யாழ் உரும்பிராய் ஞானவைரவர் கோவிலடியை பிறப்பிடமாகவும் அச்சுவேலியை வதிவிடமாககொண்டவரும், அச்சுவேலி வைத்தியசாலையில் பிரபலமாக ஆங்கில மருத்துவசேவையை வழங்கியவந்தவரும் பின்பு அச்சுவேலி பத்தமேனியிலும் மற்றும் அச்சுவேலி வல்லை வீதியில் நோயாளர்தங்குமிடத்தை அமைத்து பராமரித்து வந்தார் தனியார் மருத்துவசேவையில் சகல நோய்களுக்கும் மிகச்சிறந்த முறையில் வயித்தியம் செய்து நவற்கிரி.தோப்பு பத்தமேனி அச்சுவேலி மக்களின் பாராட்டை பெற்ற வைத்தியர் பொன்.சிவபாலன் அவர்கள் தனது 80 வயதில் காலமானார்.
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணம் செய்த போது கிளிநொச்சியில்(25.02.2020). நேற்றிரவு இவர் மாரடைப்பினால்
காலமாகி யுள்ளார்
அன்னாரின் இறுதிக்கிரிகை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்
.. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
வீட்டு முகவரி
-அச்வேலி