திதி -.14-12.2020
யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப்பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும், ஜெர்மனி Böblingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு ஆறுமுகசாமி (இப்பாறிய யாழ் ஈழநாடு பத்திரிகை உத்தியோகத்தர்) அவர்களின் 4ம் ஆண்டு
நினைவஞ்சலி.(திதி ).14.12.2020.திங்கள்க்கிழமை .அன்று
மறைந்துவிட்ட உங்கள் உறவின்
நீங்காத நினைவுகள்
உதிர்ந்துவிட்ட உங்கள் நினைவின்
உலராத வாசனை
அன்பின் உருவமாய் தரணியில் வாழ்ந்தார்
அன்னை போல் என்றும் எமை நெஞ்சில் வைத்தார்
எங்கள் அப்பா
அக்கறையாய் கண்ணை இமை காப்பது போல் காத்தார்
உழைப்பாலும் வான்போல உயர்ந்து நின்றார்அப்பா
சேவை செய்வதிலும் முன் நிற்பார் என்றுமே அப்பா
தன் கையால் யாவருக்கும் கொடுத்தவர்தான்எங்கள் அப்பா
தற் பெருமை இல்லாத தங்கம் தான் எங்கள் அப்பா
உன்னதமாய் இறைபணியை செய்து
வாழ்வில் முடித்தார்
உயிர் இருக்கும் வரை தன்னால் இயன்றளவு செய்தார்
செல்வந்தனாய் இருந்தபோதும் எளிமையாக வாழ்ந்தார்
சென்ற இடம் எல்லாம் மதிப்போடு
வாழ்ந்தார்
தொடக்கி வைத்தால் முடியும் வரை அயராது உழைப்பார்
தொண்டு செய்து வாழ்பவனை எப்போதும் மதிப்பார்
உண்மை நேர்மை உள்ளவர்க்கு
அன்பான எங்கள் அப்பா
பொய் களவு செய்பவரை வெறுப்பார் எங்கள் அப்பா
எந்த இடத்தை கேட்டாலும் உடன் சொல்வார் அப்பா
அனைவரையும் தெரிந்த ஒரு மனிதர்தான் அப்பா
தாய் தந்தை தெய்வமென
போற்றியவர் எங்கள் அப்பா
அவரோடு இருந்த என் நினைவுகள் மறையாது
அவரோடு நான் கதைத்த ஞாபகங்கள் அழியாது
என் அப்பா போல் எவரும் எமக்கு
கிடையாது
என் அப்பா செய்த தொண்டு எப்போதும் அழியாது
எப்போதும் துணையாக இருப்பார்
எங்கள் அப்பா
பாசத்தின் முழு உருவம்
எங்கள் அப்பா
உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி
நிற்கின்றோம்.
அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய மணைவியும் குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் மறவன்புலவு கோவிலாக்கண்டி தோப்பு.ஜெர்மன் வாழ் நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் ....
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் மனைவி, பிள்ளைகள் மருமக்கள்
. தகவல் குடும்பத்தினர்.