siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

மரணஅறிவித்தல் திருமதி மயில்வாகனம் தேவகி

பிறப்பு : 29 ஓகஸ்ட் 1951 — இறப்பு : 24 ஏப்ரல் 2017
யாழ். நெல்லியடி வதிரி, கல்வத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் தேவகி அவர்கள் 24-04-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுதர்ஸன்(லண்டன்), குகநேசன்(லண்டன்), சிவநேசன், சிவரஞ்சன், இந்துஷா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பூபாலசிங்கம், ராசகுலசிங்கம்(வவுனியா), சரஸ்வதி, மகேஸ்வரி, தர்மகுலசிங்கம்(லண்டன்), தனபாலசிங்கம்(பிரான்ஸ்), புவனேஸ்வரி(லண்டன்), ராஜேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருள்செல்வி(லண்டன்), பிரதீபா(லண்டன்), தர்மினி, காலஞ்சென்ற சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஜித், மிதுஷா, அனிஷ்கா, டனிஸ், கஜிநாத், டிருசிகா, சர்மிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கியை 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்

தகவல்
செளமியா ஜெகன்
தொடர்புகளுக்கு
செளமியா ஜெகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447392408087
- — இலங்கை
தொலைபேசி: +94212263737
செல்லிடப்பேசி: +94770121083
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 15 ஏப்ரல், 2017

மோட்டார் தலைக்கவசம் அணியாது சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!!

வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். சுன்னாகம் சந்தியில் இன்று பகல் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் தெரிய
 வருவதாவது,
காங்கேசன்துறை வீதியில் இருந்து மூவர் ஒரு மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாது பயணம் செய்துள்ளனர்.
அவர்கள் மூவரையும் கண்ட பொலிஸார் வீதியில் மறித்துள்ள போதும், அவர்கள் பொலிஸாரின் உத்தரவிற்கு கட்டுப்படாமல் தப்பிச் 
சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் பொலிஸார் பின்தொடர்ந்து துரத்திக்கொண்டு சென்ற வேளையில் சுன்னாகம் சந்தியில் உள்ள சமிஞ்ஞை விளக்குப் போடப்பட்டிருந்த நிலையில் பாதையை கடக்க முற்பட்ட போது எதிரே வந்த வேனுடன் மோதியுள்ளனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதனால், அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 13 ஏப்ரல், 2017

மரணஅறிவித்தல் திருமதி செல்லையா சின்னத்தங்கம் 12.04.17

தோற்றம் : 8 யூன் 1933 — மறைவு : 12 ஏப்ரல் 2017
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிசில் லவுசானை  (Lausanne) வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சின்னத்தங்கம் அவர்கள் 12-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற எதிர்மனசிங்கம், முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
உலகநாதன், இரகுநாதன், முத்துலட்சுமி(கலா), செல்வச்சந்திரன்(சுவிஸ்), சபேசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற துரைசிங்கம், சின்னத்தம்பி, செல்லையா, செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சதா, சிவபாலசுந்தரம்(இராசு), சசி, சாந்தி, சறோ ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 நிசாந்தன், சிந்துஜா, விதுசியா, தர்சனா, பிரவீனா, றாதினி, தயானி, ஜெசிக்கா, கீர்த்திகா, அஜந், அபிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நேகா, நவீன், சானியா, லெயானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 13/04/2017, 07:30 மு.ப — 06:30 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland 
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 14/04/2017, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland 
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 15/04/2017, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland 
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/04/2017, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland 
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 17/04/2017, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland 
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 18/04/2017, 07:30 மு.ப — 06:30 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland 
கிரியை
திகதி: புதன்கிழமை 19/04/2017, 01:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland 
தொடர்புகளுக்கு
சிவா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216256250
செல்லிடப்பேசி: +41796575140
உலகநாதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763811726
இரகு — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788030089
சபேஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447930469796
செல்வன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796401276
சின்னத்தம்பி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41433009920
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 12 ஏப்ரல், 2017

மரணஅறிவித்தல் திருமதி செல்லையா சின்னத்தங்கம் 12.04.17

உதிர்வு:12.04.2017  
யாழ்  வல்வெட்டியை பிறப்பிடமாகவும்   சுவிஸ்சை  வசிப்பிடமாகக்கொண்ட  திருமதி:செல்லையா சின்னத்தங்கம் சுவிஸ்சில் . 12.04.2017.புதன்கிழமை.அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா  அவர்களின் பாசமிகு மனைவியும்
உலகராஜா( உலகநாதன்.சுவிஸ்)  ரகுநாதன்.(சுவிஸ்) செல்வம்.(சுவிஸ்) அவர்களின் தாயாருமாவார் 
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் .
தொடர்புகளுக்கு.மகன் .செல்பேசி 0041 763811726
தகவல்
குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 8 ஏப்ரல், 2017

முல்­லைத்­தீ­வில் விவ­சா­யியின் உயி­ரைப் பறித்­த விசர்நாயின் ­ கீ­றல்

விலங்கு விசர் நோய்த் தொற்­றுக்­குள்­ளான நாயி­னு­டைய  பல்­லின் சிறு­கீ­றல் விவ­சா­யி­யின் உயி­ரைப் பறித்த சம்­ப­வம் முல்­லைத்­தீ­வில் 
இடம்­பெற்­றுள்ளது.
முல்­லைத்­தீவு குமா­ர­பு­ரம் முள்­ளி­ய­வ­ளை­ யைச் சேர்ந்த 3 பிள்­ளை­க­ளின் தந்­தை­யான இரா­மையா சிவ­சாமி (வயது- –58) என்­ப­வரே இவ்வாறு உயி­ரி­ழந்­துள்ளார்.
குறித்த நபர் தண்­ணீ­ரைக் கண்­ட­தும் அவர் பயப்­பட்­டதை அடுத்து அவர் வைத்தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டார். எனி­னும் சிகிச்சை பய­னளிக்­காது அவர் உயி­ரி­ழந்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.
“கடந்த டிசெம்­பர் மாதம் விவ­சா­யி­யின் வளர்ப்பு நாய்க்­குட்டி அவ­ரைக் கௌவி­யது. அத­னால் நாய்க்­ குட்­டி­யின் பல்
 கீறி­யுள்­ளது. அவ்­வாறு கீறி­னா­லும் குருதி வர­வில்லை. சிறு கீறலே காணப்­பட்­ட­த­னால் அவர் கவ­னிக்­காது 
விட்­டு­விட்­டார்.
சில நாட்­க­ளின் பின் குறித்த நாய்க்­குட்டி அவ­ரது வீட்­டில் உள்ள பூனை உள்­ளிட்ட பிரா­ணி­க­ளைத் துரத்­திக் கடிக்­கத் தொடங்­கி­யது. அத­னால் நாய்க்­குட்­டி­யைப் பிடித்­துக் கட்­டி­யுள்­ள­னர். 3 நாள்­க­ளில் பின் நாய்க்­குட்டி 
இறந்­து­ விட்­டது.
சுமார் 4 மாதங்­க­ளா­கி­யுள்ள நிலை­யில் குறித்த விவ­சாயி தோட்­டத்­தில் பயிர்­க­ளுக்கு நீர் இறைத்­துக் கொண்­டி­ருந்­தார். தண்­ணீ­ரைக் கண்­ட­தும் அவர் பயத்தை உணர்ந்­தார். வீட்­டி­லும் தண்­ணீ­ரைக் கண்­ட­தும் அவர்
 பய­ம­டைந்­தார். 
வீட்­டி­லுள்­ள­வர்கள் அவ­ரின் செயற்பாட்டை அவ­தா­னித்­த­னர். அத­னால் அவரை மாஞ்­சோலை வைத்­தி­ய­சா­லை­யில் நேற்­று­முன்­தி­னம் சேர்த்­த­னர். அவ­ரைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்­கள் அவரை உட­ன­டி­யாக யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றி­னர். 
அவ­ருக்­குச் சிகிச்சை அளிக்­கப்­பட்­ட­போ­தும் சிகிச்சை பய­ன­ளிக்­காது நேற்­று­முன்­தி­னம் பிற்­ப­கல் 3.45 மணி­ய­ள­வில் அவர் உயி­ரி­ழந்­தார்” என்று இறப்பு விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.
உடற்­கூற்­றுப் ­ப­ரி­சோ­த­னை­யின்­போது அவ­ருக்கு விலங்கு விசர் நோய்த் தொற்று ஏற்­பட்­ட­த­னால் இறப்பு நிகழ்ந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் விசா­ரணை மேற்­கொண்டு உட­லத்தை நேற்று உற­வி­னர்­க­ளி­டம்
 ஒப்­ப­டைத்­தார்.

புகையிரதத்தில் யாழ் உட்பட பல இடங்களுக்கும் செல்பவர்களின் கவனத்திற்கு!.

தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு இன்றில் இருந்து விசேட புகையிரத சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம், பண்டாரவளை, மருதானை, மாத்தறை, காலி போன்ற பல இடங்களுக்குமான புகையிரத சேவைகள் தொடர்பான விபரத்தினை இலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படியில்,
கொழும்பு – கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏப்ரல் 12 ஆம் திகதி மற்றும் 17ஆம் திகதிகளில் விஷேட ரயில் சேவைகளும்,
கொழும்பு கோட்டையில் இருந்து பண்டாரவளை நோக்கி ஏப்ரல் 9ஆம் திகதி தொடக்கம் 12ஆம் மற்றும் 16 ஆம் திகதிகளில் 
காலை 11.30 மணிக்கும்,
கொழும்பு – கோட்டை மற்றும் மருதானையில் இருந்து வெயன்கொட மற்றும் தெற்கு களுத்துறை வரை ஏப்ரல் 14ஆம் திகதி 8 தடவைகள் சேவையும்,
அத்துடன், மஹவ, காலி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளுக்கும் எதிர்வரும் 17ஆம் திகதி விஷேட ரயில் சேவைகளும் 
வழங்கப்பட்டுள்ளன.
மேலும், விசேட காலத்தினை கருத்திற்கொண்டு 3600 பேருந்து சேவைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>