siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 31 மே, 2018

மன்னார் பொலிஸாரால் 29 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் கைது

யாழில் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாண ஊடகவியலாளர்களின்
 ஏற்பாட்டில் யாழ். நகரப் பகுதியில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.இதில், யாழ் மாவட்ட ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.யாழ்.கொழும்புத்துறை துண்டிப் பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை வேளையில், ஊடகவியலாளர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.5 மோட்டார் 
சைக்கிள்களில் 10 ற்கும் மேற்பட்டவர்கள் வந்து கோடரி மற்றும் வாள்களினால் குறித்த ஊடகவியலாளரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.இதில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 30 மே, 2018

கிளிநொச்சியில் மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!!

கிளிநொச்சி – ஏ35 வீதி, சுண்டிக்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து.29.05.2018.  பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும், பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பை நோக்கி வேகமாக பயணித்த டிப்பர் ரக வாகனமும் மோதியதில் இவ்விபத்து
 இடம்பெற்றுள்ளது.
இதில் முச்சக்கரவண்டியை ஓட்டிச்சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். இவருடைய சடலம் நீண்ட நேரத்திற்கு பின்னரே எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அளவுக்கு முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்திருப்பதாகவும் செய்தியாளர் 
குறிப்பிட்டார்.
இதேவேளை, டிப்பர் வாகனத்தை ஜீப் வாகனம் ஒன்று முந்திச் செல்ல முற்பட்டுள்ளதுடன், டிப்பர் வாகனத்தின் பின்னால்
 மோதியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
திங்கள், 21 மே, 2018

ஓர் அபாய எச்சரிக்கை!! மக்களுக்கு நாடு முழுவதும் மின்சாரம் தடைப்படும்

தற்போது மழையுடன் கூடிய காலநிலை காரணாக நாடு முழுவதும் மின்சாரம் தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.தாம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த மின்சார தடை, பொது மக்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு
 தெரிவித்துள்ளார்.
தமது தொழிற்சங்க நடவடிக்கைகள் தற்போது 10 நாட்கள் கடந்துள்ள போதிலும், பொறுப்பு கூற வேண்டியவர்கள் இன்னமும் உரிய பதில் வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.சில கோரிக்கைகளை முன்வைத்து தாம் இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பொறுப்பு கூற வேண்டியவர்கள் அமைதியாக இருந்தால், பணிப் பகிஷ்கரிப்பும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும்
 தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நீராடச் சென்ற சிறுவன் மூங்கில் செடிகளுக்குள் சிக்கி பலி

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் மூங்கிலாற்றின் மூங்கில்களுக்கிடையில் சிக்குண்டு மரணித்த நிலையில் சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்றையதினம் (20.05.2018) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற
 இந்த சம்பத்தில் மண்டூர் கணேசபுரத்தைச் சேர்ந்த உமாபதி கிஷான் (வயது 15) என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.இந்தச் சம்பவம் தொடா்பில் மேலும் தெரியவருவதாவது…………
சம்பவதினமான நேற்றையதினம் நண்பகல் தனது நண்பர்கள் சிலருடன் மூங்கிலாற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது குறித்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இந்த நிலையில், சிறுவனுடன் நீராடிக் கொண்டிருந்த ஏனைய சிறுவர்கள் இந்த விவரத்தை அக்கம் பக்கத்திலிருந்தவர்களுக்குத்
 தெரிவித்துள்ளனர்.
உடனடியாக கிராம மக்கள் ஆற்றுப் பகுதியெங்கும் தேடுதலை மேற்கொண்டநிலையில், காணாமல்போன சிறுவனின் சடலம் ஆற்றுக்கரைகளில் அடர்ந்து வளர்ந்திருக்கும் மூங்கில்களுக்கிடையில் சிக்குண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
தற்போது சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு உடற் கூறாய்வுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.பொலிஸார் சம்பவம் தொடா்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

ஞாயிறு, 20 மே, 2018

கோல் பேஸ் பகுதியில் 75 வயதுடைய குடும்பஸ்த்தர் தற்கொலை

காலி முகத்திடல் கடலில் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.நேற்று மாலை குறித்த நபர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பன்னிப்பிட்டி – ருக்மலே பிரதேசத்தினை சேர்ந்த 75 வயதுடைய நபரே
 இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்தற்கொலைசெய்துக்கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.புறக்கோட்டை பொலிசார் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து
 வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


டிப்பர் தடம்புரண்டு கோர விபத்து! ஒருவர் ஸ்தலத்தில் பலி

முல்லைத்தீவு,  முள்ளியவளை, நெடுங்கேணி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் தடம் புரண்டதிலேயே விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மற்றையவர்
 மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்து முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 17 மே, 2018

பலியான 02 வயது பச்சிளம் குழந்தைக்கு நடந்தது என்ன.

மாளிகாவத்தை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 02 வயது குழந்தையான மொஹமட் உஸ்மான் இகம், தட்டையான ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்திருப்பதாக
 தெரியவந்துள்ளது.கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேராவினால் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த குழந்தையின் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதுடன், அந்த பரிசோதனையில் இந்த விடயம் 
தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து உயிரிழந்த குழந்தையின் தாயும் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று அவர்கள் புதுக்கடை இல. 04 நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
நேற்று முன்தினம் (14) மாலை 05.00 மணியளவில் கொழும்பு 10, ஹிஜ்ரா மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக
 மாளிகாவத்தை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 02 வயது குழந்தை ஒன்றை பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்ய முற்பட்டதாக கிடைக்கப் பெற்ற தகவலின்படி நேற்று முன்தினம் (14) பொலிஸார் விசாரணைகளை
 ஆரம்பித்திருந்தனர்.
அதன்படி பொலிஸார் அங்கு சென்று சோதனை செய்த போது 02 வயதுடைய மொஹமட் அலி மொஹமட் உஸ்மான் இகம் என்ற குழந்தை உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளதுடன், உடம்பில் சீனியின் அளவு அதிகரித்ததால் உயிரிழந்ததாக பெற்றோர் 
தெரிவித்துள்ளனர்.
அதன்படி விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் உயிரிழந்த குழந்தையின் இடது காலில் தீக்காயங்கள் போன்று இருந்ததை அவதானித்துள்ள நிலையில் சந்தேகத்திற்குரிய மரணம் தொடர்பில் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்பித்துள்ளனர்.பின்னர் உயிரிழந்த குழந்தையை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை நேற்று இடம்பெற்ற நிலையில், தட்டையான ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டதால் குழந்தை உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. ​மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 16 மே, 2018

மரண அறிவித்தல்,திருமதி சிதம்பரப்பிள்ளை சின்னம்மா

பிறப்பு : 16 ஒக்ரோபர் 1930 — இறப்பு : 14 மே 2018
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா சிதம்பரப்பிள்ளை அவர்கள் 14-05-2018 திங்கட்கிழமை அன்று இறையடி எய்தினார்.
அன்னார், வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற கார்த்திகேசு சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
அன்னலிங்கம்(கனடா), செல்வலிங்கம்(கனடா), ரதிவதனி(கனடா), மதிவதனி(கனடா) ஆகியோரின் 
அன்புத் தாயாரும்,
தங்கேஸ்வரி, கௌரீஸ்வரி, சந்திரன், ரகுநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இலட்சுமிபிள்ளை, கந்தசாமி, துரைசாமி, குஞ்சுப்பிள்ளை, சின்னத்தங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, இராசம்மா மற்றும் தங்கப்பிள்ளை(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கமலினி- தீபன், நாராயன்- காயத்திரி, சுதிர், பிரசாத், மீரா, பிரியங்கா, வினோதன், மயூரா, அஞ்சலி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 19/05/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, Chapel Ridge Funeral Home & Cremation Centre 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 
தொடர்புகளுக்கு
அன்னலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +14166786972
செல்வலிங்கம் — கனடா
தொலைபேசி: +19054722947
செல்லிடப்பேசி: +16472050118
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இணுவிலில் திடீர் தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி பலி!!

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இணுவில் மேற்கு, இணுவிலைச் சேர்ந்த 21 வயதான சீலன் 
அஸ்வினி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நெருப்புத் 
தணல் உள்ளது
 என்று தெரியாது, அடுப்பில் விறகு வைத்து மண்ணெண்ணை ஊற்றிய போது தீப்பற்றி எரிந்ததில் குறித்த யுவதி காயமடைந்துள்ளார். இந்த அனர்த்தம் கடந்த ஆறாம் திகதி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சையின் பலனின்று நேற்று முன்தினம் உயிரிழந்ததாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மரண
 விசாரணையை திடீர் விசாரணை விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>ஞாயிறு, 6 மே, 2018

நாட்டில் யாழ் தேவி மிகச் சிறந்த தொடருந்துச் சேவைகளில்

உலகின் மிகச் சிறந்த தொடருந்துச் சேவைகளில் இலங்கையின் யாழ் தேவி தொடருந்துச் சேவையும் இடம்பெற்றுள்ளது.
18 தொடருந்து சேவைகள் பட்டியலிலே யாழ் தேவிக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது
அதில் மிகச் சிறந்த மற்றும் அழகிய இயற்கைக் காட்சிகளை இரசிக்கக்கூடிய தொடருந்துப் சேவைகள் பட்டியலை தி கார்டியன் இணையதளம் வெளியிட்டுள்ளது.
தொடருந்துப் பயணத்தின் போது பயணிகளின் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய இயற்கை காட்சிகள், பல்வேறு கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் கட்டடங்கள் எனப் பயணத்தை இனிமையாக்கும் அனுபவத்தை வைத்து இந்தத் தரப்படுத்தல் வெளியாகியுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


உடையார்கட்டில் விபத்து- முதியவர் உயிரிழப்பு

உடையார்கட்டுப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவரை வேகமாக வந்த வாகனமொன்று மோதியது எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த முதியவர் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திரபுரத்தைச் சேர்ந்த 80 வயதுடைய முதியவரே விபத்தில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 1 மே, 2018

மனோகரா சந்திக்கு அருகில் வாகன விபத்தில் முச்சக்கர வண்டிசேதம்

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் மனோகரா சந்திக்கு அருகில் இந்த விபத்த இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
பட்டா ரக வாகனம் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டது.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் 
தெரிவித்தனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

உடோபிட்டியவில் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் குரங்கு

இலங்கையில் குரங்கு ஒன்றால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் எல்பிட்டிய, கெடன்தொல, உடோபிட்டிய பகுதியில் வாழும் மக்கள் குரங்கு ஒன்றால் அச்சமடை
ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் சமீப கால்மாக இந்த பகுதிகளில் வாழும் குரங்கு ஒன்று மக்களை கடித்து வருவதாகவும், இதனால் 20 ற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகள் குரங்கு கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பாக வனவிலங்கு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாகவும், ஆனால் குரங்கை பிடிப்பதற்கு இதுவரை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


அரலகன்வல பகுதியில் மோட்டார் சைக்கிள் கோர விபத்து

திம்புலாகல – போகஸ்வெவ வீதியின் அரலகன்வல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 30.04.2018 மாலை மோட்டர் சைக்கிள் ஒன்று பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன்
 மோதியதிலேயே, குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் மற்றும் பாட்டி பலத்த காயங்களுக்குட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
24 வயதுடைய தாயும், 2 வயதும் 4 மாதங்களுமான மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தந்தையும் பாட்டியும் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிலமையும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>வந்துராகல பகுதியில் கோர பஸ் விபத்து 25 பேர் படுகாயம்

குருநாகல், வந்துராகல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று நேற்று நள்ளிரவு விபத்துக்குள்ளானதில் 25 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு,
 காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே குருநாகல் பகுதியில் வைத்து எரிபொருள் ஏற்றி வந்த வாகனத்தின் மீது மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அனைவரும், 
குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், குறித்த விபத்துத் தொடர்பான விசாரணைகள் அனைத்தும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் 
குறிப்பிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>