siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 29 செப்டம்பர், 2016

நாட்டில் முகநூல் தொடர்பில்அதிக முறைப்பாடுகள்?

2016 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் முகநூல் தொடர்பில் 1589 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இவற்றில் போலியான கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக
 கூறப்பட்டுள்ளது.
மேலும், முகநூல் கணக்குகளினுள் அத்துமீறி பிரவேசித்து தகவல்களை மாற்றியமைத்தமை தொடர்பிலும் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இணையதளத்தின் ஊடாக இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு மேலும் 
தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 27 செப்டம்பர், 2016

கணவரை அறையில் பூட்டிவிட்டு தோழியுடன் புதுப்பெண் ஓட்டம்!

வங்காளதேசம் தலைநகர் டாக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் சன்னால்லா. இவரது மகள் ஜன்னத். இளம்பெண்ணான இவருக்கு பேஸ்புக் மூலம் 2012-ம் ஆண்டு இந்தூரைச் சேர்ந்த நைனா என்ற இளம்பெண்ணுடன் 
நட்பு ஏற்பட்டது.
இருவரும் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி வந்தனர். அவர்களது நட்பு பிரிக்க முடியாத அளவுக்கு சென்றது. இந்த நிலையில் 2013-ம் ஆண்டு ஜன்னத் இந்தூர் வந்தார். அங்கு தோழி நைனா வீட்டில் தங்கி இருந்தவாறு உள்ளூர் கல்லூரியில் பிபிஏ பட்டப்படிப்பில் சேர்ந்து படித்தார்.
பேஸ்புக் தோழிகளுக்கு இடையேயான நெருங்கிய
 நட்பை பெற்றோர் 
அறிந்திருக்கவில்லை. இந்த நிலையில் நைனாவுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்தனர். இதற்கு நைனா எதிர்ப்பு தெரிவித்தார். இறுதியில் திருமணம் ஆன பின்னும் தோழி ஜன்னத்துடன்தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் திருமணத்துக்கு சம்மதித்தாள்.
மகேஷ் என்பவருக்கும் நைனாவுக்கும் திருமணம் நடந்தது. அதன் பிறகு மகேஷ்- நைனா தேனிலவுக்காக கோவா புறப்பட்டனர். மணமகள் நைனா தன்னுடன் பேஸ்புக் தோழி ஜன்னத்தையும் கோவாவுக்கு அழைத்து சென்றார். அதன் பிறகுதான் விபரீதம் ஏற்பட்டது.
அங்கு தோழியைப் பிரிந்து கணவருடன் செல்ல மணமகள் நைனா மறுத்து விட்டாள். இதனால் தகராறு ஏற்பட்டது. அப்போது இரு தோழிகளும் சேர்ந்து புதுமாப்பிள்ளை மகேஷை ஒரு அறையில் போட்டு பூட்டி விட்டு இருவரும் கோவாவில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதை அறிந்த மகேஷ் அதிர்ச்சி அடைந்தார். ஒரு வழியாக அறையில் இருந்து வெளியேறி ஊர் வந்து சேர்ந்தார். நைனாவிடம் வந்து ஜன்னத்துடனான தொடர்பை கைவிடுமாறு மகேஷ் கூறினார். இதை ஏற்க மறுத்ததுடன் தோழியை பிரிக்க பார்க்கிறாயா என்று கணவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மேலும் கணவர் மீது போலீசிலும் 
புகார் செய்தார்.
இதுபற்றி போலீசாரிடம் கேட்ட போது, நைனாவும், ஜன்னத்தும் கணவன்- மனைவி போல் கருதிக் கொண்டு அன்பு செலுத்துகிறார்கள். ஜன்னத் தனது போனில் நைனாவின் எண்ணை மனைவி என்று குறிப்பிட்டு பதிவு செய்து வைத்துள்ளார். பிரிக்க முடியாத அளவுக்கு நட்பு உருவாகி விட்டது. பெற்றோர் இதை ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள்
 என்றார்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 26 செப்டம்பர், 2016

மிக விரைவில் கீரிமலையில் 50 வீடுகளுக்கு மின்விநியோகம்!

வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள காணியற்றவர்களுக்கான வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டம் கீரிமலையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலையில்  அவற்றில்  50 வீடுகளுக்கு மின்சார விநியோகம் விரைவில் வழ ங்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரால்  இவ்வீடுகள் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுவருகிறது.இதில் 140 வீடுகளின்  பணி ஏறத்தாழ பூர்த்தியா கும் நிலையை எட்டியுள்ளது. 
இதில் 50 வீடுகளுக்கு விரைவில் மின்சார விநியோகம் வழங்கப்படும் என்பதையே மின்சார சபை உறுதிப்படுத்தி இருக்கின்றது. 
மின்சாரக் கம்பங்களை நடும் பணி ஆரம்பித்து விட்ட நிலையில் இன்னும் சில வாரங்களில் குறிக்கப்பட்ட 50 வீடுகளுக்கும் மின்சார விநியோகம் ஆரம்பித்து விடும் என்று தெரிவிக்கப்படுகின்றது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

சிவகேசவன் எழுதிய மூன்றாவது நூல்..வெளிவருகிறது

சேமமடுவூர் சிவகேசவன் மூன்றாவது நூல்.....
"வவுனியாக் குளப் பண்பாட்டுச் சூழலில் கிராமிய வழிபாடு" என்ற எனது ஆய்வு நூலின் அச்சுப் பணிகள் நிறைவடைந்துள்ளன..  
இந்த நுால்:வெளியீட்டு விழாவின்றி வெளிவர இருக்கின்றது அத்தோடு
இந்த நூலை நூலகங்களிற்கு அன்பளிப்புச் செய்ய எதிர்பார்க்கிறார் சேமமடுவூர் சிவகேசவன்
. வவுனியா மாவட்டத்தில் கிராமிய வழிபாடுகளைத் தொடரும் ஆலயங்களில் என்னால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இவ் ஆய்வு நூல் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. என்பது குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

இனி O/L சித்தியடையாத மாணவர்களுக்கும் A/L படிக்கலாம்


2018ம் ஆண்டு முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கும் உயர்தரத்தில் கல்வி கற்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர்
 தெரிவித்துள்ளார். 
இதன்படி 2017ம் ஆண்டு தொடக்கம் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மாணவர்கள் பெறும் பெறுபேறுகளுக்கு அமைய விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம் மற்றும் கலைப் பிரிவுகளுக்கு அவர்கள் தேர்வு செய்யப்படுவர் என கூறியுள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




செவ்வாய், 20 செப்டம்பர், 2016

கொழும்.- யாழ்ப்பாணம் செல்பவர்கள் வாசிக்க வேண்டியது!

ஹயஸ், டொல்பின் ரக வாகனங்களில் கொழும் – யாழ்ப்பாணம் செல்பவர்கள் கட்டாயம் வாசிக்கவும் கொழும்பு யாழ்ப்பாண பயணிகளின் கவனத்திற்கு, Dolphins hires Van இல் இரவு நேரத்தில் பயணிப்பவர்கள்
நீங்கள்? உங்களுடைய பயணத்தின் போது கவனிக்க வேண்டிய சில விடயங்கள்
1. அடிக்கடி இந்த வானில் பயணிப்பவர்களுக்கு விபத்துக்கள் நடைபெறுகிறது. இதற்கு காரணம் சாரதி மட்டும் அல்ல, நீங்கள் எடுக்கும் சில அவசர தீர்மானங்களும் தான். அத்துடன் உங்கள் தீர்மானங்ககளை எடுக்கும் போது இதனால் வரும் பின் விளைவுகளை கொஞ்சமும் நீங்கள்
 சிந்திப்பதில்லை.
2. வாகனத்தை hire பண்ணும் போது வாகன சாரதி யார் என்று பாருங்கள் அத்துடன் இரவு நேர பயணம் என்றால் ஏற்கனவே அவர் இந்த ரூட் இல் இரவில் ஓடிய அனுபவம் உள்ளவரா ? அத்துடன் தொடர்ச்சியாக ஓடுபவரா என்று பாருங்கள். ஏனெனில் அனுபவம் உள்ளவர் தான் நித்திரை இல்லாமல் ஓடமுடியும். இதுதான் மிகமுக்கியமான ஒன்று.
வான் condition ஐ விட driver condition ஐ பார்க்க
 வேண்டும்
3. வாகனத்தை hire பண்ணுவார்கள் நீங்கள் அதனால் வாகன சாரதியை உங்கள் கட்டுப்பாடிற்குள் வைத்திருக்க வேண்டும். Driver சொல்லுவற்கெல்லாம் தலை ஆட்ட கூடாது.
உதாரணமாக அவர் அடிக்கடி phone கதைப்பவராக இருந்தால் நாம் அதை கட்டுப்படுத்த அறிவுறுத்த வேண்டும்
4. Maximum speed என்ற ஒன்று உண்டு எனவே அதை தாண்டி போகிறாரா என்று பார்க்க வேண்டும்.
5. கூடுதலாக எந்த வான் சாரதியும் இரவு நேரத்தில் தான் பயணிக்க ஆசைப்படுவான் ஏனெனில் அவனுக்கு driving செய்வது மிகவும் இலகு. ஆனால் இங்கே தான் ஆபத்து இருக்கு, road இல் வாகன நெரிசல் இரவு நேரங்களில் மிகவும் குறைவு இதனால் இந்த சூழ்நிலை driver ஐ நித்திரை கொள்ள வழி வகுக்கும்.
6. பயணிக்கும் நேரம்.??? பொதுவாக கடுமையாக நித்திரை தூங்கும் நேரம் அதிகாலை 2 மணி தொடக்கம் 5 மணி வரை எனவே எமது பயணத்தை மாலை ஒரு 5 மணி அளவில் தொடங்கினால் நாம் யாழ்ப்பாணத்தை அல்லது கொழும்பை அதிகாலை 2 மணியளவில் அல்லது அதற்க்கு முன்னர் அடையலாம்.
அல்லது அதிகாலை 3 அல்லது 4 மணியளவில் தொடங்கினால் பகல் 12 மணிக்கு முதல் எமது இடத்தை அடையலாம்.
அடிக்கடி தேநீர் அருந்த அல்லது wash room போக என வாகனத்தை நிறுத்தி செல்லுங்கள்.
இதனால் விபத்துக்கள் குறைய வாய்ப்புண்டு.
அத்துடன் திடீர் திடீர் என முளைக்கும் புதிய van உரிமையாளர்களும் van சாரதிகளும். வெளிநாட்டில் இருந்து காசு வருமானால் எல்லாரும் யோசிக்கும் இலகு தொழில் இந்த வான் ஓட்டம். இதைவிட இது இப்பொழுத வெளிநாட்டுகாரனின் investment ஆக்கிவிட்டுது.
எனவே கொஞ்சம் சிந்தித்து பயண
 முடிவுகளை எடுங்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






சனி, 17 செப்டம்பர், 2016

திருமலையில் இந்துக் கோயில்கடலின் கீழ் காணொளிஇணைப்பு

திருகோணமலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பாடல் பெற்ற திருத்தளங்களுள் ஒன்றான திருக்கோணோஸ்வரர் இந்து ஆலயம் உள்ளது இது இலங்கை வரலாற்றில் தமிழர் மற்றும் இந்துக்களின் பழமைக்கு ஆதாரமாக உள்ளதாக பல வரலாற்று ஆய்வாளர்கள் 
கூறியுள்ளனர் இராவண வெட்டும் இன்று வரை பலரால் அவதானிக்கப் படுவதுடன் ஆழ்கடலில் புதிதாக படகுகளை எடுப்பவர்கள் வழிபட்டு தங்கள் தொழில்களைத் தொடங்குவதும் ஒரு மரபாக
 உள்ளது இந்தச் சூழலில் இப் பகுதியில் கடலின் கீழ் கோணேஸ்வரர் பழைமையான இந்துக் கோயிலும் இருப்பதாக சமகால ஆய்வுகளில் வெளியாகியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
                                            காணொளிஇணைப்பு 



செவ்வாய், 13 செப்டம்பர், 2016

நீதிமன்ற வளாகத்தில் வைத்து வெள்ளை வானில்மூவர் கடத்தல்!

யாழ். நீதிமன்ற வளாகத்தில் வைத்து மூவர் பலவந்தமாக கடத்தி செல்லப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது
இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணையில் ஆஜராகி,
பின்னர் வெளியில் வரும்போது வெள்ளை வானில் வந்தவர்கள், குறித்த மூவரையும் பிடித்து இழுத்து வானுக்குள் பலவந்தமாக தள்ளி , ஏற்றிக்கொண்டு சென்றமையால் அந்த வளாகத்தில் ஒருவகை பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தின் பின்னர், யாழ். நீதிமன்ற கட்டிடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான வழக்கு,  யாழ். நீதிமன்றில் இன்று இடம்பெற்றது.
குறித்த வழக்கு விசாரணையில் 74 பேர், நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். அவ்வாறு ஆஜராகிவிட்டு, நீதிமன்றத்தை விட்டுவெளியேறும் போதே, வெள்ளை வானில் வந்தவர்கள், மூவரை மட்டும் பிடித்து இழுத்து வெள்ளை வானுக்குள் ஏற்றி, தலைமறைவாகியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 9 செப்டம்பர், 2016

மகளில் கல்லூரி யின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

யாழ் உடுவில் மகளில் கல்லூரி மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இடைநிறுத்தப்பட்டு, கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம்
 தெரிவித்துள்ளது.
கல்லூரியின் முன்னாள் அதிபர், புதிய அதிபர் மற்றும் மாணவர்களுடன் நீதிபதி யூட்சன் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கல்லூரி அதிபராகப் பதவி வகித்து வந்த சிரானி மில்ஸின் எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அதிபரிடம் பொறுப்புக்களை கையளிப்பார் என மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ .யூட்சன் 
தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 6 செப்டம்பர், 2016

விபத்தில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய இரு பிள்ளைகள்

யாழ் பிரதான வீதியில் காருடன் முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்தார். 
இன்று மதியம் 2.00 மணியளவில் யாழ் பிரதான வீதியில் பயணித்து கொண்டிருந்த காரும் 3ஆம் குறுக்கு வீதியில் இருந்து குருநகர் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. 
இவ் விபத்தில் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது , முச்சக்கரவண்டியும் சேதமடைந்ததுடன் ஓட்டுனருக்கும் 
காயம் ஏற்ப ட்டது. 
காரினுள் சிறு பிள்ளைகள் இருவர் பயணம் செய்திருந்தும் தெய்வாதீனமாக எவ்வித சேதமுமின்றி காப்பாற்றப்பட்டனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 5 செப்டம்பர், 2016

தலைநகர் கொழும்பின் அதி சொகுசு வீட்டு நிர்மானத் திட்டங்கள்!

கறுப்புப் பணத்தை முதலீடு செய்யக்கூடிய சிறந்த இடமாக தலைநகர் கொழும்பின் அதி சொகுசு வீட்டு நிர்மானத் திட்டங்கள் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகின் முன்னணி வர்த்தக வங்கிகளில் ஒன்றான ஹொங்கொங் என்ட் ஷங்காய் பேன்கின் கோப்ரேசன் லிமிடட்(எச்.எஸ்.பி.சீ) நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
வெளியிடப்படாத சொத்துக்கள் மற்றும் கறுப்புப் பணத்தை முதலீடு செய்வோருக்கு ஓர் சிறந்த வாய்ப்பாக கொழும்பின் அதி சொகுசு வீட்டு நிர்மானத் திட்டங்கள் அமைந்துள்ளதாகத் 
தெரிவித்துள்ளது.
இதற்கு சமாந்திரமாக 2018ஆம் ஆண்டளவில் கொழும்பில் நிர்மானிக்கப்படும் அதி சொகுசு வீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்வடையும் என பியோன்ட் மினி என்ற சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.
வருமான வழியை குறிப்பிட விரும்பாத தரப்புக்கள் காணி மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவதாக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>