் எனது தங்கச்சி உயிரிழந்துள்ளதாக. எனவே 
இவ்வாறான இனி எந்த சம்பவங்களும் இனிமேல் நடக்கக்கூடாது. எனது தங்கச்சிக்கு நீதி வேண்டும் என்றார்.என்பதாகும்   


வெள்ளி, 20 அக்டோபர், 2023

சென்னை மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவு19.10.2023

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் காலமானார். 
அவருக்கு வயது 83.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளது. இது இந்த ஊரின் அடையாளமாக உள்ளது. இந்த சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார். இவர், மேல்மருவத்தூரைச் சேர்ந்த விவசாயிகளான கோபால் மற்றும் மீனாம்பிகை 
அம்மையாருக்கும் மகனாக கடந்த 3-3-1941-ல் பிறந்தாா். 
பங்காரு என்றால் தெலுங்கு மொழியில் ‘தங்கம்’ என்று
 பொருள். இவர், ஆசிரியராக பணிபுரிந்தவரும்கூட. ஆசிரியர் பணியில் இருந்தபோது உத்தரமேரூரைச் சோ்ந்த பள்ளி 
ஆசிரியையான லட்சுமி என்பவரை திருமணம்
 செய்து கொண்டாா்.
1970-களின் தொடக்கம் முதல் சக்தி பீடத்தை நிறுவி பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லிவந்தார். ஆன்மிகத்துடன் சமுதாய தொண்டையும் செய்துவந்த இவர், 1978-ல் முதன்முதலாக காஞ்சிபுரத்தில் ஆதிபராசக்தி 
வார வழிபாட்டு மன்றத்தைத் தொடக்கி வைத்தார். 
இன்றுவரை 2,500-க்கும் மேற்பட்ட வார வழிபாட்டு மன்றங்களும், 25-க்கும் மேற்பட்ட சக்தி பீடங்களும் மேல்மருவத்தூர் சித்தா் பீடத்துக்கு தொண்டாற்றி வருகின்றன.
பங்காரு அடிகளாரை பின்பற்றுபவர்களும் ஆதிபராசக்தி கோயிலின் பக்தர்களும் அவரை 'அம்மா' என்று அழைத்துவந்தனர். 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இவரை பின்பற்றுபவர்கள் 
உள்ளனர் என்று 
சொல்லப்படுகிறது. மேல்மருத்துவத்தூரில் இவர் தொடங்கிய
 அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் 
வழிபடலாம்
 என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். பங்காரு அடிகளார் ஆற்றிய சேவைக்காக மத்திய அரசு அவருக்கு 2019-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிதத்து என்பதும் குறிப்பிடத்தக்கது 



வியாழன், 22 ஜூன், 2023

நன்றி நவிலல்திரு குமரேஸ்வரன் பரமநாதர்(குமரேசு ).22.06.2023

 

13 Okt 1956 – 23 Mai 2023
யாழ். சாவகச்சேரி மறவன்புலோவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதர் குமரேஸ்வரன் அவர்களின் நன்றி நவிலல்அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி !  சாந்தி  சாந்தி.
தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிருசனா - மகள்
mobile :
+41799310287

மிதுனா - மகள்
mobile :
+41799043798

கணேஸ்வரன் - சகோதரன்
mobile :
+41764301644

சுலோசனாம்பிகை - மனைவி
mobile :
+41793775633

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 26 செப்டம்பர், 2020

அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நல்லடக்கம் 26.09.20

 


தோற்றம்.04-06-1946-மறைவு .25.09.2020 
உடல்நலக்குறைவால்.25-09-20. அன்று  காலமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் அரசு மரியாதையுடன் அவரது தாமரைப்பாக்க இல்லத்தில்.26-09-20. இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் 
அஞ்சலி செலுத்தினர்.
நல்லடக்கம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வர வேண்டாம் என கூறப்பட்டிருந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் அஞ்சலி செலுத்தலாம் என 
தெரிவிக்கப்பட்டிருந்தது.
சமூக இடைவெளியை கடைபிடித்து, 100 பேருக்கு மிகாமல் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.
"பாலு... நீ இல்லாம உலகம் சூன்யமாயிடுச்சு" - இளையராஜாவின் 
உருக்கமான அஞ்சலி
எஸ்.பி.பி என்ற "பன்முக கலைஞன்" - "பாடும் நிலா" மறைந்தது
பல்வேறு தரப்பினரும் எஸ்.பி.பியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை
 விடுத்திருந்தினர்.
இந்நிலையில், தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் வெளியிட்டார்.
தாமரைப்பாக்கம் இல்லத்தில் இறுதி மரியாதை 
நடைபெற்று வருகிறது
மருத்துவமனை தெரிவித்தது என்ன?
கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி.பி, தொடக்கத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்து பிறகு வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில்
 குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் உயிர்காக்கும் கருவிகளின் அதிகபட்ச உதவி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சிகிச்சைபெற்றுவரும் எம்.ஜி.எம். மருத்துவமனை 
நேற்று முன் தினம் தெரிவித்தது.
இந்நிலையில் .25-09-20. அன்று பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி
எஸ்.பி.பியின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை 
அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் 
கமல் ஹாசன், நடிகர் ரஜினி காந்த், மேற்கு 
வங்க முதலமைச்சர் மம்தா பனேர்ஜி, மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் செளஹான், மேலும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு திரைத்துறையினர் என பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்அணை வருக்கும் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
தகவல்: குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 8 பிப்ரவரி, 2017

இலங்கை இளைஞர் ரயில் விபத்தில் இத்தாலியில் பலி!

இத்தாலி நாட்டில் வெரோன நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தொன்றில் இலங்கைப் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 05.02.2017. ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வென்னப்புவ – சால்ஸ் வில்லியம் மாவத்தையைச் சேர்ந்த 31 வயதான ஜீவன் சஞசய் தமலே என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இத்தாலி பொலிஸார் தெரிவித்துள்னர்.
பலத்த காயங்களுக்கு இலக்காகிய இளைஞர் விபத்து நடந்த இடத்திலேயே பலியாகி உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குடும்ப சூழ்நிலை காரணமாக பல வருடங்களாக இத்தாலி சென்று தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பாக வெரோனா நகர போலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த இளைஞனின் உடல் தற்போது வெரோனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார்
இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக
 குறிப்பிடப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>



செவ்வாய், 27 டிசம்பர், 2016

அமரர் துரைசிங்கம் மகேந்திரன் 31ம் , நினைவஞ்சலி (அந்தயேட்டி)

பிறப்பு : 8 ஓகஸ்ட் 1966 — இறப்பு : 28 நவம்பர் 2016
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைசிங்கம் மகேந்திரன் (மகேன்)  அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், நாகரத்தினம்(செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரகத்தி, கனகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,
கேதாரகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன், மதுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயலக்சுமி(கிளிநொச்சி), பன்னீர்ச்செல்வம்(Selvam Transporte- சுவிஸ்), மோகனாதேவி(நயினை), நாகேஸ்வரி(ஜெர்மனி), பரமேஸ்வரி(பிரான்ஸ்), இரவீந்திரன்(சுவிஸ்), யோகேஸ்வரி(சுவிஸ்), ஜெகதீஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியேஸ்வரி(ஜெர்மனி), கணேசலிங்கம்(ஜெர்மனி), கருணலிங்கம்(யாழ்), குகணேஸ்வரி(நயினை), சண்முகலிங்கம்(சுவிஸ்), புஸ்பராணி(கொலண்ட்), கலைச்செல்வி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
மண்ணினில் மகிழ்ந்து 
மாண்புடன் வாழ்ந்த மகேந்திரன் 
விண்ணிலே விடையேறிய
பரமன் பாதம் பணிந்து- இறையாகி 
கண்ணினால் இவ்வுலக காட்சிகள்
அனைத்தும் காண்கிறான்
வெந்த புண்ணிலே வேல் பாய்ந்த
உணர்வோடு நிற்கின்றோம்- அவர் பிரிவால் 
பண்ணிசைத் தேவார பதிகம் பாடித்துதித்து
நினைவுகள் சுமந்த கண்ணீரை 
பூக்களாய் தூவி தூவி காணிக்கை செய்கின்றோம்
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
அன்னாரின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டவர்களுக்கும், மலர்வளையம், துண்டுபிரசுரம், தொலைபேசி, முகநூல் மூலமாகவும் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், வேறு வழிகளில் பங்களிப்பு செய்தவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தயேட்டிக்கிரியை 28-12-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Schützenhaus, Rumlangerstrasse, 8156 Oberhasli, Swiss எனும் முகவரியில் நடைபெறும்.
தகவல்
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்
தொடர்புகளுக்கு
கேதாரகெளரி(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41434110183
பன்னீர்செல்வம்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796795922
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 24 டிசம்பர், 2016

திரு முத்துக்குமாரு ஆறுமுகசாமி அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பிறப்பு : 12 சனவரி 1942 - இறப்பு : 28 நவம்பர் 2016
யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும், ஜெர்மனி (Böblingen) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு ஆறுமுகசாமி
.(இளைப்பாறிய உத்தியோகத்தர்- யாழ் ஈழநாடு பத்திரிகை) அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மறைவுச்செய்திக் கேட்டு நேரிலும், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுக்கும், தொலைபேசி மற்றும் இணையவழியூடாக துயரைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதி நிகழ்வில் இரங்கல் உரை கண்ணீர் அஞ்சலிகள் வழங்கித் தொடர்ந்து வந்த கிரியைகள் நேர்த்தியாக நடைபெறவும் அன்னாரின் ஆன்ம சாந்திக்காகப் பிரார்த்தித்த, உதவிகள் பல புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை .27-12-2016. செவ்வாய்கிழமை  அன்று  Cruise Terminal Maasbracht  (tegenover) Havenstraat 20, 6051 CS Maasbracht, Holland எனும் இடத்தில் நடைபெறும்.
 தொலைபேசி. இலக்கம் . 0031 (0) 475 – 461 574
மேலும் 31-12-2016 சனிக்கிழமை  அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை அவரது  தோப்பு  அச்சுவேலி  உள்ள  இல்லத்திலும், Verrein Für Deutsche Schäferhunde , lm Zimmerschlag . 8 ,    71032Böblingen,Germany. எனும் முகவரியிலும், நன்றி நவிலல், மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆறுமுகசாமி சின்னம்மா — ஜெர்மனி தொலைபேசி:+497031224307
மகேந்திராசா மலர்வதனா — ஜெர்மனி தொலைபேசி:+4915221698480
சுந்தரராசா சந்திரவதனா — ஜெர்மனி தொலைபேசி:+491739101091
மதனராசா கனிஷ்ர — கனடா தொலைபேசி:+14169935082
சந்திரராசா சுகந்தினி — ஜெர்மனி தொலைபேசி:+491775715939

அமரர் முத்துக்குமாரு ஆறுமுகசாமி (சாமித்தாத்தா) அவர்களின் ஆத்மாசாந்தி அடைய உற்றார்   உறவினர்கள் 
     நவற்கிரி புத்தூர் உறவுகள் தோப்பு  அச்சுவேலி.உறவுகள் மற்றும் ஜெர்மனி -  கனடா  சுவிஸ் வாழ் உறவுகள் - நண்பர்கள்  இறைவனை பிராத்திக்கின்றோம்  ஓம் சாந்தி .. ஓம் சாந்தி ..ஓம் சாந்தி...


இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>