siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

மரண அறிவித்தல் திருமதி .நாகராஜா.நவமலர் 29-10-17

இறப்பு : 29 ஒக்டொபர்  2017      , 
யாழ்.  நவற்கிரி  புத்தூரைய்  பிறப்பிடமாகவும், தோப்பு அச்சுவேலியை   வசிப்பிடமாகவும்   கொண்ட திருமதி  .நாகராஜா.நவமலர்  அவர்கள் 29-10-2017    அன்று    காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை அன்னம்மா  தம்பதிகளின்
 அன்பு  மகளும், ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 24 அக்டோபர், 2017

நாட்டின் பல பகுதிகளில்இன்று முதல் மாலை நேரத்தில் மழை

நாட்டின் பல பாகங்களுக்கு இன்று (24) முதல் பிற்பகல் நேரத்தில் மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இவ்வாறு மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களத்தின் அலுவலக உத்தியோகத்தர் கசுன் பஸ்குவல் தெரிவித்துள்ளார்.
இந்த மழையுடன் கூடிய காலநிலை இன்று முதல் நாளையும், நாளை மறுதினமும் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் இந்த மழை பெய்யலாம் எனவும் அவர் 
குறிப்பிட்டுள்ளார் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

மரண அறிவித்தல் அமரர் ஐயாத்துரை வித்திலாமணி .24.10.17

இறப்பு : 24 ஒக்டொபர்  2017 
யாழ்.  நவக்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட ஐயாத்துரை.வித்திலாமணி. அவர்கள் 24-10-2017 செவ்வாய் க்கிழமை அன்று    
காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு  மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும் , காலஞ்சென்ற .ஐயாத்துரை 
 அவர்களின் அன்பு மனைவியும் 
குமார் . சாந்தன் லலி   மலர்   ஆகியோரின் அன்புத்தந்தையும்  
  காலஞ்சென்ற  துரைராஜா  காலஞ்சென்ற செல்வராஜா காலஞ்சென்ற ஜெயரத்தினம் 
காலஞ்சென்ற ஞாமணி  பாலசிங்கம் சின்னமணி   சிவலிங்கமணி  ஆகியோரின்  அன்பு  சகோதரி யும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2017 . செவ்வாய் க்கிழமை அன்று  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நவற்கிரி நிலாவரை   இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்..
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>


திங்கள், 23 அக்டோபர், 2017

தாய் மகன் ஒரு குழியில்அடக்கம் அனைவரையும் கலங்க வைத்த சோகம்!

ஏறாவூர், சவுக்கடியில் படுகொலை செய்யப்பட்ட தாய்-மகன் இருவரது உடல்களும்  ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டன.
மதுவந்தி (27) என்ற அந்தத் தாயும், அவரது மகனான மதுசன் (11) ஆகிய இருவரும் கடந்த 18ஆம் திகதி தீபாவளி தினத்தன்று மர்மமான முறையில், அவர்களது வீட்டில் கொல்லப்பட்டனர்.
இது குறித்து ஆராய்ந்த பொலிஸார், மோப்ப நாய்களுடன் தேடுதல் நடவடிக்கைகளில் இறங்கினர். அதன்போது, மூன்று பேரின் வீடுவரை சென்று நின்றதால் பொலிஸாருக்குச் சந்தேகம்
 எழுந்தது.
அதன்படி, குறித்த மூன்று வீடுகளையும் சேர்ந்த மூன்று பேரை பொலிஸார் விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வியாழன், 19 அக்டோபர், 2017

சம்பா அரசியின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு

லங்கா சதோச விற்பனை நிலையங்களில் விற்கப்படும் சம்பா அரிசியின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என சதொச நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் டி.எம்.கே.பி. தென்னகோன் 
தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்போது 84 ரூபாவிற்கு விற்கப்படும் சம்பா அரிசி இன்று நள்ளிரவு முதல் 80 ரூபாவிற்கு விற்கப்படும் என 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 18 அக்டோபர், 2017

சிசுவை அடித்து கொலை செய்த தந்தைக்கு மரண தண்டனை


ஓன்பது மாத சிசிசுவை அடித்து கொலை செய்த தந்தை ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி 
தீர்ப்பளித்துள்ளது.
மொனராகலை மாவட்ட உயர் நீதிமன்ற நீதிபதி இனோக ரணசிங்கவினால் நேற்றையதினம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி
 புத்தல வகுரவல பகுதியில் ஹிக்கடுவ விதானகே அதீப சஞ்சீவ என்ற ஒன்பது மாதக்குழந்தையினை கால்களில்
 பிடித்து சுவற்றில் அடித்து  மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளதாக குழந்தையின்  தந்தையின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் குறித்த குற்றம் நிருபிக்கப்பட்டதையடுத்து நீதுpமன்றம் மரண தண்டனை வழங்கி 
தீர்ப்பளித்துள்ளது.
சேவனகலகம என்னும் இடத்தை சேர்ந்த ஹிக்கடுவ விதானகே அசங்க சஞ்சீவ என்ற  36 வயது நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்களை காணவில்லை


முல்லைத்தீவு பெருங்கடலில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்களை காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
மணற்குடியிருப்பு கடற்கரைக்கு பிற்பகல் இரண்டு மணியளவில் ஏழு பேர் குளப்பதற்காகச்
சென்றுள்ளனர்.
இதன்போது ஏழு பேரும் குளித்துக் கொண்டிருந்த நிலையில் பெரிய அலையொன்று வந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அலையில் சிக்காமல் ஐந்து பேர் தப்பித்துள்ள நிலையில் மற்றைய இரு இளைஞர்களும்
அலையில் இழுத்துச் சென்றுள்ளதாக தப்பி வந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், அப்பகுதி மீனவர்களுடன் இணைந்து முல்லைத்தீவு பொலிஸார் மற்றும்
கடற்படையினரும் காணாமல்போன இளைஞர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



நினைவஞ்சலி 7ம் ஆண்டு அமரர் சிவஞானசுந்தரம் கிருபானந்தன்

மண்ணில் : 12 ஓகஸ்ட் 1958 — விண்ணில் : 18 ஒக்ரோபர் 2010
திதி : 30 ஒக்ரோபர் 2017
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானசுந்தரம் கிருபானந்தன் (வைசி) அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏழாண்டு போயும் என்றும் எம்மோடு இருக்கும் ஏந்தலே!!
எம்மை விட்டேகி ஏழாண்டு போனதையா! 
ஏங்கியே அழுகின்றோம் ஏந்தலே!! 
தாங்கியே பிடிக்க தலைவனின்றி 
தவிக்கின்றோம் ஐயா!
வாங்கியே நீ வைத்தவற்றில் 
உன் வண்ணவதனம் கண்டு 
ஒங்கியே அழுது ஒவ்வொரு நாளும் 
இருக்கின்றோம் ஐயா!
உறவி தந்து! உணர்வு தந்து!! 
எம்மோடு ஒன்றாய் இருந்த உத்தமனே! 
உன்னால் விளைந்த வித்துகள் 
இப்போ விருட்சமாய் வெளிவரும் வேளையில்
உன் வெப்பம் தணிக்கும் இவ் விருட்சத்தை விலக்கி 
விண்ணுலகு ஏன் தான் 
விரைந்திட்டாய் ஐயா!
வளங்கள் எதுதான் வாழ்வில் இருந்தாலும் 
வாழ்க்கை எமக்குத்தந்த வள்ளல் நீர் 
வாணுலகு போய் ஏழாண்டு வந்தும் 
வாடிவதங்கி வாட்டமுடன் 
வையமிங்கு வாழ்கின்றோம் 
ஐயா!
வாய்ப்புக் கிடைத்தால் வாண் விட்டு 
வையம் வந்து உன் வண்ணமுகம் காட்டி 
உன் கன்றுகளோடு கைகோர்த்து 
களி கொள்ள மாட்டாயா எங்கள்
 தலைவனே!
ஏழாம் ஆண்டில் நினைத்து நீர் மல்கும் மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்
தகவல்
கிருபானந்தன் சத்தியபாமா(மனைவி)
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 16 அக்டோபர், 2017

மரணஅறிவித்தல், திரு துரைராஜா தங்கேஸ்வரன்.14.10.17

மலர்வு : 12 யூலை 1969 — உதிர்வு : 14 ஒக்ரோபர் 2017
யாழ். மூளாய் பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Füllinsdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா தங்கேஸ்வரன்(குஞ்சன்) அவர்கள் 14-10-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், துரைராஜா நாகம்மா தம்பதிகளின் மூத்தப் புதல்வரும்,
நிகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷா, கஜன் ஆகியோரின் பாசமிகு 
தந்தையும்,
லங்கேஸ்வரன்(சூரி- பெல்ஜியம்), மதிவதனி(இலங்கை), ஜெயவதனி(பெல்ஜியம்), யோகவதனி(பிரான்ஸ்), லிங்கேஸ்வரன்(றமணன்- நெதர்லாந்து), சிறிவதனி(சோபா- இலங்கை), தனவதனி(இலங்கை), சர்வேஸ்வரன்(செந்தூர்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகா, சக்தி, பவித்திரா, வசந்தி, சுமித்திரா, செல்வம்(சுவிஸ்), கமலன்(ஐக்கிய அமெரிக்கா), மோகன்(இலங்கை), நவநீதன்(பெல்ஜியம்), நவகுமார்(பிரான்ஸ்), விக்கினேஸ்வரன்(பெல்ஜியம்), உதயறாஸ்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,
லாவண்யா, ஏகதன், ஜீவகன், ஆதவன், அக்‌ஷயா, நிதர்சன், நித்தியா ஆகியோரின் பெரியப்பாவும்,
ஜீவறாஜ், தாட்சாயினி, ஜெயந்தினி, மதுசாயினி, கஜறாஜ், லாவண்யா, கோபிகா, கயூரன், டினுசதன், நிஷாந்தன், விதுஷனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 17/10/2017, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Friedhof Bromhübel, Dornachweg, 4144 Arlesheim, Switzerland 
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 18/10/2017, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Friedhof Bromhübel, Dornachweg, 4144 Arlesheim, Switzerland 
கிரியை
திகதி: வியாழக்கிழமை 19/10/2017, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Friedhof Bromhübel, Dornachweg, 4144 Arlesheim, Switzerland 
தகனம்
திகதி: வியாழக்கிழமை 19/10/2017, 11:00 மு.ப
முகவரி: Friedhof Bromhübel, Dornachweg, 4144 Arlesheim, Switzerland 
தொடர்புகளுக்கு
லங்கேஸ்வரன்(சூரி) — பெல்ஜியம்
தொலைபேசி: +32466071896
ஜெயவதனி — பெல்ஜியம்
தொலைபேசி: +32492410419
யோகவதனி — பிரான்ஸ்
தொலைபேசி: +33605817494
லிங்கேஸ்வரன்(றமணன்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31645093046
சிறிவதனி(சோபா) — இலங்கை
தொலைபேசி: +94242226073
தனவதனி — இலங்கை
தொலைபேசி: +94242226073
சர்வேஸ்வரன் — இலங்கை
தொலைபேசி: +94242226073
மோகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764123179
அமிர்தலிங்கம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789353719
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 15 அக்டோபர், 2017

ஹற்றன் நாவலப்பிட்டிநீரில் மூழ்கியது

மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதுடன் நுவரெலியா ஹட்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் மண்சரிவுகள் வெள்ளப்பெருக்கும்
 ஏற்பட்டுள்ளது.
நேற்று(14.10.2017) மாலை 3 மணியளவில் நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரி பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவினால் மூன்று மணித்தியாலங்கள் வரை நோட்டன் அட்டன் மார்க்க பஸ் போக்குவரத்து தடைப்பட்டமையினால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். மாலை 6 மணிவரை நோட்டன். ஒஸ்போன் மற்றும் லக்ஷபான பகுதிக்காக பஸ் போக்குவரத்து முற்றாக
 தடைப்பட்டது.
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் மண் மேட்டை அப்புறப்படுத்தி பாதையை சீர் செய்த பின் ஒரு வழி போக்குவத்தாக போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.
மேலும் ஹட்டன் நகர பகுதியில் அட்டன் பொலிஸ் நிலைய விளையாட்டு மைதானம் மற்றும் தபாற் கந்தோர் வளாகம் நீரில் மூழ்கிய நிலையில் குடியிருப்பொன்று பகுதியளவில் சேதமானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்த அதேவேளை நாவலப்பிட்டி நகரின் தபாற்கந்தோர் வீதியும் நீரில் மூழ்கியதாக நாவலப்பிட்டி பொலிஸார்
 தெரிவித்தனர்.

கினிகத்தேன ஹட்டன் பிரதான வீதியிலும் மண்மேடு சரிந்துள்ளமையினால் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பாதைகளில் வழுகல் தன்மை ஏற்பட்டுள்ளமையினால் வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறும் பொலிஸார்
 வேண்டுகோள் விடுத்தனர.
மேலும் நோட்டன் விமலசுரேந்திர லக்கஷபான நீர்தேக்கம் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்து வருகின்றமையினால் கரையோர மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




நடு இரவில் வவுனியாவில் வீடு புகுந்து சிறுமியை கடத்திச்செல்ல முயற்சி!

வவுனியா நெடுங்கேணி கீரிசுட்டான் கிராமத்தில் பத்துவயது சிறுமியை நேற்று முன்தினம் (12) கடத்தி செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது…
ஒலுமடு வித்தியாலயத்தில் கல்விகற்றுவரும் பத்து வயது சிறுமியை நேற்று முன்தினம் நடுநிசியில் வீட்டுக்குள் நுழைந்து
 மர்மநபரொருவர் கடத்திச் செல்ல முயற்சித்தவேளை வீட்டுக்கு வெளியே படுத்திருந்த தந்தையார் மர்மநபரை விரட்டிச்சென்ற நிலையில் குறித்த நபர் சிறுமியை கீழே போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து நெடுங்கேணி பொலிசாரிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு சென்ற பொலிசார் தேடுதல் மேற்கொண்டதுடன் சந்தேகநபரினது என சந்தேகப்படும் ஒரு செருப்பை கைப்பற்றியுள்ளதுடன். விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பிட்ட சிறுமி கடந்த ஒருவருடத்திற்கு முன் 60 வயதுடைய சுப்பிரமணியம் என்பவர் இவ்வாறு கடத்த முற்பட்ட நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
குறித்த நபருக்கு நீதிமன்றம் பிணைவழங்க மறுத்துவருவதுடன் தொடர்ந்து சந்தேக நபர் சிறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதானது பெற்றோரை அதிர்ச்சியடைய 
வைத்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>








மரணஅறிவித்தல், திருமதி புவனேஸ்வரி தம்பிராசா.13-10.17

இறப்பு : 13 ஒக்ரோபர் 2017
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தம்பிராசா அவர்கள் 13-10-2017 வெள்ளிக்கிழமை 
அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா பருவதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
புரந்தரநாதன்(கனடா) அவர்களின் பாசமிகு தாயாரும்,
கோபாலகிருஷ்ணன்(இலங்கை), வைகுந்தநாதன்(கனடா), திருஞானசம்பந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கலாரூபி அவர்களின் அன்பு மாமியாரும்,
தவமணிதேவி, ஞானேஸ்வரி, சாந்தலோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
போதினி, ஆரணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
வைகுந்தநாதன்(சகோதரர்)
தொடர்புகளுக்கு
திருஞானசம்பந்தன்(குஞ்சன்) — கனடா
தொலைபேசி: +19055540573
வைகுந்தநாதன்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +14165512216
- — இலங்கை
செல்லிடப்பேசி: +94770638080
- — இலங்கை
செல்லிடப்பேசி: +94771459057
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 14 அக்டோபர், 2017

இன்னும் சில தினங்களுக்கு நாட்டில் சீரற்ற காலநிலை தொடரலாம்

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்குத் தொடரலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேல், மத்திய, வட, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய - குறிப்பாக பிற்பகல் 2 மணிக்குப் பின் - வாய்ப்பு இருப்பதாகவும், மழையுடன் கடும் காற்றும் வீசலாம் எனவும் வானிலை அவதான நிலையம்
 தெரிவித்துள்ளது.
மேலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை பகுதிகளில் 100 முதல் 150 மில்லி லீற்றர் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையுடன் இடி-மின்னல் ஏற்படலாம் என்பதால், பொதுமக்கள் அது குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, தொடர்ச்சியான மழை காரணமாக நிரம்பியுள்ள குகுலேகங்கையின் இரண்டு வான்கதவுகள் 
திறக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, அகலவத்தை, பதுரலிய, பாலிந்த நுவர மற்றும் இங்கினியாகலை மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பேரிடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>




புதன், 11 அக்டோபர், 2017

நான்கு மணி நேரம் வடமராட்சியில் கிணற்றினுள் ஒழிந்திருந்த பெண்

வங்கிக் கடனை செலுத்த முடியாமல், வங்கி ஊழியர்களுக்கு பயந்து நான்கு மணி நேரமாக குடும்ப பெண் ஒருவர் கிணற்றுக்குள் ஒழிந்திருந்த பரிதாப சம்பவம் ஒன்று வடமராட்சி பகுதியில்
 இடம்பெற்றுள்ளது.
நுண்கடன் திட்டங்களால் வடக்கில் அதிகளவில் குடும்ப பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நாளுக்கு நாள் கொடுமைகளையும் வேதனைகளையும் அனுபவித்து வருவதாகவும் இந்த நுண்கடன் திட்டங்களை நிறுத்துமாறு மத்திய வங்கி ஆளுநரிடம் பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கில் உள்ள நிதி நிலமைகள் கடன் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு மத்திய வங்கி ஆளுநர் குமாரசுவாமி இந்திரஜித் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் வடக்குக்கு கடந்த 6,7 ஆம் திகதிகளில் இரண்டு நாள் விஜயம் செய்திருந்தனர்.
யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பொது அமைப்புக்கள் வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தனர். அதில் யாழில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறித்த பரிதாப சம்பவத்தை ஒரு பெண் அனைவரிடமும் பகிர்ந்திருந்தார்.
அதாவது கிராமப்புறங்களில் பல தரப்பட்ட நிதி நிறுவனங்கள் குவிந்துள்ளன. ஆளுக்காள் போட்டி போட்டு நிதிகளை வழங்குகிறார்கள். பெண்களின் பலவீனங்களை பயன்படுத்தி குறிப்பாக பெண்களையே இலக்கு வைத்து இந்த கடன் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பண தேவை எங்கு உள்ளது என தெரிந்து அந்த இடங்களை தெரிவு செய்து கடனை வழங்குகிறார்கள். பின்னர் அவர்களை படாத பாடுபடுத்துகிறார்கள். கொடுத்த கடனுக்கும் மேலதிகமாக வட்டியின் தொகை அதிகரித்து அதை கட்டமுடியாமல் தற்கொலை செய்யும் நிலைக்கு பொண்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
வடமராட்சி பகுதியில் ஒரு பெண் குடும்பத்தின் கஸ்ட நிலை காரணமாக 3 நிதி நிறுவனத்திடம் இருந்து கடனை பெற்றிருந்தார். வாராந்தம் பணத்தை செலுத்தி வந்துள்ளார்.
இறுதியில் அவரால் வாராந்தம் செலுத்த முடியாமல் போன போது, இரு வாரம் களித்து 3 நிதி நிறுவனங்களுடைய ஊழியர்களும் அவருடைய வீட்டுக்கு வந்துள்ளனர். அங்கு வந்து இருந்து தகாத வார்த்தைகளை பிரயோகித்துள்ளனர்.
வீட்டை விட்டு செல்ல மாட்டோம் என கூறி அங்கேயே இருந்துள்ளனர். குறித்த பெண் அவர்களுக்கு பயந்து அருகில் உள்ள காணியில் இருந்த கிணற்றில் இறங்கி பதுங்கி இருந்துள்ளார்.
நான்கு மணி நேரமாகியும் அந்த நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டை விட்டு செல்லாத காரணத்தினால் அவர் நான்கு மணி நேரமும் கிணற்றுக்குள்ளேயே பதுங்கி இருந்துள்ளார்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னே அவர் வெளியே வந்துள்ளார். இது பெரும் வேதனைக்கு உரிய விடயம் இவ்வாறு பல இடங்களில் நாளுக்கு நாள் நடைபெற்று வருகிறது. அதே போன்று கிழமைக்கு கிழமை பணம் செலுத்தாது விட்டால் அதி கூடிய தண்டப்பணம் என
 கூறி அறிவிடுகிறார்கள்.
தற்போது புதிய செயற்பாடாக நான்கு மோட்டார் சைக்கிள்களில் இராணுவத்தினர் சுற்றிவளைப்பதுபோல் சுற்றி வளைத்து பிடிக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள் இந்த
 நிதிநிறுவன ஊழியர்கள்.
கடனை பெற்று மீள செலுத்தாமல் கஸ்டப்படும் பெண்களின் வீட்டில் நின்மதியின்மை, தற்கொலை வெளி இடங்களில் பாதுகாப்பு இல்லை, சமூகத்தால் வெறுக்கப்படல் போன்ற இக்கட்டான நிலைக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குடும்ப பெண்கள் ஏமாந்து பெற்ற கடனை செலுத்த முடியாமல் குடும்பஸ்தர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நிதி நிறுவனங்கள் தடைசெய்யப்பட வேண்டும் அல்லது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
அதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அங்கு பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்களால் கோரிக்கை 
முன்வைக்கப்பட்டது.
இங்கு அழுத்தவும் நவற்கிரி .கொம்1 செய்தி >>


திங்கள், 9 அக்டோபர், 2017

அகாலமரணம் திரு பாஸ்கரன் செந்தூரன் 09.10.17

மண்ணில் : 18 மே 1988 — விண்ணில் : 9 ஒக்ரோபர் 2017
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும, சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் செந்தூரன் அவர்கள் 09-10-2017 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கண்ணன்பாலா(தவம்) ஞானசுந்தரம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் அன்னம்மா(கட்டுவன்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பாஸ்கரன்(பாபு) ஞானேஸ்வரி(லலிதா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, கலாவேணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
கெஷியா அவர்களின் அன்புத் தந்தையும்,
அனித்தா கோபிநாத், சுஜித்தா நிரோசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதாஞ்சனா, சிறிவக்சன், ஜெய்தா, ரயன், கறினி, சினேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோபி, நிரோ, சிவா, சிவரேமா, பிரசாமணிமாறன், கனிஸ்ரன், வைஸ்ணவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயரூபன், புஸ்பராணி ஆகியோரின் அன்பு மருமகனும்,
சரவணபவன் சிவமணி(பிரான்ஸ்), கருணாகரன், மீனா(கனடா), கிருஸ்ணபவன்(இலங்கை), காலஞ்சென்ற சிறிதரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சத்தியா ஜெனா, சைலா சுதன், கமலினி காண்டி, விதுஷா, சகானன், சாத்விகா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
இந்திரன், இந்திரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கோபிநாத் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763953921
நிரோ — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764124534
இந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779810848
மணிமாறன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41762900095
இங்கு அழுத்தவும் நவற்கிரி .கொம்1 செய்தி >>


புதன், 4 அக்டோபர், 2017

தேயிலயின் விலை சர்வதேச சந்தையில் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் இலங்கையின் தேயிலயின் விலை கடந்த ஏழு மாதங்களில் பெரும் அதிகரிப்பை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்த காலப்பகுதியில் இலங்கையின் தேயிலை ஒரு கிலோ 2.95 டொலர்களுக்கு விற்பனையானது.
எனினும் இந்த ஆண்டு அது 4.03 டொலர்களாக அதிகரித்துள்ளது.
ஆயினும் இந்தியாவின் தேயிலை விலை வீழ்ச்சியை அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>