siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

கிரீஸ் நாட்டில் இரு புகையிரதம் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 26 பேர் பலி

கிரீஸ் நாட்டில் இரு புகையிரதம் நேருக்கு நேர் மோதியதில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
கிரீஸ் நாட்டில் ஏதேன்ஸில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்தது.
லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதி பெரும்
 விபத்து ஏற்பட்டது.
இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது.
இந்த கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 85 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 27 பிப்ரவரி, 2023

மரண அறிவித்தல் அமரர் சின்னத்துரை நடராசா 26.02.2023

பிறப்பு 25.04.1950 மறைவு 26.02.2023 
யாழ் சிறப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பாட மாகவும்
 தற்போது  சுவிஸ் பேர்ண்னில் வசித்து வந்த அமரர்  சின்னத்துரை நடராசா 26.02.2023 ஞாயிற்றுக்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார். 
அன்னார் காலஞ் சென்றவர்களான சின்னத்துரை ,அன்னம்மா தம்பதிகளின்  சிரேஷ்ட புதல்வனும்
மல்லிகாதேவியின் பாசமிகு கணவரும்,
காலஞ் சென்றவர்களான பொன்னையா, நல்லம்மாவின் அன்பு மருமகனும்
காலஞ்சென்ற தவமணி, காலஞ்சென்ற ஆனந்தகுமார், காலஞ்சென்ற பராசக்தி, மற்றும் புவனேஸ்வரி, லோகேஸ்வரி, தனபாலசிங்கம் (சின்னத்தம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்
காலம் சென்று துரைராசா, மற்றும் தவமணி ,நவரத்தினம், பரமேஸ்வரி, தவராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்.
பாரதி (ஜகனடா) பகீரதி (லண்டன்) தர்சினி (தாயகம்) பிரபாபாலினி (தாயகம்) கோபிராஜா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்
.எழிலன் ,கோபிநாத், நிசாந்தன், உமைபாலன், துசானா .ஆசியோரின் 
அன்பு மாமனாரும்.
பாவரசி, நிகரன் ,திகழரன் ,சாயிரா ,சாய்னா, சாயிராம், பவிரா, ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார் .
அன்னாரின் இறுதிக்கிருயைகள் பற்றிய தகவல்கள் இந்த இணையபதிவில் பின்னர் இணக்கப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு--
சகோதரர் -திரு தனபாலசிங்கம் (சித்தப்பா )
சுவிஸ் -0041   78 896 27 18
மகன்.கோபி -சுவிஸ் -004176 328 24 31.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

அமரர் நடராஜா அற்புதராஜா 9ம் ஆண்டு நினைவஞ்சலி 26.02.2023

தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014 
திதி : நாள்.26-02-2023.ஞாயிற்றுக்கிழமை இன்று  
யாழ். அச்சுவேலி தோப்பைப்பிறப்பிடமாகவும், நவற்கிரி- தோப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்   நடராஜா அற்புதராஜா அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி .திதி   
அமரர் நடராஜா அற்புதராஜா  அவர்களின் நீங்காத நினைவுடன்  ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி 
26-02-2023.ஞாயிற்றுக்கிழமை இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது  
  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
ஒன்பதாவது ஆண்டு நினைவலை!
 ஒன்பது ஆண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
 தீராத ஏக்கத்துடன் இன்னமும் துடிக்கின்றது
 எம் இதயம் உங்கள் இனிய புன்னகை
 மீண்டும் ஒருமுறை காண்போமா...தரணியில் எங்களை தவிக்கவிட்டு
தனியாக நீங்கள் மட்டும் எங்கு சென்றீர்கள்...
 நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம்
 இல்லாளுக்கு தலைவன் இல்லை
 பிள்ளைக்கு தந்தை இல்லை சூரியனே!
நீங்கள்  இன்றி எங்களுக்கு ஒளியே இல்லை...
 இறைவனோடு நீங்கள் - கனத்த
இதயத்தோடு நாங்கள்... உங்களை
 இழந்து வாழும் எங்கள் வலி
காலத்தாலும் ஆற்றமுடியாதது
 உங்கள் ஆத்மசாந்திக்காக
வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்! 
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் , 
மைத்துனர்மார்கள், மருமக்கள்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




சனி, 25 பிப்ரவரி, 2023

ஏர் அல்பேனியா விமானம் தரையிறங்கிய சில நிமிடத்திலேயே பணிப்பெண் உயிரிழந்தார்.

லண்டன் Stansted விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய சில நிமிடத்தில் விமானப் பணிப்பெண் மயங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் அல்பேனியா (Air Albania) என்ற விமானத்தில் 24 வயதான கிரேட்டா டைர்மிஷி (Greta Dyrmishi) பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பு 
லண்டன் Stansted எனும் விமான நிலையத்தில் விமானம் 
தரையிறங்கிய சில நிமிடங்களுக்குப் பின்பு திடீரென கிரேட்டா மயங்கி விழுந்துள்ளார்.
பின்பு சக ஊழியர்கள் அவருக்கு முதலுதவி செய்திருக்கிறார்கள், இருப்பினும் கிரேட்டா மயங்கி விழுந்த இடத்திலேயே பரிதாபமாக 
உயிரிழந்தார்.
கிரேட்டாவின் உயிரிழப்புக்கான காரணத்தை பற்றி மருத்துவர்கள் அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து 
ஆராய்ச்சி செய்தனர்.
இந்த நிலையில் கிரேட்டா SADS எனும் திடீர் இளம் வயது இறப்பு நோய் அறிகுறி எனப் பிரேத பரிசோதனை முடிவில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில், மட்டும் கிட்டதட்ட 5000 பேர் இந்த நோய்க்கு உயிரிழக்கிறார்கள் என அறிக்கை 
தெரிவித்துள்ளது.
மேலும் கிரேட்டாவின் மாரடைப்புக்கான காரணத்தை எளிதில் சீபிஆர் எனும் முதலுதவி மூலம் காப்பாற்றி விட முடியாது எனவும் 
தெரிவித்துள்ளனர்.
கிரேட்டாவுடன் டைர்மிஷி Air Albaniaபில் பணிபுரிந்த பணியாளர்கள் தெரிவித்து,
கிரேட்டா மிகவும் அன்பானவள் என்றும் எல்லோரோடும் நேசத்தோடு பழகக் கூடியவள் என்றும் அவளது உயிரிழப்பு வருத்தத்திற்கு உரியது எனவும் தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

இலங்கை கொட்டாவ பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையின் விபத்தில் ஒருவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.
காலி அக்மீமன பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவரே 
உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த காரில் பயணித்த ரஷ்ய பெண் ஒருவர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் 
பின்புறம் இந்த கார் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 23 பிப்ரவரி, 2023

சினோப் நகரில் விபரீதத்தில் முடிந்த விளையாட்டு துப்பாக்கி சூட்டில் 7பேர் பலி

பிரேசில் நாட்டில் உள்ள மடோ கிராஸோ மாநிலம் சினோப் நகரில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு நடைபெற்றது. அப்போது ஒரு நபர் மற்றொரு நபரிடம் தோல்வியடைந்து, 
4000 ரியால் பணத்தை இழந்துள்ளார். வெளியே சென்ற அந்த நபர், மற்றொரு நபரை அழைத்துக்கொண்டு வந்துள்ளார். தன்னை தோற்கடித்த நபரை மீண்டும் விளையாட அழைத்துள்ளார். 
இந்த முறையும் அந்த நபர்கள் தோல்வி அடைந்தனர். அப்போது போட்டியை காண வந்திருந்த சிலர், தோல்வியடைந்தவர்களை பார்த்து 
சிரித்ததாக கூறப்படுகிறது. 
இதனைத் தொடர்ந்து விளையாட்டில் தோல்வி அடைந்த நபர்கள், தங்களைப் பார்த்து ஏளனமாக சிரித்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 
இந்த சம்பவத்தில் 12 வயது சிறுமி உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய எட்கர் ரிக்கார்டோ மற்றும் எசேக்கியாஸ் ரிபேரோ ஆகிய 2 நபர்களை போலீசார்
 தேடி வருகின்றனர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




புதன், 22 பிப்ரவரி, 2023

நாட்டில் வாகன சாரதிகளுக்கு எரிபொருள் நிரப்புவது தொடர்பில் வெளியான செய்தி

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் சுமார் ஆயிரம் மெற்றிக் தொன் தரமற்ற எரிபொருள் உள்ளதாக எண்ணெய் துறைமுக மின்சார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.மசகு எண்ணெய் சுத்திகரிப்பு 
நடவடிக்கையில்
தரக்குறைவான பெட்ரோல் உற்பத்தி செய்யப்படவில்லை என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட போது தேவையான ஒக்டேன் பெறுமதி இல்லாத பெட்ரோலை உற்பத்தி செய்ததாக 
அவர் கூறினார்.
கடந்த காலங்களில் தரமற்ற மசகு எண்ணெய் சுத்திகரிப்பு காரணமாக தரம் குறைந்த பெட்ரோல் இருப்புகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.இந்த பெட்ரோல் இருப்புகளின் ஒக்டேன் பெறுமதி 80 முதல் 90 வரை உள்ளதாகவும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

ஏறாவூரில் டெங்கு நோய்க்கு இலக்காகி 22 வயது இளைஞன் பலி

மட்டக்களப்பு ஏறாவூரில் டெங்கு நோய்க்கு இலக்காகி 22 வயது இளைஞன் ஒருவர் இன்று (18) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு சுகாதார பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் 
சுகுணன் தெரிவித்தார்.
ஏறாவூர் ஜயங்கேணி பாரதி கிராமத்தைச் சோ்ந்த 22 வயதுடைய பகிரதன் தனுஷ்கரன் என்பவரே இவ்வாறு 
உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கடந்த 16ம் திகதி மட்டு போதனா வைத்தியசாலை 
தீவிர சிகிச்சை 
பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்ததாக 
அவர் தெரிவித்தார்.
தற்போது விட்டு விட்டு மழை பெய்து வரும் காரணத்தால் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்பட்டுள்ளதுடன் நேற்று (17) மட்டும் டெங்கு நோய் தாக்கத்தினால் களுவாஞ்சிக்குடியில் 2 பேரும், காத்தான்குடியில் 
ஒருவரும்,
 செங்கலடியில் 2 பேரும், வாழைச்சேனையில் ஒருவரும்
 ,கோறளைப்பற்று மத்தியில் 4 பேரும் மட்டக்களப்பில் 4 பேர் உட்பட 14 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பொதுமக்கள் வீட்டில் ஒரு நுளம்பைக் கண்டாலும் 
சுற்றுப்புறச்சூழலை துப்பரவு செய்யுங்கள். 
காய்ச்சல் ஏற்பட்டால் அரச வைத்தியசாலைக்கு சென்று உடனடியாகவே மருத்துவ 
ஆலோசனையை பெறுங்கள். காய்ச்சல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்தால் இரத்தப்பரிசோதனை செய்யுங்கள். காய்ச்சலுக்கு 
பெரசிட்டமோலை தவிர வேறு மருந்துகளை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம் என மட்டக்களப்பு சுகாதார பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
ஆகவே ´ஒரு நுளம்பு உன்னை நாளை கொல்லும் நீ அதை இன்றே கொல்லாவிடில்´ என்பதனை மனதில் நிறுத்திக் கொண்டு பொதுமக்கள் தமது சுற்று சூழலை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் டெங்கு நுளம்பு தொடர்பாக எச்சரிக்கையுடன் அவதானத்துடன் செயற்படுமாறு 
அவர் கேட்டுக் கொண்டார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 20 பிப்ரவரி, 2023

ஒட்டியம்பாக்கத்தில் குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பும் போது மின்சாரம் தாக்கி பலி

நேதாஜிநகரைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் (வயது 40) என்பவர் ஒட்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர். இவர் தனது மகனையும் மகளையும் ஒட்டியம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த 
மின்கம்பத்தில் 
அறுந்து கிடந்த மின் கம்பி அவர் மீது விழுந்து உடனடியாக உயிரிழந்தார். இதேபோல் சாலையில் நடந்து சென்ற நாய் மின்சாரம் 
தாக்கி உயிரிழந்தது.
அதே நேரத்தில், ஏசி டாடா வாகனம் மீதும் மின்சார வயர் தாக்கியதில், டாடா ஏசி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தகவலறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை சுற்றி நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ
 இடத்துக்குச் சென்ற போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும், 
பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

இந்திய நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார் 18.02.23

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவராத்திரி தரிசனம் செய்து வீடு திரும்பி நிலையில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி நெஞ்சுவலி காரணமாக சுயநினைவை இழந்தார்,  பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே மயில்சாமி உயிர் பிரிந்தது.
¨மயில்சாமியின் உடல் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது, இவர் மறைவையொட்டி தமிழ் திரையுலகத்தினர் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது, ரஜினிகாந்த், கமலஹாசன், விக்ரம், பார்த்திபன்,  ட்ரம்ஸ் மணி
நகைச்சுவை நடிகர்கள் மனோபாலா மற்றும் திரைத்துறையினர்கள் தங்கள் இரங்கலை 
 தெரிவித்து வருகின்றன.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கலை தெரிவித்துள்ளார். தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர். கருணாநிதியின் பாராட்டை பெற்றவர் நடிகர் மயில்சாமி. திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த 
நடிகர் மயில்சாமி 
இழப்பு ஈடுசெய்ய முடியாதது. மயில்சாமி மறைவால் வாடும் குடும்பத்தினர், திரையுலக கலைஞர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார். அரசியல் கட்சித் தலைவர்களும் மயில்சாமி மறைவுக்கு இரங்கலை 
தெரிவித்துள்ளனர்.
இவர் விவேக் வடிவேல் உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகருடன் மயில்சாமி நடித்த காமெடிகள் மக்கள் மத்தியில் என்றும் நிலைத்திருக்கும், இவர் 1987 முதல் சிறு வருடங்களில் மற்றும் நகைச்சுவை குணச்சித்திர கதாபாத்திரங்களில் 200க்கும் மேற்பட்ட படங்களில் 
மயில்சாமி நடித்துள்ளார்.
 அன்னாரின் உடல்  20-02-2023.தினங்கள்கிழமை அன்று
இறு தி சடங்குபின்னர்  காலை 10.மணிக்கு 
சென்னை  வடபழனி  ஏ வி எம் சுடுகாட்டில்  தகனம் 
செய்யபடஉள்ளத தெரிவிக்கப்பாட்டுள்ளது 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் 
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 18 பிப்ரவரி, 2023

ஏ9 வீதி பூனாவ பகுதியில் சிறுமி ஒருவர் மரணம் இருவர் படுகாயம்

ஏ9 வீதி பூனாவ பகுதியில்.18-02-2023. இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக பூனாவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஏ9 வீதி பூனாவ பகுதியில் பயணித்த கார் ஒன்று வீதியின் குறுக்காக சென்ற நாய் ஒன்றுடன் விபத்துக்குள்ளாக முற்பட்ட நிலையில், சாரதி விபத்தை கட்டுப்படுத்தும் விதமாக வாகனத்தை செலுத்திய போது வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது கட்டுப்பாட்டையிழந்து மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் அப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், அவரது தாயார் மற்றும் கார் சாரதி ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
மரணமடைந்த சிறுமியின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து குறித்து பூனாவ பொலிசார் விசாரணைகளை 
முன்னெத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

ரட்ணம் விக்னேஸ்வரன் காலமானார். யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்.17.02.23

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கணிதத்துறை பேராசிரியருமான ரட்ணம்   விக்னேஸ்வரன் காலமாகியுள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் இன்றையதினம் (17.02.2023) உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுள் ஒருவர் அப் பல்கலைக்கழகத்தின் துணேவேந்தரானார் எனும் வரலாற்றை முதலில் பதித்தவர் 
பேராசிரியர் விக்னேஸ்வரன்.இவர் கிழக்கு மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகங்களில் கணிதத்துறை பேராசிரியராகப் 
பணியாற்றியவர்.
துணைவேந்தர் காலப்பகுதியில் மட்டுமல்ல தனது பல்கலைக்கழக தொழில் வாழ்வு காலங்களில் குறிப்பிடத்தக்க தமிழ்த் தேசியக் காரியங்களை அவர் ஆற்றியவர்.யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட பீடாதிபதியாகவும் 
அவர் பதவி வகித்தவர். கடும் உழைப்பு மற்றும் குடும்ப 
வறுமையைத் தாண்டி முன்னேற முடியும் என மெய்ப்பித்த பெருமனிதரான பேராசிரியர் விக்னேஸ்வரன்-17-02-2023. இன்று மாரடைப்பால் 
காலமானார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வியாழன், 16 பிப்ரவரி, 2023

யாழ் தாவடிப்பகுதியில் வேலைத்தளம் தீப்பற்றியுள்ளது

யாழ்ப்பாணம் – தாவடிப்பகுதியில் வேலைத்தளம் ஒன்று தீப்பற்றியுள்ளது. இச்சம்பவம், வன்னியசிங்கம் வீதியில் உள்ள வேலைத்தளம் ஒன்றில் நடந்துள்ளது,
மின் ஒழுங்கு காரணமாக, குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும், பட்டாரக வாகனம் முற்றாக எரிந்துள்ளது எனவும் 
கூறப்படுகிறது.
மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, தீப்பற்றல் தணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 15 பிப்ரவரி, 2023

ஜப்பான் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு உதவ முன்வந்துள்ளது,

ஜப்பானிய அரசாங்கம் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு உதவ முன்வந்துள்ளது, 
அதன்படி,  5 பில்லியன் ஜென், அல்லது 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக 
கூறப்படுகிறது.
. இலங்கையின் சுகாதார சேவைகள் தடையின்றி நடைபெறுவதற்கான எரிபொருளை வழங்குவதற்கும் ஜப்பான் அரசாங்கம் முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்த உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

காட்டு யானை தாக்கி திருகோணமலையில் ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை–தோப்பூரில் காட்டு யானை தாக்கி ஒருவர் 14.02.202.அன்று  உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தோப்பூர் - அல்லைநகர் 09 எனும் கிராமத்தைச் சேர்ந்த குப்பைத்தம்பி அப்துல்காதர் என்ற 83 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்
கோவமடைந்த யானை
குடியிருப்பு காணியில் நுழைந்த காட்டு யானை வீட்டில் இருந்த தென்னைமரத்தை சாய்த்து சேதம் செய்துள்ளது அப்போது சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே வந்த குப்பைத்தம்பி அப்துல்காதர் யானையை சீனா வெடி வெடித்து துரத்த முயற்சித்துள்ளார்.
இதன்போது கோவமடைந்த யானை அவரை துரத்தி வீட்டுக்குள் நுழைந்தபோது அவரை வீட்டுக்குள் வைத்து தாக்கியதில் அவர் 
உயிரிழந்துள்ளார்.
இந்த சமயம் அவருடன் அவரது மனைவியும் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 13 பிப்ரவரி, 2023

மா ஓயாபகுதியில் மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்

கொச்சிக்கடை பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
தோப்புவ பாலத்தில் இருந்து மா ஓயாவில் குதித்த பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மாணவனின் தந்தை முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போனவர் அகரகம மடம்பெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடையவர் என மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கையடக்கத் தொலைபேசியை சேதப்படுத்திய சம்பவமொன்றுக்கு பணம் செலுத்தப் போவதாக வீட்டாருக்கு அறிவித்து விட்டுச் சென்ற மாணவன் நீரில் குதித்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காணாமல் போன மாணவனைக் கண்டுபிடிப்பதற்காக கடற்படையின் நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




மரண அறிவித்தல் அமரர் பொன்னம்பலம் பாலசிங்கம்13.02.23

மறைவு -13-02-2023-
யாழ்.  நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர் பொன்னம்பலம் பாலசிங்கம்   அவர்கள் 13-02-2023. திங்கள்கிழமை அன்று  ஸ்கந்தபுரத்தில்  காலமானார்.அன்னாரின் இறுதிக்கிரியை 
 .அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  
நல்லடக்கம்
 இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

தாந்தாமலை யில்மாணவர்கள் சற்றுலா சென்ற படகு விபத்து 4 பேர் மரணம்

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை – தாந்தாமலை பகுதியில் உள்ள குளத்தில் பாடசாலை மாணவர்கள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, ஆசிரியர் ஒருவர் மற்றும் மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
களுவெந்தன் வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் மற்றும் 16 வயதுடைய மாணவர்களான தயாபரன் சஜித்தன் சத்தியசீலன் தனு, வீரசிங்கம் விதுசன் என்பவர்களே இவ்வாறு 
உயிரிழந்துள்ளனர்.
களுவெந்தன் வெளி அரச தமிழ் #கலவன் பாடசாலையில் கா.போ.த.சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் 3 மாணவர்களும் 4 பெண் மாணவர்களும் ஆசியரியருமாக 8 பேர் சேர்ந்த சுற்றுலா குழு ஒன்று தாந்தாமலை பகுதிக்கு சுற்றலா சென்றுள்ளனர்.
இதன்போது மாணவர்கால் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுடன், அதில் பயணித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி 
உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, அவர்களை காப்பாற்ற முயற்சித்த ஆசிரியரும் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
4 பேர்களது சடலமும் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 11 பிப்ரவரி, 2023

கற்பிட்டிகடற்கரைக்கு படையெடுத்த மக்கள்.வெளியான செய்தி

புத்தளம் கற்பிட்டி கண்டகுழி பகுதியில்.11-02-2023. இன்று அதிகாலை திடீரென சுமார் 14 திமிங்கலங்கள் உயிருடன் கரையொதுங்கிய நிலையில் மக்கள் அவற்றைனை பார்ப்பதற்காக படைடுத்தனர்.இவ்வாறு கரையுதுங்கிய திமிங்கிலங்களுள் மூன்று திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
திமிங்கலங்களை கண்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், கற்பிட்டி கடற்படையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து கடும் பிரியத்தனத்திற்கு மத்தியில் திமிங்கிலங்களை மீண்டும் கடலுக்குள் அனுப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர்.
கரைக்கு வந்த திமிங்கலங்களை கயிறுனால் கட்டி இயந்திரப்படகு மூலம் இழுத்துக் கொண்டுச் சென்று கடலின் ஆழமான பகுதியில் விடுவித்தனர். அதேசமயம் உயிரிழந்த 3 திமிங்கலங்களங்களையும் பிரேத பரிசோதனைக்கு உற்படுத்தப்பட உள்ளதாக கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த திமிங்கலம் (Filet Whale) பைலட் வேல் என அழைக்கப்படும் திமிங்கலம் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.அதேவேளை அண்மையில் கற்பிட்டி தழுவ பகுதியில் உயிருடன் கரையொதிங்கிய புள்ளிச் சுறாவை கடற்படையினர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து கடலுக்குள் மீண்டும் அனுப்பியமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

யாழ் பண்ணை கடற்கரைப் பகுதியில் மிதக்கும் பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத பெண்ணின் சடலமொன்று மிதக்கிறது.வீதியில் சென்ற ஒருவர் சென்ற போது சடலமொன்று மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல்
வழங்கப்பட்டதை அடுத்து குறித்த சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை சடலத்தை இனங்காண பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை 
குறிப்பிடத்த்க்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 9 பிப்ரவரி, 2023

பேரகஹமுல பிரதேசத்த்தில் வீடொன்றில் இருந்து தாயும் மகளும் சடலமாக மீட்பு

படுக்கை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
கினிகத்தேனை- பேரகஹமுல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய தாயும் 30 வயதுடைய மகளுமே இவ்வாறு சடலங்களாக
 மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்து சில நாட்களாக எவரும் வெளியே வராமை மற்றும் அவர்கள் வசித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக பிரதேசவாசிகள் கினிகத்தேனை பொலிஸாருக்கு 
அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் குறித்த வீட்டை உடைத்துச் சென்று உள்ளே பார்த்த போது, தாயும் மகளும் சடலங்களா கட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பதுடன், உயிரிழந்த பெண்ணின் கணவனும் மகனும் கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும் பொலஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 8 பிப்ரவரி, 2023

சார்லி-சுர்-மார்னே நகரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகளுடன் உயிரிழந்த தாய்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள சார்லி-சுர்-மார்னே நகரில் 2 மாடிகளை கொண்ட வீட்டில் ஒரு தம்பதி தங்களது குழந்தைகளுடன் வசித்து வந்தனர். 
அந்த தம்பதிக்கு 5 மகள்களும், 2 மகன்களும் இருந்தனர். இந்த
 நிலையில் 07-02-2023.அன்று  முன்தினம் அதிகாலை அந்த தம்பதியும், குழந்தைகளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. 
மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ கண் இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதிலும் பரவியது. வீட்டில் தீப்பற்றி எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல்
 தெரிவித்தனர். 
அதன் பேரில் டஜன் கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் பலமணி நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். 
ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி 7 குழந்தைகளும், அவர்களின் தாயும் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகளின் தந்தை மட்டும் தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். 
தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடியாக தெரியாத நிலையில், இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி 
வருகின்றனர். 
தீ விபத்தில் தாயுடன் 7 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>