siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 29 நவம்பர், 2021

கந்தரோடைப் பிரதேசத்தில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு

யாழ்.சுன்னாகம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கந்தரோடைப் பிரதேசத்திலும் 28-11- 2021அன்று சமையல் எரிவாயு அடுப்பு  ஒன்று வெடிப்புக்குள்ளாகிய சம்பவம் பதிவாகியுள்ளது.
கந்தரோடை,  பிள்ளையாா் கோவில் வீதியிலுள்ள வீடொன்றிலேயே இன்று பிற்பகல் இந்த வெடிப்புச் சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
தேநீர் அருந்துவதற்காக நீரைச் சூடாக்குவதற்கு அடுப்பை இயக்கிவிட்டு வீட்டின் உரிமையாளர் இன்னுமொரு அறைக்குச் சென்ற சந்தர்ப்பத்திலே சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
சமையலறையில் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும் அங்கு யாரும் இருக்காததால் உயிர்ச் சேதம் எதுவும் இடம்பெறவில்லை எனத்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின்போது வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெளியிலிருந்தமையால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது. 
அடுத்தடுத்து நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகி வருகின்றமையால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். பெரும்பாலானோர் எரிவாயு அடுப்புக்களை புறக்கணிப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் சுவிட்சர்லாந்தில் இரண்டாவது குழந்தை பிறந்த நிலையில் திடீர் மரணம்

சுவிட்சர்லாந்து சுக் பிரேதேசத்தில் வசித்து வந்த இளம் தாய் இன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை 
ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை பிறந்த நிலையில் திடீர் சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார்.மேலும் உயிரிழந்த பெண் யாழ்ப்பணத்தைச் சேர்ந்த குயிந்தன் ரிஷா வயது 35 என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் பெரும் சோகத்தை 
ஏற்படுத்தியுள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

ஞாயிறு, 28 நவம்பர், 2021

மரண அறிவித்தல் திருமதி பரமேஸ்வரன் விமலாதேவி 28.11.21

தோற்றம்-26 09 1958-மறைவு-28 11 2021.
யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கல்வயல் 1ஆம் குறுக்குத் தெருவை வதிவிடமாகவும், புத்தூர் கிழக்கு மட்டுவில் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் விமலாதேவி அவர்கள்
 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சின்னையா, அன்னம்மா தம்பதிகளின் 
கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற பசுபதி, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பரமேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,மல்லிகாதேவி, சறோசாதேவி, 
பத்மநாதன், சிவபாதம், கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,திருகரன்(டென்மார்க்), கஜன்(பனை ஆராய்ச்சி நிலையம்- கைதடி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,பிரித்தா(டென்மார்க்), தாக்‌ஷாயணி ஆகியோரின் அன்பு மாமியும்,ஹர்ஷ்வின், ரோஹினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் புத்தூர் கிழக்கு 
மட்டுவில் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மட்டுவில் வண்ணாத்திப்பாலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது  நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 கஜன் - மகன்Mobile : +94779357136 திருகரன் - மகன்Mobile : +46793368580
 பத்மநாதன் - சகோதரர்Mobile : +4540735066 
சிவபாதம் - சகோதரர்Mobile : +41795245755

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



சனி, 27 நவம்பர், 2021

யாழ் வடமராட்சி கடற்கரையில் பகுதியில் இரு சடலங்கள் மீட்ப்பு


யாழ்  வடமராட்சி கடற்கரை பகுதியில் இரண்டு சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியில் .27-11-2021§.இன்று குறித்த 
இரு சடலங்களும் கரையொதுங்கியுள்ளன.இரு சடலங்களும் அடையாளம் காணப்படாத நிலையில்,அவற்றை அடையாளம் காணும் முயற்சியிலும் மேலதிக நடவடிக்கைகளிலும் பொலிஸார் 
ஈடுபட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வியாழன், 25 நவம்பர், 2021

ஆங்கிலக் கால்வாயில் பிரித்தானியா செல்ல முயன்ற 31 அகதிகள் மூழ்கினர்

பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்கு ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும்போது  இறப்பர் டிங்கி கவிழ்ந்ததையடுத்து, சிறுமியொருவர் மற்றும் ஐந்து பெண்கள் உட்பட 31 பேர் 24-11-2021.அன்று இறந்துள்ளனர்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




புதன், 24 நவம்பர், 2021

பல்கேரியாவில் பேருந்து ஒன்று தீ விபத்துக்களாகி 12 சிறுவர்கள் உட்பட 46 பேர் பலி

பல்கேரியாவின் மேற்கு பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்று தீ விபத்துக்களாகியதில் 12 சிறுவர்கள் உட்பட 46 பேர் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்கேரிய தலைநகருக்குத் தென் மேற்கே அமைந்துள்ள பொஸ்னெக் கிராமத்திற்கருகில் இன்று இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
பேருந்து தீப்பிடித்த வேளை அதிலிருந்து தப்பிக்கக் குதித்த ஏழு பேர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் நான்கு வயதுடைய இரட்டை சகோதரர்களும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த பேருந்து துருக்கியிலிருந்து வடக்கு மாசிடோனியா நோக்கிப் பயணித்ததாக நம்பப்படுகின்றது. இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





செவ்வாய், 23 நவம்பர், 2021

பச்சிளம் குழந்தையை உயிருடன் யாழ்.மட்டுவில் பகுதியில்புதைக்க முயன்ற தாய்

யாழ்.மட்டுவில் பகுதியில் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற குற்றச்சாட்டில் குழந்தையின் தாயான 18 வயதான பெண்ணும் அவருடைய தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதோடு உயிருடன் புதைக்கப்படவிருந்த குழந்தையை மீட்டெடுத்த அயலவர்கள் பொலிஸாரின் உதவியுடன் குழந்தையை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மட்டுவில் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தையை நிலத்தில் புதைப்பதற்கு குறித்த பெண்ணும் அவருடைய தாயாரும் முயன்றனர்.
18 வயதான யுவதி  இன்று அதிகாலை குழந்தை பிரசவித்துள்ளார். குறித்த யுவதி திருமணத்தின் முன்னரே குழந்தை பிரசவித்ததால், அதனை புதைக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்போது குழந்தை அழுததால் அயலவர்கள் அங்கு விரைந்து அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்தியதுடன் குழந்தையை 
காப்பாற்றியுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இப்பாதக செயலை செய்ய முயன்ற இரு பெண்களையும் பொலிஸார் கைது செய்ய்ததுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை  பொலிசார் அங்கு சென்ற போது, குழந்தையை புதைக்க கிடங்கு வெட்டப்பட்டு இருந்ததுடன் , அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் 
கூறப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>






திங்கள், 22 நவம்பர், 2021

நாட்டில் வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது வடமேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இன்றைய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் 
கூறப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர் – 
என்றுள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



ஞாயிறு, 21 நவம்பர், 2021

மாத்தறை வைத்தியசாலைக்குள் பிணம் தின்னும் உயிரினங்கள்

மாத்தறை பிரதான வைத்தியசாலையில் அமைந்துள்ள பிணவறைக்குள் நாக பாம்புகள், சாரை பாம்புகள், எலிகள், கரப்பான்கள், உடும்புகள் மற்றும் பாறை உடும்புகள் என்பன நுழைந்து பிணங்களை உண்பதாக 
தெரியவருகிறது.
இதன் காரணமாக பிணவறையில் பணிப்புரியும் ஊழியர்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.பிணவறையின் இரும்பு கதவு உடைந்து சேதமடைந்து இருப்பதே அதற்கு காரணம் என வைத்தியசாலையின் ஊழியர்கள்
 கூறியுள்ளனர்.
அண்மைய தினங்களில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலங்களில் காது, மூக்கு போன்ற உறுப்புகளை எலிகள் உட்பட விலங்குகள் கடித்து தின்றுள்ளதாக இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தும் மலர்சாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பிணவறையின் இரும்புக் கதவு சேதமடைந்துள்ளமை இதற்கு காரணம் எனவும் இது குறித்து பல முறை வைத்தியசாலையின் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் இதுவரை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



சனி, 20 நவம்பர், 2021

மரண அறிவித்தல் திரு சுப்பிரமணியம் விக்னேஸ்வரன் (விக்கி)19.11.21

பிறப்பு-24-03-1969-மறைவு -19-11-2021
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aargau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் விக்னேஸ்வரன் (விக்கி)அவர்கள் 19-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், 
அருளானந்தம், காலஞ்சென்ற இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுகனி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
விஜிதன், விதுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கோமதி(சுவிஸ்),
 காலஞ்சென்ற தவஈசன், இந்துமதி(சுவிஸ்), புவனேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுந்தரலிங்கம்(சுவிஸ்), 
ஜமுனா (கனடா), ஜெயசோதிநாதன்(ராசன்- சுவிஸ்), விஜயகுமார்(ரவி- சுவிஸ்) மற்றும் திருவருள்செல்வன்(கனடா), உதயகுமார்
(சுவிஸ்), ரோகிணி(சுவிஸ்), வதனி(ஹொலண்ட்), ராஜ்குமார்(லண்டன்), வாகினி(ஜேர்மனி) 
ஆகியோரின் அன்பு மைத்துனரும்,திவ்யா, ஜெயமதி, நாத்தனா,
 ஜெயகாரணி, வினித், வினேசா, வினேசன் ஆகியோரின் மாமனாரும்,ஜயிவன், ஜஈசன் ஆகியோரின் சித்தப்பாவும்,வீரா, சய்ரா, மீரா, நீலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
. எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 21 Nov 2021 2:00 PM - 7:00 PM
Dättwilerstrasse 23 5405 Baden, Switzerland
தொடர்புகளுக்கு
 சுகனி - மனைவி ((சுவிஸ் )Mobile : +41562450146 
விஜிதன் - மகன் (சுவிஸ்  )  Mobile : +41792473864 
உதயன் - மைத்துனர் (சுவிஸ் )Mobile : +41788300353 
புவனேஸ்வரி - சகோதரி (சுவிஸ் ) Mobile : +41795502964

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



இலங்கை தமிழ் குடும்பம் லண்டனில் தீ விபத்தில் நான்கு பேர் பலி!

பிரித்தானியா தலைநகரான லண்டனில் இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் லண்டன் வாழ் தமிழர்கள் மத்தியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் 18-11-2021.அன்றைய தினம் இரவு லண்டன் பெக்ஸ்லி ஹீத் பகுதியில் இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மேலும் இச்சம்பவத்தில் தாயும், மகளும் மற்றும் மகளின் கை குழந்தை, 5 வயது சிறுவன் என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் தற்போது, அயலவர்கள் வெள்ளை இனத்தவர்கள் என்று பலர் வந்து பூ கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





வியாழன், 18 நவம்பர், 2021

நாட்டில் .பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது மக்கள் எச்சரிக்கையாக இருங்கவும்

நாட்டின் பல பகுதிகளில் இன்று (18) மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த 
காற்று வீசக்கூடும்.
எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் 
அறிவுறுத்தப்படுகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

செவ்வாய், 16 நவம்பர், 2021

மரண அறிவித்தல் திருமதி பரமேஸ்வரன் பவானி 16.11.21

மறைவு -16 11 2021
யாழ்.நவற்கிரி புத்தூரை  பிறப்பிடமாகவும்,  வதிவிடமாகக் கொண்ட 
சுப்பர் சின்னத்துரையின் மகள்  திருமதி பரமேஸ்வரன் பவானி 
அவர்கள் 16 11 -2021 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தியுள்ளார்அன்னார் 
சுப்பர் சின்னத்துரை (நவற்கிரி எல்லாளன் சனசமூக நிலையத்திற்கு அருகாமை)  அவர்களின் அன்புமகளும் 
ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2021,வியாழக்கிழமை  அன்று 
மு.ப 10:00 மணி முதல் ந.ப 11:00மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி  நிலாவரை  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
 எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




திங்கள், 15 நவம்பர், 2021

அமரர் மாதர் தம்பிராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி 15.11.22

யாழ்  அச்சுவேலி  விக்கினேஸ்வர  வீதியை சேர்ந்த    அமரர் மாதர் தம்பிராசா அவர்களின்  ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி (திதி .15.11.2021 
திங்கடகிழமை அன்று  
.எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே 
ஐந்தாம் ஆண்டு  நிறைவு
ஆறாத்துயரத்தில் மனது
ஆலமரம் போல் பெரிய நிழல்
தந்தீரே பாலைவனம் நடுவே
பரிதவிக்கவிட்டுச் சென்றதேனோ?நித்தம் உங்களை நினைக்கின்றோம்!
நீங்கள் எம்மோடு இருப்பது போல்
உணர்கின்றோம்! எம் நெஞ்சமதில்- உங்கள்
நினைவுகள் நிலையானவை…!எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..! 
உங்கள் நினைவுகளுடன் 
வாழ்ந்து கொண்டிருக்கும் நாம்
உங்கள் பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்  உறவுகள் 
 மைத்துனர்கல்  ,  சகோதரர்கள்,
 சகோதரிகள், உறவினர்கள்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
  முதலாம் ஆண்டு  நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
  தகவல் குடும்பத்தினர் 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

ஞாயிறு, 14 நவம்பர், 2021

மரண அறிவித்தல் திருமதி கந்தசாமி இராஜேஸ்வரி 13.11.2021

தோற்றம்-13-06-1956-மறைவு -13.11-2021
யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் வெஸ்ட்ரவ்ல்டையில் வாழ்ந்து வந்தவருமான திருமதி கந்தசாமி இராஜேஸ்வரி  அவர்கள் 13 11 2021 அன்று  மாலை
 இயற்கை எய்தியுள்ளார்
அன்னார் காலம்சென்ற கயிலாயர் சுப்பிரமணியம், காலம்சென்ற பூபதி சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மகளும்,
காலம் சென்ற தம்பிப்பிள்ளை, காலம் சென்ற சின்ன தங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும்,
கந்தசாமி ( யேர்மனி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
நித்யா, ( யேர்மனி) அரவிந்தன், ( யேர்மனி) மயூரன் ( யேர்மனி)ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குமாரசாமி ( யேர்மனி) ,தேவராசா ( யேர்மனி) ஜெயக்குமார் ( யேர்மனி) , தவராசா, ( யேர்மனி) தவேஸ்வரி ( யேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயகுமாரி ( யேர்மனி) சுதந்தினி ( யேர்மனி) பவானி ( யேர்மனி) காலஞ்சென்ற செல்வராஜா (பிரான்ஸ்) விஜயலட்சுமி (தாயகம்) காலஞ்சென்ற தர்மசீலன் (யேர்மனி)
ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்
‌நோசான் ( யேர்மனி) யோகிதா ( யேர்மனி) ,வந்தனா ( யேர்மனி) சந்திரா‌ ( யேர்மனி) ஜனா ( யேர்மனி) சன் ( யேர்மனி) சாமி ( யேர்மனி) சுதேதிகா ( யேர்மனி) தேவிதா ( யேர்மனி) தேனுகா( யேர்மனி)  தேவதி ( யேர்மனி) சுதா ( யேர்மனி) சுதர்சன் ( யேர்மனி) சுமிதா ( யேர்மனி) சிவகுசா (பிரான்ஸ்) கலாதேவன் (சுவிஸ்)கலாறஞ்சினி ( யேர்மனி) கலாரூபன் (தாயகம்)
கலைவாணி லண்டன், சுமித்தா லண்டன், வசந்தரூபன் (தாயகம்)
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
லீலாநந்தன் (லண்டன்) தயாநந்தன் (லண்டன் )சுகிர்தா (தாயகம் ) சிவேதன்( சுவிஸ்)கிருஸ்ணவேனி (சுவிஸ்) வசிகரன் ( யேர்மனி) ஜெயா (தாயகம் ) திருக்கயிலைநாதன் (பிரான்ஸ்) சயிலன் ( யேர்மனி) , நகுலா ( யேர்மனி) நதீசன் ( யேர்மனி) ஆகியோரின் சிறியதாயும்
சஜித் ( யேர்மனி) மித்திரன் ( யேர்மனி) மீரா ( யேர்மனி) ஆதிஸ் ( யேர்மனி) ,அனிசா ( யேர்மனி) சிந்திகா (பிரான்ஸ் )கௌசிகா (பிரான்ஸ் )துவாரகன் (பிரான்ஸ் ) பிரவிந்த் (சுவிஸ் )அபிசா (சுவிஸ் )வர்ணிகா ( யேர்மனி) மதுசாயின் (தாயகம்) தஸ்மிகன் (தாயகம்) பூஜிதா (லண்டன் )ஜானுயா (லண்டன்) தியா (லண்டன் ) சசியா )லண்டன் )கர்ணிகா )தாயகம் ) கவினுகா (தாயகம் )ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிருயைகள் இடம்பெறும்
முகவரி ; Wischlinger Weg 63   44369 Dortmund 18.11.2021 வியாழக்கிழமை !நேரம் காலை .9.30 தொடக்கம் மதியம் 12.00 மணிவரை!
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவன் கந்தசாமி +49 1525 9361575
மகள் நித்யா +49 163 1339685
மகன் அரவிந் +49 176 70659673
மகன் மயூரன் +49 176 95785133
சகோதர் குமாரசாமி +49 1521 3892744
சகோதரர் தேவராசா +49 178 7821740
சகோதரர் ஜெயக்குமார் +49 1521 2391478
சகோதரர் தவராசா +49 178 7821740
சகோதரி தவேஸ்வரி +49 1573 9114878
>>>>>>>
முக்கிய குறிப்பு

முக்கிய கவணத்துக்கு தற்கால கொறோனா விதிகளுக்கு அமைய உங்கள் வருகைகள் 3G கட்டுபாடு மிக முக்கியமானதாக சட்ட விதிகள் உள்ளதை நீங்கள் அறிந்ததே என்ற தகவலை அறியத்தருகின்றோம் !


இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



சனி, 13 நவம்பர், 2021

மரண அறிவித்தல் திரு பொன்னுத்துரை செல்வராஜா 12.11.21

தோற்றம்-15 02 1946-மறைவு-12 11 2021
 யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், கொழும்பு, இத்தாலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், சுவிஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை செல்வராஜா அவர்கள் 12-11-2021 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் இறைபாதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை 
இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சாந்தாதேவி அவர்களின் 
ஆருயிர்க் கணவரும்,சுரேஷ், மயூரா, மானஷா,
 சஜீவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தில்லைநாயகி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், தியாகராஜா, சிவபாலன், கமலராணி, சிவநாதன்,
 காலஞ்சென்ற செல்வராணி, புஸ்பராணி மற்றும் சிவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுரேஸ்கரன், வியோலேத்தா, 
வான்மதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,கமலாதேவி, வைகுந்தவாசகம், காலஞ்சென்ற தயானந்தவாசகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மிதுர்ஷா, மிதுஷன், ஹரீஷ், சாய்சணா ஆகியோரின் 
அன்புப் பேரனும் ஆவார்.Note : மேலும் தற்போதைய Covid சூழ்நிலையால் பின்வரும் விதிமுறைகளை கடைப்பிடிக்க 
அறிவுறுத்தப்படுகிறீர்கள்.1) முழுமையாக Covid தடுப்பூசியை பெற்றுக்கொண்ட சான்றிதழ் (Covid Certificate)2) Covid negative test certificate (Antigen test)3) Covid தொற்றிலிருந்து மீண்டமைக்கான சான்றிதழ் 3 மாதத்திற்கு மேற்பட்ட காலப்பகுதியாக இருத்தல் வேண்டும்.4) சமூக இடைவெளி, முகக்கவசம் மற்றும் சுகாதார நடைமுறைகள்RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 16 Nov 2021 1:00 PM - 4:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Wednesday, 17 Nov 2021 1:00 PM - 4:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
கிரியை
Get Direction
Thursday, 18 Nov 2021 9:30 AM - 2:00 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
 சாந்தாதேவி - மனைவிMobile : +41417580164 மானஷா - மகள்Mobile : +41763893579 சுரேஷ் - மகன்Mobile : +4915733156757 மயூரா(மஞ்சு) - மகன்Mobile : +358465220154 சஜீவ் - மகன்Mobile : +41779760768 சுரேஸ்கரன் - மருமகன்Mobile : +41763863974 வான்மதி - மருமகள்Mobile : +41779495244 தியாகராஜா(தேவா) - சகோதரன்Mobile : +4915771077319

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



மரண அறிவித்தல் திருமதி சண்முகநாதன் ஜெயமலர் (வவா) 12 .11.21

தோற்றம்-12 03.1949-மறைவு-12 -11- 2021
யாழ். மானிப்பாய் சங்குவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் ஜெயமலர் (வவா)  அவர்கள் 12-11-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சங்குவேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னம் தம்பதிகளின் அன்பு மகளும், சுண்டுக்குழி பாண்டியன்தாழ்வைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்துரை புஸ்பராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,ஜெறுசி(அபிவிருத்தி உத்தியோகத்தர்), சாருகன்(சனா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சாந்தகுமார்(முகாமையாளர் இலங்கை வங்கி- சங்கானை) அவர்களின் அன்பு மாமியாரும்,ஜீவமலர், காலஞ்சென்றவர்களான சிவதாசன், சுகந்திமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,வரதராசலிங்கம், தயாரூபி(கொழும்பு), கமலநாதன்(லண்டன்), காலஞ்சென்ற இந்திராணி(சுண்டுக்குழி), லலிதாதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஜீவறேகா(ஆசிரியை), வரூஜிகா(அபிவிருத்தி உத்தியோகத்தர்), வரூஜன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சித்தியும்,சீருதன்(கனடா), சசிதரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அத்தையும்,
Dr. சுவேதா(லண்டன்), நிஷாந்தன்(Chartered Accountant, லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,பரிபூரணம் பத்மநாதன் அவர்களின் பெறாமகளும்,சிவபாலச்சந்திரன்(கனடா), சிவயோகராசா(லண்டன்), வசந்தா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,சஜெறா, சஞ்ஜெனு ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
வீட்டு முகவரி:
‘ஜெயகிரி’
சங்குவேலி தெற்கு,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 குடும்பத்தினர் - உறவினர்Mobile : +94772487268 
சனா - மகன்Mobile : +41787124466

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



திங்கள், 8 நவம்பர், 2021

கொக்குவில் கேணியடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயம்

கொக்குவில் –கேணியடிப் பகுதியில் 07-11-2021.நேற்று இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் குறித்த பகுதியினைச் சேர்ந்த உதயகுமார் ரதீபன் என்னும் இளைஞரே காயமடைந்துள்ளார்.மோட்டார் சைக்கிலில் வந்த மூவரே குறித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதலை  மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது காயமடைந்த நிலையில் குறித்த இளைஞர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை 
நடத்தி வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 7 நவம்பர், 2021

யாழ் கரவெட்டியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி

யாழ்., வடமராட்சி, கரவெட்டியில் சம்பவத்தில் துன்னாலை, ஆண்டாள் வளவைச் சேர்ந்த வி.விஜிதரன் (வயது – 33) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கரவெட்டி வடக்கிலுள்ள வீடொன்றில்
06 -11-2021.அன்று  பிற்பகல் வீட்டு கூரை வேலையில் ஈடுபட்டிருந்த போது
 தகரம் ஒன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே 
அவர் உயிரிழந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைகளின் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குடுமபஸ்தர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



சீரற்ற காலநிலையால் நாட்டில் ஐவர் பலி இருவர் காயமடைந்துள்ளனர்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் ஐவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்தும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 
தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 06 -11-2021.அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அருகிலான பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழமுக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மலையுடனான காலநிலை நிலவுகிறது

நிலாவரை.கொம் செய்திகள் >>>