siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 29 மே, 2020

நாட்டில் மத்திய மலையகத்தில் உயிருடன் பிடிபட்ட கருஞ்சிறுத்தை உயிரிழப்பு

மஸ்கெலியா பகுதியில் உள்ள மரக்கறி தோட்டம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வலை ஒன்றில் கடந்த 26ஆம் திகதி உயிருடன் பிடிக்கப்பட்ட கருஞ்சிறுத்தை இன்று (29) உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி
 வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மஸ்கெலியா – நல்லதண்ணி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட லக்ஷபான 
வாழைமலை பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்திலேயே அந்த கருஞ்சிறுத்தை 
பிடிபட்டது.அருகிவரும் உயிரினமான கருஞ்சிறுத்தைகள் இலங்கையில் மலைக்காடுகளில் வசிப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் வனிஜீவராசிகள் திணைக்களத்தினால் உறுதிசெய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், உடலில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட குறித்த
 கருஞ்சிறுத்தைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி குறித்த
 கருஞ்சிறுத்தை இன்று உயிரிழந்ததாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சிவனொளிபாத மலைக்கு அருகில் உள்ள நல்லதண்ணி பகுதியில் இது போன்ற 6 கருஞ்சிறுத்தைகள் வாழ்ந்து
 வருவதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.இவ்வகை கருஞ்சிறுத்தைகள் இலங்கையில் 1 வீதம் மாத்தரமே காணப்படுவதாகவும் வனவிலங்கு அதிகாரிகள்
 தெரிவித்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நாட்டில் பொதுப் போக்குவரத்தில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்


பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கமைய மாத்திரம் பயணிகளை அழைத்து செல்வதனை சட்டமாக்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர யோசனை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.புதிய சட்டத்தை அமுல்படுத்துவதாயின் பேருந்து கட்டணத்தை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை
 தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகளை 
அழைத்து செல்லும் சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் பேருந்து துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மாகாண பேருந்து 
சங்கத்தின் தலைவர் சரத் வீஜிதகுமார தெரிவித்துள்ளார்.பேருந்திற்காக ஏற்படும் செலவினை ஏற்க முடியாத நிலைமை
 ஏற்படுமென?வும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும், அந்த யோசனையை செயற்படுத்துவதற்கு மாற்று
 கட்டண முறையை அறிமுகப்படுத்த வேண்டுமென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு 
விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


தங்கையை வெட்டிக் கொலை செய்த சகோதரி கணவனுடன் அதிரடியாகக் கைது

வெல்லவாய, குடாஓயா பொலிஸ் பிரிவில் காணாமல் போயிருந்த யுவதி எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போன 23 நாளின் பின்னர் காட்டுப்பகுதியில் இருந்து அவரது மண்டையோடு, தோள்ப்பை என்பன மீட்கப்பட்டுள்ளன.இந்த கொலையைச் செய்ததாக 
அவரது சகோதரி மற்றும் கணவன கைது செய்யப்பட்டுள்ளனர்.தெலுல்ல பகுதியை சேர்ந்த 21 வயதான யுவதி கடந்த 5ஆம் திகதி காணாமல் போயிருந்தார். அது குறித்து ஊவா குடாஓயா
 பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.பொலிசார் நடத்திய தீவிர விசாரணையை தொடர்ந்த, 
யுவதியின் சகோதரி மற்றும் அவரது கணவன் இன்று மதியம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தமது சகோதரியை கொலை செய்து வீசிய காட்டுப்பகுதியை அடையாளம் காட்டினர்.அங்கு
 நடத்தப்பட்ட சோதனையில் கொல்லப்பட்ட யுவதியின் மண்டையோடு, தோள்ப்பை என்பன மீட்கப்பட்டன.பொலிசார் நடத்திய விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்களின் பரம்பரை வீடு கொல்லப்பட்ட சகோதரியின் பெயரிலேயே இருந்தது.அந்த வீட்டைப் பெற்றுக்கொள்வதற்காகவே
இந்த கொலை நடந்துள்ளது.யுவதி வேலைக்கு 
சென்று கொண்டிருந்தபோது,
 கால்வாய் ஒன்றிற்கு அருகில் வைத்து கொட்டனால் தலையில் தாக்கி கொலை செய்து, சடலத்தை காட்டுக்குள் வீசியதாக சகோதரியும், கணவனும் 
வாக்குமூலமளித்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 28 மே, 2020

முக்கிய தகவல் யாழ் மாவட்ட மக்களுக்கு திங்கள் முதல் பொதுச் சந்தைகள் ஆரம்பம்

எதிர்வரும் 01-06-20.. திங்கட்கிழமை யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீளத் திறக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.தற்போதைய நிலைமைகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு 
தெரிவித்துள்ளார்.அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கும் போது;யாழ் மாவட்டத்தில் தற்பொழுது இயல்பு நிலை படிப்படியாக திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், பொதுச்சந்தைகளையும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என
 பலராலும் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கௌரவ ஆளுநர் அவர்களும் சில பணிப்புரைகளையும் அறிவுறுத்தல்களையும் விடுத்திருக்கின்றார்.அதனடிப்படையில் யாழில் முக்கியமான சந்தைகள் அமைந்திருக்கின்ற பிரதேச சபையினர், உள்ளுராட்சி 
அதிகார சபையின் அதிகாரிகளுடனும் 
கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம். அதனடிப்படையில் தங்களுடைய சந்தை தொகுதிகளை உரிய சுகாதார நடைமுறைகளுக்கு 
அமைய நடைமுறைகளை பின்பற்றி அவற்றை 
மீளத் திறப்பது குறித்து நடவடிக்கை தற்போது மேற்கொண்டு வருகின்றார்கள்.இது அநேகமாக எதிர்வரும் திங்கட்கிழமை அளவில் அதாவது ஜூன் மாதம் முதலாம் திகதிக்கு
 பிற்பாடு, இவற்றை அந்த இடங்களிலே திறந்து செயல்படுத்தக்கூடியவாறாக இருக்கும். அதே நேரத்தில் சுகாதாதார ஒழுங்கு 
விதிகளை வியாபாரிகளும் அங்கு செல்லும் பொது மக்களும் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.சில விடயங்களை
 பொறுத்த வரையில் ஒவ்வொரு 
உள்ளூர் அதிகார சபையினருக்கும் கூறியிருக்கின்றோம் அந்தந்த பிரதேச செயலர்களுடன் அந்த பகுதி பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தல் அல்லது அவர்களுடைய கண்காணிப்பின் கீழும் இந்த சந்தையினை இயக்குவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் சந்தைகள் யாவும் வழமை போன்று மக்களுக்கு சேவையாற்ற திறக்கப்படவுள்ளது. அத்தோடு பொதுமக்கள் சுகாதார நடைமுறையிணையும் சமூக
 இடைவெளியினையும் பின்பற்றி சந்தையினைபயன்படுத்திக் கொள்ளுமாறும் நான் கோரிக்கை விடுகின்றேன்.யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகப்பெரிய சந்தையாகிய திருநெல்வேலி
 சந்தை பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என உள்ளூராட்சி சபையினரால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, 
காலை 6 மணி தொடக்கம் 12 மணி வரையும் 
அப்பகுதி வீதியினை ஒரு வழிப்பாதையாக நடைமுறைப்படுத்துவதற்கும் நாம் போலீசாருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றோம்.எனவே, பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை 
பின்பற்றி சந்தை நடவடிக்கையை மேற் கொள்ளவேண்டுமெனவும், எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் அனைத்து சேவைகளும் முழுமையாக இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

கோர விபத்து கிளிநொச்சியில் பலியான தாய். மகள் மருத்துவமனையில்

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து .28-05-20.இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது.பூநகரி
 திசையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கிளிநொச்சியிலிருந்து யாழ். நோக்கி பயணித்த ரிப்பர் வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்து
 இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி 
செய்திநகர் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய சுப்ரமணியம் அன்னலட்சுமி என்ற வயோதிபப் பெண் உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளை செலுத்திய உயிரிழந்த தாயாரின் மகள் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக 
கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இதேநேரம் குறித்த ரிப்பர் வாகனம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதியைக் கைது செய்துள்ள கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை 
மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>மரணஅறிவித்தல் அமரர் செல்லையா பாலசுப்பிரமணியம் 28-05-20

தோற்றம்-21-01.1928 — மறைவு : 28-05-2020
யாழ்பாணத்தை  பிறப்பிடமாகவும்.பெரியார்குளம் பூந்தோட்டம் வவுனியாவை  வதிவிடமாகவும் கொண்ட அமரர் செல்லையா பாலசுப்பிரமணியம்  அவர்கள் 28-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அமரர் செல்லையா தம்பதிகளின் பாசமிகு மகனும்
சரஸ்வதியின்  அன்புக்கணவரும்  
அன்னார் பாவனந்தன்  (சுவிஸ்) காசிநாதன் (சுவிஸ்) லலிதாம்பிகை (இலங்கை)  வேதநாயகி  (கனடா ) இந்துமதி (இலங்கை) காந்திமதி (இலங்கை)ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவர்   
அன்னார், காலஞ்சென்ற அற்புதராஜா அவர்களின் பாசமிகு மைத்துனரும் மற்றும் இராஜேஸ்வரியின் அன்புச் 
  சகோதனும் ஆவர் 
அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 14-:00 மணிமுதல் ந.ப 15-:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் பெரியார்குளம் பூந்தோட்டம் வவுனியா இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
 துயருறும்  பிள்ளைகள்  மருமக்கள்
பேரப்பிள்ளைகள்  குடும்பத்தினர் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
ஆழ்ந்த அனுதாபங்களுடன் அன்னாரின் 
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்
 வீட்டு முகவரி: 
பெரியார்குளம் பூந்தோட்டம்
 வவுனியா.
தகவல்
குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>புதன், 27 மே, 2020

நாட்டில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஓர் அறிவித்தல்

2019 – 2020 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கான இணையத்தள விண்ணப்ப காலம் எதிர்வரும் ஜுன் 2 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


கோர விபத்தில் யாழில் மத்திய கல்லுரி ஆசிரியர் பரிதாபமாகப் பலி

யாழில் இடம்பெற்ற விபத்தில் மரணமான யாழ்.மத்திய கல்லூரி முன்னாள் ஆசிரியர் சிவகாந்தன் அவர்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த ஆசிரியர் சிவகாந்தன் , யாழ்.மாநகர சபை உறுப்பினர் சிவகாந்தன் தனுஜன் அவர்களின் பாசமிகு 
தந்தையும் ஆவார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 26 மே, 2020

முக்கிய தகவல் உயர்தரப்பரீட்சையை எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவர்களுக்கு

இவ்வாண்டு இடம்பெறவுள்ள, க.பொ.த. உயர்த தரப் பரீட்சை ஆரம்பமாகும் திகதியுடன் கூடிய, நேர அட்டவணையொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாகவும், அது போலியாக வெளியிடப்பட்டுள்ளதாகவும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் 
பூஜித தெரிவித்தார்.
க.பொ.த. உயர் தரப் பரீட்சை தொடர்பில், கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிடும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருந்து செயற்படுமாறு, பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த அனைத்து தரப்பினர்களையும் கேட்டுக்கொள்வதாக, பரீட்சைகள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் தற்போது காணப்படும் சூழ்நிலைகளுக்கு அமைய, முழு நாட்டினதும் கல்வி தொடர்பான முடிவுகளை தூரதிருஷ்டியாக மேற்கொள்ள வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஒரு
 சிலர் இவ்வாறான செய்திகளை 
வெளியிடுவதன் மூலம், சமூகத்தை பிழையாக வழிநடத்த முற்படுகின்றமை வருந்தத்தக்கதாகும் என,
 சுட்டிக் காட்டியுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், இது தொடர்பில் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த போலியான
 செய்தி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அம்முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


அகால மரணம் லண்டனில் குலசிங்கம் சரண்ஜா 24-05-202

 யாழ் / மண்டைதீவைச் சேர்ந்த சிறுமி லண்டனில் உயிரிழப்பு.
லண்டனில் வசித்து வரும் மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அகால மரணமடைந்துள்ளார்.
குலசிங்கம் சரண்ஜா (வயது-13) என்ற சிறுமியே நேற்று (24-05-2020.) ஞாயிற்றுக்கிழமை அன்று உயிரிழந்தார்.
கழுத்தில் கயிறு போட்டு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கயிறு கழுத்தை இறுகிக் கொண்டதாலேயே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளர்  ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகின்றோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>திங்கள், 25 மே, 2020

ஊரடங்கு நாளை நீங்க்கம் அரச தனியார்துறைப் பணியாளர்களுக்கு ஓர் அறிவிப்பு

கடந்த மே 11ஆம் திகதி அரச மற்றும் தனியார்த்துறை பணியாளர்களுக்காக வெளியிடப்பட்ட சுகாதார ஒழுங்குவிதிகள், நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி பபா பலிஹவர்த்தன இது 
தொடர்பில் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.அரச மற்றும் தனியார்துறை பணியாளர் கொரோனா வைரஸ் தொற்று 
ஏற்படுவதற்கு முன்னர் இருந்ததை போன்று நாளை கடமைகளுக்கு சமூகமளிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது
.இந்த நிலையில், அலுவலங்களுக்கு 
பிரவேசிக்கும் முன்னர் கைகளை கழுவுதல், போக்குவரத்தின்போதும் அலுவலகத்திலும் சமூக இடைவெளிகளை பின்பற்றுதல் நடவடிக்கைகளை அவசியமாக முன்னெடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.
அரசாங்கம் ஊரடங்குச்சட்டத்தை தளர்த்துவதை காரணம் காட்டி பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு திட்டங்களை குறைத்துவிடக் கூடாது.இது மீண்டும் கொரோனா பரவலுக்கு வழியை ஏற்படுத்திவிடும் என்று பபா பலிஹவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 24 மே, 2020

மரணஅறிவித்தல் அமரர் செல்வராசா அற்புதநாயகி 24-05-20

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிக்கவும் வசிப்பிடமாககொண்ட
அமரர் செல்வராசா அற்புதநாயகிஅவர்கள் .24.05.2020.  இன்று அதிகாலை 2.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்
அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மகளும் ஆவர் 
அன்னாரின் இறுதிக்கிரியை  அவரது இல்லத்தில் 13.00 மணியளவில் நடைபெற்று பின்னர்
  சிறுப்பிட்டி மேற்கு  இந்துமயணத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
 வீட்டு முகவரி: 
சிறுப்பிட்டி மேற்கு 
தகவல்
குடும்பத்தினர் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 22 மே, 2020

வீசிய பலத்த காற்று.கிளிநொச்சி .பொலிஸ் நிலையம் சேதம் பொலிஸ் அதிகாரி காயம்

கிளிநொச்சி மாவட்டத்தில்.21.05-20. அன்று மாலை வீசிய பலத்த காற்று காரணமாக பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கிளிநொச்சி 
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதியில் உள்ள உப பொலிஸ் நிலையம் மீது பாரிய மா மரக்கொப்பு முறிந்து விழுந்ததில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்து கிளிநொச்சி 
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  மாமரம் முறிந்து வீழ்ந்தமையால் அப்பகுதியில் உள்ள மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தமையால் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தற்பொழுது இயல்பு நிலைக்கு
 திரும்பி உள்ளமை குறிப்பிடத்தக்க விடயம். இதேபோன்று அக்கராயன் பகுதியில் வீடு ஒன்றின் கூரையின் 
மேல் தென்னைமரம் விழுந்ததில் வீட்டின் ஓடுகள் வீட்டில் போடப்பட்டிருந்த மரங்கள் என்பன பாதிக்கப்பட்டுள்ளன. துரதிஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும்
 தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>கடும் காற்று யாழில் 29 குடும்பங்கள் பாதிப்பு. அடுத்த 24 மணி நேரத்திற்கு எச்சரிக்கை

யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஏற்பட்டுள்ள கடும் காற்றுடனான காலநிலை காரணமாக.22-05-20. இன்று வெள்ளிக்கிழமை காலைவரை சுமார் 29 குடும்பங்களைச் சேர்ந்த 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என
 மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின்
 உதவிப் பணிப்பாளர் என். சூரியராஜா தெரிவித்தார்.இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் போது;வங்கக் கடலில் உருவாகிய அம்பன் புயலின் 
காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதனுடைய தாக்கம் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் காற்றின் தாக்கமானது கடுமையாக உணரப்பட்டுள்ளது ,22-05-20
.இன்று காலை வரை கடும் காற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 99 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன
. அத்துடன் கைதடி பகுதியில் பாடசாலை
 ஒன்றும் சேதமடைந்துள்ளது. மேலும், மயிலிட்டி பகுதியில் மரம் முறிந்து விழுந்து பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை
 வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று
 வருகின்றார்.நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமற்போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கரைசேர்ந்துள்ளார். இந்த காலநிலையானது, எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு
 எதிர்பார்ப்பதால் மக்கள்
 அவதானமாக செயற்படுமாறு, இடர் முகாமைத்துவ பிரிவால் அறுவுறுத்தப்பட்டுனர்.மேலும் சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள் 05 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலப்பகுதியில் காணப்படுகின்ற காற்றின் தாக்கத்தினை விட கடற்கரையை அண்டிய 
பகுதியில் காற்றின் வேகம் கூடுதலாக காணப்படுவதனால், குறிப்பாக கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும், இடர் முகாமைத்துவ பிரிவால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டள்ளதாக அவர் தெரிவித்தார்
.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>வியாழன், 21 மே, 2020

தலவாக்கலை இடம்பெற்ற ஐ.டி வகுப்பு.ஆசிரியர்கள், மாணவர்கள் சுய தனிமைப்படுத்தல்

சுகாதார முறைமையினை கடைபிடிக்காது மேலதிக வகுப்புகளை இரகசியமாக நடாத்தி வந்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் சுயதனிமை படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.அத்துடன் மேலதிக வகுப்பு நடாத்தி வந்த வகுப்பறைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.தலவாக்கலை லிந்துளை நகரசபைக்குட்பட்ட தலவாக்கலை
 பகுதியிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இரண்டு ஆசிரியர்கள் ஒன்றிணைந்து சமூக இடைவெளி மற்றும் சுகதார முறைமையினை கடைபிடிக்காது உயர்தர மாணவர்கள் 14 பேருக்கு ஐ.டி வகுப்பு நடாத்தி வந்துள்ளனர். இது தொடர்பில் தலவாக்கலை லிந்துளை நகரசபை தலைவருக்கு கிடைக்கபெற்ற
 இரகசிய தகவலுக்கமைய குறித்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்களையும் தலவாகலை லிந்துளை நகரசபைக்கு அழைத்து விசாரனைகளை மேற்கொண்டு சம்பவம் தொடர்பில் தலவாகலை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் தலவாகலை 
பொலிஸார் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்களும் அவர்களுடைய வீடுகளில் சுயதனிமை படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளதாக
 தெரிவிக்கபடுகிறது.  குறித்த வகுப்புகளை நடாத்த கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்பு இரண்டு 
ஆசிரியர்களும் தலவாகலை லிந்துளை நகரசபையில் அனுமதி பெற்றுள்ள போதிலும், கொரோனா தொற்று ஏற்பட்மையினால் பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடாத்த அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>பளையில் கோர விபத்தில் கணவர் ஸ்தலத்தில் பலி!மனைவி வைத்தியசாலையில்

கிளிநொச்சி பளையில் விமானப் படையின் அம்புலன்ஸ் வாகனம் மோதி குடும்பத்தலைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் அவரது மனைவி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தத் துயரச் சம்பவம்.21-05-20. இன்று காலை இடம்பெற்றது.
பளை – தம்பகாமம் சந்தியில் குடும்பத் தலைவரும்
 அவருடைய மனைவியும் வந்து ஏறிய போது, யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி ஏ9 வீதியில் பயணித்த 
அம்புலன்ஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.சம்பவத்தில் 55 வயதுடைய குடும்பத்தலைவர் ஸ்தலத்தில் உயிரிழந்தார்.விபத்தில் அவருடைய மனைவி படுகாயமடைந்த
 நிலையில், வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 20 மே, 2020

மரணஅறிவித்தல் அமரர் பாலசிங்கம் சின்னமணி.20-05-20

தோற்றம்-17-05.1947 — மறைவு : 20-05-2020
யாழ். தோப்பு ,அச்சுவேலியை   பிறப்பிடமாகவும். (தோப்பு ,சங்கக்கடை வீதி யை ), வதிவிடமாகவும் கொண்ட அமரர் பாலசிங்கம் சின்னமணி அவர்கள் 20-02-2020 புதன் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
 . அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும் 
, காலஞ்சென்ற தப்பிப்பிள்ளை அன்னப்பிள்ளை  
தம்பதிகளின் அன்பு மகளும்
கார்த்திகேசு, முத்துப்பிள்ளை தம்பதிகளின்  அன்பு மருமகளும் ,
வளர்மதி(கனடா), தங்கலிங்கம்(சுவிஸ்), சர்வானந்தம், சதானந்தம், திகழ் மதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும் ,
காலஞ்சென்றவர்களான இராசமணி, சின்னராசா, தங்கம்மா மற்றும் பூமணி ஆகியோரின் அன்பு மைத்துனியம்  ,
ரட்ணராஜா, ஜெயவதனி, விஜிதா, பரிமளா, சிவகுமார் ஆகியோரின்
 அன்பு மாமியும் ,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, கனகம்மா, தங்கமணி, இரத்தினராசா மற்றும் தெய்வேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ,
அருமைநாதன், ஜெகநாதன் (சுவிஸ்), மைகிறிநாதன்(இத்தாலி) ஆகியோரின் சிறிய தாயாரும் ,
கிசோர், றம்மியா, டிவாகர், டிவேகா, டிஷானன், கீர்த்திகா, திசானன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் அச்சுவேலி தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
 வீட்டு முகவரி: 
இராசவீதி, 
( தோப்பு ,சங்கக்கடை வீதி ) 
தோப்பு ,அச்சுவேலி
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர் 
சர்வானந்தம்(மகன்)
தொடர்புகளுக்கு
தங்கலிங்கம்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789097361
  இலங்கை
செல்லிடப்பேசி: +94769821391
சர்வானந்தம்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +491787641573

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>கொரோனா தொற்றா.கண்டுபிடிக்க 14 நாட்கள் தேவையில்லை 15 நிமிடங்கள் போதுமாம்

கொரோனா வைரஸ் தொற்று ஒருவரிடம் காணப்படும் சந்தர்ப்பத்தில் அதனை 15 நிமிடங்களில் அறிந்து கொள்ளும் வகையில் புதிய கருவி ஒன்று அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய 
ஒரு துளி இரத்தத்தினை சோதனைக்குட்படுத்துவதன் மூலம் 15 நிமிடங்களில் கொரோனா தொற்று இருக்கின்றதா, இல்லையா என்பதனை கண்டறிந்து விடலாம் என அந்நாட்டின் தேசிய பல்கலைக்கழகத்தின் வைத்தியர் பேராசிரியர் சஞ்சய சேனாநாயக்க தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது தொடர்பில் மேலும் 
தெரியவருவதாவது;
அந்தக் கருவியைக் கொண்டு அடுத்த வாரத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கர்பிணி தாய்மார்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்குமானால் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி இலகுவாக பரிசோதனைகளை 
மேற்கொள்ள முடியும் எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.மேலும், கொரோனா வைரஸ் தொற்றினை அறிந்து கொள்வதற்கு 14 நாட்கள் வரை காலம் தேவைப்படுகின்ற நிலையில் குறித்த கருவியின் பயன்பாடு சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக
 அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனைவிட மூக்கின் உட்புறங்களில் காணப்படும் சளி படலங்களை கொண்டும் பரிசோதனை செய்ய முடியும் என தெரிவித்துள்ளார். இதற்கமைய
 சளிப்படலங்களை கொண்டு 
பரிசோதனைகளை மேற்கொண்டால் 45 நிமிடங்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று காணப்படுகின்றதா இல்லையா என்பதனை அறிவித்து விடலாம் எனவும் அவுஸ்ரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் வைத்தியர் பேராசிரியர் சஞ்சய சேனாநாயக்க 
குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 19 மே, 2020

யாழ் மானிப்பாயில் திருடிய தாலியுடன் சங்குவேலியில் சிக்கிய திருடன்

மானிப்பாய் பகுதியில் பெண்ணொருவரின் தாலி அறுக்கப்பட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் மாவட்ட விஷேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் சங்குவேலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கொள்ளையடிக்கப்பட்ட தாலி மற்றும் கொடி என்பன மாவட்ட விஷேட குற்றத்தடுப்பு 
போலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரான்சிஸ் தலைமையிலான அணியினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளது என்னவெனில்;யாழ். நவாலியில் 18-05-20. மாலை குடும்பப் பெண்ணின் தாலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது
 செய்யப்பட்டுள்ளனர்.நவாலி சின்னப்பா
 வீதியில் சென்ற இளம் குடும்பப் பெண்ணிடம் 11 பவுண் தாலியை 18-05-20. மாலை அபகரித்துச் சென்ற கொள்ளையர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.முச்சக்கர வண்டியில் சென்ற கொள்ளையர்கள் இருவரே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். முச்சக்கர வண்டியின் இலக்கத்தைவைத்து 
கொள்ளையர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 11 தங்கப் பவுண் தாலிக் கொடியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இதன்போது சந்தேக நபர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டிருந்தமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 17 மே, 2020

அமரர் இரத்தினம் தங்காரத்தினம் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.17.05.20

மலர்வு,  08 04 1943-- உதிர்வு, -29, 05 2019
யாழ். நவக்கிரி  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்()ட (தர்போது மானிப்பாயில்  
வசித்த)அமரர் இரத்தினம் தங்காரத்தினம்
- ¨¨ அவர்ககளின்  1ம் ஆண்டு நினைவஞ்சலி.17,05,20 
இன்று  அன்னார், காலஞ்சென்ற
அப்பாத்துரை  பொன்னம்மா தம்பதிகளின் மகளும்  அமரர் இரத்தினம்
 (வல்லுவெட்டி )அவர்களின் அன்பு மனைவியும் ஆவர் காலஞ்சென்ற சீவரத்தினம் நேசமணி ஆகியோரின்
 அன்புச்சகோதரியும் ஆவர் 
சகோதரியும்  சிறிதரன் (சுவிஸ்),பவானி,,(இலங்கை),றன்சி ,(சுவிஸ்),திவாகரன் ,,(சுவிஸ்)  நிந்தகரன்  (கனடா) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
காலச்சுழற்சியில்   ஓர்ஆண்டு   கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
 நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் 
எங்கள் அம்மா   
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அம்மாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
 அன்னாரின்
 ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் நவற்கிரி நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் , பிள்ளைகள் சகோதர்கள் பேரப்பிள்ளைகள் புட்டப் பிள்ளை    
. தகவல் குடும்பத்தினர் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>