siruppiddy

18

siruppiddy

unkal

unkal
யாழ் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாழ் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 ஜூலை, 2026

தமிழ் கட்சிகளை யாழில். சந்தித்த ஐரோப்பிய தூதுக்குழு

இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட தூதுக்குழு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் இருந்து  விமானம் மூலம் யாழ்ப்பாணத்தை 
வந்தடைந்தனர்
யாழ்ப்பாணத்தை வந்தடைந்த குழுவினர் , யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினர்.
அரசியல் கட்சிகளின் கலந்துரையாடலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் 
க.சர்வேஸ்வரன், யாழ் மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் உள்ளிட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் குழுவை சந்தித்து கலந்துரையாடினர்
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 21 ஜூலை, 2026

யாழில் தலைகள் துண்டிக்கப்பட்டு புதைகுழியினுள் படுகொலை

யாழ் .செம்மணி புதைகுழியினுள் தலைகள் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமெனும் சந்தேகத்தை தோற்றுவிக்கத்தக்கதான தடயங்கள் இன்று கண்டறியப்பட்டுள்ளது.
தலைகள் துண்டிக்கப்பட்டு , தலைகள் அற்ற முண்டங்களாக புதைக்கப்பட்டமை இன்றைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 
செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வு பணிகளின் போது மண்டையோடுகள் அற்ற என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை சில மண்டையோடுகள் என்புக்குவியல்களுடன் தனித்தும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
"மண்டையோடுகள் அற்ற நிலையில் சில என்பு கூடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. சில மண்டையோடுகள் குவியலாக காணப்படுகிறது. மனித என்புக்கூடுகளின் ஆய்வுகளின் பின்னரே குவியலாக காணப்படும் மண்டையோட்டு தொகுதிகள் , மண்டையோடு அற்ற என்புக்கூடுகளுக்கு உரியனவா என்பதனை தீர்மானிக்க முடியுமென
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் கால்கள் மடித்து செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட பீடாதிபதியுடன் கலந்துரையாடி, பேராசிரியர் ராஜ்சோமதேவாவின் அபிப்பிராயங்களை கேட்ட பின் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு மற்றும் தூதுவர் எட்டுப் பேர் அடங்கிய உயர்மட்ட குழு நாளை காலை செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதிக்கு களவிஜயம் செய்யவுள்ளமை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 13 ஜூன், 2026

காணாமல் போன சிறுவன் யாழில் கிணற்றில் சடலமாக மீட்பு

நாட்டில்  பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில்  காணாமல் போயிருந்த 6 வயது சிறுவன், வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக 
மீட்கப்பட்டுள்ளார்.
புலோலி தெற்குப் பகுதியைச் சேர்ந்த இந்தச் சிறுவன்-12-06-2026- நேற்று இரவு திடீரென காணாமல் போயுள்ளார். சிறுவன் காணாமல் போனது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்தத் தீவிரத் தேடுதலின் பலனாக, இன்று வீட்டின் அருகில் இருந்த கிணறு ஒன்றில் இருந்து சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் மரணத்திற்கான காரணம் குறித்து 
பருத்தித்துறை பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது  

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 8 ஜூன், 2026

யாழ் செம்பியன்பற்று கடலில் மாயமான மீனவர் சக மீனவர்களால் உயிருடன் மீட்பு

நாட்டில் வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர், சக மீனவர்கள் மற்றும் கடற்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையின் மூலம் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
செம்பியன்பற்று வடக்கு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்று (ஜூன் 7) இரவு வழமை போல் கடற்தொழிலுக்குச் சென்றுள்ளார்
. எனினும், நீண்ட நேரமாகியும் அவர் கரை திரும்பாததால் குடும்பத்தினரிடையே அச்சமும், அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலையும் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செம்பியன்பற்று வடக்கு சென். பிலிப் நேரிஸ் கடற்தொழிலாளர் சங்கத்தினர் உடனடியாக களத்தில் இறங்கி தேடுதல் பணிகளை ஆரம்பித்தனர். 
இத்தேடுதல் முயற்சிக்கு கடற்படையினரும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். பல மணித்தியாலங்கள் நடுக்கடலில் முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதலின் பயனாக, 
கரை பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த குறித்த மீனவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டார்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்புக்கு மத்தியிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்குக் பின்னால் உள்ள அவல நிலை குறித்தும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்:
பொருளாதார நெருக்கடி: அன்றாட வாழ்க்கையை நகர்த்தவும், குடும்பப் பொருளாதாரத்தைக் கொண்டு செலுத்தவும் வேறு வழியின்றி, ஆபத்தான சூழலிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதிகரிக்கும் விபத்துக்கள்: இத்தகைய பொருளாதாரக் காரணங்களால், அண்மைக்காலமாக மீனவர்கள் கடலில் காணாமல் போகும் மற்றும் விபத்துக்களுக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றன.
அரசாங்கத்திற்கு விடுக்கப்படும் அவசர கோரிக்கை
 மீனவர்களின் இந்த அவல நிலைக்கு உடனடியாகத் தீர்வு காணவும், அவர்களின் உயிர்களையும் வாழ்வாதார உபகரணங்களையும் பாதுகாக்கவும் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காலங்களில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசர விழிப்புணர்வு திட்டங்களை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
காலநிலை மோசமாக இருக்கும் காலங்களில், மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காக அவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான குறுகிய கால நிவாரண நிதியுதவிகளை அரசாங்கம்
 வழங்க வேண்டும்.
இத்தகைய காத்திரமான நடவடிக்கைகள் மூலமே எதிர்காலத்தில் மீனவர்களின் உயிர் இழப்புக்களையும், வாழ்வாதாரப் பாதிப்புக்களையும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும்    

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 6 ஜூன், 2026

யாழ் புத்தூர் விபத்தில் ஒரு வாலிபர் உயிரிழப்பு; மேலும் மூவர் படுகாயம்

யாழ் புத்தூர் பகுதியில் டிப்பர் வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதி இடம்பெற்ற கொடூர விபத்து குறித்த மேலதிக செய்தி டிப்பர் மோதி முச்சக்கர வண்டி நசுங்கியதில் 21 வயது இளைஞன் காஜானன் பரிதாப மரணம்; இருவர் கவலைக்கிடம்! யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில்.05-06-2026. அன்று இரவு  இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் சிக்கி 21 வயதுடைய இளம் குடும்பஸ்தர்/இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 
மேலும் இரு இளைஞர்கள் கால்கள் நசுங்கிய நிலையில் ஆபத்தான கட்டத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட 
வாசன் காஜானன் (வயது 21) என்ற இளைஞனே இன்று (06) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவராவார். மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கி அதிவேகமாகப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் (Tipper) வாகனத்தின் குறுக்கே, திடீரென முச்சக்கர வண்டி (Three-Wheeler) ஒன்று
 நுழைந்துள்ளது. 
இதன் போது எதிர்பாராத விதமாக டிப்பர் வாகனம் முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் முச்சக்கர வண்டியின் மீது
 ஏறி நசுக்கியுள்ளது. இந்த கொடூர விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி, கால்கள் நசுங்கிய நிலையில் படுகாயமடைந்தனர்.
விபத்து நடந்த உடனே அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அதிகாலை வேளையில் வாசன் காஜானன் என்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
முச்சக்கர வண்டியில் பயணித்த மற்றைய இரு இளைஞர்களின் நிலையும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் இருவரும் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைக்கு 
உட்படுத்தப்பட்டுள்ளனர்.
விபத்துச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அச்சுவேலி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் சாரதியின் அலட்சியமே விபத்துக்குக் காரணமா அல்லது முச்சக்கர வண்டியின் திடீர் திருப்பமா என்ற கோணத்தில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை 
முடுக்கிவிட்டுள்ளனர்.
நள்ளிரவில் வீதி ஒழுங்குகளைக் கடைப்பிடிக்காமல் அதிவேகமாக பயணிப்பதே இதுபோன்ற கொடூர விபத்துகளுக்குக் காரணம் என உள்ளூர்வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 29 மே, 2026

நாட்டின் .கடலுக்குள் சென்ற நான்கு கடற்தொழிலாளிகளை காணவில்லை

யாழ் பருத்தித்துறை பகுதியில் இருந்து  கடலுக்குச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. 
பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலிற்கு 2 படகுகளில்  4 தொழிலாளர்கள் சென்றனர். யாழ்ப்பாண கலாச்சாரம்

குறித்த நால்வரும் கரை திரும்பாத நிலையில் அவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

தற்போது கடுமையான காற்று வீசி வருவதனால் படகுகள் கடலில் அடிபட்டு திசை மாறி சென்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 21 மே, 2026

: யாழில் இளம் குடும்பப் பெண் குடும்பத் தகராறு முற்றிய நிலையில் தற்கொலை

யாழில்  சீதனக் கொடுமை காரணமாக நிலவிய குடும்பத் தகராறு முற்றிய நிலையில், இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோகமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணுக்குத் திருமணமாகிச் சில காலமே ஆகியுள்ளது. திருமணத்தின் போது வழங்கப்பட்ட சீதனம் போதாது என்றும், மேலதிகமாகச் சொத்துக்கள் மற்றும் நகை வேண்டுமென்றும் கணவர் வீட்டார் தரப்பில் இருந்து தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது.
இந்தச் சீதன விவகாரம் தொடர்பாகத் தம்பதியினரிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. நேற்று வீட்டின் அறையொன்றில் குறித்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாகக் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 
உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சீதனக் கொடுமையின் பின்னணி குறித்து உறவினர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதன்பிரகாரம் கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 18 மே, 2026

யாழ் வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் மரணம்

யாழ்  வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள நீச்சல் தடாகம் ஒன்றில் நீந்திக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி 13 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.
நேற்று (17) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவனே இவ்வாறு
 உயிரிழந்துள்ளார். 
குறித்த சிறுவன் வல்வெட்டித்துறையில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்ட போதிலும், ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொடூரச் ச
ம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இச்சம்பவம் புலோலி மற்றும் வல்வெட்டித்துறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 6 மே, 2026

யாழ் புங்குடுதீவில் சொகுசு பேருந்து மோதி இளைஞன் பலி

யாழ் புங்குடுதீவு, வாணர் பாலத்திற்கு அருகே இன்று இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 
இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு வாணர் பாலம் பகுதி, மடத்துவெளி கடற்படை முகாமிற்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
புங்குடுதீவில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர் மீது, எதிர் திசையில் வந்த 'ஜெட்விங்' ஹோட்டல் நிறுவனத்திற்குச் சொந்தமான சொகுசுப் பேருந்து பலமாக
 மோதியுள்ளது.
குறித்த பேருந்து மிக அதிவேகமாகப் பயணித்ததே இந்த உயிரிழப்பிற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் துரதிர்ஷ்டவசமாகச் சம்பவ இடத்திலேயே 
உயிரிழந்தார்.
தற்போது பொலிஸார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பேருந்து ஓட்டுநரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 5 மே, 2026

நள்ளிரவில் யாழில் அதிவேகத்தால் மதிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், அதிவேகம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் மதிலுடன் மோதியுள்ளது.
விபத்தில் சிக்கிய 22 மற்றும் 24 வயதுடைய கரவெட்டி வடக்கைச் சேர்ந்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. 
கோப்பாய் பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கோப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் கரவெட்டியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
நண்பர்களின் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 22 ஏப்ரல், 2026

யாழ் .உரும்பிராயில் கோர விபத்து- தந்தையும் மகனும் பலி

யாழ் உரும்பிராய் பகுதியில்.22-04-2026. இன்று  அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளுடன் கனரக வாகனம் மோதி, இந்த விபத்து இடம் பெற்றுள்ளது
. விபத்தில், மோட்டார் 
சைக்கிளில் பயணித்த 65 வயதான தந்தையும் 29 வயதான மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



திங்கள், 20 ஏப்ரல், 2026

நாட்டில் சிறுப்பிட்டி பகுதியில் தனக்கு தானே தீ மூட்டி உயிரிழந்த பெண்

யாழில், சிறுப்பிட்டி யில் தேநீரை குடித்துவிட்டு தான் செய்த சிற்றுண்டியை அவரது கணவர் சாப்பிடவில்லை என்ற காரணத்தாலும், கணவர் தாக்கியதாலும் மனைவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.அவரது கணவர் சனிக்கிழமை (18) வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது அவரது மனைவி தேநீரும் ரோல்ஸூம் கொடுத்துள்ளார்.
இதன்போது தேநீரை குடித்துவிட்டு ரோல்ஸினை சாப்பிட மறுத்துள்ளார். இந்நிலையில் அந்த ரோல்ஸினை சாப்பிடுமாறு கணவரிடம் வற்புறுத்தியுள்ளார்.
இதன்போது கணவர் அவரை தாக்கிவிட்டு வெளியே சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்துள்ளார்.
இதன்போது குறித்த பெண் ஏற்கனவே தனது உடலில் பெற்றோலினை ஊற்றிவிட்டு இருந்துள்ளார். கணவன் வந்ததும் தனக்கு தானே தீமூட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இந்நிலையில் அவரை மீட்டு கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று (19) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 13 ஏப்ரல், 2026

யாழ் புத்தூர் வாள்வெட்டுச் சம்பவம்: சிறுப்பிட்டி வயல் பகுதியில் நபர்களை மடக்கிப் பிடித்த மக்கள்

யாழ் புத்தூரில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மர்ம நபர்களை, சிறுப்பிட்டிப் பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் குறித்த விபரங்கள்:
புத்தூர் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பியோடிய கும்பலைச் சேர்ந்த சில நபர்கள், சிறுப்பிட்டி வயல் பகுதியில் பதுங்கியிருப்பதாக அப்பகுதி மக்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, விழிப்புடன் செயற்பட்ட கிராம மக்கள் அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்தனர். இதன்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்களைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.
பொலிஸாரிடம் ஒப்படைப்பு:
பிடிபட்ட நபர்களின் கைகளைக் கட்டிய பொதுமக்கள், உடனடியாக அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸாரிடம் சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
தற்போதைய நிலை:
பிடிபட்டவர்களிடம் இருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஆயுதங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர
குறித்த நபர்கள் வாள்வெட்டுச் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர்களா அல்லது வேறு ஏதும் பின்னணி கொண்டவர்களா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பதுங்கியிருந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்களைத் துணிச்சலுடன் மடக்கிப் பிடித்த சிறுப்பிட்டி மக்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 7 ஏப்ரல், 2026

யாழ் மருதனார்மடம் தோட்ட கிணற்றில் இனந்தெரியாத நபரின் சடலம்

யாழ்மருதனார்மடம் பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம்.07-06-2026. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அவதானிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் கிணற்றுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
மேலும், சடலத்தை அடையாளம் காட்ட உதவுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 6 ஏப்ரல், 2026

முதியவரை மோதி விட்டு யாழில். தப்பியோடிய மோட்டார் சைக்கிள் ஓட்டி - விபத்தில் சிக்கிய முதியவர் உயிரிழப்பு

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 
அத்தியடி பகுதியை சேர்ந்த சேவியர் சவுந்தரநாயகம் (வயது 70) என்பவரே உயிரிழந்துள்ளார் 
குறித்த முதியவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வீட்டிற்கு அருகில் உள்ள கடையொன்றுக்கு தனது துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வந்தவர்கள் முதியவரை மோதிவிட்டு அவ்விடத்தில் இருந்து 
தப்பி சென்றுள்ளனர்.
முதியவர் வீட்டிற்கு திரும்பி சென்று தான் விபத்துக்குள்ளான விடயத்தினை வீட்டாருக்கு தெரிவித்த பின்னர் , சிறிது நேரத்தில்
 மயங்கி சரிந்துள்ளார். 
உடனடியாக வீட்டார் அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி
 உயிரிழந்துள்ளார். 
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


. கெருடாவிலில் இடிமின்னலுடன் பலத்த மழை - மின்னல் தாக்கத்தால் வீடொன்று சேதம்

யாழில்  மின்னல்  தாக்கத்தினால் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்பியுள்ளனர். 
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை வேளை பல இடங்களில் இடி மின்னல் உடன் கூடிய 
மழை பெய்தது. 
அதன்போது, வடமராட்சி, கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் அருகில் நின்ற தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி கொண்டதுடன் , குறித்த மின்னல் தாக்கத்தால் வீட்டின் சுவர்களில் ஓட்டைகள் விழுந்துள்ளதுடன் , ஜன்னல் மற்றும் கதவு நிலைகளும்
 சேதமடைந்துள்ளன. 
இருந்த போதிலும் வீட்டில் இருந்தோர் காயங்கள் எதுவும் இன்றி தப்பித்துக்கொண்டனர். 
தென்னை மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி எரிவதனை கண்ட அயலவர்கள் விரைந்து செயற்பட்டு தீயினை அணைத்துள்ளனர்  
அதேவேளை குறித்த மின்னல் தாக்கத்தினால் அயலவர்களின் தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்கள் சிலவும் சேதமடைந்துள்ளன என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

யாழ் போதனா வைத்தியசாலை உயிர்களை காப்பாற்றிய இயந்திரத்திற்கு பிரியாவிடை

யாழ்  போதனா வைத்தியசாலை  இதய சிகிச்சை பிரிவில் , 15 வருடம் பாவனையில் இருந்து , 40,000-க்கும் மேலான உயிர்களை காப்பாற்றிய cath lab machine நேற்றைய தினம் சனிக்கிழமை சேவையில் இருந்து விடை பெற்றது.
Cath Lab என்பது இதய நோய்களைக் கண்டறிந்து, 
அறுவை சிகிச்சை இல்லாமல் (Angiogram, Angioplasty) சிகிச்சை அளிக்கும் உபகரண தொகுதி. இதில் x-ray உதவி உடன் இதய ரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள், வால்வு பிரச்சினைகள் மற்றும் Pacemaker போன்ற சிகிச்சைகள் 
அளிக்க படுகிறது.
சுகாதார அமைச்சு,   இவ் உபகரணத்துக்கு பதிலாக புதிய cath lab உபகரண தொகுதியை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
இம்மாத இறுதிப்பகுதியில் புதிய உபகரணம் சேவையை
 ஆரம்பிக்கும்.
இதே சமயம் இம்மாதம்  மேற்படி சிகிச்சைகள் வைத்தியசாலையில் இருக்கின்ற DSA இயந்திரத்திலும் வவுனியா பொது வைத்தியசாலையில் இருக்கின்ற Cath lab பகுதியிலும் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
குறித்த  இயந்திரத்தை இவ்வளவு காலம் சரியான முறையில் பயன்படுத்தி வந்த வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், கதிரியக்கவியலாளர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள், இதனை வழங்கிய நிறுவன பொறியாளர் உள்ளிட்டோருடன் பணிப்பாளர் கலந்துரையாடலில் ஈடுபட்டமையும் .என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வெள்ளி, 3 ஏப்ரல், 2026

கொடிகாமத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தரை வாகனத்தால் மோதி கொலை சந்தேகநபர் சரண்

யாழில் பொலிஸ் அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ததுடன் , மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் 5நாட்களின் பின்னர் சட்டத்தரணி ஊடாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் , குறித்த 
சந்தேக நபரை 09 ஆம் திகதி வரையில் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட மன்று , அன்றைய தினத்தில் அடையாள அணிவகுப்பினை நடத்தவும் திகதியிட்டுள்ளது.
கொடிகாமம், கெற்பேலி பகுதியில் , சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ,கடந்த 28ஆம் திகதி  சம்பவ இடத்திற்கு இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் விரைந்துள்ளனர். 
பொலிசாரை கண்டதும், உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர், தான் தப்பிப்பதற்காக அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸார் இருவர் மீதும் மோதி விட்டு தப்பி சென்றுள்ளார். 
உழவு இயந்திரம் மோதியதில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரியான ஹெட்டியாராட்சி அல்பேட்  (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலையே 
உயிரிழந்துள்ளார். 
அவருடன் சென்ற மற்றைய பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
 அனுமதிக்கப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், உழவு இயந்திரத்தின் உரிமையாளர் மற்றும் சாரதிக்கு உதவியாளராக சென்ற இளைஞன் ஆகியோரை கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , அவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உழவு இயந்திரத்தை செலுத்திய பிரதான சந்தேக நபர் 5 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சரணடைந்த நிலையில் , சந்தேகநபரை 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 31 மார்ச், 2026

பருத்தித்துறையில் வீட்டாருடன் முரண்பாடு வீட்டை விட்டு வெளியேறியவர் சடலமாக மீட்பு

யாழ், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் , மீட்கப்பட்டு ,
 உடற்கூற்று 
பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
அல்வாய் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி குலசிங்கம் (வயது 78) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
குறித்த முதியவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை தனது வீட்டாருடன் முரண்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 
வீட்டை விட்டு வெளியேறியவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடி வந்தனர். 
இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை முதியவர் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 29 மார்ச், 2026

கொடிகாமத்தில் உயிரிழந்த பொலிஸ்சாரின் கொலையாளி கைதாகவில்லை

யாழ்   கொடிகாமத்தில் நேற்றையதினம் சட்டவிரோத மணல் கடத்தற்காரர்களின் உழவுஇயந்திரம் மோதி உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரான கெட்டியாராட்சிக்கே அல்பிரட் இவர் தான்.
1969ஆம் ஆண்டு பிறந்த இவர் நிற்றம்பூவ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
இதனிடையே கொலையாளி கைதாகவில்லையென தகவல்கள்  தெரிவிக்கிக்கின்றன.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html