siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 30 நவம்பர், 2019

மரண அறிவித்தல் திரு கந்தையா கதிரிப்பிள்ளை 30 11.19

பிறப்பு -23 .02.1931-  இறப்பு  -30 .11 2019 
யாழ். சிறுப்பிட்டி தெற்கு செல்லப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கதிரிப்பிள்ளை அவர்கள் 30-11-2019 சனிக்கிழமை 
அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, சேதுப்பிள்ளை(பொன்னம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி 
அவர்களின் அன்புக் கணவரும்,
 கஜமுகதேவி, தவமணிதேவி, ஸ்ரீசத்தியகுமரன், காலஞ்சென்ற ஸ்ரீநந்தகுமார் மற்றும் ஸ்ரீகிருஸ்ணமேனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும், திருநாவுக்கரசு, விஜயலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஸ்ரீதரன், சண்முகராஜா, சோமி, சுஜித்தா 
ஆகியோரின் பாசமிகு மாமனாரும், இராசரத்தினம்(VVR) அவர்களின் அன்பு மைத்துனரும்,
 கெளரி, ரவி, ஜெகன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், சாருகா, சசீகன், இந்திரஜித், கிருத்திகா, அஸ்மி, சிவானி, நந், கிரன், சாருஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி
 இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது  நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 பரமேஸ்வரி - மனைவிMobile : +94776579391   மேனன் - மகன்Mobile : +94774042528   கஜம் - மகள்Mobile : +41792860694   மணி - மகள்Mobile : +447802677758   சக்தி - மகன்Mobile : +41793530118  
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 26 நவம்பர், 2019

பிளாஸ்டிக் கப்பிற்கு பதிலாக இந்த கப்பை பயன்படுத்திவிட்டு இனி சாப்பிடலாம்

இனி காபி குடித்துவிட்டு கோப்பையை சாப்பிட்டு விடலாம்.. பிளாஸ்டிக்கிற்கு பதிலாக  வருகின்றது புது கப்…..உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவருகிறது.தமிழகத்தில் இனி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என
 தமிழக அரசு உத்தரவிட்டு அதன்படி ஜனவரி முதல் அமுல்படுத்தப்பட்டது. ஒருசில வாரங்கள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட இந்த உத்தரவு நாட்கள் செல்ல செல்ல மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கிவிட்டது.
இந்நிலையில், பிளாஸ்டிக் கப்பிற்கு பதிலாக இந்த கப்பை பயன்படுத்திவிட்டு அதை அதை சாப்பிடும் வகையில்  கப்புகளை தயாரிக்க உள்ளது நிறுவனம் ஓன்று.எந்த ஒரு ரசாயனமும் இதில் இல்லாமல், முழுக்க முழுக்க தானியங்களால் தயாரிக்கப்பட்ட இருக்கும் இந்த
 கப்புகளில் சூடான, குளிரான பானங்களை 45 நிமிடங்கள் வரை நமத்துப்போகாமல் வைத்திருக்கமுடியும்.கப்பில் இருக்கும் பாணத்தை அருந்திவிட்டு அந்த கப்பை
 சாப்பிட்டு விடாலாம்.வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்டுவரும் இந்த கப், விரைவில் இந்தியாவிலும் தயாரிக்கப்பட்ட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பலத்த மழையினால் கிளிநொச்சியில்பெரு வெள்ளம் பொதுமக்கள் மாணவர்கள் பாதிப்பு

கிளிநொச்சியில் தொடரும் பலத்த மழை காரணமாக தாழ் நிலங்கள் வெள்ளத்தால் நிறைந்துள்ளன.கிளிநொச்சி இந்துக் கல்லூரி வளாகம் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.இதேவேளை உருத்திரபுரம் வீதியில் வெள்ளம் அதிகளவு பாய்கின்றது. இதனால் போக்குவரத்தும் 
தடைப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  கிளிநொச்சியில் பலத்த மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புகிளிநொச்சியில் பலத்த மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.24.11.19. நள்ளிரவு ஆரம்பித்த மழை 25.11.19 (திங்கட்கிழமை) தொடர்ச்சியாக பெய்வதால் மக்கள் தமது அன்றாட 
செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.   பலத்த மழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. அத்தோடு கிளிநொச்சியில் உள்ள குளங்களின் நீர் மட்டமும் அதிகரித்து வருகின்றது.இதன் காரணமாக 
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆற்றினை கடப்பதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.பாடசாலையின் இறுதி ஆண்டு பரீட்சைகள் இடம்பெற்று 
வரும் நிலையில் பாடசாலை மாணவர்களும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 25 நவம்பர், 2019

நினைவஞ்சலி .2ம் ஆண்டு அமரர் இரத்தினராஜா தங்கம்மா .25.11.19

திதி -.25.11.201
யாழ்.தோப்பைப்பிறப்பிடமாகவும், சுவிஸ்  -கனடா - தோப் பு  அச்சுவேலியை 
வசித்து வந்தஅமரர் இரத்தினராஜா தங்கம்மா 
அவர்களின் 2ம் ஆண்டு 
நினைவஞ்சலி.(திதி .25.11.2019.
,திங்கக்கிழமை   இன்று   
அம்மா -அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்தவரே
நீங்கள் எங்களை பிரிந்து
ஆண்டு 0ஒன்று  சென்றாலும்
உங்கள் இன்முகமும் புன்சிரிப்பும்
எங்கள் மனதை விட்டு
 அகலவில்லை
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொறு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகிறோம்!
எங்கள் அன்பும் பாசமும் எமது உயிர் உள்ளவரை
உங்களுக்காக!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்!
அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய பிள்ளைகளும்  குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ்  மறவன்புலவு கோவிலாக்கண்டி  தோப்பு.ஜெர்மன் வாழ்   நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .... 
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் மனைவி, பிள்ளைகள் மருமக்கள் 
தகவல்: குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திருநீற்றுகேணியில் குளத்தில் மூழ்கி காணாமல் போன மூன்று இளைஞர்கள் சடலமாக மீட்பு.


மட்டக்களப்பு ஆரையம்பதி திருநீற்றுகேணி பகுதியில் குளத்தில் மூழ்கி காணாமல் போன மூன்று இளைஞர்கள், சற்று முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் 
குளத்திற்குள் சேற்றிற்குள் சிக்கி உயிரிழந்துள்ளனர்.சுரேஷ்குமார் தர்சன் (20), யதுர்சன் (19), கே.திவாகரன் 19 ஆகியோரே உயிரிழந்தனர். இதில், தர்சன் கடந்த ஆறு மாதங்களின் முன்னரே திருமணம் முடித்திருந்தார் எனவும் 
தெரிவிக்கப்படுகின்றது.

ஞாயிறு, 17 நவம்பர், 2019

அம்பந்தோட்டையில் மோதலை தடுத்த இளைஞன் பலி

அம்பந்தோட்டை – பதகிரிய பகுதியில் வீடொன்றின் 16.11.2019. சனிக்கிழமை இளைஞர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
பதகிரிய பகுதி வீடொன்றின் நபர்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக சென்ற இளைஞரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் 
ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதன்போது படுகாயமடைந்த இளைஞன் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பதகிரிய பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஹஷான் திவாங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் 
அடையாளம் கண்டுள்ளனர்.
சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து
 வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 13 நவம்பர், 2019

ரயில் விபத்து.யாழ்.நகரில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் தூக்கி வீசப்பட்டு மரணம்

யாழ்ப்பாணத்தில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் இந்து மகளிர் பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள அன்னசத்திர வீதியில் புகையிரதக் கடவை ஊடாக, கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம்.13.11.2019.
 இன்று முற்பகல் 9 மணியளவில் 
இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (31) என்று ஒரு பிள்ளையின் தந்தையே விபத்தில் உயிரிழந்தார்.மீன் வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர், காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த யாழ்தேவி புகையிரதத்துடன் மோதி
 விபத்திற்குள்ளானார். புகையிரதம் மோதி மோட்டார் சைக்கிளில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.அவர் வைத்தியசாலையில் 
சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 12 நவம்பர், 2019

கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பப் பெண்

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் பெண்ணொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.31 வயதான இளம் குடும்பப்பெண்ணே இவ்வாறு வெட்டுக்காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று (11.11.19.திங்கட்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் குறித்த பகுதியை சேர்ந்த அன்ரன் ஜெராட் மேரி அகிலா என்ற 9 மாத குழந்தையின் தாயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த 
பெண்ணின் கணவர் நேற்று வெளி மாவட்டம் ஒன்றுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், குறித்த குடும்ப பெண்ணிற்கு துணையாக முதியவர் ஒருவர் அங்கு பாதுகாப்பிற்காக தங்கியுள்ளார். அவரும்
 அதிகாலை 5.30 மணியளவில் அங்கிருந்து சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்நிலையில், அப்பெண்ணின் கணவர் காலை வீட்டுக்கு வந்தபோது, மனைவி சடலமாக இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கராயன் பொலிஸார், உயிரிழந்த பெண்ணின் கழுத்து மற்றும் முகத்தில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும், கூரிய ஆயுதம்
 ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலேயே, அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.சம்பவம் காலை 6.30 மணிக்கு பின்னர் இடம்பெற்றிருக்கலாம் எனவும் குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில், கணவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதணைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில்
 வைக்கப்பட்டுள்ளது.
சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணை அறிக்கை மற்றும் தடயங்களை வைத்து மேலதிக விசாரணைகள் இடம்பெறவுள்ளன.சம்பவத்துடன் தொடர்புடைய சூத்திரதாரியை விரைவில் கைது செய்ய விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் 
தெரிவிக்கின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


முதலாவதாக யாழிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தில் பயணம் செய்த வடக்கு வி.ஐ.பி

யாழ் பலாலி  சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று இந்தியாவின் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு முதலாவதாக பயணிக்கும் விமானத்தில் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவனும் பயணம் மேற்கொண்டார்.அண்மையில் திறந்து 
வைக்கப்பட்ட யாழ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்றுதான் முதலாவது 
பயணிகள் விமான சேவையை அலையன்ஸ் எயார் நிறுவனம் ஆரம்பித்தது.11.11.2019..இன்று காலை யாழிலிருந்து கிளம்பிய AL 9 102 விமானத்தில் பயணம் செய்தவர்களுடன், வடக்கு ஆளுனரும் சென்னைக்கு பயணமானார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 11 நவம்பர், 2019

கிளிநொச்சியில் பாம்புக் கடிக்கு இலக்காகி பாலகன் பரிதாபமாக மரணம்

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பாம்பு கடிக்கு இலக்கான கிராம அலுவலரின் ஒரேயொரு மகனின் மரணம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் நேற்று (10.11.2019) இரவு இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .நேற்று இரவு குறித்த சிறுவன் படுக்கை அறைக்கு சென்று கட்டிலில் 
உறங்கிய சிறிது நேரத்துக்குப் பின்னர், வீட்டுக்குள் இருந்து வெளியேறிய கண்டங்கருவளை இனத்தைச்சேர்ந்த பாம்பு ஒன்றை தந்தை அடித்துக் கொன்றுள்ளார்.
இதன் பின்னர் சிறுவன் மீண்டும் உறக்கத்துக்கு சென்றுவிட்டார். பின்னர் அதிகாலையில் மகனை எழுப்பியபோது, மகன் நினைவற்று இருந்ததை அவதானித்த பெற்றோர், உடனடியாகக் 
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.அங்கு சிறுவனின் உடலை பரிசோதித்த வைத்தியர்கள்சிறுவன் இறந்ததை
 உறுதி செய்துள்ளனர். இதன் பின்னர் இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையில் சிறுவன் பாம்பு தீண்டி இறந்து விட்டான் என்பதை உறுதி செய்துள்ளனர்.குறித்த மூன்று வயதுச் சிறுவன்பெற்றோருக்கு ஒரே ஒரே மகன் 
என்பது குறிப்பிடத்தக்கது.

கனகராயன்குளத்தில் யாழ் பல்கலை மாணவன் சடலமாக மீட்பு

வவுனியா வடக்கு கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் பாலசுப்பிரமணியம் தர்மிலன் .10.11.2019.நேற்றுக் காலை முதல் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் பல்வேறு தேடுதலின் பின்னர் 11.11.2019.இன்று முற்பகல் குறித்த மாணவன்
 காட்டிற்குள் மண் அகழப்பட்ட குழி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.(10.11.).நேற்று கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த 
யாழ் பல்கலைக்கழக மாணவன் தடி வெட்டுவதற்காக காட்டுப்பகுதிக்குச் சென்றிருந்தார்.10.11.2019.நேற்று மாலை நீண்ட நேரமாகியும் குறித்த மாணவன் வீடு திரும்பவில்லை இந்நிலையில் இச்சம்பவம் குறித்து கனகராயன்குளம் பொலிசார், அப்பகுதி 
இளைஞர்கள், விஷேட அதிரடிப்படையினருடன்
 இணைந்து தேடுதலை மேற்கொண்ட இந்நிலையில் இன்று காலை மீண்டும் தேடுதலை மேற்கொண்ட
 போது, காட்டுற்குள் கிரவல் வெட்டப்பட்ட கிடங்குக்குள் தண்ணீர் தேங்கிய பகுதிக்குள் வீழ்ந்து இளைஞன் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் நீதவானின் வருகையின் பின்னர், மருத்துவ சோதனைக்காக வைத்திசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதுடன், கனகராயன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை 
மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 8 நவம்பர், 2019

இலுப்பையடிப் பகுதியில் டிப்பர் மோதி உயிரிழந்த 13 வயதுச் சிறுமி

 வவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில், 
திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13 வயதான சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தாயார் சிறு காயங்களுக்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டிப்பரின் சாரதி தப்பியோட முற்பட்டபோது அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் துரத்தி பிடித்து பொலிஸில் 
ஒப்படைத்துள்ளனர்.
விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை
 முன்னெடுத்து வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



கணவனும், மனைவியும் நள்ளிரவில் கொடூரக் வெட்டிப் படுகொலை

கணவனும் மனைவியும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் மாத்தளை கனேமுல்ல, ஹொரகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது;
குடும்ப பிரச்சினை காரணமாக  (06.11.2019) அன்று  இரவு 10.15 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இந்தச் சம்பவத்தில் 72 வயதுடைய நபரும் அவருடைய 73 வயதுடைய
 மனைவியுமே கொலை செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் சடலங்கள் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கனேமுல்ல பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை 
ஏற்படுத்தியுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 5 நவம்பர், 2019

வீட்டில் மின்சாரம் துண்டிக்க சென்ற ஊழியர்களிற்கு நேர்ந்த கதி

வவுனியாவில் மின்சாரக் கட்டணம் செலுத்தாத வீடொன்றில் மின்துண்டிப்பு செய்ய மின்சாரசபை ஊழியர்களை இளைஞர் குழுவொன்று தாக்கியதில், ஆறு பேர் காயமடைந்துள்ளனர். 
அவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆச்சிபுரம் கிராமத்தில் மின்சார கண்டனத்தினை பல மாதங்களாக
 செலுத்தாது அதிகளவு நிதி தேக்கமுள்ளவர்களது மின் இணைப்புக்களை துண்டிக்கும் பணிக்காக மின்சார சபை ஊழியர்கள் 
சென்றிருந்தபோது, அக்கிராமத்தில் வசிக்கும் சில இளைஞர்கள் மின்சார சபை
 ஊழியர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளதுடன் வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.இதன் காரணமாக
 காயங்களுக்குள்ளான 
ஆறு மின்சார சபை ஊழியர்களை வவுனியாவில் இருந்து சென்ற மின்சாரசபை குழுவொன்று தமது வாகனத்தில் ஏற்றி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.இவ்விடயம் தொடர்பாக மின்சாரசபையின் வவுனியா மாவட்ட பிரதான மின் பொறியியலாளர் திருமதி மைதிலி 
தயாபாரனிடம் கேட்டபோது,
கடமையின் நிமித்தம் சென்ற எமது ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள ரௌடிக்கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளனர். வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த 
அறுவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது வவுனியா மாவட்டத்தில் மின்சார கட்டணங்களை செலுத்தாது அதிகளவு நிதி தேங்கமுள்ளவர்களின் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டு வருகின்றது. இது வழமையான செயற்பாடு.
இக் கடமையை செய்து வந்தவர்களையே ரௌடிக்குழுவொன்று தாக்கியுள்ளதுடன் அவர்களை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்க அழைத்து வந்தபோது,ரௌடிகள் எமது ஊழியர்களை பின்தொடர்ந்து வந்து,அச்சுறுத்தல் விடுத்திருந்தனர் என தெரிவித்தார்.சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட சிலரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 2 நவம்பர், 2019

யாழ் மல்லாகத்தில் கடையை உடைத்து பெறுமதி மிக்க உபகரணங்கள் திருட்டு

யாழ். மல்லாகத்தில் அமைந்துள்ள தொலைக்காட்சி மற்றும் வானொலி திருத்தகத்தின் உரிமையாளர் மற்றும் மகன் மதிய உணவு உண்பதற்காகத் தமது வீட்டிற்குச் சென்ற சமயம் பார்த்து துவிச்சக்கர வண்டியில் வந்த கொள்ளையன் மேற்படி வர்த்தக நிலையத்தின் பின்கதவால் உள்நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பெறுமதியான 
வானொலி, மற்றும் உதிரிப்பாகங்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளான்.குறித்த சம்பவம்  நேற்று வெள்ளிக்கிழமை (01.11.2019) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.மேற்படி வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மதிய 
உணவு உண்பதற்காகச் சென்ற போது வழமைபோன்று இன்றைய தினமும் வர்த்தக நிலையத்தின் பின்கதவை சாத்தி 
விட்டுச் சென்றுள்ளார். இந்தச் சமயம் பார்த்தே, கொள்ளையன் தனது கைவரிசையைக் காட்டியுள்ளான்.குறித்த திருத்தகத்திற்கு அருகில் இரண்டு வர்த்தக நிலையங்கள் காணப்பட்ட போதும் அங்கு நின்றவர்கள் சற்றும் சந்தேகமடையாதவாறு நுட்பமானமுறையில்
 குறித்த கொள்ளையன் திருடிச் சென்றுள்ளான். இந்நிலையில், மதிய உணவின் பின்னர் மீண்டும் வர்த்தக நிலையத்திற்கு வந்த உரிமையாளர் திருத்தும் வேலையை ஆரம்பிக்கும் போது உபகரணங்கள் திருட்டுப் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.இதேவேளை, மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆசாமி 
துவிச்சக்கர வண்டியில்
 செல்வதும், பின்னர் கொள்ளையடித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு விரைவாக நழுவுவதும் குறித்த பகுதியிலுள்ள சிசிரிவி காணொளியொன்றில்
 பதிவாகியுள்ளது.குறித்த காணொளியின் அடிப்படையில் இளைஞனொருவன் வழங்கிய தகவலுக்கமைய மேற்படி திருட்டில் ஈடுபட்ட நபர் நேற்றுப் பிற்பகல் தெல்லிப்பழைப் பகுதியில் 
மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
 பிடிபட்ட நபர் தற்போது தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், பிடிபட்ட நபர் முழுப் போதையிலிருந்துள்ளார். அவரிடமிருந்து மேற்படி வர்த்தக நிலையத்தில் திருடிய அனைத்துப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் 
முன்னெடுத்து வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இலங்கையில் செலுத்திய வாகனத்தில் மோதுண்டு இரு சிறுவர்கள் பலி

தென்னிலங்கையில் சிறுவன் ஒருவன் செலுத்திய மோட்டார் வாகனத்தில் மோதுண்டு 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.வீரக்கெட்டிய, தங்காலை வீதியில் 15 வயதுடைய சிறுவன் செலுத்திய மோட்டார் வாகனம் மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது
.சிறுவர்கள் இருவரும் அவர்களது தாயாரும் பேருந்து ஒன்றில் இருந்து இறங்கி வீதியில் செல்லும் போது, பேருந்திற்கு பின்னால் வந்த மோட்டார் வாகனத்தில் மோதுண்டமையதால் இந்த 
விபத்து நேர்ந்துள்ளது
.விபத்தில் படுகாயமடைந்த தாய் மற்றும் பிள்ளைகள் வீரக்கெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் ஒரு சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மற்றுறொரு பிள்ளையையும், 
தாயையும் மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.விபத்தில் 12 வயதுடைய மகளும் 6 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளனர். மோட்டார் வாகனத்தை ஓட்டியதாக கூறப்படும் 15 வயதான சிறுவனும் அதில் பயணித்த இருவரும்
 கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




வெள்ளி, 1 நவம்பர், 2019

தவறான செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களின் 162 முறைப்பாடுகள் பதிவு

சமூக வலைத்தளங்களின் தவறான பயன்பாடு தொடர்பாக இதுவரையில் 162 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.per.itssl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.இதற்கமைய ஜனாதிபதி 
வேட்பாளருக்கு சேறு பூசும் விதமான பதிவுகள் தொடர்பாக 66 முறைப்பாடுகளும், ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை பயன்படுத்தி போலியான 
சமூக வலைத்தளங்களை உருவாக்கிய சம்பவங்கள் தொடர்பாக 6 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர்களை இலக்காக கொண்டு பகிரப்படும் உண்மைக்கு புறம்பான செய்திகள் தொடர்பாக 41 முறைப்பாடுகளும், குரோத கருத்துக்கள் தொடர்பாக 43
 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் பெயரை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான இணையத்தளம் ஒன்று 
தொடர்பாகவும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 139 முறைப்பாடுகள் பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக 
வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பாகவும், 23 முறைப்பாடுகள் யூடியூப் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட காணொளிகள் தொடர்பாகவும் பதிவாகியுள்ளன.அத்துடன், பொய்யான செய்திகள் மற்றும் குரோதக் கருத்துக்கள் அடங்கிய தகவல்களை சமூக வலைத்தளங்களின் ஊடாக பகிர்வது அதிகரித்துள்ளதாகவும் இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.



யாழ் சுன்னாகத்தில் தனிமையில் வசித்து வந்த தாய் சடலமாக மீட்பு

பெற்ற மகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் எந்தவித உதவியும் இன்றி தனிமையில் வசித்து வந்த தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் கடந்த 29.10.2019.ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும், யாழ். குப்பிளான் வடக்கு
யாழ்  சுன்னாகம் பகுதியில் வசித்து வந்த சின்னத்தம்பி தனபதி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.இறந்த தாயின் மகள் பிரித்தானியாவில் வசித்து வரும் நிலையில் அவர் தாயுடன் கதைப்பதில்லை எனவும், எந்த விதமான பண உதவியும் செய்வதில்லை எனவும் தெரியவருகின்றது.
இந்த நிலையில், அயலவர்களிடம் உணவு வாங்கி உட்கொண்டே தாய் வசித்து வந்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த 29ஆம் திகதி அயல்வீட்டு உறவினர் ஒருவர் உணவு வழங்குவதற்காக 
சென்றுள்ளார்.இதன்போதே அந்த தாய் இறந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு வந்த சுன்னாகம் பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.