siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 28 ஜூன், 2021

சீனாவின் சினோவாக் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட 20 மருத்துவர்கள் பலி

இந்தோனேசியா நாட்டில் சீனாவின் சினோவாக் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட 20 மருத்துவர்கள் கோவிட் தொற்றால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான இந்தோனேசியாவில் கோவிட் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.அங்கு தினசரி கோவிட் பாதிப்பு 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அதன்படி இந்தோனிஷாவில் மருத்துவர்களுக்குச் சீன தடுப்பூசியான சினோவாக் கொடுக்கப்பட்டது. ஆனாலும் சினோவாக் வேக்சினின் 2 டோஸ் எடுத்துக் கொண்ட பிறகும் கூட சுமார் 20 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்தமாகக் கடந்த 2 வாரங்களில் மட்டும் சினோவாக் வேக்சின் எடுத்துக் கொண்ட 358 சுகாதார ஊழியர்களுக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இது சினோவாக் வேக்சின் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

சீனாவின் சினோவாக் வேக்சின் மருத்துவ சோதனைகளில் 51% பலன் அளிப்பதாகக் கூறப்பட்டிருந்தது. ஒரு வேக்சின் அனுமதி பெறக் குறைந்தபட்சம் 51% செயல்திறன் கொண்டிருக்க வேண்டும். அந்த அளவு செயல்திறனை மட்டுமே சினோவாக் கொண்டுள்ளது.
தற்போது பயன்பாட்டிலுள்ள வேக்சின்களேயே சினோவாக் தான் குறைவான தடுப்பாற்றலை கொண்டிருக்கிறது. இருப்பினும், அதுவும்கூட முறை சோதனைகளில் பெறப்பட்ட முடிவுகள் இல்லை எனச் சர்வதேச ஆய்வாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
கோவிட் வைரசை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் கடுமையாகப் போரடி வருகின்றன. உலக வல்லரசு நாடுகள் கூட கோவிட்டை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 25 ஜூன், 2021

நாட்டில் பெற்றோர்களின் கவனத்திற்கு.. பிள்ளைகள் தொடர்பான எச்சரிக்கை

 பிள்ளைகள்  தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேல் தொலைக்காட்சியின் முன்னால் இருக்கும் சிறார்களுக்கு நீண்டகால உடல் மற்றும் மன ரீதியான அழுத்தங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனால், தற்போது கோவிட் தொற்று காலத்தில் சிறுவர்ளுக்கு பாடசாலை மற்றும் மேலதிக வகுப்புக்கு தேவையான பாடங்களுக்காக மாத்திரம் தொழிநுட்பத்தை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தை பெற்றோர் வழங்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
சிறுவர்கள் தொழிநுட்ப தொடர்பான புதிய முறைகளை கண்டறிபவர்கள் என்பதால், அவர்கள் தவறாக வழிநடத்தப்படும் ஆபத்து காணப்படுகிறது
இது குறித்து பெற்றோர் கூடிய கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் மருத்துவர் சன்ன டி சில்வா எச்சரித்துள்ளார்

நிலாவரை.கொம் செய்திகள் >>>





செவ்வாய், 22 ஜூன், 2021

மட்டக்களப்பில் பிள்ளையாரடி பகுதியில் துப்பாக்கி சூடு. ஒருவர் பலி..

    மட்டக்களப்பில்   இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டில் கடமையில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரிப்பர் சாரதி ஒருவர் பலியானதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – பிள்ளையாரடி பகுதியில் 21-06-2021.அன்று மாலை 5.10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இராஜாங்க    அமைச்சரின் வீட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை பேச்சாளர் மேலும்
 தெரிவித்தார்.கொலையுண்ட மணல் ரிப்பர் சாரதி மற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஆகியோருக்கு இடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் தலைமையில் பூரண விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை பேச்சாளர், பதில் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித ரோஹன தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




சனி, 19 ஜூன், 2021

நட்டில் தேங்காயின் விலை தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி

தேங்காயின் அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்து புதிய வர்த்தமானி அறிவிப்பொன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை 18-06-2021.அன்று 
வெளியிட்டுள்ளது
தேங்காய் ஒன்றுக்கான அதிகபட்ச விற்பனை விலை, 2020 செப்டம்பர் 25 திகதியன்று வர்த்தமானி அறிவிப்பு எண் 2194/73 இல் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பை தற்போது இரத்து செய்து புதிய வர்த்தமானி
 வெளியிடப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 17 ஜூன், 2021

மரண அறிவித்தல் திரு கணேசலிங்கம் காந்தரூபன் 17.06.2021

பிறப்பு   23-01-1985-- இறப்பு-17-06-2021.
யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
 திருகணேசலிங்கம் காந்தரூபன்    (காந்தன்),
அவர்கள்,.17-06-.2021   வியாழக்கிழமை  இன்று இயற்கை எய்தினார். 
அன்னாரின் இறுதிக்கிரியை 
 20-06-2021,ஞாயிற்றுக்கிழமை  ,அன்று 
மு.ப 10:00 மணி முதல் ந.ப 11:00மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி  நிலாவரை  இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெறும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல் .குடும்பத்தினர் 
வீ ட்டு  முகவரி 
மஸ்கன் வீதி நிலாவரை  
நவற்கிரி .புத்தூர் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>



திங்கள், 14 ஜூன், 2021

நாட்டில் பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளுக்குப் பயன்படுத்தப் படும் மில்க் வர்த்தகப் பெயருடைய பிரிமா கோதுமை மாவின் விலை 3 ரூபா 50 சதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்விலை அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வருவதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி பிரிமாவினால் விற்கப்படும் மில்க் வர்த்தகப் பெயருடைய 50 கிலோகிராம் பொதி மாவின் விலை 4000 ரூபாவிலிருந்து 4175 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரிமா அண்மையிலேயே மாவின் விலையை 4 ரூபாவால் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 12 ஜூன், 2021

பாரவூர்தி விக்டோரியா நீர்த்தேக்கத்தினுள் வீழ்ந்து விபத்து சாரதி உட்பட 1,600 உயிர்கள் உயிரிழப்பு

பாரவூர்தியொன்று, 1,600 கோழிகளை ஏற்றிச் சென்ற மஹியங்கனை – கண்டி பிரதான வீதியில் மொரகஹமுல, கல்ஓய பாலத்துக்கு அருகில் விக்டோரியா நீர்த்தேக்கத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பாரவூர்தியின் சாரதி பலியானதுடன், அதில் ஏற்றிச்செல்லப்பட்ட 1,600 கோழிகளும் உயிரிழந்துள்ளதாக 
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.பிபிலை பிரதேசத்திலிருந்து கண்டி, கம்பளை பிரதேசத்தை நோக்கி பயணித்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் உயிரிழந்த சாரதி, கட்டுகிதுல, மீகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த அஷேன் தனுஷ்க என்பவரே உயிரிழந்தவராவார்.இந்த பாரவூர்தி கல்ஓய பாலத்துக்கு அருகில் இருந்த தடுப்புச் சுவரை 
உடைத்துக் கொண்டு
நீர்த்தேக்கத்துக்குள் வீழ்ந்துள்ளதாகவும், விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் காவல்துறை 
தெரிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>

 





வெள்ளி, 11 ஜூன், 2021

கம்பளையில் பிறந்து 8 நாட்களேயான ஆண் குழந்தை கொரோனாவால் மரணம்

கம்பளை, புஸ்ஸல்லாவ பிரதேசத்தில், பிறந்து 8 நாட்களேயான ஆண் குழந்தையொன்று கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (9) உறுதிசெய்யப்பட்ட 67 கொவிட் மரணங்களுள் இக்குழந்தையின் மரணமும் உள்ளடங்கியுள்ளதாக அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டதன் பின்னர், அக்குழந்தைக்குத் தீவிரமாகக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனால், குழந்தை மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கம்பளை ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கடந்த மே 27 ஆம் திகதி இக்குழந்தை கம்பளை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்ததாகவும், உயிரிழப்புக்கான காரணம் கொவிட் நியூமோனியா நிலைமை என அடையாளம் காணப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 10 ஜூன், 2021

துவரங்காடு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவர் கைது

திருகோணமலை – வரோதயநகர்,துவரங்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் சாராயம் உற்பத்தி செய்ய முயன்ற மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 8 பறள் கோடாவையும் கைப்பற்றியுள்ளதாக திருகோணமலை மாவட்ட மதுவரித்திணைக்கள அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தங்களுக்குக் கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி ஜே.எஸ்.பீ.அத்தநாயக்க
 தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட மூவரும் வரோதய நகர்ப் பகுதியைச் சேர்ந்த 25 வயது தொடக்கம் 33 வயதிற்கு உட்பட்ட குடும்பஸ்தர்கள் எனவும் 
தெரியவருகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் 6000 மில்லி லீற்றர் கோடா மற்றும் 7500 மில்லி லீற்றர் கசிப்பு என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மூவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மது வரி திணைக்களத்தினர் தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 9 ஜூன், 2021

கரடியனாறுகித்துள் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர்
 உயிரிழந்துள்ளார்.
நேற்று (08) மாலை கித்துள் வயல் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 53 வயதுடைய பொண்ணுத்துறை கௌகிகரன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 06 மணியளவில் வீட்டிலிருந்து இருந்து வயல் காவலுக்காக கித்துள் வயல்பகுதிக்கு சென்ற வேளையே இவ்வாறு 
உயிரிழந்துள்ளார்.
இன்று காலை மீட்கப்பட்ட சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக கரடியனாறு காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை 
மேற்கொண்டுவருகின்றனர்.
பயணத்தடை காரணமாக மிகவும் கஸ்டத்திற்கு மத்தியில் வாழும் விவசாயிகள் யானைகளின் தாக்குதல்கள் காரணமாகவும் பாதிக்கப்படுவது தொடர்பில் விவசாயிகள் கவலை 
தெரிவித்துள்ளர்.
இப்பகுதியில் யானையின் தாக்குதல்கள் காரணமாக தொடர்ச்சியான இழப்புகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது

நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 8 ஜூன், 2021

வெல்லவாயவில் வீடு ஒன்றிலிருந்து இளம் தம்பதியின் சடலங்கள் மீட்பு

மொனராகலை, வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வீடு ஒன்றுக்குள் இருந்து இளம் தம்பதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
36 வயதுடைய ஆணின் சடலமும் 21 வயதுடைய பெண்ணின் சடலமுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
 குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் உள்ளூர் மருத்துவம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் வெல்லவாய செல்பாவ பிரசேத்தில் வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று வாழ்ந்து வந்துள்ளனர்.
இரண்டு சடலங்களும் படுக்கறையின் கட்டிலுக்கு மேல் கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரதேச பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 7 ஜூன், 2021

நாட்டில நிலவும் சிரற்ற காலநிலையால் 10 மாவட்டங்களில் 14 பேர் இறப்பு

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பத்து மாவட்டங்களில் பதினான்கு பேர் இறந்துள்ளனர், 60, 674 குடும்பங்களைச் சேர்ந்த 245,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மையம் 
தெரிவித்துள்ளது.
கம்பஹா, இரத்னபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவர எலிய, கேகாலை, கண்டி, குருநாகல் மற்றும் காலி மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களின் போது இரண்டு பேர் காயமடைந்தனர், இருவரை காணவில்லை என்றும் மத்திய மையம்
 குறிப்பிட்டுள்ளது.
14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன, 817 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 3,520 குடும்பங்களைச் சேர்ந்த 15,658 பேர் 72 பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இறப்புக்களை பொறுத்தவரையில் கம்பஹாவில் – 2, இரத்னபுரியில் – 3, கொழும்பு, புத்தளம், களுத்துறை, காலியில் தலா – 1, கேகாலையில் – 5 என்ற எண்ணிக்கையில் இறப்புகள்
 பதிவாகியுள்ளன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 5 ஜூன், 2021

தெவனகல்லவில் மண்சரிவில் சிக்கி 4 பேர் மாயம் – மாணவி ஒருவர் சடலமாக மீட்பு

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மாவனெல்ல- தெவனகல்ல பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் 4 பேர், காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இரத்தினபுரியில் நேற்று ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போன பாடசாலை மாணவியொருவர் சடலமாக 
மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள ஏனையவரை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு இருந்தமை 
குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கேகாலை அல்கம பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஒருவர் உயிரழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ். விஜயசூரிய தெரிவித்துள்ளார். அனர்த்தம் குறித்து குறித்த நபருக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டு அவரை வீட்டில் இருந்து வௌியேற கூறியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
களுகங்கையின் தாழ் நிலப் பகுதிகளுக்கு வௌ்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹொரணை, அகலவத்தை, இங்கிரிய, பலிந்த நுவர, புளத்சிங்கள, தோதங்கொடை, மில்லெனிய, மதுரவல ஆகிய பகுதிகளுக்கு வௌ்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 
தெரிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>





வெள்ளி, 4 ஜூன், 2021

சிலாபம், வட்டக்கல்லிய பகுதியில் 06 சந்தேக நபர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் உலர்ந்த மஞ்சள் மற்றும் பெரிய வெங்காய விதைகள் தொகை ஒன்றை இந்நாட்டுக்கு கொண்டு வந்த 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம், வட்டக்கல்லிய பகுதியில் கடற்படையினர் மேற்கொண்டுள்ள சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இந்த நாட்டுக்கு கொண்டு வர முயன்ற 362 கிலோ 950 கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 571 கிலோ 400 கிராம் பெரிய வெங்காய விதைகள் நேற்றைய தினம் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் நேற்று மேற்கு கடற்படைக் கட்டளையின் 
கடற்படையினர் இலங்கை கடலோர காவல்படை மற்றும் சிலாபம் பொலிஸாருடன் இணைந்து சிலாபம், வட்டக்கல்லிய பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, களப்பு வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான 02 டிங்கி படகுகளில் இருந்து
 இறக்கப்பட்ட 362 கிலோ 950 கிராம் உலர்ந்த மஞ்சள் கொண்ட 14 சாக்குகளும் 571 கிலோ 400 கிராம் பெரிய வெங்காயம் விதைகள் நிரப்பப்பட்ட 22 சாக்குகளும் கைது செய்யப்பட்டதுடன் குறித்த நடவடிக்கைகாக பயன்படுத்தப்பட்ட 02 டிங்கி படகுகள் மற்றும் 06 சந்தேக நபர்கள் கைது
 செய்யப்பட்டனர்.
மேலும், சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட இந்த உலர்ந்த மஞ்சள் மற்றும் பெரிய வெங்காயம் விதைகள் கொண்டு செல்ல வந்ததாக நம்பப்படுகின்ற ஒரு சிறிய லொறி வண்டி மற்றும் இரண்டு நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கொவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 முதல் 50 வயதுக்குட்பட்ட சிலாபம் மற்றும் பன்னல பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள், பெரிய வெங்காயம் விதைகள், 02 டிங்கி படகுகள், லாரி வண்டி மற்றும் 06 சந்தேக நபர்களும் சிலாபம் பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக
 ஒப்படைக்கப்பட்டனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >