siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 28 ஜூலை, 2019

மின்னல் தாக்கத்தினால் யாழ்ப்பாணத்தில் பல வாகனங்கள் நாசம்

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலையில் மின்னல் தாக்கத்தினால் பல வாகனங்கள் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது.
மானிப்பாய், ஆணைக்கோட்டை பிரதேசத்தில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட சொகுசு வான் ஒன்று முழுமையாக எரிந்துள்ளது.
இன்று அதிகாலை 1.20 மணியளவில் இந்த பகுதியில் பெய்த மழையின் போது மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
மின்னலினால் வேனில் இருந்த அனைத்து பொருட்களும் கருகியுள்ளது. வீட்டு உரிமையாளர் தீயை அணைப்பதற்கு முயற்சித்த போதிலும் 
முடியாமல் போயுள்ளது.
வேனில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறி மற்றும் முச்சக்கர வண்டிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.


சனி, 27 ஜூலை, 2019

குடிநீர் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வடமராட்சியில்

வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் இன்று (22) பிற்பகல் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.
யாழ் குடாநாட்டில் வசிக்கும் சுமார் 630,000 மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்திசெய்யும் முகமாக பொறியியலாளர் குகனேஸ்வரராஜா அவர்களினால் முன்மொழியப்பட்ட இந்த திட்டம் அமைச்சரவை அங்கீகாரத்தினை பெற்றுள்ளதுடன் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அடுத்த மாதம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 26 ஜூலை, 2019

இதன் தாற்பரியங்கள் இவைதான்…அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

/a>.
*47615 மேல் அடிப்படை சம்பளம்(ஏனைய படிகளை விடுத்து)
*வருடாந்தம் 1335 சம்பள ஏற்றம்
*6 வருடத்தில் தரமுயர்வு
*15,000 – 50000 பல்துறை முகாமை கொடுப்பனவு அனுமதிக்கப்படவுள்ளது
*தொலைபேசி கட்டணங்கள் 5000
*விசேட நிறைவேற்றுதர கொடுப்பனவு 3000-15000
*ஒவ்வொரு திணைக்களத்திற்கேற்ப விசேட கொடுப்பனவுகள்
*விடுமுறை நாள் கொடுப்பனவுகள்
*சிகப்பு நிற விசேட வெளிநாட்டு ராஜகாரி கடவுச்சீட்டு
*சமூக மற்றும் அரச துறைகளில் முன்வரிசை கௌரவம்
*தரம் 1 ஆனதும் வாகனம் ஒன்று சாரதி சகிதம்
*தரம் 1 ஆகும்வரை குழும வாகனத்தை நாளாந்தம் 100 கி.
 மீ வரை பயன்படுத்த அனுமதி
*6 வருடத்தில் 36 இலட்சம் பெறுமதியான வரிக்கழிவுட
ன் வாகன அனுமதி பத்திரம்
*தங்குமிடம் அல்லது விடுதி அல்லது வாசஸ்தல வசதிகள். அல்லது அதற்கான கொடுப்பனவு
*வெளிநாட்டு சுற்றுப்பயண வசதிகள்
*அரச செலவில் அல்லது வெளிநாட்டு புலமைப் பரிசில் அடிப்படையில் விரும்பிய நாட்டில் முதுமானி கற்கை வசதி
*பொலிஸ் SP மற்றும் இராணுவ லெப்டினென்ட் கேனலுக்கு சமமான தரம்
*இலங்கையில் உள்ள மிக முக்கியமான அரச திணைக்களங்களின் தலைமை உட்பட அமைச்சுக்கள், ஜனாதிபதி செயலாளர்
 வரை உயம் வாய்ப்புஇவை அனைத்தையும் விட நீங்கள் உங்கள் நாட்டில் சமூகத்தில் தூய அக்கறை மிக்கவராயின், உங்கள் சிந்தையில் உள்ள திட்டங்களை உங்கள் மட்டத்தில் அதிகாரத்திற்குட்பட்டு செயற்படுத்தவும், தேவையுடைய மக்களை நாடி நேசக்கரம் நீட்டவும் மகத்தான வாய்ப்பு…!
ஆசைப்படுகிறீர்களா?….ஆர்வம் வருகிறதா?
பல்கலைக்கழக செமஸ்ரர் பரீட்சைக்கு தயாராவது போன்றல்லாது, உங்களிடம் உள்ள அதீத திறன்களை பல்துறை சார்பில் மெருகூட்டுங்கள். அதற்காக ஒவ்வொரு மணித்துளியையும் பொன்னான நேரமாகப் பாவித்து,  தேடல், வாசிப்பு, பயிற்சி, அனுபவஸ்தர்களுடன், உரையாடல், போன்றவற்றில் தியாகம் செய்யுங்கள்.
விண்ணப்பித்து விட வேண்டாம். இதனை நகைச்சுவையாக கருதுபவர்கள் தயவுசெய்து விண்ணப்பிக்க எண்ணாதீர்கள்…!
இது SLAS..

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 21 ஜூலை, 2019

கிளிநொச்யில் புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி

கிளிநொச்சியில் இன்று இரவு இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று இரவு 8.50 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில்
 இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடனேயே குறித்த விபத்து இடம்பெற்றள்ளது.
குறித்த இளைஞர்கள் இருவரும் விபத்து இடம்பெற்ற பகுதியில் தமது வீட்டுக்கு அருகில் புகையிரத கடவையில் அமர்ந்திருந்து சம்பாசித்துக்கொண்டிருந்ததாகவும், புகையிரதம் வருவதை அவதானிக்காமையாலேயே குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் 
தெரிய வந்தள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும், மற்றயவர் தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை எ
னவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக தகவல்களை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். உயிரழந்தவர்களின் சடலங்கள் புகையிர அதிகாரிகளினால் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 10 ஜூலை, 2019

திடீர் மழையுடன் யாழில் நின்று போன மின்சாரம்!! மக்கள் பெரும் அசௌகரியம்

நீண்ட நாட்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை ஓரளவு மழை பெய்துள்ளது. கடந்த ஆறு  மாதங்களுக்கு மேலாக கடும் வரட்சியை சந்தித்து வந்த யாழ் மாவட்ட மக்கள், இம்மழையினால் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இன்று அதிகாலை 1:45 முதல் குடாநாட்டின் யாழ் நகரம், நல்லூர் உள்ளிட்ட வலிகாமத்தின் பல்வேறு
 பிரதேசங்களிலும் பலத்த காற்றுடன் திடீரென நல்ல மழை பெய்தது. பெரும்பாலான மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தமையினால், இந்த திடீர் மழை பெய்தது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 
எனினும், இன்று காலை வேளையில் மழை பெய்தமையைக் கண்டு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியில் திளைத்தனர். இன்று காலை வேளையில் கடுமையான வெப்பம் நீங்கி சற்று கு
ளிர்மையான நிலை குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ளதாக எமது நிருபர் தெரிவிக்கின்றார்.இதே வேளை இன்று அதிகாலை வேளையில் குடாநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் தடைப்பட்டிருந்த மின்சாரம் இன்று முற்பகல் 10:45 அளவில் வழமைக்கு
 திரும்பியது. குறித்த மின் தடையினால், இல்லத்தரசிகள் முதல் பாடசாலை மாணவர்கள், மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோரும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியிருந்தமை 
குறிப்பிடத்தக்கது

வியாழன், 4 ஜூலை, 2019

தாண்டிக்குளத்தில் காலை இன்று நில நடுக்கம்?

வவுனியா - தாண்டிக்குளம், பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் இன்று காலை நில நடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தாண்டிக்குளம், பத்தினியார்மகிழங்குளம் பகுதியைச் சுற்றிய சில வீடுகளில் இன்று காலை 9.52 மணியளவில் உணரப்பட்ட நில நடுக்க அதிர்வுகள் நான்கு, ஜந்து செக்கன் வரை நீடித்துள்ளது.
இதன்போது வீடுகளுக்கு எவ்வித சேதங்களும் ஏற்பட்டிருக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் வழமைக்கு மாறாக இன்று இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர்.


இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 3 ஜூலை, 2019

இரு பார ஊர்திகள் பாரிய விபத்து கிளிநொச்சி பரந்தன் பகுதியில்

கிளிநொச்சி பரந்தன் பகுதயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து இன்று அதிகாலைஇடம்பெற்றுள்ளது. தென்னிலங்கையிலிருந்து பொருட்களை ஏற்றி சென்ற இரு பார ஊர்திகளே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
முன்னே சென்ற பார ஊர்தியின் சக்கரத்திலிருந்து கா
ற்று வெளியேறியதில், சடுதியாக குறித்த பார ஊர்தி நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பார ஊர்திக்கு பின்புறமாக சென்ற மற்ற பார ஊர்தி பின்புறமாக மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் பாரஊர்தியில் பயணித்த சாரதி உதவியாளர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநாச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

செவ்வாய், 2 ஜூலை, 2019

மோதல் சம்பவத்தில் சுன்னாகம் பகுதியில் ஒன்பது பேர் காயம்

யாழ். சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற குழு மோதல் சம்பவத்தில் இரு பெண்கள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாம் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வலி.வடக்கு பகுதிகளில் இருந்து கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் குறித்த முகாமில் வசித்து வருகின்றார்கள். அவர்கள் மத்தியில் ஏற்பட்ட தர்க்கம் மோதலில்
 முடிவடைந்துள்ளது.
குறித்த மோதல் சம்பவத்தில் இரு பெண்களும் 7 ஆண்களும் காயமடைந்திருந்தனர். காயமடைந்தவர்கள் தெல்லிப்பளை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


திங்கள், 1 ஜூலை, 2019

கோர விபத்தில் மூன்று பெண்கள் பலி ஆறு பேர் படுகாயம்

அனுராதபுரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும் மூன்று பெண்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தலாவ – மொரகொட சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புத்தேகமயில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த வானும், அனுராதபுரத்தில் இருந்து தம்புத்தேகம நோக்கிப் பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வானில் பயணித்த கல்நேவ பிரதேசத்தைச்$
 சேர்ந்த பெண்களே உயிரிழந்துள்ளனர். அத்துடன், அந்த வானில் பயணித்த மேலும் 3 பெண்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளை, லொறியின் சாரதி மற்றும் இரு உதவியாளர்களும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>$