துயர் பகிர்வு-மலர்வு -05-02-1933-உதிர்வு -30 06 2024.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பில் வசித்துவருபவரான திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் தனது 91வது கொழும்பில் சுகயீனம் காரணமாக காலமானார்.
அன்னார் தமிழரசு கட்சியின் பெருந்தலைவரும், தமிழ் தேசிய கூட்டணியின் தலைவரும் ஆவார்.
பாராளுமன்றத்தின் வயது மூத்த உறுப்பினர் ஆவார்.
அவரை எல்லா வெளிநாட்டு தலைவர்கள் அவரது இல்லத்தில் வந்து சந்தித்து போவார்கள்.
தனது காலத்தில் அரசியல் தீர்வை பெற்று விடவேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தவர் ஆனால் அது கை கூடவில்லை என்பது மிக
கவலையாகும்.
இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா. சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தமை
குறிப்பிடத்தக்கது.
மேலும் சம்பந்தனின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!