siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 31 மார்ச், 2022

இலங்கை ரூபா சர்வதேச நாணயங்களுக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியில்

சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் 
விற்பனை விலை 394 ரூபாவாகவும் கொள்முதல் விலை 379 ரூபாவாகவும் உள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 299 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288 ரூபாவாகவும் உள்ளது. யூரோ 
ஒன்றின் விற்பனை விலை 337 ரூபாவாகவும் கொள்முதல் விலை 325 ரூபாவாகவும் உள்ளது.
சுவிஸ் பிராங் ஒன்றின் விற்பனை விலை 325 ரூபாவாகவும் கொள்முதல் விலை 313 ரூபாவாகவும் உள்ளது. கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 240 ரூபாவாகும், கொள்வனவு விலை 230 ரூபாவாகும். தனியார் வங்கிகளில் ஒரு குவைத் தினார் 1001.70. ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதேவேளை, ஏனைய மத்திய கிழக்கு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
பஹ்ரைன் தினார் ஒன்றின் பெறுமதி 797.33 ரூபாவாகும்.

ஓமான் ரியால் ஒன்றின் பெறுமதி 785.59 ரூபாவாகும்.

கட்டார் ரியால் ஒன்றின் பெறுமதி 83.98 ரூபாவாகும்.

சவுதி ரியால் ஒன்றின் மதிப்பு 84.24 ரூபாய்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் ஒன்றின் மதிப்பு 84.87 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இலங்கையில் டொலர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இலங்கை மத்திய வங்கி ரூபாவை குறைத்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும்


நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


தீகலாவில் வீடொன்றின் மதில் உடைந்து விழுந்ததில் சிறுவன் மரணம்

அக்குரஸ்ஸ, தீகல பிரதேசத்தில் வீடொன்றின் மதில் உடைந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து விபத்தில் மேலும் ஒரு 5 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தானது வீடு திருத்தும் பணியின் போது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை 
மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





வியாழன், 24 மார்ச், 2022

நாட்டில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டில்லிட்ரோ நிறுவனம் சற்றுமுன்னர் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்றினை  வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, தற்போது கெரவலப்பிட்டிய முனையத்தில் போதியளவு சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் 
தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அடுத்த 10 நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் 01 மில்லியன் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு குறுகிய காலத்தில் களையப்படும் எனவும் குறித்த நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



மயிலவெவவில்மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம்

திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலவெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து 23-03-2022.அன்றிரவு  
 இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த எம்.சஞ்ஞய (30 வயது) மற்றும் ஏ.எச். எம்.தம்மிக சுசந்த (28வயது) எனவும்
 தெரியவருகின்றது.
இருவரும் மோட்டார் சைக்கிளில் மல்போருவ பகுதியிலிருந்து மயிலவெவ பகுதிக்கு வந்து கொண்டிருந்த வேளை வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், புதிதாக பாலம் ஒன்றினை அமைப்பதற்கு புளி வெட்டி இருந்த நிலையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் குழிக்குள் விழுந்து இருவரும் படுகாயமடைந்த நிலையில் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனை அடுத்து குறித்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 22 மார்ச், 2022

பள்ளாறு மயில்லோடையில் காட்டு யானை தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

பள்ளாறு மயில்லோடை வயல் பகுதியில் காட்டு யானை தாக்கி இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக  தெரிவித்துள்னளர்.
இச்சம்பவமானது சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளாறு மயில்லோடை வயல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக 
தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில் வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இன்று மதியம் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே குறித்த நபர் 
உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் சம்மாந்துறை விளினையடியைச் சேர்ந்த 68வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை ஆவார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சம்மாந்துறை பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



திங்கள், 21 மார்ச், 2022

பிள்ளைகளுடன் அவுஸ்திரேலியாவில் காருக்கு தீவைத்து தற்கொலை செய்த தமிழ் பெண் வெளியான தகவல்

அவுஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணொருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் தன்னோடு காரில் வைத்து தீயிட்டுப் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பெர்த் தெற்கே Coogee பகுதியில் கடற்கரைக்கு அருகே கடந்த திங்கட்கிழமை காருக்குள்ளிருந்து 40 வயது பெண், 10 வயதுச் சிறுமி மற்றும் 8 வயதுச் சிறுவன் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில், இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் பிள்ளைகளும் என தெரிவிக்கப்படும் அதேநேரம், இவர்கள் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கார் தீப்பிடித்துக்கொண்டமைக்கு வேறு நபர்கள் எவரும் காரணமாக இருந்திருக்க முடியாது எனவும், காருக்குள் இருந்தவர்களே தீப்பற்றவைத்திருக்க வேண்டுமெனவும் மேற்கு அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த தமிழ் பெண் பெண் பெர்த் Fiona Stanley வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரிந்தவர் எனவும், ‘தற்கொலையுடன் நடைபெற்றுள்ள இரட்டைக்கொலை’ என்ற கோணத்தில் இவ்விவகாரம் அணுகப்படுவதாக பொலிஸார் தரப்பில் கூறப்படுகின்றது.
கடந்த ஐந்து வருடங்களாக பெர்த் பகுதியில் வசிக்கும் இந்தக் குடும்பத்தினர் மிகவும் அன்பானவர்கள் என்றும், சம்பவம் இடம்பெறுவதற்கு முந்தைய வார விடுமுறையில் தகப்பனும் பிள்ளைகளும் தங்களது வீட்டுத் தோட்டத்தில் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




சனி, 19 மார்ச், 2022

நினைவஞ்சலி 9ஆம் ஆண்டு அமரர் இளையதம்பி நாகம்மா 19.03.2022

திதி: 19-03-2022 
யாழ் தோப்பு அச்சுவேலியைப்   பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்.  இளையதம்பி நாகம்மா  அவர்களின்.திதி 9ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி திதி: 19-03-2022, சனிக்கிழமை இன்று 
அன்னார் அமரர்,இளையதம்பியின்  அன்பு மனைவியும் புவனேஷ் 
காலம்சென்ற இராசரத்தினம் காலம்சென்ற நடேஸ் மற்றும் சந்திரன்  குணம் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நீங்காத நினைவுகள்>>>
அன்பாலும் பண்பாலும் எம்
 எல்லோரையும் அரவணைத்த
எம் அன்புத் தெய்வமே நீங்கள்
 மீளாத் துயில் கொண்டு ஒன்பது ஆண்டுகள் 
கடந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றும் எம்முடனே வாழும்.பார்க்கும் இடமெல்லாம்
நீங்கள் நிற்பதுபோல்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த
காலங்கள் எம்முள்ளே
நித்தமும் அலைமோதிய
வண்ணம் உள்ளது அம்மா!!!உங்கள் கைபிடித்து
உங்கள் ஆதரவில்
உங்கள் வழியிலேயே
உங்கள் பின்னால்
நடந்தோம் அம்மா..ஆனால் இன்று கைபிடித்து
அரவணைக்க நீங்கள்
இல்லையே எங்களுடன்...உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் ஆத்மாசாந்தி
அடைய குடும்ப தினரும் நவற்கிரி ,கொம்  நவக்கிரி,கொம் நிலாவரை கொம்
இணையங்களும் உறவினர்கள் கனடா தோப்பு சுவிஸ் நவற்கிரி , நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றன .ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் பிள்ளைகள் ,மருமக்கள் பெறாமக்கள் பேரப்பிள்ளைகள்  .
பூட்டப்பிள்ளைகள்  
தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


வெள்ளி, 18 மார்ச், 2022

திரு மரியநாயகம் ஜெகநாதன் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்18.03-22

பிறப்பு08 MAR 1963-இறப்பு-18 FEB 2022,
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மரியநாயகம் ஜெகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.ஓர் திங்கள் ஆனதுவோ... கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும்
 நீங்கவில்லை
31 நாட்கள் ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!
எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது அப்பா!
31 நாள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஓடிமறைந்தாலும்
உங்கள் அன்பும் பாசமும் அரவணைப்பும்
என்றும் எம் நினைவை விட்டு அகலாது
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்..!!!!அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.அன்னாரின் 31ம் நாள் விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்
.முகவரி: Freiestrasse 108952 Schlieren, Switzerland
இங்ஙனம்,
குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

பாணுக்கு உக்ரைனில் வரிசையில் நின்ற மக்களை சுட்டுக் கொன்ற ரஷ்யப்படை

உக்ரைனில் பாணுக்கு வரிசையில் நின்ற மக்களை ரஷ்ய படைகள் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைனின் வடக்கு நகரமான செரீனிஹிவ்வில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாணுக்காக வரிசையில் காத்திருந்த 10 பேரை ரஷ்யப் படைகள் இன்று சுட்டுக் கொன்றதாக, அமெரிக்க தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில்
 தெரிவித்துள்ளது

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



வியாழன், 17 மார்ச், 2022

அடம்பன் பகுதியில் யானை தாக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தபெண்

அடம்பனில் யானை தாக்கி படுகாயமடைந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் நான்கு நாள்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது மன்னார், முருங்கன் - அடம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் அந்த பகுதியை சேர்ந்த சதானந்தன் சுதா (வயது-46) என்ற குடும்பப்பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 13ம் திகதி அதிகாலையில் ஒரு மணியளவில் வீட்டிற்கு முன் உள்ள வீதியில் சத்தம் கேட்டுள்ளது. அதனால் வெளியே வந்த குடும்பத்தலைவர் ரோச் லைட் அடித்து பார்த்துள்ளார். அவரது மனைவியும் வீட்டு 
முற்றத்துக்கு வந்துள்ளார்.
அப்போது யானை ஒன்று வீட்டு வளாகத்துக்குள் நுழைந்து இருவரையும் தாக்க வந்துள்ளது. அதனால் கணவர் வீட்டுக்குள் நுழைந்து கதவைப் பூட்டியுள்ளார். வீட்டுக்கு வெளியில் இருந்த மனைவி ஓடி மறைவாக 
இருந்துள்ளார்.
வீட்டுக்குள் நுழையாத யானை மறைவில் இருந்த பெண்ணைத் தாக்கிவிட்டு அங்கிருந்த சென்றுள்ளது. யானை தாக்கியதில் படுகாயமடைந்த பெண், மன்னார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு 
கொண்டுசெல்லப்பட்டார்
எனினும் நான்கு நாள்களின் பின்.17-03-2022. இன்று காலை சிகிச்சை பலனின்றி குடும்பப்பெண் உயிரிழந்தார் என்று விசாரணையில்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

மரண அறிவித்தல் திருமதி தம்பிஐயா கமலாம்பிகை ( கமலம் )14.03.22

பிறப்பு-07 JUN 1930--இறப்பு-14 MAR 2022.
யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப்பிறப்பிடமாகவும், உரும்பிராயை வாழ்விடமாகவும்  தற்போது கனடா ரொரன்றோவை  (Toronto) வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி  தம்பிஐயா கமலாம்பிகை
 ( கமலம் )அவர்கள் 
14-03-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான 
பொன்னையா பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தம்பிஐயா அவர்களின் பாசமிகு மனைவியும்,ஜெகதீஸ்வரன், ஜெகயீஸ்வரி, மலர்சோதி, தயாபரன், அருளானந்தம், பாலசுந்தரம், 
சிவானந்தன், ஜாமினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,பரமேஸ்வரி, காலஞ்சென்ற சசிகுமரன், விஜயரட்ணம், சியாமளா, 
பாமினி, சிவமதி, பாமினி, உருத்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, கனகாம்பிகை, சிவசம்பு 
ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜெகதீப்- எஸ்தர், பிரியா- விபி, தரூபன் - ரதி, தயன் - கார்லா, கிரூபன் - தர்ஷினி, கர்ஷன் - கஜந்தி, 
கிரிஷா- ஜெராட், விபி- கோணி, சிரோன் - ஷிபானி, துஷான், ஷிரோமி- ஆண்ட்ரூ, அனோஜ்- ஷோனியா, தினா- மிஜானி, அபினா, 
செளமி, கவீஷ், கியாரா 
ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஐலியா, ஜெயன், நெரியா, ஜெனனி, ஜெனீஷா, கேப்ரியல், சோபியா, செபாஸ்டியன், ஜியான் கார்லோ, அகீறா, அனிசா, ரேயா, அலிசா, எமா, ஜூலியா, ஐலா, லோகன், நதானியேல், விக்டோரியா, எய்வா, அலானி, ஆரியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 19 Mar 2022 6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 20 Mar 2022 1:30 PM - 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 20 Mar 2022 2:00 PM - 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 20 Mar 2022 4:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
 ஜெகதீஸ் - மகன்Mobile : +16474070675 வீடு - குடும்பத்தினர்Mobile : +14168505513 ரூபன் (Montreal) - மகன்Mobile : +15142268698.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


புதன், 16 மார்ச், 2022

தனது பிள்ளைகளுடன் அவுஸ்திரேலியாவில் காருக்கு தீவைத்து தற்கொலை செய்த தமிழ் பெண்

அவுஸ்திரேலியாவில் தனது பிள்ளைளுடன் தாய் ஒருவர் காருக்கு தீவைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பெர்த் தெற்கே Coogee பகுதியில் கடற்கரைக்கு அருகே கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். காருக்குள்ளிருந்து 40 வயது பெண், 10 வயதுச் சிறுமி மற்றும் 8 வயதுச் சிறுவன் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டன.
இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் பிள்ளைகளும் என தெரிவிக்கப்படும் அதேநேரம், இவர்கள் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கார் தீப்பிடித்துக்கொண்டமைக்கு வேறு நபர்கள் காரணமாக இருந்திருக்க முடியாது எனவும், காருக்குள் இருந்தவர்களே தீப்பற்றவைத்திருக்க வேண்டுமெனவும் மேற்கு அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் பெர்த் Fiona Stanley வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரிந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 15 மார்ச், 2022

நாட்டை எரிபொருட்களைத் தாங்கிய கப்பல்கள் வந்தடையவுள்ளன

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுபாட்டை குறைக்கும் முகமாக இன்று எரிபொருட்களைத் தாங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 37,500 மெற்றிக் டன் பெட்ரோல் அடங்கிய கப்பல் ஒன்றும், தலா 20,000 மெற்றிக் டன் டீசல் மற்றும் விமானத்திற்கான எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்றும் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இக்கப்பல்களில் உள்ள எரிபொருளைத் தரையிறக்குவதற்கான நாணய கடிதங்களை விடுவிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் 30,000 மெற்றிக் டன் எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்றும் இன்று அல்லது நாளை நாட்டை வந்தடையவுள்ளது.
இவ்வாறு நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ள எரிபொருட்களால் எதிர்வரும் நாட்களில் எரிபொருளுக்கான தட்டுப்பாட்டைக் குறைக்க முடியும் என வலுசக்தி அமைச்சின் செயலாளர் கே.டீ.ஆர்.ஒல்கா
 குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



திங்கள், 14 மார்ச், 2022

மரியுபோலில் மட்டும் ரஷ்ய குண்டு மழையில் பொதுமக்கள் 2,187 பேர் படுகொலை

உக்ரைனின் மரியுபோல் நகரில் மட்டும் இதுவரை குறைந்தது பொதுமக்கள் 2,187 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகரில், இதுவரை குறைந்தது 2,187 குடியிருப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக நகர கவுன்சில் தெரிவித்துள்ளது.
மரியுபோல் மீது ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், நகரத்தில் குறைந்தது 22 குண்டுவெடிப்புகள் நடந்தன.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



மொனராகலையில் அறுபது மாணவர்கள் வைத்தியசாலையில்

குளவிக் கொட்டுக்கு இலக்கானஅறுபது மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
மொனராகலையில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
பொலிஸ் ஊடகப்  பேச்சாளர் அலுவலகம்  இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. .

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>





மரண அறிவித்தல் திருமதி தவராசா செல்வநாயகி (செல்வி)13.03.2022

பிறப்பு-14-01-1965-இறப்பு-13-03-22.
யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி தவராசா செல்வநாயகி அவர்கள் 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லக்கண்டு(ஆசிரியர்), வள்ளிநாயகி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயாதுரை,
 இராசலெட்சுமி 
தம்பதிகளின் அன்பு மருமகளும்,தவராசா(தவம்- புங்குடுதீவு 10ம் வட்டாரம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,நிஷாந், நிவேதினி(நிவேதா), நிலானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,துவேதா, மகிந்தன்(மகி), நிஷாந்தன்(நிசி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,றியான், மோகனா செல்வி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,இராசநாயகி, கணேசலிங்கம்(ஜப்பான்), விக்னேஸ்வரி(ஆசிரியை- கொழும்பு), வினாயகலிங்கம்(சுவிஸ்), சிவலோகேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,ஸ்ரீ(கனடா), கலா(கனடா), சாந்தி(பிரான்ஸ்), ஆனந்தன்(சுவிஸ்), சிவஞானம், மிக்கா, தவராசா, கலாரஞ்சினி, சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,துரைரத்தினம்- அதிஸ்டதேவி, அரசரட்ணம்- கலைச்செல்வி, யோகேஸ்வரன் - செல்வராணி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
தகவல்: குடும்பத்தினர்
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 15 Mar 2022 1:00 PM - 4:30 PM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Wednesday, 16 Mar 2022 1:00 PM - 4:30 PM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
கிரியை
Get Direction
Thursday, 17 Mar 2022 8:00 AM - 12:00 PM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
 தவம் - கணவர்Mobile : +41798728397 நிஷாந் - மகன்Mobile : +41763931827 ஆனந்தன் - மைத்துனர்Mobile : +41799604637 லிங்கம் - சகோதரன்Mobile : +41764271579

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

ஞாயிறு, 13 மார்ச், 2022

இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் இன்னும் சில நாட்களில் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என லிட்டர் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.நேற்று முன்தினம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள்
விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் 
தெரிவித்துள்ளது.
வரும் நாட்களில் எரிவாயு விநியோக செயல்முறை தொடரும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



சனி, 12 மார்ச், 2022

நாட்டில் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலை

நாட்டில் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 77 ரூபாவினாலும், ஒரு லிட்டர் டீசலின் விலை 55 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சுப்பர் டீசலின் விலை 95 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 254 ரூபாவாகும். ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 77 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 254 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 76 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய 
விலை 283 ரூபாவாகும்.
இதேவேளை, லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிக்க நேற்று முன்தினம் (10) நடவடிக்கை எடுத்திருந்தமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 11 மார்ச், 2022

நாட்டில் அத்தியாவசிய பொருளான கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் ஒன்றான கோதுமை மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையான 35 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விலை அதிகரிப்பானது இன்றைய தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இதேவேளை எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, கோதுமை மா தட்டுப்பாடு, மூலப் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் பேக்கரி தொழில்துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்
 தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் 1,000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும், தற்போது இயங்கி வரும் 6,000 பேக்கரிகளில் பெரும்பாலானவை தினசரி உற்பத்தியில் 50% கூட இல்லை என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


வியாழன், 10 மார்ச், 2022

நாட்டில் மின்வெட்டு அமுலாகும் விதத்தில் திடீர் மாற்றம் வெளியான செய்தி

நாளை (10) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு 
மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அவ்வாறே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான 
காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


செவ்வாய், 8 மார்ச், 2022

அமரர் நடராஜா அற்புதராஜா 8ம் ஆண்டு நினைவஞ்சலி 09.03.2022

தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014 
திதி : நாள்.09 03.2022.புதன்கிழமை அன்று 
யாழ். அச்சுவேலி தோப்பைப்பிறப்பிடமாகவும், நவற்கிரி- தோப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்   நடராஜா அற்புதராஜா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி .திதி   
அமரர் நடராஜா அற்புதராஜா  அவர்களின் நீங்காத நினைவுடன்  எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி 09.03.2022.புதன்கிழமை அன்று 
  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
>>>>>>>>>
மறைந்துவிட்ட எங்கள்  உறவின்  
நீங்காத நினைவுகள் 
இன்று பிரிவு எனும் துக்கத்தினால்
 எட்டு  ஆண்டு சென்றாலும்
 உங்கள் உடல் மட்டும் தான் அழிந்தது தந்தையே!
ஆண்டுகள் எத்தனைதான் சென்றாலும்
 உங்கள் அன்பு முகமும், உங்களது பாசமும்
எம்மைவிட்டு என்றுமே நீங்காது!எம் நெஞ்சுக்குள் வாழும் உங்கள்
நினைவுகள் எப்போதும் எம்
நெஞ்சை விட்டுப் போகாதுஉங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனை வேண்டி
தினமும் உங்கள் பாதம் பணிகின்றோம்.  
அன்னாரின் ஆத்மாசாந்தியடைய 
இறைவனை பிரார்த்திக்கின்றோம் ..
என்றும் உங்கள் பிரிவால் துயருறும் 
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் , 
மைத்துனர்மார்கள், மருமக்கள்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




ஞாயிறு, 6 மார்ச், 2022

நாட்டில் சமையல் அறையில் சிலிண்டர் பயன்படுத்தி சமைப்பவர்களுக்கு

மக்களுக்கு  எச்சரிக்கைப்பதிவு..!!ஒரு பெண் தன் சமையல் அறையில் கியாஸ்(Gas Stove )அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில கரப்பான் பூச்சிகளைக் கண்டாள்.உடனே அவள் பூச்சிக் கொல்லி(“Hit”,”Mortein”) மருந்தை அடித்து 
தெளித்தாள்.
அந்த மருந்தின் வேகத்தால் கியாஸ் சிலிண்டர் வெடித்து அவள் மேல் 65% தீக்காயம் ஏற்பட்டது.அவளைக் காப்பாற்ற முயன்ற கணவர் மீதும் தீக்காயம் ஏற்பட்டது.இருவரும் மருத்துவ மனையில் 
சேர்க்கப்பட்டனர்.கணவர்
தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.ஆனால் அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனாள்.அவள் இறந்தது கூட கணவனுக்கு தெரியாது.அதனால் எரிவாயு எரிந்து கொண்டு 
இருக்கும் போது
பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கப் படுகிறது.இந்த செய்தியை படித்ததோடு விட்டுவிடாமல் மற்றவர்களும் தெரிந்து கொள்ளபகிர்ந்து விழிப்புணர்வை தந்திடுங்கள்..

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

வெள்ளி, 4 மார்ச், 2022

மரண அறிவித்தல் திருமதி குமாரசாமி தவரத்தினம் 04.03.2022

தோற்றம்.13 06 1931-மறைவு-04 03 2022
யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும்  சிறுப்பிட்டியில்மேற்கில் வசித்தவரும் தற்போது ஊரெழுவில்வசித்துவந்த திருமதி குமாரசாமி தவரத்தினம்
அவர்கள் ஊர்ரொழுவில்.04.03.2022.வெள்ளிக்கிழமை இன்று  இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்புமனைவியும் காலஞ்சென்ற லிங்கம் மற்றும் ஈசன்  சிவா விமலன் நகுலன் ஜெந்தி   வசந்தி சாந்தி சுகந்தி ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-03.2022.இன்று அவரது இல்லத்தில் நடைபெற்று ஊரெழு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் . இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>