siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 30 டிசம்பர், 2017

தொடரும் மர்ம மரணங்கள் யாழில் இதுவரையில் 21 பேர் பலி!!

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் பரவும் மர்ம காய்ச்சலில் பாதிக்கப்பட்டமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.முல்லைத்தீவு
 பெண் ஒருவர் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்த நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.முல்லைத்தீவு
 வட்டுவாகல் பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான முருகானந்தன் ஜெயனி என்ற இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு
 உயிரிழந்துள்ளார்.காய்ச்சலில் பாதிக்கப்பட்ட ஜெயனி ஆரம்பத்தில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை ஆபத்தாக இருந்தமையினால் யாழ்ப்பாண
 போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.இதே
 காய்ச்சல் காரணமாக முருகானந்தன் என்ற அந்த பெண்ணின் கணவர் 17 நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.இந்த நோய் என்ன என்பதனை அடையாளம் காணுவதற்காக, சுகாதார
 அமைச்சின் விசேட வைத்தியர்கள் சிலர் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.யாழ்ப்பாண நகர மக்கள் இந்த நோய் அமானுஷ்யமாக இருக்கலாம் என கூறுகின்றனர். இதனால் யாழ்ப்பாணம் முழுவதும் அச்சமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவில் இருவர் உயிரிழ்ந்துள்ளமையினால் இந்த அச்சம் முல்லைத்தீவிற்கும் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 12 டிசம்பர், 2017

பாரதியாரின் 135வது ஜனனதினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன

பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் பாரதியாரின் 135வது ஜனனதினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.கல்லூரியின் தமிழ்ச்சங்கத்தின் அனுசரனையில், 2ம் வருட 
தமிழ்ப்பிரிவு ஆசிரிய பயிலுனர் மாணவர்கள் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.நிகழ்வு தேசிய கல்லூரியின் 
பீடாதிபதி திருமதி. ரமணி அபேநாயக்க தலைமையில் கல்லூரியின் பிரதான 
மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது
.இவ் விழாவில் பாரதியாரை நினைவூட்டும் வகையில் பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன.இந்நிகழ்வில், ஆசிரிய மாணவ, மாணவிகள் ஆடிய நடனம் தொடர்பான காணொளி
  இணைப்பு 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

மரண அறிவித்தல் திருமதி துரைசிங்கம் திருமகள்.08.12.17

பிறப்பு : 29 யூன் 1958 — இறப்பு : 8 டிசெம்பர் 2017
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வதிவிடமாகவும், சுவிஸ்  சிலிரனை    (Schlieren)  வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் திருமகள் அவர்கள்  08-12-2017 வெள்ளிக்கிழமை அன்று சூரிச்சில்  இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் திருமேனிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம் தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
உமாச்சந்திரன், சுகாஜினி, துவாரகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற திருஞானலிங்கம், வில்வன்(இலங்கை), திருவேரகன்(மூர்த்தி- சுவிஸ்), திருவருள்(இலங்கை- இராமநாதபுரம்), திருமலர்(சுவிஸ்), திருமாமணி(சுவிஸ்) ஆகியோரின்
 அன்புச் சகோதரியும்,
ராதிகா, ரமணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, பரமசாமி, தம்பிஐயா, கனகம்மா, மற்றும் பாக்கியம்(ஜெர்மனி), சரஸ்வதி, செல்வதுரை(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
முத்துநாயகம், தெய்வகலா, சீனிராஜா, ரவிந்திரன், பகவதி, கனகாம்பிகை, புஸ்பமாதேவி, நடராஜா, சுந்தரலிங்கம், பாலகிறிஸ்னன், புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஹரிஸ், நிலேஸ், சயானா, சபினா, அஜன் ஆகியோரின் 
அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/12/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Halle 1, Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8057 Zürich, Switzerland. 
தகனம்
திகதி: திங்கட்கிழமை 11/12/2017, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Halle 1, Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8057 Zürich, Switzerland. 
தொடர்புகளுக்கு
கணவர் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41447301813
சந்துரு(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789221517
ரமணன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787937295

திங்கள், 4 டிசம்பர், 2017

நாட்டில் காலநிலை குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்

வரும் காலங்களில் நிலவும் காலநிலை குறித்து, ஊடகங்களின் ஊடாக வௌியிடப்படும் அறிக்கைகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
விஷேடமாக மண்சரிவு குறித்த அறிக்கைகளை அவதானித்து, அதில் கூறப்பட்டுள்ளவாறு செயற்படுமாறு, அவர்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கமைய, நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு பூராகவும் அதிக மழையுடனான காலநிலை நிலவலாம் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
இதேவேளை, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உள்ள வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய
 வாய்ப்பு  உள்ளது.
வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஞாயிற்றுக்கிழமை தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியிலும் நீடிப்பதாக அவர் நேற்று 
தெரிவித்தார்.
இது அடுத்த வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். டிசம்பர் 7ம் திகதி வரையிலான கால கட்டத்தில் இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா, வடதமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
அத்துடன், மீனவர்கள் வரும் 5ம் திகதி முதல் தெற்கு ஆந்திரா, வடதமிழகத்தின் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>ஞாயிறு, 3 டிசம்பர், 2017

மரண அறிவித்தல் திரு பிருந்தனன் பாக்கியநாதன்.02.12.17

பிறப்பு : 4 நவம்பர் 1995 — இறப்பு : 2 டிசெம்பர் 2017
யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கைப் பூர்வீகமாகவும், ஜெர்மனி Heilbronn ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிருந்தனன் பாக்கியநாதன் அவர்கள் 02-12-2017 சனிக்கிழமை அன்று 
இறைபதம் அடைந்தார்.
அன்னார்,  காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, பாக்கியம் தம்பதிகள், தர்மகுலம் நித்தியலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பாக்கியநாதன் கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
கெளசிகா அவர்களின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற தங்கவடிவேலு, மற்றும் தர்மதயாளன், நித்தியானந்தன், தயாபரன், புனிதவதி, கமலேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற பவளேஸ்வரி ஆகியோரின் அன்பு
 மருமகனும்,
இராஜரட்ணம், தயாநிதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
தயாளினி, சகிலா, சிவாஜினி, வினோதினி, துவாரகன்(ஜெர்மனி), தர்சிகா, கமல்ராஜ், கார்த்திகா, விஷ்ணுகா, கீர்த்தனன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்

வீட்டு முகவரி:
Kittlerstraße 3,
74076 Heilbronn,
Germany.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாக்கியநாதன் — ஜெர்மனி
தொலைபேசி: +497131160512
செல்லிடப்பேசி: +4915253156705
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 2 டிசம்பர், 2017

மரண அறிவித்தல் செல்வன் சத்தியசீலன் ஹேராம்.01.12.17

அன்னை மடியில் : 4 நவம்பர் 2000 — ஆண்டவன் அடியில் : 1 டிசெம்பர் 2017
ஜெர்மனி Warendorf ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சத்தியசீலன் ஹேராம்.(மிருதங்க வித்வான்) அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று 
இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சத்தியசீலன்(ஜெர்மனி பிரபல அறிவிப்பாளர்) ஜமுனா
 தம்பதிகளின் ஏக புதல்வரும்,
நர்த்தனா அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம்
 பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
வீட்டு முகவரி:
Im Lehmbruch 33,
48231 Warendorf,
Germany.
தகவல்
குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>