siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 30 ஜூலை, 2021

இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ள நாணய மாற்று விகிதம்.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 197 ரூபா 60 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 89 சதம்.ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 274 ரூபா 79 சதம். விற்பனை
 பெறுமதி 282 ரூபா 73 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 64 சதம் விற்பனை பெறுமதி 240 ரூபா 77 சதம்.சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபா 34 சதம் விற்பனை பெறுமதி 223 ரூபா 80 சதம்.கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 157 ரூபா 95 சதம் விற்பனை பெறுமதி 162 ரூபா 80 சதம்.அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 145 ரூபா 75 சதம். விற்பனை பெறுமதி 150 ரூபா 21 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 145 ரூபா 53 சதம். விற்பனை பெறுமதி 149 ரூபா 93 சதம்.ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 79 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 84 சதம்.இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 68 சதம்.
பஹ்ரேன் தினார் 530 ரூபா 24 சதம், ஜோர்தான் தினார் 281 ரூபா 95 சதம், குவைட் தினார் 664 ரூபா 79 சதம், கட்டார் ரியால் 54 ரூபா 90 சதம், சவுதி அரேபிய ரியால் 53 ரூபா 30 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 54 ரூபா 42 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது

நிலாவரை.கொம் செய்திகள் >>>




வியாழன், 29 ஜூலை, 2021

மரண அறிவித்தல் திருமதி சந்திரராஜா சுகந்தினி 29-07-21

பிறப்பு-21-03-1974.--மறைவு-29-07-2021
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி வுப்பர்டலை வதிவிடமாகவும் கொண்ட 29-07-2021 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் திருமதி சுகந்தினி சந்திரராஜா (சுகந்தி), சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா செல்வநாயகம், சாந்தரூபி தம்பதிகளி்ன் ¨
அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகசாமி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சந்திரராஜா ஆறுமுகசாமி(சுக்கு- ஜேர்மனி) அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி சுகந்தினி சந்திரராஜா (சுகந்தி), அவர்கள் சந்துரோ, சமீரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுதர்சினி(இலங்கை), சங்கீதா(சுவிஸ்), நந்தகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரவதனா(ஜேர்மனி), மலர்வதனா(ஜேர்மனி), மதனராஜா(கனடா), ராஜினி(கனடா), ஜோதிநாத்(இலங்கை), பாஸ்கரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மகேந்திரராஜா(ஜேர்மனி), சுந்தரராஜா(ஜேர்மனி), கனிஸ்டா(கனடா) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
சத்திஜா(ஜேர்மனி), கஐன்(ஜேர்மனி), சிந்து(ஜேர்மனி), சோபி(ஜேர்மனி), கேதுஜன்(கனடா), நிக்கொல்(கனடா), துஷான்(கனடா), ஷாலினி(கனடா), ஆத்மிகா(சுவிஸ்), ஆத்மிகன்(இலங்கை), ஜனுதன்(கனடா), திபேதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
>>>>>>
அன்னாரின் இறுதிக்கிரியை 02 08 2021திங்கடகிழமை 
அன்று 10:00 AM – 12:00 PM.-மணிக்கு 
ஜேர்மனி வுப்பர்டலில்   நடைபெறும் 
தகவல் குடும்பத்தினர் 
நிகழ்வுகள்
கிரியை
Monday, 02 Aug 2021
10:00 AM – 12:00 PM Parkplatz vom Friedhof Norrenberg in Wuppertal-Heckinghausen Theodor-Fontane-Straße 52, 42289 Wuppertal, Germany
தொடர்புகளுக்கு
சந்திரராஜா ஆறுமுகசாமி – கணவர்
ஜேர்மனி +491775715939
செல்வநாயகம் சாந்தரூபி – தாய்
இலங்கை+94212220899
செல்வநாயகம் நந்தகுமார் – சகோதரன்
கனடா+14168971707
சந்திரவதனா சுந்தரராஜா – மைத்துனி
ஜேர்மனி +491739101091
மலர்வதனா மகேந்திரராஜா – மைத்துனி
ஜேர்மனி +4917623762242
மதனராஜா ஆறுமுகசாமி – மைத்துனர்
கனடா+14169935082
அன்னாரின்பிரிவால்  துயருறும் கணவர் பிள்ளைகள் சகோதரர்கள் 
சகலன் சகலி  மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள் அனைவர்க்கும் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின் ஆத்மசாந்தி அடைய
இறைவனை பிராத்திக்கின்றோம் 
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 24 ஜூலை, 2021

ஐஸ் கிரீம்.உலகிலே தங்கத்தின் விலைக்கு நிகராக விற்பனை செய்கின்றனர்.

பொதுவாக ஐஸ்கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட விரும்பும் ஒரு பொருள்
ஐஸ்கிரீம் பலவித ருசியுடன், பல ஆண்டுகளாக சாப்பிடப்பட்டு வந்தாலும் அதன்மீது இருக்கும் மோகம் இன்னும் குறையாமல், சொல்லப்போனால் இன்னும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் துபாயில் ஒரு நிறுவனத்தில் ஐஸ்கிரீம் விலை ரூ.60,000-க்கு விற்பனை
 செய்கின்றனர்.
துபாயில் உள்ள ஸ்கூப்பி கபே என்ற நிறுவனம் 840 அமெரிக்க டாலரில், இந்திய மதிப்பில் சுமார் ரூ.60 ஆயிரம் ரூபாய்க்கு ‘பிளாக் டைமண்ட்’ என்ற ஐஸ்கிரீமை தயாரித்துள்ளனர்.
என்னடா இது தங்க விலை விற்கிறது என்று நினைப்பவர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் தங்க இழைகளையே இதில் 
பயன்படுத்தி உள்ளனர்.
இந்த ‘பிளாக் டைமண்ட்’ ஐஸ்கிரீமில் 23 கேரட் தங்க இழைகள், சாப்ரான், பிளாக் ட்ரூபிள் ஆகிய பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் இந்த ஐஸ்கிரீமானது வெர்சேஸ் வகை பவுலில்
 பரிமாறப்படுகிறது
தங்க ஐஸ்கிரீம் சாப்பிட குச்சியா கொடுக்க முடியும்? அதனால் ஐஸ்கிரீம் சாப்பிட வெள்ளி ஸ்பூனும் வழங்கப்படுகிறது. இந்திய நடிகையும் டிராவலர் வீலாகர் ஸூனாஸ் டிரஸரிவாலா என்பவர் இந்த ஐஸ்கிரீமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டு அதிக லைக்களை 
வாங்கி வருகிறார்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



மக்களுக்கு எச்சரிக்கை. நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்த மழை வீழ்ச்சி

நாட்டின் தென்மேற்கு பகுதியில் குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அதிகரித்த மழை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.மேல் மாகாணத்திலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர்வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த
காற்று வீசக்கூடும்
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

நிலாவரை.கொம் செய்திகள் >>>





வியாழன், 22 ஜூலை, 2021

குளப்பிட்டி சந்தியில் வர்த்தக நிலையத்திற்கு தீ வைத்த கும்பல் சிக்கியது

கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்றிரவு (21) வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வாள் ஒன்றும் வன்முறை சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல் துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திப் பகுதியில் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் புடவை கடை ஒன்றுக்கு பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல் மூலம் தீ மூட்டப்பட்டது.

இந்த சம்பவம் இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் காவல் துறையினர் தெரிவித்தனர்.

ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர், வாள்கள் மற்றும் பெற்றோல் குண்டு சகிதம் கடைக்குள் புகுந்து இந்த நாசகார செயலைச் செய்துள்ளனர்.

இதன்போது கடையில் இருந்த புடவைகள் மற்றும் நேற்று கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புடவைகள் உட்பட பல லட்சம் ரூபாய் சொத்து தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் கைக்கூலிகளை வைத்து செய்யப்பட்டிருக்கலாம் என யாழ்ப்பாணம் காவல் துறையினர்  தெரிவித்தனர்.

இந்த கடைக்கு எதிரில் இன்னொரு புடவைக்கடை உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தீ மூட்டப்பட்ட கடை உரிமையாளர் குறைந்த விலைக்கு பொருட்களை இறக்குமதி செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் எதிர்க் கடை வியாபாரியுடன் மனஸ்தாபம் ஒன்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்ய மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு காவல் துறையினர் மேற்கொண்டிருந்த நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>


யாழ் நகரில் யாசகர் ஒருவர் சடலமாக மீட்பு

யாழ் நகரில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள நடைபாதை வியாபார ஒழுங்கை பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த முதியவர் யாழ் நகரப் பகுதியில் யாசகம் செய்பவர் என தெரிய வந்துள்ளது.
முதியவர் இருதய நோய் காரணமாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண காவல் துறையால்   முதியவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு பிசிஆர் பரிசோதனையின் பின்னர் மரண விசாரணை 
இடம் பெறவுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 20 ஜூலை, 2021

மரண அறிவித்தல் அமரர் நன்னித்தம்பி தயாசீலன் (தயா ) 20-07-21

பிறப்பு--09-2-1959  -இறப்பு-20 07 2021
யாழ் தோப்பு அச்சுவேலியை . பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நன்னித்தம்பி தயாசீலன் அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடா Scarborough Ontario வில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நன்னித்தம்பி, 
 முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்றவர்களான சாந்தநாயகி, யோகசீலன் மற்றும் பத்மமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கண்ணகி(யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்
,இலக்கியா அவர்களின் பாசமிகு தந்தையும்,கர்ணண்,
 குணதர்சனா, காருண்யன், சிறீதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஆதிகா, லக்சயன், ஜசிகன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதிக்கிரியை  ,
Visitation:  Chapel Ridge Funeral Home,  8911 Woodbine Avenue,  Markham,  ON .  Sunday 15th August from 6pm to 9pm and Monday  16th  August from 8am  to 8.30am and Service from 8.30am to 10am and followed by cremation at 10.30am  at Highland Hills Crematorium located at 12492 Woodbine Avenue,  Gormley,  ON
தகவல்: குடும்பத்தினர் 
அன்னாரின் பிரிவால்
தொடர்புகளுக்கு
 கண்ணகி - மனைவிMobile : +94771109786 முத்துப்பிள்ளை - தாய்Mobile : +14162978193 பத்மமலர் - சகோதரிMobile : +14162978193 இலக்கியா - மகள் Mobile : +14372154442 காருண்யன் - மைத்துனர்Mobile : +14163181705 கர்ணண் - மைத்துனர்Mobile : +94771210648
  துயருறும் மனைவி  சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள் அனைவர்க்கும் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின் ஆத்மசாந்தி அடைய
இறைவனைபிராத்திக்கின்றோம் 
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🌹

நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 19 ஜூலை, 2021

இன்றும் நாட்டில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை

நாட்டில்.19-07-2021. இன்றுசப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வறிக்கையில் மேலும் 
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் 
காணப்படுகின்றது.
காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காங்கேசந்துறையிலிருந்து புத்தளம் ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை 
ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
காங்கேசந்துறையிலிருந்து புத்தளம் ஊடாக காலி வரையான
 கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் 
அறிவுறுத்தியுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஞாயிறு, 18 ஜூலை, 2021

சண்டிலிப்பாய் பகுதியில் ஒன்பது மாத குழந்தை கோவிட் தொற்றால் உயிரிழப்பு

யாழ்.சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒன்பது மாதப் பெண் குழந்தையொன்று உயிரிழந்த நிலையில் கோவிட்நோய்த் தொற்றுள்ளமை சடலத்தில் மீதான பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது
குறித்த குழந்தை திடீர் சுகயீனம் காரணமாக நேற்று சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது
எனினும், அங்கிருந்து நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் குழந்தை 
உயிரிழந்துள்ளது.
முதலாவது பி.சி.ஆர். பரிசோதனையில் மூலக்கூறுகள் போதாது எனத் திருப்பப்பட்டது. மீண்டும் எடுக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் குழந்தைக்குக் கோவிட் நோய்த்தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கோவிட் தொற்றால் உயிரிழந்த முதலாவது 
குழந்தை இதுவாகும்


நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 16 ஜூலை, 2021

மரண அறிவித்தல் Dr.சிற்றம்பலம் ராஜலிங்கம் 16 07 -21

 பிறப்பு   09-02-1942 --இறப்பு-16 07 -2021 
யாழ். அச்சுவேலி தோப்பை பிறப்பிடமாகவும்,.தோப்பு அச்சுவேலி, கோப்பாய், வெள்ளவத்தை மற்றும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட  Dr.சிற்றம்பலம் ராஜலிங்கம் (இளைப்பாறிய தலைமை வைத்திய அதிகாரி அச்சுவேலி.மற்றும் தனியார் மருத்துவஅதிகரி ) 16.07.2021.வெள்ளிக்கிழமை 1 அன்று அச்சுவேலியில்  இயற்கையெய்தினார்
அன்னார் காலம்சென்றவர்களான  சிற்றம்பலம் சிதம்பரம் தம்பதிகளின் அன்புமகனும் 
திருமதி  விஜயலட்சுமியின் அன்புக்கணவரும்  காலம்சென்றவர்களான தம்பிப்பிள்ளை அன்னபூரனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்
 அன்னபாக்கியம், காலம்சென்றவர்களாக தர்மலிங்கம், ரத்தினலிங்கம் ஆகியோரின் அன்புசகோதரனும் 
மகிந்தன், காலஞ்சென்ற கிருசாந்தி, ரூபதர்சினி, காண்டீபன் ஆகியோரின் அன்புத்தகப்பனாரும் 
நிதர்சினி, முகுந்தன், கார்த்திகாவின் பாசமிகு மாமனாரும் 
ஷமிரன், ஷாருகன், நிலக்‌ஷிகா, ஹர்ஷிகா, கிருஷிகா, யஸ்விகா, கிருத்தீஷ் மற்றும் டினுஷிகாவின் ஆருயிர் பேரனும் ஆவார். 
அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும் 
 . அன்னாரின்   இறுதி சடங்கு பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி பிள்ளைகள்  சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்அனைவருக்கும் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன,

நிலாவரை.கொம் செய்திகள் >>>

>>>>>>>>>>>
Dr. Sittampalam Rajalingam
(Retired Chief Medical Officer, Atchuvely JP)

Dr. Sittampalam Rajalingam      
Our father Dr. C. Rajalingam (Retired Chief Medical Officer, Atchuvely), who was born in Thoppu,Atchuvely Jaffna, and lived in Kopay, Wellawatte and also in London, passed away peacefully in Atchuvely and was embraced by God on Friday, 16 July 2021.

He is the beloved son of the late Sittampalam and Sithamparam,
 
Loving son in law of the late Thambipillai and Annapooranam,
 
Kind and loving brother of Annapackiyam, and the late Tharmalingam and Ratnalingam,
 
Beloved husband of Vijayalakshmi,
 
Ever loving father of Mahinthan, Krishanthi (deceased), Rupatharshini and Kandeepan,
 
Loving father in law of Nitharshini, Muhunthan and Karthika,
 
Affectionate grandfather of Shamiran, Sharukan, Nilakshika, Harshika, Kirushika, Yashwika, Kirutheesh and Dinushika.
 
Details of his funeral and final rites functions will be provided soon.
 
We hereby respectfully request those who wish to lay wreaths and flowers to please donate the funds to charitable organizations, instead.
 
We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.
 
Information provided by:-  The Family.


ஞாயிறு, 11 ஜூலை, 2021

இலங்கையில் சீரற்ற காலநிலையால் பல பகுதிகளில் மின் தடை

 

நாட்டில் பெய்துவரும் பலத்த மழை மற்றும் கடும் காற்றுக் காரணமாக சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளர்களது மின் இ
ணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது
குறித்த பகுதியில் தடைப்பட்ட மின் விநியோகத்தை மீட்டெடுக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு 
தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்றையதினம் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக 85,000 க்கும் மேற்பட்ட மின்சார நுகர்வோருக்கு மின்சாரம் தடைபட்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது

நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 10 ஜூலை, 2021

நாட்டில் பல பகுதிகளில் கடும் சுழல் காற்று.வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் சுழல் காற்றும் வீசும் அபாயம் உள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.இது குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டுடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த
 மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்த
 வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, வடமேல்
மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மேற்கு கரையோரப் பிரதேசங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் 
அறிவுறுத்தியுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>

புதன், 7 ஜூலை, 2021

சேருநுவர பொலிஸ் பிரில் தாதியர் ஒருவர் தீ மூட்டி தற்கொலை முயற்சி

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் 06-07-2021.அன்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் ஈச்சிலம்பற்று கொரோனா இடைத்தங்கல் முகாமில் கடமையாற்றி வந்த சேருநுவர பகுதியைச் சேர்ந்த தாதியர் என 
தெரிவிக்கப்படுகின்றது.
கணவர் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்ற நிலையில், தீ மூட்டிக் கொண்ட தாதிய உத்தியோகத்தர் தற்பொழுது ஈச்சிலம்பற்று கொரோனா இடைத்தங்கல் முகாமில் கடமையாற்றி வருவதாகவும் குடும்பத்தகராறு காரணமாகவே தனக்குத் தானே தீ மூட்டி கொண்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம்
 தெரியவந்துள்ளது.
குறித்த தாதிய உத்தியோகத்தர் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 
தெரியவருகின்றது.
தீ மூட்டியமைக்கான காரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சேருநுவர பொலிஸார்
 தெரிவிக்கின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 6 ஜூலை, 2021

நாட்டில் வீட்டிலிருந்து கற்கும் மாணவர்களுக்க்கு தொலைக்காட்சி அலைவரிசை

தரம் 1 முதல் 13 வரையான மாணவர்களுக்காக அரசாங்கம் 20 தொலைக்காட்சி அலைவரிசைகளை நிறுவத் திட்டமிட்டுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளரும் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக் கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
பாடசாலை மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் இலவசக் கல்வியை வழங்கவும் அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது என அவர் கூறினார்.
இதன்படி உயர்தரத்தில் தொழில்நுட்பம்,உயிரியல், கணிதம் மற்றும் கலை ஆகிய துறைகளுக்கு 4 தனித்தனி அலைவரிசைகள் நிறுவப்படும் எனவும் பாடத்திட்டத்தின் பதிவு தற்போது கல்வி அமைச்சில் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 5 ஜூலை, 2021

கோண்டாவிலில் கடன் பணத்தைக் கேட்டு வீடு தேடிச் சென்றவர் மீது தாக்குதல்


 யாழ்  கோண்டாவில் காளி கோவிலடியில் கடன் பணத்தைக் கேட்டு வீடு தேடிச் சென்றவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தந்தையும் மகனும் இணைந்து அவரின் தலை மற்றும் கழுத்தில் வாளினால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றது.
சம்பவத்தில் மோகனராஜா ரஜீவன் (வயது-37) என்பவரே சம்பவத்தில் படுகாயமடைந்தார்.சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 4 ஜூலை, 2021

துவிச்சக்கரவண்டியில் சென்றவரைஅம்பாறையில் லொறி மோதி பலி

அம்பாறை – அட்டாளைச்சேனை பகுதியில் வீதியால் துவிச்சக்கரவண்டியில் சென்ற ஒருவர் லொறி மோதி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் 03-.'7-2021-சனிக்கிழமைஅன்று மதியம் அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள பிரதான வீதியில் 
இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவமானது வீதி திருத்த வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த மண்லொறி பிரதான வீதியினால் சென்று கொண்டிருந்த நிலையில் முன்னால் துவிச்சக்கரவண்டியில் சென்ற நபரை மோதி தப்பிச் சென்றுள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தின் சிசிடிவி காட்சியும் தற்போது பெறப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி சென்ற சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 2 ஜூலை, 2021

வேலை செய்தாலே இடுப்பு வலி உடல் சோர்வு இருந்தால் இதை சாப்பிடுங்கள்

நீங்கள் அடிக்கடி பலவீனம் என்ற பிரச்சினை மூலம் தொந்தரவு என்றால். இன்று நாம் ஒரு விஷயத்தை பற்றி உங்களுக்கு சொல்லப்போகிறோம். இது அவர்களின் உடலில் பலவீனத்தின் சிக்கலைக் குறைகிறதுஇது கருப்பு கடலை. கடலையில் உள்ள புரதம், வைட்டமின்கள், இரும்பு, கால்சியம், நார்ச்சத்து கூடுதலாக மற்ற ஊட்டச்சத்து
 நிறைய உள்ளன.
து உங்கள் உடலுக்கு மிகவும் பயனுள்ளது. அதை வழக்கமான நுகர்வு மூலம், உடல் போதுமான ஆற்றல் பெறுகிறது. உடலின் பலவீனம் எப்போதும் நீக்கப்படுகிறதுதண்ணீரில் நனைத்த கடலை ஒவ்வொரு இரவும் எடுத்துக்கொள்ளவும் அடுத்த நாள் காலை கடலை முழுமையாய் இருக்கும். நீங்கள் சாப்பிட வேண்டியது. ஒவ்வொரு காலையிலும் வேரும் வயிற்றில் உட்கொண்டால். உடலின் பல நோய்களால்
 இது முடிவடையும்.
ஆண்மை அதிகரிக்ககொண்டைக்கடலையை தண்ணீரில் ஊற வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும், மெலிந்த உடல் பெருக்கும். சளி, இருமல் குணமாகும். நுரையீரல் தொடர்பான நோய்களும்
 குணமாகும்
சிறுநீர் பிரச்சினைகள் தீரகொண்டைக்கடலையை வறுத்து பொடி செய்து தினமும் இருவேளை உட்கொண்டு வர வயிறு பொருமல், சிறுநீர் சரிவர வெளிப்படாமல் சொட்டு சொட்டாக போதல், சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.
தலைவலி, தலைபாரம் குணமாககொண்டைக்கடலையை லேசாக வறுத்து சாப்பிட்டு பின் பால் அருந்தி வர இருமல், தலைவலி, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




வியாழன், 1 ஜூலை, 2021

நாட்டில் பாணின் விலை எதிர்பாராதளவு சடுதியாக அதிகரிப்பு. அடுத்த வார முதல்

பாணின் விலை எதிர்பாராதளவு சடுதியாக அதிகரிப்பு..!அடுத்த வார முதல்..!கோதுமை மாவின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அடுத்த வாரத்திலிருந்து பாணின் விலை 
10 ரூபாவினால்
அதிகரிக்கப்படவுள்ளது.இந்த அறிவிப்பினை அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இன்று புதன்கிழமை வெளியிட்டார்.செரன்டிப் நிறுவனம் கடந்த வாரத்தில்
 கோதுமை மா
கிலோ ஒன்றின் விலையை 18 ரூபாவினால் உயர்த்தியுள்ளது.இதுதவிர எரிபொருள் விலையேற்றமும் பாணின் விலையேற்றத்தில் தாக்கம் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>