siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 28 ஜூன், 2017

நீதவான் சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு வழக்கு ஒத்தி வைப்பு!!

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி வரை ஒத்தி 
வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று மல்லாகம் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சுன்னாகத்திலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை குறித்துப் பொதுச் சுகாதாரப் பரிசோதர்கள், பொலிஸார், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இணைந்து மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்த மே மாதம் 30ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது சுன்னாகத்திலும், அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலப்பதற்குக் காரணமான மின் உற்பத்தி நிறுவனத்தைக் கண்டறிந்து குறித்த நிறுவன அதிகாரிகளைச் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரூடாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு மல்லாகம் நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
எனினும், இன்றைய தினம் நீதவானின் உத்தரவுக்கமைய அதிகாரிகள் கைது செய்யப்பட்டு மன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை.
இன்றைய தினம் சுன்னாகம் நொதேர்ன் பவர் மின்னுற்பத்தி நிறுவனம் சார்பாக மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி டிலான் பிலிப்ஸ் சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பான வழக்குகள் மேல்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நிலுவையிலுள்ளமையால் மல்லாகம் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்குமாறு நீதவானிடம் கோரினார்.
இதன் அடிப்படையிலேயே குறித்த வழக்கு விசாரணையை நீதவான் ஒத்தி வைத்தார். மேலும், நீர் மாசு தொடர்பான தற்போதைய நிலைமைகளை ஆராய்ந்து மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுற்றுச்சூழல் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு நீதவான் இதன்போது உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>வெள்ளி, 23 ஜூன், 2017

மாணவர்கள் மஞ்சள் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்

மட்டக்களப்பு – கொழும்பு வீதியில் இரு பேருந்துகள் முந்திச் செல்ல எத்தனித்த போது இடம்பெற்ற விபத்தில் மஞ்சள் கடவையை கடக்க முயன்ற மாணவர்கள் மயிரிழையில் உயிர்த் தப்பியுள்ளனர்.

குறித்த விபத்து இன்று காலை முறக்கொட்டான்சேனை இராம கிருஷ்ண மிஷன் வித்தியாலயத்திற்கு முன்னால் உள்ள மஞ்சள் கடவையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தொன்றும், தனியார் பேருந்தொன்றும் முந்திச்செல்ல எத்தனித்த வேளையிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, வீதியைக் கடந்து கொண்டிருந்த மாணவர்கள் வீதியிலிருந்து விலகிச் சென்று ஆபத்திலிருந்து தப்பிக் கொண்டுள்ளதுடன், குறித்த நேரத்தில் பாடசாலை மஞ்சள் கடவையில் பொலிஸார் எவரும் கடமையில் நின்றிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து பாடசாலை மஞ்சள் கடவைக்கு அருகிலுள்ள கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளதுடன், குறித்த இரு பேருந்துகளும் ஏறாவூர் பொலிஸாரால், பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அண்மைக்காலமாக பாடசாலை தினங்களில் பாடசாலைக்கு அண்மித்த பகுதிகளிலுள்ள மஞ்சள் கடவைகள் முன்னால் வீதிப்போக்குவரத்து பொலிசார் உரிய நேரத்து கடமைக்கு வருவதில்லை எனவும், இவ்வாறான விபத்துக்களை குறைப்பதற்குரிய வேலைத்திட்டங்களை செய்வதில்லையெனவும் பொதுமக்கள் குற்றம் 
சாட்டுகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெளிநாட்டுக்கடவுச்சீட்டை 100 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள வாய்ப்பு


அனர்த்த நிலைமையிலான பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த விலையில் கடவுச்சீட்டினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை 
எடுத்துள்ளது.
வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் வெளிநாட்டு கடவுச்சீட்டு காணாமல் போயிருந்தால், புதிதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பிரதேச செயலாளர் பரிந்துரையின் படி, விண்ணப்பதாரர் செலுத்த வேண்டிய கட்டணங்களை குறைந்த விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2017ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியின் பின்னர் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டாலும், இதுவரை வெளிநாடு செல்லாத நபராக இருந்தால், அந்த நபரிடம் 100 ரூபாய் என்ற சாதாரண கட்டணத்தை மாத்திரம் பெற்றுக்கொண்டு புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிவாரணம் ஒகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வரை மாத்திரம் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை 
அனுமதித்துள்ளது.
தற்போது காணப்படுகின்ற சட்டரீதியான நிலைமையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டு செல்லுபடியாகும் காலப்பகுதி முடிவதற்கு முன்னர் காணாமல் அல்லது சேதமடைந்திருந்தால் புதிய கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ளும் போது 10000 ரூபாய் அறவிடப்படுகின்றது.
எனினும் அண்மையில் நாட்டில் 
ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக குறிப்பிடத்தக்க அளவு மக்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டு பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற் கொண்டு அரசாங்கத்தினால் இந்த நடவடிக்கை
 மேற்கொள்ளப்படவுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>வியாழன், 22 ஜூன், 2017

மரண அறிவித்தல் திரு செல்லையா பரந்தாமன் 20-06-17

 இறப்பு : 20 06. 2017
அல்வாய் கிழக்கு அத்தாயைப் பிறப்பிடமாகவும், ,வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பரந்தாமன் அவர்கள் 20-06-2017 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா தெவ்வனை தம்பதிகளின் அன்பு மகனும், 
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
 பாலகிருஸ்ணன் , சிவஞானம் ,நேசரத்தினம் , சந்திரா ,இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரனும் 
ஜெயபாலசந்திரன் (சுவிஸ் ) காலஞ்சென்ற ஜெயபாலினி , பாவனி (ஜேர்மனி ) ஜெயக்குமார் ,மற்றும் ஜெயமோகன் , ஜெயசித்திரா (லண்டன் ) ஜெயமுரளி (ஜேர்மனி ) ஜெயராதா (இந்தியா) ஆகியோரின் 
அன்புத் தந்தையும்,
மீரா (சுவிஸ் ) சச்சிதானந்தன் (ஜேர்மனி ) லோகேஸ்வரன் (லண்டன் ) காலஞ்சென்ற சிறிகரன் ஆகியோரின் அன்பு
 மாமனாரும்,
அபிநயா ,அபிராம் ,(ஜேர்மனி )யனகரன் , யதுஷன் (சுவிஸ் ) வித்திகா ,நிதுஷா (இந்தியா )ஆகியோரின் அன்புப் பேரனும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ஜெயபாலச்சந்திரன் -(சுவிஸ் )0041786662474
ஜெயமோகன் - (இலங்கை )0094 771894854
ஜெயமுரளி (ஜேர்மனி )004915738118021
இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

திங்கள், 19 ஜூன், 2017

மரண அறிவித்தல் திரு பொன்னர் தங்கராசா.18.06.17

பிறப்பு : 28 யூன் 1940 — இறப்பு : 18 யூன் 2017

யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னர் தங்கராசா அவர்கள் 18-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னர், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

தயாவதி, குணராஜன், அருள்குமரன், கவியரசன்(கனடா), காலஞ்சென்ற கவீந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குணரட்ணம், திரவியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசேந்திரம், நிபாஜினி, மீரா, ஜானுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிதர்சன், துஷாந், அபிசகன், பிரணவி, சகானா, அயுசன், நிதுசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புத்தூர் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
இராசமலர்(மனைவி) — இலங்கை
தொலைபேசி:    +94213735890
தயாவதி(மகள்) — கனடா
தொலைபேசி:    +14162658627
குணராஜன்(மகன்) — கனடா
தொலைபேசி:    +14164312940
அருள்குமரன்(மகன்) — கனடா
தொலைபேசி:    +14168252013
கவியரசன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:    +16476802013
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 5 ஜூன், 2017

மரண அறிவித்தல் திரு கார்த்திகேசு அருளம்பலம்

தோற்றம் : 20 ஒக்ரோபர் 1928 — மறைவு : 26 மே 2017
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி, ஊரெழு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு அருளம்பலம்(அருணாசலம்)  (Marketing Department - Colombo)அவர்கள் 26-05-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், முத்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன்(சுவிஸ்), அனுஷா(பிரித்தானியா), தனுஷா(பிரித்தானியா), சுதாகரன்(பிரித்தானியா), ஜீவாகரன்(பிரித்தானியா), றஜீகரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், மாசிலாமணி, பவளமணி, மற்றும் செல்வரட்ணம்(கனடா), அரசரட்ணம்(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), திலகவதி(இலங்கை) ஆகியோரின் 
அன்புச் சகோதரரும்,
ஸ்ரீராஜன்(பிரித்தானியா), சுந்தரேசன்(பிரித்தானியா), விஜிலதா(சுவிஸ்), துஷாந்தா(பிரித்தானியா), லதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், காசிபிள்ளை, தனபாலன், மற்றும் யோகம்மா, ஜெயலஷ்மி, சிவக்கொழுந்து, இரட்ணசிங்கம், காலஞ்சென்றவர்களான அன்னபூபதி, பாலச்சந்திரன், தனபூபதி, மற்றும் சொர்ணமலர், பூர்ணசந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியா, திவ்வியா, திவ்வியாங்கா, நிர்யா, கர்ஜன், காருஜன், ஷோபிகா, சிந்துஜா, சந்தோஷ், அனுஜன், அருஷா ஆகியோரின் 
பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் .

வீட்டு முகவரி: 
110 Middletons Ln, 
Norwich NR6 5SR, 
UK.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/06/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: St Marylebone Crematorium, E End Rd, East Finchley, London N2 0RZ, UK 
யில் நல்லடக்கம் நடைபெற்றது 
தொடர்புகளுக்கு
பிரபா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787276912
சுதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447962551287
ஜீவா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447459636290
றஜீ — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447904020408
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>

சனி, 3 ஜூன், 2017

கதலி வாழைப்பழங்களின் விலை யாழில் திடீர் சரிவு

  
யாழ். மாவட்டத்தில் கதலி வாழைப்பழத்தின் விலையில் இன்று(03) திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தின் முக்கிய சந்தையான திருநெல்வேலி மற்றும் சுன்னாகம், மருதனார்மடம் உள்ளிட்ட சந்தைகளில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 120 ரூபா முதல் 130 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று(03) ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 40 ரூபா தொடக்கம் 60 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் யாழில் தற்போது வெள்ளரிப்பழம், பலாப்பழம், மாம்பழம் போன்ற பழ வகைகளின் பருவகாலம் ஆரம்பமாகியுள்ளமையால் இந்தப் பழ வகைகளைக் கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் அதிக ஈடுபாடு காட்டி 
வருகின்றனர்.
சந்தைகளில் வாழைக்குலைகளின் வரத்துச் சடுதியாக அதிகரித்துக் காணப்படுகின்றமையுமே இந்தத் திடீர் விலை சரிவுக்குக் காரணமென வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
யாழ். நீர்வேலி, கோப்பாய், உரும்பிராய் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாழைக்குலைகள் அதிகளவில் திருநெல்வேலிப் பொதுச் சந்தைக்கு எடுத்து வரப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>

வெள்ளி, 2 ஜூன், 2017

யாழில் மட்டும் வரட்சியால் 1 இலட்சம் பேருக்கு மேல் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் வரட்சியால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் 
மேற்படி தெரிவித்துள்ளார்.கடந்த வருடம் மழைவீழ்ச்சி குறைவடைந்ததன் விளைவாக வேலணை, ஊர்காவற்துறை,
 காரைநகர், மருதங்கேணி மற்றும் கடற்கரையை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த சுமார் 33 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரச அதிபர் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதேச செயலகங்கள் ஊடாக குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்
 குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 6 புதிய குடிநீர் தாங்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குடிநீர் விநியோக வாகனங்களின் சாரதிகளுக்கான நிதியும் எரிபொருளும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்
 தெரிவித்துள்ளார்.
நாட்டின் தென்பகுதியில் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை யாழ்.மாவட்ட செயலகம் ஆரம்பித்துள்ளதாகவும் தம்மோடு இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புவோர் மாவட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி உதவுமாறும் கேட்டு கொண்டுள்ளார்
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>

இன்று கிளிநொச்சியில் 8 மணித்தியாலங்களுக்கு மின் தடை!

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பிரதேசங்களில் இன்று மின் தடை ஏற்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காகவே இந்த மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை இந்த மின் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கிளிநொச்சி, ஐயபுரம், நாகப்படுவான், பல்லவராயங்கட்டு, வேராவில், கிராஞ்சி, வலைப்பாடு, குமுழமுனை, கரியாலைப்படுவான், அன்புபுரம், முழங்காவில், நாச்சிக்குடா, வெள்ளாங்குளம், 651 ஆவது பிரிவு இராணுவ முகாம், நாச்சிக்குடா கடற்படை முகாம், இயாஸ் மொகமட் ஐஸ் தொழிற்சாலை ஆகிய பகுதிகள் இந்த மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவு
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>வியாழன், 1 ஜூன், 2017

இன்று முதல் கட்டுநாயக்க சர்வதேச விமன நிலையத்தில் புதிய பாதுகாப்பு !

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமன நிலையத்தில் இன்று முதல் புதிய பாதுகாப்பு நடைமுறை அமுலாகிறது.
அதற்கமைய விமான நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இந்த நடைமுறை செயற்படுத்தப்படுவதாக விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்.ஹெட்டியாராச்சி
தெரிவித்துள்ளார்
புதிய பாதுகாப்பு நடைமுறைக்கமைய விமான பயணி ஒருவர் தங்கள் கைப்பையினுள் கொண்டு செல்ல கூடிய திரவ வகை, ஸ்ப்ரே வகை மற்றும் ஜெல் வகைகளின் அளவுகளை குறைப்பதற்கு
 தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீர், பான வகைகள், சுப், ஜேம், சோஸ், திரவ வகைகள், க்ரீம், மருந்துகள், எண்ணெய், வாசனை திரவியம், ஸ்ப்ரே, ஜெல் வகைகள், காற்று அழுத்தம் அதிகமாக கொடுக்கும் கொள்கலன்கள், சவரநுரை வகைகள், வேறு நுரை வகைகள், கண் இமைக்கான அழகு சாதன வகைகள், அறை வெப்பங்களை பராமரிக்கும் திரவங்கள், நீராவி திரவ வகை பொருட்கள் இதற்குள் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய குறித்த அனைத்து பொருட்களும் ஒரு லீற்றருக்கு மேல் அதிகரிக்க கூடாது. அத்துடன் திரவத்திலான கொள்கலன்கள் 20X20 என்ற அளவில் வெளிப்படையாக தெரியும் வகையிலும் 
மீண்டும் மூடிக்கொள்ள கூடிய பொலித்தீன் பைகளில் மூட வேண்டும். ஒரு பயணியினால் அந்த பை ஒன்று மாத்திரமே கொண்டு செல்ல முடியும்.
இதற்கு மேலதிகமாக கொண்டு செல்லும் திட்டம் இருந்தால் அவற்றினை விமான டிக்கட் ஒப்படைக்கும் இடத்தில் ஒப்படைக்கப்படும் பயண பைகளுடன் எடுத்து செல்ல முடியும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>தொடர்ந்து இதை 3 மாதம் சாப்பிட்டால் நோய்கள் மறையுமாம் ?

அரிக்காவில் சுமார் 70% குழந்தைகள் வைட்டமின் டி குறைபாட்டினால் அவஸ்தைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உடலின் அத்தியாவசிய செயல்பாட்டிற்கு வைட்டமின் டி மிகவும் இன்றியமையாதது. இது பல நோய்களான புற்றுநோய், 
இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும். Take Vitamin D For 3 Months And All Diseases Will Disappear! VIDEO : Amla Juice and its 5 Health Benefits in Summer Amla Juice and its 5 Health Benefits in Summer Lifestyle & Fashion Powered by எனவே ஒவ்வொருவரும் அன்றாடம் போதிய அளவு வைட்டமின் டி கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
அதற்கு பல வழிகள் உள்ளன. அதில் வைட்டமின் டி நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வது, அதிகாலை சூரியக்கதிர்கள் உடலில் படும்படி உடற்பயிற்சியில் ஈடுபடுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் வைட்டமின் டி வைட்டமின் டி வைட்டமின் டி கரையக்கூடிய கொழுப்பு வைட்டமின். மற்ற வைட்டமின்களை விட இது முற்றிலும் 
மாறுபட்டது. மேலும் இந்த வைட்டமின் டி இயற்கையாகவே உடலில் உற்பத்தி செய்யப்படும். எப்படி வைட்டமின் டி குறைபாட்டை அறிவது? எப்படி வைட்டமின் டி குறைபாட்டை அறிவது? வைட்டமின் டி குறைபாட்டை இரத்த பரிசோதனையின் மூலம் மட்டுமே கண்டறிய முடியும். வைட்டமின் டி
 நிறைந்த உணவுகள் வைட்டமின் டி நிறைந்த
 உணவுகள் வைட்டமின் டி சத்தானது மீன்கள், பால் பொருட்கள், ஆரஞ்சு ஜூஸ், சோயா பால், செரில்கள், மாட்டின் கல்லீரல், சீஸ், முட்டை மஞ்சள் கரு போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளது. வைட்டமின் டி அவசியம் வைட்டமின் டி அவசியம் வைட்டமின் டி உடலில் போதுமான அளவில் இருந்தால், அது எலும்புகளால் 
எளிதில் கால்சியத்தை உறிஞ்ச உதவும். ஒருவருக்கு வைட்டமின் டி குறைபாடு தீவிரமாக ஆரம்பித்தால், அதனால் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் வைட்டமின் டி குறைபாடு குறிப்பிட்ட சில நோய்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. இப்போது அது என்ன பிரச்சனைகள் என காண்போம். ஆஸ்துமா ஆஸ்துமா அன்றாடம் போதிய அளவு வைட்டமின் டி சத்து உடலுக்கு கிடைத்தால், அது நுரையீரலை வலிமைப்படுத்தும் மற்றும் சுவாச பாதையில் உள்ள பிரச்சனைகளைத் தடுக்கும்.
 ஆஸ்டியோபோரோசிஸ் ஆஸ்டியோபோரோசிஸ் வைட்டமின் டி மற்றும் கால்சியம் எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, வலிமைப்படுத்தும். இதனால் எலும்புகள் பலவீனமாவது மற்றும் எலும்பு முறிவு ஏற்படுவது தடுக்கப்படும். உட்காயம் உட்காயம் வைட்டமின் டி குறைபாடு இருந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, அதனால் அடிக்கடி உடல்நல குறைவால் அவஸ்தைப்படக்கூடும். இதய ஆரோக்கியம் இதய ஆரோக்கியம் இதய நோய் மற்றும் இரத்த அழுத்தம்
 வைட்டமின் டி குறைபாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஆகவே இப்பிரச்சனைகள் வராமல் இருக்க தினமும் வைட்டமின் டி கிடைக்குமாறு செய்யுங்கள். மன இறுக்கம் மன இறுக்கம் முக்கியமாக உடலில் வைட்டமின் டி குறைவாக இருந்தால், அது மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தி, மன இறுக்கத்தால் அவஸ்தைப்படச் செய்யும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன்
 படிக்க க்ளிக் செய்யவும்
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>