siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 26 மே, 2015

!பருத்தித்துறையிலோ!! அனுமதி சுன்னாகத்தில் தடை!!!

யாழ்ப்பாணம், திக்கம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை  நடத்தப்படவுள்ள ஊர்வலத்துக்கு தடையுத்தரவு பிறப்பிக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ள நிலையினில் சுன்னாகம் நீதிமன்றமோ இதே காரணத்திற்கான
 போராட்டத்திற்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுன்னாகம்  பகுதியில் எதிர்ப்பு ஊர்வலமொன்றை நடத்த ஏற்பாடாகியிருந்தது. இந் நிலையிலேயே, பாதுகாப்பு காரணம் கொண்டு அவ்வூர்வலத்தை நடத்த தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றினில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை பரிசீலனைக்கு உட்படுத்திய மல்லாகம் நீதவான் தடை உத்தரவு விதித்து கட்டளை பிறப்பித்துள்ளார்.
எனினும் இதே போன்று பருத்தித்துறை நீதிமன்றினில் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை பரிசீலித்த நீதிபதி 'ஜனநாயக நாட்டில் ஊர்வலம் நடத்துவதற்கு அனைத்து மக்களுக்கும் உரிமையுண்டு. அந்த ஊர்வலத்தில் வன்முறைகள் அசம்பாவிதங்கள் ஏற்படாமலும் அரசாங்க உடமைகளுக்கும் பொதுமக்களின் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படாமல் பொலிஸார் பாதுகாப்பு வழங்க வேண்டுமெனக்கூறி தடை உத்தரவு பிறப்பிக்க
 மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 17 மே, 2015

தொடர் மழை தாழ்நிலப் பகுதி வெள்ளத்தில்

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள் என பலரும் பாதிப்படைந்துள்ளனர்.
குறிப்பாக நாவாந்துறை, காக்கைதீவு 
சூரியவெளி, நித்தியஒளி, வசந்தபுரம், சமிநகர் போன்ற பகுதிகளில் பெருகி வரும் மழை வெள்ளம் காரணமாக குடியிருப்புக்களுக்குள் வெள்ள நீர் புகும் ஆபாயம் உள்ளதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்படைந்துள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்குமாறு மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதேச செயலக தகவலின் 
அடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக ஜே 85 கிராம சேவையாளர் பிரிவில் நாவாந்துறை வடக்கு பகுதியில் அமைந்துள்ள 308 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைத்திற்கும் அனர்த்த முகாமைத்துவத்தினால் வெள்ள நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச கிராமசேவையாளர் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 16 மே, 2015

சிறையில் முன்னாள் போராளி மரணம்!

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியான முன்னாள் போராளி சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
மகசின் சிறைச்சாலைக் கைதியான 36 வயதுடைய கொடிகாமத்தைச் சேர்ந்த சுந்தரம் சதீஸ் என்னும் முன்னாள் போராளியே சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் குளித்துக் கொண்டிருந்த நிலையில் கிணற்றடியில் வழுக்கி  விழுந்தபோதிலும், இவரின் உடல்நிலையைக் கண்டுகொள்ளாத சிறை அதிகாரிகள், சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னரே வைத்தியசாலைக்கு கூட்டிச் சென்றுள்ளனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று  கொழும்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 
சிறைச்சாலையில் உயிரிழந்த நான்காவது அரசியற் சிறைக் கைதி இவராவார்.
சிறை அதிகாரிகளின் அசமந்த போக்கே இம்முன்னாள் போராளியின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது என ஏனைய அரசியற் கைதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
சயனைட் அருந்திய நிலையில் இராணுவத்தினரிடம் பிடிபட்டு காப்பாற்றப்பட்ட இவர், மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் ஏனைய அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட கைதிகளுக்கு வழங்கும் சலுகைகள், முன்னாள் போராளிகளுக்கு சிறை அதிகாரிகளால் வழங்கப்படுவதில்லையெனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 10 மே, 2015

ஆணின் சடலம் வன்னேரிக்குளத்தில் கண்டுபிடிப்பு

 கிளிநொச்சி, வன்னேரிக்குளம் சோலை பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது. காட்டுப்பகுதிக்குச் சென்றவர்கள் சிலர் சடலத்தை
 கண்டு அக்கராயன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் சடலத்தைப் பார்வையிட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
பொதுமக்களால் சந்தேகத்தின் பெயரில் பிடிக்கப்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர். முன்று பிள்ளைகளின் தந்தையான நா.பரமேஸ்வரன் (வயது 48) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேறந்கொண்டுன்னளர்
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>