siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 31 ஜூலை, 2020

மாத்தறையில் பெற்றோரின் அசமந்தத்தால் விபத்துக்குள்ளான குழந்தை



மூன்றரை வயதுக் குழந்தையை முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் ஒன்று
மாத்தறை வலஸ்ஸமுல்ல பாடசாலைக்கு அருகில் 30-07-20.
அன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த குழந்தையின் தந்தையின் முச்சக்கர வண்டியானது ரயர் மாற்றுவதற்காக ஓரமாக நிற்பாட்டப்பட்டிருந்த வேளை, குழந்தை முச்சக்கரவண்டியிலிருந்து குதித்து சாலையை விளையாட்டாக கடக்க முற்பட்ட போது எதிரே வந்த இன்னொரு முச்சக்கரவண்டி
மோதியுள்ளது.
மயிரிழையில் உயிர் தப்பிய குறித்த குழந்தை பலத்த காயங்களுக்கு உட்பட்டு வலஸ்ஸமுல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள்
தெரிவிக்கின்றன.
விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்றில்
ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
குறித்த குழந்தையின் பெற்றோரின் அசமந்தப் போக்கும் இந்த விபத்துக்கு ஒரு காரணமாக அமைகிறது. எதுவும் அறியா பிஞ்சுக் குழந்தைகளின் பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது அனைத்து பெற்றோர்களின் பொறுப்பாகும்.


வியாழன், 30 ஜூலை, 2020

அராலியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்து மதிலை உடைத்து வீழ்த்திய கார்.


யாழ்.அராலிப் பகுதியில் காருடன் துவிச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த வரதராசா நிதுசன் (வயது 19) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த இளைஞன் அம்புலன்ஸ் மூலம்யாழ்.போதனா 
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.காரானது குறித்த இளைஞனை மோதிவிட்டு வீதியை விட்டு வெளியே பாய்ந்து சுமார் 25 அடிகள் தூரத்திற்கு மதிலை இடித்து தகர்த்துள்ளது. காரின் சாரதி
 வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்திற்கான காரணம் எனப் பொலிஸார் 
கூறுகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


புதன், 22 ஜூலை, 2020

இனிபிறப்புச் சான்றிதழில் இந்த விடயங்கள் உள்ளக்கப்படாது

பிறப்புச் சான்றிதழில் தாய் – தந்தையின் திருமண விபரங்கள் மற்றும் இனம் தொடர்பான தகவல்களை உள்ளடக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பதிவாளர் நாயகம் என்.சீ. விதானகே இந்த விடயத்தினைத்
 தெரிவித்துள்ளார்.
தாய் – தந்தையரின் திருமண விபரங்கள் தொடர்பில் சமூகத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இணையம் ஊடாக பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுப்பதாகவும் 
அவர் கூறியுள்ளார்.
காணிப் பதிவு சான்றிதழையும் இணையத்தின் ஊடாக வழங்கும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனூடாக காணிப்பதிவுகளை அவசரமாக செய்து கொள்ள முடியும்  என பதிவாளர் நாயகம் என்.சீ. விதானகே 
சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


செவ்வாய், 21 ஜூலை, 2020

கம்பஹாவில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்திய ஆசிரியருக்கு கொரோனோ

 நாட்டில் கம்பஹா சுகாதார அத்தியட்சகர் அலுவலகம் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் நெருங்கி செயற்பட்ட 101 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கம்பஹா சுகாதார வைத்திய அதிகாரி சுபாஸ் சுபசிங்க தெரிவித்துள்ளார்.கந்தகாடு புனர்வாழ்வு 
நிலைய பாடசாலை ஆலோசகரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தார்.அவர் கம்பஹாவில் பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு 
நடத்தியுள்ளதாக
 வைத்தியர் சுபாஸ் தெரிவித்துள்ளனர்.குறித்த மாணவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>



ஞாயிறு, 19 ஜூலை, 2020

திருமதி தேவராசா கனகாம்பிகை 7 வது வருட நினைவு நாள் 19-07-20

யாழ்  இராசாவின் தோட்டத்தை வசிப்பிடமாகக்கொண்ட   அமரர் திருமதி தேவராசா கனகாம்பிகையின் அவர்களின் 7 வது வருட நினைவு நாள்  (நினைவஞ்சலி).
19-07-2020. காலச்சுழற்சியில் ஏழு  ஆண்டுகள் கடந்து
 போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை நித்தம் நாம் இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது 
அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் என் அப்பா பாதியிலே
 எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அம்மாவாய்  நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப
 விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம். அன்னாரின் ஆத்மாசாந்தி 
அடைய குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை 
இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் அளவெட்டி நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றன .ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் பிள்ளைகள் , சகோதரர், சகோதரிகள்.
 தகவல் குடும்பத்தினர்

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>

வெள்ளி, 17 ஜூலை, 2020

வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர அனுமதி மறுப்பு

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின்  41 இலங்கையர்களின்  சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக கமல் ரத்வத்தே மேலும் 
கூறியுள்ளதாவது,
“கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் நாற்பது இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நாட்டிலும் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு அமைய வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் சடலங்களை நாட்டிற்கு கொண்டு வர முடியாத நிலைமை காணப்படுகிறது.
இதன் காரணமாக இறுதிச்சட ங்குகளை அந்த அந்த நாடுகளிலே செய்யுமாறு அறிவிப்பு விடுத்துள்ளோம்” – என்றார்.

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>


புதன், 15 ஜூலை, 2020

நாட்டில் யாழ் உட்பட 16 மாவட்டங்களில் கொரொனா வேகமாக பரவும் அபாயம்

இலங்கையில் 16 மாவட்டங்களில் கொரோனா அபாயம் காணப்படும் நிலையில், இந்த 16 மாவட்டங்களிலும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.குறித்த 
16 மாவட்டங்களில் வடமாகாணத்தில் ஒரு மாவட்டமான யாழ்.மாவட்டமும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியிருப்பதாவது,
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பைப் பேணிய நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை 
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.கம்பஹா, பொலன்னறுவை, காலி, கொழும்பு, இரத்தினபுரி, குருநாகல், களுத்துறை, கண்டி, அனுராதபுரம், யாழ்ப்பாணம், கேகாலை, 
மொனராகலை, அம்பாந்தோட்டை, புத்தளம், 
மாத்தறை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.கொழும்பு மாவட்டத்தில், கொனஹேன, கொடிகமுவ, உடுமுல்ல, இரத்மலானை, ஒருகொடவத்தை, மெத்தேகொடை, கெஸ்பேவ, 
கொஹுவல, ராவத்தவத்த, கொழும்பு 05,08,09,10,13 மற்றும் 15, கிராண்ட்பாஸ், உஸ்வட்டகெட்டியாவ ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.மேலே
 குறிப்பிடப்பட்ட 16 மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்களை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார 
வழிகாட்டுதல்களுக்கு இணங்க செயல்படுமாறு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின செயலாளர் கேட்டுக்கொண்டார். ஏனெனில் சமூகத்தில் கொரோனா மேலும் பரவுவதனால், நாட்டில் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் .கடுமையாக பாதிக்கும்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>




யாழ் சாவகச்சேரியில் கோர விபத்து ரயிலுடன் மோதுண்டு நபர் பலி

யாழ் சாவகச்சேரிப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த யாழ் தேவி ரயில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று (15) காலை 10 மணியளவில் சாவகச்சேரி சந்தைக்கு அண்மையில் தனக்களப்பு வீதியில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவம் இன்று காலை 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கல்கிசை நோக்கிப் பயணித்த ரயிலுடனே குறித்த வயோதிபர் மோதுண்டுள்ளார்.சடலம் அடையாளங் காணப்படாத நிலையில்’கனேமுல்லை’ பகுதிக்குப் பயணிக்கவிருந்த 
ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் 
தெரிவிக்கப்படுகிறது.சடலம் சாவகச்சேரி 
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்தா, தற்கொலையா என்ற கோணத்தில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளைத் தேடி தீவிர பரிசோதனை

நாட்டில் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்து இதுவரையில் 532 வரையில் அதிகரித்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையில் நாட்டில் 14-07-20. அன்றயதினம் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
..14-07-20.அன்றயதினம்
மாத்திரம் ராஜாங்கன யாய பிரதேசத்தில் 300 இற்கும் அதிகமானோர் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதேவேளை, ராஜாங்கன யாய பிரதேசத்தில் தொடர்ந்து பீசீஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது.ராஜாங்கன-யாய கொரோனா கொத்துடன் தொடர்புடையவர்களை தேடி
 நாடு முழுவதும் பல பகுதிகளில் பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.இலங்கையில் கொரோனா தொற்றியவர் தொடர்பில் சரியான தகவல்கள் சுகாதார பிரிவினால் அறிவிக்கப்படும். போலியான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 14 ஜூலை, 2020

பிரபல ஹொலிவூட் மற்றும் சின்னத்திரை நடிகை திடீரென மாயம்

கடந்த 08 ஆம் திகதி காணாமல் போன ஹொலிவூட் நட்சத்திரம் நயா ரிவேரா நேற்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பிரபல ஹொலிவூட் மற்றும் சின்னத்திரை நடிகையான நயா நிவேரா தொலைக்காட்சி
 விருதுகள் உட்பட 10 விருதுகளை வென்றுள்ளார்.33 வயதுடைய நயா ரிவேரா பீரு ஏரியில் தனது 04 வயது 
மகனுடன் படகு சவாரி சென்ற நிலையில், காணாமல் போனார்.மகனிடம் நடத்திய விசாரணையில் தாய் தண்ணீரில் குதித்து நீந்தியதாகவும் அதன் பிறகு படகுக்கு
 திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.இதனைத்தொடர்ந்து ஆறு நாட்களாக இடம்பெற்ற பாரிய தேடுதலின் பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


ஞாயிறு, 12 ஜூலை, 2020

நாட்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபருக்கு மாற்றம்

பாடசாலை மாணவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக க.பொ.த உயர்தரப் பரீட்சைத் திகதியை மீண்டும் மாற்றுவதற்கு ஜனாதிபதி கோத்தபாய இணக்கம் தெரிவித்துள்ளார்.கண்டியில் 11-07-20.அன்று   
இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் 
கலந்து கொண்ட ஜனாதிபதியிடம், உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு பிற்போடுமாறு மாணவர்கள் சிலர் கோரிக்கை
 விடுத்திருந்தனர்.
இதற்கு உடனே பதிலளித்த ஜனாதிபதி, இந்த விடயத்தை உடனே கல்வி அமைச்சிடம் கொண்டு போய் சேர்ப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


நாட்டில் அனைத்துப் பாடசாலைகளும் மீள மூடப்படவுள்ளன

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ம் அலை என கருதப்படும் கொரோனா நிலைமை காரணமாக அனைத்து அரச பாடசாலைகளும் நாளை .13-07-20.முதல் 17ம் திகதி வரை மூடப்படும் என்று 
கல்வி அமைச்சு 12-07-20.  இன்று  முதல் 
இந்த நடைமுறையை தனியார் கல்வி நிறுவனங்கள், சர்வதேச பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்பு நிலையங்கள் அனைத்தும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அமைச்சு 
தெரிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>

நாட்டில் பேரூந்து கட்டணத்தை கிலோமீற்றருக்கு பத்து ரூபாவாக அதிகரிக்ககோரிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரையில் பேருந்து துறைக்கு பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.இந்நிலையில், அரசாங்கத்திடம் இருந்து எந்தவொரு 
கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்றால் பேருந்துகள் பயணிக்க முடியாதென சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.பயணிகள் பேருந்துகள் பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீற்றருக்கும் 10 ரூபாய் கொடுப்பனவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான கடிதம் 
ஒன்று 09-07-20.அன்று ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் காரணமாக ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை
 ஏற்றுவதற்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து சங்கம் அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு வெளியிட்டமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 11 ஜூலை, 2020

மீசாலையில் வலிப்பால் சாவடைந்த முதியவர்

யாழ் தென்மராட்சி – மீசாலை வடக்கை சேர்ந்த முதியவர் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு சாவடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (11) காலை கொடிகாமம் மிருசுவில் பகுதியில் இடம்பெற்றது.
வலிப்பு நோயாளியான இவரை நித்திரை விழிக்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்தபோதும் தனது குலதெய்வம் கோவில் வருடாந்த உற்சவத்தில் கலந்து கொண்டு
 இரவு நித்திரை விழித்திருந்தார் எனவும், இன்று காலையில் வலிப்பு ஏற்பட்டு சாவடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மீசாலை வடக்கு புத்தூர் சந்தியில் தற்காலிகமாக வசிக்கும் வீரசிங்கம் தெய்வேந்திரம் (61-வயது) என்பவரே இவ்வாறு 
சாவடைந்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>


வெள்ளி, 10 ஜூலை, 2020

நாட்டில் கொரோனா காலப்பகுதியில் செலுத்தாத தவணைப் பணத்திற்கு 7 வீத வட்டி

இலங்கையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய தகவல் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசாங்கம் வழங்கிய சலுகைக் காலத்தில் வாடிக்கையாளர்கள் செலுத்தாத கடன் தவணைப் பணத்திற்கு வட்டி அறவிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
.அவ்வாறு செலுத்தாத தவணை பணத்திற்கு மேலதிகமாக நூற்றுக்கு 7 சதவீத அதிகபட்ச வட்டியை வசூலிக்க வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.புதிய 
நிதிக் கொள்கை மதிப்பாய்வு தொடர்பில் கருத்த வெளியிட்ட இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட தலைவர் நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும், வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு, கடனை புதுப்பித்து மாத்திரமே இந்த மேலதிக வட்டியை அறவிட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரணஅறிவித்தல் அமரர் இளையதம்பி ஜெகதீஸ்வரன்.09-07-20

தோற்றம்-14-02.1975 — மறைவு : 09-07-2020
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும். வதிவிடமாகவும் கொண்ட அமரர் இளையதம்பி  ஜெகதீஸ்வரன்
அவர்கள் 09-07-2020 வியாழக் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
 . அன்னார், காலஞ்சென்ற (தையிட்டி) இளையதம்பி (வேவி )தம்பதிகளின்  பாசமிகு மகனுமாவார் 
அன்னாரின் இறுதிக்கிரியை 10-072020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
 வீட்டு முகவரி: 
நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





திங்கள், 6 ஜூலை, 2020

நாட்டில் மூன்று மாதங்களின் பின் இன்று ஆரம்பமான பாடசாலைகள்

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீளவும் இன்று (6) ஆரம்பிக்கிறது.நான்கு கட்டங்களாக பாடசாலை செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வரும் கல்வியமைச்சின் திட்டத்திற்கு இணங்க, இரண்டாம் கட்டமாக இன்று தரம் 5, 11, 13 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கிறது.
முதற்கட்டமாக ஜூலை 29ஆம் திகதி பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர். பாடசாலைகளை கிருமி நீக்கியதுடன், பாடத்திட்ட தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.இன்று முதல் கல்வி 
நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் நிலையில், கற்பித்தலிற்கே முன்னுரிமையளிக்க வேண்டுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.தரம் 5 முதல் 11 வரையான மாணவர்களின் கல்வி செயற்பாடு காலை 7.30 மணிக்கு ஆரம்பித்து, மதியம் 1.30 மணிவரை இடம்பெறும். தரம் 13 மாணவர்களின் கல்வி செயற்பாடு காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை
 இடம்பெறும்.
அனைத்து ஆசிரியர்களும் காலை 7.30 மணிக்கே பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டியதில்லை. அவர்கள் கற்பிக்கும் பாடநெறி ஆரம்பிப்பதற்கு 30 நிமிடங்கள் முன்னதாக பாடசாலைக்கு சமூகமளித்தால் போதுமானது.
அதேபோல, அனைத்து ஆசிரியர்களும் பிற்பகல் 3.30 மணி வரையும் கடமையிலிருக்க வேண்டியதில்லை.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


யாழ். நீர்வேலிக்கு வெளி நாட்டில் இருந்து வந்தவர் அடித்துக் கொலை

லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த ஒருவர் அயலவரினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.யாழ் போதனா வைத்திய சாலையில் கடந்த 13 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தவர்.05-07-20. அன்று
  உயிரிழந்துள்ளார்.யாழ். நீர்வேலி மேற்கைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான, செல்வநாயகம் ஜெயசிறி
 என்பவருடைய மரணம் குறித்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த முப்பது வருடங்களாக லண்டனில் வசித்து வந்த இவர் தாயாரைப் பார்க்க வருகை தந்திருந்த நிலையில்,அயலவர் ஒருவருக்கு கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட போது ஏற்பட்ட வாய் தர்க்கத்தினாலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல் சடடத்தரணி திரு சதாசிவம் லோகேஸ்வரன் 05-07-20

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், புத்தூர், கோப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்,  அவுஸ்திரேலியா வை (Sydney )
வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம்  லோகேஸ்வரன் பிரசித்தி பெற்ற,சடடத்தரணி- நொத்தாரியார்    ,அவர்கள் 05-07-2020  ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், புத்தூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் சதாசிவம்(ஜே. பி) வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அருமை புதல்வனும், கோப்பாய் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் காந்திமதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்ற மங்கையற்கரசி (ஆசிரியை )அவர்களின் அன்புக் கணவரும், பிரவாகினி(சிட்னி), எண்குணன்(சிட்னி) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும், காலஞ்சென்றவர்களான  நல்லநாயகி, ரங்கநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், கிருஷ்ணகுமாரன், நிலானி ஆகியோரின் அன்பு மாமனும், காலஞ்சென்றவர்களான தா. வேல்நம்பி, க. கனகரத்தினம்(மந்துவில்) மற்றும் டாக்டர் மனோன்மணி(லண்டன்), சுதந்திரநாதன் நிரஞ்சலாதேவி(கொழும்பு), காலஞ்சென்ற காந்திமதிநாதன், கமலாதேவி(கொழும்பு), ஜீவாஅமிர்தம்  புனிதவதி(நல்லூர்) ஆகியோரின் மைத்துனரும், சரக்‌ஷா, பபிதன், யஷ்னி, சேஷான் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அன்னார்  புத்தூர்ஶ்ரீ குமர குருபரன் கிராம முன்னேற்ற சங்கத்தின் தலைவராகவும் , 1978 ம்ஆண்டுநடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி நடாத்திய 2வது தேசிய மகாநாட்டின் பொருளாளராகவும் , தமிழரசுக் கட்சியில் முக்கிய பதவிகளிலும் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு  அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல தேரம்பிள்ளையாரை வேண்டி நிற்கின்றோம் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
ஆழ்ந்த அனுதாபங்களுடன் அன்னாரின் 
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்
.                 ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்சாந்தி
href="http://www.nilavarai.com/2017/04/11//" target="_blank"> நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 5 ஜூலை, 2020

ஆவரங்காலில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞன் மரணம்

யாழ்ப்பாணம் – ஆவரங்கால் கண்ணாரை அம்மன் கோவில் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் இருந்து  (05-07-20) இன்றுகாலை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவ்விளைஞன், தோட்டத்துக்கு நீர் இறைப்பதற்குக் கிணற்றடிக்கு வந்த போதே, கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>>


யாழ் கோப்பாய் சந்தியில் டிப்பர் பெட்டி விழுந்து சாரதி பலி

யாழ்– கோப்பாய் சந்திப் பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் கராச்சில் டிப்பர் ஒன்றை பழுது பாா்த்துக் கொண்டிருந்த போது டிப்பரின் சுமை பெட்டி விழுந்ததில் அதன் சாரதி உடல் நசுங்கி
 உயிரிழந்துள்ளார்.
திருத்துனர்கள் டிப்பர் பெட்டியினை யக் (தூக்கி) மூலம் உயர்த்தி திருத்திக் கொண்டிருந்த சமயம் டிப்பர் சாரதி அதனை சரிபார்க்க முயன்றபோது யக் விலகியதில் உயர்ந்து நின்ற பெட்டி திடீரென்று விழுந்ததில் பெட்டிக்கு அடியில் சிக்கிய சாரதி
 உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மானிப்பாயை சேர்ந்த லிகிந்தன் என்பவரே என தெரியவருகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>>



இடம்பெற்ற கிளிநொச்சி விபத்தில் இளைஞன் மரணம்

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில், வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகே இருந்த நாவல் மரத்துடன் மோதியதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.மற்றைய இளைஞன் காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.
உயிரிழந்தவர் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தைச் சேர்ந்த மோகன் றஜீபன் (19வயது) சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
 இறந்தவரின் சடலம் தற்போது அக்கராயன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>>

யாழ் நல்லூரில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் படுகாயம்

யாழ்- நல்லூர் கோவில் வீதியில் 05-07-20.இன்று இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீதியின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்தவர், திடீரென அதன் கதவைத் திறந்து கொண்டு இறங்க முயன்ற போது, பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கார் கதவுடன் மோதி
 விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் தலையில் படுகாயமடைந்துள்ளார். உடனடியாக அவர், சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>>