siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 28 மார்ச், 2017

இன்று அதிகாலை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று அதிகாலை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் தற்போது சிறந்த பெறுபேறுகளை பெற்ற 6 பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.
சிறந்த பெறுபேறுகளை பெற்ற 10 மாணவர்களில் 7 மாணவர்கள் பெண்கள் பாடசாலையில் கல்வி கற்பவர்களாகும்.
அந்த 10 பேரும் நகர பாடசாலைகளில் கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாகும்.
அதற்கமைய கொழும்பு விஷாக்கா பெண்கள் பாடசாலை மாணவி அனுகி சமத்கா பெஸகுவேல் முதலாம் இடத்தை
 பெற்றுள்ளார்.
கண்டி மஹாமாயா பெண்கள் பாடசாலை மாணவி எஸ்.எம்.முனசிங்க இராண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
கொழும்பு ஆனந்தா வித்தியாலயத்தின் ஆர்.எம்.சுகத் ரவிது மற்றும் மாத்தரை ராஹுல வித்தியாலயத்தின் திமுத் என்ற மாணவர்கள் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.
கம்பாஹா ரன்னாவலி பெண்கள் வித்தியாலயத்தின் மாணவி எச்.பீ.பபசரா மலிதி குமாரி நான்காம் இடத்தை பெற்றுள்ளார்.
கொழும்பு தேவி மகளீர் பாடசாலையின் டீ.எம்.ரனும் திஸரணி நாணயக்கார, காலி சங்கமித்த மகளீர் பாடசாலையின் ஏ.தம்ஸரா மேதாவி மற்றும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர் ஏ.அபினந்தன் ஆகியோர் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளனர்.
காலி சவுத்லேன்ட் வித்தியாலயத்தின் ரன்தினி டி சில்வா மற்றும் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் ஈ.ஏ.யசாரா உமாஷி ஆகிய மாணவர்கள் ஆறாம் இடத்தை பிடித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 17 மார்ச், 2017

வர்த்தக நிலையம் உடைத்து வவுனியாவில் திருட்டு!


வவுனியாவில் மருந்தக விற்பனை நிலைமொன்று உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள மருந்தக விற்பனை நிலைமொன்றில் இன்று அதிகாலை
 இடம்பெற்றுள்ளது
சம்பவம் தொடர்பில் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பா டு 
செய்துள்ளார்.
நேற்று (16) இரவு 9.00மணியளவில் வழமை போன்று வர்த்தக நிலையத்தினை பூட்டி விட்டு சென்றதாகவும், இன்று (17) காலை 7.00 மணியளவில் வர்த்தக நிலையத்தினை திறந்த போது பின் பக்க வாயிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததாகவும் பணம் திருடப்பட்டுள்ளதாகவும்
இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வாகனவாகனத்தை போதையில் செலுத்தியவருக்கு 24 ஆயிரம் ரூபா தண்டம்


ஆவணங்கள் எதுவுமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்தி
 பொலிஸாரின் சமிக்ஞையை மதிக்காத நபருக்கு 24 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து, சாவகச்சேரி நீதிமன்றம் 
தீர்ப்பளித்துள்ளது.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய சாலைப் போக்குவரத்துப் பொலிஸார்  அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சமிக்ஞை காட்டியபோது நிறுத்தாமல் சென்றதால் துரத்திப் பிடித்து சோதனையிட்டபோது அவரிடம் சாரதி 
அனுமதிப் பத்திரம் வாகன வரிப் பத்திரம் காப்புறுதிப் பத்திரம் ஆகியவை இல்லாத நிலையில் மதுபோதையில் வாகனம் செலுத்தியுள்ளார் என்பதனைக் கண்டறிந்தனர்.
குறித்த நபருக்கு எதிராக பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்றுமுன்தினம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. 
குறித்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து வழக்கினை விசாரித்த நீதிவான் ஐந்து குற்றங்களுக்குமாக 24 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து, தீர்ப்பளித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

மானிப்பாயில் வீட்டில் வாள் வைத்திருந்த இளைஞர் கைது!

யாழ் – மானிப்பாய் பகுதியில் வாள் வைத்திருந்த இளைஞர் ஒருவர் அவரது வீட்டில் வைத்து  யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மானிப்பாய் வீதியை சேர்ந்த பிரணவன் என்ற 19 வயது இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டவர் ஆவார்.
இவரிடம் இருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக, யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் நிலைய உபபொலிஸ்
 பரிசோதகர் தெரிவித்தார்

யாழில் மது போதையில் வாகனம் செலுத்தியவர் கைது?

மது போதையில் வாகனத்தை செலுத்திய நபரொருவர் யாழ் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரேலியா பகுதியை சேர்ந்த ரவிந்திரன் சோபனபாலா என்ற 25 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டவர் ஆவார்.
குறித்த நபர் நேற்று இரவு 11.30 மணியளவில்  யாழ் பிரதான வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையகத்திலிருந்து யாழ் நோக்கி வந்த கனரன வாகனம் ஒன்றினை மறித்த  போக்கு வரத்து பொலிஸார் அதனை பரசோதித்த சமயமே சாரதி மது போதையில் வாகனம் செலுத்தியமை 
கண்டுபிடிக்கப்பட்டது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


புதன், 15 மார்ச், 2017

மரணஅறிவித்தல் திருமதி பரமலிங்கம்.புஸ்பமலர்.15.03.17


உதிர்வு:15.03.2017  
யாழ்  நீர்வேலியை பிறப்பிடமாகவும்  கனடாவை   வசிப்பிடமாகக்கொண்ட  திருமதி:பரமலிங்கம்.புஸ்பமலர். றாம் இந்துவின் மாமியின் ( Ram )  அவர்களின் தாயார்-  கனடாவில். 15.03.2017.புதன்கிழமை..அன்று காலமானார்
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம
தகவல்
குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 14 மார்ச், 2017

மரண அறிவித்தல் திரு கந்தையா சுப்பிரமணியம்

பிறப்பு : 29 மே 1932 — இறப்பு : 12 மார்ச் 2017
யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சுப்பிரமணியம் அவர்கள் 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராசமணி(முத்தம்மா) அவர்களின் கணவரும்,
இரஞ்சினி, சாந்தினி, இரவீந்திரன், காலஞ்சென்ற மகேந்திரன், சுபாஷினி ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சின்னம்மா, சின்னத்துரை, மாணிக்கம், மற்றும் மயில்வாகனம் ஆகியோரின் சகோதரரும்,
ரவீந்திரராஜா, மதிவதனா ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, இராமலிங்கம், சுப்பிரமணியம், கனகரத்தினம் ஆகியோரின் மைத்துனரும்,
விதுஷன், சமுத்திரா, சுவீகரன், சுபர்நிகா, கார்திகன், விருந்தா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94763328804
இரஞ்சினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774020910

திங்கள், 13 மார்ச், 2017

அக்கா, தங்கையின் வாழ்வை முகநூலில் சீரழித்த இளைஞர்கள் விளக்கமறியலில்!

வெல்லம்பிட்டி, வடுகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்த ரசாஞ்சன என்ற ஜனக்க சுதர்ஷன மற்றும் ஜேசுபால என்ற தில்ஷான் ஆகிய இளைஞர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தெரியவருவதாவது,
முகநூலில் அறிமுகமான அக்கா மற்றும் தங்கையின் நிர்வாணப் படங்களை இணையத்தளத்தில் வெளியிடப் போவதாக கூறி இரண்டு இளைஞர்கள் அவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு 
உட்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த இரண்டு இளைஞர்களையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிறந்த நாள் பரிசாக தந்தை வழங்கிய நவீன தொலைபேசியில் முகநூலை பயன்படுத்திய போது முதல் பெண்ணுக்கு ஒரு இளைஞன் அறிமுகமாகியுள்ளார்.
இளைஞனின் கோரிக்கைக்கு அமைய பெண் தனது நிர்வாணப் புகைப்படத்தை வழங்கியுள்ளார். அதனை இணையத்தளத்தில் பதிவேற்ற போவதாக கூறி அச்சுறுத்தி பணத்தையும் பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனையடுத்து பெண்ணின் தங்கையுடன் உரையாடியுள்ள சந்தேக நபர் அக்காவின் புகைப்படத்தை இணையத்தளத்தில் பதிவேற்ற போவதாக கூறியுள்ளார்.
அக்காவை காப்பற்ற முன்வந்த தங்கையை கிரிபத்கொட பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று இரு இளைஞர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக கூறிய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தவிட்டதுடன் விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

நான்கு வயது சிறுமியை மது போதையில் மோதி தள்ளிய வைத்தியர் !

கண்டி பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் 4 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் படுகாயத்திற்கு உள்ளான மூவரும் சிகிச்சைகளுக்காக கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி பொதுமருத்துவமனையில் வைத்தியராக பணிபுரியும் ஒருவரின் காரே முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.
விபத்தினை தொடர்ந்து, குறித்த காரை செலுத்தி வந்த வைத்தியர் கைது செய்யப்பட்டதுடன் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட வைத்தியர் மதுபோதையில் இருந்தமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் கூறியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 12 மார்ச், 2017

மரண அறிவித்தல் திரு சோமசுந்தரம் கருணாகரன்



 
மலர்வு : 2 நவம்பர் 1967 — உதிர்வு : 8 மார்ச் 2017
யாழ். கச்சாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும், மீசாலையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கருணாகரன் அவர்கள் 08-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சோமசுந்தரம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
மனோ, சிறி, மதி, சிவமதி(சுதா), ரவி, தர்ஷா ஆகியோரின் 
அன்புச் சகோதரரும்,
தெய்வேந்திரன், வினாயகமூர்த்தி, பாஸ்கரன், மதன், சுபா, சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தகவல்
ரூபன்
தொடர்புகளுக்கு
சுகந்தா — இலங்கை
செல்லிடப்பேசி: +94768814392
ரூபன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787177798
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 8 மார்ச், 2017

பட்டப்பகலில் கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் திருட்டு !

கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைந்துள்ள கிளிநொச்சிப் பொதுச்சந்தை வளாகத்தினுள் நிறுத்திய வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கில் நேற்று முன்தினம் காலை 10.50 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவரினால் திருடப்பட்டுள்ளது.
இவ் திருட்டுச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று
 கரைச்சிப்பிரதேச சபையின் அனுமதியுடன் குறித்த வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவியின் காணொளி பெறப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 7 மார்ச், 2017

கர்ப்பிணிகள் ,குழந்தைகள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வரவேண்டாம்?

யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலைக்கு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடெங்கிலும் அசாதாரண காலநிலைகள் காரணமாக பல தொற்று நோய்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக (டெங்கு, சளிசுரம்-இன்புளூவென்சா வகைக் காய்ச்சல் மற்றும் பல்வேறு சுவாசத் தொற்று) தொடர்பில் வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் வைத்தியசாலை விடுதியில் இருக்கும் நோயாளரைப் பார்வையிடுவதற்கு வருகைத் தருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக கர்ப்பிணிகள் , குழந்தைகள் எளிதில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகிவிடுவார்கள். இதனால் அவசியமற்ற வகையில் இவர்கள் வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


மோட்டார் சைக்கிள் நின்ற லொறியுடன் மோதி ஒருவர் படுகாயம்?

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சமடத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கல்முனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று தீடீரென பழுதடைந்து நின்றதையடுத்து பின்னால் வந்து 
மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியமையினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திவந்த 54 வயதுடைய பெரியகல்லாற்றைச் சேர்ந்த கே.கிருபாகரன் என்பவரே படுகாயமடைந்துள்ளார்
இதேவேளை படுகாயமடைந்த நபரை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்
இதேவேளை படுகாயமடைந்த நபரை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 5 மார்ச், 2017

குடும்பஸ்தர் மீது நெல்லியடிப் பகுதியில் பொலிஸார் கொடூரத் தாக்குதல்!

பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து குடும்பஸ்தர் ஒருவர் மீது பொலிஸார் கடுமையாக தாக்குதல் நடத்தியதில் உடல் உபாதைக்குள் உள்ளான குடும்பஸ்தர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் பொலிஸாருக்கும் பிரஸ்தாப நபருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் போதே குடும்பஸ்தர் தாக்குதலுக்குள்ளா கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் துன்னாலையைச் சேர்ந்த தம்பிராசா தங்கராஜா (வயது-39) என்ற குடும்பஸ்தரே தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை 
பெற்று வருகின்றார்.  
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


காவாலிகளுக்கிடையில் சாவகச்சேரியில் மோதல்- வாள் வெட்டுக்கு!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வாள்வெட்டாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் சாவகச்ரேி, சோலையம்மன் கோவிலடியில் இன்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
சோலையம்மன் கோவிலடி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு வாள்வெட்டாக மாறியுள்ளது.
இதில் வாள்வெட்டுக்கு இலக்கான இருவரில் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றையவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


டெங்கு நோய்த் தாக்கி யாழில் இளம் தாய் நந்தகுமார் லக்ஷி பலி!

டெங்கு நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்கு சென்ற இளம் தாய் ஒருவர் நேற்று முன்தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் சிவப்பிரகாசம் வீதியை சேர்ந்த நந்தகுமார் லக்ஷி (வயது 34) என்ற 2 பிள்ளைகளின் தாயாரே மேற்படி உயிரிழந்தவராவார். 
குறித்த பெண்னுக்கு கடந்த 4 நாட்களாக காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் இருந்தகாரணத்தால்  தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இருப்பினும் நேற்றைய தினம் கடுமையான காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்கு வந்த இவர், வெளிநோயாளர் பிரிவில்  வைத்தியரை சந்திக்க காத்திருந்த போதே உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையின் போது மேற்படி பெண் டெங்கு நோய் தாக்கத்தால் உயிரிழந்திருந்தமை 
உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
மேற்குறித்த இறப்பின் மரண விசாரணையை யாழ் போதனா வைத்திய சாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
யாழ் மாவட்டத்தில் கடந்த வருடங்களை விட இந்தவருடம் டெங்கு நோய் தாக்கம் அதிகளவில் காணப்படுவதாகவும் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் சுகாதாரத்துறையினர் எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 3 மார்ச், 2017

உண்ணாவிரதப் போராட்டத்தில்இந்தோனேசியாவில் ஈடுபட்டு வரும் ஈழத்தமிழர் ஒருவரின் உடல் நிலை மோசமம்

 உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்தோனேசியாவில் ஈழத்தமிழர் ஒருவரின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட ஈழதமிழர்கள் நான்காவது நாளாகவும் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவருக்கே உடல் நிலை 
பாதிக்கப்பட்டுள்ளது
குறித்த நபர் மொடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் ஈழத் தமிழர்கள் சிலர் இந்தோனேசியாவில் அகதிகளாக தஞ்சம் கோரியுள்ளனர்.
இவ்வாறு புகலிடம் கோரிய யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் வன்னி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 350 ஈழத்தமிழர்கள் குடும்பங்களாகவும், தனி நபர்களாகவும் இந்தோனேசியாவின் மெடான் பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களின் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு நாட்டுக்கு திருப்பியனுப்பப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தம்மை திருப்பி அனுப்பவேண்டாம் எனவும் அகதி அந்தஸ்து வழங்கி வேறு நாடுகளில் தம்மை மீள்குடியேற்றுமாறும் குறித்த மக்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது உணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், உலகத் தமிழர்கள் அனைவரும் எமது மக்களின் போராட்டத்திற்கு ஆதரவுதருமாறு 
கேட்டுக்கொண்டுள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

இலங்கை வருகின்றது சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவின் அதிவேக கப்பல்!!

 !அமெரிக்க கடற்படையின் அதிவேக கப்பலான ‘யு.எஸ்.என்.எஸ் போல் ரிவர்’ (USNS Fall River) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி வருகைத்தருகின்றது.
சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி இந்தக் கப்பல் நேற்று புறப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் முதலாவது மனிதாபிமான மற்றும் அனர்த்த, நிவாரண முன்னாயத்த ஒத்திகையை மேற்கொள்வதற்காக, அமெரிக்க கடற்படையின் இந்த அதிவேக போக்குவரத்துக் கப்பல் ஹம்பாந்தோட்டை நோக்கி வருகின்றது.
அவுஸ்ரேலியா, ஜப்பான், தென்கொரியா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 200 இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகள் இந்த ஒத்திகையில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த ஒத்திகையில் யுஎஸ்என்எஸ் போல் ரிவர் உதவிக் கப்பலாகப் பங்கேற்கவுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையை சீனா குத்தகைக்குப் பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில் அமெரிக்க கடற்படைக் கப்பல் இங்கு ஒத்திகையை மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 1 மார்ச், 2017

மாணவி சிறுநீரை அடக்கியதால் சிறுநீரகமே செயலிழந்து பறித்தன மரணம்

15 வயது சிறுமிக்கு காய்ச்சல் என்று சில நாட்கள் முன்னதாக அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தனர்.
அன்று மருத்துவரின் அறிவுரைப்படி அச்சிறுமிக்கு இரத்தப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
அன்று தான் ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை மருத்துவரும் அச்சிறுமியின் பெற்றோரும் அறிய வந்தனர்.
என்னவெனில் அச்சிறுமியின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது என்பது.
அச்சிறுமியின் பெற்றோர் கலங்கி விட்டனர்.

எவ்வாறு இந்த பெரிய சங்கடம் உருவானது என்று மருத்துவர் அறிய அச்சிறுமியிடம் விசாரித்தபோது தான் தெரிந்தது அச்சிறுமி பள்ளி செல்லும் பொதெல்லாம் சிறுநீரை கழிக்கவே மாட்டாராம்.

ஏனெனில் சிறுநீர் கழிக்க அச்சிறுமிக்கு இருந்த தயக்கமும் அப்பள்ளியில் அதற்கான வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்ததுமே இதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.
சிறுநீரை அடக்கும் இந்த பழக்கத்தால் அச்சிறுமியின் சிறுநீர்ப்பாதையில் தொற்று ஏற்பட்டு இறுதியில் சிறுநீரகமே செயலிழந்து போனது தான் கொடூரத்தின் உச்சம்.
அதைவிட கொடூரம் என்னவெனில் நான் சந்தித்த இரண்டாவது நாள் அச்சிறுமி மரணத்தையும் தழுவி விட்டாள் என்பது மிகுந்த மன வேதனைக்குள்ளாக்கி விட்டது.
பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கழிவறைகளை கண்டீர்களானால் நம் வயிற்றுக்குள் உணவு செல்லாது.
அவ்வளவு கொடூரமாக இருக்கிறது கழிவறைகள்.
அது மட்டுமில்லாமல் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சிறுநீர் கழிக்கும் இடைவெளியை வெறும் 10 நிமிடத்திற்கு ஒதுக்கி 400 மாணவர்களை அங்கு தள்ளுகின்றனர்
இதனால் பல மாணவர்கள் கூச்சப்பட்டுக் கொண்டு இயற்கை உபாதைகளை கழிக்காமலே அடக்கிக் கொள்கின்றனர்.
இதனால் குழந்தைகள் சிறுநீர் தொற்றிற்கு உள்ளாகி உயிரை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
அன்பர்களே தயவு செய்து இந்த பதிவை முடிந்த அளவு உங்கள் நண்பர்கள் மற்றும் குழுக்களுக்கு பகிர்ந்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுங்கள்.
மேலும் அரசிற்கும், பள்ளி கல்வித்துறைக்கும், அனைத்து பள்ளிகளுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் இப்பதிவின் மூலம் கோரும் வேண்டுகோள் என்னவெனில்,
1. ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் மாணவர்கள் சிறுநீர் கழிப்பதை முறையாக கொண்டுள்ளனரா என்பதை அக்கறையுடன் வினவ வேண்டும்.

2. ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை தங்கள் குழந்தை போல் பாவித்து இம்மாதிரியான அபாயத்திற்குள் சென்று விடாமல் பாதுகாக்க முனைய வேண்டும்.
3. அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு பள்ளிக் கல்வித்துறை மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை விட்டு கழிப்பறை இல்லாத பள்ளிகளின் கல்லூரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும்.
மேலும் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நேரத்தை மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஒதுக்கவும் 
ஆணையிட வேண்டும்.
4, பெற்றோர்கள் தவறாது குழந்தைகள் இயற்கை உபாதைகளை சரியான நேரத்தில் கழிக்கின்றனரா என்பதை தீர ஆராய வேண்டும்.
5. பெற்றோர்கள் இவ்விஷயத்தை பற்றி பள்ளிகளிடமும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
நமது நாடு மற்றம் வீட்டின் வருங்காலத் தூண்களை சிறுநீரகமற்ற தூண்களாக மாற்றி வளரும் பயிர்களை முளையிலேயே கருகவிட்டு 
விடாதீர்கள்.
*”சிறுநீர் மட்டுமல்லாமல் இயற்கை உபாதைகள் (மலம், தும்மல், இருமல், தாகம், பசி, விக்கல், அபான வாயு…)
 எதையும் அடக்க கூடாது.”*