siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 30 மே, 2022

இலங்கையில் உணவுகளை வீணடிப்பதை குறைக்குமாறு மக்களுக்கு கோரிக்கை

நாட்டில் உணவுகளை வீணடிப்பதை முடியுமான அளவு குறைக்குமாறு பேராதனை பல்கலைகழகத்தின் விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே வலியுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவு தட்டுப்பாடுக்கு முகங்கொடுப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இது அமையும் எனவும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலை தற்போது உருவாகியுள்ளமை தெளிவாக உள்ளது. அதற்காக அச்சமடைந்து பதற்றமடைவதற்காக இந்த தகவல் வெளியிடப்படவில்லை. தற்போது முதல் அதற்கு முகங்கொடுப்பதற்கு தயாராக 
வேண்டும் என்பதற்காக இவ்வாறு அறிவுறுத்தப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உணவு பொருட்களை வீணடிப்பதை குறைத்து தேவையான அளவு உணவை மாத்திரம் தயார் செய்ய வேண்டும். அதனூடாக உணவு வீணடைவதை தவிர்க்க முடியும் என்றும் 
அறிவுறுத்தியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>ஞாயிறு, 29 மே, 2022

எழுபத்ஐந்து கஜமுத்துக்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது

நாட்டில் 75 கஜமுத்துக்களை வைத்திருந்த 67 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை இக்கினியாகல பிரதேசத்தில் வைத்து நேற்று விசேட அதிரடி படை
 கைது செய்துள்ளது.
அம்பாறை முகாம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவ்வாறான 75 முத்துக்களை வைத்திருந்த சந்தேகநபரை
 கைது செய்துள்ளனர்.
வரலாற்றில் ஒரு பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான முத்துக்கள் இது என்று அதிரடி படை
 தெரிவித்துள்ளது.
விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி டிஐஜி வருண ஜயசுந்தரவின் பணிப்புரையின் கீழ் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சந்தேகநபர் இகினியாகல காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

வெள்ளி, 27 மே, 2022

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் அதிபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை டிப்பர் வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கந்தையா சத்தியசீலன் என அடையாளம் 
காணப்பட்டுள்ளார்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில், 27-05-2022.இன்று 
உயிரிழந்துள்ளார்.
கந்தையா சத்தியசீலன் முல்லைத்தீவு முத்தையன் கட்டு வலதுகரை முத்துவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>வியாழன், 26 மே, 2022

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு மேலும் உக்கிரமடைவதால் விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை

இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு மேலும் உக்கிரமடையும் என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் டி.அபேசிறிவர்தன அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுபோகத்துக்குத் தேவையான நடவடிக்கைகள் சில மாவட்டங்களில் தாமதமாகியுள்ளன.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் செய்கை நடவடிக்கைகள் நிறைவுபெறாவிடின், நாட்டில் உணவுத் தட்டுப்பாடு மேலும் உக்கிரமடையும்.

தற்போது நெற்செய்கையைச் செய்ய முடியாது போனால் மாற்றுப் பயிர்களை விவசாயிகள் பயிரிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
 

புதன், 25 மே, 2022

நாட்டில் பல பகுதிகளில் வாகனங்களில் எரிபொருள் திருடப்படும் சம்பவம்

நாட்டில் தற்போது நாட்டின் பல பகுதிகளில் வாகனங்களில் எரிபொருள் திருடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கார்களில் இருந்து எரிபொருளைத் திருடப்படுவதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீரிகம பஸ்யால வீதியில் மல்லொஹேவ சந்திக்கு அருகில் இரு வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களின் பெற்றோல் குழாய்கள் வெட்டப்பட்டு பெற்றோல் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார்
 தெரிவிக்கின்றனர்.
ஒரு நபரோ அல்லது சில நபர்களோ கூரிய பொருளின் உதவியுடன் பெற்றோல் குழாய்களை அறுத்து பெற்றோலை திருடி சென்றுள்ளதாகவும் வாகன உரிமையாளர்கள் பெற்றோல் தாங்கிகளில் சுமார் 50 லீற்றர் பெற்றோல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல இடங்களில் இரவு வேளைகளில் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகளில் இருந்து எரிபொருள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

ஞாயிறு, 22 மே, 2022

நாட்டில் லிட்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய செயலி!!!

லிட்ரோ எரிவாயு நிறுவனம் மூலம் எதிர்வரும் .23-05-2022.திங்கட்கிழமை முதல் எரிவாயு விநியோகம் தொடர்பான சகல தகவல்களையும் வழங்குவதற்காக புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,லிட்ரோ எரிவாயு விநியோகம் மற்றும் எரிவாயு கிடைக்கும் இடங்கள் குறித்து நுகர்வோர் மற்றும் முகவர்களுக்கு தகவல்கள் வழங்கும் வகையில் லிட்ரோ 
எரிவாயு நிறுவனம் மொபைல் செயலி அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த செயலியை எதிர்வரும்.23-05-2022. திங்கட்கிழமை 
தொடக்கம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.அதன்படி, கையடக்க தொலைபேசி மூலம் நுகர்வோர், முகவர்கள் மற்றும் துணைமுகவர்கள்
 தகவலைப் பெற முடியும்.
வரிசையில் நிற்பதற்கு முன் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்களின் திகதி மற்றும் எண்ணிக்கைகள் குறித்து அந்த பகுதி முகவர்களிடம் கேட்டு தகவல்களை தெரிந்து கொள்வதற்கு முடியும் என்றும் நிறுவனத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>சனி, 21 மே, 2022

நாட்டில் லங்கா ஐஓசி நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களின் எரிபொருள் தாங்கிக்கு மட்டுமே பெற்றோல் விநியோகிக்கப்படும் என லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக 20-05-2022.அன்று. விடுத்துள்ள அறிக்கையில் நிறுவனம் 
தெரிவித்துள்ளது.
தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து கலன்கள், பீப்பாய்கள் அல்லது போத்தல்களில் பெற்றோல் வழங்கப்படாது என லங்கா ஐஓசி 
தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி 
தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>வெள்ளி, 20 மே, 2022

நாட்டில் எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் இன்றைய தினம் சுமார் 45,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகம் செய்யப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் மேலும் 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 17ஆம் திகதி 2800 மெற்றிக் தொன் எடையுடைய எரிவாயு கப்பல் ஒன்று 
நாட்டை வந்தடைந்த போதிலும் சீரற்ற காலநிலையினால் அவற்றை இறக்கிக் கொள்ள முடியவில்லை என அவர்
 தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் நாள்தோறும் தலா 80000 சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>
ஹோமடுவாவத்தையில் கடனை செலுத்த முடியாமல் உயிரை மாய்த்த தந்தை

இலங்கை களுத்துறை, கமகொட, ஹோமடுவாவத்தையில் பகுதியில் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரை
 மாய்த்துள்ளார்.
நேற்று முன்தினம் பிற்பகல் தனது வீட்டில் அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்ததாக களுத்துறை தெற்கு பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.
வட்டிக்கு வாங்கிய கடனை செலுத்த முடியாமல் அவர் இந்த முடிவை எடுத்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.உயிரிழந்தவர் களுத்துறை, கமகொட, ஹொரதுவாவத்தையைச் சேர்ந்த நதோஷ் குமார ஜயசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவருக்கு மூன்று மகன்கள் இருப்பதாகவும் அவர்களில் இருவர் பாடசாலை மாணவர்கள் எனவும் தெரியவந்துள்ளது

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


புதன், 18 மே, 2022

இடம்பெற்ற கோர விபத்த்தில்யாழில் இருவர் பலி மூவர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி பகுதியில் நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை
 பேச்சாளர் தெரிவித்தார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.  இவ்விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்து எரிந்ததையடுத்து, அப்பகுதி மக்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தீயை அணைத்து காயம் அடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>செவ்வாய், 17 மே, 2022

நாட்டில் கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகத்தின் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள்.17-05-2022. இன்று முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்கள் முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கி வருகை தருவது கட்டாயமானதாகும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்காக, www.immigration.gov.lk எனும் இணையத்தளத்தினூடாகவோ அல்லது 070 7101060 எனும் தொலைபேசி இலக்கத்தையோ பயன்படுத்துமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேசமயம் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதாயின், அரச கடமை நாட்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் , கடவுச்சீட்டிற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படும் மற்றும் கடவுச்சீட்டுக்களின் கையிருப்பு முடிவடைவதாக பரவும் வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


திங்கள், 16 மே, 2022

இலங்கையில் ஊரடங்கு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் இன்றைய தினம் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.அதன்படி இன்று இரவு எட்டு மணி முதல் நாளை காலை ஐந்து மணி வரையில் ஊரடங்கு நடைமுறையில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது
.இதனை தொடர்ந்து அண்மைய சில நாட்களாக இரவு வேளைகளில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>ஞாயிறு, 15 மே, 2022

நாட்டில் எரிவாயு தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி

நாட்டில் நாளைய தினம் எரிவாயு அடங்கிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை முற்பகல் வேளையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ள குறித்த எரிவாயு கப்பலில் இருந்து எரிவாயுவைத் தரையிறக்கும் பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 19 ஆம் திகதி எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான உலக வங்கியின் நிதி 
உதவி எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், 
குறித்த நிதியுதவி கிடைக்கப்பெற்ற பின்னர் 3 மாதங்களுக்கு நாட்டுக்கு தேவையான எரிவாயு கையிருப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>மரண அறிவித்தல் திரு தம்பிராசா உலகராசா 14 .05.2022

மண்ணில்--05 .10. 1944--விண்ணில்--14 .05.2022
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சவூதி அரேபியா Riyadh, 
வில் பணியாற்றியவரும் தற்போது சுவிஸ் சூரிச்சை   வதிவிடமாகவும் கொண்ட . திரு தம்பிராசா உலகராஜா அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா அன்னலட்சுமியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், காலஞ்சென்றவர்களான 
கந்தசாமி ஜானகியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட மருமகனும்,காலஞ்சென்ற இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்
,காலஞ்சென்றவர்களான உதயகுமார், விஜயகுமார்
 மற்றும் சுபேந்தினி(உஷி- ஜேர்மனி), உஷேந்தினி(சத்தி- சுவிஸ்), வசந்த்(அப்பன்-  பிரான்ஸ்), தர்மினி(பிரான்ஸ்) ஆகியோரின்
 அன்புத் தந்தையும்,
சுபாகரன்(ஜேர்மனி), செல்வானந்தவேல்(சுவிஸ்), ரூபி(சுவிஸ்), அஜந்தா(பிரான்ஸ்), கேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சின்னத்தம்பி, உலகேஸ்வரி, 
சிவக்கொழுந்து, இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,கமலா, காலஞ்சென்ற நடராஜா, பாஸ்கரசாமி, துரைராஜா,
 சந்திரலேகா, ராணி, இராஜேஸ்வரி(சுவிஸ்), பரமேஸ்வரி(ஜேர்மனி), அன்னராணி(ஆசிரியை- யாழ். வல்வை மகளிர் கல்லூரி), மனோகரி(சுவிஸ்) ஆகியோரின்
 அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற நடராஜா, கந்தசாமி, சிவம்(சுவிஸ்), அருந்தவராஜா(ஜேர்மனி), தனேஸ்வரன், தேவராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,விஜி, தர்ஷன், நிரோஷன், நிஷாந்த், சிந்துஜன், அனுஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாமினி, சஜீவன், விதுஷன், பாமதி ஆகியோரின் பெரியப்பாவும்,அனுஜன், நிலக்‌ஷன், ஆதி, மதுஷன், நிதுஷன், சாருஹா, திவிஷா, அனோஸ்கா, லாருஜன், ருஷாந், அக்‌ஷிதா, சஞ்சிகா, ஆதிரன் ஆகியோரின் 
பாசமிகு பேரனும் ஆவார்.க இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள் கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 18 May 2022 1:00 PM - 6:00 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
கிரியை
Get Direction
Thursday, 19 May 2022 9:00 AM - 1:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தகனம்
Get Direction
Thursday, 19 May 2022 1:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
 வசந்தன் - மகன்Mobile : +33652751839 உஷி(சுபேந்தினி) - மகள்Mobile : +4915175758758 உஷேந்தினி(சத்தி) - மகள்Mobile : +41764676445 தர்மினி - மகள்Mobile : +33782405050 செல்வானந்தவேல் - மருமகன்Mobile : +41779120539  
மருமகள்Mobile : ரூபி -+41763787614

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

சனி, 14 மே, 2022

நாட்டுக்கு இன்றைய தினம் வந்தடையவுள்ள டீசல் அடங்கிய கப்பல்

இலங்கைக்கு இன்றைய தினம் (14-05-2022) டீசல் அடங்கிய கப்பல் ஒன்று வந்தடையவுள்ளதாக அந்நாட்டின் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறியப்படுத்தியுள்ளதாக பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த கப்பலை இன்றைய தினம் நாட்டுக்கு கொண்டு வர முடியாவிட்டால் எதிர்வரும் 17ஆம் திகதி அது நாட்டை வந்தடையும் என அந்த சங்கத்தின் தலைவர் சாந்த சில்வா (Shantha Silva) 
தெரிவித்துள்ளார்.
தற்போது வைத்தியசாலைகள், பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் டீசல் பகிர்ந்தளிக்கப்படுகிறது.எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் மாத்திரம் 
விநியோகிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>வியாழன், 12 மே, 2022

நாட்டில் 5 மணி நேர மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி

நாடு முழுவதும் 5 மணி நேர மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி பகல் வேளையில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும், இரவில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும் மின்வெட்டு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 11.30 மணி வரை ஐந்து மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அத்துடன் M, N, O, X, Y, Z வலயங்களுக்கு காலை 5 மணி முதல் 8.20 மணி வரையிலும், CC வலயத்திற்கு காலை 6 மணி முதல் 9.20 மணி வரையிலும் மூன்று மணிநேரம் மின்வெட்டப்படும்
 அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>புதன், 11 மே, 2022

பெரிய நீலாவணை கடலில் நீராட சென்ற பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் சிக்கினர்

அம்பாறை – பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் மூன்று பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமானதுடன், அதில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் 10-05-2022.அன்று   மாலை 5.30 மணியளவில் 
இடம்பெற்றுள்ளது.
சுமார் 17 முதல் 18 வரை வயது மதிக்கத்தக்க மாணவர்களே இவ்வாறு இவ்வனர்த்தத்தில் சிக்கியுள்ளனர்.
கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில், அதனையும் பொருட்படுத்தாது நீச்சலில் ஈடுபட்டுள்ளனர்.
வழமை போன்று குறித்த கடற்கரைப்பகுதியில் விளையாடிய பின்னர் இவர்கள் மூவரும் குளிப்பதற்காக அப்பகுதிக்கு சென்ற நிலையில், இவ்வாறு கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் மீட்கப்பட்டதுடன், ஏனைய இருவரை தேடும் பணியில் கடற்படையினர், கடற்தொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த அனர்த்தத்தில் மூவரில் ஒருவரை அலை இழுத்து சென்ற நிலையில், அவரை காப்பாற்றும் முயற்சியில் ஏனைய இரு நண்பர்களும் ஈடுபட்டபோது அவர்களும் அலையில் அடித்து செல்லப்பட்டு
 காணாமல் போயுள்ளனர்.
தற்போது மீட்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை 
பெற்று வருகின்றார்.
இந்த சம்பவத்தை அடுத்து பெருமளவான மக்கள் கடற்கரை பகுதியில் குவிந்துள்ளதோடு, தாழமுக்கம் காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதால் தேடுதல் முயற்சிகள் மந்த கதியில் 
இடம்பெற்று வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>
செவ்வாய், 10 மே, 2022

நாட்டில் நாடளாவிய ரீதியில் வியாழக்கிழமை வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் 3 வாரங்களுக்கு மேலாக மக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை கடந்த இரு தினங்களாக போராட்டம் தீவிரமடைந்து காணப்படுவதுடன், நேற்றைய தினம் 32 க்கும் மேற்ப்பட்ட முக்கியஸ்தர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் புதன்கிழமை காலை 7.00 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் குறித்த ஊரடங்கு சட்டத்தை வியாழக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் வியாழன் 12 ஆம் திகதி காலை 7.00 மணி வரை தொடரும்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
திங்கள், 9 மே, 2022

நாட்டில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இன்றைய தினம் மூன்று மணி நேரம் 20 நிமிட மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.இதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்
 தடைப்படவுள்ளது.
MNOXYZ ஆகிய பகுதிகளில் காலை 5 மணி முதல் 8 மணி வரை 3 மணி நேரம் மின் தடைப்படவுள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


சனி, 7 மே, 2022

தலைமன்னாரில்இருந்து இந்தியா செல்ல முயன்ற 12 நபர்கள் கைது

 

சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகில் கை குழந்தையுடன் சென்ற இளம் குடும்பம் உட்பட 12 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கடற்படையினர் கைது 
செய்துள்ளனர்.
மன்னார் மடு தேக்கம் பகுதியை சேர்ந்த பத்து மாத கைக்குழந்தையுடன் இளம் குடும்பம் ஒன்றும் பேசாலை பகுதியை சேர்ந்த 7 நபர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்தும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு பெண்கள் சட்டவிரோதமாக படகில் இலங்கைக்கு சொந்தமான தீடை பகுதியில் இறக்கி விடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 12 பேரூம் இன்று மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி A.H.ஹைபதுல்லா முன்னிலையில் மதியம் 3 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதவான் நீதிமன்ற நீதிபதி இரு சிறுவர்களையும் பொற்றோரிடம் ஒப்படைக்குமாறு ஏனைய 10 பேரையும் சுமார் ஐம்பதாயிரம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

புதன், 4 மே, 2022

முள்ளிவாய்க்காலில் இளைஞரொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்றொழிலுக்காக வந்திருந்த இளைஞரொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.இந்த
 சம்பவம் 03.05.2022 .அன்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையினை சேர்ந்த 37 அகவையுடைய பிரதாப் என்ற இளைஞர் கடற்றொழிலுக்காக முள்ளிவாய்க்காலில் வாடியில் தங்கி நின்று தொழில் செய்துவந்துள்ளார்.
குறித்த நபருக்கு வலிப்பு நோய் ஏற்படுவதாகவும் கிணற்றிற்கு சென்ற வேளை வலிப்பு ஏற்பட்டு கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலத்தினை மீட்டு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லும் நடவடிக்கையிலும்
 ஈடுபட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>திங்கள், 2 மே, 2022

நாட்டில் பல்பொருள் அங்காடிகள் மூலம் நுகர்வோருக்கு குறைந்த விலையில் அரிசி

லங்கா சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகையை இலங்கையின் அனைத்து பல்பொருள் அங்காடி விற்பனை நிலையங்களுக்கும் விநியோகிக்க 
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அத்தியாவசிய பொருளான அரிசி தொடர்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும், பல்பொருள் அங்காடிகள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றைய தினம் கலந்துரையாடலொன்று 
இடம்பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி அடுத்த வாரம் முதல் பல்பொருள் அங்காடிகள் மூலம் நுகர்வோருக்கு குறைந்த விலையில் குறித்த அரிசி கிடைக்கும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது நுகர்வோர் ஒருவருக்கு அதிகபட்சமாக 5 கிலோகிராம் அரிசி மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.விநியோகிக்கப்படும் அரிசி வகைகளின்
 சில்லறை விலை
ஒரு கிலோகிராம் நாட்டரிசி – 145 ரூபா
ஒரு கிலோகிராம் சம்பா அரிசி – 175 ரூபா என 
அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>ஞாயிறு, 1 மே, 2022

வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் பத்து வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

யாழ். வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் பத்து வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயது இளைஞரை கைது செய்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது 30-04-2022.அன்று இடம்பெற்றுள்ளது.குறித்த மாமுனையை சேர்ந்த இளைஞன் மீது சிறுவனின் தந்தை பொலிஸாரிடம் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இளைஞனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>